மோனிஷா நாவல்கள்
Muran Kavithaigal - 10
Quote from monisha on September 14, 2022, 12:17 PM10
கொரானா இரண்டாவது அலைத் தீவிரமெடுக்கத் தொடங்கியிருந்த சமயம்…
மே மாத வெயில் சுளீரென்று அந்த அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து நிரஞ்சன் முகத்தில் விழுந்தது. அவன் கண்களைச் சுருக்கிக் கொண்டு விழித்துப் பார்த்தான்.
ஜோ அவன் தோள் மீது படுத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் கரங்கள் அவன் இடையை இறுகக் கட்டிக் கொண்டிருக்க, அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவனது வெற்று மார்பின் மீது கிடந்தது.
காதலிக்கும் போதும் கூட இப்படி எல்லாம் நெருக்கமாக இருந்தது உண்டுதான். ஆனால் புது மணத்தம்பதியாக இணைந்திருப்பதில் ஒரு தனி மயக்கம் இருந்தது. அவள் என்னவள் என்று பகிரங்கமாக அறிவிக்கும் திருமணச் சடங்கு அழுத்தமான உரிமையுடன் கூடிய சுதந்திரத்தைத் தந்திருந்தது.
இருவரும் ரிசப்ஷன் மேடையில் ஜோடியாக நிற்கும் போது அவனுக்குள் உலகையே வென்றுவிட்ட அசாத்திய கர்வம் ஏற்பட்டது!
திருமணமாகிய அந்த முதல் வாரத்தில் ஏதோ சொர்க்க லோகத்தில் வாழும் உணர்வுதான். கணவன் மனைவியாக வீட்டில் அடி வைத்தது தொடங்கி இருவரும் டார்ஜிலிங்க் தேனிலவு சென்றது வரை நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் ஒரு அலாதியான சுகம் ஊற்றெடுத்தது.
இருவருக்கும் அந்த வெடவெடக்கும் குளிரில் இரவும் பகலும் மறந்து போனது. தாபத்திலும் மோகத்திலும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து அவர்கள் தனி உலகத்தில் சஞ்சரித்த போதுதான் மாதவனின் அழைப்பும் அதிரடியான தகவலும் அவர்களை ஏதார்த்திற்கு இழுத்து வந்தது.
“இந்த சன்டே லாக்டௌன் அறிவிக்கப் போறதா மெஸேஜ் வருது ரஞ்சன்… அப்புறம் மாநில எல்லையை க்ளோஸ் பண்ணிடுவாங்க… ஏரோப்ளேன்ஸ் ஸ்டாப் பண்ணாலும் பண்ணிடுவாங்க… அதனால இன்னைக்கே டிக்கெட் கிடைச்சா கிளம்பி வந்துர பாருங்க” என்றவர் பதட்டத்துடன் சொல்லவும் அவன் அன்று மாலையே அவர்கள் புறப்படுவதற்கான பயணச்சீட்டைப் பதிவு செய்துவிட்டான்.
அதன் பின்னரே இந்தத் தகவலை அவன் ஜோவிடம் தெரிவிக்க அவள் சீற்றமானாள்.
“வாட் தி ஹெல்… உங்க அப்பா சொன்ன உடனே டிக்கெட் புக் பண்ணிடுவியா? பைத்தியமா உனக்கு? அதெப்படி அப்படி திடீர்னு அறிவிப்பாங்க?” என்றவள் சரமாரியாகக் கத்தத் தொடங்க,
“அப்பா சொன்னா அதுல ஒரு ரீஸன் இருக்கும்… நாம கிளம்பிடுவோம் ஜோ… அப்புறம் இங்கேயே மாட்டிக்கிட்டா” என்றவன் நிதானமாக விளக்கினான்.
“மாட்டிக்கிட்டா என்ன இப்போ… அது இன்னும் சூப்பரா இருக்கும்… ஜாலியா என்ஜாய் பண்ணலாம்” என்று நிலைமைப் புரியாமல் பேசுபவளைப் பார்த்து அவனுக்குக் கோபம்தான் வந்தது.
