மோனிஷா நாவல்கள்
IrumunaiKathi - Episode 31
Quote from monisha on December 1, 2023, 1:56 PM31
இருமுனைக் கத்தி
தமிழச்சியும் சிம்மாவும் விக்ரம் வீட்டின் வாயிலில் இறங்கி உள்ளே நுழையும் போதே விஷ்வாவும் ஆதியும் அவர்களை உள்ளே அழைத்து உபசரித்தனர். சிம்மா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க தமிழச்சியின் விழிகள் தன் கணவனின் தரிசனத்திற்காகவே காத்திருந்தது.
சிம்மா அப்போது விக்ரம் பற்றிக் விசாரிக்க, அவன் விடியற்காலையிலேயே புறப்பட்டுவிட்டதாக விஷ்வா உரைத்தார்.
அவள் முகம் ஏமாற்றமாக மாற, உடற்பயிற்சி முடித்து வந்த இவான் அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைப் புரிந்தான். அவன் இயல்பாய் சிம்மாவிடம் பேச ஆதியும் விஷ்வாவும் வியப்பாய் பார்த்து, “உனக்கு முன்னாடியே இவானைத் தெரியுமா?” என்று கேட்டனர்.
“தெரியும்... நான்தான் விக்ரம் கிட்ட சொல்லி இவானை இங்க தங்க வைக்கச் சொன்னேன்” என்றதும் இருவரும் அவனைக் குழப்பமாய் பார்த்தனர்.
சிம்மா மேலும், “நான் எல்லாத்தையும் உங்களுக்கு அப்புறம்… பொறுமையா விளக்கிச் சொல்றேன்” என்றான்.
அவர்கள் முகத்தில் இருந்த குழப்பம் மறையவில்லை, எனினும் சிம்மா சொன்னதற்கு அவர்கள் தலையசைத்தனர். சிம்மா பிறகு இவானிடம் பேச வேண்டும் என்று அறைக்குள் சென்று விட்டான்.
இவர்களின் எந்த உரையாடல்களையும் தமிழச்சி கவனிக்கவே இல்லை. ‘இவ்வளவு காலைல அவனுக்கு அப்படி என்ன வேலை?’ என்று விக்ரமைத் திட்டிக் கொண்டே நின்றிருந்தாள்.
“தமிழச்சி” என்று ஆதி அவள் தோளைத் தொடவும் சிந்தனையில் இருந்து மீண்டவள் அவரிடம், “அப்படி என்ன காலையிலேயே வேலை அவனுக்கு?” என்று கேட்டுவிட்டாள்.
“நாளைக்குப் பிரச்சாரத்துக்காக பிஎம் சென்னை வராங்களாம்... அவங்க கட்சி சார்பா ஏற்பாடு எல்லாம் இவன்தான் பார்த்துக்கறான்” என்று அவர் உரைத்ததும், “ஆமா இல்ல” என்று தமிழச்சி அப்போதே அந்த விஷயத்தை நினைவு கூர்ந்தாள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்து கொண்டு இருந்தது. அவளுக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் விக்ரமைப் பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றம் மனதில் குத்திக் கொண்டுதான் இருந்தது.
“நைட் வருவாரா அங்கிள்?” என்றவள் மீண்டும் கேட்க அவன் தமிழச்சியைத் தவிர்க்க எண்ணுகிறான் என்று எப்படி சொல்வது என்ற தயக்கத்துடன் விஷ்வா அவளிடம், “வருவான்... ஆனா ரொம்ப லேட் ஆகும்மா” என்றார்.
“வருவான் இல்ல... அது போதும்... அவன் எவ்வளவு லேட்டா வந்தாலும் பரவாயில்ல... நான் வந்து அவன்கிட்ட பேசிட்டுதான் போவேன்” என்று சொல்லிவிட்டு அவள் புறப்பட, ஆதிக்கும் விஷ்வாவிற்கும் சங்கடமாய் இருந்தது.
அவள் வெளியேறுவதற்கு முன்னதாக சிம்மாவிடமும் இவானிடமும் சொல்லிவிட்டுச் செல்ல, அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள். இருவரும் தீவிரமாய் அந்த நடராஜர் சிலையின் புகைப்படத்தைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தனர்.
“எனக்கு டைம் ஆகுது... நான் கிளம்புறேன்” என்றவள் சொல்ல சிம்மா அவளிடம், “ஒரு டென் மினிட்ஸ் இரு... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைக் காண்பிக்கணும்” என்றான்.
அவள் என்னவென்று பார்க்க இவான் தன்னிடம் இருந்த நடராஜர் சிலைப் புகைப்படத்தைக் காண்பிக்க அவள் உடனே, “இது எதாச்சும் கடத்தப்பட்ட சிலையா?” என்று கேட்டாள்.
சிம்மா அப்போது நியூயார்க்கில் சைத்தன்யா அந்த நடராஜர் சிலையின் ஃபோட்டோவை வைத்து ஏலம் விட்ட கதையெல்லாம் அவளிடம் சொல்லி இறுதியாய், “அங்கே ஃபோட்டோ எடுக்க கூட அலோவ் பண்ணல தமிழச்சி... இவான்தான் நியூயார்க்ல இருக்க அவரோட நண்பர்கள் மூலமா இந்தச் சிலையோட ஃபோட்டோவை வரவழைச்சிருக்கார்” என்றார்.
