மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 9 & 10
Quote from monisha on November 2, 2021, 7:08 PM9
ஸ்வேதாவை அங்கே பார்த்த நொடி வீரேந்திரனின் முகம் களையிழந்து போனது. அவள் பார்வையிலும் பேச்சிலும் அவள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவன் ஒருவாறு கணித்துவிட்டான்
"எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்… வா" என்று அவன் அவளை அங்கிருந்து அழைத்து சென்றுவிட எண்ணினான். ஆனால் அவளோ பிடிவாதமாக,
"விடு வீர்... எனக்கு இங்க இப்பவே பேசணும்… இல்லன்னா என் லைஃப்பே மொத்தமா ஸ்பாயிலாயிடும்?!" என்றாள்.
“என்ன சொன்ன? உன் லைஃப் ஸ்பாயிலாயிடுமா?” என்றவன் பார்வை அதிர்ச்சியைக் காட்ட, ஸ்வேதா அலட்சியமாக நின்றாள். அந்தச் சொற்கள் அவன் மனதை ஆழமாகக் காயப்படுத்தியது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கிடையில் தான் நிற்பது சரியில்லை என்று எண்ணிய தமிழ் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது,
"எங்கே அதுக்குள்ள, வெயிட் பண்ணுங்க" என்று அவளைப் போகவிடாமல் ஸ்வேதா நிறுத்த, தான் தேவையில்லாமல் இவர்களுக்கு இடையில் வந்து சிக்கிக் கொண்டோமோ என்றவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“அவங்களைப் போக விடு ஸ்வேதா” என்று வீரேந்திரன் சொல்ல,
"நீ முதல இவங்களுக்கும் உனக்கு என்ன ரிலேஷன்ஷிப்னு சொல்லு வீர்… அப்புறம் அவங்களைப் போக விடுறேன்" என்று ஸ்வேதா சொல்லவும் வீரேந்திரன் தமிழ் இருவரின் முகமும் அதிர்ச்சியைக் காட்டியது.
"நீ ஏதாச்சும் புரிஞ்சுதான் பேசுறியா ஸ்வேதா” என்று அவன் கேட்க,
"அப்போ உனக்கும் இவங்களுக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல?” என்றவள் அதே கேள்வியில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கடுப்பேறியது. இருந்தும் அவன் மிகப் பிரயாத்தனப்பட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினான்.
"நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல ஸ்வேதா… இன்னும் கேட்டா அவங்க பெயர் கூட எனக்கு சரியா தெரியாது..." என்று வீர் தெளிவுப்படுத்த, அவள் மனம் அதனை ஏற்கவில்லை.
“அதெப்படி வீர்… பேர் கூட தெரியாதுன்னு சொல்ற… ஆனா அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல மீட்டிங்... இன்னைக்கு ஜாகிங் பிளேஸ்ல மீட்டிங்” என்று நிறுத்தி அவனை வெறுப்பாகப் பார்த்தவள்,
“உன் ஃப்ரண்ட்ஸ்லாம் சொல்லும் போது கூட நான் நம்பல... ஆனா இப்போ இங்கே நடந்தது எல்லாம் பார்க்கும் போது… நீ கண்டிப்பா காலேஜ் டேஸ்ல பிளே பாயாதான் இருந்திருப்பன்னு தோணுது" என்றாள்.
“ஸ்வேதா…” என்றவன் கோபமாகப் பல்லைக் கடிக்க, அத்தனை நேரம் அமைதி காத்த தமிழ் ஸ்வேதாவிடம்,
“நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டுப் பேசிட்டு இருக்கீங்க மிஸ். ஸ்வேதா” என்றாள்.
“நான் தப்பா புரிஞ்சிட்டுப் பேசிட்டு இருக்கேனா? அப்போ இங்கே நான் என் கண்ணால பார்த்தது எல்லாம் பொய்யுங்குறியா”
“நாங்க என்ன பேசிட்டு இருந்தோம்னு தெரியுமா உனக்கு” என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் சீற்றமாகப் பொங்கினான்.
