மோனிஷா நாவல்கள்
Konjam vanjam kondenadi - 17
Quote from monisha on October 31, 2020, 10:05 PM17
தாய விளையாட்டு
ஷிவானி சொன்னதைக் கேட்டு ராகினி உட்பட மற்ற மூவரும் கூடக் கொஞ்சம் கதிகலங்கினர். இவள் ஏதாவது விவகாரமாய் கேட்டு வைத்தால் என்ன செய்வது? ஐஸ்ஸும் ராகினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஐஸ் முன்வந்து, "என்ன கேட்க போறீங்க?" என்று ஷிவானியை சந்தேகித்துக் கேட்க, "முதல்ல நம்ம விளையாடுவோமே... ஜெய்ச்சா சொல்றேன்" என்றதும் எல்லோரும் ஆழ்ந்த பார்வையோடு யோசித்துவிட்டு விளையாட்டை ஆரம்பிக்க, ராகினி முதலில் தாயக்கட்டை ஆட்டத்தைத் தொடங்கி வைத்தாள்.
ஆரம்பமே அவளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க தாயத்தைப் போட்டு அவள் வரிசையாகக் காய்களை வெளிக் கொணர, அத்தகைய அதிர்ஷ்டம் ஷிவானிக்கு இல்லையே!
ஒரே ஒரு தாயம் கூட விழமாட்டேன் என அந்த தாயக்கட்டை அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்க,
'ஷிவானி... உனக்கு டைமே சரியில்ல... நானும் ரவுடிதான்னு இதுல சவால் வேற... தேவையா உனக்கு இதெல்லாம்' என்று மனதிற்குள் அவளை அவளே கலாய்த்துக் கொண்டாள்.
"இப்படி விளையாடினா நம்ம நாளைக்குக் கூட இந்த ஆட்டத்தை முடிக்க முடியாது போலவே" என்று ஐஸ் கிண்டலாய் சொல்ல,
"வெளியே வந்தா வெட்டிடுவோமோன்னு அக்கா பயப்படறாங்க போல" என்று எள்ளிநகைத்தாள் ராகினி.
இவர்களின் எள்ளலான பேச்சுக்களைத் தான் ஏன் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவள் ஈகோ தலைத்தூக்க அவள் எழுந்து போய்விடலாமா என்று யோசிக்க, அப்போது பார்த்து தாயம் விழுந்துத் தொலைத்தது.
அதற்கு பிறகாவது அதிர்ஷ்டம் அவளுக்குக் கை கொடுக்குமா என்று பார்த்தால் அதுதான் இல்லை. அதற்குள் ராகினி எல்லா மலைகளையும் தன் வசமாக்கி கொண்டிருக்க, ஷிவானியின் காய்கள் நாலெட்டு நகர்ந்து வருவதே பெரும் பாடாயிருந்தது.
அப்படியே அவள் சிரமப்பட்டு முன்னேறினாலும் ராகினி அதை மேலே போகவிடாமல் வெட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள். இதுவே சுழற்சியாய் நடந்து கொண்டிருக்க ஷிவானியின் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு உள்ளே போய்விட, ராகினி காய்கள் எல்லாம் பழத்தை நோக்கி முன்னேறிவிட்டன.
ஐஸ் அலுத்து போய், "இதுக்கு மேல விளையாடணுமா... அதான் பார்த்தாலே ரிஸல்ட் தெரிஞ்சு போச்சே" என்க,
ராகினி முன்வந்து, "அப்போ பேக்கிங் பண்ணிட வேண்டியதுதான்" என்றாள். தன் கரத்திலேயே ப்ளைட்டை ஓட்டி விசலடிக்க,
ஷிவானி எழுந்து போய்விடலாம் என்று எண்ணும் போது, "உட்காருவே" என்று மிரட்டலாய் ஒலித்தது வள்ளியம்மையின் கணீர் குரல்.
"ஆட்டம் முடியறதுக்கு முன்னாடி எழுந்துரிக்கிறது என்ன பழக்கம்லே?" என்று மேலும் ஷிவானியை அதட்டினார் வள்ளியம்மை.
