மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 40

Quote from monisha on July 6, 2026, 7:14 PM40
விடியலின் மெல்லிய வெளிச்சம் மும்பை வானத்தில் படரத் தொடங்கியிருந்த அந்த அதிகாலைப் பொழுதை யாத்ரா ஜன்னலின் வழியாக ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவள் மனம் நேற்றிரவு முழுக்க நிறைய யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தது.
கார்த்திக் கேட்ட இந்த மூன்று நாட்களை அவனுக்கு முழுமையாகத் தருவது என்று. அதுவும் அவன் அடுக்கடுக்காக சொன்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் தன் கற்பனையில் யோசித்து பார்த்ததில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு புதுவித உற்சாகம் அவளுக்குள் பிறந்திருந்தது.
அந்த விநாடியிலிருந்து அவன் எப்போது வருவான் என்று அவளது விழிகள் வாசலையே வெறித்துக் காத்திருக்கத் தொடங்கிவிட்டன. வெளியில் ஒரு சின்ன சத்தம் கேட்டாலும், அவன்தானா என்று ஓடிச்சென்று எட்டிப் பார்த்தாள். சில முறைகள் ஏமாந்துப் போனவளுக்கு, இறுதியாக உண்மையிலேயே அவளது வீட்டு அழைப்பு மணி ஓசை கீதமாய் ஒலித்தது.
கதவருகே சென்றவள், ஒரு நீண்ட மூச்சை ஆழமாக இழுத்து விட்டு முதலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். நெஞ்சு படபடவென்று அடிக்கத் தாழ்ப்பாளைத் திறக்க, அவள் எதிர்பார்த்தது போலவே அங்கே கார்த்திக் கம்பீரமாக நின்றிருந்தான்.
நேற்று போல இல்லாமல் இன்று அவன் முகத்தில் அதீத தெளிவும் கனிவும் குடியேறியிருந்தது. அதுவும் அவன் அணிந்திருந்த அந்த வெள்ளைச் சட்டை அவனை இன்னும் அசாத்தியமாக, 'ஹேண்ட்ஸமாக' காட்டியது. காலைக் காற்று அவனது தலைமுடியை லேசாகக் கலைத்து விளையாடியது. அவனது மீசை ரோமங்களுக்குக் கீழே இருக்கும் தடித்த இதழ்கள் பிரிந்து, பளிச்சிடும் வெண்பற்களால் அவன் புன்னகைத்த அந்த ஒரே ஒரு கணத்திலேயே, யாத்ரா அடியோடு 'ஃபிளாட்' ஆகி நின்றாள்.
அவன் தன் புருவத்தை லேசாக உயர்த்தி, “உன் முடிவு என்னனு சொன்னாத்தான் நான் உள்ளே வர்றதா வேண்டாமானு யோசிப்பேன்?” என்றான் .
“ஓ... முடியாதுன்னு சொன்னா வாசலோட கிளம்பிடுவீங்களோ?” என்று அவள் லேசான கேலியோடு கேட்க,
“நீ வேற என்ன ஆப்ஷன் கொடுத்திருக்க எனக்கு?” என்று அவன் மேலும் எடக்காகக் கேட்க, அவளது உதடுகளில் புன்னகை அரும்பியது. “சரி உள்ளே வாங்க,” என்றாள்.
“அப்போ அந்த மூணு நாள்?” என்று அவன் நகராமல் கேட்க, “முதல்ல உள்ளே வா கார்த்திக்,” என்றவள் கதவைத் திறந்து அவனுக்கு வழிவிட முயன்றாள். “இல்ல, முதல்ல நீ முடிவை சொல்லு,” என்று ஒரு பிடிவாதக் குழந்தையைப் போல அவன் வெளியேயே நின்றான்.
அவள் சற்று நிதானித்து, அவனது விழிகளை நேராகப் பார்த்து, “எனக்கு ஓகேதான், உள்ளே வா கார்த்திக்,” என, கார்த்திக்கின் முகத்தில் சட்டென்று ஒரு பேரானந்தமும் நிம்மதியும் பரவியது.