“அதான் பார்த்தேனே… இரண்டு பேரும் சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டு இருந்தீங்களே… அதுக்கும் மேல பப்ளிக் பிளேஸ்னு கூட பார்க்காம பண்ணீங்க பாரு ஒரு ரொமேன்ஸ்” என்றவள் உதட்டை ஏளனமாகச் சுழித்தாள்.
“உன்கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட்… எப்படியோ போ” என்றவன் அதற்கு மேல் அவளுக்கு விளக்கம் தர விரும்பாமல் திரும்பி நடக்க,
"ஆமா ஆமா என்கிட்ட பேசுறது வேஸ்ட்தான்… உனக்குன்னுதான் வந்து விழுறாளுங்களே” என்றவள் பார்வை தமிழை நோக்க, வீர் பொறுமையிழந்தான்.
“போதும் நிறுத்து ஸ்வேதா” என்று அவன் திரும்பி கோபமாகக் கத்திவிட்டான்.
“நிறுத்த முடியாது” என்றவள் அடுத்த நொடியே, “அந்த மேகஸின்ல உன்னைப் பத்தி வந்ததெல்லாம் உண்மையோ பொய்யான்னு நான் கூட குழம்பினேன்... பட் அதெல்லாம் நூறு சதவீதம் உண்மைதான்" என்று சொல்ல, வீரேந்திரனின் விழிகள் அந்த நொடி தமிழை நோக்கியது.
‘ஐயோ! இதென்னடா வம்பா போச்சு’ என்று உள்ளுர பதறிய தமிழ் உடனடியாக, “இவ்வளவு நேரம் உங்க பெர்சனல்னுதான் நான் தலையிடாம அமைதியா இருந்தேன் ஆனா இதுக்கும் மேலயும் அமைதியா இருந்தா அது தப்பாயிடும்” என, ஸ்வேதா அலட்சியமாகப் பார்த்தாள்.
“ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கோங்க ஸ்வேதா… ஓர் ஆணும் பெண்ணும் சிரிச்சு பேசிட்டு இருந்தா அது தப்பான ரிலேஷனஷிப்பாதான் இருக்கணும்னு இல்ல… அதுவும் இந்தக் கால பொண்ணா இருந்திட்டு நீங்க அப்படி யோசிக்கிறது ரொம்ப ரப்பிஷா இருக்கு… அதிலயும் நான் ஒரு ஜர்னலிஸ்ட்… அவர் ஒரு போலீஸ்... இயல்பா நாங்க சிரிச்சு பேச நிறைய காரணங்களும் விஷயங்களும் இருக்கலாம்... ஆனா இங்கே நான் ஏசிபி சாரைப் பார்க்க வந்தது அப்படியான எந்தக் காரணங்களுக்காகவும் இல்ல” என்றதும் ஸ்வேதா புரியாமல் பார்த்தாள்.
“உங்களுக்கு ஷாக்கான ஒரு விஷயம் சொல்லட்டுமா… நான்தான் அவரைப் பத்தி மேகஸின்ல தப்பு தப்பா எழுதின தமிழச்சி” என ஸ்வேதா வாயடைத்து நின்றாள்.
