மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 30

Quote from monisha on July 6, 2026, 7:05 PM30
மூன்று வருடங்களுக்கு முன்பாக இதே நாளில்தான் இருவரும் மணம் முடித்து கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்தனர். காதலிலும் தாபத்திலும் ஒன்றெனக் கலந்தனர்.
ஆனால் அந்தச் சந்தோஷம் சில நாள்கள் கூட அவர்கள் வாழ்வில் நிலைத்திருக்கவில்லை. அது காலத்தின் சதியா அல்லது விதியா என்றெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. அப்போதைய சூழலில் நடந்த எதையும் அவர்களால் தவிர்த்திருக்க முடியாது என்பது மட்டும் உண்மை.
வெறும் ஒருசில வார்த்தைகளில் அந்தப் பந்தத்தை அவள் முடித்துவிட்டாள்; கோபத்துடன் அவனும் அதனை ஏற்றுக் கொண்டான்.
‘என் வாழ்க்கையில இனிமே உன்னை நான் பார்க்கவே கூடாதுடி... தப்பித் தவறி கூடப் பார்த்திடக் கூடாது!’
உடைந்து நொறுங்கிய மனதுடன் கார்த்திக் சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் இன்னும் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அவன் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றுதான் எங்கேயோ கண்காணாத தூரத்தில், அவள் வசித்து வந்தாள். ஆனால், எதிர்பாராமல் இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்துவிடும் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.
இருவரின் பார்வையும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன. அவளது நெற்றி, கண்கள், உதடுகள் என கார்த்திக் அணு அணுவாக அவள் முகமாற்றத்தை அளவிட்டான்.
அவன் பார்வையில் இருந்த தீவிரம் அவளை நிலைகுலையச் செய்தது. அவனது நெஞ்சுக்கூடு பலமாக ஏறி இறங்குவதைக் கொண்டு அவனும் அதே தவிப்பில் தான் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.
ஆனால், அடுத்த கணமே அவனது கண்கள் குளிர்ந்து கல்லாக மாறின. தன் காதலை துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றவள் என்ற அந்தப் பழைய கோபமும் வன்மமும் அவன் கண்களில் மீண்டும் குடியேறின.
அக்கணமே அவன் பார்வை அவளை தவிர்த்து வேறு புறம் திரும்பி கொள்ள, அவளும் தலையை உலுக்கி கொண்டாள்.
அந்தக் குறுகிய அறைக்குள் மிக குறுகிய நொடிகளுக்குள் அவர்கள் உணர்வுகள் பலவித ஏற்ற இறக்கங்களை கண்டது. சொல்லப்படாத வார்த்தைகளால் தவித்தது. கோபம் காதல் இரண்டுக்கும் இடையில் ஊசலாடியது.
அவன் மூடிய கதவை வெறிக்க, அவள் மின்தூக்கியில் மாறும் எண்களை அவஸ்த்தையுடன் நோக்கினாள்.
அதில் ஒவ்வொரு எண்ணாக மாற மாற, அவள் ஞாபகங்களும் ஒவ்வொரு வருடமாகப் பின்னோக்கி நகர்ந்தன.
ஒருமுறை துணிக்கடை மின்தூக்கியில் இருவரும் மூச்சுக்காற்று உரச நெருக்கமாக நின்றதும், யாரும் அறியாமல் கார்த்திக் அன்று ரகசியமாக அவள் கையைப் பிடித்ததும் இந்த நொடி அவளது நினைவுகளில் வந்து நின்றன. அதுதான் அவளின் உணர்வுகளைத் தூண்டிய முதல் காதல் தொடுகை. அன்று தொட்ட விரல்களின் வெப்பத்தை இந்தக் கணமும் அவள் கைப்பிடி உணர, தன் கையைச் பெட்டியின் பிடி மீது வைத்து இறுக்கிக் கொண்டாள்.
ஒரு வழியாக அந்த மின்தூக்கி நின்று கதவு திறந்தது. சிறு சலனம் கூட இல்லாமல், கார்த்திக் அவளை யாரோ போல கடந்து சென்றுவிட, அதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.
