மோனிஷா நாவல்கள்
IrumunaiKathi - Episoode 12
Quote from monisha on November 23, 2023, 12:16 PM12
சங்கத்தமிழன்
வானின் மேகங்களைக் கிழித்துக் கொண்டு உயர உயர பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். பல நூறு பயணிகளுக்கு இடையில் தன் இருக்கையில் விழிகளை மூடி அமர்ந்திருந்தான் சிம்மபூபதி.
எத்தனை ஆயிரம் மையில்கள் கடந்து வந்தாலும் அவனின் எண்ணம் முழுக்க தன் தாயைச் சுற்றியே இருந்தது. அவர் இந்நிலையில் இருக்கும் போது தான் அவர் அருகில் இல்லாமல் போனோமே என்ற குற்றவுணர்வு அவன் மனதைத் துளையிட்டுக் கொண்டிருந்தது.
இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அவன் நினைக்கவில்லை. ஆனால் இந்தக் காரியத்தை அவன் கையிலெடுக்கப் போவதாகச் சொன்ன போதே செந்தமிழ் அவனிடம் சொன்னாரே!
அன்று...
சிம்மபூபதி தமிழிடம் சிலைக் கடத்தல் குறித்து தான் சேகரித்தத் தகவல்களைக் காண்பித்து, “இப்படியே போனா... நம்ம கும்பிடுற எல்லா சாமி சிலைகளும் போலியா மாறிடும்” என்று சொல்ல அவர் அவன் காட்டிய விவரங்களை மும்முரமாய் ஆராய்ந்து கொண்டே,
“எப்படி இவ்வளவு இன்ஃபர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ண சிம்மா?!” என்று வியப்பாய் கேட்டார்.
“ரீசண்ட்டா நம்ம மதியழகி... ஆஸ்ட்ரேலியன் கேலரில இருக்குற அர்த்தநாதீஸ்வரர் சிலைப் பத்தி சொன்னா... அதைப் பத்தித் தேடும் போது எனக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைச்சுதும்மா”
“என்ன?”
“விருதாச்சலம் கோவில்ல இருந்த அந்தச் சிலையைத் திருடிக் கொண்டு போய் அந்த கேலேரிக்கு விலைப் பேசி வித்துருக்காங்க”
“ஓ!” என்றவர் முகம் ஒரே நேரத்தில் வியப்பும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் மாற அவன் மேலும்,
“அப்பதான் இந்த மாதிரி என்னென்ன சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியங்களில் இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னு முடிவு பண்ணேன்... நான் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல சங்கத்தமிழன்னு ஒரு க்ரூப் ஆரம்பிச்சிருந்தேன்...
அதுல நம்ம கலாச்சாரம் பாரம்பரியம் மொழி மேல் பற்றுடைய பல நாடுகளில் வசிக்கிற தமிழர்கள் பலரும் மெம்பரா இருக்காங்க ... அவங்ககிட்ட உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கிற நம்ம ஊர் சிலைகளோட படங்களைப் பகிர்ந்துக்க சொன்னேன்...
நான் எதிர்பார்த்ததை விட ரெஸ்பான்ஸ் நிறைய வந்துச்சு... நிறைய பேர் அவங்க நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் இருக்கிற சிலைகளோட ஃபோட்டோவை ஷேர் பண்ணாங்க... அந்த ஃபோட்டோஸ் வைச்சு நான் விசாரிச்ச வரைக்கும் முக்கால்வாசி சிலைகள் கடத்தல் சிலைகள்தான்... அதுவும் எல்லாம் இந்தப் பத்து பதினைந்து வருஷத்துல திருடப்பட்ட சிலைகள்” என்றான்.
அவன் சொல்வதை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்த செந்தமிழ் புருவங்கள் நெறிந்தன. “நம்ம சிலைகள் கண்டுபிடிக்க நீ யூஸ் பண்ண இந்த புதுவிதமான முயற்சி ... ரியலி ஹட்ஸ் ஆஃப்! ஆனா இந்தத் தகவல் எல்லாம் வைச்சு... நம்ம என்ன பண்ண முடியும்னு நினைக்கிற?” என்றவர் கேட்க அவன் அதிர்ந்து,
“நீங்களா ம்மா இப்படி பேசுறீங்க?” என்றான்.
