மோனிஷா நாவல்கள்
Konjam vanjam kondenadi - 23
Quote from monisha on October 31, 2020, 10:16 PM23
வாக்கு
தந்தையை காணாமல் தேடிக் கொண்டிருந்த ஷிவானியின் மனமும் முகமும் கலக்கமுற்றது. அதோடு சிறுபிள்ளை போல அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட அதனைத் தன் கைகுட்டையால் விடாமல் துடைத்துக் கொண்டே இருந்தாள் அவள்
"என்னாச்சு ஷிவானி... புகை பட்டு ரொம்ப கண் எரியுதோ?!" என்று குரு வினவ, "உம்ஹும்" என்றாள் விசும்பலோடு!
"அப்புறம் என்னல?!"
"டேடை காணோம்" என்றவள் சொன்ன நொடி அவனுக்கு கடுப்பானது.
"அவுக என்ன குழந்தையா? காணாம போக, இங்கனதான் எங்கேயாச்சும் இருப்பாங்க... சத்த கண்ணை துடைச்சிட்டு... தேம்புறதை நிறுத்துறீகளா... பார்க்கிறவைங்கல்லாம் என்னையதான் தப்பா நினைப்பாங்க" என்றவன் அவளிடம் ரகசியமாய் சொல்ல
ஷிவானியின் தவிப்பு அடங்காவிட்டாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு விசும்பலை சிரமப்பட்டுக் குறைத்துக் கொண்டாள்.
அந்த சமயம் வேதா எப்படியோ தன் கணவனை தேடி கண்டறிந்துவிட்டார். அவர் கோவிலின் பின்புறம் தன்னந்தனியே நின்று கொண்டிருக்க,
"இங்க என்ன பண்றீங்க?" என்ற கேள்வியோடு வேதா அவர் முன்னே வந்து நிற்க சபரி சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தார். அதனைப் பிடுங்கி வீசியவர்,
"வாணிம்மாவுக்கு சிகரெட் பிடிக்க மாட்டேன்னு நீங்க செஞ்சு கொடுத்த சத்தியம் மறந்து போச்சா?"என்று கோபமாய் வினவினார் வேதா.
"ஆமா மறந்து போச்சு... இப்போ என்னங்கிற?!" கடுகடுத்த முகத்தோடு அவர் சொல்ல,
"இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சதுன்னா ரொம்ப வருத்தப்படுவா" வேதா வேதனை நிரம்பிய குரலில் உரைத்தார்.
"இனிமே அவ என்னைப் பத்தியெல்லாம் கவலைப்பட போறாளா என்ன?" மகளின் மீதான உரிமை பறி போகப் போகிறதே என்ற ஏமாற்றம் அவர் வார்த்தைகளில்!
"என்ன பேசுறோம்னு யோசிச்சுதான் பேசுறீங்களா?!" அதிர்ச்சியாய் கேட்டார் வேதா.
"இப்ப என்னடி வேணும் உனக்கு?" அவர் சத்தமிட,
"புரிஞ்சிக்கோங்க... பாத பூஜை சடங்கிருக்கு... உங்க பொண்ணு வேற உங்களைக் காணாம தேடிட்டிருக்கா... இன்னைக்குன்னு பார்த்து நீங்க அவகிட்ட உங்க கோபத்தை காட்டி அழ வைச்சிராதீங்க... உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன்... வேணா உங்க காலில் கூட விழறேன்... ப்ளீஸ் வாங்க" என்று வேதாப் கணவனிடம் தன்னால் முடிந்தளவு கெஞ்ச சபரி நெற்றியை தேய்த்துக் கொண்டு, "சரி போ வர்றேன்" என்று மனமிறங்கி மணமேடை நோக்கி நடந்தார்.
அந்த இடத்தை நெருங்க நெருங்க அவருக்குள் இருந்த கோபத்தீ விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. ஷிவானி குரு அருகில் அமர்ந்திருப்பதை பார்க்க அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
கிளியை வளர்த்து யாராவது பூனை கையில் கொடுப்பார்களா? அந்த எண்ணம்தான் அவருக்கு. தான் ஆசையாய் பொத்தி பொத்தி வளர்த்த மகளை இப்படி அனாமத்தாக தூக்கி கொடுக்குறோமே!
அவரின் மனசாட்சி அவரை நிந்தித்துக் கொண்டிருக்க அந்த திருமணத்தை நிறுத்த முடியாத இயலாமையில் அவர் மனமெல்லாம் கொதிப்படைந்திருந்தது.
அவரின் மனக்குமுறலுக்கு முழுக்க முழுக்க காரணமானவள் ஷிவானிதான். அவள்தானே இந்தத் திருமணத்தை செய்து கொண்டே தீருவேன் என பிடிவாதம் பிடித்தாள்.
