மோனிஷா நாவல்கள்
Kannadi Thundugal - Episode 16

Quote from monisha on March 20, 2025, 7:02 PM16
உறவுகளும் உணர்வுகளும் தானாக மடிந்து போவதில்லை. அவைக் கொல்லப்படுகின்றன. கத்தி இல்லாமல் இரத்தம் சொட்டாமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு கொல்லப்படுகின்றன.
‘தன்னந்தனி மானு
இவ தண்ணி இல்லா மீனு
மஞ்ச தாலி போட்டு நீ மட்டும்தானே ஆளு
குத்தம் இல்லா பொண்ணு
இவ குத்த வைச்ச தேனு
கண்ணுக்குள்ள வைச்சு உன்னை காப்பாத்துவேன் நானு’
தோட்டத்தில் மரங்களுக்கு இடையில் அமர்வதற்கு ஏதுவாக இருந்த கல் மேடையில் அமர்ந்து தீபிகா அவளும் கிருபாவும் செய்த அந்த ரீல்ஸ் வீடியோக்களை இரசித்திருந்தாள்.
இருவரும் தேன்நிலவுக்கு குலுமனாலி சென்ற போது செய்த ரீல்ஸ் வீடியோக்கள் அவை எல்லாம். அதனைப் பிறர் பார்க்காமல் தாங்கள் மட்டும் பார்க்கும் வகையில் செட்டிங் செய்து வைத்திருந்தவள் அந்தக் காணொளிகளைத் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்த்து இரசித்தாள். அதனைப் பார்க்கையில் அவள் மனம் பரவசப்பட்டது.
‘மறக்குமா மாமன் எண்ணம்... மயக்குதே பஞ்சவர்ணம்’ என்றவன் பின்னிருந்து அவளைக் கட்டிக் கொண்டு உணர்வுபூர்வமாக வாயசைப்பதும் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிடுவதையும் பார்க்க பார்க்க அவளுக்குச் சலிக்கவில்லை.
இப்போதும் கூட பின்னிருந்து அவன் தன்னை அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை உண்டானது .
கனவில் மிதப்பது போன்று அவன் காதலில் மிதந்த தருணங்கள். அவன் கைகளில் தவழ்ந்த நிமிடங்கள். அவன் தேகத்தில் விளையாடிய அனுபவங்கள் என்று நொடிக்கு நொடி அந்த இரசனைக்குரிய நினைவுகளை எல்லாம் மனதில் எண்ணி எண்ணி இரசித்துச் சிலாகித்தவள் கடந்த பத்து நாளில் உயிருடன் உயிராக அவனுடன் ஒன்றெனக் கலந்துவிட்டதாகவே உணர்ந்தாள். ஏன்? இன்னும் கூட அந்த நெருக்கமும் தாபமும் அவளுக்குத் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்போது ‘டம்’ என்று ஒரு கனமான சத்தம் அவளின் ஏகாந்த உணர்வுகளை எல்லாம் மொத்தமாகக் களைத்துப் போட்டுச் சிதறடித்ததில் அவள் பதறிப் போனாள். என்ன சத்தம் என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்ததில் தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்த சத்தம் என்று புரிந்தது. அதுவும் சரியாக அவளை விட்டுக் கொஞ்சம் தள்ளிதான் அந்தத் தேங்காய் விழுந்திருந்தது.
தலையில் விழுந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றவள் அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தான் அமர்ந்திருந்த கல் மேடையிலிருந்து பயத்துடன் எழுந்து கொள்ள முற்பட,
“தலையில எல்லாம் வுழாது க்கா... நீங்க உட்காருங்க” என்று குரல் கேட்டுத் திரும்பி பார்த்த தீபிகா, “தங்கம்” என்று அழைத்தாள் புன்னகையுடன்.
மும்முரமாக அவள் மண்ணைக் கிளறிச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கும் வேலையைப் பார்த்திருக்க, “நான் உண்மையிலேயே பயந்துட்டேன் தெரியுமா?” என்றபடி தீபிகா அவளிடம் பேச்சு கொடுத்தபடி அருகே சென்றாள்.
தங்கம் சிரித்துவிட்டு, “அசந்த நேரமா பார்த்துத் தலையில கல்லைத் தூக்கிப் போடுறதுக்கு மனுஷன் மாதிரி இல்லக்கா மரம்...... தேங்காய் வுழுந்தாலும் தென்னை ஓலை வுழுந்தாலும் சரியா நேரம் இடமும் பார்த்து ஆளில்லாத இடத்துலதான் விழும்” என்றாள்.
