மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 5

Quote from monisha on July 6, 2026, 6:42 PM5
சூரியன் அஸ்தமனமாகிவிட்ட போதிலும் வானில் வண்ணங்கள் மிச்சமிருந்தன. வண்ணக் கோலத்தைக் கலைத்தாற்போன்ற ஓர் அழகை, அந்தத் தோட்டத்தின் இடையில் நின்று ரசித்து லயித்திருந்த கார்த்திக்கிற்கு அந்த உணர்வே மிகவும் புதிதாக இருந்தது.
இயற்கை அழகைக் கூட இப்படி நிதானித்து ரசித்து ரொம்ப வருடங்கள் கடந்துவிட்டன. ஒருவேளை புதிதாகத் துளிர்விடும் காதலின் உணர்வோ? மனம் லேசாகி காற்றில் பறப்பது போலவும் மிதப்பது போலவும் இருந்தது, அவள் பேசிவிட்டுச் சென்ற பிறகு...
இத்தனைக்கும் அவள் கோபமாகத்தான் பேசினாள். சவால் எல்லாம் வேறு விட்டாள். ஆனால், அவனுக்குத்தான் கொஞ்சம் கூட கோபமென்ற உணர்வே எட்டிப்பார்க்கவில்லை.
“ஏன்... வீடு இல்லன்னா எங்க அண்ணனுக்கு உங்க தங்கச்சியைக் கொடுக்க மாட்டீங்களா?” என்று சீற்றமாகக் கேட்டவளைப் பார்த்து அவன் புன்னகை செய்ய,
“ஹலோ! என்ன சிரிக்கிறீங்க... உங்களைத்தான் கேட்கிறேன்” என்றாள்.
“நான் யதார்த்தத்தைப் பேசுறேன்.”
“புரியல... என்ன யதார்த்தம்?”
“பொண்ணு வீட்டுல மாப்பிள்ளைக்குச் சொந்த வீடு, சொத்து, நிலபுலன் இருக்கான்னு பார்க்கிறது எல்லாம் வழக்கமானதுதானே... அப்பத்தான் போற இடத்துல நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கும்.”
“வீடு, நிலம், புலம் இருக்கிற ஆம்பளையால எல்லாம் ஒரு பொண்ணைச் சந்தோஷமா வச்சிருக்க முடியாது... மரியாதையும் அன்பும் இருக்கிற ஒருத்தன் கூடத்தான் ஒரு பொண்ணால சந்தோஷமா இருக்க முடியும். எங்க அண்ணன் அந்த மாதிரியான ஆளு” என்றதும் அவன் மீண்டும் சிரித்தான்.
“சொத்து இல்லாம இதெல்லாம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்... ஏன், காசு பணம் இல்லாத ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிப்பியா?” என்றவன் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவள் பின்னர்,
“நான் முதல்ல கேரக்டரைத்தான் பார்ப்பேன்” என, அவன் கிண்டலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான்.
“சரி, கேரக்டர் இருந்து காசு இல்லன்னா... அப்புறம் நீதான் கஷ்டப்படுவ.”
“நான் படிப்பேன்... சம்பாதிப்பேன்... என் சொந்தக் காலில் நிற்பேன். சோ, காசுக்காக எவனோ ஒருத்தனை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அதனால காசு இருக்கிறவனா பார்த்துத் தேடித் தேடி நான் காதலிக்க மாட்டேன்.”
“உங்க வீட்டுலயும் உன்னை மாதிரிதான் யோசிப்பாங்களா?”
“என் விருப்பம்தான் அவங்க விருப்பமும்.”
“அப்போ நீ யாரைக் கூட்டிட்டு வந்து லவ் பண்றேன்னு சொன்னாலும் அவங்க ஓகே சொல்லிடுவாங்களா... அவன் பேக்ரவுண்ட் எல்லாம் விசாரிக்க மாட்டாங்களா?”
