மோனிஷா நாவல்கள்
KPN's POOVUM NANUM VERU - 4
Quote from monisha on March 25, 2022, 1:08 PMஇதழ்-4
பட்ட காயங்களின் வலிகளை அதிவேகமாக கடக்க முயல்கிறேன்! விடாமல் என் கரம் பிடித்து துணையாக வருகிறது. வலிகள் மட்டுமே…என்னை மேலும் மேலும் வலிமையாக்கிக்கொண்டு! வலிகளை வலிமையாக மாற்றும் கலை எனக்கு வசப்பட்டதால்...பூவும் நானும் வேறுதான்!
***
வசுந்தராவை அவளுடைய வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, பின்பு அந்த பகுதியில் இருக்கும் அவனுடைய ஒரு நீட் பயிற்சி மையக் கிளைக்குச் சென்றவன், அதன் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடித்து வீடு திரும்ப, நள்ளிரவாகியிருந்தது தீபனுக்கு.
முந்தைய தினம் அவனது வாகனத்தை பின் தொடர்ந்த அந்த 'மூன்லைட் மெட்டாலிக் ப்ளூ ஆடி' அவன் சிந்தனையின் உள்ளே புகுந்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. கூடவே அந்த புரியாத புதிராக இருப்பவளின் நினைவு வேறு.
படுக்கையிலிருந்து எழ மனமின்றி சோம்பலாக, ஒரு தலையணையை அணைத்தவாறு, ஒரு தலையணையில் காலை போட்டு, ஒருக்களித்துப் படுத்திருந்தவனை, "தீபா! காரை கொஞ்சம் எடுத்து ஷெட்ல விடுப்பா; போர்டிகோவை க்ளீன் பண்ணணுமாம்; அம்மா சொல்ல சொன்னாங்க!" என்ற அவனது தந்தை அரங்கநாதனின் குரல் கலைத்தது.
அவனுடைய அன்னை அருணாவிற்கு வீட்டு வேலைகள் எல்லாமே நேரத்திற்கு நடந்தாக வேண்டும்.
என்னதான் செல்வ நிலையில் உயர்ந்து இருந்தாலும், முன்பு வாழ்ந்த நடுத்தட்டு வாழ்க்கையின் பழக்கவழக்கங்கள் அவரை விட்டு சிறிதும் நீங்கவில்லை. வீட்டு வேலை செய்பவரிடம் கூட வெகு இயல்பாகப் பழகுவார்.
அவர்களிடம் வேலை வாங்குவதைவிடக் கூட சேர்ந்து அந்த வேலைகளைப் பகிர்ந்துகொள்வர் அவர். எனவே அவன் அந்த காரை அங்கிருந்து எடுத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை.
பெற்றவர்களுக்கு என்று அவன் வாங்கியிருக்கும் காருக்கு ஓட்டுநர் ஒருவரை அமர்த்தி இருந்தான். ஆனால் அவனுடைய வாகனம் மட்டும் அவனுடைய சிந்தனையைப் போல எப்பொழுதுமே அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். எக்காரணம் கொண்டும் அதை மற்றவர்கள் கையாளுவதை விரும்ப மாட்டான் தீபன்.
இரவு, நேரம் கழித்து வந்ததால் வாகனத்தை அப்படியே நிறுத்தியிருந்தான். தந்தையின் விளிப்பில் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, காரை எடுத்து அதற்கான இடத்தில் நிறுத்தினான்.
அப்பொழுதுதான் முன் பக்க இருக்கைகளுக்கு நடுவில் சிக்கியிருந்த அந்த காகித உறை அவனது கவனத்தை கவர்ந்தது.
திலீப்புடைய குழுமத்தின் பெயர் பொறித்த அந்த உறையை அவன் கையிலெடுக்கவும், வசுந்தராதான் அதைத் தவறவிட்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
அவளுடைய அலட்சியத்தை எண்ணி மனதிற்குள் அவளைக் கடிந்துகொண்டான் தீபன்.
