மோனிஷா நாவல்கள்
Narmada - நானும் நாவலும்
Quote from monisha on November 6, 2020, 8:29 PMவாழ்த்துக்கள் நர்மதா
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் நர்மதா
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:
Quote from Narmadha on November 6, 2020, 9:47 PMநானும் நாவலும்
எனக்கும் நாவலுக்குமான பந்தம் அதிலும் குறிப்பாகக் குடும்ப நாவலுடனான பந்தம் ஏற்பட்டு ஐந்து வருடமாகிறது.
வாசிப்பு சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். எங்கள் வீட்டில் தினசரி செய்திதாளாய் வாங்கப்படும் தினந்தந்தியில் வரும் வெள்ளி மலர், இளைஞர் மலர், குடும்ப மலரென வரும் புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்து முடித்து விடுவேன். அந்தளவிற்கு வாசிப்பது பிடித்தமான விஷயம். ஆனால் எனது பெற்றோருக்கு கதை படிப்பதென்பது நேர விரயம். அந்த நேரத்தில் வேறு உருப்படியான காரியத்தைச் செய்யலாமென என் அம்மா கூறுவார். அம்மாவிற்கும் வாசிப்பு பிடிக்கும். ஆனால் அவர் படிப்பதெல்லாம் ஆன்மீக புத்தகங்களும் தொழில் சார்ந்த தேடலுடன் கூடிய புத்தகங்கள் என இப்படியானதாகத் தான் இருக்கும். ஆக என் வீட்டில் கதை படிப்பதென்பது தடை செய்யப்பட்ட செயல். அதனால் என்னுள் ஆசையிருந்தாலும் வெளிகாட்டாமல் படிப்பும் நானும் என்றே கல்லூரி வரை கடந்து வந்துவிட்டேன்.
எனக்கிருந்த வாசிப்பின் மீதான நேசிப்பெல்லாம் நான் மறந்தே போயிருந்த காலங்கள் அவை.
அதன்பிறகு வேலைக்காகப் பெங்களூர் சென்ற போது, அங்கும் வேலை பளு காரணமாய் வாசிப்பை பற்றிச் சிந்தித்தது இல்லை.
இவ்வாறாக நானே மறந்து போயிருந்த என் ஆசையை நான் உணர துவங்கியது பெங்களூரில் தான். வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் கடந்திருந்த போது எனது தோழிகளெல்லாம் அவரவர் வாழ்க்கை பயணத்தை நோக்கி செல்ல, நான் தனித்து விடப்பட்ட சமயத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்களிடமிருந்த ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படிக்கவாரம்பித்தேன். என்னுடன் அறையில் தங்கியிருந்த தோழி அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் ரமணிசந்திரன் நாவல் மற்றும் ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல் படிக்கவாரம்பித்தேன். எனினும் நானாகத் தேடி சென்று படிக்காமல், எவரும் கொடுத்தால் படிப்போம் இல்லையெனில் சும்மா இருப்போம் என்றளவில் என் வாசிப்பு நின்றிருந்தது.
அதன்பின்பு வாழ்க்கை படு பிசியாய் சென்று கொண்டிருக்க, கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்காலிகமாய் ஒரு மூன்று மாதத்திற்குச் சென்னைக்குப் பணியிடமாற்றம் பெற்று வந்தேன். மீண்டுமாய் இங்குத் தனிமை என்னைச் சூழ, அப்பொழுது எனது நெடு நாளைய ஆசையான கல்கியின் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பினை பெற்றேன்.
அப்பொழுது இவ்வளவு பெரிய கைபேசி இல்லை. ஆயினும் அனைத்திற்கும் app என உருவாக்க தொடங்கியிருந்த காலம் அது. அப்பொழுது கைபேசியில் எனது தேடலில் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என அனைத்தும் appகளாகக் கிடைக்க, அதைத் தரவிறக்கம் செய்து, அந்த மூன்று மாதத்தில் இவை அனைத்தையும் படித்து முடித்தும் விட்டேன். இதனிடையில் வேறு கம்பெனிக்கு இன்ட்ர்வியூ அடெண்ட் செய்து சென்னைக்கு நிரந்தரமாய்ப் பணியிட மாறுதலாகி வந்தது தான் என் புத்தக வாசிப்பில் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது.
சென்னையில் எனது வீட்டிலிருந்து புதிதாய் நான் சேர்ந்த அலுவலகம் செல்வதென்பது பெங்களூருக்கு செல்வது போன்று தொலைதூர பயணமாய் இருக்க, எனது பயண நேரத்தை வாசிப்பில் செலவழிக்கத் திட்டமிட்டு கூகுள் தேடலில் நான் இறங்க, அப்பொழுது நான் கண்டுடெத்த அந்தக் கதை என்னை அதனுள் ஈர்த்து பூரித்து மகிழ்வடையச் செய்து, மீண்டும் மீண்டுமாய்த் தேடலில் ஈடுபடச் செய்து அடுத்தடுத்து வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்க வைத்தது.