“ம்ச்... இந்த விஷயத்துல நானும் ஆதியும் போராடிப் போராடி ஒரு ஸ்டேஜுக்கு மேல நொந்துட்டோம் சிம்மா... அரசாங்கத்துக்கும் சரி... நம்ம மக்களுக்கும் சரி... இதைப் பத்தின எந்தவித அக்கறையும் இல்ல... ஏன்னா... எக்னாமிக்கலா பாதிக்கிற விஷயங்கள் மட்டும்தான் எல்லோருக்கும் பெரிய குற்றமா பார்க்கப்படுது” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு,
“இன்னும் மீடியாஸ்லாம் ரொம்ப மோசம்... நியூஸ் பேப்பர்ஸ்ல... கள்ளக் காதல்... கணவன் மனைவியை வெட்டிக் கொலை... இதெல்லாம் இரண்டாவது பக்கத்தில வரும்... இதுவே சிலைக் கடத்தல் பத்தின செய்தி பாரு... கடைசிப் பக்கத்துல பெட்டி சைஸ்ல வரும்... அது கூட ஆப்ஷனல்தான்... வராமக்கூடப் போகலாம்...
இப்படி இருக்குற நிலைமையில நம்மால மட்டும் என்ன பண்ணிட முடியம்னு நீ நினைக்கிற” என்றார்.
அவன் சில நொடிகள் அவரை ஆழ்ந்து பார்த்து, “போன மாசம் பல கோடி மதிப்புள்ள நம்ம ஊர் சிலைகளை அமெரிக்காவுக்குப் போன சரக்கு கப்பலில் மீட்டாங்களே... அது எப்படின்னு தெரியுமா?” என்று கேட்க, செந்தமிழ் அவனைப் புரியாமல் பார்த்தார்.
“சங்கத்தமிழன் குருப்ல இருக்குற மெம்பர் ஒருத்தர் சரக்குக் கப்பல் மூலமா அமெரிக்காவுக்கு நம்ம சிலைகள் கடத்தபடுற தகவலை எனக்கு சொன்னாரு... ஆனா நம்ம கஸ்டம்ஸ் அந்த கண்டைனரை கிளியரன்ஸ் பண்ணி அனுப்பிட்டாங்க... அப்புறம் என் குழுல இருக்க என்னோட சில நண்பர்கள் மூலமா அமெரிக்க கஸ்டம்ஸுக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன்... அவங்க அங்க செக் பண்ணதுலதான் நம்ம சிலைகள் மீட்கப்பட்டுது” என்றவன் சொல்ல செந்தமிழ் விழிகள் வியப்பில் விரிந்தன. வார்த்தைகள் வராமல் ஸ்தம்பித்து அவனை விழி எடுக்காமல் பார்த்தவர்,
“சைலண்ட்டா இருந்துட்டு... எவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்க சிம்மா!” என்று பெருமிதத்தோடு அவன் தோளைத் தட்டிப் பாராட்ட அவன் முகத்தில் அதற்கான எந்தவித உணர்வும் இல்லை.
“எனக்கு இதுல துளி கூட சந்தோஷம் இல்லம்மா” என்றான் வேதனையோடு!
“ஏன் சிம்மா?”
“அப்போதைக்கு அந்தச் சிலைகளை மீட்டாலும் குற்றவாளின்னு யாரையுமே பிடிக்கலயே... யார் அனுப்பினான்னு தெரியல... அது யாருக்காகப் போச்சுன்னும் தெரியல... அந்த லெவல்லதான் நம்ம அரசாங்கமும் காவல்துறையும் இருக்கு... யார் எப்படி இருந்தாலும் சரி... நான் அந்த நெட்வொர்கைக் கண்டுபிடிக்கதான் போறேன்” என்றவன் வலியோடு ஆரம்பித்து தீர்க்கமாக அவன் முடிவைச் சொல்ல,
“உன் ஒருத்தனால மட்டும் என்ன செய்ய முடியும்?” என்று சந்தேகமாய் கேட்டார்.
“முயற்சி செய்யாம தோல்வியை ஒத்துக்கக் கூடாதுன்னு நீங்கதானேம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தீங்க... அன்ட் அதெல்லாம் தாண்டி நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒருத்தன் மட்டும் இல்ல... உலக நாடுகளில் இருக்க என் க்ரூப் மெம்பர்ஸ் இது விஷயமா எனக்கு உதவத் தயாரா இருக்காங்க... தமிழன்ங்கிற உணர்வையும் அடையாளத்தையும் யாரும் அத்தனை சுலபமா அழிச்சிட முடியாது... எந்தக் கண்டத்துல எந்த நாட்டுல வாழ்ந்தாலும் தமிழன் தமிழன்தான்”
அவன் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்த தமிழ், “சரி... இப்ப நான் என்ன பண்ணனும் உனக்கு” என்று கேட்டார்.