இதில் விதியின் சதியும் இருந்தது. இல்லையெனில் மலேசியா விமானம் ஏறுவதற்காக விமான நிலையம் வரைக்கும் போய்விட்டு அவர்கள் போகமுடியாமல் திருநெல்வேலிக்கே மீண்டும் திரும்புவார்களா?
நன்றாக பேசி நடமாடிக் கொண்டிருந்த வள்ளியம்மையின் உடல்நிலை திடீரென்று மோசமாகுமா?!
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு சபரிக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். இப்படி ஒரு செய்தியைக் கேட்ட பின் எப்படி அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.
அதுவும் ஷிவானி ரொம்பவும் மனமுடைந்து போயிருக்க தன் கோபத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
ஷிவானி மலேசியாவிற்கு போகவே விருப்பமில்லாமல் தான் புறப்பட்டாள். அவள் புறப்படுவதாக தெரிவித்த கணத்திலிருந்து குரு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. போகும் போது கூட அவளை வழியனுப்ப வராமல் மெஸ்ஸில் வேலையிருப்பதாக சொல்லித் தவிர்த்துவிட்டான்.
அவள் மனதளவில் ரொம்பவும் வேதனையுற்றிருந்தாள். இருந்தும் அவள் எல்லோரிடமும் இயல்பாகவே விடை பெற்றுக் கொண்டு போக ஒருவர் விடாமல் எல்லோரும் கண்ணீர் வடித்தனர்.
ராகினியும் ஐஸ்சும் மட்டும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளிவிட்டு நிம்மதியடைய, ஷிவானி கடைசியாய் வள்ளியம்மையிடம் புறப்படும் தகவலைச் சொல்ல அவர் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீரில் கறைந்தார். மற்ற பேத்தி பெயரன்களை விட ஷிவானியின் மீது அவருக்கு அதீத பாசம்தான். அது ஏனோ. அவருக்குதான் தெரியும்.
'இத்தனை நாளா உன்னைப் பார்க்கதான் தாயி உசுரை பிடிச்சு வைச்சிருந்தேன்' என்றவர் சொன்ன வார்த்தை பொய்யில்லை. அதுதான் நிஜமாய் போனது கடைசியில்.
ஷிவானி வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் வள்ளியம்மை படுத்த படுக்கையாய் இருப்பதை பார்த்து உடைந்து போனாள். அவரைச் சுற்றி பேத்தி பேரன்கள் எல்லாம் சூழ்ந்திருக்க
"அம்மாட்சி... என்னாச்சு உங்களுக்கு?" என்று அழுகையோடு அவள் குரல்கொடுக்க வள்ளியம்மை விழிப்படையவில்லை.
அவளின் வெகுநேர அழைப்பும் கண்ணீரும் அவரை சுயநினைவுக்கு இழுத்துவர மெல்ல விழிகளை திறந்து பேத்தியை பார்த்த இன்ப அதிர்ச்சியில், "சிவானி" என்றவர் பூரிப்படைய,
"உங்களுக்கு ஒண்ணுமில்ல அம்மாட்சி... நீங்க சீக்கிரம் குணமாயிடுவீங்க" என்று நம்பிக்கை வார்த்தை உரைத்தாள்.
ஆனால் அவர் முகத்திலிருந்த சோர்வு அவநம்பிக்கையை மட்டுமே தேக்கி வைத்திருந்தது. வள்ளியம்மை எல்லார் மீதும் தன் பார்வையை ஓருமுறை வீசிவிட்டு குருவை அருகில் அழைக்க,
"என்ன அப்பத்தா?" என்றவன் அவர் தலையணைப் பக்கம் அமர்ந்தபடி தழுதழுத்த குரலில் வினவினான்.
"இந்தக் கிழவி உசுரை விடறதுக்கு முன்னாடி உன்னைய சிவானி கூட கல்யாண கோலத்துல பார்க்கணும்... செய்வீகளா?" என்று திக்கித்திணறி கேட்க, குரு பதிலேதும் பேசாமல் ஷிவானி முகத்தைப் பார்த்தான். அவள் அந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
அவள் மட்டுமா? அங்கிருந்த எல்லோரும்தான். ராகினியும் கனகமும் பதறிப் போக, ஐஸ்ஸிற்கும் அமிர்தத்திற்கு அதே நிலைதான். இத்தனை நாள் காத்திருந்ததெல்லாம் வீண் என்று அவர்கள் மனமுடைந்திருக்க,
சபரிக்கு பிபி ஏகபோகமாய் ஏறி தலையெல்லாம் சுற்றத் தொடங்கியிருந்தது. தன் கோபத்தைப் பிராயத்தனப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வந்தவர் தன் மனைவியின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வெளியேறினார்.
அப்போது முருகவேலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, "உனக்கு ஒண்ணு ஆகாது ஆத்தா... முதல்ல ஆஸ்பத்திரி போய் உடம்பைத் தேத்திக்கிட்டு பிறவு மத்ததெல்லாம் பேசிக்கலாம்" என்க,
"இந்த வீட்டு வாசலை தாண்டறது என் பிணமா மட்டும்தான் இருக்கும்ல" என்று வள்ளியம்மை தீர்க்கமாய் தெரிவித்தார்.
