மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 7

Quote from monisha on July 6, 2026, 6:44 PM7
இரண்டு நாள்களுக்குப் பிறகு...
முகப்பறையில் கவலையுடன் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்த கார்த்திக், “என்னாச்சு அம்மா?” என்று விசாரித்தான். அவர் இந்திரனின் ஜாதகத்தை எடுத்து நீட்டினார்.
“என்னதும்மா இது?”
“நான் இந்த ஜோசியர்கிட்ட உனக்குத்தான் பொண்ணு பார்க்கச் சொன்னேன்டா... ஆனா அவர் சௌந்தர்யாவுக்கு நல்ல வரன் ஒன்னு வந்திருக்குன்னு இந்த போட்டோவையும் விவரத்தையும் கையில கொடுத்துட்டாரு... ஜாதகம் எல்லாம் ரொம்ப அம்சமா பொருந்தி இருக்காம்,” என்றார்.
அந்த விவரங்களை எல்லாம் பொறுமையாக வாசித்தவன், “பையன் நம்ம சௌந்தர்யா ஆபீஸ்லதான் வேலை பார்க்குறான் போலவே” என, “அப்படியா?” என்று அவர் ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமா... நான் முதல்ல விசாரிக்கிறேன், அப்புறமா முடிவு பண்ணலாம்.”
“இப்போ அவளுக்குக் குருபலன் வந்திருக்காம்... ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கலனா முப்பது வயசுக்கு மேலதான் நடக்கும்னு சொல்றாரு ஜோசியர்.”
“கல்யாணம் என்ன காய்கறி வியாபாரமா உடனே முடிக்க? எல்லாம் பொறுமையா பார்த்துதான் முடிவு பண்ணனும்,” என்று கார்த்திக் கடுகடுக்க,
“அதுவும் உண்மைதான்” என்று அவரும் ஆமோதித்தார்.
“நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க நான் பார்த்துக்கிறேன்... அப்புறம் இதைப்பற்றி சௌந்தர்யாகிட்ட பேசிக்க வேண்டாம்,” என அவரும் சம்மதமாகத் தலையசைத்தார்.
“சரி உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்,” என்று அவர் உள்ளே செல்ல, அவன் தன் கையிலிருந்த ஜாதகத்தைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டான்.
அடுத்த இரண்டு நாளில் அவன் அம்மா மீண்டும், “அந்த பையன் விவரம் கொடுத்தேனே கார்த்திக்?” என வினவ, “ஐயோ வேலையில் மறந்துட்டேன் மா. இரண்டு நாளில் விசாரிச்சுச் சொல்றேன்” என்று மேலும் ஒரு வாரம் விஷயத்தை இழுத்தான்.
இறுதியாகத் தான் விசாரித்ததை எல்லாம் அம்மாவிடம் உரைக்க,
“பரவாயில்ல நல்ல வரனாதான் இருக்கு இல்ல?” என்றார் தேன்மொழி.
அவன் திட்டமிட்டது போலவே எல்லாம் நிகழ்ந்தது. “இந்த வரன் முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்டா,” என்று அவர் வாயாலேயே சொல்லவும் வைத்து விட்டான்.
அடுத்த நாள் திருமணம் விஷயம் பேசுவதற்காக குமாரும் பிரியாவும் சென்னைக்கு வந்தனர்.
“என்னா வெயிலு பா”
“ஆமாமா வெயில் ஜாஸ்தியாதான் இருக்கு.”
“ஏற்காட்டுலயே வெயிலு பொளக்குது இங்க இல்லாம இருக்குமா?” என்றார் பிரியா.
இந்திரன் தன் பெற்றொரை பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தான். “அம்மா... அப்பா...” என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் யாத்ரா.
“நல்லா படிக்குறியா செல்லம்?”
“ஓ சூப்பரா படிக்குறேன்பா,” என்று யாத்ரா சொல்ல, “கிழிக்குறா... ஊரை சுத்திட்டு இருக்கா” என்று இந்திரன் புகார் வாசிக்க, “படிக்கணும்கிறதுக்காக வீட்டுலயே உட்கார்ந்திருக்கணுமா... அப்பப்போ வெளியே போயிட்டு வரக்கூடாதா?” என்று யாத்ரா முடுக்கினாள்.
