You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 48

Quote

48

காழ்ப்புணர்ச்சி

சூரியன் வானவெளியில் பிரவேசித்த அந்தச் சமயம் ஜென்னியும் ராகவின் ஈசிஆர் பங்களாவிற்குள் நுழைந்திருந்தாள். அந்த வீட்டின் வெளித்தோற்றம் அத்தனை பெரியதாக இல்லை எனினும் ஒரே பார்வையில் கவர்ந்திழுக்கும் பேரழகுதான் அது. ஆனால் அந்த அழகைக் கடந்து, அவள் மனம் வேறேதோ விரும்பத்தகாத ஒன்றை அங்கே உணர்ந்தது.

அவள் கார் வாசலில் நுழைய மனோ வெளியே வந்து நின்று அத்தனை பவ்வியமாக அவளை வரவேற்றான். அவள் முன்னமே மனோவிடம் பேசியில் அழைத்து ராகவ் எங்கே இருக்கிறான் எப்போது கிளம்புவான் என அவனுடைய அப்பாய்ன்மென்ட்ஸ் எல்லாத்தையும் விவரமாகக் கேட்டு தெரிந்து கொண்டிருந்தாள்.

அவன் மறுக்க முடியாமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதாய் போயிற்று. ராகவிற்கு எந்தளவுக்கு ஜென்னியின் மீது பைத்தியம் என்று மற்ற யாரையும் விட மனோவிற்கு நன்றாகவே தெரியும்.

மனோ அவளைப் பார்த்து பார்த்து  வரவேற்க, அவள் அந்த வீட்டைச் சுழற்றி ஒரு பார்வை பார்த்தபடி, "ராகவ் எங்கே?" என அதிகாரமாய் கேட்டாள்.

"தூங்கிட்டிருக்காரு மேடம்" தயங்கித் தயங்கி அவன் வார்த்தைகளை உதிர்க்க,

"எந்த ரூம்?" என்று கேட்டவளிடம், "மேலே மேடம்" என்று கை காண்பித்தான்.

அவள் சுழன்று கொண்டு செல்லும் அந்த படிக்கட்டுகளில் ஏற,

"மேடம்" என்றவன் பதறிக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

அவள் மேலே ஏறிய மாத்திரத்தில், "இந்த ரூம்தானா?" என்று எதிரே அவள் கண்ணில் பட்ட அறைக்கதவை காண்பிக்க, "இல்ல மேடம்.. அந்த ரூம்" என்று வேறு ஒரு அறையைக் காண்பித்தான். அவள் அந்த அறைக்கதவை திறக்கப் போக, "மேடம் வேண்டாம்" என்று அவன் படபடப்பாக, அவள் அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கதவைத் திறந்தாள்.

குப்பென்று வீசிய சிகரெட் நெடி அவளை நிலைகுலையச் செய்ய, தடுமாறி நின்றவள் மூச்சை இழுத்துவிட்டு அவளை அவளே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மனோ அச்சம் மேலிட, "நானே உள்ளே போய் பாஸை எழுப்பி கூட்டிட்டு வர்றேன்" என்க,

அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டாள். சிகரெட் துண்டுகளும் காலி பாட்டில்களும் உருண்டபடி கிடக்க அந்த அறையே அலங்கோலமாய் காட்சியளித்தது.

ராகவ் அவன் படுக்கையில் தன்னிலை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். மனோவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவள் அதிகார தோரணையில், "அவரை எழுப்புங்க" என்க,

"மேடம்" என்று அவன் தயங்கினான்.

அவனை அவள் திரும்பி முறைக்க, அவன் அடுத்த நொடியே ராகவின் அருகாமையில் சென்று அவனைத் தட்டி எழுப்பினான். குரல் கொடுத்தும் பார்த்தான். ஆனால் அவன் எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

ஜென்னி பொறுமையிழந்து அருகிலிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தண்ணீரை அவன் முகத்தில் ஊற்ற மனோ அதிர்ச்சியடைந்தான்.

ராகவ் மிரண்டு விழித்தவன், "இடியட் யாரு அது?" என்று  கத்த,

மனோ அவனை நெருங்கியபடி, "பாஸ்" என்று அழைத்தான்.

"ஏன்டா மூஞ்சில தண்ணி ஊத்தின" என்று அவன் சட்டை காலரைப் பிடிக்க,

"பாஸ்... ஜென்னி மேடம் வந்திருக்காங்க" என்றான்.

