You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum uyirthezhu - Prefinal

Quote

47

மரண போராட்டம்

ஈஷ்வர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற அச்சத்தில் அவள் தவிப்புற்றிருக்க அபிமன்யு அவளை ஆராய்ந்து பார்த்து,

"என்னடி பிரச்சனை... என்கிட்ட சொல்றதுல உனக்கு அப்படி என்ன தயக்கம்?" என்று கேட்க சூர்யாவின் உதடுகள் சொல்லிவிட வேண்டும் எனத் துடித்தாலும் அவன் நலன் கருதி வேண்டாமென அவள் மனம் திட்டவட்டமாய் மறுத்தது.

"நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல அபி... ப்ளீஸ் கிளம்பேன்" என்று அவனை அனுப்பவதிலேயே அவள் பிடிவாதமாய் இருக்க அவனோ, "முடியவே முடியாது" என்று கூறி முரண்டு பிடித்தான். சூர்யா அழமாட்டாத குறையாய் நின்றிருந்தாள்.

அவள் மௌனத்தைப் பார்த்து கடுப்பானவன், “நீ இப்போ என்ன விஷயம்னு சொல்லப் போறியா... இல்ல அந்த ஈஷ்வரைப் போய் நான் கேட்கட்டுமா?" என்று கேட்க அவள் அதிர்ந்து,

"அய்யோ... அப்படி எல்லாம் செஞ்சுறாத அபி ப்ளீஸ்" என்றாள்.

"அப்போ சொல்லு" என்று அழுத்தமாய் அவன் வினவ, வேறு வழியின்றி சொல்லித்தான் தீர வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாள்.

"சரி சொல்றேன்" என்று சொல்லி சூர்யா அவன் கையைப் பிடித்து அழைத்து கொண்டு இன்னும் மறைவான இடமாய் பார்த்து வந்து நிறுத்தினாள்.

சூர்யா ஈஷ்வர் வருகிறானா என்று எட்டிப் பார்த்து கொண்டிருக்க அபிமன்யு பொறுமையிழந்தவனாய், "வாய திறந்து என்னன்னு சொல்லிதான் தொலையேன்டி" என்றான்.

"நான் சொல்றேன்... பட் நீ எந்தக் காரணத்தைக் கொண்டு கோபப்பட கூடாது" என்றாள்.

"முதல்ல நீ விஷயத்தைச் சொல்லு... அப்புறம் என்ன பண்றதுன்னு பார்க்கலாம்" என்றான்.

சூர்யா யோசனையோடு தன்னையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் அபிமன்யுவிடம் ஈஷ்வர் நடந்து கொண்டவற்றை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க அவன் விழிகளில் கோபம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.

பின் சூர்யா மனவேதனையோடு கண்ணீர் வடித்தபடி அபிமன்யுவின் தோள் மீது சாய்ந்து கொண்டு,

"கடைசியா அவன் என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா அபி... சவாலில் அவன் ஜெயிச்சுட்டா... அவனுக்கு விருப்பமானதை நானே கொடுக்கணுமாம்... இல்ல அவனே எடுத்துப்பேன்னு மிரட்டுறான்... ராஸ்கல்... பொறுக்கி... இந்த இரண்டு மூணு நாள்ல நான் அவனால ரொம்ப டார்ச்சரை அனுபவிச்சிட்டேன்... எனக்கு அப்படியே செத்துரலாம் போல இருந்துச்சு" என்று அவள் சொல்ல அபிமன்யு ஆவேசத்தோடு,

"பைத்தியமாடி உனக்கு... நீ ஏன்டி சாகணும்... தப்பு செஞ்ச அவன்தான் சாகணும்" என்றான்.

"அவனை எல்லாம் நம்மால ஒன்னும் செய்ய முடியாது அபி... அவனோட பவரும் பலமும் அந்த மாதிரி... நாம என்ன செஞ்சாலும் என்ன நினைச்சாலும் அவனுக்கு எப்படியாவது தெரிஞ்சுடும்" என்றாள்.

"வெரி வெல் ஸெட் சூர்யா... என்னைப் பத்தி நீதான் நல்லா புரிஞ்சு வைச்சிருக்க" என்று அவர்கள் அருகாமையில் ஈஷ்வரின் குரல் ஒலித்தது.

