மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 22
Quote from monisha on November 29, 2020, 8:31 PM22
ஆழியின் ஆழம்
அவள் கோபத்தைப் பார்த்த டேவிட், "ஜென்னி காம்டவுன்" என்று அவளை அமைதியடைய முயற்சித்தான். ஆனால் அது சாத்தியப்படவில்லை. அவள் மனமோ ஆர்ப்பரிக்கும் கடலைப் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது.
டேவிட் அவள் எதிர்புறம் வந்து நின்று, "ஏன் இவ்வளவு கோபம்? எது உன்னை இந்தளவுக்கு அப்செட்டாக்குது ஜென்னி?" என்று கேட்க,
"சாக்ஷி... சாக்ஷின்ற பேரு" என்று எங்கேயோ வெறித்தபடி அவள் சொல்லவும் அதிர்ந்தவன்,
"என்ன பேசுறஜென்னி? சாக்ஷிங்குறது உன் பேர்... அதுதான் உன் அடையாளம்... அதெப்படி நீ இக்நோர் பண்ண முடியும்?!" என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து நோக்கியவள், "சாக்ஷி இஸ் நோ மோர் டேவிட்... " என்றாள்.
"வாட் நான்ஸென்ஸ்? எப்படி உன்னால சாக்ஷியை இல்லன்னு சொல்ல முடியுது?!"
"இல்லாத ஒண்ண இல்லன்னுதான் சொல்ல முடியும் டேவிட்"
"அப்போ நீ யாரு?" நேரடியாய் வந்த அவன் கேள்விக்கு தோள்களைக் குலுக்கியபடி, "ஜெனித்தா" என்றாள்.
"ஜெனித்தா உண்மை இல்லை... சாக்ஷிதான் உண்மை"
"அந்த உண்மை எனக்கு வேண்டாம்" தீர்க்கமாய் வந்தது அவள் குரல்.
"அப்போ பொய்யாதான் வாழப் போறியா?"
"உண்மைக்குதான் இந்த உலகத்துல மதிப்பில்லையே... அப்புறம் பொய்யா இருக்குறதுல என்ன தப்பு… ஏன்?... அந்த பொய்யை எனக்கு உருவாக்கித் தந்ததே நீங்கதானே டேவிட்... எதுக்கு நீங்க அப்படி செஞ்சீங்க?" என்ற அவளின் கேள்வி நேரடியாய் அவன் மீது பாய்ந்தது.
"உன்னை சாக்ஷியா வாழ விடமாட்டாங்களே... அதான்... என்னால வேறென்ன செய்ய முடியும் ?"
"செஞ்சிருக்கலாம்... என்னை நீங்க சாக விட்டிருக்கலாம்"
அவளை கூர்ந்து பார்த்தவன் "சாக விடவா... நொடிக்கு நொடி ஐ வான்ட் டூ லிவ்னு சொன்னியே.. மறந்துட்டியா ஜென்னி?!" என்று கேட்டவனிடம்,
"மறக்கல டேவிட்... அப்போ எனக்குத் தெரியல... என் வாழ்க்கை இப்படி தடம் மாறி திசை மாறிப் போகும்னு"
"அப்போ எல்லா தப்புக்கும் நான்தான் காரணம்னு சொல்றியா?"
"நோ டேவிட்... எல்லா தப்புக்கும் ரெஸ்பான்சிபிள் சாக்ஷிதான்... அவ உண்மையான காதலை நம்பல... அவளுக்கு பொக்கிஷமாய் கிடைச்ச நட்பை நம்பல... அவளுக்கு இந்த தண்டனை தேவைதான்... எவிரித்திங் இஸ் பிகாஸ் ஆஃப் ஹர்" அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாய் பார்த்து,
"ஹர்..ரா! நீ வேற யாரையோ பத்தி பேசுற மாதிரி பேசிட்டிருக்க"
"எஸ்... அவ வேற யாரோதான் டேவிட்... நான் அவ இல்ல " என்றாள் அழுத்தமாக!
அவள் சொன்னதை கேட்ட டேவிடால் நம்ப முடியவில்லை. அவன் முன்னே நிற்பது அவள் இல்லைதான். ஆனால் அதெப்படி சாத்தியமானது. தன்னுடைய மொத்த அடையாளத்தையும் தொலைத்து ஒருத்தி இன்னொருவளாக குடிபெயர முடியுமா?
சாக்ஷியின் நினைவுகளை எல்லாம் அவள் மறந்து விட்டாளா அல்லது ஒதுக்கி விட்டாளா? அந்தக் கோரமான விபத்து நடந்த பிறகு அவள் அதிலிருந்து மீண்டு வரவே அவளுக்கு ஒரு வருடம் பிடித்தது. யார் அவள் வாழ்க்கையைச் சிதைத்தது என்பதை அவள் அறிந்திராதுதான் கொடுமை.
ஆனால் அவள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவாளா என்று எண்ணும் போது திடீரென்று வியக்கத்தக்க விதமாய் அவளே அதிலிருந்து மீண்டு வந்தாள்.