“காலையில எத்தனை மணிக்கு எழுந்துக்குறான் கேளுங்க மா,” என்று இருவரும் மாறி மாறிக் குற்றம் சொல்லிக் கொள்ள, “வந்ததும் உங்க பஞ்சாயத்தை வைச்சுக்கணுமா?” என்று பிரியா முறைத்தார்.
“நான் ஒன்னும் ஆரம்பிக்கல இவன்தான்” என்று யாத்ரா அப்போதும் விடாமல் தமையனை கை காட்டினாள்.
“பேசுனது போதும் போய் அம்மா அப்பாவுக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வா,” என்று இந்திரன் அதட்ட, தமையனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள் யாத்ரா.
“நீங்க உட்காருங்கம்மா” என்று இந்திரன் அவர்களின் பையை எல்லாம் உள்ளே எடுத்துச் சென்று வைக்க, பிரியா வீட்டைச் சுற்றிப் பார்த்தார்.
“பரவாயில்ல வீட்டைச் சுத்தமாதான் வைச்சு இருக்காங்க பசங்க” என்று பெருமை பட்டுக் கொள்ள, அப்போது அழைப்பு மணி அடித்தது.
“நான் போய் பார்க்குறேன்” என்று கதவைத் திறந்த இந்திரன் கார்த்திக்கைப் பார்த்துத் திகைத்து நின்றான்.
“கார்த்திக் நீங்க?”
“அம்மா அப்பா இன்னைக்கு வர்றதா சொன்னீங்க இல்ல, அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.”
“இப்பதான் வந்தாங்க” என்ற அவனுக்கு உள்ளே வர வழி விட்டான்.
“வணக்கம் பா, வணக்கம் மா... எப்படி இருக்கீங்க?” என்று கார்த்திக் பவ்வியமாக விசாரிக்க, “நாங்க நல்லா இருக்கோம் தம்பி... நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டார் குமார்.
“நல்லா இருக்கேன் பா,”
“உட்காருங்க தம்பி” என்று குமார் சொல்லும் போது யாத்ரா சமையலறையிலிருந்து பழச்சாறுடன் வந்தாள். “முதல்ல தம்பிக்குக் கொடும்மா” என்று பிரியா சொல்ல, அவள் தட்டை அவனிடம் நீட்டினாள்.
அந்த ஒரு கணத்தில், இருவரின் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டன. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஏதோ ஒரு மெல்லிய உணர்வை அவன் கண்கள் கடத்த, அதை உள்வாங்கிய அடுத்த நொடியே ஒருவிதப் பதற்றத்துடன் அவள் தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
கையில் இருந்த கண்ணாடித் தம்ளரின் குளுமையை உணர்ந்தபடி, அந்தப் பழச்சாறை நிதானமாகப் பருகிவிட்டு, ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிவிட்டுத் தனது பேச்சை மெதுவாகத் தொடங்கினான்.
“நாளைக்கு வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்க வரப்போறீங்க இல்ல... அது விஷயமாத்தான் பேசலாம்னு வந்தேன்”
“இந்திரா சொன்னான்... நீங்க வீடு வாங்கித் தந்த விஷயத்தையும் சேர்த்து” என்று குமார் சொல்ல, கார்த்திக் இந்திரனை நிமிர்ந்து நோக்கினான்.
“எங்க அம்மா அப்பாகிட்ட எனக்குப் பொய் சொல்ற வழக்கம் இல்ல,” என்றான் இந்திரன்.
அந்த வார்த்தை கார்த்திக்கைப் பலமாகத் குத்தியது. “நானும் எங்க அம்மாவை ஏமாத்தணும்னு நினைக்கல” என்றதும் குமார் இடையிட்டு, “அது எங்களுக்குப் புரியுது தம்பி... நீங்க எல்லாம் உங்க தங்கச்சிக்காகத்தான் பண்றீங்க... ஆனா உங்க அம்மாவுக்குத் தப்பித்தவறி உண்மை தெரிஞ்சுட்டா?” என்றார்.