சூர்யாவின் நெஞ்சமெல்லாம் வேகமாய் துடிக்க அபிமன்யுவை விட்டு அவசரமாய் விலகி நின்றாள். அங்கே அடர்ந்திருந்த இருளில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வர் கம்பீரமாய் நின்று வன்மமாய் புன்னகைக்க, அபிமன்யு அவனை முறைத்தபடி நின்றிருந்தான்.

சூர்யா அவன் கையிலிருந்த துப்பாக்கியை பார்த்து அச்சம் கொண்டிருக்க, ஈஷ்வர் தன் குரோதமான பார்வையை அபிமன்யுவின் மீது வீசினான்.

ஈஷ்வர் அலட்சிய பார்வையோடு, "நீ ஏன் தேவையில்லாம என் வழியிலயே குறுக்க வர அபிமன்யு... உனக்கு ரொம்ப நாள் வாழணும்னு ஆசையில்லையா? " என்றவன் சூர்யவின் புறம் திரும்பி அவளிடம்,

"என் கணிப்புபப்படி இவனுக்கு அல்பாயுசுதான்... நீ என்ன நினைக்கிற?" என்று கேட்க சூர்யா அடங்கா கோபத்தோடு, "நீ ரொம்ப டூ மச்சா பேசுற ஈஷ்வர்" என்றாள்.

அபிமன்யு சூர்யாவின் புறம் திரும்பி, "ஏன் இப்போ நீ இவ்வளவு டென்ஷனாகுற சூர்யா... சார் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்... பிகாஸ் அடுத்தவங்க ஆயுசு கணிக்கிறதில அவர் பயங்கர எக்ஸ்பெட்... அப்படிதானே ஈஷ்வர்?!" என்று அவன் குத்தலாய் பேச,

ஈஷ்வருக்கோ தன் இடத்தில் இருக்கிறான் என்பது தெரிந்தும் கூட அவன் முகத்தில் அச்சத்தின் சாயலே இல்லை என்பதை கவனித்தபடி, "யார்கிட்ட பேசுறோம்... எங்க நின்னுட்டு பேசிறோம்னு யோசிச்சு பேசு" என்றான்.

"ஏன் தெரியாம... உன்னைப் பத்தி இந்த உலகத்துக்கே தெரியாத இன்னொரு அருவருப்பான முகம் எனக்கு மட்டும்தானே தெரியும்" என்றான்.

ஈஷ்வர் சீற்றம் கொண்டு சூர்யாவைப் பார்த்து, "உனக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாத்தலாம்னு பார்க்கிறேன்... ஆனா இவன் ரொம்ப ஓவரா பேசறான்... அப்புறம் தப்பா எதாவது நடந்துட்டா நீ என்னைக் கேட்க கூடாது" என்று சொல்ல சூர்யா கனலேறிய பார்வையோடு,

"அபிக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா" என்றாள்.

"அப்படியா... என்னடி பண்ணுவ?" என்று ஈஷ்வர் கேட்க,

"மைன்ட் யுவர் டங்..." என்று அபிமன்யு கோபம் கொண்டான்.

"முடியாது... அவ எனக்கு உரிமையானவ... அவகிட்ட நான் அப்படிதான் பேசுவேன்" என்றான் ஈஷ்வர்.

"உன் கனவில கூட அவ உனக்கு சொந்தமாக முடியாது ஈஷ்வர்... "

"உன்னைக் கொன்னாதான் அவ எனக்கு சொந்தமாவான்னா லெட் மீ டூ தட்" என்று ஈஷ்வர் வெறியோடு தன் கையிலிருந்த துப்பாக்கியை உயர்த்தினான்.

சூர்யா பதட்டத்தோடு, "நோ ஈஷ்வர்... திஸ் இஸ் நாட் ஃபேர்..." என்றாள்.

"ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அன் வார் டார்லிங்" என்று சொல்லித் துப்பாக்கியை அபிக்கு நேராய் ஈஷ்வர் குறி பார்க்க அபிமன்யு துளியும் அச்சமின்றி நின்றிருக்க அப்போது சூர்யா அபியின் முன்னிலையில் வந்து,

"உன் வெறியைத் தீர்த்துக்கணும்ல... கம்மான் ஷுட் மீ..." என்றாள்.

அபிமன்யு சூர்யாவைக் கீழே தள்ளிவிட்டு, "இது எனக்கும் அவனுக்குமான பிரச்சனை... நீ குறுக்க வராதே சூர்யா" என்றான்.

