மோனிஷா நாவல்கள்
Monisha VET - 5&6
Quote from monisha on October 28, 2021, 1:13 PM5
வீரேந்திரனைப் பார்க்க வேண்டி அவனின் அலுவலகத்திற்குப் சென்று செந்தமிழ் காத்திருக்க, அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவன் அவளிடம் பேச விரும்பாமல் தவிர்க்க அவளும் மன்னிப்பு கேட்காமல் விடுவதில்லை என்று வம்படியாய் நின்றாள்.
அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சலிப்போடு நிற்க, "ஏ தமிழச்சி" என்று ரகுவின் துள்ளலான குரல் கேட்டது.
தன் நண்பனைக் கண்ட உற்சாகத்தோடு, “ரகு…” என்றாள்.
செந்தமிழும் ரகுவும் பள்ளி நண்பர்கள் எனினும் அவர்களின் பள்ளி நட்பு கல்லூரியிலும் தொடர்ந்தது. இருவரும் எப்போது தங்கள் தங்கள் இலட்சியம் வேலை என்று ஓட ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் சந்தித்து கொள்வதும் பேசிக் கொள்வதும் அரிதிலும் அரிதான நிகழ்வாக மாறிப் போனது. இந்தப் பிரிவின் காலத்திலதான் இருவருமே அவர்களின் நட்பின் ஆழத்தை அதிகமாய் உணர்ந்து கொண்டனர்.
ரகு கம்பீரமான தோற்றத்தோடு போலீஸ் உடையில் நிற்க அவளோ அவனைத் தலை முதல் கால் வரை அளவெடுத்து, "ஸ்மார்ட்டாதான்டா இருக்க" என்றாள்.
ரகுவின் தந்தை போலீஸ் வேலையில் இருந்தபடியே மறித்துப் போனதால் அவனுக்கும் அதே வேலை கிடைத்தது. இரண்டு வருட காலமாய் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.
தன் தோழி சொன்னதைக் கேட்டுப் பெருமிதத்தோடு காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டவனிடம் அவள் மேலும், "நான் உன்னை இங்க பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல... சென்னைக்கு வந்ததும் மெஸேஜ் பண்றேன்னு சொன்னேல... ஏன்டா பண்ணல?" என்று கோபமாய் கேட்டாள்.
"சாரிடி, கொஞ்சம் முக்கியமான வேலையா வந்தேன்... இப்பவும் பிஸிதான்... வேலை முடிஞ்சதும் உன்னை நானே வந்து மீட் பண்ணலான்னு... பட் அதுக்குள்ள நீயே இங்க... ஆமாம் நீ எப்படி இங்க?" என்று அவன் கேட்க,
அப்போது பத்திரிக்கையில் வீரேந்திரன் பத்தித் தவறாய் போட்ட செய்திக் குறித்து விவரிக்க அவனோ அதிர்ந்தபடி, "அடிப்பாவி... அந்தத் தீயைப் பத்த வைச்சது நீதானா?" என்று கேட்டான்.
"அதப்பத்தி உனக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.
"ம்ம்ம்... பத்திரிக்கையில நியூஸ் வந்ததுதான் இங்க ஹாட் டாப்பிக்... பட் அப்படி ஒரு நல்ல காரியத்தைச் செஞ்ச புண்ணியவதி நீதான்னு இப்ப நீ சொல்லிதாண்டி தெரியும்... மனுஷன் வேற இரண்டு நாளா செம காண்ட்ல இருக்காராம்... நான் வேற இந்த நேரத்தில இங்க வந்து மாட்டிக்கிட்டேன்" என்றான்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு தமிழுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவள் மௌனமாய் நிற்க,
ரகு அவளிடம், "முதல்ல இங்கிருந்து கிளம்பிடு தெய்வமே... எரியிற நெருப்பில எண்ணெய்யை ஊத்திடாதே" என்றான்.
"நான் ஒண்ணும் பிரச்சனை பண்ண வரலடா... ஜஸ்ட் ஒரு ஸாரி கேட்டிட்டுப் போயிடுறேன்" என்று சொல்ல,
"அதெல்லாம் இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம்... ஆல்ரெடி அந்த மனுஷன் வேறொரு டென்ஷன்ல இருக்காரு... இப்போ மாட்டின... அப்புறம் உன் பாடுதான் கஷ்டமாயிடும்... சொல்லிட்டேன்" என்று அவன் எச்சரிக்க, தமிழ் யோசனையோடு நின்றாள்.
"முதல்ல இங்கிருந்து கிளம்பு தமிழ்... நீயும் நானும் பேசிக்கிறதை அந்த ஏசிபி பார்த்துட்டா... அப்புறம் என் நிலைமை அவ்வளவுதான்... ப்ளீஸ் போம்மா" என்று ரகு கெஞ்சத் துவங்க,
"சரி கிளம்பிறேன்... ஆனா நான் சாரி கேட்டே தீருவேன்" என்றாள்.