“இங்கே சிக்னலே இல்ல… பத்து நாளுக்கு மேல இந்த ஏரியால எல்லாம் நம்மால தாக்குப் பிடிக்கவே முடியாது” என்றவன் வாதிட, இருவருக்குள்ளும் வாக்குவாதம் வலுத்தது. ஜோ அங்கிருந்து கிளம்பவே மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
“நீ வேணா போ… ஐ லைக் திஸ் பிளேஸ்… நான் இங்கேதான் இருக்கப் போறேன்” என்றவள் பிடிவாதம் பிடிக்க அவனுக்கு அவளை சமாளித்து இழுத்து வருவதற்குள் பெரும்பாடாகிப் போனது.
வீடு வந்து சேரும் வரை சண்டைக் கோபமென்று கல்யாணமான முதல் வாரத்திலேயே அவர்கள் உறவு அமர்க்களப்பட்டது. ஆனால் அவர்களின் மனஸ்தாபங்கள் தொடங்கிய வேகத்திலேயே தணிந்தும் போனது.
நிரஞ்சன் அவளைத் தன்னறைக்கு அழைத்த வந்த மாத்திரத்தில் அவளை அணைக்க முற்பட, அவள் திமிறிக் கொண்டு விலகினாள். விலக விலக அவன் இன்னும் ஆர்வமாக அவளை அணைத்துப் பிடித்து வலுக்கட்டாயமாக அவள் இதழ்களில் முத்தமிட்டான். அவ்வளவுதான்.
அவனிடம் சரணடைந்துவிட்டாள். பின் மோதல் காதலாகி ஊடல் கூடலாகி என்று இருவரும் இன்பத்தில் திளைத்தனர். ஊடலுக்குப் பின்னான அந்த நெருக்கம் ஒரு புது மாதிரியான கிறக்கத்தை உண்டு பண்ணியது. அவர்களின் அந்த இரவு மிகவும் நீண்டதாக வளர்ந்தது.
இன்னும் அதன் மயக்கம் தெளியாத உணர்வில் ரஞ்சன் அவளின் முகத்திலிருந்த சுருள் முடிக்கற்றைகளை விலக்கிய போது அவளின் செம்மாதுளை இதழ்கள் மிக செழுமையாகத் தெரிந்தன.
தாபத்துடன் மீண்டும் முத்தமிட நெருங்கிய போது எதிரே இருந்த கடிகார முள் காட்டிய நேரத்தைப் பார்த்து தலையை உலுக்கிக் கொண்டான்.
“அட கடவுளே! மணி எட்டு பத்தா?” என்றவன் அவசரமாக அவளை விலக்கிவிட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்து வெளியே வரும் போது மணி எட்டு நாற்பதாகி இருந்தது.
அவசர அவசரமாக ஒரு டீஷர்டையும் ஷார்ட்சையும் அணிந்து கொண்டவன், “ஜோ டைமாச்சு… எழுந்திரு” என்று அவளை உலுக்கினான்.
அவள் கண்களைக் கூட திறக்காமல், “என்ன டைம்?” என்று கேட்க,
“மணி ஒன்பதாகப் போகுது” என்றவன் அதிர்ச்சியுடன் கூற,
“ஒன்பதுதானே… என்னை பத்து மணிக்கா எழுப்பு” என்றவள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் புரண்டுப் படுத்துக்கொண்டாள்.
“ஜோ… நம்ம இப்போ டார்ஜிலிங் ரிஸார்ட்ல இல்ல… வீட்டுல இருக்கோம்” என்றவன் மீண்டும் அவளை உலுக்கவும், “ஸோ வாட்?” என்றாள் அசட்டையாக.
“புரிஞ்சுக்கோ… எல்லாரும் இருக்காங்க… நாம இப்படி ரூம்லயே இருந்தா நல்லாவா இருக்கும்?” என்றவனின் விளக்கமெல்லாம் அவள் செவிக்குக் கூட எட்டவில்லை.