"இதுதான்டா கட்ஸு..." என்று ஈஷ்வர் புன்னகைக்க அபிமன்யு, "கோஹெட்" என்றான். அப்போது சூர்யா எழுந்தபடி, "நோ ஈஷ்வர்... அபிமன்யுவை விட்டிரு" என்று கதற,

ஈஷ்வர் தன் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தப் போக, அபிமன்யு அந்த நொடி காலால் துப்பாக்கியைத் தட்டிவிட்டான்.

அந்த இருளில் அது எங்கேயோ சென்று வீழ்ந்துவிட ஈஷ்வர் அதிர்ச்சியில் நிற்க அபிமன்யு உடனே அவனை நெருங்கி அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தான். சூர்யா அந்தச் சூழ்நிலையில் இருளில் வீழ்ந்த அந்தத் துப்பாக்கியைத் தேடிக் கொண்டிருந்தாள்.

இருவருமே சரிசமமான பலம் வாய்ந்தவர்கள். ஈஷ்வர் அபியின் கரத்தைத் தட்டிவிட, அவர்களுக்கு இடையில் அப்போது துவந்த யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. யாருமே அவரவர்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காமல் இருக்க, என்ன நேருமோ என்ற பதட்டம் சூர்யாவைத் துளைத்துக் கொண்டிருந்தது.

அபிமன்யுவும் ஈஷ்வரும் துவளாமல் தங்கள் கோபத்தை ஆக்ரோஷமாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் இருவருமே ஒவ்வொரு திசையில் வீழ்ந்தனர். இம்முறை விதி அபிமன்யுவிற்கு சாதகமாய் இருந்தது.

அபிமன்யு வீழ்ந்த இடத்தில் அவன் கையில் தூப்பாக்கித் தட்டுப்பட அதை கையில் ஏந்திக் கொண்டு மெல்ல சுதாரித்து எழுந்து கொண்டவன்,

"எத்தனை பேர் உயிரோட விளையாடிருப்ப ஈஷ்வர் நீ... இப்ப உன் உயிர் என் கையில..." என்று சொல்லி ட்ரிகரை அழுத்தப் போக ஈஷ்வரின் முகம் வெளிறிப் போனது. அவ்வளவுதானா தன் விதி என்று எண்ணினாலும் இவன் கையால் தன் உயிர் போவதா என யோசித்தபடி அவன் உள்ளம் கொந்தளித்தது.

சூர்யா நிம்மதி பெருமூச்சுவிட்ட அடுத்த நொடியே அங்கே எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தேறியது. துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தால் சூர்யா தம் விழிகளை மூடிக் கொண்டாள். அவள் விழிகளைத் திறந்த போது அபிமன்யு கீழே முழங்கால் போட்டு சரிந்திருந்தான். அவனின் மேற்சட்டையில் குருதி ஆங்காங்கே வழிந்து சட்டையை நனைத்தது.

சூர்யா நடந்தவற்றைக் கண்டு அதிர்ந்து நின்றாள். அபிமன்யு ஈஷ்வரை சுடுவதற்கு முன்னதாக பின்னோடு இருந்த செக்யூரிட்டிகள் அவன் கையிலிருந்த துப்பாக்கியால் பலமுறை தொடர்ந்து சுட அந்தக் குண்டுகள் அவன் முதுகை துளைத்தன.

அப்படியே ரத்த வெள்ளத்தில் அபிமன்யு கீழே சரிய அதை சாதகமாய் பயன்படுத்தி கொண்ட ஈஷ்வர் அந்தத் துப்பாக்கியை அபிமன்யுவின் கையிலிருந்து பிடுங்கி அவனின் மீதே சுட்டான்...

சூர்யா அவனை வந்து தாங்கிக் கொண்டு, "அபி" என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுது கொண்டிருக்க அபிமன்யு அந்த நிலையிலும், "எனக்கு ஒன்னும் ஆகாது... நீ தைரியமா இருடி" என்று சொல்ல, ஈஷ்வர் குரூரமான புன்னகையோடு சூர்யாவை வலுகட்டாயமாக அவள் கரத்தைப் பற்றித் தூக்கினான்.