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற... கொஞ்சம் விட்டிருந்தா அந்தத் தேங்காய் என் மண்டையைப் பிளந்திருக்கும்” என்றவள் தீவிரமாகச் சொல்ல,
“அதெல்லாம் பிளக்காது க்கா... அப்படி வுழுந்திருந்தா இங்கேயே குடித்தனம் நடத்திட்டு இருக்க என் மண்டையில ஒரு பத்து இருபது தடவையாச்சும் விழுந்து என் மண்டையைப் பிளந்திருக்கணும்” என்றவள் பேசிக் கொண்டே மண் படிந்திருந்த தன் கரத்தைத் தொட்டித் தண்ணீரை மொண்டு கழுவிவிட்டுத் தான் நட்டச் செடிகளிலும் ஊற்றினாள்.
“அது சரி” என்ற தீபா, “ஆமா இதென்ன செடி தங்கம்?” என்று ஆர்வமாக அவளிடம் கேள்வி எழுப்ப,
“இது தெரியாதா... மிளகா நாத்து க்கா” என்றாள்.
“எனக்கு எங்க தங்கம் இதெல்லாம் தெரியும்... சென்னைல இருக்க எங்க வீட்டுல எல்லாம் செடி வைக்கறதுக்குச் சுத்தி தம்படி இடம் கூடக் கிடையாது... அங்க எல்லாம் வீடுங்க ஒன்னோடு ஒன்னு பக்கத்துப் பக்கத்துல உரசிகிட்டு நிற்கும் தெரியுமா?”
“அது சரிதான்... ஆனா அங்க எல்லாம் மாடித் தோட்டம் வைககுறாங்கனு கேள்விபட்டிருக்கேன்”
“நீ வேற... எங்க அம்மா ஒரு துளசிச் செடியை கூட நட்டுத் தண்ணி ஊத்தனுதுல்ல... அவங்க போய் தோட்டம் வைக்கப் போறாங்களா... அதுவும் மாடில”
“சித்திக்கு ஆர்வம் இல்ல சரி... உங்களுக்குமா?”
“எனக்கும்தான்... அதுவும் இல்லாம செடி கொடி எல்லாம் நடுறதுக்கு எனக்கும் நேரமும் இருக்கிறது இல்ல... காலையில ஆஃபிஸ் போயிட்டா நைட்டுதான் வீட்டுக்கு வருவேன்... இங்க வந்து இதெல்லாம் பார்த்தப் பிறகு எனக்கும் கொஞ்சம் ஆசையா இருக்கு... இப்படி எல்லாம் தோட்டம் வைச்சு பெருசா வீடு கட்டணும்னு” என்றவள் தன் விருப்பத்தைச் சொல்ல,
“அதை ஏன் நீங்க கட்டணும்... மாமன்தான் பெருசா பங்களா மாதிரி கட்டி வைச்சிருக்கு இல்ல... அவங்களுக்குப் பிறகு எல்லாம் உங்களுக்குதானே” என்ற தங்கத்தின் வார்த்தையை மறுத்துத் தலையசைத்த தீபிகா,
“என்னதான் மாமா வீடு சொத்துன்னு இருந்தாலும் இது அவங்க சம்பாத்தியம் இல்லையா... இதுல அவங்க அடையாளம்தானே இருக்கும்... இதுல நமக்கான அடையாளம் எங்க இருக்கு?”
என்னைக் கேட்டா நமக்கான சந்தோசம் எதுல இருக்கோ அதை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும்... உருவாக்கிகணும்” என்றவள் தன் மனதிலிருந்த எண்ணத்தை அப்படியே அவளிடம் கூற, தங்கத்திற்கு அவள் சொல்வது ஒன்றும் புரியவில்லை.