அவள் அடாவடியாகத் தூங்க, “ஜோ எழுந்திரு” என்று அவளைத் தூக்கிப் பிடித்து உட்கார வைக்க,
“ஏன் டா இப்படி என்ன டார்ச்சர் பண்ற… நைட்டு சொல்ல சொல்ல கேட்காம என் தூக்கத்தைக் கெடுத்துட்டு இப்போ வந்து ஒன்பது மணிக்கு எல்லாம் எழுந்திருன்னு சொல்ற” என்றவள் தூக்கக் கலக்கத்துடனேயே பேசினாள்.
“சாரி சாரி… தப்பு என் பேர்லதான்… நீ குளிச்சு முடிச்சு டிஃபன் சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடு… நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றான்.
“அதுக்கு நான் இப்பவே தூங்குறனே” என்றவள் மீண்டும் படுக்கையில் சரிய மீண்டும் அவளை அமர வைத்து, “ப்ளீஸ்… ப்ளீஸ்… இன்னைக்கு ஒரே ஒரு நாள்” என்றவன் கெஞ்சி ஒரு வழியாக அவளை உறக்கத்திலிருந்த எழுப்பிவிட்டான்.
“சரி ஓகே… குளிச்சிட்டு வந்துடு… நம்ம சாப்பிட போலாம்” என்றவன் அவள் கையில் துண்டைத் திணிக்க,
“இவ்வளவு சீக்கிரம் குளிக்கணுமா… நான் வேணா பிரஷ் பண்ணிட்டு வந்து சாப்பிட்டு… அப்புறமா குளிக்கிறேனே” என்றவளை இழுத்துப் பிடித்து குளியலறைக்குள் திணித்து,
“குளிக்காம எப்படி கீழே போக முடியும்… போய் குளிச்சிட்டு வா” என்றான்.
“சரி ஓகே” என்று உள்ளே சென்றவள், “என் பிரஷ் எங்கே? சோப்பு எங்கே? ஷாம்பூ எங்கே?” என்று அவனைக் கேள்வி மேல் கேள்விக் கேட்டு உயிரை எடுத்ததோடு அல்லாமல் அவனையும் உள்ளே இழுத்து போட்டுத் தண்ணீரில் முக்கி நனைத்து ஒரு காதல் லீலையும் செய்து முடித்துவிட்டாள்.
தான் அணிந்திருந்த உடையெல்லாம் நனைந்துவிட்ட கடுப்பில், “ஏன் டி இப்படி பண்ண?” என்று புலம்பிக் கொண்டே உடையை மாற்ற அவள் கண்ணடித்துச் சிரித்து, “தட்ஸ் ரொமேன்டிக் னா” என்றாள்.
“உன்னைக் கொல்லப் போறேன்” என்றவன் அவள் உடையை எடுத்துக் கொடுத்து,
“சீக்கிரம் டிரஸ் பண்ணு… கீழே போலாம்” என்றான்.
“ஓகே ஓகே” என்றவள் ஆடி அசைந்து ஒருவழியாகத் தயாராகி இருவரும் கீழே போகும் போது மணி பத்தே கால் ஆகியிருந்தது.
அவன்தான் சங்கடப்பட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். ஆனால் அவளிடம் அது மாதிரியான எவ்வித உணர்வும் இல்லை.
கீழே வந்ததும் சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மும்முரமாக இருந்த மாதவனிடம், “குட் மார்னிங் அங்கிள்” என்று உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே எதிரே இருந்து சோஃபாவின் பிடியில் சகஜமாக அமர,
“குட் மார்னிங் மா” என்றவர் அவள் அமர்ந்திருந்த விதத்தை கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்து வைத்தார்.
அந்தப் பார்வையை கவனித்த நிரஞ்சன் இடையில் வந்து, “சாப்பிட்டு வரலாம் வா” என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து டைனிங் ஹாலில் அமர வைத்தான். பின் அவளுக்கும் சேர்த்துத் தட்டு வைத்துப் பாத்திரத்திலிருந்த வெண்பொங்கலையும் சாம்பாரையும் பரிமாறினான்.
அவள் ஒரு வாய் வைத்துமே, “வாவ்… நிரு… இட்ஸ் டெலிஸியஸ்” என்று உச்சுக்கொட்டிப் பாராட்டினாள்.