“இது விஷயமா நான் சில நாடுகளுக்குப் போகணும்... அதுக்கு விசா அரேஞ்ச் பண்ணனும்”
“அதெல்லாம் ஒரு விஷயமில்ல.... பண்ணிடலாம்... ஆனா உங்க அப்பா நிச்சயம் இதுக்கு சம்மதிக்க மாட்டாரு... ஏன்னா போன வாரம்தான் சஸ்பென்ஷன் முடிஞ்சு உன் தங்கச்சியைச் சிலைக்கடத்தல் பிரிவுக்கு மாத்தி இருக்காங்க... அதனால் இப்போதைக்கு நீ இந்த விஷயத்தில தலையிடுறதை உங்க அப்பா விரும்ப மாட்டாரு”
இதைக் கேட்டு சிம்மா முகம் துவண்டு போக, “வேணா... தங்கச்சிகிட்ட நான் சேகரிச்ச தகவல் எல்லாம் கொடுத்து... இந்த கேசை மேல ப்ரொசீட் பண்ண சொல்லலாமா?!” என்று யோசனையாய் கேட்க,
“நாசமா போச்சு... உன் தங்கச்சிய சிலைக் கடத்தல் பிரிவுக்கு மாத்தினதுக்கு காரணமே அவ திறமைய முடக்கணும்னுதான்... ஏன்னா இன்னைக்கு ரேஞ்சுக்கு தமிழ்நாட்டில செயல்படாத ஒரு டம்மியான பிரிவு... சிலைக் கடத்தல் பிரிவுதான்...
ஆனா நிச்சயம் உன் தங்கச்சி சும்மா இருக்க மாட்டா... அவதான் உங்க அப்பாவோட ப்ராடெக்ட் ஆச்சே... அதனால அவ எதையாச்சும் தோண்டுவா... அவளை உடனே வேற டிபார்ட்மெண்டுக்குத் தூக்கி அடிப்பாங்க... இதான் நடக்கும்... இதான் காலகாலமா நடந்துகிட்டு இருக்கு” என்றார்.
“அதனால நான் என்ன சொல்றேனா நீ இது விஷயமா போறது உங்க அப்பாவுக்கும் தங்கச்சிக்கும் இப்போதைக்குத் தெரிய வேண்டாம்” என்று தமிழ் சொல்ல,
“அப்பாவுக்குத் தெரியாம எப்படி?” சிம்மா அதிர்ந்தான்.
“கஷ்டம்தான்... ஆனா உங்க அப்பா நெக்ஸ்ட் வீக் ஆஃபீஸ் வேலையா வெளியூர் போறாரு... வர ஒன் வீக் ஆகும்... அதுக்குள்ள நீ போறதுக்கான எல்லாம் அரேஞ்மென்ட்சும் நான் பண்றேன்”
“ஆனா இப்பவும் ஒருமுறை நல்லா யோசிச்சுக்கோ... நீ ரொம்ப ரிஸ்கான வேலையில இறங்கப் போற... என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் கடைசி வரைக்கும் உறுதியா நின்னு எடுத்த வேலைய முடிக்க முடியும்னா செய்... இல்லன்னா விட்டுடு” என்றார்.
“யோசிக்க என்னம்மா இருக்கு... நான் உங்க பையன்... அப்படியெல்லாம் எடுத்த வேலையில இருந்து பின்வாங்க மாட்டேன்... கண்டிப்பா முடிச்சுக் காட்டுவேன்... நீங்க பாருங்க” என்றவன் உறுதியோடு சொல்ல இந்த வார்த்தைகளைக் கேட்ட தமிழ் பூரிப்போடு,
“உன்னைப் பார்க்கும் போது அப்படியே உங்க கொள்ளுத் தாத்தாவைப் பார்க்கற மாதிரியே இருக்கு சிம்மா... அவரும் இப்படித்தான்... ஒரு விஷயத்தை நினைச்சிட்டா கடைசி வரை பிடிவாதமா நின்னு அதை சாதிச்சுக் காட்டுவாரு... என்கிட்டயும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்லுவாரு... எனக்கு உன்னை நினைச்சு ரொம்பா பெருமையா இருக்கு” என்றவர் கூறி மகனை பெருமிதத்தோடு அணைத்து உச்சிமுகர்ந்தார்.