“நான் அதெல்லாம் பார்த்துக்கிறேன்... நீங்க நான் சொன்ன மாதிரி அம்மாகிட்ட பேசினா மட்டும் போதும்,” என குமாரும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கார்த்திக்கை ஆழமாக பார்த்த கார்த்திக், “நான் சௌந்தர்யாவைக் காதலிக்கிறேன்தான், அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்தான்... இல்லன்னு சொல்லல. ஆனா அதுக்காக எங்க அம்மா அப்பாவும் பொய் பேசணும்னு எதிர்பார்க்குறது சரியில்லை,” என்றான்.
அந்த நொடியே கார்த்திக் சீற்றத்துடன் எழுந்து நின்றான்.“என் தங்கச்சி நல்லா இருக்கணும், அவ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கணும்னுதான் இவ்வளவும் செய்றேன்... உங்களுக்கு இதுல விருப்பம் இல்லனா நாளைக்கு யாரும் வர வேணாம்... நான் எங்க அம்மாகிட்ட ஏதாச்சும் சொல்லிச் சமாளிக்கிறேன்,” என்று படபடவென்று பேசிவிட்டு அவன் வாசலை நோக்கி நடக்க, “இருங்க தம்பி” என்று அவனை நிறுத்தினார் குமார்.
“நாளைக்கு நானும் பிரியாவும் வந்து உங்க அம்மாகிட்ட பேசுறோம்,” என்றார்.
கார்த்திக்கின் முகம் மலர்ந்தது. “ரொம்ப தேங்க்ஸ்பா” என்று அவர் கை பிடித்து நன்றி கூறியவன், “சரி வரேன்” என்று கிளம்பும் போதும் மீண்டுமொரு முறை அவன் விழிகளை அவளை தொட்டன.
அவனுடைய அந்தப் பார்வைத் தீண்டலில் விவரிக்க முடியாத ஏதோ ஒரு கனம் இருந்தது. யாத்ராவும் அதைத் துல்லியமாக உணர்ந்திருந்தாள்;
ஆனால் அதை எப்படி எடுத்து கொள்வது? தங்கையின் மகிழ்ச்சிக்காக எதையும் துணிந்து செய்யும் அவன் மீது மரியாதை வந்திருந்தது. எனினும், அந்த மதிப்பிற்கு அப்பால்... அவளால் யோசிக்க முடியவில்லை.
அடுத்த நாள் அவர்கள் குடும்பமாக கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றனர்.
மெல்லிய சரிகை இழைத்த கருநீலப் புடவையில் வந்திருந்த யாத்ராவை கண்ட கார்த்திக்கின் விழிகள் அவளை விட்டு அசைய மறுத்தன. அவனது இதயம் வேகமெடுத்தாலும், பெரியவர்கள் நிறைந்திருக்கும் அந்தச் சூழலில் தன் உணர்வுகளை வெளிக்காட்டிவிடக் கூடாது தன் பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பிக் கொண்டான்.
வீட்டினர் முன்பாக அவளை பார்க்க கூடாது என்று தன் மனதை ஒரு மாதிரி கட்டுப்படுத்திக் கொண்டான்.
அதேசமயம் இந்தரனின் பெற்றோர் முகப்பறையில் பேச அமர்ந்து கொள்ள, சௌந்தர்யாவை பார்க்க உள்ளே சென்றாள் யாத்ரா.
அங்கே அவளின் மற்ற சகோதிரிகளும் இருந்தனர். எல்லோருடனும் அவள் கலகலப்பாகப் பேசிவிட்டு வெளியே வந்த சமயத்தில் எதார்த்தமாக பக்கத்து அறையிலிருந்த படத்தை பார்த்தாள்.
அதில் அமரேஷுடன் கார்த்திக் நெருக்கமாக நின்றிருக்க, அந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தில் அவள் பாட்டுக்கு கார்த்திக்கின் அறைக்குள் வந்துவிட்டாள்.