"விடுறா" என்று அவள் கத்துவதை அவன் பொருட்படுத்தவில்லை. அந்த நொடி அவளுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவேயில்லை. ஈஷ்வரின் கன்னத்தில் அறைந்து விட அவன் அதிர்ச்சியோடும் அவமானத்தோடும் நின்றிருக்க அவள் அப்போது அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, "உன்னை சும்மா விடமாட்டேன்டா" என்று ஆக்ரோஷமாய் கத்தினாள். ஈஷ்வரின் முகம் அவமானத்தில் சிவக்க சூர்யாவினை அவன் பார்த்த பார்வையில் துவேஷமும் கோபமும் நிரம்பியிருந்தது.

சூர்யா உடனே தரையில் அமர்ந்து அபிமன்யுவை மடியில் கிடத்த அவன் உயிர் மட்டும் அத்தனைக்கு பிறகும் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, "இல்ல உங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் அபி" என்றாள்.

அபிமன்யு தேகமெல்லாம் ரத்தத்தால் நனைந்திருக்க சூர்யா அபிமன்யுவினை தாங்கியபடி, "ப்ளீஸ் அபி... என்னை விட்டுப் போயிடாத” என்று கதறினாள்.

ஈஷ்வர் அப்போது கர்வமாக, "நீ விட்ட சாவலில் தோத்துட்ட சூர்யா... என் பவருக்கும் புத்திசாலித்தனத்துக்கும் முன்னாடி அந்த இடியட் தோத்துட்டான்... இனிமே யு ஆர் மைன்" என்றான்.

"நோ... நெவர் அட் ஆல்... நீ செஞ்சது சீட்டிங்... நான் ஒத்துக்க மாட்டேன்... என் அபி தோற்கல" என்றவள் முகத்தை மூடி அழுதாள்.

"நீ இனி என்ன அழுதாலும் பிரயோஜனம் இல்ல... அவன் விதி முடிஞ்சு போச்சு சூர்யா... ஆனா உன் விதி இப்போ என் கையில...” என்று ஈஷ்வர் உரைத்து சூர்யாவின் கழுத்தைப் பற்றித் தூக்க அவள் அவனைத் தள்ளிவிட பார்க்க அவன் கரங்கள் அத்தனை இறுக்கமாய் அவளை வளைத்துப் பிடித்தது.

மேலும் அவன் வெறியோடு, "காலம் பூரா உன் கர்வத்தையும் திமிரையும் என் கால்ல போட்டு மிதிச்சு உன்னை அடிமையா வைச்சிருக்கல... என் பேர் ஈஷ்வர் இல்ல" என்று சொல்லி வலுகட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு போனவன் செக்யூரிட்டிகளிடம், "அவனை இங்கேயே புதைச்சுடுங்க" என்று கொஞ்சமாய் துடித்து கொண்டிருந்த அபிமன்யுவின் உடலைச் சுட்டிக் காட்டினான்.

"இல்ல... வேண்டாம்... அபி" என்று அவள் கத்த அவன் பொருட்படுத்தாமல் அவளை இழுத்துக் கொண்டு போக மதி குறுக்கிட்டு,

"பாஸ் நீங்களா இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட... " என்று அறிவுறுத்த ஈஷ்வர் கனலாய் அவனைப் பார்தது, "இவதான் என் ட்ரீம்... இவளுக்காக நான் பைத்தியக்காரன் மாறி காத்திருக்கேன்... இவ என்னடான்னா நயா பைசாக்கு பிரயோஜனம் இல்லாத எவனோ ஒருத்தனை காதலிப்பாலாமா?" என்று கர்ஜித்தான்.

“அதெல்லாம் சரி பாஸ்... ஆனா சூர்யா சுந்தர் சாரோட டாட்டர்” என்று மதி சொல்ல,

"ஐ டோன்ட் கேர்... இப்ப நீ வழியை விடுறியா இல்ல" என்று சொல்லி ஈஸ்வர் மிரட்டலாய் பார்த்தான். அந்தப் பார்வையில் மதி விலகி நிற்க ஈஷ்வர் சூர்யாவை வலுகட்டாயமாய் இழுத்து தன் அறைக்குள் தள்ளி,

"நீ என் பொறுமையை ரொம்ப சோதிச்சிட்ட சூர்யா... இனிமேயும் முடியாது... ஐ நீட் யூ" என்றான்.

ஈஷ்வரின் கண்களில் தெரிந்த வெறி சூர்யாவைக் கலவரப்படுத்தியது. அவன் அவளை நோக்கி எடுத்து வைத்த அடி அவளுக்குள் படபடப்பை ஏற்படுத்திய போதும் சுற்றும் முற்றும் ஏதேனும் அவளின் தற்காப்புக்கு இருக்கிறதா எனத் தேடினாள்.