"ஆட்டம் முடிஞ்சு போச்சு அம்மாட்சி... அக்காவோட காயெல்லாம் உள்ளே இருக்கு... என் காயெல்லாம் பழத்தை நெருங்கிடுச்சு... இதுக்கப்புறம் எல்லாம் வெளியே வந்து சான்ஸே இல்ல... எதுக்கு தேவையில்லாம நேரத்தை வீணடிச்சிக்கிட்டு" என்று ராகினி சொல்லிக் கொண்டிருக்கும் போது வள்ளியம்மை கொம்பை ஊன்றிக் கொண்டு ஷிவானி அருகில் அமர்ந்து,
"எல்லா காயும் பழத்துக்கு போனாதாம்ல ஆட்டம் ஜெயிச்சதா கணக்கு... யாரலே ஏமாத்தப் பார்க்குதே" என்றவர் தாயக்கட்டையை ஷிவானியிடம் கொடுத்தார்.
"ஆட்டம் முடியற வரைக்கும் அங்கிட்டு இங்கிட்டு அசையக் கூடாது... சொல்லிப்புட்டேன்" என்று சொல்ல ஷிவானி விருப்பமேயில்லாமல் ஆட்டத்தைத் தொடர ஆரம்பித்தாள்.
ராகினிக்கு வெறுப்பாய் இருந்தது. இதற்கிடையில் வள்ளியம்மையிடம் இருந்து ஷிவானிக்கு நிறைய கொட்டு இடியெல்லாம் விழுந்தது.
"இப்படியால தாயக்கட்டையை உருட்டுவாங்க... தரைக்கும் வலிக்காம உனக்கும் வலிக்காம... நல்லா உருட்டி போடுல... நீ நினைச்ச தொகையை தாயத்தை உருட்டிக் கேளுவ" என்க,
"அப்படி கேட்டா விழுந்திருமா?" என்று சந்தேகமாய் வினவினாள் ஷிவானி.
"கேட்டாத்தான் விழும்... நீ கேளு"
"அக்காவுக்கு ராசியே இல்ல அம்மாட்சி... அவங்க நினைச்சது ஒண்ணும் விழமாட்டேங்குது" என்று ஐஸ் சொல்ல வள்ளியம்மைக்கு கோபம் மூண்டது.
"மூடுவே வாயை... சிவானி சாதகத்தைப் பத்தி உனக்கு என்னல தெரியும்... அவ பிறக்கும் போதே ராசிக்காரி... எல்லோரும் தலை வழியாதான் பிறப்பாங்க... அவ கால் வழியா பிறந்த குழந்தை... எந்த ஒரு விஷயத்தை நினைச்சாலும் அது அவளுக்குத் தானாவே நடக்கும்... நீ விளையாடு தாயி" என்க,
ராகினி நமட்டுச் சிரிப்போடு, "அம்மாட்சி சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்... நீங்க போடுங்க க்கா" என்றாள்.
அதற்கு பிறகாய் அவர்கள் ஆட்டத்தைத் தொடர மெல்ல மெல்ல அவர்கள் அறியாமல் ஆட்டம் தலைக்குப்புற மாறியது.
ஐஸ் ராகினியின் காதோரம், "அம்மாட்சி வந்து உட்கார்ந்ததில இருந்து அக்காவுக்கு ஒரே தொகை தொகையா விழுது... இப்படியே போனா அவ்வளவுதான்... உன்னை நம்பினதுக்கு எங்க எல்லோரையும் அந்த மலேசியாகாரகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வைச்சிருவ போல" என்று அவள் காதைக் கடிக்க,
"சும்மா இரு ஐஸ்... அதெல்லாம் நடக்காது... நம்ம காயெல்லாம் ஆல்ரெடி உள்ளே போயிடுச்சு... இன்னும் இரண்டுதான் பாக்கி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வள்ளியம்மை ஷிவானியைப் பார்த்து,
"அந்தக் காயை வெட்டுல... அவ முட்டி மோதி வெளியே வர்றதுக்குள்ள நம்ம காயெல்லாம் உள்ளர பழத்தில சேர்த்துப்பிடலாம்"
"அம்மாட்சி... இதெல்லாம் ரொம்ப டூ மச்... அந்த காய் கிட்டதட்ட உள்ளே போயிடுச்சு" என்று பதறினாள் ராகினி.