அலட்சியத்துடன் புடவை முந்தானையை உதறி சரி செய்து கொண்டவள், “உங்களுக்கு என்ன க்கா... இலட்சம் இலட்சமா சம்பாதிக்குறீங்க... நீங்க என்ன வேணா செய்வீங்க” என்று விட்டு,
“சரிங்க க்கா... எனக்கு வேலை முடிஞ்சுது... நான் மாமிகிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன்” என்றவள் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு நடக்க,
“நானும் வர்றேன் இரு” என்று தீபிகாவும் அவளுடன் நடந்து கொண்டே, “ஆமா தங்கம்... தனம் அக்காவும் பெரியம்மாவும் எப்படி இருக்காங்க...? கல்யாணத்துல கூட உன்னைத்தான் நான் பார்த்தேன்... அவங்கள பார்க்கவே இல்லையே” என, தங்கத்தின் முகம் சுருண்டுவிட்டது.
“உங்களுக்கு தெரியாது இல்ல... எங்க அக்கா எவனையோ இழுத்துட்டு ஓடிப் போயிடுச்சு... போய் பத்து வருஷமாகுது... அம்மா போன வருஷம் நெஞ்சு வலி வந்து செத்துப் போச்சு” என்றவள் அழுத்தமாகச் சொல்ல அதிர்ச்சியான தீபிகா,
“ஓ... சாரி தங்கம்... எனக்குத் தெரியாது” என்றவள் வருத்தமாக,
“இருக்கட்டும் பரவாயில்ல க்கா” என்றவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். ஆனால் அவள் சொன்னதைக் கேட்டு தீபிகாவின் மனம்தான் பாரமாகிப் போனது.
அதன் பின் தங்கம், “வேலை முடிஞ்சிடுச்சு மாமி... போயிட்டு வர்றேன்” என்று விட்டுப் புறப்பட, தீபிகா கனத்த மனதுடன் வீட்டிற்குள் வந்து அமர்ந்தாள்.
தங்கத்தை அவளுக்குச் சிறு வயதிலிருந்தே தெரியும். தனம், சித்ரா, நந்து, தங்கம் என்று நால்வரும் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு நொண்டி கண்ணாமூச்சி என்று விதம் விதமாக விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
ஒரு வயது வரைக்கும் தங்கத்தையும் தனத்தையும் அங்கே வேலை செய்யும் பார்வதியின் மகள்கள் என்றுதான் நினைத்தாள். பின்னர்தான் பார்வதி தன் தாத்தாவின் முதல் தாரம் செங்கமலத்தின் மகள் என்று தெரிய வந்தது.
அவர்கள் கதை எல்லாம் பெரிதாக அவளுக்குத் தெரியாவிட்டாலும் இருவரும் தங்களின் உறவுக்காரப் பெண் என்பதில் சந்தோஷமடைந்தாள். ஆனால் அவளுக்கு அந்த விஷயம் தெரிய வந்த பிறகு ராஜேஸ்வரி அவர்களுடன் இவர்களை ஒட்ட விடவில்லை.
‘அவங்க கூடப் போகக் கூடாது... விளையாடக் கூடாது’ என்று அவர் கண்டிப்புடன் சொல்லித் தடுத்துவிட்டதில் அவளால் அவர்களிடம் பழையபடி பேசவும் விளையாடவும் முடியாமல் போனது.
அதேநேரம் அவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளாவிட்டாலும் மாமா வீட்டிற்கு அவள் வரும் போதெல்லாம் பாத்திரம் விலக்கிக் கொண்டோ அல்லது துணிகளைத் துவைத்துப் போட்டுக் கொண்டோ பின்வாசலில் கிடக்கும் பார்வதியைப் பார்க்க நேர்ந்தால், ‘என்ன பெரிம்மா எப்படி இருக்கீங்க?’ என்று விசாரிப்பாள்.
அம்மாவுடன் உதவி செய்து கொண்டிருக்கும் தனத்தையும் மண்ணில் குழைத்துச் சமைத்துக் கொண்டிருக்கும் தங்கத்தையும் ஏக்கமாகப் பார்த்துவிட்டுக் கடந்து போவாள்.
சொந்தகாரர்களாக இருந்தும் ஏன் இவர்கள் மாமா வீட்டில் வேலைகாரர்களாக இருக்கிறார்கள் என்று அப்போது யோசிக்க தோன்றியதில்லை. ஆனால் இப்போது மனதில் அந்தக் கேள்வி உறுத்தியது.