"உளறாதே... அவளாச்சும் இங்க வரதாச்சும்" என்று அரைகுறையாய் விழித்தபடி அவன் கூறவும் ,

"ராகவ்" என்றவள் அழுத்தமாய் குரல் கொடுக்க, அவன் போதையெல்லாம் சரேலென்று இறங்கிப் போனது. அந்த நொடியே விழிகளை அகல விரித்தவன் மனோவிற்கு அருகில் நிற்பவளைப் பார்க்க, அவனுக்கு தான் பார்ப்பது கனவா நினைவா என கண்டுபிடிக்கவே சில நேரம் பிடித்தது.

அவன் ஷாக்கடித்தது போல உறைந்து போய் அமர்ந்திருக்க,

"நான் வெளியே வெயிட் பண்றேன்... ஃப்ரெஷாயிட்டு வாங்க" என்றவள் உரைத்துவிட்டு அகல, அவளின் குரலில் தெரிந்தது அதிகாரமா அல்லது அலட்சியமா என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.

அவள் வெளியேறும் போது அந்த அறையைப் பார்வையிட்டபடி செல்ல, அவனுக்கு அவமானமாயிருந்தது. பார்ப்பவர்கள் அனைவருமே அவன் புகழ் அழகு வசதியைப் பார்த்து பொறாமை கொண்டதே அதிகம்.

ஆனால் அவள் பார்வையில் மட்டும் தான் தரம் தாழ்ந்து போகிறோம் என்று எண்ணிக் கொண்டவனுக்குள் உள்ளுக்குள் கோபமும் எரிச்சலும் உண்டாக அதை அருகாமையில் நின்றிருந்த மனோவிடம் காண்பித்தான்.

ராகவ் அறைந்த அறையில் மனோ வலியோடு, "பாஸ்" என்க

"இடியட்... ஏன்டா அவளை ரூமுக்குக் கூட்டிட்டு வந்த?" என்று ஆவேசமாய் கேட்டான்.

"இல்ல பாஸ்... நான் எவ்வளவோ சொன்னேன்... அவங்கதான் கேட்காம ரூமுக்குள்ள வந்துட்டாங்க" கன்னத்தைத் தடவியபடி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவ் தன் அறையில் சிதறிக் கிடந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தவனுக்குக் கோபம் அதிகரித்தது.

"ஏன்டா ... ரூம் இப்படி இருக்கு... க்ளீன் பண்ண சொல்லியிருக்கலாம்ல"

"இல்ல பாஸ்... நீங்க தூங்கிட்டிருக்கும் போது எப்படி? அதுவும் இல்லாம ஜென்னி மேடம் வருவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?" என்றவன் கேட்க, ராகவ் மனமோ அந்த காரணங்களைக் கேட்டு ஆறுதலடையவில்லை.

"ஆமா... ஜென்னிக்கு நான் இங்க இருக்கேன்னு எப்படி?" யோசனையோடு கேட்டு அவன் மனோவை ஏறிட்டு பார்த்தான்.

"இல்ல பாஸ்... மேடம்தான் நீங்க எங்க இருக்கீங்க என்னன்னு?" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவின் பார்வை அனலைக் கக்க ஆரம்பித்தது.

"ஸாரி பாஸ்" என்று தயக்கத்தோடு அவன் பின்வாங்க, "கெட் அவுட்" என்று ராகவ் கத்தினான்.

மனோ தப்பித்தால் போதும் என அறைக்கதவை மூடிவிட்டு வெளியேறினான். ஜென்னி ராகவுக்காக அந்த வீட்டின் முகப்பறையில் காத்திருக்க, அவன் இறங்கிவந்து அவள் அருகாமையில் வந்து நின்றான்.

அவள் இளக்காரமான புன்னகையோடு அவனை நோக்கியவள், "நைட் அடிச்சதெல்லாம் இறங்கிடுச்சா?!" என்று  கேட்க,

அவன் பார்வையைச் சுழற்றிவிட்டு, "வெளியே போய் பேசுவோம் வா" என்றழைத்தான்.

"ஹ்ம்ம் ஒகே" என்றவள் அவனோடு வெளிபுறம் வர, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

நேற்று அந்தளவுக்குத் தன்னை அவமானப்படுத்திவிட்டு இன்று எதுவுமே நடக்காததை போல் அவள் வந்து நிற்பதை பார்த்து அவனுக்குக் கடுப்பாகி இருந்தது.