அந்தக் கதையின் பெயர் இருள் மறைத்த நிழல். தேனு என்பவர் அவருடைய பிளாக்கில் எழுதியிருந்தார். அவரும் மென்பொருளாளினியாய் தான் பணிபுரிந்து கொண்டிருந்தார். அக்கதை எழுதி முடித்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தான் நான் அதைக் கண்டெடுத்துப் படித்தேன். அக்கதையின் முன்னுரையில் அவர் ரமணிசந்திரன் அவர்களின் விசிறி எனவும் அவர் கதைகளைப் படித்ததின் பாதிப்பில் தான் இக்கதையை எழுத துவங்கியதாகவும் கூறியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒருவரின் கதையைப் படித்து இன்ஸ்பயர் ஆகி இன்னொருவர் கதை எழுத இயலுமா என ஆச்சரியபட்டுக் கொண்டே தான் அக்கதையை வாசிக்கத் தொடங்கினேன். பின்னாளில் இது எனக்கே நிகழும் என அறியாது ஆச்சரிய அதிசயமான உணர்வில் அவரின் எழுத்தை படித்திருந்தேன்.
அதன்பின் நான் படித்தது அவனுக்கு நான் அழகு, அதன் பின் நிலவே மலர்ந்திடு. மூன்று நாட்களில் இந்த மூன்று கதையினையும் படித்து விட்டு அடுத்தடுத்து குடும்ப நாவல்களை நான் தேடி படிக்கவாரம்பித்தேன். வாசிப்பிற்கான என் தேடல் தொடங்கியது இங்கே தான்.
N சீதாலட்சுமி, அமுதவள்ளி கல்யாணசுந்தரம். என் இரண்டு வருட அலுவலகப் பயணம் முழுவதும் இவர்களின் புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்தேன். அப்பொழுது 1 gb data ஒரு மாதத்திற்கு 250 முதல் 400 ரூபாய் வரை இருந்த காலகட்டம். கதை படிக்கும் ஆர்வத்தில் பல மாதங்களில் ரீசார்ஜ் செய்த பத்து நாட்களிலேயே 1 gb டேட்டாவை காலி செய்து மீண்டுமாய் ரீசார்ஜ் செய்து படித்திருக்கிறேன்.
என் அலுவலகத்திற்குச் சென்று வர ஒரு நாளைக்கு நான்கு மணி நேரமாகும். அனைவரும் பயணத்தில் உறங்கி வழியும் போது, நான் மட்டும் கதை படிப்பதில் மூழ்கி போயிருப்பேன். என் அலுவல் அழுத்தத்தைப் போக்கியதில் வாசிப்பிற்குப் பெரும் பங்கு உண்டு. என்னுடைய வாசிப்பு என்பது என் அழுத்தத்தைப் போக்கி என் மனதை இலகுவாக்குவதாய் இருக்க வேண்டுமென எண்ணியே எனது தேடல் இருந்தது. அதனால் நேர்மறை எண்ணங்கள் கொண்ட கதைகள் தான் என் பிடித்தமாய் இருந்தது.
இவர்களின் கதைகள் அனைத்தையும் நான் படித்து முடித்த நிலையில் மற்றைய எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது கதைகளில் வரும் கவிதைகளையெல்லாம் விரும்பி படிப்பேன். அப்படி ஒரு நாள் மாலை நேர ஷிப்ட் முடித்து இரவு நேரம் 1 மணிக்கு மேல் கேப் வண்டியில் நான் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, "பேசும் பொற்சித்திரமே" எனும் சுபஸ்ரீ கிருஷ்ணவேணி அவர்களின் நாவலை படித்து முடித்திருந்தேன். அக்கதையின் முடிவில் நாயகி நாயகனுக்குத் தனது நிலையை எடுத்துரைப்பது போன்று ஒரு கவிதை எழுதுவார். அக்கவிதையைப் படித்த பின்பே நாயகன் நாயகியை பற்றிய தனது தவறான புரிதலை அறிந்து மனம் வருந்துவான். அக்கதையைப் படித்து முடித்த பின்பும் அந்தக் கவிதை என் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க, ஏன் நானும் இதே போல் எனது தற்போதைய நிலையை ஒரு கவிதையாய் எழுத கூடாது எனத் தோன்ற, அப்பொழுது அந்த நள்ளிரவில் மனதில் தோன்றிய வார்த்தைகளில் கவிதை ஒன்றை எழுதி உடனே என் தோழிகளுக்கு அனுப்பினேன். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சரியம். என்னைப் புகழ்ந்து தள்ளி தொடர்ந்து எழுது எனச் சொல்ல அடுத்த ஒன்றரை வருடம் கதை படிப்பதும் கவிதை எழுதுவதுமாய் என் வாழ்க்கை செல்ல அப்பொழுது நிகழ்ந்தது அடுத்தத் திருப்புமுனை.