"சாரி கேட்கிறதைக்கூட சண்டை போடற மாதிரி சொல்ற பார்த்தியா... நீ கொஞ்சங்கூட மாறலடி... ஓகே ஓகே... சரி அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... நீ உடனே புறப்படு" என்று அவன் அவளை விரட்டும் போதே அவள் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.
ரகு என்னவென்று அவள் பார்த்த திசையில் திரும்ப, "ரகு... நீ காலி..." என்றாள் தாழ்ந்த குரலில்.
பின்புறம் வீரேந்திரன் நின்றிருந்தான். அதுவும் தமிழும் ரகுவும் பேசிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து கவனித்தபடி!
ரகுவிற்கு வெலவெலத்துப் போனது. “இப்போ எப்படி டா சமாளிக்க போற?" என்று அவள் சன்னமாகக் கேட்க,
"உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவேன்" என்றான்.
"நீயெல்லாம் ஒரு ஃப்ரண்ட்டா டா?" என்று அவள் முறைக்கவும்,
ரகு முகபாவனையை மாற்றி, "ஏசி சாரை.. இப்போ பார்க்க முடியாது... நீங்க கிளம்புங்க" என்று சொல்லி தன் நடிப்பைத் துவங்கிவிட்டான்.
"ரொம்ப ஓவரா நடிக்காதே… உன் ஏசி கண்டுபிடிச்சிட போறான்” என்றவள் கேலி புன்னகையோடுச் சொல்ல, “கிளம்புடி முதல்ல” என்றவன் பல்லைக் கடித்தான்.
“வீட்டுக்கு வருவ இல்ல... அப்போ உன்னைப் பாத்துக்கிறன்டா" என்றவள் கடுப்பாகச் சொல்ல, அப்போது வீரேந்திரன் ரகுவை அருகில் வரச் சொல்லி சைகை செய்தான்.
“போச்சு நான் செத்தேன்” என்றவன் புலம்பிக் கொண்டே அருகில் செல்ல வீரேந்திரன், “என்ன நடக்குது அங்கே? நீங்க ஏன் அந்தப் பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்தீங்க… உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?” என்றவன் மடமடவென கேள்விகளை அடுக்க,
“ஐயோ! எனக்கு அந்தப் பொண்ணு யாருன்னே தெரியாது சார்… உங்களைப் பார்க்கணும்னு கேட்டாங்க… நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு இருந்தேன்” என்றவன் சமார்த்தியமாய் சமாளித்துவிட்டான்.
ஒரு வேளை அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று வீரேந்திரன் அறிந்து கொண்டால் நிச்சயம் ரகு நிலைமை அதோ கெதிதான்.
“கமிஷனர் ஆஃபீஸ் போகணும் இல்ல… வாங்க கிளம்பலாம்” என்று வீரேந்திரன் ரகுவிடம் சொல்ல, “ஓகே சார்… கிளம்பலாம்” என்றவன் தன் தோழியிடம் போகச் சொல்லி சமிஞ்சையில் கூறினான்.
ஆனால் அவளோ பிடிவாதமாய் அங்கேயே நின்றாள். அவளின் விழிகள் வீரேந்திரனைப் படையெடுத்து கொண்டிருக்க, ஜீப்பில் புறப்படும் வரை வீரேந்திரனின் கூர்மையான விழிகளும் அவளிடமே இலயித்திருந்தன.
அவன் பார்வையில் ஏளனமும் கோபமும் வெளிப்பட்டாலும் உள்ளுக்குள் அவள் மீதான ஈர்ப்பும் கலந்திருந்ததை தமிழ் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
6
செந்தமிழ் அலுவலகத்திலிருந்து பொழுதோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள். தேவி வீட்டிலிருந்தால் மட்டும்தான் இந்த வழக்கம். தேவியைத் தவிர வீட்டில் வேறு யாரிடமும் அவளுக்குப் பெரிதாக எவ்வித ஒட்டுதலும் இல்லை. அவள் இல்லாவிட்டால் இரவு வெகுநேரம் வரை அலுவலகத்திலேயே கழித்துவிட்டு உறங்க மட்டுமே வீட்டிற்கு வருவாள்.
தேவியுடன் வெகுநாட்கள் கழித்து அவள் இன்பமாய் அளவளாவிக் கொண்டிருக்க, “தமிழ்” என்று கர்ஜனையாக அழைத்தபடி விக்ரமவர்மன் உள்ளே வந்தார்.
பின்னர் அவர் காரணம் எதுவும் இயம்பாமல் சரமாரியாய் செந்தமிழைத் திட்டத் தொடங்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
ஒரு நிலைக்கு மேல் பொறுமையிழந்தவள், “இப்ப என்னாச்சுன்னு இப்படி கத்திட்டு இருக்கீங்க” என்று கேட்க,
“உனக்கு என்ன பிரச்சனைனே தெரியாது இல்ல” என்றவர் அவளைப் பார்வையால் அளவெடுத்தார்.