அவள் அவனைத் தள்ளிவிட்ட மறுகணமே  ரௌத்திரமாய் நோக்கி, "யூ ஆர்... ஸோ டிஸ்கஸ்டிங்" என்றவள் கொந்தளித்தாள். அவன் அப்போதுதான் தன் தவற்றை உணர,

அவள் மேலும், "ரூமுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணுங்கிற அடிப்படை மேனர்ஸ் கூட தெரியாதா?!" என்று அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

"ஜென்னி" என்றவன் பேச எத்தனிக்கும் போதே,

"எதுவும் பேச வேண்டாம் ராகவ்... முதல்ல வெளியே போங்க" என்றாள்.

"ஜென்னி லிஸன்" என்றவன் பொறுமையாக எடுத்துரைக்க நினைக்க, அவள் விழிகளை விரித்து, "கெட் அவுட் ஐ ஸெட்" என்றாள் அழுத்தமாக!

அவள் வார்த்தைகளால் உச்சபட்ச அவமானத்தை எட்டியவனுக்கு அத்தனை கோபம் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வெளியேறினான்.

இதுவரையிலும் யாருமே இப்படி அவனிடம் நடந்து கொண்டதில்லை. அப்படி நடந்து கொண்டால் அவர்களை அத்தனை சாதாரணமாய் விட்டுவிட மாட்டான். ஆனால் இவளை எதிர்த்துக் கொண்டு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட ஏனோ அவனுக்கு மனம் வரமாட்டேன் என்கிறது.

இப்போது கூட தன் கண்ணெதிரே அவள் இருக்க, அவளை எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு நடந்து வந்து கொண்டிருந்தான்.

"ரொம்ப கோபமா இருக்கீங்களோ?!" என்று யதார்த்தமாக அவள் கேட்க, "பின்ன" என்று அவன் கடுப்பாய் பார்த்தான்.

"நான் மேனர்ஸ் இல்லாம உங்க ரூமுக்குள்ள நுழைஞ்சதும் உங்களுக்கு எப்படி ஜெர்காச்சு... அப்படிதான் எனக்கும்?!" என்றவள் சொல்ல,

"என்ன பழிக்குப் பழியா?!" கேட்டு விழிகள் இடுங்க அவளைப் பார்க்க,

"சில உணர்வுகளை வார்த்தையால சொன்னா புரிஞ்சுக்க முடியாது ராகவ்... அதான் நான் ஃபீல் பண்ணதை உங்களுக்கு ஃபீல் பண்ண வைச்சேன்" என்று சொல்லியவளின் இதழ்களின் தவழ்ந்த புன்னகை அவன் கோபத்தை விரட்டியடிக்க,

அவளின் பேச்சோ... பார்வையோ... முகமோ... அல்லது அவள் திமிரோ... ஏதோ ஒன்று தன்னை அவள் வசமிழுக்கிறது என்பதாகத் தோன்ற,

 உண்மையிலயே அவளின் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என யோசிக்கத் தொடங்கினான்.

அவன் சிந்தனையை அவள் கலைத்தபடி, "ஆமாம் கோபமா இருந்தா டிரிங்ஸ் சாப்பிடணும்... ஸ்மோக் பண்ணணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?" என்று கேட்டவளின் பார்வையில் கோபம் தெறிக்க,

"அப்படி ஒரு ரூல்ஸ் இருக்கான்னு எனக்கு தெரியல... ஆனா நீ போட்ட ரூல்ஸை பிரேக் பண்றதுக்காகவே நான் குடிச்சேன்" எகத்தாளமாகவும் கொஞ்சம் கோபமாகவும் அவன் எடுத்துரைக்க,

"நீங்க பிரேக் பண்ணிட்டீங்கன்னும் போது நானும் உங்களுக்குக் கொடுத்த பிராமிஸை பிரேக் பண்றதுல தப்பில்லை இல்ல" புருவத்தை ஏற்றி அவள் கேட்கவும்,

"ஜென்னி நோ... நான் ஏதோ கோபத்துல பண்ணிட்டேன்" என்று அவன் பதட்டமாக உரைக்க,

"ஹ்ம்ம்... இப்பவே நீங்க கொடுத்த பிராமிஸை கீப் அப் பண்ணலன்னா... மேரேஜுக்கு அப்புறம் எப்படி ராகவ்?" என்று அவள் கேட்டு அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

"நான் செஞ்ச ஒரு தப்பை வைச்சு என்னைக் கார்னர் பண்ணாதே... உனக்காக நான் என்னவெல்லாம் விட்டுகொடுத்திருக்கேன்... அதைப் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு?!" கெஞ்சலாக அவன் உரைக்கவும்,

"அப்படி என்ன விட்டுகொடுத்தீங்க?"   அவள் அலட்சியமாய் கேட்டாள்.