“இந்த சிலை இந்தியாவைவிட்டுப் போக விடக்கூடாது... அதுக்குள்ள இந்தச் சிலையை எந்தக் கோவிலோடது என்னன்னு நாம கண்டுப்பிடிக்கணும்”
“அதெப்படி... இந்தச் சிலையை இந்தியாவில வைச்சுக்கிட்டு அங்க அவன் ஏலம் விட்டிருப்பான்... அது அவனுக்கு ரிஸ்க் இல்லையா?” என்று அவள் வினவ,
“சிலை அவன்கிட்ட இருந்திருந்தா சிலையை வைச்சே அவன் ஏலம் விட்டிருக்கலாமே” என்றான் சிம்மா.
இவான் தமிழச்சியைப் பார்த்து, “சிம்மா சொல்ற லாஜிக் சரிதான்... அதேநேரம் அவன் அவ்வளவு அசால்டா ரிஸ்க் எடுத்திருக்க மாட்டான்... நிச்சயம் அந்தச் சிலை அவனுக்கு ரொம்ப நம்பிக்கை ஆனவங்க கிட்டதான் இருக்கணும்” என்றான்.
“சைத்தன்யா ஒரு வேளை அந்தச் சிலைக்காகதான் வர்றானோ?” என்று தமிழச்சி கேட்க, “அப்போ சிலை” என்று மூவரும் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது இவான் அவர்களிடம், “ஒரு வேளை அந்தச் சிலை யு எஸ் வந்தா நிச்சயம் அது சைத்தன்யா கைக்குப் போக விடாம நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“அங்கே தான் சிக்கலே... அந்தச் சிலை யு எஸ் போனா பரவாயில்ல... ஆனா வேற எங்கயாச்சும் போனா... அவனுக்குதான் உலகம் பூராவும் நெட்வொர்க் இருக்கே” என்று சிம்மா கவலையாகச் சொல்ல,
தமிழச்சி தன் தமையனைப் பார்த்து, “சியர் அப்... இந்தத் தடவை அந்தக் கிரிமினல் இந்தியா உள்ளே வந்துட்டு வெளிய போகவேமாட்டான்” என்று சொல்லி நம்பிக்கையோடு புன்னகைத்தாள்.
சைத்தன்யாவைக் கைது செய்யப் போவதைதான் அவள் அப்படி சொல்கிறாள் என்பது இருவருக்கும் புரிந்தது. அதில் அவள் ரொம்பவும் தீவிரமாய் இருக்கிறாள்.
“சொல்றதைக் கேளுங்க தமிழச்சி... சைத்தன்யாவை அரெஸ்ட் பண்ற வேலையை எங்க டிபார்ட்மெண்ட் கிட்ட விட்டுடுங்க” என்றான் இவான்.
“நோ வே... அவன் தாய் நாட்டுக்கே துரோகம் செஞ்சிருக்கான்... ப்ளடி ராஸ்கல்... அவனை இங்கதான் அரெஸ்ட் பண்ணனும்...” என்றவள் சீற்றமாய் சொல்ல, சிம்மா இவானைக் கவலையோடுப் பார்த்தான். அவள் இந்தக் காரியத்தை செய்தால் அவளுக்கு எந்த எல்லைக்கும் பிரச்சனை வரலாம் என்ற எண்ணம் சிம்மாவின் மனதை நெருட,
இவானோ அவள் தைரியத்தைப் பார்த்து மெச்சிக் கொண்டான்.
“கோ அஹெட்... எங்க டிபார்ட்மென்ட் மூலமாக நான் இதுல உங்களுக்கு எல்லா விதத்திலயும் சப்போர்ட்டிவ்வா இருப்பேன்”
“தேங்க்ஸ்” என்று தமிழச்சி அவனைப் பார்த்து புன்னகைக்க அப்போது சிம்மா தங்கையிடம், “இருந்தாலும் நீ இந்த விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா மூவ் பண்ணு” என்றான்.
“எஸ் எஸ்” என்று இவானும் அவன் வார்த்தைகளை ஆமோதிக்க,
அவர்கள் சொன்னதை தலையசைத்துக் கேட்டுக் கொண்டவள் தன் கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஓகே ஓகே.. நான் கிளம்புறேன்... இந்தச் சிலையை நான் என் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்துக்கிறேன்” என்று அந்தப் புகைப்படத்தை தன் கைபேசிக்குள் படமாக்கிக் கொண்டவள்,
“வினோத்துக்கு இல்ல அந்த குமாருக்கு இந்தச் சிலையைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு... நான் விசாரிச்சுப் பார்த்துட்டுச் சொல்றேன்” என்றாள்.
அவள் சொன்னது போல் அவர்களுக்குத் தெரிந்தால் நலம். இல்லையெனில் அந்தச் சிலையைத் தேடுவது திக்குத் தெரியாதக் காட்டில் சுற்றுவது போலதான் என்று சிம்மா எண்ணிக் கொண்டான்,
அப்போது இவான் போக இருந்தவளை, “தமிழச்சி” என்று அழைத்து,
“ஐம் லீவிங் டுடே நைட்” என்று ஏக்கம் நிரம்பிய பார்வையோடு சொல்லவும், “தெரியும்... சிம்மா சொன்னான்... நான் கண்டிப்பா நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி வந்துடுறேன்” என்றாள்.