"அதனால்தாம்ல வெட்ட சொல்றேன்... பழக்காய்தான் ரொம்ப ருசியா இருக்கும்... நீ வெட்டு ஷிவானி"
"பாவம் அம்மாட்சி... இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து" என்று ஷிவானி சொல்ல,
"சரியான கோட்டிக்கார பிள்ளையா இருக்க... இப்படியிருந்தா உன்னை எல்லோரும் ஏறி மிதிச்சிட்டு போயிடுவாக... ஆட்டம்னா விட்டுக் கொடுக்காம விளையாடணும்" என்று வள்ளியம்மை உரைக்க,
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போர்களத்தில் போதித்த கீதாஉபதேசம் போலதான் இருந்தது அந்த காட்சி.
இறுதியாய் ஆட்டம் முடியும் தருவாயில் பழத்தை அடைய ஷிவானியின் ஒரு காய் தாயத்தின் வீட்டில் நிற்க ராகினியின் காய் இரண்டாம் வீட்டில் நின்றது.
"தாயத்துக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் அம்மாட்சி" என்று ஷிவானி நம்பிக்கையை விட,
"நீ நம்ம கருங்குளத்து அய்யனாரை நினைச்சு தாயக்கட்டையை உருட்டுல... தாயம் கண்டிப்பா விழும்"
"யாரு அம்மாட்சி அது?"
"நம்ம வாழ வைக்கிற குலசாமி... நீ அவரை மனசில நினைச்சு எது நினைக்கிறியோ அது அப்படியே நடக்கும்"
"ஸீர்யஸாவா?"
"ஆமா... நீ உருட்டுலே!" என்றவர் அவளுக்கு அழுத்தம் கொடுக்க,
"ஒகே" என்று தாயக்கட்டை எடுத்து கண்ணை மூடியவள் மீண்டும் சந்தேகமாய் கண்திறந்து, "என்ன பேர் சொன்னீங்க அம்மாட்சி?" என்று கேட்க, "கருங்குளத்து அய்யனார்" என்றார்.
ராகினி அவர் தங்கைகள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, ஷிவானி அவர்களுக்கு ஒரு வேடிக்கை பொருளாகதான் தெரிந்தாள்.
ஷிவானி அவற்றை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வள்ளியம்மை சொன்ன வார்த்தையை பின்பற்றி தாயத்தை உருட்ட அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவள் வேண்டிய கருங்குளத்து ஐயனாரின் அருளாலோ... எப்படியோ... தாயம் விழுந்துவிட்டது.
இதனைப் பார்த்த ராகினியும் ஐஸ்ஸும் அதிர்ச்சியில் தங்களின் விழிகளை அகலவிரித்திட,
ஷிவானி சந்தோஷமாய் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆரவாரித்தாள்.
"யூ ஆர் கிரேட் அம்மாட்சி... இட்ஸ் ஹேப்பன்ட் லைக் அ மிராக்கில்" என்று சொல்லி அவருக்கு பாராட்டுரையைவாசிக்க,
வள்ளியம்மை ஷிவானியின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு மெல்ல எழுந்து சென்றுவிட்டார். பின்னர் ஷிவானி தன் பார்வையை ராகினியின் புறம் திருப்ப,
அவர்களின் முகமெல்லாம் தோல்வியை தழுவிய வருத்தத்தில் வாட்டமுற்றிருந்தது.
"ஏன் இவ்வளவு சோகம்?... இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... விடுங்க" என்றவள் ஆறுதலுரைக்க அதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை.