***
வழக்கம்போல் ராகவன் செய்தித்தாளில் மூழ்கி இருக்க, காலை பள்ளி செல்லும் பரபரப்பில், சமையல் செய்துகொண்டிருந்தாள் வசுந்தரா.
வீட்டின் வெளியே ஏதோ அரவம் கேட்கவும், அவள் வெளியில் வர, அவர்களுடைய வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் திவாகர், அமைச்சர் புஷ்பநாதனின் மூத்த மகன்.
'அடப்பாவி! இவனா?' என மனதிற்குள் எண்ணியவாறு, அவனைத் தடுக்க இயலாமல் பின்னால் நகர்ந்தவள், கோபம் எல்லையைக் கடக்க, "ஹலோ மிஸ்டர்! ஒரு பேசிக் மேனர்ஸ் கூட இல்லாம, எதுக்கு இப்படி இண்டீசண்டா வீட்டுக்குள்ள நுழையறீங்க!" எனக் கடுமையுடன் கேட்கவும், ராகவன் கலவரத்துடன் மகளைப் பிடித்துத் தடுக்க, அவனுக்குப் பின்னால் வந்த அவனுடைய அல்லக்கை ஒருவன், "என்னம்மா! திமிரா? யாருகிட்ட பேசறேன்னு தெரியுதா!" என்றான் அவளை மிரட்டுவதுபோல்.
"எல்லாம் தெரியுது; இந்த மிரட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு முதல்ல வெளியில போங்க!" என அவள் அலட்சியமாகப் பதில் கொடுக்க, "இவ்வளவு தைரியமா எனக்கு எதிர நின்னு பேசறன்னா, அது யார் கொடுக்கற சப்போர்ட்ன்னு எனக்கு நல்லா புரியுது; நேத்தே நினைச்சேன்!" என்றான் திவாகர்.
'இவன் என்ன இப்படி உளறிட்டு இருக்கான்!' என எண்ணியவள், "பணம் பதவி இருக்கற தைரியத்துல நீங்க வேணா ஆடலாம்; எனக்கு யாரோட சப்போர்ட்டும் தேவை இல்ல; மரியாதையா வெளிய போங்க" என அவள் கொஞ்சமும் அசராமல் சொல்லவும்,
"அந்த தீபன் உன்கிட்ட என்ன டீல் பேசி இருக்கான்னு சொல்லு. அவனை விட ஒரு நல்ல ஆஃபர் நான் தரேன்! என்னோட எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ல ஒரு பெட்டெர் பே ஸ்கேல்ல உன்னை அப்பாயிண்ட் பண்றேன்.
உன் பேரைப் பார்த்தாலே நீட் கோச்சிங்குக்கு கூட்டம் அள்ளும்!" என வந்த காரணத்தை அவன் விளக்க, அவன் தீபனை வேறு குறிப்பிடவும், அதில் முகம் சுளித்தவள், "நான் ஏற்கனவே நல்ல வேலைலதான் இருக்கேன். நீங்க எனக்கு எந்த ஆஃபரும் தரவேண்டாம்!" என்றாள் வசுந்தரா அலட்சியத்துடன்.
"என்ன நீ பாக்கற வேலையை சொல்றியா! என்ன ஒரு நாற்பதாயிரம் சம்பளம் வருமா!” என எகத்தாளமாகக் கேட்டவன்,
“உன் வேலைக்கு இப்பல்லாம் பென்ஷன் கூட கிடையாது. ப்ரைவேட்டா ஒரு ட்யூஷன் கூட எடுக்க முடியது. அதுல என்ன பெருசா உன்னால சம்பாதிக்க முடியும்.
நீ இப்ப வாங்கற மாதிரி ரெண்டுமடங்கு சம்பளம் கொடுக்கறேன். என் கோச்சிங் சென்டர்ல ஜாயின் பண்ணு" என அவன் பேரத்தில் இறங்க,
"இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாம, மரியாதையா வெளிய போங்க! இல்லனா மீடியாவுக்கு போவேன்!" என அவள் பற்களைக் கடித்துக்கொண்டு உறும, அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தார் செல்வராகவன்.