"என்ன பேச்சு பேசுதீக?" என்று குரு பதற,
"நான் பிழைக்க மாட்டேன்... என் சாவு நெருங்கிடுச்சு... கடைசி கடைசியா என் பேரன் பேத்தியை கல்யாண கோலத்துல பார்த்துப்புட்டேன்னா நான் நிம்மதியா உசுர வுட்டுபுடுவேன்... இல்லன்னா இந்தக் கட்டை வேவாது சொல்லிப்புட்டேன்" என்று தன் மகனைப் பார்த்து தடுமாற்றத்தோடு அதே நேரம் கொஞ்சம் மிரட்டலாகவும் சொன்னார்.
"ஆத்தா நீ பேசுறது நியாயமே இல்ல... குரு கல்யாணத்தை பார்க்கணும்னு சொல்லுக... இப்பவே ஏற்பாடு பண்ணுதேன்... ஆனா சிவானி புள்ளய" என்று முருகவேல் தயங்கி தன் தாயைக் கெஞ்சலாய் பார்க்க,
வள்ளியம்மை முகத்தை மெல்ல ஷிவானி புறம் திருப்பினார். அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்திருக்க, சிவானி முகவாயை எட்டிப் பிடித்தவர்,
"ஏன் தாயி... இந்த கெழவி ஆசைப்படறதை செய்ய மாட்டீகளா?" என்று விழியில் நீர்சூழ கேட்க, "அம்மாட்சி" என்று வார்த்தையெல்லாம் குரல் வளைக்குள்ளேயே நின்று கொண்டு காற்று மட்டுமே வந்தது அவளுக்கு.
"குரு உன்னைய தங்கமா பார்த்துக்கிடுவான்... நீ அவனை கட்டிக்கிடுவே" என்றவர் உரைக்க அவள் திருதிருவென விழித்தாள்.
அவர் மேலும், "கட்டிக்கிடுதேன்னு இந்த கெழுவிக்கு வாக்கு கொடுங்க" என்று தன் கரத்தை ஷிவானியிடம் நீட்ட அவளுக்குக் கண்ணீர் பெருகி ஓடியது. அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க அங்கிருந்த யாரும் குறுக்கே பேசாமல் மௌனமாய் நின்றனர்.
'இந்த கையாலதாம்ல நான் உன்னை முதல்முதல்ல தூக்கிக்கிடுதேன்' என்று வள்ளியம்மை அவள் பிறந்த தருவாயை சொன்ன நினைவு அவள் காதுகளில் ஓலிக்க, இப்போது அந்தக் கரம் அவளிடம் கேட்கும் வாக்கை எப்படி மறுக்க முடியும்.
"சரிங்க அம்மாட்சி... நான் கட்டிக்கிறேன்" என்று சொல்லி அவள் வாக்குறுதி கொடுக்க குரு அவளை ஆச்சர்யமாய் பார்த்திருந்தான். அங்கிருந்த எல்லோரும் ஷிவானியை வியப்பாய் பார்க்க, சபரி அப்போது அங்கில்லை. வள்ளியம்மை அதோடு விடவில்லை.
தன் மகன் முருகவேலை பார்த்து, "உடனே ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம ஐயனார் கோவில்ல அவுக கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுவே" என்று தன் மன எண்ணத்தை சொல்ல முருகவேல் அதிர்ந்தார்.
அவர் என்ன செய்வதென்று புரியாமல் அந்த அறையை விட்டு வெளியேற தங்கம் கணவன் பின்னோடு வந்து, "அத்தை சொல்ற மாதிரி" என்றவர் பேசும் போது இடைமறித்தவர்,
"உனக்கும் அந்த கிழவி மாதிரி கூறுகெட்டு போச்சுதாவே... எப்படில உன் மருமவன் இதுக்கு ஒத்துப்பாக" என்க,
"அது சரிதான்" என்றவர் சுற்றும் முற்றும் பார்த்து,
"வேதாவையும் அவுகளையும் இங்கன காணோமே... எங்கே அவக?" என்று கேட்டார். அவர்கள் அங்கே இல்லைதான்.
வேதாவை இழுத்துக் கொண்டு கொல்லைப்புற வாசலுக்கு போன சபரி அங்கே தன் மனைவியுடன் ஒரு உலக போரையே நடத்திவிட்டார்.
"இதுக்கும் எனக்கும் சத்தியமா சம்மந்தமில்ல ங்க" என்று கணவனிடம் இறங்கிய தொனியில் வேதா சொல்ல,
"சரி.. அப்படின்னா உடனே கிளம்பு... புறப்படுவோம்" என்று பணித்தார் சபரி.