எல்லோரும் ஒன்றாய் எழுந்து சென்றுவிட... ஷிவானியை இப்போது வருத்தம் சூழ்ந்து கொண்டது. அவர்கள் பின்னோடு எழுந்து சென்றவள் கொல்லைப் புறவாசில் அவர்கள் நிற்பதைப் பார்த்து,
"என்ன எல்லாரும் டீல மறந்துட்டீங்களா?" என்க, ஐஸ் கோபமாய் ராகினியை முறைத்தாள்.
"என்னை ஏன்டி முறைக்கிற? அவங்க விளையாடினது போங்காட்டம்"
"அதெப்படி போங்காட்டம்... நான் நேர்மையாதான் விளையாடினேன்" என்று ஷிவானி கோபம் கொள்ள,
"நம்ம தனித்தனியா விளையாடறதாதானே பேச்சு... நீங்க எதுக்கு அம்மாட்சியை கூட சேர்த்துக்கிட்டீங்க"
"நான் எங்க சேர்த்துக்கிட்டேன்... அவங்கதான் வந்தாங்க... ஆனா அப்ப கூட அவங்க விளையாடலயே... நான்தானே விளையாடினேன்" என்று விளக்கினாள் ஷிவானி.
"அவங்க சொல்லிக் கொடுத்துதானே நீங்க விளையாடினீங்க"
"எனக்கு தெரியாத விஷயத்தை அம்மாட்சி சொன்னாங்க... மத்தபடி தாய்பாஸ் உருட்டினதெல்லாம் நான்தானே... அன் நீங்கெல்லாம் ஒரு குரூப்பா இருந்த போது... எனக்கு அம்மாட்சி சப்போர்ட் பண்ணதுல என்ன தப்பு?" என்றவள் கேட்க, ராகினி அதற்கு எப்படி பதிலுரைப்பதென்று தெரியாமல் யோசனையாய் நின்றாள்.
ஷிவானியே மேலும், "எனக்கு உங்க எல்லோர்கிட்டயும் ஒரே ஒரு டிமென்ட்தான்... நீங்க எல்லோரும் என்கிட்ட சகஜமா பழகணும்... அவ்வளவுதான்" என்க, அவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டனர்.
விஷாலினி ராகினியின் காதோடு, "அக்கா ரொம்ப நல்லவங்க போல" என்று சொல்ல ராகினி அவளை பேசவிடாமல் முறைப்பாய் பார்த்துவிட்டு ஐஸ் புறம் திரும்ப, "நம்பாத ராகினி... பசப்புறாக" என்றாள் அவள்.
"என்கிட்ட பேசிறதில உங்க எல்லோருக்கும் என்னதான் பிரச்சனை?" என்று ஷிவானி இயல்பான புன்னகையோடு கேட்க ஐஸ் முகத்தை சுளித்துக் கொண்டாள்.
ராகினி எரிச்சலான பார்வையோடு, "உங்களாலதான் மாமா எங்ககிட்ட எல்லாம் கோபப்பட்டாரு... ஐஸ்ஸை அடிக்கவே அடிச்சிட்டாரு" என்று சொல்ல ஷிவானியின் புருவங்கள் சுருங்கின.
"என்னாலயா?" அதிர்ச்சியாய் அவள் கேட்க,
"தெரியாத மாதிரி அப்படியே நடிக்கிறீங்க" ராகினி பார்வை அவளைக் கோபமாய் தாக்கியது.
"சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல... அதுவும் மாம்ஸ் அடிச்சதைப் பத்தி எனக்கு தெரியவே தெரியாது"
"அதென்ன மாம்ஸ்? நீங்க மட்டும் ஸ்பெஷலா கூப்பிடறீங்க?" ராகினி கோபமாய் பொறும, ஐஸ் இடைபுகுந்து
"ஸ்பெஷல் மட்டுமில்ல ராகினி... நம்மள விட ரொம்ப உரிமையும் எடுத்துக்கிறாங்க... தனியா மாமாவை மெஸ்ல போய் பார்த்து வேற இருக்காங்க" என்றாள்.