தன்னை அவன் தன் வாழ்விலிருந்தும் நினைவுகளிலிருந்தும் மொத்தமாகத் தூக்கி வீசிவிட்டானோ? அப்படிதான் என்றால் அதை அவள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வலித்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மின்தூக்கியை விட்டு மெதுவாகத் தன் பெட்டியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அணைக்கட்டில் நீர் பெருகுவது போல அவள் விழிநீரும் பெருக, அதனை மெதுவாக துடைத்துவிட்டுக் கொண்டே நடந்தாள்.
கார்த்திக் நேராக அவள் அண்ணன் கொடுத்த அதே பிளாட் எண்ணின் முன்பு நின்றான். இப்போது அவளுக்கு அங்கே போவதா வேண்டாமா என்று சின்னத் தடுமாற்றம் ஏற்பட்டது. அவள் அப்படியே நின்றுவிட, கார்த்திக் கதவைத் தட்டி உள்ளே சென்றுவிட்டான். அவள் அப்படியே தேங்கி நின்றுவிட்டாள்.
'அவன் திரும்பிப் போகும் வரை இங்கேயே காரிடாரில் நின்றுவிடலாமா?' என்று யோசிக்கையில் அவளது செல்பேசி அடித்தது. இந்திரன்தான்!
“யாத்ரா, எங்கே இருக்கே?”
“நான் இங்கே... வாசல்ல...” என்றவள் திக்கித் திணறிப் பேசுவதற்குள், “வாசல்ல இருக்கியா!” என்றவன் உடனடியாகக் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
“என்ன வெளியே நிற்குறே? உள்ளே வா,” என்று சொல்லிக் கொண்டே அவளது பெட்டியை அவன் வாங்கிக் கொள்ள, “அண்ணா, ஒரு நிமிஷம்,” என்றாள் யாத்ரா.
“என்ன?”
“நான்... கார்த்திக் போனதும் உள்ளே வரேனே,” என்று தயங்கி நின்றவள் கையை அழுத்திப் பிடித்தவன், “அண்ணா, ப்ளீஸ்...” என்று கெஞ்ச கெஞ்ச கேட்காமல் அவளை வீட்டிற்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.
விசாலமான அந்த வரவேற்பறையில் சௌந்தர்யா அமர்ந்திருந்தாள். நல்ல வேளையாக அங்கே கார்த்திக் இல்லை. மேடிட்ட வயிறுடன், எட்டு மாதக் கர்ப்பிணியாகச் சௌந்தர்யா உட்கார்ந்திருந்தாள்.
“அண்ணி, எப்படி இருக்கீங்க?” என்று யாத்ரா கேட்க, சௌந்தர்யாவின் விழிகள் அவளைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தன் கணவன் இந்திரனை முறைத்தன. பதிலுக்கு அவன் பார்வையாலேயே கெஞ்ச, சௌந்தர்யா எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
“அண்ணி என் மேல ரொம்பக் கோபமா இருக்காங்களோ?” என்று யாத்ரா வருத்தத்துடன் கேட்க, “அதெல்லாம் விடு... நீ வா... நான் உனக்கு ரூமைக் காட்டுறேன்,” என்றவன் அருகே இருந்த அறை கதவைத் திறந்து உள்ளே அழைத்தான்.
“வா யாத்ரா.”
அந்த அறையைத் தயக்கத்துடன் சுற்றிப் பார்த்தவள், “என்னால உனக்கும் அண்ணிக்கும் பிரச்சினை வேண்டாம் அண்ணா... நான் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன்,” என்றாள்.
“சொந்த அண்ணன் வீட்டுல தங்க என்ன உனக்கு?”
“இல்ல, அண்ணி என் மேல கோபமா இருக்காங்க.”
“ஆமா கோபம்தான் இருப்பா... நீ அவங்க அண்ணனுக்குச் செஞ்ச அநியாயத்தை எப்படி அவளால் மன்னிக்க முடியும்னு நினைக்குறே?” என்று இந்திரன் வெடுக்கென்று கேட்க, யாத்ராவின் முகம் சுருங்கியது.
“யாரும் என்னை மன்னிக்கணும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கல... என் வாழ்க்கையோட முடிவை நான் எடுத்தேன்.”
“அது உன் வாழ்க்கை மட்டும் இல்லையே யாத்ரா!”
“அப்போ நீயும் என் மேல கோபமா இருக்கே... அப்படித்தானே?”
“ஆமா இருக்கேன்... ஆனா என்ன பண்றது, நீ கூடப் பிறந்தவளா போயிட்டியே!” என்றான் இந்திரன் பாசத்துடன்.