அந்த ஒரு பார்வையில் தமிழச்சியின் விஷயத்தில் இவானின் எண்ணவோட்டத்தைக் கணித்திருந்தான் சிம்மா. அப்படியெனில் விக்ரமின் கவலை சரிதானா என்று தோன்றியது. ஆனால் அர்த்தமில்லாமல் இவான் தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆசைக்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது.
*
தமிழச்சி அங்கிருந்து புறப்பட்டு நேராக குமாரும் வினோத்தும் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் அந்தச் சிலையைக் காண்பித்து விசாரணையை நடத்த, அவர்கள் இருவருக்குமே அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை.
மேலும் லாக் அப்பில் இருந்த திருடர்களிடம் அந்தச் சிலையின் ஃபோட்டோவைக் காண்பித்து விசாரிக்கவும் அவர்களுக்கு அது குறித்த தகவல் தெரிந்திருந்தது.
தஞ்சையில் இருந்த ஒரு தரகர் மூலமாக அந்தச் சிலையைக் கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் சேர்ப்பித்ததாக அவர்கள் சொல்ல, அவளுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.
“அந்த தரகர் எங்கடா இருக்கான்?” என்று விசாரித்து அறிந்தவள் உடனடியாக அந்த ஊர் காவல் நிலையத்திற்கு அழைத்து அந்தத் தரகனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாள்.
அதேநேரம் அவளுக்கு சிலை விவகாரம் ஒரு வகையில் ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டு நாள் முன்பு இவான் கிரீடத்தை ஒப்படைக்கும் போதே கமலக்கண்ணனின் கடையில் உள்ள ரகசிய அறையைப் பற்றி உரைத்தான். அங்கிருந்த வேறு சில பழமையான பொக்கிஷங்களை மீட்ட கையோடு அவன் வீட்டைச் சுற்றிலும் தோண்டி அவன் புதைத்து வைத்திருந்தப் பழமையான சிலைகளயும் மீட்டெடுத்துவிட்டாகியது. ஏடிஜிபி தயாளனிடம் மட்டும் இந்தத் தகவலை உரைத்தாள்.
செய்திகளில் இந்த விஷயமெல்லாம் வராமல் எச்சரிக்கையாக இருந்தாள். சைத்தன்யாவை கைது செய்ய அரெஸ்ட் வாரன்ட் பெறும் வரை எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.
ஆனால் அவள் கண்டெடுத்த சிலைகளில் இந்த நடராஜர் சிலையைப் பார்த்ததாக அவளுக்கு நினைவில்லை. நிச்சயம் அந்தச் சிலை கமலக்கண்ணனிடம் இருந்தால் அவளிடம் அது நிச்சயம் சிக்கியிருக்கும்.
அப்படியெனில் அந்தச் சிலை கமலக்கண்ணனிடம் இருந்து கைமாறி இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. கமலக்கண்ணன் இறந்துவிட்ட காரணத்தால் இப்போது அதைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் சிரமம் கூட.
*
இரவு... ஏடிஜிபி தயாளனின் அலுவலக அறை.
சிலைக் கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் தமிழச்சி அவரிடம் ஒப்படைத்தாள். அதுவும் அவள் கேட்ட ஒரு வாரக் கெடுவிற்கு முன்னதாக.
தயாளனுக்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்காகவே அவளை இந்த வழக்கில் இருந்து விலக்கிவிட பலதரப்பட்ட முயற்சிகள் நடந்தன. பெரிய இடங்களில் இருந்து அவளைத் தூக்க சொல்லி அழுத்தங்கள் வந்த நிலையில் கமலக்கண்ணனின் கொலையைக் குற்றமாய் சுட்டிக்காட்டி அவளைத் தூக்கிவிடலாம் என்ற அவரின் யுக்தி பலிக்கவில்லை.
அவர் தீவிர ஆலோசனையோடு அவள் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்து முடிக்கும் வரை தமிழச்சி மௌனம் காத்தாள்.
தயாளன் தொண்டையைச் செருமிக் கொண்டு ஏதோ சொல்ல வர, “சைத்தன்யாவை உடனே அரெஸ்ட் பண்ணனும் சார்... அவன் நேரடியா கமலக்கண்ணனோட டீல் பண்ணி இருக்கான்... அவன் மூலமா குமாரை அணுகி இராஜராஜேஸ்வரி கிரீடத்தைப் போலியா மாத்திக் கடத்தி இருக்கான்... இதுல இன்ஸ்பெக்டர் வினோத்தும் உடந்தை... வினோத் என்னை ரவுடிங்கள வைச்சு கொலை பண்ணவும் ட்ரை பண்ணி இருக்காரு” என்று அவள் முந்திக் கொண்டு படபடவென தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
“இன்ஸ்பெக்டர் வினோத் எங்கே தமிழச்சி?”
