மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 8

Quote from monisha on July 6, 2026, 6:45 PM8
தலையணையில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் சௌந்தர்யா.
“ஏன்டி, நிச்சயமா முடிஞ்சுது... எதுக்கு இப்படி அழுற?” என்று கேட்ட அக்காக்கள் இருவரிடமும் அவள் எதுவும் சொல்லவில்லை. சமாதானமும் ஆகவில்லை.
எல்லாமே நினைத்தபடி நடந்து முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்திரனின் அப்பா, “நானும் பிரியாவும் கலப்புத் திருமணம்... அதனால எங்க சொந்தக்காரங்க யாரும் எங்களைச் சேர்த்துக்கல... நிச்சயத்துக்குப் பெருசா எங்க சைட்ல இருந்து சொந்தக்காரங்கன்னு யாரும் வர மாட்டாங்க,” என்று எதார்த்தமாகச் சொல்லி வைக்க, தேன்மொழி அதிர்ச்சியானார்.
அவர் முகத்திலிருந்த சந்தோஷம் மொத்தமாக வடிந்துவிட்டது. அதன் பிறகு அவர் பேச்சும் மாறிவிட்டது.
“தேய்பிறையா இருக்கு... தேதி அப்புறமா குறிச்சுக்கலாம்” என, “தேய்பிறைக்கும் தேதி குறிக்குறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?” என்று கேட்டான் கார்த்திக். ஆனால் மகனைப் பார்வையாலேயே அடக்கிவிட்டவர், “நம்ம அடுத்த வாரம் தேதி குறிச்சுக்கலாம், இப்போ கிளம்புங்க” என்றதும் இந்திரன் பெற்றோர் முகம் சுருங்கிவிட்டது.
“சரிங்கம்மா வரோம்... வரோம் தம்பி” என்று அவர்கள் கார்த்திக்கைப் பார்த்த பார்வை அவனைச் சங்கடப்படுத்தியது. யாத்ராவோ திரும்பிப் பார்க்கக் கூட இல்லை.
ஒரு பக்கம் சௌந்தர்யா அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க, மறுபுறம் தேன்மொழி ஜோசியரைப் பிடி பிடியென்று பிடித்துக் கொண்டார். “என்னவோ நல்ல குடும்பம், நல்ல ஜாதகம்னு சொன்னீங்க? இதான் நல்ல குடும்பமா?”
“இல்ல, கலப்புத் திருமணம்னு எனக்குத் தெரியாதும்மா,” என்றவர் பம்மியபடி ‘கார்த்திக் காப்பாற்று’ என்பது போல அவன் புறம் பார்த்தார்.
“ம்மா, அவருக்குத் தெரிஞ்சிருக்காது விடுங்க,” என்று இடையில் வந்து அம்மாவைச் சமாதானம் செய்தான் கார்த்திக்.
“அவருக்குத் தெரியாது சரி, நீ விசாரிச்ச இல்ல? உனக்குத் தெரிஞ்சிருக்கும் இல்ல?” என்று அவன் பக்கம் திரும்பிக் கொண்டார். அவன் எதுவும் பேசாமல் நிற்க,
“அப்போ உனக்குத் தெரியும்?” என்றவர் மகனை முறைக்கவும், “ஆமா தெரியும்... அவங்க எந்தச் சாதிங்குறதை விட அவங்க என்ன மாதிரியான மனுஷங்குறதுதான் எனக்கு முக்கியமா தெரிஞ்சுது... எனக்குச் சௌந்தர்யா அவங்க வீட்டுல வாழ்ந்தா சந்தோஷமா இருப்பான்னு தோணுச்சு,” என்று உறுதியாகக் கூறினான்.
“அதுக்குன்னு... இந்த மாதிரி குடும்பத்துல சம்பந்தம் பண்ணா நம்ம சொந்தக்காரங்க எல்லாம் காரித் துப்ப மாட்டாங்க?”
“ஏன்மா, நீ புருஷனை இழந்து கஷ்டப்படும் போது இந்தச் சொந்தக்காரங்க எங்க இருந்தாங்க? யார் உனக்காக வந்து நின்னா?”