மென்மையும், கனிவுமாகவே அவளைப் பார்த்து பழகியவருக்கு, அவளுடைய இந்த ரௌத்திரம் புதிது.
அதே நேரம் அவளுடைய வீட்டின் வாயிற்கதவில், தனது வலியத் தோளை முட்டுக்கொடுத்து அலட்சியத்துடன் சாய்ந்து நின்றவாறு, அங்கே நடக்கும் கலவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் தீபன்.
கவனம் முழுதும் திவாகரிடம் இருந்ததாலும், மேலும் அவனுக்குப் பின்புறமாக நின்றுகொண்டிருந்த அவனுடைய அடியாட்களைத் தாண்டி அவளது பார்வை செல்லாததாலும், அதுவரை அவனைக் கவனிக்கவில்லை வசுந்தரா.
எதிர்மறையாகப் பேசியவனுக்குக் காரசாரமாக பதில் கொடுத்தவள், அவன் உபயோகிக்கும் வாசனைத் திரவியத்தின் மணத்தை உணர்ந்து, அவளது பார்வை அவனைத் தேட, அங்கே நின்ற தீபனை பார்த்து திடுக்கிட்டுப் போனாள்.
அதன் பிறகு அவளுக்கு வார்த்தைகள் பஞ்சமாகிப்போக, என்ன பேசுவது எனப் புரியாமல் தடுமாறியவளாக, "எல்லாரும் வெளியில போங்க!" என உள்ளே போன குரலில் அவள் சொல்லவும், அவள் பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்த்த திவாகரின் முகம் பேய் அறைந்ததைப் போன்று மாறிப்போனது.
அவன் தன்னை பார்த்ததும், அலட்சியமாக உள்ளே நுழைந்து, அங்கே போடப்பட்டிருந்த சோபாவில், கைகளை விரித்துச் சாய்ந்தபடி தோரணையாக உட்கார்ந்த தீபன், தன் புருவத்தை மேலே உயர்த்தி, 'என்ன?' என்பது போல் பார்க்க, வசுந்தராவைக் காட்டிலும் அதிகம் தடுமாறிப் போனான் திவாகர்.
"நீ! உனக்கு!" என அவன் திக்கித் திணற, தீபன் அவனைப் பார்த்த கூர்மையான பார்வையில், "உங்களுக்கு இப்ப இங்க என்ன வேலை?" என படபடவென அவன் கேட்க, தன் தொண்டையை செருமிக்கொண்டவன், "அதையேதான் நானும் கேக்கறேன், உனக்கு இப்ப இங்க என்ன வேல?" என அவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்கவும், "அது! அதாவது! இவங்களோட டேலண்ட டிவில பார்த்தேன். அதான் இவங்களுக்கு ஒரு பெட்டர் ஜாப் ஆப்பர்ச்யூனிட்டி கொடுக்கலாம்னு..." என திவாகர் இழுக்கவும்,
"இவங்க உன் கிட்ட வந்து வேலை வேணும்னு கேட்டாங்களா? இல்ல வேல எதாவது தேடிட்டு இருக்காங்கன்னு உன்கிட்ட யாராவது வந்து சொன்னாங்களா?" என தீபன் வார்த்தைகளால் விளையாடவும், பதில் சொல்ல முடியாமல் தவித்தவன், "இதுல நீ ஏன் குறுக்க வர?" எனக் கேட்க, "நான் இவங்களோட வெல்விஷர்னு வெச்சுக்கோயேன்! நான் குறுக்க வருவேன்; கேள்வி கேப்பேன்; இவங்களுக்காக பேசுவேன்" என்றவன் தொடர்ந்து,
"நானும் இவங்கள என் இன்ஸ்டிட்யூஷன்ல ஜாயின் பண்றாங்களான்னு கேட்கணும்னுதான் நினைச்சேன்; ஆனால் என் எண்ணத்தை மாத்திக்கிட்டேன்;
ஏன்னு தெரியுமா? நீ நான் எல்லாரும் எஜூகேஷனை பிஸினெஸ்ஸா மட்டும்தான் செய்யறோம்; பட் இவங்க அதை தவமா செய்யறாங்க.