“தெளிவா யோசிச்சு முடிவெடுக்க எங்க வீட்டுல சொல்லிக் கொடுத்து இருக்காங்க. சோ, அவங்க என் முடிவை முழுசா நம்புவாங்க” என்றதும், அவனுக்கு அவள் அமரேஷ் படத்தைப் பார்த்து ஆர்ப்பாட்டம் செய்தது நினைவுக்கு வரவும் அவன் நகைத்துவிட்டான்.
“என்ன, நான் சொல்றது வேடிக்கையா இருக்கா உங்களுக்கு?”
“ஆமா அப்படித்தான் இருக்கு” என்றதும் அவள் முறைக்க, “கேள்வி கேட்காம பொண்ணுங்களோட லவ்வை அவ்வளவு சீக்கிரம் நம்மூர்ல எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க” என்றான் தொடர்ந்து.
“பெட் வச்சுக்கலாமா?”
“என்ன?”
“எங்க வீட்டுல நான் யாரை லவ் பண்றேன்னு சொன்னா, கேள்வி கேட்காம ஒத்துக்குவாங்க.”
“அதெப்படி?”
“அதான்... பெட் வச்சுக்கலாம்.”
அவன் திருதிருவென்று விழிக்க, “என்ன தோத்துடுவோம்னு பயமா இருக்கா?” என்று எள்ளல் செய்தாள்.
அவன் சிரித்துவிட்டு, “அதெல்லாம் இல்ல... பெட்னா காசு வைக்கணும் இல்ல?” என்றான்.
“காசு இல்ல, கல்யாணம்... எந்தக் கண்டிஷனும் இல்லாம உங்க தங்கச்சியை எங்க அண்ணனுக்குக் கொடுக்கணும்” என்று அவள் சொல்ல, அவன் முகம் அதிர்ச்சியை காட்டியது.
சில நொடிகள் யோசித்தவன், “சீட்டிங் பண்ண மாட்ட இல்ல?” என்று கேட்க,
“எனக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை” என்றாள் உறுதியாக.
“சரி ஓகே” என்று ஒப்புக்கொண்டாலும், தங்கையின் வாழ்க்கையை வைத்து இப்படிப் பெட் கட்டுவது லேசாகக் குற்றவுணர்வை உண்டாக்கியது. ஆனால் சில முடிவுகள் அறிவைத் தாண்டி உணர்வுகளால் எடுக்கப்படுபவை. அவளிடம் பேசியதும் அப்படித்தான்.
பேசிவிட்டு அவள் பாட்டுக்கு பின்பக்க வாயில் வழியாக நடந்து சென்றுவிட்டாள். ஆனால் எப்படி தான் சொன்னதை நிரூபிக்கப் போகிறாள் என்று வியப்பாக இருந்தது. அதேநேரம் அவளுடன் உரையாடியதில் பொங்கித் தளும்பும் நீரில் நீராடி களித்தது போல மனம் உற்சாகம் கொண்டது. அந்த உணர்வின் நீட்சியாக இயற்கையின் அழகை உள்ளம் ஆராதித்தது.
இந்தச் சிந்தனையுடன் வீட்டுக்குள் வந்தவனை எதிர் கொண்ட இந்திரன், “போன் பேசிட்டீங்களா?” என்று கேட்க, “பேசிட்டேன்” என்றபோது அவன் தங்கையுடன் பேசியது ஏதோ கள்ளத்தனம் செய்தது போல நேராகப் பார்த்து பேச முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டான்.
“உங்க பேகை என் ரூம்ல வச்சுட்டேன்.”
“எதுக்கு... பேசிட்டு உடனே கிளம்ப வேண்டியதுதான்.”
“இல்ல, நைட்ல டிராவல் பண்ண வேண்டாமே... அதுவும் இல்லாம நீங்கதான் ஃபுல்லா டிரைவ் பண்ணிட்டு வந்தீங்க... டயர்டா இருப்பீங்க... ரெஸ்ட் எடுத்துட்டு காலையில போலாம்.”
“இல்ல நான் இதைவிட லாங் டிரைவ் எல்லாம் பண்ணி இருக்கேன்.”