அந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கும் போதே சிம்மாவிற்கு உடலெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. அன்று தன் தாய் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மையை இப்போது அவன் உணரலானான். அவருக்கு ஏற்ப்பட்ட விபத்து அவன் மனஉறுதியை சற்றே அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.
ஆனால் எல்லா தாயையும் போல செந்தமிழ் அவனுக்குத் தாய்பால் கொடுத்து மட்டுமே வளர்க்கவில்லையே. நம் இனம், மொழி, பாரம்பரியம், கலச்சாரம் எல்லாவற்றின் மீதும் தீராக் காதலையும் ஊற்றியல்லவா வளர்த்திருக்கிறார்.
அந்த உணர்வும் பற்றும் அவனின் ஒவ்வொரு செல்களிலும் ஆழமாய் பதிவாகியிருக்க, அசாத்திய தைரியமும் வீரமும் அவன் ரத்தத்திலேயே செறிந்திருந்தது. அப்படியானவன் அத்தனை சீக்கிரத்தில் தான் இறங்கிய காரியத்தில் இருந்து பின்வாங்கி விடுவானா?
நாகரிக வளர்ச்சியிலும் மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் மறைமுகமாக உலகை சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க நாடான வாஷிங்கடன் டல்லீஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
சிம்மபூபதி அந்த நாட்டுக்குரிய எல்லா இம்மிக்ரேஷன் சோதனைகளையும் கடந்து வந்த பின்னர் அவனின் வரவுக்காகவே காத்திருந்த அந்நாட்டின் பெண்மணி ஒருத்தியை சந்தித்தான். அவள் அவனை வரவேற்று தன் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
*
கமலக்கண்ணன் கொலையுண்ட வீட்டைச் சுற்றிப் போலீஸ் தன் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்க, அவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தமிழச்சி தன் பங்குக்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஜான்சனைக் குடைந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
“இந்த வீட்டோட ஓனர் துபாயில இருக்காரு... எப்பயாச்சும் வந்தா இங்க தங்கிட்டுப் போறது வழக்கமாம்” என்று ஜான்சன் சொல்ல,
“உங்க கண்ட்ரோல்ல இருக்குற ஏரியால இப்படி ஒரு பங்களா பாதுகாப்பில்லாம இருக்கு... அதை நீங்களும் கவனிக்காம விட்டிருக்கீங்க... இல்ல” என்று அவள் கோபமாகக் கேட்க ஜான்சன் கலவரமடைந்தான்.
“இல்ல மேடம்... இப்படியெல்லாம் இங்க நடக்கும்னு”
அவள் அவனைப் பேசவிடாமல், “என்ன பேசறீங்க? இந்த மாதிரியான இடங்களில்தான் குற்றங்கள் அதிகமா நடக்கும்... நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்” என்றவள் சொல்லிக் கொண்டே,
“ஒரு வாரமா சிட்டி லிமிட் குள்ளேயே... இருந்து ஒருத்தன் நமக்குத் தண்ணிக் காட்டிட்டு இருந்திருக்கான்... அவனைப் பிடிக்க நமக்குத் துப்பில்ல” என்றவள் கடிந்துரைக்க ஜான்சன் அவளுக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
அந்த சமயம் ஏடிஜிபி தயாளன் அங்கே வர, தமிழச்சி அவரை அழைத்துச் சென்று கமலக்கண்ணன் கொலையுண்ட இடத்தைக் காண்பித்து நடந்தவை யாவையும் ஒன்றுவிடாமல் விவரித்தாள்.
அங்கே கைரேகை நிபுணர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்க அந்த வீட்டை விட்டு வெளியே வந்தத் தயாளன், “கடைசில இந்த கேஸ்ல உங்களுக்கு இருந்த... ஒரே துருப்புச் சீட்டும் இல்லாமப் போயிடுச்சு... இனிமே என்ன பண்ணப் போறீங்க தமிழச்சி?” என்றவர் கேட்க,
“இதுதான் கடைசி துருப்புச் சீட்டுனு நான் நினைக்கல சார்... இன்னும் கேட்டா இப்பதான் நான் எதிராளியை ரொம்ப நெருங்கிட்ட மாதிரி ஒரு ஃபீல்... சீக்கிரமே அவன் என் கையில மாட்டிடுவான்” என்று அவள் நம்பிக்கையாகவும் அழுத்தமாகவும் கூற அவர் அவளைத் தயக்கமாய் பார்த்தார்.