“முடியாதுன்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டே வந்தேன்,” என்று அவன் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய, அவளது இதழ்கள் அவனையறியாமல் விரிந்தன.
“நீ உட்காரு, நான் காபி போட்டுட்டு வரேன்,” என்றவள் சமையலறைக்குள் நுழையப் போக, “நேத்து மாதிரி நானே போடுறேன்,” என்று அவளுக்கு மிக நெருக்கமாக அவன் பின்னாலேயே வந்தான்.
“வேணாம் கார்த்திக் நீ உட்காரு,” என்று கை காட்ட, “நான் ஒன்னும் விருந்தாளி இல்ல... உன் புருஷன்?” என்று அவன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்ன நொடி, அவளது விழிகள் அகல விரிந்தன.
“அதாவது... இந்த மூணு நாளைக்கு!” என்று சட்டென்று திருத்திச் சொல்லிவிட்டு அவன் சமையலறை மேடைக்கு முன் வந்துவிட, “உனக்கு எது எது எங்கு இருக்குனு தெரியாது கார்த்திக்,” என்றவள் முணுமுணுத்துக் கொண்டே அவன் பின்னே வந்தாள்.
“நேத்து நானேதான் போட்டேன்.”
“நேத்து மேடை மேல காபி தூள் சக்கரை எல்லாம் வைச்சு இருந்தேன்.”
“இப்போ என்ன, என்னால எதையும் தேடி எடுக்க முடியாதா?” என்றவன் சவாலாகச் சொல்லவும் அவள் தன் தோள்களைக் கேலியாகக் குலுக்கினாள்.
“நீ சைலண்டா நில்லு, நானே தேடி எடுத்துக்கிறேன்,” என்றவன் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பாலை எடுத்து காய்ச்சி கொண்டே, காபித் தூள் டப்பா, கோப்பைகள் என அனைத்தையும் தேடி எடுத்து மேடை மீது வைத்துவிட்டு, கர்வமாக அவளை ஒரு பார்வை பார்த்தான்.
“சக்கரை...” என்று யாத்ரா இழுக்க, அவன் மற்ற அலமாரிகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் திறந்து தேடினாள். அவள் ஒரு கேலிப் புன்னகையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, அவன் சட்டென்று அவளது புறம் வந்தான். அதுவும் மிக அருகில் வந்தவன், அவளுக்குப் பின்னிருந்த அலமாரியைத் திறக்க அவளுக்கு ஒரு நிமிடம் மூச்சு முட்டியது.
அவளது முகமாற்றத்தையும் மூச்சிரைப்பையும் கூர்மையாகக் கவனித்தவன், “சக்கரை” என்று அதையும் கர்வமாக எடுத்து மேடை மீது வைத்துவிட்டு, “ஆமா நீ காபியா இல்ல க்ரீன் டீயா?” என்று கேட்டான்.
“காலையில காபிதான்,” என்றாள்.
அதன் பின் அவளுக்கும் சேர்த்துச் சுடச்சுடக் காபியைப் போட்டு கையில் கொடுத்தவன், “இங்கேயே குடிக்கலாமா இல்லனா...” என்று கேட்ட நொடி, “வீட்டுல ஒரு நல்ல ஸ்பாட் இருக்கு,” என்றவள் தன் படுக்கையறையுடன் இணைந்திருந்த பால்கனி கதவைத் திறந்தாள். அங்கே ஏற்கனவே இரண்டு அழகான வட்ட இருக்கைகள் இருந்தன.
இருவரும் அதில் அமர்ந்து கொள்ள, அவன் காபியை மெதுவாகப் பருகிக் கொண்டே, “நீ எப்பவும் இங்கேதான் காபி குடிப்பியா?” என்று எதார்த்தமாகக் கேட்க, “ஒரு தடவ கூடக் குடிச்சது இல்ல... இந்த வீட்டுலயே நான் அதிகமா யூஸ் பண்ணாத இடம் இதுதான்,” என்றாள் பெருமூச்சுடன்.