வேதா தவிப்போடு, "எப்படிங்க? என்னை மார் மேலயும் தோள் மேலயும் தூக்கிப் போட்டு வளர்த்தவங்க... அவங்க இப்படி இருக்கும் போது" என்று சொல்ல அவர் முகம் கடுகடுவென மாறியது.
"நீ எக்கேடோ கெட்டு போ... நான் என் பொண்ணை கூட்டிட்டு புறப்படுறேன்" என்று சொன்னவர் விறுவிறுவென நடந்து வள்ளியம்மை படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த மறுகணம்,
"வாணிம்மா எழுந்திரு... புறப்படலாம்" என்றார் அதிகார தொனியில்.
"இல்ல டாடி... அ ம் மா ட் சி" என்றவள் தயங்க,
"இங்க இத்தனை பேர் இருக்காங்க... அவங்கெல்லாம் அம்மாட்சியை பார்த்துக்க மாட்டாங்களா என்ன? நீ வா போலாம்" என்றழைக்க,
"அதில்ல டேட்... நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளுங்களேன்" என்று தவிப்பாய் அவள் உரைக்க சுற்றியிருந்தவர்கள் யாரும் அப்பா மகளின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை மட்டும் பார்த்தனர்.
"இப்போ நீ வர போறியா இல்லையா?" சபரியின் குரல் கர்ஜனையாய் வெளி வர,
அவள் தலைகவிழ்ந்தபடி, "சாரி டேட்... குரு மாம்ஸை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அம்மாட்சிக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன்" என்று அழுகை தொனியில் சொல்ல சபரியின் தலையில் இடியேயிறங்கிறது. சட்டென்று தன் பார்வையை குருவின் புறம் திருப்பியவர் அவன் சட்டையைக் கொத்தாய் பிடித்து,
"இதெல்லாம் உன் வேலையா... என் பொண்ணை கட்டிக்க இப்படியெல்லாம் டிராமா பண்ணிட்டிருக்கியா?" என்று கேட்டு முறைக்க,
"டிராமா கீமானெல்லாம் சொல்ற வேலை வைச்சுக்காதீங்க" என்றவன் பதிலுக்கு முறைத்தான். அங்கே வந்த முருகவேல் சபரியைத் தள்ளி நிறுத்தி,
" எதுவாயிருந்தாலும் பொறுமையா வெளியே போய் பேசிக்கிடலாம்... இங்கன வேண்டாம்" என்க, சபரி அடிப்பட்ட சிங்கம் போல் உறுமியபடி வெளியே வர, மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து அந்த அறையை விட்டு வெளியேறினர்.
ஷிவானி மட்டும் தன்னிடத்தில் இருந்து அசையவில்லை. அவளுக்கோ தன் தந்தை குருவை அப்படி முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க பதட்டமாய் இருந்தது. என்ன நிகழ போகிறதோ என்று தவிப்பில் அவள் கிடக்க, வெளியே எல்லோரும் குழுமி நின்றனர்.
சபரி தன் குரலையுயர்த்தி, "என் பொண்ணைக் கூட்டிட்டு நான் கிளம்பணும்... உங்க யார்கிட்டயும் பேச எனக்கு எதுவுமில்லை" என்று அலட்சியமாய் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு உரைத்தார்.
முருகவேல் நிதானித்து, "இப்படி ஓட்டுதல் இல்லாம பேசுனா எப்படி? ஆத்தா படுத்த படுக்கையா ஒரு விஷயத்தை கேட்குதாக... அதை செய்ய முடியாதுன்னு எப்படி சொல்ல... நீங்க மனசு வைச்சிங்கன்னா நம்ம ஷிவானியை" என்றவர் இழுத்தபடிச் சொல்ல,
"எது... என் பொண்ணை உங்க மகனுக்கு நான் கட்டிக் கொடுக்கணுமா? நான் ஒத்துக்க மாட்டேன்... செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசமில்ல" என்றவர் மகனை தரம்தாழ்த்தி சொன்ன மறுகணமே முருகவேல் கோபமேற,
"குருவை அப்படி குறைச்சு எடைப்போட்டுடாதீக... இந்த மூணு வருசத்துல இந்த நெல்லை சீமையே மெச்சிற அளவுக்கு மெஸ்ஸை தூக்கி நிறுத்திருக்கான்... திருநெல்வேலில நடக்கிற கல்யாணத்துக்கு குரு சமையல் ஆர்டரை கேட்டு காத்துக்கிடக்காக... நீங்க வேணா வெளியே போய் விசாரிச்சி பாருங்க... நான் சொன்னது உண்மையான்னு...
ஒரு விஷயம் சொல்லுதேன்... தப்பா எடுத்துக்காதீக... நீங்க எம் மவளைக் கட்டிக்கிடும் போது உங்களுக்கு சம்பாத்யமே இல்ல... அப்போ நீங்க உங்க மாமன் தயவிலதானே இருந்தீங்க" என்றவர் சொன்ன மறுகணம் சபரி வெலவெலத்துப் போனார்.