“என்னோட கஸ்டடிலதான் இருக்கார்... யாருக்கும் தெரியாத எனக்கு நம்பகமான இடத்துல வைச்சிருக்கேன் சார்”
“அதெப்படி?” என்று அவர் ஏதோ கேட்க முனைய, “வினோத் அரெஸ்ட் பண்ண விஷயம் தெரிஞ்சா குற்றவாளிகள் அலர்ட் ஆயிடுவாங்க... அதனாலதான் இதுல அஃபிஷியலா எந்த ரெக்கார்டும் பண்ணாம பெர்சனலா எல்லாரையும் என்னோட நேரடி கண்ட்ரோல்ல வைச்சிருக்கேன்... தேவைப்படும் போது வினோத் உட்பட சம்பந்தப்பட்ட எல்லோரையும் கோர்ட்ல ஆஜர் படுத்திடுறேன்” என்றாள்.
தயாளனுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. அவள் இந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறாள் எனில் இந்த வழக்கை அவள் அடுத்த கட்ட விசாரணைக்குக் கொண்டு செல்லாமல் விடமாட்டாள். இது நிச்சயம் பெரிய விபரீதத்தில் முடியும் என்பது மட்டும் அவருக்கு நன்றாய் புரிந்தது.
“அவசரப்பட்டு இதுல நான் எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று அவர் எச்சரிக்கையாகப் பேச,
“ஏன் சார்... இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது சைத்தன்யாவிற்கு அரெஸ்ட் வாரன்ட் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? அதுவுமில்லாம இந்த ஆதாரம் எல்லாம் நம்ம கைக்குக் கிடைச்சிருக்குன்னு சைத்தன்யா காதுக்குப் போறதுக்கு முன்னாடி நாம நடவடிக்கை எடுத்தாகணும்” என்றாள் பரபரப்போடு!
“ஆதாரமெல்லாம் சரிதான் தமிழ்... ஆனா உனக்குத் தெரியாது... உங்க அப்பாவுக்குத் தெரியும்... கேட்டுப் பாரு... இதுவரைக்கும் எவ்வளவோ சிலைக் கடத்தல் குற்றவாளியை நாம பிடிச்சாலும் ஒன்னும் செய்ய முடியல...” என்றவர் நடப்பை வெளிப்படையாகவே உரைத்தார்.
“முடியும் சார்... இதான் ரைட் டைம்... எலெக்ஷன் டென்ஷன்ல இருக்காங்க... ஆளுங்கட்சியாவே இருந்தாலும் இந்த நேரத்துல அவங்க பவர் எடுபடாது” என்று அவள் தெளிவாய் உரைக்க அவர் விழிகள் வியப்பில் அகன்றது.
சைத்தன்யாவின் ஆளுங்கட்சிப் பலத்தையும் அவள் தெரிந்து கொண்டுதான் பேசுகிறாள் என்பதில் அவருக்கு மேலும் அதிர்ச்சி. சில நொடிகள் யோசித்தவர், “தமிழச்சி... நல்லா யோசிச்சுக்கோ... திரும்பியும் எஸ்பி கட்சியே ஆட்சிக்கு வந்துட்டா அப்புறம் இந்த வழக்கு ஒன்னும் இல்லாம போயிடும்” என்றவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.
“இப்போ சைத்தன்யா மேல ஆக்ஷன் எடுக்கலைன்னா அப்புறம் எப்பவுமே முடியாது... அவன் இன்னும் இரண்டு நாளில் டில்லிக்கு வரப் போறான்னு நியூஸ்... நான் இந்த வாய்ப்பை தவறவிட விரும்பல... நீங்க எனக்கு அவனைக் கைது பண்ண அரெஸ்ட் வாரன்ட் மட்டும் கொடுங்க... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று அவள் முடிவாய் உரைத்துப் பிடிவாதமாய் நின்றாள். அவருக்கு அந்த நொடி வீரேந்திரனைப் பார்த்த உணர்வுதான்.
அனைத்துத் தடைகளையும் உடைத்து அவள் தான் நினைத்ததை சாதித்துக் காட்டிவிட்டாள். இறுதியாய் முடிவு எடுக்கும் சிக்கலான நிலையில் மாட்டிக் கொண்டார் தயாளன்.
அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தமிழச்சி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே விஷ்வாவும் ஆதியும் வந்திருந்தனர்.
ஆதியும் செந்தமிழும் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழச்சி உள்ளே நுழைந்து, “எப்போ வந்தீங்க ஆதிம்மா? என்கிட்ட வீட்டுக்கு வரப் போறேன்னு காலையில கூட சொல்லவே இல்ல” என்று வினவ,
“இல்ல ஊருக்குப் புறப்பட்டுட்டு இருந்தோம்... அதான் அப்படியே உங்க அம்மாவும் எப்படி இருக்கான்னு பார்த்துட்டுப் போலாம்னு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஆதித்தபுரத்துக்கா?” என்று கேட்க,
“ஹ்ம்ம்” என்று சொல்லி ஆதி எழுந்து கொண்டு, “வந்து ரொம்ப நேராமாச்சு டா... நாங்க கிளம்பணும” என்று சொல்லிவிட்டுத் தன் தோழியிடம் விடைபெற்றுக் கொண்டவர் தன் மருமகளின் காதோரம், “நாங்க திரும்பி வர்றதுக்குள்ள... நீயும் உன் புருஷனும் சமாதானம் ஆகியிருக்கணும்” என்றார்.
“அது வந்து ஆதிம்மா” என்றவள் தயங்க ஆதி உடனே, “என் புத்திசாலி மருமகளே! வேலையில காட்டுற உன் புத்திசாலித்தனத்தை இதுலயும் கொஞ்சம் காட்டு” என்று அவள் காதைத் திருகிக் கொண்டே செல்ல, “ஆ... சரி சரி” என்றவள் அதேநேரம் தலைகுனிந்து வெட்கமாய் புன்னகைத்தாள்.