“ஏன் அப்படி?”
“ஆபிஸ், வீடுன்னு ஓடிட்டே இருந்ததால பெருசா நான் இந்த ஸ்பாட் எல்லாம் யூஸ் பண்ணல கார்த்திக்.”
“அப்போ சண்டேஸ்ல?”
“நல்லா தூங்குவேன்... அப்புறம் எழுந்ததும் வாஷிங் மெஷின்ல துணி போடுவேன்... சமைப்பேன்... சாப்பிட்டுட்டே டிவி பார்ப்பேன்... ஈவினிங் வீட்டுக்கு தேவையான பொருளை எல்லாம் வாங்கிட்டு வருவேன்... அப்புறம் தூங்கிடுவேன்,” என்றாள் தன் தனிமைப் பக்கங்களைச் சாதாரணமாக விவரித்து.
“அப்போ நீ லோன்லியா பீல் பண்ணதே இல்லையா யாத்ரா?” அவனது அந்த ஆழமான கேள்விக்கு அவள் சட்டென்று பதில் சொல்லாமல், தன் கையில் இருந்த கோப்பையின் விளம்பையே வெறித்துப் பார்த்தாள். அவளது மௌனமே அவளது தனிமையின் ரணங்களை அவனுக்குச் சொன்னது.
“இப்படி ஒரு வாழ்க்கைதான் நீ வாழணும்னு ஆசைப்படுறியா யாத்ரா?” என்று அவன் ஏக்கத்துடன் கேட்க,
சட்டென்று தலையை உயர்த்தி அவனது விழிகளைப் பார்த்தவள், “நான் இப்படி சொல்றேன் தப்பா எடுத்துக்காத கார்த்திக்... உன் வீட்டுல நான் வாழ்ந்த வாழ்க்கையை விட இங்க நான் சுதந்திரமா நிம்மதியா இருக்கேன்,” என்றாள்.
அவர்கள் பழைய காயங்கள் மீண்டும் கீறப்பட, “அதுக்கு நான் காரணம் இல்லையே யாத்ரா...” என்றான் கார்த்திக் தன் பக்கத்து வேதனையோடு.
“அதுக்கு நானும் காரணம் இல்ல கார்த்திக்...” என்றவள் சொல்லும் போதே, அவளது விழிஅணை உடைந்த கண்ணீர் கொட்டியது.
“யாத்ரா... சாரி...” என்று கார்த்திக் பதறித் துடிக்க, தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டவள் தன் முகத்தைத் துடைத்தபடி நிமிர்ந்தாள். “இல்ல கார்த்திக்... சாரி சொல்றளவுக்கு நீயும் எந்த தப்பும் செய்யல,” என்று விட்டு அவனது கண்களைப் பார்த்து, “இந்த மூணு நாள் நம்ம இந்த மாதிரி கான்வெர்சேஷனை தவிர்த்திடலாம்,” என்று விடை கொடுத்தாள்.
“கணவன் மனைவி உறவில சந்தோசம், துக்கம், வலி எல்லாமே இருக்கும்தானே?” என்றவன் கேட்க, “நமக்கு அதுக்கு எல்லாம் டைம் இல்ல கார்த்திக்... யூ ஜஸ்ட் ஆஸ்க்ட் பார் த்ரீ டேஸ்,” என்றாள்.
“தப்பு பண்ணிட்டேன்... ஒரு மாசம் கேட்டிருக்கணுமோ?” என்றவன் கேலியாகக் கேட்க, யாத்ரா பட்டென்று சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பில் அவளது கண்ணீர்த் துளிகள் மறைந்தன.
“இப்போ கூட ஒன்னும் இல்ல... டைம் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டா என்ன?” என்றவன் சிரித்துக் கொண்டே அவன் கேட்க, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... நான் மூணு நாள்தான் லீவ் சொல்லி இருக்கேன்,” என்றாள் கறாராக.