“உன் கூடப் பிறந்த பாசத்தை நீ இப்படி எல்லாம் காட்டணும்னு அவசியம் இல்ல... நான் கிளம்புறேன்,” என்று தன் பெட்டியை எடுக்கப் போனவள் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான் இந்திரன்.
“கூடப் பிறந்த அண்ணனா வாழ்க்கையில ஒரே ஒரு தடவை நான் சொல்றதைக் கேக்குறியா?” என்றவன் நிறுத்தி, அவள் கண்களைப் பார்த்து, “நீ இங்கதான் தங்குறே,” என்று கட்டளையாகச் சொல்ல, அதற்கு மேல் அவளால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
அமைதியாகச் சென்று படுக்கையில் உட்கார்ந்து கொள்ள, “ஃப்ரெஷ்ஷாகிட்டு வா... நான் உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்,” என்று விட்டு அவன் வெளியே போக எத்தனிக்க, “அண்ணா,” என்ற அழைப்பில் அவளை நிறுத்தினாள்.
'என்ன?' என்பது போல அவன் நோக்க, அவள் தன் பையைத் துழாவி, மும்பையில் வாங்கிய அந்தப் பரிசை எடுத்து நீட்டினாள்.
“உனக்கும் அண்ணிக்கும் வாங்குனேன்,” என, இந்திரன் முகம் புன்னகை பூத்தது.
“தேங்க்ஸ் டா,” என்றவன் தங்கையை அணைத்துக் கொள்ள, அவளும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளது கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது.
அதன் பின் அவளை மீண்டும் விடுவித்தவன், “சரி, சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா,” என்று விட்டு வெளியேற, அவளுக்கு அந்த நொடி உள்ளே வந்த கார்த்திக் எங்கே சென்றான் என்ற கேள்வி எழும்பியது.
அதே குழப்பத்துடன் குளித்து உடைமாற்றிக் கொண்டு வெளியே வர, இந்திரன் டைனிங் டேபிளில் அவளுக்காகத் தோசைகளைச் சுட்டு எடுத்து வந்தான்.
“நானே உள்ளே வந்து வாங்கிக்கிறேன் அண்ணா,” என்றவள், சமையலறையில் அமர்ந்து சாப்பிட்டு முடிக்க, “நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் யாத்ரா,” என்று மெதுவாக ஆரம்பித்தான் இந்திரன்.
“என்ன அண்ணா?”
“கார்த்திக்கும் அவங்க அம்மாவும் இங்கேதான் இரண்டு மாசமா தங்கி இருக்காங்க.”
யாத்ரா திடுக்கிட்டாள். “என்ன?”
“சௌந்தர்யா பிரெக்னன்ஸியில கொஞ்சம் காம்ப்ளிகேஷன் இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க... அதான் துணைக்கு அவங்க அம்மாவும் தங்கி இருக்காங்க. நானும் கார்த்திக்கும் கார்னர் ரூம்ல இருக்கோம்... அப்புறம் சௌமியும் அவங்க அம்மாவும் எங்க ரூம்ல இருக்காங்க.”
அவன் சொல்லி முடித்த மறுகணம், “நான் நாளைக்கே ஹோட்டலுக்குப் போயிடுறேன்” என்றுவிட்ட, “யாத்ரா!” என்று இந்திரன் அவசரமாய் அவள் கையைப் பிடித்தான்.
“எதுவும் சொல்லாதே அண்ணா... கார்த்திக்கும், கார்த்திக் அம்மாவும் இருக்குற இடத்துல என்னால இருக்க முடியாது... நான் காலையில கிளம்பிப் போயிடுறேன்,” என்றவள், விறுவிறுவென்று அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
சோர்வுடன் அந்த மூடிய கதவைப் பார்த்த கார்த்திக் தன்னுடைய அறைக்கு வந்தான்.
உள்ளே இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. படுக்கையிலிருந்த கார்த்திக், இந்திரன் உள்ளே வந்து படுக்கவும், “என்ன, உன் தங்கச்சி திடீர்னு இந்தப்பக்கம் எட்டிப் பார்த்திருக்கா?” என்றான் அலட்சியமான குரலில்.
“ஏதோ ஆபீஸ் ப்ராஜெக்ட்டாம்,” என்ற அவனும் படுக்கையில் வந்து சாய்ந்தான்.