அதன் பின் ஆதியும் விஷ்வாவும் அங்கிருந்து புறப்பட்டு விட செந்தமிழும் மகளைப் பார்த்து, “ஆதி சொன்னது புரிஞ்சுது இல்ல... விக்ரம் கிட்ட உன் ஈகோவெல்லாம் காட்டாம கொஞ்சம் பொறுமையா பேசு” என்றார்.
“அதெல்லாம் நான் பொறுமையாதான் பேசுவேன்” என்றவள் நொடித்து கொள்ள செந்தமிழ் அலுத்துக் கொண்டு, “நீ பொறுமையா பேசுவ...” என்றார்.
“ம்மா” என்றவள் இழுக்க, “சரி சரி கிளம்பு” என்றவர்,
“அப்புறம் அன்னைக்கு நீ என்கிட்ட கார்ல... நீயும் விக்ரமும் சேர்ந்து இருக்கிறது ஒரே புடியில இரண்டு கத்தி சேர்ந்து இருக்க மாதிரி... அது இரண்டு பேருக்கும் ஆபத்துன்னு சொன்ன... ஆனா எல்லாமே கையாள்ற விதத்துலதான் இருக்கு தமிழச்சி... நான் தொல்பொருள் ஆராய்ச்சில பார்த்திருக்கேன்... இருமுனைக் கத்தி கூட அந்தக் காலத்துல பயன்பாட்டுல இருந்த ஒரு ஆயுதம்தான்” என்று சொல்ல, அவர் வார்த்தைகள் உண்மைதான். எதுவும் கையாள்கின்ற விதத்தில்தான் இருக்கிறது.
தமிழச்சி தன் அம்மாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, “ஷ்யூர் ம்மா... இனிமே எனக்கும் விக்ரமுக்கு இடையில எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்து நடந்துக்கிறேன்” என்றாள்.
மகளிடம் வெளிப்பட்ட இந்த முதிர்ச்சி அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.
*
இவான் புறப்படுவதற்குத் தன் பாஸ்போர்ட் விசா எல்லாவற்றையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, சிம்மாவும் அவனுக்கு உதவி புரிந்திருந்தான்.
அப்போது தமிழச்சியின் வருகையைப் பார்த்த இவானுக்கு மனம் பாரமானது. “எத்தனை மணிக்கு ஃப்ளைட்?” என்று தமிழச்சி கேட்க சிம்மா தன் கைப்பேசியைப் பார்த்துவிட்டு, “இப்போ கிளம்புனாதான் கரெக்ட்டா இருக்கும்” என்றான்.
“ஆனா விக்ரம் வந்துட்டா” என்று இவான் சொல்ல, “அவன் ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறானே... பிஸியா இருக்கானோ என்னவோ... அவனுக்காகக் காத்திருந்தா லேட்டாயிடும்” என்றான் சிம்மா.
“சிம்மா சொல்றது கரெக்ட்தான்... அவன் எப்போ வருவான்னு தெரியாது... நான் வேணா அவன் வந்தா சொல்றேன்... நீங்க கிளம்புங்க” என்று அவள் சொல்லவும் மனமின்றித் தலையை மட்டும் இவான் அசைக்க. சிம்மா அவனுடைய பேக்கை கையில் எடுத்துக் கொள்ள, “சிம்மா வெய்ட்... ஐ ல்... டேக் இட்” என்றான்.
“இட்ஸ் ஓகே” என்று சொல்லி சிம்மா அவன் பேகை எடுத்துக் கொண்டு செல்ல இவான் தயக்கமாய் தமிழச்சியைப் பார்த்துக் கொண்டே நகர,
தமிழச்சி அவன் பேசியை மேஜை மீது விட்டுச் செல்வதைப் பார்த்து, “இவான்... யுவர் ஃபோன்” என்று அதனை எடுத்துக் கொடுக்கும் போது அதிலிருந்து தஞ்சைக் கோபுரத்தை அவர்கள் முதல் சந்திப்பில் பார்த்து வியந்தது நினைவுக்கு வந்தது.
“இந்த பிக் நீங்க எடுத்ததா? நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங் அன்னைக்கே பார்த்தேன்... இட்ஸ் ரியலி ஆசம்” என்று உரைத்தாள்.
“நோ... தட் டெம்பிள் இஸ் ஆஸம்... வாட் அ ஸ்கல்ப்ச்சர்... வாட் அன் ஆர்கிடெக்ச்சர் யா?! சிம்மா சொல்லும் போது கூட எனக்குப் பெரிசா நம்பிக்கை இல்ல... பட் பார்க்கணும்னு ஆர்வமா இருந்துச்சு... அதான் வந்ததும் தஞ்சை டெம்பிளை போய் பார்த்தேன்.
வாவ்! ஸ்டன்னாயிட்டேன்... அந்த நிமிஷம் உண்மையிலேயே தமிழனோட பாரம்பரிய வரலாற்றைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை வந்திருச்சு... இட்ஸ் ரியலி அன் அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்” என்று பாராட்டிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க, அவன் சொல்வதை வியப்பாகக் கேட்டுக் கொண்டே அவன் பேசியைக் கொடுத்தாள்.