யோசித்துக் கொண்டே அவள் அமர்ந்திருக்க, “ஏ தீபா” என்று அதட்டிய சங்கரி, “வெள்ளி கிழமை அதுவுமா பொழுது சாஞ்சி.. இன்னுமும் தலை கூட வாராம உட்கார்ந்துட்டு கிடக்க... போ... போய் முதல தலையை வாரி இந்தப் பூவை வைச்சிட்டு வந்து பூஜை ரூம்ல விளக்கு எல்லாம் ஏத்து” என்று அதிகாரமாகச் சொல்லி அவள் கையில் ஒரு சரம் மல்லியைக் கொடுக்க அதனை வாங்கிக் கொண்டவளின் முகம் சுண்டிவிட்டது. இந்த மாதிரி வீட்டுப் பணிகளைச் செய்து அவளுக்கு ரொம்ப வருடங்களாகிவிட்டதால் அதெல்லாம் அவளுக்குப் பழக்கமற்றும் மறந்தும் போய்விட்டது.
அறைக்குச் சென்று அவள் முகம் கழுவித் தலையை வாரி பின்னி அவள் கொடுத்தப் பூவைச் சூடிக் கொண்டு திரும்பி வரும் போது, “என்ன பொண்ணோ... ஆடி அசைஞ்சி வரா?” என்று புலம்பிக் கொண்டே சங்கரியே விளக்கேற்றி தீபாரதனையும் காட்டிவிட்டார்.
வேண்டுமென்றே தன் மீது அவர் வெறுப்பைக் கொட்டுகிறார் என்று புரிந்த போதும் தீபிகா அமைதி காத்தாள். தேவையில்லாத பிரச்சனைகளை இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டாமென்று இருந்தாள். ஆனால் சங்கரி விடவில்லை. அவளைச் சீண்டிக் கொண்டே இருந்தார்.
“ஆமா சமையல் எல்லாம் செஞ்சு பழக்கம்தானே உனக்கு” என்றவர் கேட்டு வைக்க, “பழக்கம்தான் மாமி... நான் வேணா டின்னர் செய்றேன்... நீங்க உட்காருங்க” என்றவள் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீ இந்தக் காயெல்லாம் நறுக்கிக் குடு... போதும்” என்று காய்கள் நிறைந்த ஒரு பாத்திரத்தை நீட்டினார்.
“சரிங்க மாமி” என்றவள் அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்து அமைதியாகக் காய்களை வெட்ட ஆரம்பிக்க,
“ஆமா வெளியே தங்கத்துக்கிட்ட என்ன பேசிட்டு இருந்த?” என்று மெல்ல எட்டிப் பார்த்துக் கேட்டார்.
“ஒன்னும் இல்ல மாமி... சும்மாதான் பேசிட்டு இருந்தோம்”
“சும்மானா... அவங்க அக்கா ஓஓஓடிப் போன கதை எல்லாம் சொல்லிட்டு இருந்தாளா உன்கிட்ட” என்றவர் இழுத்து ஒரு மாதிரி குத்தலான தொனியில் பேசியதில் அவளுக்கு உள்ளுர கோபம் துளிர்த்தது. இப்போது எதற்கு இந்தத் தேவையில்லாத பேச்சு என்று எண்ணியவள் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.
ஆனால் சங்கரி தொடர்ந்து, “பாவம் தங்கம்... இன்னும் கல்யாணம் காட்சின்னு ஒன்னும் ஆகாம ஒத்தையில நிக்குது... அந்த தனம் பொண்ணு ஓடிப் போகாம இருந்திருந்தா இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்” என, தீபிகாவிற்குக் குழப்பமாக இருந்தது. இவர் தங்கத்தைப் பார்த்துப் பரிதாபப்படுகிறாரா அல்லது தன்னைக் குத்திக் காட்ட இந்தப் பேச்சை பேசுகிறாரா?
ஆனால் அவள் எதற்கும் மசியவில்லை. அமைதியாக காய் வெட்டும் வேலையைச் செய்திருக்க, சங்கரி விடாமல் அந்தப் பேச்சைத் தொடர்ந்தார்.
“ஆனா அந்த தனம் பொண்ணு ஓடிப் போனாலும் கஷ்டமோ நஷ்டமோ... கெட்டியா அந்த வாழ்க்கையைப் பிடிச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கு... அதுக்குப் புறவு ஊர் பக்கம் திரும்பி வரவே இல்லயே” என்ற அவரின் வார்த்தைகள் இப்போது நேரடியாக அவளைக் குத்திவிட தீபிகாவின் கட்டுப்பாடு உடைந்துவிட்டது.
