மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 7
Quote from monisha on August 5, 2022, 10:37 AM7
அக்னீஸ்வரியின் திருமணம்
அக்னீஸ்வரி குடிலின் வாசலை நெருங்க விஷ்ணுவர்தன் அவள் முன்னே வந்து நின்று "இத்தனை நேரம் எங்கே சென்றிருந்தாய்?!" என்று கேட்டான்.
அக்னீஸ்வரியோ அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல், "இந்த அகந்தைப் பிடித்தவள் எங்கு சென்றால் தங்களுக்கு என்ன?" என்றாள்.
"எல்லோரும் உன்னைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள், அதனால்தான் கேட்டேன்?" என்று அவன் பொறுமையாகவே பேச, அவளோ அவன் சொன்னதைக் கேட்டும் கேட்காதவள் போல முன்னேறிச் சென்றாள்.
"அக்னீஸ்வரி" என்றழைத்து விஷ்ணுவர்தன் அவளைப் போகவிடாமல் தடுத்து முன்னே வந்து நிற்க அவள் முகம் கோபக்கனலாய் மாறியது.
அவன் அப்போது, "நான் அன்று உன் மனம் காயப்படும்படி பேசிவிட்டேன்... என்னை மன்னித்து விடு அக்னீஸ்வரி" என்று உரைக்க,
அவள் அலட்சியப் பார்வையோடு, "என் மனம் காயப்பட வேண்டும் என்பதற்காகத்தானே தாங்கள் அவ்விதம் பேசினீர்கள்... அப்படி இருக்க இப்போது மன்னிப்பு கேட்பானேன்" என்றாள்.
"நான் இழைத்தது தவறென்று உணர்ந்ததினால்தான் நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்" என்றான்.
"தவறு செய்த பின் அதை உணர்ந்து என்ன பயன்?" என்று உரைக்கும் போது அவளின் முகத்தில் கோபம் மாறாமல் இருந்தது. அவன் இத்தனை தூரம் இறங்கி வந்த போதும் அவள் ஒரு அடி கூட இறங்கி வரத் தயாராக இல்லை.
ஆனால் விஷ்ணுவர்தன் புன்னகையோடு, "மன்னிக்க விரும்பாவிட்டால் தண்டித்து விடு... என்ன தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.
"தங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. அதே நேரத்தில் மன்னிக்கவும் விருப்பமில்லை" என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் விரைந்து விட்டாள்.
விஷ்ணுவர்தன் பெருமூச்செறிந்து, ‘இவள் பிறக்கும் போதே இத்தனை கர்வத்தோடே பிறந்திருப்பாளோ... நுனிமூக்கில் கோபத்தை வைத்துக் கொண்டே சுற்றுகிறாள். திருமணம் ஆனப்பின் என்னை என்ன பாடு படுத்தப் போகிறாளோ?!’ என்று தன்னிலையை எண்ணித் தானே வருத்தமுற்றான்.
விஷ்ணுவர்தன் அவ்விதம் எண்ணிக் கொண்டதற்கு காரணம் அக்னீஸ்வரி இல்லாத நேரத்தில் அவளின் திருமணப் பேச்சு நிகழ்ந்ததுதான். அதுவும் விஷ்ணுவர்தனுக்கும் அவளுக்குமான திருமண நாளை கூட சுவாமிநாதனும் சோமசுந்தரரும் சேர்ந்து முடிவெடுத்துவிட்டனர். அதேநேரம் இது பற்றி யாருமே அக்னீஸ்வரிக்குத் தெரிவிக்கவில்லை. அவளிடம் தெரிவிப்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக யாரும் கருதவில்லை.
அக்னீஸ்வரி ருத்ரதேவனைப் பற்றிய நினைப்பிலேயே இருக்க, அவள் திருமண பேச்சுகள் நிகழ்வதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலும் கூர்ந்து கவனிக்காமலும் விட்டுவிட்டாள்.