"நான் அவார்ட் ஃபங்க்ஷன்ல உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொன்னதுனால... என் டேட் கூட எனக்கு அவ்வளவு பிரச்சனை... அவர்கிட்ட உங்க சொத்தும் வேண்டாம் ஓண்ணும் வேண்டாம்னு நான் அவரை விட்டு இங்க வந்து தனியா இருக்கேன்... தெரியுமா உனக்கு?" என்றவன் கேட்க அவள் புருவங்கள் முடிச்சிட்டது.

அவன் மேலும், "ஏன்? அன்னைக்கு நீ என் காரை டேமேஜ் பண்ணதுக்காக என் ஸ்டேட்டஸ் இமேஜைப் பத்தி கூட கவலைபடாம  ரோட்ல நின்னு சண்டை போட்டேன்... நேத்து வரைக்கும் நீ சொன்ன ஒரூ காரணத்துக்காக டிரிங்கிங் அன் ஸ்மோக்கிங் கூட நிறுத்தியிருந்தேன்...

ஆனா நீ எனக்காக எதாவது ஒரு விஷயத்தை இழுந்திருக்கியா இல்ல  கொஞ்சமாச்சும் இறங்கி வந்திருக்கியா?!” என்றவன் உச்சபட்ச கோபத்தில் படபடவென பொறிந்து தள்ள,

"என்ன கேட்டீங்க? ஏதாச்சும் இழந்திருக்கியானா?" அவள் கனலேறிய பார்வையோடு அவனை நோக்கினாள்.

"அப்படி என்னடி இழந்திருக்க?" என்றவன் பார்வையும் சீற்றமானது.

பதிலின்றி அவள் சிறிது நேரம் மௌனமாயிருக்க, "என்ன? ஸைலன்டாயிட்டீங்க... எதுவும் சொல்றதுக்கு இல்லையா?!" என்று எள்ளி நகைத்தான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேனே... அதுவே பெரிய  காம்ப்ரமைஸ்... இல்லையா?" என்றவள் சொல்ல,

"என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறதே காம்ப்ரமைஸா? திஸ் இஸ் டூ மச் ஜென்னி.. இந்த ராகவை கல்யாணம் பண்ணிக்க எத்தனை பேர் க்யூல நிற்கிறாங்க தெரியுமா?" என்றான் கர்வமான பார்வையோடு!

"ஹ்ம்ம்... உண்மைதான்... ஆனா அவங்களுக்கு எல்லாம் ராகவை ஹீரோவாதான் தெரியும்... ஆனா எனக்குதான் ராகவ்குள்ள இருக்கிற வில்லனைத் தெரியும்" என்றவள் சொல்லும் போது அவள் இதழ்களில் இழையோடிய புன்னகை அவனை ஆழ்ந்து தாக்கியது.

அவளின் எண்ணம் என்ன என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.

அவளே மேலும், "பட் ஹீரோவை விட வில்லனை மேரேஜ் பண்ணிக்கிறது சேஃப் அன்ட் குட்... இல்லையா ராகவ்? தர்மனோட மனைவியா இருக்கிறதை விட துரியோதனோட மனைவியா இருந்துட்டுப் போயிடலாம்" என்று அவள் சொல்லி சிரிக்க,

"உன் பேச்சுல ஏதோ உள்குத்து இருக்கு" என்றவன் சந்தேகமாய் பார்த்தான்.

மீண்டும் அவள் சிரித்தபடி, "ஆஹான்" என்று கேட்டாள்.

"உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல" என்று அவன் குழப்பமாய் நோக்க,

"என்னை நீங்க புரிஞ்சிக்குற நாள் ரொம்ப தூரத்தில இல்ல" என்றாள்.