“லீவ் போட்டியா... அப்போ இந்த மூணு நாளும் முழுசா என் கூடவே இருக்க போறியா?” என்றான் நெகிழ்ந்து.
“நான் என்ன காரணம் சொன்னாலும் உனக்கு நான் செஞ்சது எந்த வகையிலும் நியாயம் இல்ல கார்த்திக்.... அதுக்கு இந்த மூணு நாள் நான் முழுசா உனக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன்,” என்றவள் சொன்ன போது, இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று அலாதியான காதலுடன் சங்கமித்தன. இந்த மூன்று வருட கால பிரிவிலிருந்த அந்த அந்நிய உணர்வை, அந்தப் பார்வைகள் மெல்லக் கரைத்துத் தங்களுக்குள் ஈர்த்துக் கொள்ளத் தொடங்கின.
மதிய உணவைத் தயார் செய்ய யாத்ரா சமையலறைக்குள் நுழைய, “இன்னைக்கு நான்தான் சமைக்க போறேன்,” என்று வெள்ளைச் சட்டைப் பைகளை மடித்துக் கொண்டே நுழைந்தான் கார்த்திக்.
“உனக்கு முதல்ல சமைக்கக் தெரியுமா கார்த்திக்?”
“எல்லாம் எனக்கு தெரியும்... நீ பிரிட்ஜ்ல என்ன காய் வச்சிருக்கனு சொல்லு?”
“ஒண்ணுமே இல்ல, எல்லாம் காலி,” என்றாள் தோள்களைக் குலுக்கி.
“சரி நான் போய் வாங்கிட்டு வரேன்.”
“எதுக்கு... நான் ஆர்டர் போடுறேன்... எல்லாம் அரைமணிநேரத்துல வீட்டுக்கே வந்துடும்,” என்றவள் தன் செல்பேசியை எடுத்து, “நீ முதல்ல லிஸ்ட் கொடு,” என்றாள். அதன் பின் இருவருமாகச் சேர்ந்து மிக நெருக்கமாக நின்று பட்டியலிட்ட பின், செல்பேசி செயலியில் அதனை ஆர்டர் செய்ய, சரியாக அரைமணிநேரத்தில் அனைத்துப் பொருட்களும் வீட்டு வாசலில் வந்து இறங்கியது.
“சரி நான் காயெல்லாம் கட் பண்ணி தரேன்,” என்றவள் கத்தியை எடுக்கப் போக, “நேத்து நீ கட் பண்ண லட்சணத்தை நான்தான் பார்த்தேனே,” என்று கிண்டல் செய்தவன், சட்டென்று அவளது விரலைப் பார்த்து, “ஆமா கட்டு எங்கே?” என்றான்.
“கழட்டிட்டேன்.”
“சரி மருந்தாச்சும் போட்டியா?”
“சின்ன காயம்தானே...” என்றவள் சொல்லச் சொல்லக் கேட்காமல், “சின்ன காயமா இது?” என்று முறைத்துக் கொண்டே, அவளது விரலைத் தன் கைகளுக்குள் பிடித்து இழுத்து மிக மென்மையாக மருந்து தடவிவிட்டான். அவனது மூச்சுக்காற்று அவளது விரல்களில் பட்டு அவளது இதயம் வரை சிலிர்த்தது.
“ஆமா... இப்படி மருந்து போட்டா நான் எப்படி ஹெல்ப் பண்றது?” என்று அவள் சிணுங்க, “உன்னை நான் எந்த ஹெல்ப்பும் கேட்கல... நீ பேசாம இப்படி உட்காரு,” என்றவன், சமையலின் உஷ்ணம் தாங்காமல் அப்போது தன் வெள்ளைச் சட்டையைக் கழற்றினான். அவனது அகன்ற, கம்பீரமான மார்பைக் கண்ட யாத்ராவின் கண்கள் சட்டென்று தடுமாறின. “இதை எங்கே வைக்கிறது?” என அவன் கேட்க,
“கொடு, நான் உள்ளே வைக்கிறேன்,” என்று அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவள், அவனது அந்த வெள்ளைச் சட்டையை ஒரு விநாடி தன் முகத்தோடு சேர்த்து அணைத்து, அவனது அந்த வாசத்தை ஆழமாக முகர்ந்து உருகினாள். அதன் பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அதனை ஓரமாக மாட்டி வைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் வந்தாள்.