“எங்க அம்மா சமையல் எப்பவும் சூப்பரா இருக்கும்” என்று அவன் பெருமிதமாகச் சொல்ல,
“யா யா ஐ நோ… உன் லஞ்ச் பாக்ஸ்… நான்தானே ஃபுல்லா காலி பண்ணுவேன்” என்றவள் கலகலப்பாகப் பேசி கொண்டிருக்க அவன் மெதுவாகப் பேசும்படி சமிக்ஞை செய்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவே இல்லை.
அப்போது இவர்கள் சம்பாஷணைகளை சமையலறையிலிருந்து கேட்ட ரேணு,
‘ஃப்ரெண்டுக்கு வேணும் ஃப்ரெண்டுக்கு வேணும்னு சொல்லி இவன் நிறைய லஞ்ச் கட்டிட்டுப் போனதெல்லாம் இவளுக்காகதானா?’ என்றவர் முணங்கிக் கொண்டே காய்களை நறுக் நறுக்கென்றுக் கடுப்புடன் வெட்டிக் கொண்டிருந்தார்.
நிரஞ்சன் சாப்பிட்டு முடித்துத் தட்டை எடுத்து வந்து கழுவி வைத்துவிட்டு அம்மாவிடம் திரும்பி, “நீங்க சாப்பிட்டீங்களா ம்மா?” என்று விசாரிக்க,
“பத்து மணி வரைக்கும் சாப்பிடாம இருப்பாங்களா?” என்றவர் அவன் முகம் பாராமலே சொல்ல,
“இன்னும் என் மேல உங்களுக்குக் கோபமா?” என்றவன் அவர் தோளில் கை வைக்கவும் அதனை எடுத்துவிட்டவர்,
“நான் ஏன் பா… உன் மேல கோபப்பட போறேன்… எனக்கு என்ன உரிமை இருக்கு” வெடுக்கென்றுக் கேட்டார்.
அவன் மனம் வேதனையுற்றது.
“ப்ளீஸ் மா… இப்படி எல்லாம் பேசாதீங்க” என, அவர் விடுவிடுவென சமையலறை விட்டு வெளியே வந்தார். உணவு மேஜை மீதிருந்த பாத்திரங்களை அவர் எடுத்து வைத்துவிட்டு சுத்தம் செய்ய எத்தனிக்க, ஜோ சாப்பிட்ட தட்டும் அங்கேயே இருந்தது.
கடுப்புடன் அந்தத் தட்டை அவர் எடுக்க போகும் போது ரஞ்சன் இடையில் வந்து, “நான் எடுக்கிறேன் மா” என்றபடி அதனை எடுத்து சென்று சிங்கில் கழுவி வைத்தான்.
ரேணுவுக்கு இன்னும் அதிக எரிச்சல் உண்டானது.
ஜோஷிகாவோ இது எதையும் கண்டும் காணாதவளாய் தருணுடன் கதையடித்துக் கொண்டிருந்தாள்.
“தருண்… என்ன நீ டல்லா இருக்க?”
“க்ளாஸ் இருக்கு ஜோ” என்றவன் சட்டென்று நிறுத்தி, “அத்தை” என்றான்.
“அத்தையா?” என்றவள் அவனை மேலும் கீழுமாகப் பார்க்க,
“ஆமா… நீங்க ரஞ்சன் மாமாவை கல்யாணம் பண்ணிட்டு இருக்கீங்க இல்ல… அப்போ நீங்க எனக்கு அத்தைதானே” என்றவன் விளக்கம் கொடுத்தான்.
“அத்தையும் வேண்டாம் சொத்தையும் வேண்டாம்… நீ என்னை ஜோன்னே கூப்பிடு”
அவன் தயக்கத்துடன் ஏறிட்டு, “மாமா திட்டுவாரு” என்று அங்கே நின்ற நிரஞ்சனைப் பார்த்தபடி கூற, “திட்டுவானா?” என்றவள் உடனடியாகத் திரும்பி,
“தருண் என்னை ஜோன்னு கூப்பிட்டா திட்டுவியாமே அப்படியா நிரு?” என்று கேட்டாள்.