"இதுக்கு என்ன அர்த்தம்... நம்ம மேரேஜ் சீக்கிரமா வைச்சுக்கலாம்னா?" என்றவன் கேட்டு புன்னகைக்க,

"நான் அப்படி சொல்லல"

"பட் எனக்கு அப்படிதான் அர்த்தமாச்சு" என்று அவன் அழுத்தமாய் உரைக்கவும்,

"கமான் ராகவ்... நம்ம இரண்டு பேரும் லைஃப்ல சாதிக்க நிறைய இருக்கே... அதுக்குள்ள மேரேஜ் னா"

"அதெல்லாம் அப்புறம் கூடப் பார்த்துக்கலாம்... எனக்கு நம்ம மேரேஜ் உடனே நடந்தாகணும்" என்று அவன் அதிகார தொனியில் சொல்ல,

"உடனே ன்னா எப்போ?" யோசனைகுறியோடு பார்த்தாள்.

"பெட்டர் திஸ் மன்த்" என்றான்.

அவள் அதிர்ந்து பின் மீண்டவள், "நோ ராகவ்... தட்ஸ் நாட் பாஸிபிள்" என்றாள்.

 "ஒய்?"  என்று அவன் அழுத்திக் கேட்டான்.

"சையத்தோட மூவி... அது முடியட்டுமே" என்றவள் சொல்ல,

அவன் எரிச்சலாகி, "அந்த மூவி இப்போதைக்கு பாஸிபிள் இல்லை... என் டேட் என் மேல கோபமா இருக்காரு... ஸோ வாஸன் ப்ரொடக்ஷன்ஸ் அந்த படத்தைப் பண்ண மாட்டாங்க" என்றவன் தீர்க்கமாக உரைத்தான்.

"அப்படின்னா அந்த படத்தை பிரொட்யூஸ் பண்ற பொறுப்பை நான் ஏத்துக்குறேன் ராகவ்... யூ டோன்ட் வொர்ரி" என்றவள் சொன்ன நொடியே அவன் அதிர்ந்து போனான்.

"நோ ஜென்னி... நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்லை... இட்ஸ் அ பிக் ரிஸ்க்" எச்சரிக்கையாய் அவன் உரைக்க,

"லைஃப்ல எல்லாமே ரிஸ்க்தான்... பார்த்துக்கலாம்" என்றவள் தீர்க்கமாக  சொல்லி முடித்தாள். அவன் அதற்கு மேல்  அவளிடம் தடை சொல்ல முடியாமல் அமைதியானான்.

அவர்கள் நடந்து கொண்டே அந்த வீட்டின் நீச்சல்குளத்தருகே வந்துவிட, ஜென்னியின் பார்வை அதன் மீது பதிந்தது. அவள் முகமெல்லாம் வியர்த்துப் போக, அவளைப் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவள் விழிகள் படபடக்க அதனை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்த்தபடி,

"நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேன்... நான் நாளைக்கு ஒரு பிஸ்ன்ஸ் கான்பிரன்ஸுக்காக டேட் கூட மலேசியா போறேன்... வர டென் டேஸாகும்" என்க,

"டென் டேஸா?!" என்று அவன் கேட்டு அதிர்ச்சியானான்.

"அதுக்கு மேலயும் ஆகலாம்... மும்பைல  ஒரு ஹேட் ஷுட் வேற இருக்கு" என்றவள் சொல்லிவிட்டு அவன் எதுவும் பேசுவதற்கு முன்னதாக,

"டைமாச்சு ராகவ்... நான் கிளம்பறேன்... அன்ட் ஒன் லாஸ்ட் திங்...  டிரிங் பண்றதும் ஸ்மோக் பண்றதும் இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்" என்றவள் அவனைப் பாராமலே சொல்லிவிட்டு அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றாள்.

அவள் வந்த சுவடே தெரியாமல் சென்றுவிட்டாலும் அவளின் நடவடிக்கைகளின் தாக்கம் அவனை ஆழமாய் பாதித்திருந்தது.

காதலோடு சேர்த்து அவள் மீதான காழ்ப்புணர்ச்சியும் கண்ணுக்குத் தெரியாமல் அவனுக்குள் வேர் விட்டு வளர்ந்திருக்க, அதில் முதல் ஆளாய் பலியாகப் போவது சையத்தான் என்பதை அவள் அறிந்திருக்க மாட்டாள்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content