“எனக்குப் புரியல... இப்போ என்ன சொல்ல வர்றேங்க நீங்க? அடிச்சாலும் உதைச்சாலும் நான் அந்த விவேக்கோட வாழ்ந்திருக்கணும்னா?” என்றவள் கடுப்புடன் கேட்டுவிட,
“இப்போ எதுக்கு நீ அந்தப் பேச்செல்லாம் பேசுற?” என்று சங்கரி எரிச்சலாக,
“யார் மாமி பேசுனது... நீங்களா நானா?” என்று இவள் கோபமாக முறைத்தாள்.
“நான் உன்னைப் பத்தி பேசல... ஓடிப் போன தனத்தைப் பத்திதான் பேசுனேன்”
“சும்மா ஓடிப் போனா ஓடிப் போனான்னு சொல்லாதீங்க மாமி” என்றவள் சத்தமாகக் கத்திவிட,
“ஓடிப் போனவளை வேற எப்படிடி சொல்லுவாங்க... ஓடுகாலின்னுதான் சொல்லுவாங்க... ஏன் நீயும்தான்டி ஓடுகாலி... எவன் கூடவோ ஓடிப் போய் நாசமாகி வந்த உன்னை என் புள்ள பாவம் பார்த்துக் கட்டிக்கிட்டான்... நாங்களும் எங்க மானம் மரியாதை எல்லாம் விட்டுட்டு உன்னை மருமகளா சேர்த்துக்கிட்டோம்” என்று அவரும் படபடவெனப் பதிலுக்குப் பொறித்து தள்ளிவிட, அவள் கொதித்துப் போனாள்.
“மாமி போதும்... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க... நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று கையிலிருந்த கத்தியை நீட்டியபடி அவள் பேச,
சங்கரி பதட்டத்துடன், “என்னடி கத்திக் காட்டி எல்லாம் மிரட்டுற” என்று ஓரடிப் பினவாங்கினார்.
“நான் ஓடிப் போனதைப் பத்தி திரும்பவும் பேசுனீங்கனா... மிரட்ட மாட்டேன்... குத்தியே கொன்னுடுவேன் ஆமா” என்று அவள் ஆவேசமாகத் தன் கையிலிருந்த கத்தியை உயர்த்திக் காட்டவும்,
“அடிப்பாவி” என்று சங்கரி அதிர்ச்சியில் நின்றுவிட்டார். தன் கையிலிருந்த கத்தியைத் தூர எரிந்தவள் அதன் பின் அவரை நேராகப் பார்த்து,
“அப்படி ஒன்னும் உங்க மானம் மரியாதை எல்லாம் விட்டுட்டு என்னை நீங்க ஏத்துக்கணும்னு அவசியம் இல்லை... நானும் அப்படி மானங்கெட்டுப் போய் இங்க வாழவும் விரும்பல” என்று அடாவடியாக உரைத்தவள், விறுவிறுவென அறைக்குச் சென்று தன் பெட்டியை எடுத்துத் துணிகளை உள்ளே எடுத்து வைத்தாள்.
அடுக்கும் போது அவளுக்குப் பத்து நாட்கள் முன்பு கிருபா காரில் பேசியது நினைவுக்கு வந்தது. அன்று அவளால் தாங்க முடியாவிட்டாலும் திருமணமான முதல் நாளிலேயே சண்டையும் சச்சரவுமாக அவர்கள் உறவை ஆரம்பிக்க வேண்டாமென்று பொறுத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு அவ்விதமாக அவனும் பேசவில்லை. அதுவும் அவர்கள் தேன்நிலவில் அன்யோன்யமாகவும் அன்பாகவும் அவன் நடந்து கொண்ட விதத்தில் அந்த விஷயத்தை அவள் மறந்தும் போய்விட்டாள்.
ஆனால் மீண்டும் மீண்டும் இது போன்ற வார்த்தைகளை அவள் சகித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது. அப்படி ஒன்றும் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து இப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்று அவசியமில்லை என்று எண்ணியபடி அவள் பெட்டியில் துணிகளை அடுக்கி முடிக்கும் போது கிருபா வந்திருந்தான்.