“ஆனா அது என்னோட தப்புதான்… நான்தான் சரியா விசாரிக்காம அப்படியொரு விஷயத்தை எழுதிட்டேன்… அதை புரிஞ்சிகிட்டுதான் ஏசிபி சார்கிட்ட மன்னிப்பு கேட்கலாம்னுதான் இங்கே வந்தேன்... ஆனால் ஏசிபி சார் என்கிட்ட பேச கூட விருப்பப்படல... நான்தான் வலுகட்டாயமா வந்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்காகப் பேசினேன்… இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று தெளிவாக ஸ்வேதாவிற்கு புரிய வைத்தவள் வீரேந்திரனிடம் வந்து,
"ஸாரி ஏசிபி சார்... என்னால உங்களுக்கு நிறைய பிரச்சனை... தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாத்துக்கும் நானே காரணமாயிட்டேன்... இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னா இனிமே நாம இரண்டு பேரும் மீட் பண்ணிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்... இதுவே நம்ம லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... குட் பை" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் விலகி தூரமாக செல்ல செல்ல அவனின் பார்வை அவளுடனே சென்றுக் கொண்டிருந்தது. ஏதோவொன்று அவளிடம் அவனை காந்தமாக ஈர்த்தது
அப்போது ஸ்வேதா மெல்ல வீரேந்திரன் அருகில் வந்து நின்றபடி, "சாரி வீர்... நான் அவசரப்பட்டுப் பெரிய தப்பு செஞ்சிட்டேன்" என,
"யூ ஆர் ரைட்... பெரிய தப்புதான்... பட் அது இன்னும் பெரிசாகாம இப்பவே நாம அந்தத் தப்பைத் திருத்திக்குவோம்" என்றான்.
“கரெக்ட்தான்… இனிமே நான் இந்த மாதிரி தப்பு" என்று அவள் சொல்லும் போதே அவளைக் கையமர்த்திவிட்டு,
"நான் தப்புன்னு சொன்னது நீ என்னை சந்தேகபட்டதை இல்ல... நமக்கு முடிவாயிருக்கிற கல்யாணத்தைப் பத்தி... இப்ப நாம அந்தத் தப்பைத் திருத்திக்கலன்னா... அப்புறம் நாம வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... ஏதோ கோபத்தில சொல்றேன்னு நினைக்க வேண்டாம்... நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகவும்தான் சொல்றேன்... என்னை விட பெட்டரான ஒருத்தனா... உன்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவனா... நீ நல்லா புரிஞ்சிக்கிட்டவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ" என்றவன் நிதானமாக, "பெட்டர் வீ கேன்ஸல் திஸ் மேரேஜ்" என்றான்.
ஸ்வேதா அதிர்ச்சியானாள். "பட் வீர் நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்துநாள்தான் இருக்கு"
"பத்துநாள்தான் இருக்கா? அது உனக்கு இப்பதான் தெரிஞ்சிதா? நீ அவசரப்பட்டு வார்த்தைய விட்டியே, அப்ப தெரியலயா ஸ்வேதா?" என்று கேட்க குற்றவுணர்வில் அவள் தலை தாழ்ந்தது.
"லிஸன்... பத்து நாளுக்காகப் பார்த்தா அதுக்கப்புறம் வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... இப்ப ஏத்துகிறதுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும்... அப்புறமா இந்த முடிவில இருக்கிற நல்லது... உனக்கே புரியும்" என்று அவன் சொன்ன நொடி ஸ்வேதாவிற்கு தன் தவறு புரிந்தது. அதேநேரம் அவனை சமாதானப்படுத்தி திருமணதிற்கு சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையற்றுப் போனது.
ஏனெனில் அவன் பேச்சில் அத்தனைத் தெளிவும் தீர்க்கமும் வெளிப்பட்டது. அவன் வார்த்தைகளை மீறி எதுவும் பேசமுடியாமல் அவள் மனச்சோர்வோடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.
ஆனால் வீரேந்திரனோ அந்த இடத்தை விட்டுச் செல்ல முடியாமல் ஏதோ புரியாத தவிப்போடு கடலலைகளின் மீது பார்வையைப் பதித்தபடி நின்றிருந்தான்.
முந்தியடித்துக் கொண்டு மேலெழும்பி வந்த கடல் அலைகள் கரையைத் தொட்டதும் நுரையாய் காணாமல் தொலைந்து போவதைப் பார்க்க, வீரேந்திரனுக்கு தமிழின் மீதான வெறுப்பும் கோபமும் கூட அவ்விதமே கரைந்து காணாமல் போய்விட்டதோ எனத் தோன்றியது.
சற்று நேரம் முன்பு... பார்க்க கூட விருப்பப்படவில்லை என நிராகரித்தவளை, இப்போது அவனின் மனம் பார்க்க ஏங்கியது.