இரண்டு வருடத்தில் அவள் ஜென்னியென்ற அடையாளத்தை அவளுக்கே உரியதாக மாற்றிக் கொண்டாள். இனி அவளே ஜென்னி இல்லையென்று சொன்னாலும் இந்த உலகம் நம்பாதே. அந்தளவுக்காய் அந்த அடையாளத்தை அவளோடு பிணைத்துக் கொண்டாள்.
அபரிமிதமான அவளின் வளர்ச்சியோடு சாக்ஷி என்ற அடையாளம் கண்காணாமல் மறைந்து போனது. ஆனால் அவள் இன்று சாக்ஷி என்ற ஒருவளே இல்லையென்று வாதிடுவதுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆழியின் ஆழம் போல அவள் மனதின் ஆழத்தை அவனால் உண்மையிலேயே அளந்து பார்க்கவும் முடியவில்லை. அறிந்து கொள்ளவும் முடியவில்லை.
யோசனையில் நின்றிருந்தவனிடம், "அதைப் பத்தி விடுங்க டேவிட்.... வாங்க உள்ளே போகலாம்" என்று இயல்பான தொனியில் அழைக்க,
"இல்ல ஜென்னி.. நான் கிளம்பறேன்" என்று அவன் மேலே அந்த விவாதத்தை தொடராமல் முன்னேறி நடந்தான்.
"டேவிட் நில்லுங்க" என்று அவள் அழைத்தும் அவன் அதனைக் காதில் வாங்காமல் விறுவிறுவென தன் காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டான்.
ஜெனித்தா அவன் அப்படிப் புறக்கணித்து செல்வதைப் பார்த்து கவலையுற அப்போது ரூபா அவள் பின்னோடு வந்து, "என்னாச்சு ஜென்னி... டேவிட் சார் ஏன் கோபமா போறாரு?" என்று கேட்க,
"கோபமா... சேச்சே அப்படி எல்லாம் இல்ல" என்று சமாளிப்பாய் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.
"ஜென்னி... விக்டர் சார் கால் பண்ணாரு... அதை பத்தி சொல்லலத்தான்" என்றபடி ரூபா அவளைப் பின்தொடர்ந்து வர,
"என்ன சொன்னாரு ரூப்ஸ்?" நடந்தபடியே கேட்டாள்.
"எப்போ மும்பை வர்றீங்கன்னு?"
ஜென்னி பதில் பேசாமல் மௌனமாகிவிட ரூபா அவளிடம், "டிக்கெட் புக் பண்ணிடட்டுமா?" என்று கேட்ட நொடி அவள் அவசரமாய் திரும்பி,
"நோ ரூப்ஸ்... எனக்கு இங்க சில கமிட்மென்ட்ஸ் இருக்கு... அதை முடிச்ச பிறகு போலாம்... நான் டேட்கிட்ட இதைப் பத்தி பேசிக்கிறேன்" என்றாள்.
"என்ன கமிட்மென்ட் ஜென்னி?" ரூபா தெரிந்து கொள்ளக் கேட்க,
"நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுதான் செய்யணுமா ரூப்ஸ்?!"
"இல்ல ஜென்னி... ஜஸ்ட் டூ நோ"
"எல்லாம் தெரியும் போது தெரியும்" என்று இறுக்கமாகச் சொல்லியபடி அவள் வீட்டின் வாயிலுக்குள் நுழைந்தாள். உள்ளே சென்றதும் முகப்பறையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பூங்கொத்துக்கள் மீதுதான் அவள் பார்வைச் சென்றது. கண்ணைப் பறிக்கும் அழகான வண்ண நிற பூக்கள். அனைத்தும் திறப்பு விழாவின் போது அவளுக்குக் கொடுக்கப்பட்டவை.
ஒரு நொடி அவற்றின் மீது பார்வையை செலுத்துவிட்டு கடந்து செல்லப் பார்த்தவள், மீண்டும் எதையோ கண்டு வியப்பில் அதன் புறம் பார்வையைத் திருப்பினாள். அங்கிருந்த சிவப்பு நிற பூங்கொத்தின் மீது அவள் விழிகள் குறி வைக்க, அவள் பார்த்தது அந்த பூங்கொத்தை அல்ல.
அந்தப் பூங்கொத்திற்கு இடையில் சொருகியிருந்த வீணை போன்றிருந்த க்ரீட்டிங் கார்டை!
அதனைப் பார்த்தவள் திகைத்துப் நின்றுவிட ரூபா அவளிடம், "என்னாச்சு ஜென்னி?" என்று கேட்டாள்.
"இந்த ப்ஃளவர்ஸை யார் கொடுத்தது?" விழியை அதன் மீதிருந்து எடுக்காமலே கேட்டாள்.
"எல்லாத்தையும் நீங்கதானே ஜென்னி வாங்குனீங்க"
'நானா! இதை எப்படி கவனிக்காம விட்டேன்' மனதிற்குள் கேட்டுக் கொண்டவள் யார் இதை தன் கரத்தில் தந்திருப்பார்கள். அந்த முகத்தை நினைவுப்படுத்திப் பார்க்க முயன்று அது அவளால் முடியவில்லை. யாரென்று யூகிக்க முடியாத கேள்வி இல்லை. ஆனால் அப்படி இருக்கக் கூடாதென்று அவள் உள்ளம் தவிப்புற்றது.