“ஆனா தமிழச்சி... இந்தக் கொலையே உங்க கவனக்குறைவாலதான் நடந்துதுன்னு...” என்றவர் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், “மேலிடத்துல இருந்து உங்கள இந்த கேஸில இருந்து தூக்கச் சொல்லிட்டாங்க” என்றார்.
அவள் உணர்சிகள் துடைத்த முகத்தோடு அவரை ஏறிட்டவள்,
“இன்னும் ஒரு வாரத்துல இந்த கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லன்னா நீங்க உங்க மேலிடத்துல சொல்ற மாதிரி செய்யுங்க... பட் ப்ளீஸ் சார்... எனக்கு இந்த ஒரே ஒரு வாரம் டைம் குடுங்க” என்று அவள் திடமாகச் சொல்ல, தயாளன் அவளை வியப்பாகப் பார்த்தார்.
அவள் விழியில் தெரிந்த உறுதியைக் கவனித்தவர், “ஓகே தமிழச்சி... ப்ரொசீட்... ஆனா ஒரு வாரம்தான் உங்களுக்கு டைம்” என்று அவர் முடிவாய் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட,
தமிழச்சிப் பெருமூச்செறிந்தாள். எந்த நம்பிக்கையில் அந்த ஒரு வாரக் கெடுவைக் கேட்டாள். ஆனால் அந்தக் கடத்தல் கும்பலைக் குறித்து எதாவது ஒரு துப்புக் கிடைக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கை அவள் மனதோடு இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. சிலைக் கடத்தல் பிரிவுக்கு அவள் மாற்றலான இந்த மூன்று மாதத்தில் அவள் கடந்து வந்த சோதனைகள் பற்பல!
அவள் பொறுப்பேற்ற போது அவளுக்கு கீழாய் வெறும் ஏழு பேர் கொண்ட குழு... ஆனால் பலநூறு வழக்குகள் வருடங்கள் தாண்டி முடிக்கப் படாமல் வெறும் ஏட்டளவிலேயே நின்று போயிருந்தன. கவனிப்பாரின்றி இருந்த அந்தப் பிரிவில் நிலுவையில் உள்ள சிலைக் கடத்தல் வழுக்குகளைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு மலைப்பாய் இருந்தன.
இருப்பினும் அவள் மனம் தளர்ந்துவிடவில்லை. முனைப்பாய் அந்த வழக்குகளை எல்லாம் ஆராய்ந்ததில் அவளுக்குக் கிடைத்து ஒரு சின்ன தகவல்தான். இரண்டு மாதம் முன்பு அமெரிக்காவுக்கு சரக்கு கப்பலில் கடத்தப்பட்ட சிலைகள்... அது மீட்கப்பட்ட போதும் அதை யார் அனுப்பினார்கள் என்ற எந்தவிதத் தகவலும் இல்லை.
தமிழச்சி தன்னுடைய முதற்கட்ட விசாரணையை அங்கிருந்தே தொடங்கினாள். அந்த தேடலின் பயனாகவே கமலக்கண்ணன் மீது அவளுக்கு சந்தேகம் எழுந்தது. கமலக்கண்ணனின் குடும்பம் தொடங்கி அவன் அலுவல் செயல்பாடுகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் சொத்துவிவரங்கள் அவனின் செல்பேசி தொடர்புகள் என்று ஒரு இண்டு இடுக்கு விடாமல் மொத்த தகவல்களையும் தன் குழுவின் மூலமாக சேகரித்தாள். கிட்டத்தட்ட அந்த தகவல்கள் யாவும் அவளின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
அதன் பின் அவனைக் கைதுசெய்ய அவள் மேலிடத்தில் அனுமதிபெற இருந்த சமயம்தான் அந்த விபத்து நிகழ்ந்தது. அதிலிருந்து மீண்டு அவனைக் கைது செய்துவிட, அவள் எத்தனித்த போதுதான் துரதிர்ஷ்டவசமாய் அத்தனை அருகாமையில் வந்து அவனை நழுவ விட்டாள். இப்போது தன்னுடைய அத்தனை உழைப்பும் மதிப்பற்றுப் போகப்போகிறது.