அதனைப் பெற்றுக் கொண்டவன், “ஃபார் தேங்க்ஸ் இன் தமிழ்... நன்றி... அம் ஐ ரைட்?” என்றான். அவள் சிரித்தபடி, “எஸ்... பட் நோ நீட் ஆஃப் தேங்க்ஸ் இன் பிட்வீன் ஃப்ரெண்ட்ஸ்” என்று சொல்லித் தன் கரத்தை நீட்ட இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.
“நீங்க திரும்பவும் இந்தியா வரணும் இவான்... உங்களுக்கு ஒரு அழகான தமிழ் பொண்ணா நான் பார்த்து வைச்சிருப்பேன்... ஓகே தானே?” என்று அவள் புன்னகையோடு சொல்ல,
“ஓகே... பட் ஒன் கண்டிஷன்... பொண்ணு அப்படியே உங்களை மாதிரியே இருக்கணும்” என்றான்.
அவள் புன்னகை மறைந்து அவனை அதிர்ச்சியாய் பார்க்க அவனே மேலும், “பட் இட்ஸ் நாட் பாசிபிள் தமிழச்சி... பிகாஸ் யு ஆர் அன் யுனிக் பெர்ஸநாலிட்டி (ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல... ஏன்னா நீ ரொம்ப தனித்துவமானவ)” என்று சொல்லிவிட்டு அழுந்தப் பற்றியிருந்த அவள் கரத்தை விடுவித்துப் புன்னகை செய்தான்.
“ஓகே தமிழச்சி பை” என்று அவன் விடை பெற்றுக் கொண்டு வெளியே செல்ல, விக்ரம் வாசலில் சிம்மாவுடன் நின்றிருந்தான்.
இவான் விக்ரமை நோக்கி வந்து அவனுக்குக் கைக் கொடுத்து, “உங்களுக்கு நான் ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டேன் விக்ரம்... சாரி” என்க,
“நான்தான் சாரி சொல்லணும்... நீங்க யாரு என்னன்னு தெரியாம... கொஞ்சம் மரியாதை இல்லாம” என்றவன் சொல்ல இவான் புன்னகைத்து, “தட்ஸ் ஓகே” என்று சொல்லி விக்ரமை சிநேகமாய் அணைத்துக் கொண்டான்.
“இவான் டைம் ஆச்சு” என்று சிம்மா உரைக்க, “யா... யா... பை விக்ரம்” என்று உரைத்துவிட்டு தமிழச்சியின் புறம் திரும்ப அவள் உணர்ச்சியற்றப் புன்னகை புரிந்தாள்.
விக்ரம் அப்போதே தமிழச்சி வாயிலில் நிற்பதைப் பார்த்தான். ஆனால் அவளைக் கண்டும் காணாமல் அவன் உள்ளே செல்ல, “விக்ரம் ஒரு நிமிஷம்” என்று அழைத்துக் கொண்டு அவளும் உள்ளே வர, வீட்டில் யாரும் இல்லாததை கவனித்து, “அம்மாவும் அப்பாவும் எங்கே?” என்றான்.
“ஊருக்குப் போயிருக்காங்க” என்றவள் பதிலளிக்க,
“ஊருக்கா... என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அதிர்ச்சியானான்.
“என்கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க”
அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “அவங்களே இல்ல... நீ எதுக்கு இங்க இருக்க? உன் வீட்டுக்குக் கிளம்பு” என்று கடுப்பாய் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் செல்ல,
“கிளம்ப முடியாது... இதுவும் என் வீடுதான்... நான் இங்கதான் இருப்பேன்” என்றாள்.
அவளை அதிர்ச்சியாகத் திரும்பி பார்த்தவன் பின்னர், “எப்படியோ போ” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழையவும் அவளும் உள்ளே நுழைந்தாள்.
“ஏய் இப்ப எதுக்கு என் ரூமுக்குள்ள வர” என்றவன் கடுப்பாக, “இதுதானே என்னோட ரூமும்” என்றாள்.
அவன் கோபப் பார்வையோடு, “எந்த உரிமையும் வேண்டான்னு நீதான் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்ட இல்ல... இப்ப என்னடி திரும்பவும்... என் ரூம் என் வீடுன்னு” என்று அவளிடம் வெறுப்பாகப் பேசினான்.
“ப்ச்... ரொம்ப டென்ஸ்டா இருக்க... போய் குளிச்சிட்டு வா... ஆர தீர பொறுமையா சண்டைப் போடலாம்...” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த டவலை எடுத்து அவன் கரத்தில் திணிக்க அதனைத் தூக்கி எறிந்தவன்,
“உன் கூட சண்டை போடுற மூட்ல நான் இல்ல” என்று சொல்லிவிட்டுத் தன் கப்போர்டில் இருந்து தன் உடைகளையும் வேறொரு டவலையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
‘ரொம்ப கோபமா இருக்கான் போலவே... இவனை எப்படி சமாதானப்படுத்துறது’ என்றவள் படுக்கையில் அமர்ந்து கொண்டு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவள் பேசி ரீங்காரமிட அந்த அழைப்பை ஏற்று, “அந்த ஆளைப் புடிச்சுட்டீங்களா?” என்று எடுத்து எடுப்பில் கேட்கவும், “தப்பிக்க பார்த்தான் மேடம்... ஆனா அவனைப் பிடிச்சிட்டோம்” என்று பதில் வந்தது.