ஈஷ்வரோ அவள் மீதான உச்சப்பட்ச கோபத்தில் இருந்தான். அவளை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை கடந்து இப்போதைக்கு அவன் மூளையில் எந்தச் சிந்தனையும் கொண்டிருக்கவில்லை.

ஈஷ்வர் அதே வன்மத்தோடு சூர்யாவை அணைத்து கொள்ள முற்பட அவள் விலகிக் கொள்ள போராடிய நிலையில் அவன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை சூர்யா கைப்பற்றினாள்.

ஆனால் ஈஷ்வர் அவள் குண்டை தன் மீது பாய்ச்சவிடாமல் தடுக்க அவள் கரத்தைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டான். யார் பக்கம் அந்தத் துப்பாக்கியின் குழல் திரும்புமோ என்ற நிலையில் வெடித்து சிதறிய குண்டுகள் எல்லாம் வீணாகிப் போனது.

இறுதியாய் சூர்யா ஈஷ்வரின் பிடியில் இருந்து திமிறிக் கொண்டு கீழே விழுந்தாள்.

அவள் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிக் குழலை அவன் புறம் நீட்டினாள். ஈஷ்வர் புன்னகையோடு நின்றிருக்க சூர்யாவின் முகம் வெளிறிப் போனது. அவன் அவளைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்துவிட்டு,

"யூ காட் அ சேன்ஸ்... ஜஸ்ட் ஒன் புல்லட் மோர்... கம்மான் ஷுட் மீ... உன் லக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றான்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சூர்யா அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்க்கமாய் நிற்க ஈஷ்வர் எள்ளலாய் நகைத்து,

"நல்லா ஞாபகம் வைச்சுக்கோ... ஜஸ்ட்…… சிங்கிள்….,, புல்லட்...

இன் கேஸ் தப்பி தவறி அந்த புல்லட் என் மேல பாயாம மிஸ்ஸாயிடுச்சு... அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப மோசமான நாள் இதுவாதான் இருக்கும்... கம்மான் ட்ரை" என்று கையைக் கட்டி நின்றான்.

சூர்யாவிற்கோ அந்த ஒரு குண்டு அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பெரும் ஆயுதமாய் தெரிய ட்ரிகரை அழுத்தித் தப்பித்தவறி குண்டு அவன் மீது பாயாமல் போனாள் என யோசித்தவள் பின், "மிஸ்ஸாகுது... நான் உனக்கு எந்த காலத்திலையும் கிடைக்க மாட்டேன்… நீதான் என்கிட்ட தோற்று போக போற" என்று உரைத்தபடி அவள் தன் நெற்றியிலே வைத்து அந்த ட்ரிகரை அழுத்தப் போனாள்.

ஈஷ்வர் அவளை தடுக்க எத்தனிப்பதற்குள் தன் பின்மண்டையில் விழுந்த அடியால் அவன் நினைவுத்தப்பி கீழே விழுந்தான். சூர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

குழம்பியவள் அப்போதே அபிமன்யுவை கவனித்தாள். அவன்தான் குற்றுயிரும் குலையுயிருமாய் குருதியில் நனைந்தபடி வந்து கடப்பாறையைக் கொண்டு ஈஷ்வரை அடித்தான். அடித்த மாத்திரத்தில் அவனும் நிலைத்தடுமாறி விழுந்தான்.

சூர்யா வேதனையோடு அபியை நெருங்க மதியும் அந்த நேரத்தில் ஈஷ்வருக்கு நேர்ந்த கதியை எண்ணிக் கவலையுற அப்போது இருந்த நிலைமைக்கு மதியின் உதவியோடு இருவருமே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 அவர்கள் எதிர்கொண்ட மரணப் போராட்டத்தில் விதி இரண்டு பேருக்குமே எதிராய் நின்றது. ஆனால் இருவருமே அத்தனை சீக்கிரத்தில் இந்தப் பூவுலகை விட்டுப் போகத் தயாராயில்லை. அதேநேரம் இரண்டு பேருமே ஒன்றாய் சஞ்சரிப்பதும் சாத்தியமற்றதாய் போனது.

இருவரில் ஒருவரே பிழைத்துக் கொள்ள நேரிட்டது.

You cannot copy content