விடக் கூடாது என்றவள் மூளை தீவிரமாய் அதைக் குறித்து யோசித்திருக்க, அப்போது ஒரு கான்ஸ்டபிள் அந்த இடத்தில் வசிப்பவர்களிடம் மேற்கொண்டிருந்த விசாரணை அவள் காதில் எதேச்சையாய் விழுந்து அவள் யோசனையைக் கலைத்தது.
“இரண்டு நாள் முன்னாடி ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்தேன் சார்... நல்லா ஆறு ஆறரை அடி உயரம்... ஆள் பார்க்க திடகாத்திரமா இருந்தான்”
அவர் சொன்னதைக் கேட்ட மறுகணம் அவள் கண்முன்னே வந்து போனது இவான் ஸ்மிதின் உருவம்தான்.
“ஏன் பெரியவரே! அவரோட முகத்தைப் பார்த்தீங்களா?” என்று அவள் கேட்டுக் கொண்டே அவர் அருகே வந்து நிற்க, “தூரத்தில இருந்து பார்த்தேன்... முகம் தெரியல... ஆள் மட்டும் தெரிஞ்சான்... ஏதோ வெளிநாட்டுக்காரனா இருக்கானேன்னு பார்த்தேன்... அவ்வளவுதான்” என்றவர் பதிலளிக்க, அவள் மூளை வேகமாய் செயல்படத் தொடங்கியது.
உடனே அவள் ஜான்சன் புறம் திரும்பி, “இங்கே பக்கத்துல நிறைய பங்களாஸ் இருக்கு... கண்டிப்பா செக்யூரிட்டிகாக சிசிடிவி போட்டிருப்பாங்க... கடந்த ஒரு வாரத்திற்கான அதோட ஃபுட்டேஜஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுங்க...
இந்தப் பெரியவர் சொன்ன அடையாளத்தில மேட்ச் ஆகற மாதிரி யாராச்சும் இருக்காங்களான்னு செக் பண்ணுவோம்... அட் தி சேம் டைம் இந்த வாரத்தில் ரிபீட்டா வந்து போன வெகிக்கல்ஸ்... சஸ்பெக்ட் பண்ற மாதிரியான ஆட்களோட நடமாட்டம்... எல்லாத்தையும் கவனிக்கணும்... டூ இட் ரைட் நவ்” என்று அவள் அதிகாரமாய் உரைக்க, ஜான்சன் வேகம் வேகமாய் அவள் சொன்ன வேலையில் முனைப்பாய் ஈடுப்பட்டான்.
அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டதில் இருந்து தமிழச்சியின் சிந்தனையில் இவான் மட்டுமே நின்றான். ஆரம்பத்தில் இருந்தே அவளுக்குள் இருந்த சந்தேகங்கள் இப்போது அதிதீவிரமாய் மாறின.
சில மணிநேரங்களுக்குப் பின் ஜான்சன் அவள் கேட்டது போல அந்த இடத்தை சுற்றியிருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை அவளுக்கு அனுப்பி வைத்தான். அவற்றையெல்லாம் தன் அலுவலகத்தில் இருந்தபடி பொறுமையாய் ஆராய்ந்து பார்த்தவளுக்குத் தலைவலி வந்ததுதான் மிச்சம்.
இருப்பினும் இவானின் மீதான சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அவன் அதிபுத்திசாலி! அசாத்தியமாய் சிக்கிக் கொள்ள மாட்டான். அந்தப் பெரியவர் சொன்னது அவனாகத்தான் இருக்கக் கூடும் என்றே அவளுக்கு உறுதியாய் தோன்றியது.
அதுவும் கமலக்கண்ணனைக் கைது செய்ய சென்ற இடத்தில் அவன் இருந்தது... அவளின் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதுவும் காலையில் அவன் வீடு தேடி வந்ததும் பின் அவன் அவசரமாய் புறப்பட்டதும் அதற்கு முன் அவனுக்கு வந்த செல்பேசி அழைப்பும் அவள் போலீஸ் மூளையால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இம்முறையும் ஆதாரத்திற்காகக் காத்திருந்து மீண்டும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவள் நழுவவிடத் தயாராக இல்லை. நேரடியாக அவனை விசாரித்துவிட வேண்டும் என்ற முடிவோடு அன்று இரவே தன் வாகனத்தில் விக்ரமின் வீட்டை அடைந்தாள்.
12