“பெரியவங்கன்னு ஒரு மரியாதை வேண்டாமா?” என்றவன் பதிலுக்குக் கூற,
“புல் ஷிட் ஆஃப் யுவர் மரியாதை அன்ட் ஆல்… கம்மான் தருண்… நாம ஃப்ரண்ட்ஸ்… ஸோ நீ என்னை ஜோன்னே கூப்பிடலாம்” என்று தருணிடம் சொல்ல, நிரஞ்சன் முகம் சுருங்கிப் போனது.
வீட்டில் எல்லோரும் இருக்கும் போது இப்படியா எடுத்தெறிந்து பேசுவது என்று உள்ளுர அவனுடைய ஈகோ சீண்டப்பட்ட போதும் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அப்போது அவன் செல்பேசி அடிக்க, அதில் ஒளிர்ந்த நண்பன் பெயரைப் பார்த்துவிட்டுப் பேசிக் கொண்டே பின்வாயிலுக்கு நடந்துச் சென்றான்.
சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்த மிருதுளா கண் காட்டி, “உன் பொண்டாட்டி செய்ற அளப்பறையைக் கொஞ்சம் வந்து பாரு” என அவன் புரியாமல் பார்க்க,
“வந்து பாரு” என்றாள் மீண்டும்.
“நான் அப்புறம் பேசுறேன்” என்று பேசியைத் துண்டித்துவிட்டு அவசரமாக உள்ளே வந்தான்.
ஜோ ரிமோர்டும் கையுமாக ஒய்யாரமாக சோஃபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருக்க அவன் திரும்பி புரியாமல் மிருதுளாவைப் பார்க்க,
“உன் பொண்டாட்டி அப்பா டிவி பார்த்துட்டு இருக்கும் போதே இந்த சீரியல் எல்லாம் மொக்கன்னு சொல்லி ரிமோர்ட்டை எடுத்து சேனலை மாத்திட்டு அவ உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கா… அப்பா எழுந்து வெளியே போயிட்டாரு” என்று நடந்ததைக் கூற, அவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.
ஜோ அருகில் சென்றவன் ரிமோர்ட்டை பிடுங்கிக் கொள்ள, “ஏன்டா இப்போ ரிமோர்ட்டை வாங்கின” என்று கடுப்பாகக் கேட்கவும்,
“இங்கே வேண்டாம்… நாம மேலே போய் டிவி பார்க்கலாம்” என்றான்.
“ஏன் இங்கே பார்த்தா என்ன?”
“சொல்றதைக் கேளு… எழுந்து வா” என்றவன் அவள் கையைப் பிடித்து சோஃபாவிலிருந்து எழுப்ப, அறைக்குள் இருந்து உதய், ‘செத்தடா மவனே’ என்று வாயசைத்தான்.
அவன் சமாளிக்க முடியாமல் அவளை இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று, “ஏன் ஜோ… அப்பா டிவி பார்த்திட்டு இருக்கும் போது இப்படியா மேனர்ஸ் இல்லாம் நீ ரிமோர்ட்டை எடுத்து சானல் மாத்துவ” என்று முறைப்புடன் கேட்க,
“இதுல என்ன மேனர்ஸ் இல்லாம… அவர் பார்த்துட்டு இருந்த ப்ரோக்ராம் படு மொக்கையா இருந்தது… அதான் மாத்தினேன்” என்றாள் சாதாரணமாக.
“அப்பாவுக்கு அது பிடிச்சிருக்கு… அவர் பார்க்கிறாரு… நீ இனிமே இப்படி பண்ணாதே… உனக்கு டிவி பார்க்கணும்னு தோனினா நீ மாடிக்கு வந்து நம்ம ரூம்ல பாரு… புரிஞ்சுதா...
அப்புறம்… சாப்பிட்ட தட்டை அப்படியே டைனிங் டேபிள் மேல வைக்கிற பழக்கத்தை இதோட நிறுத்திக்கோ… எடுத்துட்டுப் போய் கழுவி வை.