ஸோ... உன் வேலையெல்லாம் இவங்க கிட்ட காமிக்காத. இட்ஸ் அ வார்னிங்!" என முடித்த தீபன், "இப்ப நீ போகலாம்'ம் என வாயிற்புறமாகக் கையை காண்பித்தான்.
கோபத்திலும் அவமானத்திலும் முகம் இறுகிப்போய், வெளிப்படுத்தமுடியாத அடக்கப்பட்ட கோபத்துடன், உள்ளுக்குள்ளேயே குமுறும் எரிமலையாக அங்கிருந்து அகன்றான் திவாகர் தனது அல்லக்கையுடன்.
அந்த நொடி, மகிழ்ச்சி; பெருமிதம்; துயரம் என வசுந்தராவின் முகத்தில் மாறி மாறி தோன்றிய கலவையான உணர்வுகளை உள்வாங்கியவனாக, தன் கையிலிருந்த காகித உரையை அவளிடம் நீட்டினான் தீபன்.
வீட்டிற்கு வந்த பிறகு, இரவு உணவு தயாரிக்கும் வேலையில் தனது கைப்பையைப் பார்க்காமலேயே விட்டுவிட்டாள் வசுந்தரா. எனவே அந்த கடிதத்தை தவறவிட்டது அவளுக்குத் தெரியாமல் போனது.
தனது கவனக்குறைவை எண்ணி நொந்தவளாக, அதை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு அவனுக்கு நன்றி சொன்னவள், “இவர்தான் மிஸ்டர் தீபப்பிரகாசன்; வித்யுத் க்ரூப்ஸோட சேர்மேன்!” என தீபனை அவளுடைய அப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தாள் வசுந்தரா.
அவனது பெயரைக் கேட்டதும் அவருடைய முகம் வெளிறிப்போக, மிக முயன்று அவர் இயல்பாக இருப்பதுபோல் காண்பித்துக்கொண்டார்.
வசுந்தராவை பொறுத்த மட்டும் அவள் பயந்த சுபாவமெல்லாம் கிடையாது என்பது தெளிவாக விளங்கியது தீபனுக்கு.
ஏனென்றால் அரசியல் செல்வாக்கு, ஆள் பலம், பணபலம் என்ன ஊரையே மிரட்டும் திவாகரிடம் கூட அவ்வளவு தைரியமாக எதிர்த்துநின்று பேசியவள், தன்னைக்கண்டு மிரள்வது ஏன் என்றுதான் விளங்கவில்லை அவனுக்கு. இருவரைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே போனது.
முந்தைய தினம் அந்த ஆடி கார் அவனது வாகனத்தைத் தொடர்வது புரிந்ததும், வெகு எச்சரிக்கையுடன் போக்கு காட்டி அதனைத் திசைதிருப்பிவிட்டுத்தான் வசுந்தராவை அவளுடைய வீட்டில் இறக்கிவிட்டுப் போனான் தீபன்.
அவள் காரிலிருந்து இறங்கவும், அக்கறையுடன் அவளை நோக்கி ஓடிவந்த அவர்களது பக்கத்துவீட்டுப் பெண்மணி, அவனுடைய உயர்ரக பி.எம்.டபள்யூவை ஆராய்ச்சியுடன் பார்த்துவிட்டுப் போனது வேறு அவனது எண்ணத்தை குடைந்தது.
ஒருவேளை அந்த காரில் தொடர்ந்தவனால் அவளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமோ என்ற எச்சரிக்கை உணர்வில்தான் அந்த கடிதம் அடங்கிய உறையை அவளிடம் கொடுப்பதுபோல் அவன் அங்கே வந்ததே. அவன் நினைத்ததே அங்கே நடந்தேறியது.