“என்ன பிரச்சனை?” என்றவன் நிதானமாகக் கேட்க,
“இனிமே ஒரு நிமிஷம் கூட நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்... நான் போறேன்” என்றவள் பெட்டியைத் தூக்க,
“என்ன நீ பாட்டுக்குப் போறன்னு சொன்னா என்ன அர்த்தம்... முதல பிரச்சனை என்னன்னு சொல்லு” என்றவன் அவளைத் தடுத்து நிறுத்திக் கேட்கவும் அவள் அவன் அம்மா பேசியவற்றை எல்லாம் தெரிவித்தாள்.
அவற்றை எல்லாம் அவன் அமைதியாகக் கேட்டிருக்க, “முதல நீங்க அந்த பேனர் விஷயத்துல இதே போல என்னைக் குத்திக் காட்டிப் பேசுனீங்க... இப்போ உங்க அம்மா பேசுறாங்க... என்னால முடியாது கிருபா... இந்த மாதிரி பேச்சை எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டுட்டு அதை எல்லாம் சகிச்சிக்கிட்டு என்னால இங்க இருக்க முடியாது... நான் போகத்தான் போறேன்... ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்” என்று தீர்மானமாகச் சொல்ல,
“சரி இருக்க வேண்டாம்... நானும் உன் கூட வர்றேன்... நம்ம இரண்டு பேரும் சேர்ந்தே போயிடுவோம்” என்றவன் அமைதியாக இன்னொரு பெட்டியை எடுத்துத் தன் துணிகளை அடுக்க ஆரம்பிக்க, அவள் அதிர்ச்சியில் நின்றாள்.
கிருபா இப்படியொரு முடிவை எடுப்பான் என்று அவள் யோசிக்கவில்லை. அந்த முடிவு ஏனோ அவளுக்குச் சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது.
அதுவும் அவன் இந்த வீட்டின் ஒரே வாரிசு. திட்டமிட்டு அவனை அவள் பிரித்து அழைத்துச் சென்றுவிட்டதாக அல்லவா இப்போது எல்லோரும் அவளைக் குற்றம் சாட்டுவார்கள்.
கிருபா வேக வேகமாகத் தன் பெட்டியை அடுக்கி முடித்துவிட்டு, “வா போலாம்” என்று இரண்டு பெட்டிகளையும் தூக்கிக் கொள்ள,
“கிருபா” என்று தயக்கத்துடன் நின்றாள்.
“என்ன நிற்குற... நீதானே இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்னு சொன்ன” என்று கேட்கவும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவள் குழப்பத்துடன் நின்றிருக்க அவனோ, “உன் சார்ஜர் லேப்டாப் எல்லாம் எடுத்துக்கோ... கிளம்பலாம்” என, அவள் அதே குழப்பத்துடன் ஒரு தோள் பையை எடுத்து முக்கியமானப் பொருட்களை அதில் நிரப்பி மாட்டிக் கொண்டபடி கீழே இறங்க,
முகப்பறையில் சங்கரி கணவனிடம் அழுது முறையிட்டுக் கொண்டிருந்தார். அதேநேரம் கிருபா பெட்டியுடன் இறங்குவதைப் பார்த்து அதிர்ந்த சண்முகம், “என்னடா பெட்டியோட வர?” என்று கேட்க,
“அம்மாவும் தீபாவும் ஒரே இடத்துல இருந்தா இனிமே சரியா வராதுபா... நாங்க தனியா போய்டுறோம்” என்றான்.
“தனியா போறியா? என்னடா பேச்சு இதெல்லாம்?”
“வேற என்ன... எல்லாம உங்க தங்கச்சி மவ ஏத்திவிடுறதுதான்” என்று சங்கரி அவளை முறைத்தார்.
“என்ன தீபா இதெல்லாம்?” என்று சண்முகமும் அவள் மீது பாய,
“நாங்க தனியா போறதுன்னு முடிவு பண்ணிட்டோம்பா... விட்டுடுங்க” என்று கிருபா முடிவாகச் சொல்ல, தீபா அமைதியாக நின்றாள். அவளுக்கு உண்மையில் என்ன பேசுவதென்று புரியவில்லை.
சண்முகம் அதிருப்தியான பார்வையுடன் இருவரையும் பார்த்த போதும் அவர்களைத் தடுக்கவில்லை. கிருபா பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல பின்னே சென்ற தீபாவை சங்கரி தாறுமாறாகத் திட்டத் தொடங்கினார்.