இதனைக் கேட்ட ஷிவானி தன் பொறுமையிழந்தவளாய், "கொஞ்சம் நான்ஸென்ஸ் மாதிரி பேசிறதை நிறுத்தறீங்களா? உங்க எல்லோருக்கும் அவர் மாமான்னா எனக்கும் அவர் மாமாதானே... அந்த உரிமையில அவர்கிட்ட பேசினேன் பழகினேன்... வாட்ஸ் ராங் இன் இட்... அன் அதைத் தாண்டி எனக்கும் அவருக்கும் இடையில வேற ஒரு மண்ணுமில்ல... புரிஞ்சுக்கோங்க" என்று ஆவேசமாய் தன்னிலையை விளக்கினாள்.
"அப்போ மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்க மனசுல எந்த ஆசையும் இல்லயா?" ராகினி ஆவல் பொங்க கேட்க
"அய்யோ... எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் இல்ல" என்று ஷிவானி கடுப்பானாள்.
அப்போது அந்த நால்வரும் ரகசியமாய் பேசிக் கொள்ள ஷிவானிக்கு எரிச்சலானது. இதற்கு மேல் இவர்களிடத்தில் எதையும் புரிய வைக்க முடியாதென்று எண்ணி அவள் செல்ல பார்க்க, "அக்கா ஒரு நிமிஷம்" என்று ராகினி அழைத்தாள்.
ஷிவானி அவர்கள் புறம் திரும்ப, "ஒகே நாங்கெல்லாம் உங்ககிட்ட பேசுறோம்" என்று ராகினி சொல்ல, ஷிவானியின் முகம் மலர்ந்தது.
"ஆனா ஒரு கன்டிஷன்" என்று ராகினி மேலும் இழுக்க,
"இன்னும் என்ன?" என்று ஷிவானி சலித்துக் கொண்டாள்.
"எங்களுக்கு பிராமிஸ் பண்ணுங்க... நீங்க எந்த காரணத்தைக் கொண்டும் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு"
ஷிவானிக்கு இவர்களின் இந்த செய்கையை பார்த்து எந்த மாதிரி உணர்வை வெளிப்படுத்துவதென்றே புரியவில்லை. ஒருபக்கம் சிரிப்பும் வந்தது. இன்னொரு பக்கம் அவர்கள் நம்பிக்கையின்மையை எண்ணி கோபமும் வந்தது.
"இப்ப நான் பிராமிஸ் பண்ணாதான் நீங்க எல்லோரும் என்கிட்ட பேசுவீங்களா?" என்றவள் கேட்டு அவர்கள் எல்லோரையும் ஆழமாய் பார்க்க
"ஆமாம்" என்று அவர்களிடத்தில் கோரஸாக பதில்வந்தது.
"ஒகே பண்றேன்" என்று சொல்லி சம்மதித்தாலும் உள்ளூர அவள் மனம் செய்யாதே என்று தடை செய்தது. அந்த எண்ணத்தை இரண்டாம் பட்சமாய் ஒதுக்கி வைத்தவள் அவள் கரத்தை நீட்டி சத்தியம் செய்ய யத்தனிக்க,
"எல்லோரும் மொத்தமா இங்க என்னடி பண்ணுதீக?" என்று குருவின் குரல் ஓலிக்க ஷிவானி திரும்பிப் பார்த்தாள்.
"அய்யோ மாமா... சிக்கினா காலிதான்" என்று ஐஸ்... ராகினி காதைக் கடிக்க,
"எப்படிறி கரெக்ட்டா என்ட்ரி கொடுத்தாரு" என்று ராகினி ஐஸ்ஸின் காதில் கிசுகிசுத்தாள்.
ஷிவானி குருவைப் பார்த்த நொடி பார்வையாலயே வெறுப்பை உமிழ, அவள் பார்வையை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற எல்லோரையும் குரு பார்க்க, "சும்மா பேசிட்டிருந்தோம் மாமா" என்றாள் ராகினி.