ஆ அப்புறம்… தருண்கிட்ட போய் மரியாதை புல்ஷிட்னு சொல்ற… அவன் உன்னைக் கூப்பிடுற மாதிரி வேற யாரையாவது கூப்பிட்டானா… தப்பு ஜோ… நீ இப்படியே இருக்கக் கூடாது… கொஞ்சம் உன்னை நீ மாத்திக்கணும்” என்றவன் குரலில் அதிகாரம் இருந்தது. அதீத எரிச்சல் தெரிந்தது. குற்றம் சாட்டும் பார்வையுடன் அவன் பேசியது அவளை ஒரு மாதிரி அவமானப்படுத்தியது.
அந்த அவமான உணர்வு அவள் மூளைக்கு ஏறும்போது உதடுகள் துடித்து கண்கள் சிவந்தன.
வரிசையாக அவன் சுமத்திய குற்றங்கள் எல்லாம் அவள் எப்போதும் இயல்பாக அவள் வீட்டில் செய்யும் விஷயங்கள்.
சட்டென்று அவள் அறையை விட்டு வெளியே நடக்க, “ஜோ எங்க போற?” என்று வினவ,
“நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என்றவள் விறுவிறுவென இறங்கிச் சென்றாள்.
“ஜோ” என்றவன் அழைக்க, அவள் அவனை கவனிக்காமல் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
‘இவ சும்மா போறாளா இல்ல கோச்சிக்கிட்டுப் போறாளா?’ என்று யோசனையுடன் நின்றிருக்கும் போது உதய்யின் கரம் அவன் முதுகில் படிந்தது.
“என்ன மச்சான்? உன் பொண்டாட்டி வந்த முதல் நாளே கோவிச்சுக்கிட்டுப் போறா” என்றான் பதட்டத்துடன்,
“அப்படி எல்லாம் இல்ல மாமா… சும்மா அவங்க அப்பாவைப் பார்த்துப் பேசிட்டு வர போயிருக்கா” என்றான் சமாளிப்பாக.
“டேய் டேய்… நான் உனக்கு சீனியர்… எனக்கு தெரியாதா?” என்றவன் கிண்டலாகக் கேட்க,
“இல்ல மாமா” என்றவன் மீண்டும் மறுக்க,
“சமாளிக்காதே… என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன் கேளு… நீ எங்க வீட்டு வழக்கம் இப்படி அப்படின்னு ஏதாச்சும் சொல்லி இருப்ப… அந்தப் பொண்ணு மூஞ்சி… காத்து போன பலூன் மாதிரி ஆகி இருக்கும்” என, அவன் ஷாக்கடித்தது போல நின்றான். அப்படியே நேரில் பார்த்தது போல சொல்கிறாரே என்று!
உதய் அவன் தோளில் தட்டி, “இது பாரு ரஞ்சன்… ஆரம்ப காலத்துல எல்லா பொண்ணுங்களும் இப்படிதான் இருப்பாங்க உங்க அக்கா உட்பட… ஆனா அவங்க நம்ம மாதிரி இல்ல… சீக்கிரமே நம்ம வீட்டுக்கு ஏத்த மாதிரி அடாப்ட் ஆகிடுவாங்க… இல்லையா… நம்ம வீட்டை அவங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திடுவாங்க… அதுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும்… ஆனா அதுக்குள்ள ஒரு பிரளயமே நடந்து முடிஞ்சிரும்” என, நிரஞ்சனுக்கு வயிற்றில் ஒரு மாதிரி ஜில்லிப்பு ஏற்பட்டது.
“என்ன மாமா சொல்றீங்க?” என்றவன் அதிர்ச்சியாகக் கேட்க,
“இதான் மச்சான் ஃபேக்ட்… ஆனா என்ன… கோபம் வந்தா அம்மா வீடு பக்கத்து ஊர்ல இருந்தாளே பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்பிடுவாளுங்க… நீ வேற மாமனார் வீட்டை எதிர் வீட்டுலயே பிடிச்சிருக்க… தடுக்கி விழுந்தா நேரா அங்கேதான்” என்றவன் சொன்னதைக் கேட்டு அவன் மனதின் பதட்டம் கூடியது.
அடுத்த கணமே அவன் ஜோவின் வீட்டில் இருந்தான்.