“பரவாயில்லை, ஒரு நாள் இருந்துவிட்டுப் போங்க... அதுவும் இல்லாம அம்மா அப்பாகிட்ட நான் நைட்டுதான் பேசலாம்னு இருக்கேன்.”
யாத்ராவைப் பார்க்காமல் இருந்தால் ஒருவேளை அவன் பிடிவாதமாகக் கிளம்பி இருப்பான். ஆனால் அவளைப் பார்த்த பின்...
“சரி இருக்கேன்” என, “தேங்க்ஸ்” என்றான் இந்திரன்.
இரவு உணவைத் தயார் செய்து மேஜையில் அடுக்கிய பிரியா, “வாங்க சாப்பிடலாம்” என்று எல்லோரையும் அழைத்தார்.
கார்த்திக் இடையில் அமர, குமாரும் இந்திரனும் இருபக்கமும் அமர்ந்தனர். பிரியா உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்க, அவன் விழிகள் யாத்ராவை மட்டும் தேடின.
அதற்குள் குமார், “எங்க யாத்ரா?” என்று கேட்க, “உள்ளேதான் இருக்கா” என்று கூறிவிட்டுப் பிரியா, “யாத்ராஆஆ” என்று அழைக்க, “வர்றேன்மா” என்று உள்ளிருந்து ஓடி வந்தாள்.
“நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா” என்று மகளிடம் சொல்ல,
“அப்பா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றவளின் விழிகள் கார்த்திக்கைப் பார்த்தன. என்ன சொல்லப் போகிறாள் என்று அவன் யோசனையாகப் பார்க்க, இந்திரன் தன் காதலைப் பற்றிச் சொல்லப் போகிறாள் என்று படபடப்பாகிவிட்டான்.
ஆனால் அவள் அவன் எண்ணத்திற்கு நேர்மாறாக, “நான் கார்த்திக்கை லவ் பண்றேன்பா” என, எல்லோரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர்.
அதிகப்படியான அதிர்ச்சி கார்த்திக்கிற்குத்தான்... ஆனால் அது ஒருவிதமான இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
முதலில் இந்த அதிர்ச்சி நிலையிலிருந்து மீண்டது பிரியாதான். “என்னடி சொல்ற?”
“ஆமாம்மா எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு” என்றதும் இந்திரன் புரியாமல் சைகையில் என்னவென்று கேட்டான்.
ஆனால் அவள் எதையும் கண்டுகொள்ளவில்லை. “எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு... உங்க முடிவு என்ன?” என்று அம்மா அப்பாவைப் பொதுவாகப் பார்த்தாள்.
பிரியாவும் குமாரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர்.
அதன் பின் மகளைத் தீர்க்கமாகப் பார்த்த குமார், “உனக்கு பிடிச்சிருக்குன்னா நாங்க என்னம்மா சொல்லப் போறோம்... ஆனா நீ படிக்கப் போறேன்னு சொன்னியே?” என்று சந்தேகமாகக் இழுத்தார்.
“படிச்சு முடிச்சுட்டுத்தானே கல்யாணம் எல்லாம்... இப்போதைக்கு உங்க முடிவை மட்டும்தான் கேட்கிறேன்” என்றாள்.
“உன் விருப்பம்தான் எங்களுக்கும்” என்று சொன்ன குமாருக்கு என்னவோ கார்த்திக்கைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. ஆனால் இது எதையுமே கார்த்திக்கால் நம்ப முடியவில்லை.
“என்னடி உளறிட்டு இருக்க நீ!” என்று இடையில் எழுந்து நின்று கத்தினான் இந்திரன்.
“டென்ஷன் ஆகாத அண்ணா.”
“டென்ஷன் ஆகாதியா... அடியேய் நீ பாட்டுக்கு பொய் பொய்யா சொல்லிட்டு இருக்க!”