ஆனால் அங்கே அந்த ஒரு படம் மட்டும் இல்லை. வரிசையாக இன்னும் நிறைய படங்கள் இருந்தன. அதில் கார்த்திக் வேறு பெரிய நடிகர்களுடனும் நின்றதை எல்லாம் பார்த்தவள் அப்படியே வியப்பில் நின்றுவிட்டாள்.
எதார்த்தமாக அறைக்குள் வந்த கார்த்திக், அவள் அந்த படங்களை எல்ல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு இதழோரம் மெல்லிய புன்னகை பூத்தான்.
“எல்லாம் ஒரிஜினல்தான்... கிராபிக்ஸ் இல்ல!”
மிக அருகில் கேட்ட அந்த வெண்கலக் குரலில் அதிர்ந்து திரும்பியவள், அவன் இத்தனை நெருக்கமாக நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
சட்டென ஒரு அடி பின்வாங்கியவள், “சாரி... இது உங்க ரூமா?” என்று தர்மசங்கடத்துடன் கேட்டாள்.
“பார்த்தா எப்படித் தெரியுது?” என்று அவன் கண்கள் குறும்புடன் மின்னக் கேட்க, அவளுக்கு முகம் சிவந்தது.
“அது... இந்த போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டே அப்படியே உள்ளே வந்துட்டேன்,” என்றவள், அவன் முகத்தை ஏறிட்டுத் தயக்கத்துடன் நோக்கி, “நீங்க... நிஜமாவே ஆக்டர் அம்ரேஷ் கூட வொர்க் பண்றீங்களா?” என்று கேட்டாள்.
“ஆமா, நான் அவரோட மேனேஜர்.”
“ஓ!” என்று ஆச்சரியத்தில் விழிகளை விரித்தவள், ஒரு சிறுமியின் உற்சாகத்துடன், “நான் அவரோட மிகப்பெரிய ஃபேன் தெரியுமா?” என்றாள்.
“எனக்குத் தெரியுமே!” என்று அவன் மிகச் சாதாரணமாகச் சொல்ல, யாத்ரா குழப்பமடைந்தாள்.
“எப்படி? அண்ணா சொன்னானா?”
அந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் தவிர்த்தவன், அவள் கண்களை ஊடுருவிப் பார்த்து, “உனக்கு அம்ரேஷைப் பார்க்கணுமா?” என்று கேட்டான். யாத்ராவின் முகம் நொடியில் பிரகாசமானது.
“நிஜமாவா? பார்க்க முடியுமா?”
“நான் நினைச்சா கண்டிப்பா முடியும்... ஆனா, அதுக்கு அன்னைக்கு நான் சொன்ன கண்டிஷனுக்கு நீ ஓகே சொல்லணும்”
அவள் புருவங்களைச் சுருங்க, “விளையாடுறீங்களா என்கிட்ட?” என்று உதட்டைக் கடித்தபடி கேட்டாள்.
அவன் இல்லை என்பது போல மெதுவாகத் தலையசைக்க, அவள் முகம் மாறியது.
“அம்மா தேடுவாங்க...” என்று அந்த நொடியே அங்கிருந்து ஓடி விட்டாள்.
அவள் ஓடுவதைப் பார்த்தவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. அவள் சென்ற பின்பும், அந்த அறையில் எஞ்சி நின்ற அவளது வாசம் அவன் சுவாசத்தைச் சிறைபிடித்தது. அதை அப்படியே தேக்கி வைத்துக்கொள்ள விரும்புபவன் போல மூச்சை இழுத்துக்கொண்டான்.
அதற்குள் தேன்மொழியின், “கார்த்திக்” என்ற அழைப்பு, அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. முகப்பறைக்குச் சென்றபோது அங்கே திருமணப் பேச்சுக்கள் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்க, ‘நினைத்தது நடந்துவிட்டது’ என்று அவன் நிம்மதியடைந்த அதே நொடியில், அந்த எதிர்பாராத பூகம்பம் வெடித்தது.
7