“அதுக்காகச் சொந்தக்காரங்களே வேணாம்னு சொல்லிடுவியா... நாளைக்கு உனக்கே ஒரு பொண்ணு பார்க்கும் போது இப்படி ஒரு சாதியில இருந்து பையன் எடுத்தோம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?”
“ம்மா, இப்போ தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம்.”
“இப்போ என்னடா நிச்சயமா ஆயிடுச்சு? வேற சம்பந்தம் பார்ப்போம்,” என்றவர் ஜோசியரிடம் திரும்பி, “வேற நல்ல வரனா பாருங்க ஜோசியரே... இந்த கலப்புத் திருமணம், காதல் திருமணமெல்லாம் வேண்டாம்... நம்ம குலம் கோத்திரத்துல நல்ல பையனா பாருங்க,” என்றார்.
அவரும் கார்த்திக்கைப் பார்த்துக் கொண்டே தலையாட்டிவிட்டுச் செல்ல, “ம்மா நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க,” என்று கார்த்திக் ஆரம்பிக்க, “நீ அவங்க வீட்டுக்கு போன் பண்ணி நமக்கு விருப்பம் இல்லன்னு சொல்லிடு,” என்று அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை அவர்.
அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் சௌந்தர்யா அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள். சாப்பிடக் கூட வரவில்லை.
“இப்போ எதுக்கு இவ ஓவரா பண்ணிட்டு இருக்கா, நம்ம பார்த்த சம்பந்தம்தானே,” என்று தேன்மொழி கேட்க, “நான் பேசுறேன்” என்று கார்த்திக் அறைக்குள் வந்தான்.
தங்கையின் அருகே அமர்ந்தவன், “உனக்காகதானே இவ்வளவு செஞ்சேன்... என்னை நம்ப மாட்டியா நீ?” என, அவள் அமைதியாக அண்ணன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“சரி சரி நான் பார்த்துக்கிறேன்” என்று தங்கையின் தலையைத் தடவிக் கொடுத்தான். ஆனால் அவனுக்குமே அம்மாவிடம் எப்படிப் பேசித் திருமணத்திற்குச் சம்மதம் வாங்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
ஒரு வாரம் போகட்டும் என்று விட்டிருந்தான். ஆனால் அதற்குள் சௌந்தர்யாவுக்கும் இந்திரனுக்கும் முட்டிக் கொண்டது. தமையனைச் செல்பேசியில் அழைத்து அவள் தேம்பி தேம்பி அழ, “என்னம்மா, ஏன் இப்போ அழுற?” என்று விசாரிக்க, “இந்த பிரச்னை நடந்ததுமே இந்திரன் என்கிட்ட பிரிஞ்சிடலாம், நமக்குள்ள செட்டாகாதுன்னு சொன்னாரு... சரி கோபத்துல சொல்றாருன்னு பார்த்தா இரண்டு நாளா போனை எடுக்கல... மெசேஜ் பண்ணா பதில் போடல... இன்னைக்கு ஆபீஸுக்கும் வரல” என்று அவள் சொல்லிக் கொண்டே அழவும், “அழாதன்னு சொல்றேன் இல்ல” என்று அதட்டினான் கார்த்திக்.
“எனக்கு பயமா இருக்கு அண்ணா” என்று அவள் குரலிலிருந்த வேதனையை உணர்ந்தவன், “ஆமா இப்போ நீ எங்க இருக்க?” என்று கேட்டான்.
“ஆபீஸ்லதான்.”
“சரி நான் ஈவினிங் வரேன்... நம்ம போய் இந்திரனைப் பார்ப்போம்” என்று தங்கையைத் தேற்றியவன், அவன் சொன்னது போலவே மாலை வந்து அவளை இந்திரனின் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றான்.
வீட்டின் கதவைத் தட்ட, யாத்ரா வந்து திறந்தாள். முதலில் கார்த்திக்கைப் பார்த்து முகத்தைச் சுருக்கியவள், அவனுடன் சௌந்தர்யாவும் வந்திருப்பதைப் பார்த்ததும், “உள்ளே வாங்க” என்று அழைத்தாள்.
“உங்க அண்ணன் எங்கே? அவனை வரச் சொல்லு,” என்று கார்த்திக் அதிகாரமாகக் கேட்க, “அண்ணாவும் ரொம்ப அப்செட்டா இருக்கான்,” என்றாள் யாத்ரா.