தினமும் பரபரவென சுழலும் அவனின் நேரத்தை அன்று தமிழ் களவாடிக் கொண்டுச் சென்றுவிட்டாள்.
இதுவே நம்முடைய கடைசி சந்திப்பு என்று அவள் முடிவாய் சொல்லிவிட்டுப் போக, முதல்முறையாய் அவனின் காதலை அவனே உணர்ந்த தருணம் அது.
10
வீரேந்திரனை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த தமிழின் மனதிலும் லேசான சஞ்சலம் தொற்றிக் கொண்டிருந்தது. அத்தகைய நிலையிலிருந்து விடுபடுவதன் வழியைத் தேடிக் கொண்டிருந்தவளிடம், விக்ரமவர்மன் பல மாப்பிள்ளை புகைப்படங்களை நீட்ட, அவற்றை எல்லாம் அவள் கையில் கூட வாங்க முற்படவில்லை.
"அன்னைக்கு சொன்னதுதான்ப்பா இன்னைக்கும்... உங்க விருப்பம் போல யாரை மாப்பிள்ளையா பார்த்தாலும் எனக்கு ஓகேதான்... ஜஸ்ட் கோஹெட்" என்று அவள் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அந்த வார்த்தையில் அவள் சுட்டிக்காட்டிய விருப்பமின்மையை உணராமல், விக்ரமவர்மன் ஒருவாறு மகளின் சம்மதத்தைப் பெற்றுவிட்டதாக நிம்மதியடைந்தார்.
இங்கே நிலைமை இப்படி என்றால் வீரேந்திரனின் வீட்டிலோ பெரும் கலவரமே வெடித்து கொண்டிருந்தது. அங்கே ஸ்வேதா மற்றும் வீரேந்திரன் குடும்பத்துக்கு இடையில் வீசிய புயலும் சூறாவளியும் வீரேந்திரனையும் அவனின் முடிவையும் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
எல்லோருமே மனதளவில் ஏற்றுக் கொள்ள சிரமமான விஷயம்தான் என்றாலும் வீரேந்திரன் எல்லோருக்குமே தன் நிலைப்பாட்டைப் பொறுமையாய் விளக்கிவிட்டான்.
திருமண ஏற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயின. மகேந்திர பூபதியோ அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். ஊரையே கூட்டி திருவிழா போல், ஏன்? அதற்கும் மேலாக ஆடம்பரத்தின் உச்சத்தில் திருமணத்தை நடத்துவதற்குத் தீட்டிய திட்டம் எல்லாம் மகனின் பிடிவாதத்தால் சிதைந்து போனது.
செலவான பணம் ஒரு பக்கம் என்றால் திருமண அழைப்பிதழ்களை ஊருக்கெல்லாம் வழங்கிப் பெருமையாய் பறைச்சாற்றி வரவேற்ற இந்த நேரத்தில் திருமணம் நடவாமல் போனால் அவருக்குப் பெரும் தலைகுனிவு.
மகேந்திரன் மகனை எப்பாட்டுப்பட்டாவது சம்மதிக்க வைத்துவிடலாம் என அவனை அருகில் அமர வைத்து நீண்ட சொற்பொழிவையே நிகழ்த்திவிட்டார். ஆனால் வீரேந்திரன் சற்றும் அசராமல்,
"என் கல்யாணத்துல அடங்கியிருக்கிற உங்க கௌரவத்தை மட்டும் பார்க்கிறீங்க... அதில அடங்கியிருக்கிற என் வாழ்க்கை... அது உங்களுக்கு முக்கியமா இல்லயா டேட்?" என்று கேட்டான்.
அவனின் தாய் சந்திரா, "கல்யாண விஷயத்திலாயாச்சும் அப்பா சொல் பேச்சைக் கேளு வீர்" என்று மகனிடம் கனிவாக உரைக்க,
"அப்பா சொல் பேச்சைக் கேட்டதினாலதான் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்... ஆனா என்னாச்சு... அவளுக்குப் பெயரளவில் கூட என் மேல நம்பிக்கை இல்லையே... வாழ்க்கை பூராவும் நான் நல்லவன் உத்தமன்னு அவகிட்ட ப்ரூஃப் பண்ணிக்கிட்டே இருக்கணுமா... அப்படி ஒரு வாழ்கையை வாழறதுக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டு போறேன்?" என்று அவன் தன் முடிவில் உறுதியாக நின்றான்.