“ஐயோ! நீங்க எதை பத்தி சொல்றீங்கன்னு எனக்கு ஒரு மண்ணும் விளங்கல” என்றவள் சொன்னதும்,
“ஏசிபி வீரேந்திரபூபதி பத்தி பத்திரிக்கைல நீ பாட்டுக்குத் தப்பு தப்பா எழுதிட்ட… அதனால இப்போ எனக்குதான் பெரிய பிரச்சனை” என்று அவர் பொங்க, தமிழ் பேச்சற்று நின்றாள்.
ஏற்கனவே அந்த ஏசிபி விஷயத்தில் அவள் செய்த பெரும் தவறு அவளை மனதை குத்திக் கொண்டிருக்க, விக்ரமவர்மனும் சேர்ந்து அதை பற்றியே பேசி அவளைக் குற்றவுணர்வில் தள்ளினார். அவளின் சித்தி விஜயாவிற்கு இதையெல்லாம் பார்க்க பேரானந்தமாய் இருந்தது.
விக்ரமவர்மன் மேலும் சீற்றமாக, “இன்னும் ஒரு மாசத்தில உனக்கு கல்யாணம்... நான் எந்த மாப்பிள்ளையைப் பார்க்கிறேனோ மறுவார்த்தை பேசாம அவனைதான் நீ கட்டிக்கணும்" என, அத்தனை நேரம் அமைதியாக நின்றவள் உடனடியாக அவர் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தாள்.
“முடியாது பா… நான் அந்த வீரேந்திரன் பத்தி அப்படி எழுதுனது வேணா தப்புன்னு ஒத்துக்கிறேன்… ஆனா அதுக்காக நீங்க சொல்ற மாதிரி என்னால உடனே கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது… ஒரு வேளை உங்களுக்கு நான் இந்த வீட்டில இருக்கிறது பிடிக்கலன்னா சொல்லுங்க... நான் போயிட்டே இருக்கேன்” என்றவள் படபடவென பொரிந்து தள்ள,
"ஆமாம் பிடிக்கல... உன்னாலதான் எனக்கு எல்லா பிரச்சனையும்” என்றவர் பட்டென சொல்ல அவள் அதிர்ந்து நின்றாள்.
“ஆனா நீ இப்படியே வெளியே போனேன்னா அதுவும் எனக்கு கெட்ட பேர்தான்... அதனால உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... போயிடு" என்று அவர் மேலும் உரைக்க, தமிழ் கண்களில் நீர் நிறைந்தன.
இதைவிடவும் அவளை வேறெந்த வார்த்தைகளும் காயப்படுத்தி விடவே முடியாது. இப்படியான சூழ்நிலையில் பரிந்து பேச வேண்டிய அம்மா என்ற உறவு அவளுக்கு ஆதியிலேயே இல்லையென்றால் உறுதுணையாக நின்ற தாத்தாவும் இப்போது இல்லை.
அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "முடிவு எடுத்திட்டீங்க இல்லப்பா... அதுப்படி பண்ணுங்க... எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சாலும் சரி... இல்ல கருமாதியே பண்ணாலும் சரி... நான் அதுக்கு ஒத்துக்கிறேன்" என்று சொல்ல, விக்ரமவர்மன் அதிர்ந்த பார்வைப் பார்த்தார்.
அவள் அதன் பின் தன் தாத்தாவின் படத்தின் முன்னிலையில் நின்று, "இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குல்ல தாத்தா... இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம்... நீங்க மட்டும்தான் காரணம்... அப்படி ஒரு உயிலை நீங்க எழுதி வைக்காம இருந்திருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்… உங்க பிள்ளையும் என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு இப்படி டார்ச்சர் பண்ணி இருக்கமாட்டாரு” என்று பொறுமியவள்,
“நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க தாத்தா... இனிமே என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் சரி... அதுக்கு நீங்கதான் பொறுப்பு... நீங்க மட்டும்தான் பொறுப்பு" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன்னறைக்குச் சென்றுவிட்டாள்.
தேவிக்கு தமக்கையின் நிலையை எண்ணிக் கவலையாக இருந்தது. அதேநேரம் தந்தையின் மீது கோபமாக வந்தது.
விக்ரமவர்மனும் ஒரு வகையில் மகளின் வார்த்தைகளைக் கேட்டு உடைந்துதான் போனார். அப்போது பார்த்து உள்ளே நுழைந்த ரவிவர்மனிடம் விஜயா நடந்த நிகழ்வுகளைச் சொல்லி சந்தோஷப்பட, அவன் முகமெல்லாம் புன்னகை.
தான் வைத்தக் குறித் தப்பாமல் இலக்கைத் தாக்கிவிட்டதாக குரூரமாக மனதில் எண்ணியவன், 'இன்னும் முடியல தமிழ்... இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு... அதுக்குள்ள உடைஞ்சிட்டா எப்படி?' என்று தனக்குள் சிறு வயதிலிருந்து தேக்கி வைத்திருந்த பழியுணர்வை அவள் மீது விஷமாகக் கக்க சமயம் பார்த்திருந்தான்.
5