அவளை நம்பாமல் ஏற இறங்கப் பார்த்தவன் ஐஸ்ஸை பார்த்து, "நீங்க இரண்டு பேரும் தனித்தனியா இருந்தாலே நாடு தாங்காது... இதுல ஒண்ணா வேற சேர்ந்துட்டீங்களா?!" என்று கேட்டவன்,
"சரி சரி உள்ள போங்க... ஆச்சிக்கிட்ட இனிப்பு தின்பண்டம் கொடுத்திருக்கேன்... போய் சாப்பிடுங்க" என்று சொல்ல எல்லோரும் வரிசைக் கட்டி போக ரோஹினி இடையில் நின்று, "எனக்குப் பிடிச்சது வாங்கிட்டு வந்தீங்களா?" என்று அதிகாரமாய் கேட்க,
"அதெப்படிறி மாமா உன்னை மறப்பேன்... எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றுரைக்க, அவளும் குதூகலமாய், "ஆச்சி" என்றழைத்துக் கொண்டே சென்றுவிட்டாள்.
இந்த காட்சி அரங்கேறிக் கொண்டிருந்த சமயம் ஷிவானி குருவைப் பார்க்க விரும்பாமல் அவனைத் தவிர்த்துவிட்டு செல்லப் பார்க்க அவன் அவளை போகவிடாமல் மறித்துக் கொண்டிருந்ததை யாரும் கூர்ந்து கவனிக்கவில்லை.
ஷிவானிக்கு உண்மையிலேயே புரியவில்லை. தெரிந்துதான் செய்கிறானா அல்லது தெரியாமல்தான் செய்கிறானா என்று எண்ணியவள்
அவனிடமிருந்து தப்பிக்க அவளும் அவர்கள் சென்ற திசையில் செல்ல யத்தனித்தாள். ஆனால் குருவின் கரம் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி நிறுத்தியதோடல்லாமல், அவளைத் தரதரவென்று பின்புற வாசலைத் தாண்டி இழுத்து வர அவள் மிரண்டு போய், "கையை விடுங்க" என்று சத்தம் போட்டாள்.
அவளை சுவற்றில் தள்ளி வாயை பொத்தியவன், "யாரைக் கேட்டுடி சத்தியம் பண்ண போனே?" என்று கோபமாய் வினவ, அப்போதுதான் அவன் தங்கள் சம்பாஷணைகள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுதான் வந்து சேர்ந்தான் என்று புரிந்தது.
"அவளுகதான் கூறுகெட்டத்தனமா சத்தியம் கேட்கிறாளுகன்னா உனக்கு எங்கலே போச்சு புத்தி" என்றவன் மீண்டும் அழுத்தமாய் கேட்க, அவள் இதயம் படக் படக்கென துடிக்க ஆரம்பித்தது.
அந்த நொடி அவள் இதழ்களை அவன் கரம் மூடியிருக்க அவள் பய உணர்வை அவள் விழிகள் அப்பட்டமாய் உரைத்து கொண்டிருந்தன.
சட்டென்று அவள் உதட்டிலிருந்த தன் கரத்தை எடுத்தவன், "விளையாட்டுத்தனமா கூட இந்த மாதிரியெல்லாம் சத்தியம் பண்ணாதீத... சொல்லிப்புட்டேன்" என்றவன் இறங்கிய தொனியில் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட,
"மாம்ஸ் நில்லுங்க" என்று அழைத்து அவனை தடைப்படுத்தினாள் ஷிவானி.
அவன் திரும்பி அவளை நோக்க ஷிவானி இறுக்கமான பார்வையோடு நின்று கொண்டு, "காலையில ஏன் என்கிட்ட நீங்க அப்படி நடந்துக்கிட்டீங்க... உங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க... எங்க அப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது" என்றவள் பொறிந்து தள்ள,
குரு இடைமறித்து, "தெரிஞ்சுதுன்னா?!" என்று கேட்டு அசராத பார்வையோடு அவளைப் பார்த்தான்.
17

Quote from Marli malkhan on May 9, 2024, 4:52 PMSuper ma
Super ma