சந்திரா அதிர்ச்சியடைய மகேந்திர பூபதிக்கோ கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
"இதெல்லாத்துக்கும் அந்த விக்ரமவர்மனோட பொண்ணுதான் காரணம்." என்றவர் சீறவும்,
வீரேந்திரன் புரியாமல், "யாரை சொல்றீங்க?" என்று கேட்டான்.
"உன்னைப் பத்தி தப்பு தப்பா எழுதினாலே அவதான்... அந்த தமிழச்சி … சிம்மபூபதியோட பேத்தி" என்று மகேந்திர பூபதி கொந்தளித்தார்.
“உங்களுக்கு அந்த தமிழ்ச்சியைத் தெரியுமா?” என்றவன் ஆச்சரியமாக வினவவும் மகேந்திரன் அப்போதிருந்த மனநிலைக்கு தனக்கும் விக்கிரவர்மனுக்குமான கொடுக்கல் வாங்கல் அரண்மனை பிரச்சனை என்று ஒன்றுவிடாமல் ஒப்புவித்தவர்,
“நான் இதை சும்மா விடப் போறதில்ல... அந்த விக்ரமனை ஒரு வழி பண்ணிடுறேன்” என்று சீற்றமாகப் பொங்கினார்.
வீரேந்திரனின் போலீஸ் மூளையில் ஏதோ தட்டியது. அவர் சொன்னவற்றை எல்லாம் வைத்து கணக்கிட்டவன்,
"கரெக்ட் டேட்… இதை சும்மா விட கூடாது” என்று தந்தையின் கோபத்தை இன்னும் தூண்டும் விதமாகப் பேசினான்.
“எனக்கு நடந்த அவமானத்துக்கு அவதான் காரணம்… இப்போ என் கல்யாணம் நின்னு போனதுக்கும் அவதான் காரணம்... அவ மட்டும்தான் காரணம்... இப்ப நடந்திட்டிருக்கிற எல்லா குழப்பத்துக்கும் அவதான் காரணம்" என்று அடுக்கி கொண்டே போனவன் இறுதியாக,
"அவ செஞ்சத் தப்பை அவளே சரி செய்யட்டும்... எதுக்காக நீங்க போய் அனாவசியமா உங்க கௌரவத்தைவிட்டுக் கொடுக்கணும்" என்றான்.
"இப்ப நீ என்ன சொல்ல வர்ற வீர்?" என்று மகேந்திரன் மகனின் எண்ணம் பிடிபடாமல் கேட்க,
"அந்த தமிழச்சியையே எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க… அதுவும் எந்த நாள்ல எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிங்களோ... அதே நாள்ல" என்று ஒரே போடாகப் போட்டான்.
சந்திராவிற்கோ அதிர்ச்சி தாங்கவில்லை. "டே வீர்... அந்தப் பொண்ணு ஏதோ தப்பு செஞ்சிடுச்சுதான்... ஆனா அதுக்காகப் போய் இப்படி ஒரு முடிவா?" என்றவர் பதற, மகேந்திரனோ மகன் சொன்னதிலிருந்த லாப நஷ்ட கணக்கைப் போட்டுப் பார்த்துவிட்டு,
"நீ அமைதியா இரு சந்திரா... வீர் சொல்றதுதான் சரி" என்று மகனின் முடிவுடன் ஒத்துப் போய்விட்டார்.
எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் தந்தையும் மகனும் ஒத்துபோகவே மாட்டார்கள். ஆனால் இந்த முடிவில் இருவருமே ஒற்றுமையாய் ஆமோதித்தது சந்திராவுக்குப் பெருத்த ஆச்சர்யமாக இருந்தது. அதேநேரம் உள்ளுர முகம் தெரியாத அந்தப் பெண்ணை எண்ணி வருத்தமாகவும் இருந்தது
ஆனால் மகேந்திரன் அதை பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்கவில்லை. அவர் கண் முன்னே அந்தப் பிரமாண்ட அரண்மனைதான் வந்து நின்றது. இந்த ஒற்றை முடிவால் மகனின் திருமணத்தோடு சேர்த்து அந்த அரண்மனையையும் சொந்தமாக்கிவிட முடியும் எனும் போது அதைச் செய்வதில் ஒன்றும் தவறில்லை என்று அவர் மூளை கணக்கிட்டது. அதேசமயத்தில் இக்கட்டில் இருக்கும் விக்ரமவர்மனை சம்மதிக்க வைப்பதும் சுலபம்தான் எனத் தோன்றியது.
இன்னொருபுறம் வீரெந்திரனுக்கோ தந்தையின் சம்மதம் களிப்படைய செய்ய, அவன் மனம் அந்த நொடியே தமிழச்சியை நினைவுப்படுத்திக் கொண்டது.
'வாடி என் தமிழச்சி... நீ ஏசிபியாதானே என்னைப் பார்த்திருக்க... வீரேந்திரனா பார்த்ததில்லையே... இனிமே பார்ப்ப' என்றான். அப்போதைய அவன் எண்ணத்தில் காதலும் வஞ்சமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
தமிழோ அந்த நேரத்தில் அதீத வேகத்தோடும் சக்தியோடும் அவளைத் தாக்க வரப் போகும் அந்தக் காதல் புயல் குறித்த தகவலைப் பற்றி ஏதுமறியாமல் கனவுலகில் கிடந்தாள்.
அந்த விசாலமான அரண்மனையைச் சுற்றி பார்க்கவே கண்கள் கோடி வேண்டும். பழமையைப் பறைசாற்றும் இருக்கைகளும், கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் தூண்களின் அணிவகுப்புகளும், சுவரில் வண்ணமயமாய் தீட்டப்பட்ட கலைநுட்பமான ஓவியங்களும், அலங்கார பொருட்களும் நடுவே பூக்கள் நிரப்பப்பட்ட பெரிய வட்ட கிண்ணங்களும் சற்று தலையை நிமிர்த்திப் பார்த்தால் உயரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அலங்கார விளக்குகளும் என அந்த இடம் நூற்றாண்டுகள் கடந்து பின்னோக்கிச் செல்ல வைக்க அப்போது ஆஜானபாகுவாய் முகத்தில் ராஜகளையோடு ஒருவர் அரண்மனையின் மைய பகுதியிலிருந்து படிக்கட்டின் வழியாக இறங்கி வந்தார்
கம்பீரமான நடையோடு வந்தவரின் கையைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு துருதுருவிழிகளோடு குட்டித் தேவதையாய் செந்தமிழ் தன் மழலை மாறாத குரலோடுப் பேசினாள்.
"போங்க தாத்தா... எனக்கு இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு"
"தாத்தா சொல்றதைக் கேட்கமாட்ட" என்று அவர் மிரட்டலாய் குரலை உயர்த்த,
"கேட்க மாட்டேன்" என்று அவள் பிடித்தப் பிடியில் நிற்க, பேத்தியின் பிடிவாதத்தைப் பார்த்து அவர் உதட்டில் மெல்லிய புன்னகைத் தவழந்தது.
"என் தமிழச்சிக்கு கோபம் மூக்கு மேல வருதே..." என்றவர் அவள் அருகில் சென்று மூக்கைக் கிள்ளவும், அவளோ கோபத்துடன் அவர் கைகளைவிட்டு ஒரு தூணின் பக்கமாகச் சென்று திரும்பிக் நின்றுகொண்டு,
"போங்க தாத்தா… நான் எங்கயும் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன்" என்று அவளது கொஞ்சும் குரலில் பேசினாள்.