“நான் இந்திரன்கிட்ட பேசணும்,” என்று சௌந்தர்யா வருத்தமாகக் கூற, “ரூம்ல,” என்று கை காட்டினாள். கார்த்திக் அறை நோக்கிப் போகவும், “நான் போய் பேசுறேன்,” என்று தமையன் கையைப் பிடித்தாள் சௌந்தர்யா. “சரி போ,” என்றவன் நின்றுவிட, அவள் மட்டும் அறைக்குள் சென்றாள்.
சௌந்தர்யா அறைக்குள் சென்றதுமே, “உன்னை யார் இங்க வர சொன்னது?” என்று இந்திரன் கோபமாகச் சத்தமிட, கார்த்திக்கிற்குத் தாங்கவில்லை. உடனடியாக அவனுமே அறை நோக்கி விரையவும் யாத்ரா இடையில் வந்து மறித்து நின்றாள்.
“போகாதீங்க... அவங்க மட்டும் பேசிக்கட்டும்.”
“அவன் என் தங்கச்சியைத் திட்டிட்டு இருக்கான்,” என்று சீற்றமாகப் பேசியவனைப் புன்னகையோடு பார்த்தவள், “லவர்ஸ்குள்ள இதெல்லாம் சகஜம்... கொஞ்ச நேரத்துல அவங்களே சண்டை போட்டுச் சமாதானம் ஆகிடுவாங்க,” என்றாள்.
அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “ஏற்கனவே காதலிச்ச அனுபவம் இருக்கோ?” என்று கேட்க, “ஏன் உங்களுக்கு இல்லையா?” என்று திரும்பி அவனை எடக்காகக் கேட்டாள் யாத்ரா.
“இருக்கு… ஆனா அது இன்னும் ஸ்டார்ட் ஆகல,” என்றவன் அவளை ஆழமாகப் பார்த்துக் கொண்டே கூற, அவளின் புருவம் சற்றே சுருங்கியது.
“புரியல... என்ன அர்த்தம் இதுக்கு?”
“தியேட்டர்ல ஒரு நாள் ஒரு பொண்ணைப் பார்த்தேன்... விசில் அடிச்சு ஆட்டம் போட்டுக்கிட்டுச் சந்தோஷமா இருந்தா... ஒரு படத்துல இருக்க கற்பனையான ஹீரோவைக் கொண்டாடுற சாதாரணப் பொண்ணுன்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா அதே பொண்ணுதான், கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டான்னு தெரிஞ்சதும் யோசிக்காம பளார்னு ஒரு அறை கொடுத்தா பாரு... அந்த நிமிஷமே நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன்... அப்புறம் திரும்பவும் வேறொரு சந்தர்ப்பத்துல அவளைப் பார்த்தேன்... அப்படிப் பார்த்த போதுதான்,” என்றவன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டு, “என் மனசு என்கிட்ட இல்லன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்,” என்று முழுவதுமாகச் சொல்லி முடித்த கணத்தில் அவள் மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லை.
அவன் சொல்லும் அந்தத் தியேட்டர் பெண் தான்தான் என்பது தெரியவும் அவளுக்குள் மெல்லிய நடுக்கம் உண்டானது.
ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், “யாரு அந்தப் பொண்ணு?” என்று அலட்சியமாகக் கேட்க, அவன் குறும்பாகச் சிரித்தான்.
“உனக்குத் தெரியாது இல்ல?”
“தெரியாது, தெரிஞ்சுக்கவும் விரும்பல,” என்றவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர முயன்ற நொடி, அவன் அவள் மணிக்கட்டைப் பற்றிக் கொண்டான்.
அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்அவன் மிகவும் அருகில் நின்றிருந்தான்.
“யாத்ரா…” மென்மையான அவனது அந்த அழைப்பு அவளை நகர விடவில்லை.
“தப்பு செஞ்சா யாருன்னு கூடப் பார்க்காம அடிக்குறவ நீ… ஆனா என்னைப் பார்த்தா மட்டும்… ஏன் ஓடுற?”