சமையலுக்கான பொருட்களை அவன் நேர்த்தியுடன் எடுத்து வைப்பதைப் பார்த்து வியந்தவள், சமையலறை மேடையில் ஓரமாக ஏறி அமர்ந்து கொண்டு, “கார்த்திக்... ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ணட்டுமா?” என்று வினவினாள்.
“ஓ எஸ்... பண்ணலாமே!” என்றவன் காய்களை நறுக்கிக் கொண்டே அவளைப் பார்த்துத் தலையசைத்தான்.
“ஏ ஆர் ரஹ்மானா... இளையராஜாவா?” என்றவள் தன் செல்பேசியைத் திறக்க, “தேவா!” என்றான் கார்த்திக் அசாத்தியமான உற்சாகத்தோடு. அவளும் சிரித்துக்கொண்டே தேவாவின் அந்த அழகான மெலடிப் பாட்டை இசைக்கவிட்டாள்.
‘யார் சொல்வதோ யார் சொல்வதோ?
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா... இல்லை காற்றின் வெற்றியாள?’
தேவாவின் மெல்லிய கானங்களில் மிதந்த அந்தச் சமையலறையில், காதலும் சமையலின் நறுமணமும் காற்றோடு கலந்து இருவரையும் கிறங்கடித்துக் கொண்டிருந்தன.
“டேஸ்ட் பாரு யாத்ரா...” என்றவன் தன் கரண்டியில் இருந்து அவளது கையில் ஊற்றிய அந்தச் சுவையான குழம்பு ருசியில், அவள் உதடுகள் உச்சுக்கொட்டின.
அவளது சிவந்த இதழ்களின் மீது ஏக்கத்துடன் நிலைத்துவிட்ட கார்த்திக்கின் பார்வை சட்டென்று தழைந்து கொண்டது.
“சமையல் முடிஞ்சது... இனிமே கிளீன் பண்ணிட்டா வேலை முடிஞ்சுடும்,” என்றான் தன் குரலை நிதானப்படுத்தி.
“அதையாச்சும் நான் பண்றேனே,” என்றவள் கெஞ்சலாக கேட்டதற்கு, அவன் கறாராக முடியாது என்று சொல்லி அவளைத் தள்ளி அமரவைத்தான்.
ஒரு வழியாக மதிய உணவு திருப்தியாக முடிய, “அடுத்து என்ன கார்த்திக்?” என்று யாத்ரா கேட்க, “நான் டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரல... ஷாப்பிங் போவோமா?” என்று கேட்டான்.
“ஓ... போலாமே”
“எதுல போறது? கேப் புக் பண்ணவா?”
“என் பைக்ல போலாம்... ஆனா நான்தான் ஓட்டுவேன்!” என்றவள் சாதாரணமாகச் சொல்ல, கார்த்திக் சிரித்தபடி ஆமோதித்தான்.
அந்த இருசக்கர வாகனத்தில் யாத்ரா முன்னமர்ந்து வண்டியை இயக்க, கார்த்திக் அவள் பின்னே அமர்ந்து கொண்டான். வாகன நெரிசல் கொண்ட மும்பையின் பிரதான வீதிகளில் அவள் சாமர்த்தியமாக வண்டி ஓட்டிச் சென்றாள். ஆரம்பத்தில் அவளது தோளை லேசாகப் பற்றிவிட்டவன், பின்னர் தயங்கித் தன் கையை விலக்கிக் கொள்ள முயல, அவளது இதயம் அவனது பிரிவைத் தாங்காமல், “இட்ஸ் ஓகே கார்த்திக்... கை வச்சுக்கோ,” என்றாள் உரிமையோடு. அவனது கைகள் அவளது தோள்களை இறுக்கிக் கொள்ள, இருவருக்குள்ளும் ஒரு புதிய உணர்வு பூத்தது.