கனலேறிய விழிகளோடு தன் மாமனாரை நோக்கியவர், "ஆமா அப்போ நான் சம்பாத்யம் இல்லாத வெட்டிப் பையன்தான்.. ஆனா இன்னைக்கு உங்க மவளையும் பேத்தியையும் எப்படி வைச்சிருக்கேன்னு கேட்டு பாருங்க" என்று கர்வத்தோடு சொல்லித் தன் மனைவியை சுட்டிக்காட்டினார்.
"நான் உங்களை குறைச்சி எல்லாம் சொல்லல மாப்பிள்ளை... எனக்குத் தெரியும்... என் மவளை நீங்க நல்லா பார்த்துக்கிடுதீங்க... அதே போல என் மவனும் சிவானியை நல்லா பார்த்துகிடுவான் " என்று முருகவேல் சபரியிடம் இறங்கிப் பேச அவரும் சற்று அமைதியானார்.
"இத பாருங்க மாமா... நீங்க உங்க பொண்ணை எனக்கு கட்டிக் கொடுத்தீங்கன்னா... அவளுக்கு என் மேல விருப்பம் இருந்துச்சு... ஆனா என் பொண்ணுக்கு அப்படி எல்லாம் எதுவுமில்ல... அவ வளர்ந்த விதம் படிச்ச விதம் வாழ்ந்த விதம் வேற... அவளால எல்லாம் உங்க பிள்ளையைக் கட்டிக்கிட்டு இங்க வாழ முடியாது. ஏதோ அவங்க அம்மாட்சிக்கு உடம்பு முடியலன்னு அவசரப்பட்டு சத்தியம் பண்ணிக் கொடுத்திட்டா... ஆனா மனசார அவளுக்கு இதுல எல்லாம் சுத்தமா விருப்பம் இருக்காது"
சபரி தெளிவாய் சொல்ல முருகவேலுக்கு இதற்கு என்ன பதிலுரைப்பதென்றே தெரியவில்லை.
அப்போது குரு தன் மௌனத்தைக் கலைத்து, "ஏன் மாமோய்? உம்ம மவ என்னைக் கட்டிக்கிட மனசார விருப்பம்னு சொல்லிட்டா... நீங்க இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறீகளா?!" என்றவன் அழுத்தமாய் கேட்க,
சபரி தடுமாற்றத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார்.
"என்ன மாமோய்? பதில் பேச மாட்டிறீக... உங்க பொண்ணு விருப்பப்பட்டா நீங்க இந்த கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்கிறீகளான்னு கேட்டேன்" மீண்டும் அழுத்தமாய் அவன் வினவ
"அவ எப்படி சம்மதிப்பா... அதெல்லாம் அவ சம்மதிக்க மாட்டா" என்றார் சபரி.
"அதை நீங்களே சொன்னா எப்படி? ஷிவானியை கூப்பிட்டுக் கேளுங்க"
சில நொடி மௌனத்திற்கு பின் சபரி தன் மகள் மீதுள்ள நம்பிக்கையில் சரியென்று சம்மதிக்க, வேதா ஷிவானியை வெளியே அழைத்துவந்தார். எல்லோரின் பார்வையும் அவளையே சூழ்ந்து நிற்க, சபரி மட்டுமே பேசினார்.
"ஏன் வாணிம்மா? உனக்கு இந்த கல்யாணத்தில மனசார விருப்பமா? குருவை பிடிச்சுதான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா... இல்ல உங்க அம்மாட்சி கேட்டாங்கன்னு சம்மதிச்சியா... உண்மையைச் சொல்லணும்" என்றவர் கேட்க ஷிவானி பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தாள்.
அவள் குழப்பமான மனநிலையில் மௌனமாக நிற்க, "உன் மனசில பட்டதை அப்படியே பேசு வாணிம்மா... யாரைப் பத்தியும் யோசிக்காத" என்று வேதா சொல்ல,
ஷிவானியின் முகம் இருளடர்ந்து போனது. அவள் தயக்கமுற சுற்றி சுற்றி பார்த்தவள் தன் தந்தையை நிமிர்ந்துப் பார்க்க துணிச்சலின்றி,
"எனக்கு குரு மாம்ஸை கட்டிக்கிறதுல விருப்பம்தான்... வெறும் அம்மாட்சிக்காக அந்த சத்தியத்தைப் பண்ணல... எனக்குமே மாம்ஸை பிடிச்சிருக்கு" என்று பளிச்சென்று தன் மனஎண்ணத்தை வெளிப்படுத்திவிட்டாள். குருவின் முகத்தில் அந்த நொடி ஓர் கர்வப்புன்னகை!
சபரியோ மகளின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிட்டார். எல்லோர் முன்னிலையிலும் அவசரப்பட்டு ஒர் வாக்குறுதியை கொடுத்துவிட்டோமோ என்று அவர் மனம் அவரையே சாடியது.