நாட்கள் நகர்ந்து செல்ல அக்னீஸ்வரிக்கு நடப்பது இன்னதென எல்லாம் புரிந்து போனது. திருமணம் என்பதே அதிர்ச்சிக்குரிய தகவலாய் இருக்க, அதுவும் விஷ்ணுவர்தனுடன் என்பது அவளை இரு துண்டுகளாய் பிளந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
எல்லோரும் அவள் கனவுலகில் சஞ்சரிப்பவள் என்று கருத, தான் இப்போது இளவரசர் ருத்ரதேவனைக் காதலிக்கிறோம் என்று சொன்னால் தான் கனவு கண்டு பிதற்றுகிறோம் என்று எண்ணிக் கொண்டு பரிகாசம் செய்வர். அவள் உருவாக்கிவிட்ட சிக்கலான முடிச்சுகளில் அவளே சிக்குண்டாள். யாரிடம் அவள் திருமணம் வேண்டாம் என உரைத்தாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
விஷ்ணுவர்தன் மீதுள்ள கோபம் அல்லது பருவ வயதில் பெண்களுக்கே திருமணம் குறித்து ஏற்படக் கூடிய பயம் என அவர்களாகக் காரணம் கற்பித்துக் கொண்டனர். அக்னீஸ்வரியின் தவிப்பை அவள் தமக்கை வைத்தீஸ்வரியும் புரிந்து கொள்ளவில்லை.
விஷ்ணுவர்தனிடம் தான் ருத்ரதேவனைக் காதலிப்பது பற்றி உரைத்தால், நிச்சயம் அவன் கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்திவிடுவான் என்று எண்ணினாள். அதனால் வரப் போகும் விளைவு எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவனைத் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிட்டவே இல்லை.
ருத்ரதேவனாவது சீக்கிரம் ஊர் திரும்பி விடக் கூடாதா என எதிர்பார்த்தாள். அந்த எதிர்பார்ப்பும் நொறுங்கிப் போனது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட கிட்டதட்ட மரணத்தை நோக்கிப் பயணிப்பது போல் அவள் திருமண நாள் நெருங்கி வந்து கொண்டே இருந்தது.
அக்னீஸ்வரி விரும்பாத எதிர்பார்க்காத அவள் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அந்த நாள் வந்தது. திருமணத்தின் ஏற்பாடுகள் முடிந்து சடங்குகள் தொடங்க, அக்னீஸ்வரி தன் தமக்கையின் மடியில் படுத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் எனக் கதறி அழுது பிடிவாதம் பிடித்தாள்.
விஜயவர்தன் அன்று விளையாட்டாய் சொன்னது போலவே இன்று அவள் உரைக்க, அவளின் அண்ணன்மார்களும் பெற்றோர்களும் அவள் மனவேதனையின் காரணம் புரியாமல் கோபம் கொண்டும், பின் அறிவுரை கூறியும், இறுதியாய் இந்தத் திருமணம் நடந்தே தீர வேண்டும் எனச் சொல்லி அவள் பிடிவாதத்தை உடைத்தெறிந்தனர்.
அரங்கநாதன் திருக்கோயிலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்னீஸ்வரிக்கு அலங்கரித்துக் கொள்வதில் அத்தனை ஆர்வம். ஆனால் இன்று அவளுக்கு வைத்தீஸ்வரி அத்தனை அழகாய் அலங்காரம் செய்து அவள் அழகை மேலும் மேலும் அழுகுப்படுத்தியிருந்தாள். ஆனால் அவள் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. எந்தப் பிம்பத்தை ஓயாமல் ரசிப்பாளோ அந்தப் பிம்பத்தை அன்று அவள் பார்க்கக் கூட விருப்பப்படவில்லை.
ருத்ரதேவனை மணமுடிக்க அவள் கண்ட கனவுகள் எல்லாம் சில நொடிகளில் கரைந்து போகப் போகிறது.