“குட்” என்றவள் சந்தோஷப் பூரிப்பில் பேசிக் கொண்டிருக்க, விக்ரம் குளியலறை விட்டு வெளியே வந்தான்.
அவள் அவர்களிடம் தன் உரையாடல்களைத் தொடர்ந்தாள்.
“நான் ஒரு நடராஜர் சிலையோட ஃபோட்டோ அனுப்பறேன்... அதைப் பத்தி அவன் கிட்ட விசாரிச்சு வைங்க... பதில் சொல்லாம் அவனை விடாதீங்க” என்று உத்தரவு போட்டுக் கொண்டிருக்க, நடராஜர் சிலை என்ற வார்த்தையைக் கேட்டு விக்ரமின் முகம் மாறியது. அவன் எண்ணம் அதைச் சுற்றியே வந்தது.
அவளிடம் அந்தச் சிலைப் பற்றிக் கேட்கலாம் என்று அவன் உள்ளுணர்வு சொல்ல, அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் பேசியை எடுத்து உள்ளே வைத்தாள்.
அவன் யோசனையாய் நின்றிருப்பதைப் பார்த்தவள், “ஏ விக்ரம்... ஐம் சாரி டா... நான் அந்தளவுக்கு உன்கிட்ட கோபமா நடந்திருக்கக் கூடாதுதான்... ஆனா அப்ப நான் இருந்த மனநிலைக்கு...” என்று இடைவெளி விட்டவள்,
“இப்பவும் சொல்றேன்... என்னால ஒரு போலீஸா அன்னைக்கு நீ செஞ்சதை சரின்னு ஏத்துக்க முடியாது... ஆனா அந்த ஒரு விஷயத்துக்காக நம்ம காதலையும் உறவையும் ஏன் விட்டுக் கொடுக்கணும்? இதை நான் லேட்டாதான் ரியலைஸ் பண்ணேன்... ப்ளீஸ் விக்ரம்... இந்தப் பிரச்சனையை இதோட விட்டுடலாமே“ என்றாள்.
அவள் பேசுவதை முறைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றவன், “இதையே நான் எத்தனை தடவை உன்கிட்ட சொன்னேன்... நீ கேட்டியாடி? பெரிய இவளாட்டம் பிரிஞ்சிடலாம் அப்படி இப்படின்னு சொன்ன... இப்ப என்னடான்னா... நீ சமாதானம் ஆயிட்டன்னு என்னையும் சமாதானம் ஆகச் சொல்றியா? நெவர்” என்று சீறினான்.
அவள் பொறுமை தன் எல்லையைக் கடந்துவிட அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டவள், “இப்ப எதுக்கு நீ ஓவரா சீன் போடுற... என்ன? நான் உன் கால்ல விழுந்து கெஞ்சணும்னு எதிர்பார்க்குறியா?” என்று கேட்கவும் அவனிடம் இருந்த இறுக்கம் தளர முகம் மலர்ந்தவன், “இனிமே நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல” என்றான்.
“என்னடா நடக்கும்” என்றவள் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்து வஞ்சமாய் புன்னகை செய்தவன் அடுத்த சில விநாடிகளில் தன் கரங்களை அவள் உடைகளுக்குள் அத்துமீறி நுழைத்து அவள் இடையினை அழுந்தப் பற்றி இழுத்தான்.
“விக்” என்று அவள் வார்த்தைகள் முடியும் முன்னரே அவள் இதழ்களைத் தம் இதழ்களால் மூடிவிட்டு, அவள் சுதாரிப்பதற்கு முன்னதாக விக்ரம் அந்த முத்தத்திற்குள் அவளை மூழ்கடித்துக் கொண்டே அவளைப் படுக்கையில் தள்ளிவிட்டான்.
நெடுநாளைய பிரிவினால் அவன் கொண்ட காதலும் காமமும் காட்டாற்று வெள்ளமாய் பெருக, அவளுடனான கூடலில் அந்த உணர்வைத் தீவிரமாய் காட்டி அவளைத் திணறடித்துக் கொண்டிருந்தான். அவளுமே அதைதான் விரும்பினாள். அவன் காதலின் தீவிரம் அவளுக்குத் தெரியாதா என்ன?
அவன் தேவையும் தாபமும் தீரும் வரை அவளுமே அவனுக்குத் தளராமல் ஈடுகொடுக்க, ஒரு நீண்ட ஊடலுக்குப் பின்னான அந்தக் கூடலில் தங்களின் காதலை மீண்டும் அழகாய் புதிப்பித்துக் கொண்டனர்.
அவன் அப்படியே தலையணையில் சரிந்து அவளைத் தன் தோளில் கிடத்திக் கொள்ள, “ஃப்ராடு... என் மேல கோபமா இருக்க மாதிரி நடிச்சதானே” என்று கேட்டாள்.
“சத்தியமா இல்ல... கோபமாதான் இருந்தேன்... நீ கிட்ட வந்து என் சட்டையைப் பிடிச்சதும்... எனக்கு என்னாச்சுன்னே தெரியல” என்றவன் இழுக்க, “அவ்வளவு வீக்காடா நீ” என்று அவனைப் பார்த்து சிரித்தாள்.