யாரைக் குறை கூறுவது? தன் மகளின் விருப்பத்திற்கு எதிராய் இதுவரை அவர் ஒரு வார்த்தை பேசியதில்லை. அவள் எதையாவது கேட்டுவிட்டால் அதற்கு மறுபரிசீலனையே கிடையாது. அப்படி இருக்க எப்படி மகளை எதிர்த்து நிற்பது.
டன் டன்னாய் உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் அதை மகளிடம் காண்பிக்கும் தைரியம்தான் அவரிடம் இல்லை. வார்த்தைகளால் அவர் அந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனினும் நடந்தேறிய ஏற்பாடுகள் எதற்கும் மறுப்புத் தெரிவிக்காமல் ஒதுங்கி நின்றார்.
வள்ளியம்மையின் உடல்நிலையை சோதித்த மருத்துவர் கூட நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை. அதன் காரணத்தினால் அந்த வாரத்திலேயே வந்த முகூர்த்த நாளில் எல்லா ஏற்பாடுகளையும் அடித்துப் பிடித்து செய்து முடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.
கனகாவும் ராகினியும் வீட்டிலிருந்து வள்ளியம்மையை பார்த்துக் கொண்ட காரணத்தால் அவர்களால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்கு கலந்து கொள்ளும் விருப்பமும் இல்லை என்பதுதான் உண்மை.
சபரிக்கு இந்த நொடி வரை அந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே பாத பூஜை சடங்கில் கலந்து கொண்டார். பாத பூஜை செய்யும் மகளை அவர் ஒரு முறை கூட குனிந்து பார்க்கவில்லை.
அப்படி ஒரேயொருமுறை குனிந்து பார்த்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும். ஷிவானி அவர் பாதத்தை கழுவியது தண்ணீரில் அல்ல. அவளின் கண்ணீரில் என்று.
எந்நிலையிலும் அவள் தந்தை மீது கொண்ட பாசத்தை அவள் விட்டுக் கொடுக்க எண்ணியதில்லை. சூழ்நிலை அவளை அப்படிப் பேச வைத்துவிட்டது.
திருமண சடங்குகள் எல்லாம் முடிவுற ஒருவழியாய் தாலிகட்டும் சம்பிரதாயமும் முடிவடைந்தது. குரு தாலி கட்டிய நொடி ஷிவானியின் மனம் தன் எதிர்காலத்தை எண்ணி அச்சம் கண்டது என்னவோ உண்மை!
இதுவரை அவள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இனி அவள் வாழப் போகும் வாழ்க்கை வேறு. ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் தவிர்க்க முடியாமல் கடந்து வரும் சூழ்நிலைதான் எனினும் ஷிவானிக்கு அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கப் போகிறது.
அதுவும் அவசரம் அவசரமென திருமணத்திற்கான எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் நிகழ்ந்ததினால் உள்ளூர அவள் மனம் ஒருவித திகிலுணர்வை பற்றிக் கொண்டிருந்தது.
இதெல்லாம் ஒரு புறமிருக்க,
'ரோம் நகரமே தீபிடித்து எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்' அந்தக் கதையாய் இருந்தது சுப்புவின் செய்கை.
அவன் மட்டும் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தான். ஐஸ்ஸின் நீண்ட நெடிய கூந்தலைப் பார்த்ததில் இருந்து அவனுக்கு உறுத்திக் கொண்டே இருக்க... யாருமில்லாத நேரமாய் பார்த்து அவள் சடையை இழுத்துவிட்டான்.
சோகமே உருவமாய் தன் மாமனின் திருமணத்தைப் பார்த்து கண்கலங்கி நின்றவள், "ஆ" என்று அலறித் துடித்து திரும்பி,
சுப்புவைப் பார்த்து எரிச்சலானாள். "முண்டம்... அறவில்ல... எதுக்கு ஏன் முடியை பிடிச்சி இழுத்த?!" என்று அவனை சராமாரியாய் திட்டினாள் ஐஸ்.
"அப்படிதான் இழுப்பேன்... நீ மட்டும் என்னைய உட்கார வைச்சு அந்த கேவலமான சாப்பாடை அள்ளி அள்ளி போட்டு என்னைய கொலையா கொல்லல" என்று அவன் கேட்ட நொடி அவள் தடுமாறினாள்.
"அது தெரியாம" ஐஸ் பதிலுரைக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட முனைய அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தியவன்,
"எங்கல ஓட பார்க்கிற... உன்னைய அம்புட்டு சீக்கிரம் விட்டுடுவேனா" என்றான்.
"அய்யோ தெரியாம பண்ணிபுட்டேன்...விட்டுடு" என்றவள் கெஞ்ச,
" என்னைய கட்டிக்கிறேன் சொல்லு... விட்டுடுறேன்"
"உன்னைய போய்... நான் கடிக்கிடவா... அதெல்லாம் இந்த சென்மத்தில நடக்காதுவே"
"அதான் உன் மாமன் அந்த மலேசியா புள்ளய கட்டிக்கிடுச்சுல... அப்புறம் என்னல... நீ இந்த மாமனைக் கட்டிக்கிடு" என்றான் சுப்பு தெளிவாக!
அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "சரி கட்டிக்கிடுதேன்... என் கையை விடு" என்றதும் அவள் கரத்தை விட்டவன் ஆசையாய் அவளைப் பார்த்து,
"நிஜமா சொல்லுறியா புள்ள?" என்று கேட்டான்.
"சத்தியமா கட்டிக்கிடுதேன்... என் மாமன் மாதிரி ஒசரமா வளர்ந்து அவகள மாதிரி மீசையெல்லாம் வைச்சுக்கிட்டு வாரூம்... கட்டிக்கிடுதேன்" என்று சொல்லி எள்ளிநகைத்தவள் ஓரே ஓட்டமாய் ஓடி அவனிடமிருந்து தப்பிக் கொள்ள சுப்புவோ ஏமாற்றத்தோடு,
'சரியான கோட்டிக்காரியா இருப்பா போல... ஓசரமா வளருன்னு சொல்லிட்டுப் போறா... இத்தனை வயசுக்கப்புறம் எங்கிட்டு வளர... இதுல மீசையை வேற வளர்த்துக்கிடணுமா... இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பேசாம நான் தாடியை வளர்த்துக்கிட்டு... சந்நியாசம் போயிடலாம்' என்று விபரீதமான சங்கல்பத்தை மனதில் எடுத்துக் கொண்டான்.
திருமணம் முடிந்து எல்லோரும் கோவிலிலிருந்து புறப்பட தயார் நிலையில் இருக்க, ஒரு பெரிய வேனும் அதோடு பெரிய காரும் புறப்பட்டது.
குரு கனகத்திடம் தன் பாட்டியின் நலன் குறித்து விசாரிக்க, ஷிவானி கவலை தோய்ந்த முகத்தோடு, "அம்மாட்சி நல்லா இருக்காங்கல்ல" என்று கேட்டாள்.
"ஏன் நல்லால்லாம... அவுக நாட்டு கட்டை... இன்னும் நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பாக... அதுவும் நமக்கு பிறக்க போற பிள்ளைகள கொஞ்சாம அம்புட்டு சீக்கிரம் போயிடுவாகளா இல்ல போகத்தான் நான் விட்டிருவேனா" என்று வீரதீரமாய் சொன்னவனை ஏறஇறங்க ஆச்சர்யமாய் பார்த்தாள்.
நேற்று வரை அப்பத்தாவின் உடல்நலம் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவன் இன்று இத்தனை நம்பிக்கையாய் பேசுகிறானா?
சந்தேகமாய் அவள் பார்வை அவன் மீது பாய,
"என்னல பார்க்குத?"
"இல்ல... இப்ப சொன்ன மாதிரி நீங்க முன்னாடி சொல்லயே... அதான் ஏன்னு"
"இப்ப என்ன உனக்கு? என் அப்பத்தா... நல்லா இருக்கக் கூடாதுங்கிறியா?!" இறுகிய பார்வையோடு அவன் கேட்க,
"சே! நான் அப்படியெல்லாம் சொல்லல" என்றாள்.
"அப்புறம் வேறெப்படி சொல்லுதீக?" என்று சொல்லி கல்மிஷமாய் சிரித்தபடி அவன் கேட்க, அந்த பார்வை அவளை நாணப்படுத்தியது.
"நான் எப்படியும் சொல்லல... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க" என்க,
"விட்டுடுவா... அதெல்லாம் விட முடியாது... இந்த குரு பிடிச்சா பிடி உடும்பு பிடியாக்கும்" என்று சொல்லி அவள் தோளை சட்டென இறுக்க அவள் அச்சப்பட்டு முகத்தை சுளித்தாள்.
"நீ நடத்துல... நல்லா நடத்து... என்ன நடந்தாலும் இவன் மட்டும் காரியத்தில கண்ணா இருக்கான்யா" என்று தயா சொல்லிக் கொண்டே வேனில் ஏறப் போக குரு அவள் மீதிருந்த தன் கரத்தை பட்டென விடுவித்துவிட்டான்.
ஷிவானி அவன் அருகில் நிற்க முடியாமல் விறுவிறுவென காரில் ஏறப் போக அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தியவன், "நம்ம வேன்ல போகலாம்" என்றான்.
ஷிவானியும் அவன் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்காமல் வேனில் ஏறப் போக,
அப்போது சபரி வேதாவிடம், "அவங்கள வந்து கார்ல ஏறச் சொல்லு" என்றார்.
வேதாவும் அவர்களை அணுகி, "நீங்க வாங்க... கார்ல போயிடலாம்" என்ற அழைக்க, "இல்ல நாங்க வேனில வரோம்" என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் அவன் பதிலுரை வழங்க,
"நம்ம கார்ல" என்று ஷிவானி சொல்லும் போதே குருவின் கரம் அவள் கரத்தை அழுத்தியது.