“என்ன... நான் ஓடுறேனா?” என்ற அவளிடம் அந்த நொடி உண்மையான அச்சம்.
அவன் தொடர்ந்தான். “ஆமா ஓடுற… அன்னைக்கு ஏற்காட்டுல... அப்புறம் என் வீட்டுல… இப்போ இங்க,” என்றவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓர் அடி முன்னே வந்தான். அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான்.
அவன் கண்கள் அவளைக் காந்தமாக இழுப்பது போலிருந்தது.
“நீங்க பேசுற விதம் சரியில்ல,”
“என் கண்டிஷன் பத்திச் சொல்றியா?” என்று அவன் குரல் மிக நெருக்கமாக ஒலித்தது. அவனது அண்மையால் அவள் முகம் சட்டெனச் சிவந்தது.
“திரும்பவும் ஆரம்பிக்காதீங்க... ஏற்கனவே இருக்க ஒரு பிரச்னை போதும்.”
“என் தங்கச்சி காதலைச் சொல்றியா?” என்றவன் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை.
“அவங்க கல்யாணம் நடக்கும்... எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்.” என, அவள் அவனை நேராகப் பார்த்தாள்.
“முதல்ல அதைச் செய்யுங்க.”
“செஞ்சா நான் கேட்டது கிடைக்குமா?” என்றவன் சுற்றிச் சுற்றி அதே இடத்தில் வந்து நிற்கவும் அவள் உதட்டில் எட்டிய புன்னகையை அவள் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை.
அதேசமயம், அறைக்குள் இருந்து சௌந்தர்யாவின் குரலும், இந்திரனின் சத்தமும் சற்று தணிந்தது.
கார்த்திக் அப்போது, “நீ சொன்ன மாதிரி சண்டை சரியாகிடுச்சுன்னு நினைக்குறேன், இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வெளியே வந்திருவாங்க... அதுக்குள்ள எனக்கு ஏதாவது பதில் சொல்லு,” என்று கேட்க, அவள் அதிர்ச்சியானாள்.
“என்ன பதில்?”
“என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு?” நேரடியான அவனது கேள்வியில், அவளது இமைகள் தழைந்தன.
“நம்ம ஒரு இரண்டு மூணு தடவைதான் பார்த்துப் பேசி இருக்கோம்... அதுக்குள்ள இப்படி கேட்டா?” என்று அவள் இழுக்க, அவனது விழிகளில் சட்டென ஒரு ஏமாற்றம் வந்து எட்டிப் பார்த்தது.
அவன் முகம் வாடுவதைக் கண்டதும் அவளுக்குள்ளும் ஏதோ ஒன்று சரிய, "அண்ணன் கல்யாணம் முடியட்டும்... அப்புறம் இதைப் பத்திப் பேசிக்கலாம்," என்றாள் அவசரமாக.
அந்தப் பதிலில் பொதிந்திருந்த மெல்லிய சம்மதத்தை சட்டெனப் பிடித்துக்கொண்டவனின் இதழ்கள் பெரிதாக விரிந்தன. நேர்த்தியான அவனது மீசைக்குக் கீழே ஒரு கவிதையைப் போல உதித்த அந்தப் புன்னகையை அவள் மனம் தன்னை மறந்து ரசித்தது. இமைக்கவும் மறந்தது.
அந்த நொடி அறைக் கதவின் சத்தம் கேட்க, இருவரும் அவசரமாக விலகி நின்று கொண்டனர். வெளியே வந்த சௌந்தர்யா முகத்திலிருந்த புன்னகை அவர்கள் சமாதானமாகிவிட்டதை சொல்லாமல் சொன்னது.
அப்போதைக்கான பிரச்னை தீர்ந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட கார்த்திக்கின் விழிகள் அனிச்சையாக யாத்ராவை நோக்க, அவள் மெல்லிதாகப் புன்னகைத்தாள்.
அந்த புன்னகை அவர்கள் காதல் பயணத்திற்கு முதல் அச்சாரமிட்டது.
அந்தச் சில நொடிகள்... அவர்களுக்குள் ஏற்பட்ட அந்த நெருக்கம் இனி அவர்களைக் காலத்திற்கும் விடப் போவதில்லை.
8