“என்னடா சொல்ற? பொய்யா” என்று பிரியா குழம்பவும்,
“அவ யாரையும் லவ் பண்ணல... கார்த்திக் நான் லவ் பண்ற பொண்ணோட அண்ணன்” என்று அவன் சொல்லவும் குமார் மகளைப் புரியாமல் பார்த்தார்.
“என்னடி சொல்றான் உங்க அண்ணன்?” என்றதும் யாத்ரா தயக்கப் பார்வையுடன், “சாரிம்மா, நான் பொய்தான் சொன்னேன்” என்றாள்.
“ஏன்டி?”
“இதோ இவர்தான் சொன்னார்... பொண்ணுங்களோட லவ்வை எல்லாம் யார் வீட்டுலயும் உடனே ஒத்துக்க மாட்டாங்க, நம்ப மாட்டாங்கன்னு... எங்க வீட்டுல அப்படி இல்லைன்னு இவருக்கு ப்ரூஃப் பண்ணிக் காமிக்கணும்னு நினைச்சேன்” என்றவள் சொல்லி முடிக்கும்போது பிரியா முதுகில் ஒன்று போட்டார்.
“ம்ம்மா” என்று வலியுடன் அலற, கார்த்திக் ஏதோ கனவிலிருந்து மீண்டது போல தலையை உலுக்கிக் கொண்டான்.
அப்போது குமார் அவனிடம் திரும்பி, “தம்பி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... அவ கொஞ்சம் அப்படித்தான் விளையாட்டுத்தனம் அதிகம்” என்று சொல்ல, “இல்ல சார்” என்று புன்னகையுடன் தலையசைத்தான்.
ஆனால் அவன் யாத்ராவை பார்க்க, அவள் புருவத்தை உயர்த்தி தான் சொன்னதை சாதித்து விட்டதை சுட்டிக் காட்டினாள்.
மறுபுறம் குமார் மகளிடமும் திரும்பி, “இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்றது ரொம்பத் தப்பு யாத்ரா” என்று செல்லமாக கண்டிக்க, “சாரிப்பா” என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அந்த காட்சியை பார்த்த இந்திரன், “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்தான்” என்று எரிச்சலுற, “கொஞ்சம் கூட பொறுப்பே வரல” என்று பிரியா தலையில் அடித்துக்கொண்டார்.
இவர்களின் குடும்ப சம்பாஷனையைப் பார்த்த கார்த்திக்கிற்குப் பிரமிப்பாக இருந்தது. தன் வீட்டில் இந்தளவு சுதந்திரம் எல்லாம் உடன்பிறந்த சகோதரிகளுக்குக் கிடையாது. அவர்களின் விருப்பத்தை அம்மா கேட்கக் கூட மாட்டார்.
ஆனால் இவர்கள்குடும்பம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தனர். இந்தத் தொடர்ந்து இந்திரன் காதலைப் பற்றி விவாதித்தவர்கள், அவனுக்கும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அப்போதைக்கு கார்த்திக் எதுவும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கை கழுவிக் கொண்டிருந்தபோது, உள்ளே பிரியா மகளைத் திட்டிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.
“வந்தவர் முன்னாடி இப்படியா நடந்துக்குவ? பொண்ணை எப்படி வளர்த்து வச்சிருக்காங்கன்னு நினைச்சுக்க மாட்டாரா?”
“இதுல தப்பா நினைச்சுக்க என்னம்மா இருக்கு? ஒரு பொண்ணு அவங்க அம்மா அப்பாகிட்ட பயப்படாம தன்னோட விருப்பத்தைச் சொல்லக்கூடிய சுதந்திரம் இருக்குன்னா... அது நல்ல விஷயம்தானே?” என்றாள் யாத்ரா.
அந்த நிமிடத்தில்… சௌந்தர்யாவின் வாழ்க்கை குறித்து இருந்த அவனுடைய எல்லா சந்தேகங்களும் கரைந்துவிட்டன.
‘வாழ்ந்தா… இப்படிப்பட்ட குடும்பத்துலதான் தங்கை வாழணும்’ என்று அவன் மனதிற்குள் முடிவு செய்தான்.
5