அந்த நாளின் தொடக்கத்தில் அவர்களுக்குள் இருந்த அந்த இறுக்கம் இப்போது முழுமையாகக் கரைந்திருந்தது. அந்தப் பிரம்மாண்டமான துணிக்கடைக்குள் இருவரும் நுழைந்தனர்.
ஆண்கள் பிரிவுக்கு வந்ததும் கார்த்திக் ஒரு சட்டையை எடுத்து, “இந்த ஷர்ட் எப்படி இருக்கு யாத்ரா?” என்று காட்ட, “இது வேண்டாம் கார்த்திக்... உன் கலருக்கு இதுதான் செமையா சூட் ஆகும்,” என்று அவளே அவனது ஒவ்வொரு ஆடையையும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தாள். தனக்காக அவளுள் இருக்கும் அந்த மாறாத ரசனையை அவன் அத்தனை காதலோடு ரசித்துக் கொண்டிருந்தான்.
இறுதியாகப் பணம் கட்டும் இடத்திற்கு வரவும் அவன் தன் பர்ஸை எடுக்கப் போக, “நோ... நான்தான் பண்ணுவேன்!” என்று அவனது கையைத் தட்டிவிட்டு, வாங்கிய அத்தனை ஆடைகளுக்கும் அவளே தன் கார்டை தேய்த்துப் பணம் கட்டினாள்..
“சரி அடுத்து எங்கே?” என்றவள் பைக்கை இயக்கியபடி அவனிடம் கேட்க, “தியேட்டர் போலாம் யாத்ரா,” என்றவன் சொல்ல, சட்டென்று அவளது முகம் இருண்டது. அவளது கைகள் வண்டியின் ஹேண்டில்பாரை இறுக்கின.
“என்னாச்சு?”
“இந்த மூணு வருஷத்துல... நான் எந்த ஒரு படத்தையும் தியேட்டருக்குப் போய் பார்க்கல,” என்றாள் வலியுடன்.
அவள் முன்னே வந்து நின்றவன், அவளது கைகளைப் பற்றி, “அந்தப் பழைய விஷயத்தை எல்லாம் இப்போ மறந்துடலாம் யாத்ரா,” என்று சொல்ல, “மன்னிக்கிறது கூட ஈஸி கார்த்திக்... ஆனா பட்ட அவமானங்களையும் வலிகளையும் மறக்கிறது...” என்றவள் வேதனையுடன் சொல்லும் போது அவனால் மறுத்துப் பேச முடியாமல் அவளது துக்கம் அவனையும் தாக்கியது.
“அப்போ... வீட்டுக்கே போலாமா யாத்ரா?” என்று அவன் கேட்க, “இல்ல... பீச்சுக்கு போகலாம்... அப்புறம் அங்கே பாணி பூரி, பாவ் பாஜி எல்லாம் சாப்பிடலாம்,” என்றவள் உற்சாகமாகச் சொல்ல, “ஓகே” என்றான் கார்த்திக்கும் அதே உற்சாகத்துடன்.
அவன் பின்னே இருவரும் வண்டியில் அமர்ந்து கொள்ள, யாத்ராவின் கூந்தல் காற்றில் பறந்து அவனது முகத்தில் மோதியதில் உள்ளம் தடுமாறியது.
இந்த பயணம் இப்படியே நீள கூடாதா என்று இருவரின் மனம் ஏங்கியது.
நிறையப் பேச்சுக்களும், அழகான சின்னச் சின்ன மௌனங்களும் அந்த முதல் நாளை இன்னும் அழகாக்கியது. ஒரு மெல்லிய காதல் சாரலில் நனைந்த உணர்வைத் தந்தது.
40