“உன்கிட்ட மட்டும்தானடி” என்றவன் சொல்ல, “இதை நான் நம்பணும்” என்று எகத்தாளமாய் கேட்டாள்.
அவளை ஆழமாய் பார்த்தவன், “அப்படின்னா நம்புற மாதிரி ஒரு மேட்டர் சொல்லட்டுமா?” என்று ஆரம்பிக்க அவள் அப்படியென்ன சொல்லப் போகிறான் என்று சுவாரசியம் இல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்.
விக்ரம் அப்போது அவன் பிரதமர் வீட்டிற்குப் போனதிலிருந்து அமிர்தா அவனிடம் பேசிய விதம் காதலைச் சொன்னது மற்றும் அதற்கு சம்யுக்தாவின் சம்மதம் என்று முழுவதுமாய் சொல்லி முடித்தான்.
அவன் சொல்வதைக் கேட்க கேட்க அதிர்ச்சியும் கோபமும் மாறி மாறி வெளிப்பட, அவள் வாயடைத்துப் போனாள். அவன் சொன்னது உண்மைதான் என்று நம்பவே அவளுக்கு சிரமமாயிருந்தது.
“தமிழச்சி” என்று விக்ரம் அழைக்கவும் உணர்வு பெற்றவள் ஆக்ரோஷமாக, “அந்த அமிர்தா என்னதான் நினைச்சிட்டிருக்கா... பிஎம் பொண்ணா இருந்தா அவ பெரிய இவளாமா... என் கையில மட்டும் அவ மாட்டினா அவளுக்கு சங்கு ஊதிடுவேன்னு சொல்லி வை”
“அன்னைக்கே அவ முகரையை நான் பேத்திருந்தேன்னா இன்னைக்கு இப்படி எல்லாம் அவ உன்கிட்ட வந்து பேசி இருப்பாளா... என்ன பொம்பள அவ... கல்யாணம் ஆன உன்கிட்ட அவளுக்கு அப்படி என்ன காதல்” என்று பட்டாசு போல படபடவெனப் பொறிந்த தன் மனைவியிடம்.
“தமிழச்சி கொஞ்சம் அமைதியா இரு” என்றான்.
அவள் கோபம் மொத்தமாய் அவன் புறம் திரும்ப, “உண்மையைச் சொல்லு... அவளைக் கல்யாணம் கட்டிக்கிட்டு பிஎம் ஆகலாம்ன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” என்று சந்தேகமாய் கேட்க,
“நீதானடி என்ன இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி லெட்டர் எல்லாம் எழுதிக் கொடுத்த... அதுவும் இல்லாம ப்ரெஸ் எல்லாம் கூப்பிட்டு எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லன்னு வேற சொல்லிட்ட” என்று கிண்டலாய் நகைத்துக் கொண்டே சொல்ல, “கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று ஆவேசத்தில் அவன் கழுத்தைப் பிடித்து நெரித்தாள்.
“கொன்னுடு... அப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரட்டும்”
அந்த நொடியே அவள் தன் கரங்களை விலக்கிக் கொண்டவள் தளர்ந்த பார்வையோடு, “ஸோ... உன் அரசியல் வாழ்க்கைக்காக நம்ம காதலை விட்டுக் கொடுக்க போற... அப்படித்தானே?” என்றதும் அவன் அவளைக் கோபமாய் முறைத்தான்.
“அவ்வளவுதான் நீ என்னைப் புரிஞ்சு வைச்சுட்டிருக்க இல்ல” என்றவன் வேதனையோடு உரைத்து,
“எனக்கு என் இலட்சியம் முக்கியம்தான்... ஆனா அதுக்காக எல்லாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது... அன்னைக்கு அந்த அமிர்தா ஆக்சிடென்ட் பண்ண போது கூட... நான் என் அரசியல் வாழ்கையைக் காப்பாத்தணும்னோ இல்ல அந்த அமிர்தாவைக் காப்பாத்தணும்னோ அப்படி எல்லாம் செய்யல... நீ அமிர்தாவை அரெஸ்ட் பண்ண விஷயம் மாதாஜி காதுக்குப் போய் உனக்கு எதாவது பிரச்சனை வருமோன்னு பயந்துதான் நான் அந்த விஷயத்துல தலையிட்டேன்”
“இப்பவும் நான் என் சுயலாபத்துக்காக யோசிக்கல... அந்த அமிர்தா ஒரு சரியான கிறுக்கு... நான் முடியாதுன்னு சொல்லி அவ பாட்டுக்கு ஏடாகூடமா எதாச்சும் செஞ்சு வைச்சிட்டா... மாதாஜியோட கோபம்... என்னை மட்டும் இல்ல... என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் சேர்த்து பாதிப்பை உண்டாக்கிடுமோன்னுதான் பயப்படுறேன்” என்றவன் தவிப்போடுச் சொல்ல அவன் எண்ணத்தில் நியாயம் இருந்தது.
பலம் படைத்தவர்களிடம் பலவீனமானவர்கள் அவர்கள் விருப்பு வெறுப்பைக் கடந்து அடிபணிந்தே ஆக வேண்டும். அதுதான் இன்றைய நியதி.
சில பிரச்சனைகள் இருமுனைக் கத்திப் போல, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்துதான்.
31