“வாங்க நிரஞ்சன்…” என்று அவனைப் பார்த்ததும் வரவேற்ற ஜோசப் அவன் முகபாவத்தைப் பார்த்து,
“ஜோ… மேலே ரூமுக்குப் போயிருக்கா… ஏதோ திங்ஸ் எடுக்கணும்னு சொன்னா” என,
“நான் மேலே போயிட்டு வந்துடுறேன்” என்றவன் தயக்கத்துடன் சொல்லிவிட்டு மாடியேறிச் சென்றான்.
அவள் பாட்டுக்கு சாய்ந்து படுத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு உள்ளுர கோபமேறியது.
‘என்னை மட்டும் டென்ஷன் படுத்திட்டு இவ மட்டும் எப்படி கூலா படுத்திட்டு இருக்கா பாரு’ என்று பொங்கிய மனதை அடக்கியவன், “ஜோ” என்று மெதுவாக அழைத்தான்.
அவள் அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொள்ள, “ஜோ ஐம் சாரி… உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் அப்படி பேசல” என்று இறங்கிப் பேச, அவள் அவன் புறம் பார்வையைத் திருப்பவில்லை.
“ஜோ ஜோ… இங்கே பாரேன்” என்றவன் அவளை இழுத்துப் பிடித்து தன்னைப் பார்க்க வைத்து, “எங்க வீட்டுல இருக்க வரைக்கும்தான் இப்படி எல்லாம்… நம்ம சீக்கிரமே பெங்களூர் போயிடலாம்… அப்போ நீ உன் இஷ்டம் போல இருக்கலாம்” என்றான்.
அவள் அசராமல், “அப்படினா நாம நாளைக்கே பெங்களூர் போலாம்” என்று சொல்ல,
“நாளைக்கே எப்படி ஜோ” என்றவன் கலக்கமுற்றான். அவள் மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஓகே ஓகே… நான் அப்பாகிட்ட பேசுறேன்… லாக்டௌன் வந்தா கூட பரவாயில்ல… நாம அங்கே போய் சமாளிச்சுக்கலாம்” என்றவன் சொல்லவும்தான் அவள் சமாதான நிலைக்கு வந்தாள்.
ஆனால் கொரானா எழுதிய விதி அவர்களை அங்கிருந்து நகரவிட போவதில்லை.
10

Quote from Rathi on September 14, 2022, 7:44 PMNiranjanoda expectationla thappillai. But Jo valarndha vidham...? Seekirama aval poruppaa maaritta elaa prechanaiyum maaridum. Avalukku amma irindhirundha puriya vachiruppanga. Ippa avalukku yaaru puriya vaippaa??
Niranjanoda expectationla thappillai. But Jo valarndha vidham...? Seekirama aval poruppaa maaritta elaa prechanaiyum maaridum. Avalukku amma irindhirundha puriya vachiruppanga. Ippa avalukku yaaru puriya vaippaa??
Quote from monisha on September 15, 2022, 7:36 PMQuote from Rathi on September 14, 2022, 7:44 PMNiranjanoda expectationla thappillai. But Jo valarndha vidham...? Seekirama aval poruppaa maaritta elaa prechanaiyum maaridum. Avalukku amma irindhirundha puriya vachiruppanga. Ippa avalukku yaaru puriya vaippaa??
திருமணம் முடிந்ததும் பெண்கள் அவங்க வீட்டுக்கு ஏத்த மாதிரி மாறனும்னு நினைக்குறாங்க... அது தவறு... அதற்கான காலஅவகாசத்தை அந்த குடும்பம் அவங்களுக்கு தரணும்
Quote from Rathi on September 14, 2022, 7:44 PMNiranjanoda expectationla thappillai. But Jo valarndha vidham...? Seekirama aval poruppaa maaritta elaa prechanaiyum maaridum. Avalukku amma irindhirundha puriya vachiruppanga. Ippa avalukku yaaru puriya vaippaa??
திருமணம் முடிந்ததும் பெண்கள் அவங்க வீட்டுக்கு ஏத்த மாதிரி மாறனும்னு நினைக்குறாங்க... அது தவறு... அதற்கான காலஅவகாசத்தை அந்த குடும்பம் அவங்களுக்கு தரணும்
Quote from Marli malkhan on May 7, 2024, 5:14 PMSuper ma
Super ma