அவளைத் தனது காரில் அழைத்துவந்து அவளுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டோமோ என எண்ணத்தொடங்கிய தீபன், என்ன நடந்தாலும் அவளுக்குத் துணை நிற்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
யோசனையில் சுருங்கிய அவனது முகத்திலிருந்து எதையும் அறியமுடியாமல், வசு காஃபியை கொண்டுவந்து அவனுக்குக் கொடுக்க, அதை ஒரு மிடறு அருந்தியவன், அது அவனுக்குப் பிடித்த சரியான கலவையில் இருக்கவே வியந்துதான் போனவனாக, 'பர்ஃபெக்ட் மிக்ஸிங்' என அவளை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.
அப்படியே மரியாதையை நிமித்தம் ராகவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றான் தீபன்.
***
அடுத்துவந்த நாட்களில், நவீன் என்ற அவளுடைய மாணவனைப் போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச்சென்று, அவனுக்குச் சிகிச்சைகள் மேற்கொள்ள உதவினாள் வசு.
தனிப்பட்ட முறையில் அவனுடைய பெற்றோரைச் சந்தித்து, அவர்களுக்கு நிலைமையைப் புரியவைத்து, அவனையும் சரிக்கட்டி இந்த சிகிச்சைக்கு அவனை உட்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு.
ஆனாலும் பின்வாங்காமல் அந்த செயலை செய்துமுடித்தாள் அவள்.
இதற்கிடையே.அவர்களுடைய பள்ளியில் 'ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் பிளான்ட்' பொருத்தப்பட்டு, அவர்களுடைய குடிதண்ணீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டது. அதற்கென்று தனியாக ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று போடப்பட்டு, கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்யப்பட்டிருந்தது.
அவளுடைய தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அவளை வெகுவாக பாராட்டவும், மறுபடி ஒருமுறை திலீப்பை நேரில் சந்தித்து அவனுக்குத் தனது நன்றியைப் பகிர்ந்துகொண்டாள் வசுந்தரா.
இதற்கிடையில் தினமும் ஒரு முறையேனும் அவளிடம் கைப்பேசியில் இது குறித்து எதாவது பேசிவிடுவான் திலீப். ஆனால் அவளுக்கு அவனைக் குறித்து மரியாதை உணர்வைத் தவிர வேறு எந்த விதமான எண்ணமும் தோன்றவில்லை.
அது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது.
நாட்கள் தெள்ளிய நீரோடை போன்று சென்றுகொண்டிருக்க, பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது, அவளுடைய அம்மா தங்கவைக்கப்பட்டிருக்கும் தொண்டு இல்லத்திலிருந்து அவளுக்கு அழைப்பு வரவும், அதை ஏற்று அவள் பேச, "வசு உங்க அம்மா, சிஸ்டர் கூட கொஞ்சமும் கோ-ஆபரேட் பண்ணாம, சரியா சாப்பிடாம, தூங்காம ரெண்டுநாளா ரொம்பவே அடமண்டா பிஹேவ் பண்றாங்க.
இப்படியே போனால் ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ண வேண்டி வரும்!
உங்களால நேரில் வர முடியுமா?" என்று அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி சொல்லி முடித்தார்.
மதியத்திற்கு மேல் விடுப்பு எடுத்துக்கொண்டு, அந்த இல்லத்திற்குச் சென்றவள், பக்கவாதத்தால் செயல்பட முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருந்த அவளுடைய அன்னையைப் போய் பார்க்க, இவளைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அந்த பெண்மணி.
அவருக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள், அவரது மடியில் தலை சாய, "உன்ன யார் இங்க வரச் சொன்னது; உன்னைப் பார்க்கவே நான் விரும்பல; இங்கிருந்து போ; இல்லனா என்னோட பாவம் உன்னையும் ஒட்டிக்கும்” என அவர் குளறலாக ஆனால் அழுத்தமாகச் சொல்ல, அவரது வார்த்தைகள் தந்த வலியில், அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மணிகள் உருண்டன.
இதழ்-4