பதட்டத்தோடு அந்த வீணை போன்ற கார்டை கையில் எடுத்தாள். "வாவ்!! புது டிசைனா இருக்கு... யார் கொடுத்திருப்பா?" என்ற கேள்வியோடு ரூபா வியப்புற,
ஜென்னியின் மனதில் படபடப்பு. அதை செய்தவர்கள் தங்கள் கரத்தாலேயே அதனை வடிவமைத்திருக்கக் கூடும். வீணை போன்ற பாணியில் அத்தனை அழகாய் கத்தரித்து நிறம் பூசி, பார்க்கவே கண்ணைக் கவரும் விதமாய் இருந்தது.
"ஓபன் தி கார்ட் ஜென்னி" ரூபா அவளிடம் சொல்லவும் திறந்து பார்க்கலாமா? என்ற போராட்டம் அவளுக்குள்.
அவள் கரம் அதன் உறுதியை இழந்து நடுக்கமுற, தடுமாற்றத்தோடே அந்த க்ரீட்டிங் கார்டைப் பிரித்தாள். பதட்டம் இருந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கும் என்ற ஆர்வமும் உள்ளுக்குள் எழும்பியது. ஆனால் அவள் திறந்த மாத்திரத்தில் அந்த கார்டினுள் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவிற்குள் இருந்த குரல் பேசத் தொடங்கியது.
'வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு'
இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுக்குள் அவள் நொறுங்கிய உணர்வு. நான் வெளி வந்தே தீருவேன் என அவள் விழியைக் கடந்து வரும் கண்ணீர்.
சிலையாய் நின்றிருந்தவளின் தோளில் கரம் பதித்த ரூபா, "வாட் இஸ் இட் ஸேயிங்?... ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்" என்று கேட்க,
ஜென்னி தன் உணர்வுகளை இறுக்கமாய் உள்ளூர பூட்டிக் கொண்டு, "ஈவன் ஐ டோன்ட்" என்று அப்பட்டமாய் பொய் சொல்லிவிட்டு அவள் அறை நோக்கி விரைந்தாள்.
கதவைத் தாளிட்டுவிட்டு அந்த கார்டை படுக்கை மீது தூக்கி எரிய, அது திறந்து கொண்டு மீண்டும் அதே குரல் பேச... தலை மீது கைவைத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவள் உயிராய் உணர்வாய் தினம் தினம் ஏங்கி ரசித்த அந்தக் குரல் இப்போதும் அவளை சிலிர்ப்படைய செய்தது. அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது பாரதியின் வரிகளா இல்லை அந்த வரிகளுக்கு உயிர் ஊட்டிய அவன் குரலா?
எந்தக் குரல் அவள் உணர்வுகளை எழுப்பிவிட்டதோ... எந்தக் குரல் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தியதோ... அந்தக் குரல் இப்போதும் அத்தகைய வேலையை செவ்வனே அவளுக்குள் செய்தது.
சாக்ஷி இல்லை என்று டேவிடிடம் முன் வைத்த அவள் வாதத்தை அவனின் குரல் ஒரே நொடியில் உடைத்தெறிந்தது. மனதிற்குள் அவள் பூட்டி வைத்திருந்த அவன் நினைவுகளை வாரி இறைத்தது.
நிறமில்லாத முகமில்லாத வெறும் உணர்வோடு மட்டுமே பதிவான நினைவுகள். அந்த நினைவுகளின் ஆழத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
கண்பார்வை வந்த பின்னும் கூட அவனை பார்த்துவிடக் கூடாது என்ற அவள் உறுதியாய் நின்றாள். அவனுக்குள் ஆழமாய் பதிந்திருந்த அவன் குரல் மட்டுமே போதுமென்றிருந்தாள்.
இன்னும் அவள் நினைப்பில் அவன் இருக்கிறான் என அறிந்தபின் அவள் உறுதி தளர்ந்து போனது. அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மலையாய் வளர்ந்து நின்றது.
பார்த்துவிடவே கூடாதென்ற அவள் பிடிவாதம் உடைந்து, அவனைச் சந்தித்து அணைத்துக் கொள்ளத் துடித்தது. இந்தக் கணம் கூட அவனைப் பார்ப்பது அவளுக்குச் சிரமமல்ல. அவனும் ஒரு பிரபலம்தான்.
ஆனால் உயிரற்ற ஜீவனாய் பிம்பமாய் பார்க்க வேண்டுமா?அவனை உயிரும் உருவமாய் பார்க்க விரும்பியது அவள் மனம். அவள் அணைப்போட்டு தடுத்திருந்த அவளின் மொத்த உணர்வுகளும் தன் எல்லைகளை உடைத்து வெளிப்படுமாயின் அது காதல் என்ற நிலைப்பாட்டிற்குள் நிற்க இயலுமா?
22

Quote from Muthu pandi on June 29, 2021, 11:37 PMNice
Nice