சில நொடிகள் மௌனத்திற்குப் பின், இந்திரன் மெல்லிய குரலில், “நீ யாத்ராகிட்ட ஒரு தடவை பேசிப் பாரேன் கார்த்திக்,” என்று சொல்ல, “எதுக்கு?” என்று அவசரமாக எழுந்து உட்கார்ந்துவிட்டான் கார்த்திக்.
“வேணாம்னு உன் தங்கச்சி என்னை தூக்கிப் போட்டுட்டுப் போவா... நான் போய் அவகிட்ட கெஞ்சிட்டு இருக்கணுமாக்கும்?”
“கெஞ்சச் சொல்லல கார்த்திக்... பேசச் சொல்றேன்.”
“பேசணும்னா அவதான் முதல்ல பேசணும்”
“சரி அவ பேசினா ஒருவேளை நீ சமாதானம் ஆவியா?” என்று இந்திரன் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க, “அவ என் காலில் விழுந்து கெஞ்சினாலும் மாட்டேன்,” என்றவன் கறாராக சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டான். இந்திரன் முகம் ஏமாற்றமாகக் மாறியது.
காலை எழுந்ததும் முதல் வேலையாகக் குளித்துத் தயாராகித் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு யாத்ரா வெளியே வர, முகப்பறையில் சௌந்தர்யா அமர்ந்திருந்தாள்.
அதே நேரம், தேன்மொழி சமையலறையிலிருந்து காபியுடன் வெளியே வந்தார். அவரைப் பார்த்தவள் முகம் மொத்தமாகச் சுண்டிவிட்டது. தேன்மொழியின் முகத்திலும் ஒருவித அதிர்வும் தயக்கமும் ஏற்பட்டது.
'இந்தச் சங்கடமெல்லாம் தேவைதானா?' என்று எண்ணிய யாத்ரா, சௌந்தர்யா அருகே சென்று, “நான் கிளம்புறேன் அண்ணி, அண்ணாகிட்ட சொல்லிடுங்க,” என, சௌந்தர்யாவோ, “உனக்கு என் அண்ணன் பத்தியும் கவலை இல்லை, உன் அண்ணனைப் பத்தியும் கவலை இல்லை அப்படிதானே?” என்று முகத்திலடித்தது போலக் கேட்டாள்.
“அண்ணி...” என்றாள் யாத்ரா சுருங்கிய குரலில்.
“நீ இங்கே இருக்கணும்னு அவர் விருப்பப்படுறாரு... ஆனா உனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை... நீ முடிவு எடுத்துட்டா போயிட்டே இருப்ப!”
“தேவையில்லாத சங்கடம் எதுக்குன்னுதான்...” யாத்ராவின் பார்வை தேன்மொழியை நோக்கியது.
அதை உணர்ந்த சௌந்தர்யா, “எங்க அம்மா எதுவும் உன்னைச் சொல்ல மாட்டாங்க... அதுவும் இல்லாமல் இப்போ நீ அவங்க மருமகளும் கிடையாது! பேசாம பெட்டியை உள்ளே வச்சுட்டு வேலைக்கு போ... சென்னைல இருக்கிற வரைக்கும் இங்கேயே தங்கு... இல்லாட்டி உங்க அண்ணன் மனசுதான் கஷ்டப்படும்,” என்றாள்.
சௌந்தர்யாவின் அந்தத் தீர்மானமான பேச்சை யாத்ராவால் மறுக்க முடியவில்லை. அவள் பெட்டியை எடுத்து மீண்டும் அறைக்குள் வைத்துவிட்டு கிளம்பினாள்.
யாத்ரா வெளியேறியதும், சௌந்தர்யா தன் அம்மா தேன்மொழியைப் பார்த்தாள்.
“நீ சொன்ன மாதிரியே அவளை இங்கேயே தங்க வச்சுட்டேன், போதுமா அம்மா?” என்றவள் ஒரு நொடி நிறுத்தி, “ஆனா ஒன்னு... அண்ணன் அவளை மன்னிச்சு ஏத்துக்குவான்னு எனக்குத் தோணல” என்றாள்.
தேன்மொழியோ ஒரு பெருமூச்சுடன், “அது உங்க அண்ணனோட முடிவு,” என்றார்.
30