“வெள்ளிகிழமை அதுவுமா வீட்டு வாசப்படி தாண்டிப் போறியே... நீயெல்லாம் நல்ல பொம்பளையாடி...”
”அதானே நீ நல்ல பொம்பளையா அடக்க ஒடுக்கமா இருந்திருந்தானே உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்... ஓடுகாலிதானே நீயி”
அந்தத் தெருவைத் தாண்டி அவர் கார் வந்துவிட்ட போதும் தீபாவின் காதில் சங்கரியின் வசவு சொற்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் செல்பேசியில் அவளின் அம்மாவின் அழைப்பு வர, அதனை அவள் எடுக்கவில்லை. நிச்சயமாக விஷயம் அவர் காதிற்கும் போயிருக்கும். அவரும் தன் அண்ணன் அண்ணி பக்கம்தான் பேசுவார்.
அவளுக்கு இப்போது தான் செய்தது சரியா தவறா என்று குழப்பம் வந்துவிட்டது. கிருபா போகலாம் என்று சொன்ன போது தான் அவனைத் தடுத்திருக்க வேண்டுமோ? எந்த யோசனையும் இல்லாமல் இப்படி அவனுடன் வந்துவிட்டது சரியா?
இப்படி குழப்பமும் கவலையுமாக அவள் வர, அவனோ எந்தவிதப் பதட்டமும் குழப்பமும் இன்றி காரை ஓட்டிக் கொண்டு வந்து அவர்கள் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுத்திவிட்டு, “இறங்கு தீபா”
“இங்கயா?” என்றவள் அந்த இடத்தைச் சுற்றும் முற்றும் பார்க்க,
“ஆமா... இங்கேதான்... இப்போதைக்கு இங்கே இருப்போம்... நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசி வீடு அரேஞ் பண்றேன்” என்று சொல்லியபடி பூட்டைத் திறந்து அவளை உள்ளே அழைத்தான்.
ஒற்றைக் கட்டிடமாக இருந்த அந்த அலுவலகத்திற்குள் தயக்கத்துடன் நுழைந்தவள், “கிருபா நாம பண்ணது சரி இல்ல” என்றாள்.
“என்ன சரி இல்ல?”
“நாம தனியா போறதுன்னு முடிவு பண்ணிட்டா அதை மாமா மாமிகிட்ட பொறுமையா பேசி புரிய வைச்சிட்டு... வீடு பார்த்து அப்புறமா கிளம்பி வந்திருக்கணும்” என்றவள் சொல்ல,
“நீதானடி ஒரு நிமிஷம் கூட அந்த வீட்டுல இருக்க முடியாதுன்னு குதிச்ச” என்றவன் பழியை அவள் மீதே தூக்கிப் போட்டான்.
“ஆமா... அப்போ இருந்த கடுப்புக்கு எனக்குப் போகணும்னு இருந்துச்சு... ஆனா அப்போ கூட தனிகுடித்தனம் வரணும்னு எல்லாம் நான் யோசிக்கல”
“சரி இப்போ கிளம்பி வந்துட்டோம்... என்ன பண்ணலாம்குற?” என்றவன் கடுப்புடன் கேட்க அவனின் அந்தக் கேள்விக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.
அங்கிருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்து கொண்டவள், “ப்ச்... இப்போ உங்க குடும்பத்தைப் பிரிச்சிட்டேன்னு ஊருக்குள்ள எல்லோரும் கன்னாபின்னான்னு என்னைப் பேசப் போறாங்க” என்று கவலையுடன் புலம்ப,
“பேசிட்டுப் போட்டும் விடு... ஓடிப் போனவன்னு பேசுறத விடவா இது பெரிசு” என்று அவன் தூசியைத் தட்டுவது போல அலட்சியமாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட, அவளுக்கு இப்போது அதிர்ச்சியும் வரவில்லை. கோபமும் வரவில்லை.
ஒரு முறை இரண்டு முறை அடிக்கும் போதுதான் வலிக்கும். திரும்பத் திரும்ப அடிக்கும் போது அந்த இடத்தில் வலியே தெரியாமல் மறத்துப் போய்விடும். அவளுக்கும் அப்போது அப்படிதான் இருந்தது.
உணர்ச்சிகள் மறுத்துவிட்டது போல.
16

Quote from Marli malkhan on March 22, 2025, 7:59 AMSuper ma
Super ma