ருத்ரதேவனை மனதில் சுமந்தபடி விஷ்ணுவர்தனுக்கு மாலையைச் சூடுவது மரணத்திற்கு நிகரான வேதனை எனும் பட்சத்தில் யாருக்கும் தன் நிலையைப்புரிய வைக்க முடியாமல் அக்னீஸ்வரி தனக்குள்ளேயே மருகினாள். இதுதான் நடக்க வேண்டும் என்ற நிலையில் அது நிகழ்ந்தே தீரும்.
அக்னீஸ்வரி தன் கரங்களால் ருத்ரதேவனுக்கு மாலையிட எண்ணி இருந்தாள். ஆனால் அது விஷ்ணுவர்தனுக்காக என்று விதிக்கப்பட்டிருக்கையில் அக்னீஸ்வரியின் கனவுகளும் காதலும் அந்த அக்னி குண்டத்திற்குள் சிதைந்து சாம்பலாய் போனது.
திருமணம் நிகழ்ந்து எல்லோர் முகத்திலும் சந்தோஷம் நிறைவாய் இருக்க அக்னீஸ்வரி உணர்ச்சிகளற்றவளாய் திருமண சடங்குகளை விஷ்ணுவர்தனோடு சேர்ந்து செய்து முடித்தாள்.
வெகுதூரம் சென்றிருக்கும் இளவரசர் ருத்ரதேவன் கோட்டைக்குத் திரும்பும் போது இதனை அறிந்து கொண்டால் என்ன நேரும்? அவன் இந்தச் செய்தியை எவ்விதம் எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணம் அக்னீஸ்வரியின் மனதை ஆட்கொண்டு அப்போது அவளைக் கலவரப்படுத்தியது.
அழகிற்கே இலக்கணமாய் திகழும் அக்னீஸ்வரியின் முகத்தில் புரியாத சோகம் படர்ந்திருந்ததை விஷ்ணுவர்தனும் கவனித்தான். தன் மீது அவள் கொண்ட கோபத்தால் அவ்விதம் இருக்கிறாளோ என்று எண்ணினாலும் அது அவனுக்குள்ளும் குழப்பத்தை விதைத்தது.
வைத்தீஸ்வரி தன் தங்கைக்கு திருமண வாழ்க்கைப் பற்றி ஏதேதோ அறிவுரைகள் கூற, அவை எல்லாம் அக்னீஸ்வரியின் செவிகளில் விழவில்லை. அறிவுரைகளைவிட அனுபவம் அவளுக்கு வாழ்வின் நிதர்சனத்தை ரொம்பவும் அழுத்தமாகவே கற்றுக் கொடுத்துவிட்டது.
அவள் தன் அழகின் மீது கொண்ட கர்வம் எல்லாம் அன்றே காணாமல் போனது. விதியின் வசம் நடந்த நிகழ்வை எண்ணி மனதை மாற்றிக் கொள்வதா இல்லை நடக்காத ஒன்றை எண்ணி ஏதும் அறியாத விஷ்ணுவர்தனையும் காயப்படுத்துவதா என்று புரியாமல் குழம்பினாள்.
விஷ்ணுவர்தனை தனிமையில் சந்தித்து உண்மையைக் கூற எண்ணி இருந்தாள். அந்த வாய்ப்பு திருமணம் நடந்தேறிய பின்னே கிடைக்கப் பெற்றது. இப்போது அவள் காதலைப் பற்றி எவ்விதம் உரைப்பாள். அப்படி உரைத்தால் அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் அவளுக்குள் சுழன்றுக் கொண்டிருந்தன.
அந்த அறையினுள் விளக்கு பிரகாசமாய் ஒளி வீசிக் கொண்டிருக்க, அக்னீஸ்வரி முதன்முறையாய் விஷ்ணுவர்தன் முன்னிலையில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருக்கிறாள். ஆனால் அது நாணத்தால் இல்லை. அவனை எவ்விதம் எதிர்கொள்வது என்ற குற்ற உணர்ச்சியால்!
7