அவள் சட்டென்று மௌனமாகிவிட, "நாங்க வேன்ல வந்துர்றோம் க்கா.. நீங்க போங்க" என்க, அவன் வீம்புக்கென்று செய்கிறான் என்பது புரிந்தது வேதாவிற்கு.
"இல்ல கல்யாண பொண்ணும் மாப்பிள்ளையும்... நீங்க கார்ல வந்தாதான்" என்று வேதா மீண்டும் சொல்ல,
"எதுல போனா என்ன? வீடு போய் சேரணும் அம்புட்டுதானே" என்றவன் ஷிவானியைக் கண்ணசைத்து வேனில் ஏற சொன்னான். அவள் வேண்டா வெறுப்பாய் ஏற அவனும் பின்னோடு ஏறினான்.
சபரி தாங்க முடியாத கோபத்தோடு, "என்னவாம் அவனுக்கு?" என்று கேட்க வேதா மௌனமாய் நின்றார். அங்கே நடந்தவற்றையும் அவன் பேசியவற்றையும் அவரும் கேட்டுக் கொண்டு தானே இருந்தார்..
"உன் தம்பிக்கு இவ்வளவு வீம்பும் திமிரும் ஆகாது" என்றவர் புலம்பிக் கொண்டே காரில் வர, 'இவருக்கு மட்டும் கொஞ்சமா இருக்காக்கும்' என்று வாய்க்குள் முனகிக் கொண்டார் வேதா.
அதே நேரம் ஷிவானியை எல்லோரும் பின் இருக்கையில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொள்ள சொல்லிப் பணிக்க, அதன் சூட்சமம் என்னவென்று பாவம் அவளுக்குப் புரியாதே.
குரு வேண்டுமென்றே அவளை நெருக்கி அமர, "தள்ளி உட்காருங்க" என்று முகத்தை வெறுப்பாய் காட்டினாள். அவன் மீண்டும் அவளை இன்னும் இடித்து அமர அவள் கடுப்பாகி,
"அய்யோ அந்த பக்கம்" என்றாள்.
"அப்படி மாமனுக்கு புரியுற மாதிரி சொல்றது" என்று சற்று விலகியவன் அவள் முகத்தை கிறக்கமாய் பார்த்திருக்க அவள் வெளியே ஜன்னலின் வழியே பார்த்து கொண்டிருந்தாள்.
"இங்கன என் பக்கம் கொஞ்சம் திரும்பறது" என்றவன் ஏக்கமாய் கேட்க, "ஏன் கார்ல போக வேணாம்னு சொன்னீங்க?" அவன் முகம் பாராமலே வினவினாள்.
"கார்ல போனா... இம்புட்டு நெருக்கமா உம்ம பக்கத்துல உட்கார்ந்துட்டு வர முடியுமா... அக்காவும் உன் சிடுமூஞ்சி அப்பாரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாக?" என்றவன் சொன்ன மறுகணம் அவள் பட்டென முகத்தை கோபமாய் திருப்பி,
"ஹெலோ யாரு சிடுமூஞ்சி?!" என்று முறைத்தாள்.
"உன் அப்பாருதான்... வேற யாரு?" என்றவன் எகத்தாளமாய் சொல்ல,
"மைன்ட் யுவர் வார்ட்ஸ... எனக்கு டேட் பத்தி பேசுனா ரொம்ப கோபம் வரும்" என்று அவள் சொல்லி மூச்சிறைக்க முறைத்தாள்.
"நீ கோபப்பட்டாதான் புள்ள ரொம்ப அழகா இருக்க... கருப்பு திராட்சை மாதிரி உருட்டுற உன் கண்ணு.. மிளகாய் கணக்கா சிவக்கிற உன் மூக்கு... உன் ஆரெஞ்சி பழ உதடு" என்றவன் ஹஸ்கி குரலில் சொல்ல அவள் பட்டென காதை மூடிக் கொண்டாள்.
"ப்ளீஸ் மாம்ஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க" என்க, அவன் சிரித்துக் கொண்டே மௌனமானான். ஆனால் அவள் மீதான பார்வையை மட்டும் ஒரு நொடி கூட அகற்றும் எண்ணமேயில்லை.
அந்த பார்வை அவளுக்கு உள்ளூர குளிர் பரப்ப, வயிற்றின் அடி ஆழத்தில் ஏதோ உருண்டது.
காதலென்ற உணர்வுக்கே அவள் வெகு புதிது. ஆனால் அவனோ அடுத்த அடுதத படிநிலைக்கு அதிவேகமாய் முன்னேற அவளுக்குள் பதட்டமும் தவிப்பும் பரவத் தொடங்கியிருந்தது.
23

Quote from Marli malkhan on May 9, 2024, 9:56 AMSuper ma
Super ma