"என் அழகு தமிழச்சி" என்று தன் வலுவான கரங்களால் பேத்தியைத் தூக்கிக் கொண்டவர் இருக்கையில் அமர்ந்து மடியில் அவளை அமர்த்திவிட்டு பொறுமையாக அப்போதைய நிலைமையை எடுத்துரைத்தார்.
"உங்க அப்பனுக்கு நம்ம அரண்மனையைக் கட்டிக் காப்பாத்துற அளவுக்குத் திராணி இல்லையே... நான் என்ன செய்ய... சொத்தை எல்லாம் வித்திட்டு மதராஸ் போய்தான் பிழைப்பு நடத்தனுமாம்... தாத்தாவுக்கும் உங்க அப்பன்கிட்ட மல்லுகட்ட முடியலமா... அரண்மனையாவது நம்ம குடும்ப கௌரவத்திற்காகன்னு சொல்லிக் காப்பாத்தி வைச்சிருக்கேன்... இனிமே நீ பெரியவளான பிறகுதான் இங்க வரணும்... நான் உன் கல்யாணத்தை இங்க நடத்தி அதை கண் குளிர பார்க்கணும்"
"என் கல்யாணமா... அப்படின்னா?" என்று அவள் மிக ஆர்வமாகக் கேட்க,
சிம்மவர்மன் கம்பீரமாக சிரித்துவிட்டு, "என் தமிழச்சியோட கல்யாணம் இந்த ஊரே அசந்து போறளவுக்கு திருவிழா மாதிரி நடக்கும்... நம்ம அரண்மனை எல்லாம் பூவால தோரணம் கட்டியிருக்கும்... வான வேடிக்கை எல்லாம் நடக்கும்... அப்போ என் தமிழச்சியைக் கட்டிக்க ராஜா மாதிரி ஒருத்தன் வருவான்" என்றவர் தன் எண்ணத்தை விவரிக்கலானார்.
"ராஜா மாதிரின்னா... அவன் எப்படி இருப்பான்?"
"உயரமா கம்பீரமா ஊரே அவனைப் பார்த்து மரியாதைக் கொடுக்கும்"
"உயரமான்னா? உங்களை விடவா தாத்தா"
"உயரமான்னா... உடம்பில மட்டும் இல்ல... மனசிலயும்... அவன் இந்த தாத்தாவைப் போல உன்னைத் தங்கமா வைச்சு தாங்குவான்... பாரு" என்றவர் சொல்லவும் அவளின் விழிகள் ஆசையோடு அகல விரிந்தது.
அவள் எதிர்பார்ப்போடு, "அவன் எப்ப வருவான்?" என்று கேட்க
"நீ பெரியவளா ஆனதும்" என்றார்.
"நான் எப்போ பெரியவளாவேன்?"
"நீ தாத்தா மாதிரி உசரமா வளரும் போது"
அவளோ பொறுமையிழந்தவளாய், "உம்ஹும்... எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வையுங்க தாத்தா... நான் என் கல்யாணத்தைப் பார்க்கணும்!" என்று அடம்பிடிக்க,
"அதுக்குள்ள என்னடி அவசரம்... எல்லாம் காலகாலத்தில நடக்கும்" என்று அவள் மென்மையான காதைத் செல்லமாகத் திருகினார்.
"நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் நான் உங்ககிட்ட பேசமாட்டேன்... போங்க தாத்தா" என்று தன் தாத்தாவின் மடியிலிருந்து அவள் திமிறிக் கொண்டு எழுந்து ஓட,
பேத்தியின் அறியாமையைக் கண்டு அவர் கலகலவெனச் சிரித்தார். அவர் சிரிப்பு ஒலி கம்பீரமாய் அந்த அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. அவள் காதில் இப்போதும் அவரின் சிரிப்பின் ஒலி பலமாய் கேட்டுக் கொண்டிருந்தது.
கூடவே அவள் கைப்பேசியும் ரீங்காரமிட குழப்பமான மனநிலையோடு அவள் கனவு கலைந்து விழித்தாள்.
9