அச்சமயம் தற்செயலாய் கூகுளில் கண்ணில்பட்டது உயிரே உனதெனில் என்னும் கதை. அக்கதையைப் படித்து முடித்த மறுநாள் என் முகநூலில் Page you may like என ஒரு பக்கம் காண்பிக்கப்பட, அதனுள் சென்று நான் பார்க்க அங்கு நான் படித்த இந்தக் கதையின் பதிவினை பார்த்தேன். இது அந்த நாவல் எழுத்தாளரின் முகநூல் பக்கம் என அறிந்த பின், அந்தப் பக்கத்திற்கான மெசெஞ்சர்க்கு சென்று அந்தக் கதை பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கதையின் ஆசிரியர் பூரிப்பாய் எனக்குப் பதிலளித்து அவருடைய நட்பில் என்னை இணைத்துக் கொண்டார்.
என் வாழ்வில் வெகு தற்செயலாய் நிகழ்ந்த இந்நிகழ்வு தான் இன்று என்னை இந்நிலையில் வைத்திருக்கிறது.
அந்தக் கதையின் ஆசிரியர் பவித்ரா நாராயணன் தான் என்னை இந்தப் பரந்து விரிந்த வாசிப்புலகத்திற்குள் நட்பழைப்பு விடுத்து இழுத்துக் கொண்டவள். அவள் மூலம் பல எழுத்தாளர்களின் நட்பும் பல தரப்பட்ட கதைகளைப் படிக்கும் சந்தர்ப்பமும் அனுபவமும் கிடைத்தது.
இத்தனை விஷயங்கள் என் வாழ்வில் நிகழ்ந்திருக்க, இவை எவையும் என் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். கண்டிப்பாகப் புத்தகம் படிப்பதை அவர்கள் தடை செய்யத் தான் பார்ப்பார்களென அவர்களிடத்தில் என் வாசிப்பை பற்றி எதையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆகையால் பயணத்தில் மட்டும் தான் கதைகளை வாசிப்பேன். வீட்டிலிருக்கும் சமயம் அதன் பக்கம் போகவே மாட்டேன்.
ஆயினும் அவர்களுக்கு இதைத் தெரிய படுத்தும் வகையில் நடந்தது அடுத்த நிகழ்வு. ஒன்றரை வருடங்களாகக் கவிதை மட்டுமே எழுதி கொண்டிருந்த நான், விளையாட்டாய் பிரதிலிபியில் நிகழ்ந்த திகில் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதலாமென முடிவு செய்து பங்கு கொள்ள, அதில் எனக்கு முதல் பரிசு கிடைக்க, இவ்விஷயம் மூலம் தான் என் எழுத்தை பற்றியும் என் வாசிப்பு பற்றியும் என் பெற்றொருக்கு தெரியபடுத்தினேன்.
நான் பரிசு பெற்றதில் அவர்களுக்குச் சந்தோஷம் தான் ஆயினும் "எதற்கு உனக்கிந்த தேவையில்லாத வேலை. உனது பணியில் கவனத்தைச் செலுத்தி மென்மேலும் அதில் முன்னேறு" எனத் தான் என் பெற்றோர் எனக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் காலம் எனக்கு மென்மேலும் பல வெற்றிகளை அளித்து எனது பெற்றோர்களே, "சரி ஏதோ அவளுக்குப் பிடிச்சதை செய்றா. செஞ்சிட்டு போகட்டும்" எனக் கூறுமளவு மாற்றியது.
நாவல் வாசிப்பது என்பது எனக்கு வெளியுலகை மறந்து மாய உலகிற்குள் மூழ்கி திளைக்கும் அனுபவமாய்த் தான் இருக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை, தனிமையை, மன அழுத்தத்தைப் போக்கி அதனை நான் கடந்து வர உதவியதில் நாவலுக்குப் பெரும் பங்கு உண்டு. இன்றும் என் எழுத்தும் வாசிப்பும் தான் என்னை என் வாழ்வை பற்றிய எத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்குள்ளும் என்னைச் செலுத்தாமல் மகிழ்வாய் வைத்திருக்கிறது.
என் அலுவல் பயணம் தவிர்த்து வேறெங்கிலும் இடையூறு இல்லாது நான் நாவல் வாசித்ததே இல்லை. ஆகையால் எனக்கு இந்த விஷயத்தில் நிறையச் சின்னச் சின்ன ஆசைகள் உண்டு. எனது ஊர் பயணங்களில், இரவின் ஏகாந்தத்தில், மேகம் கருத்து மழை பொழியும் சமயங்ளில், மாலை மங்கும் நேரங்களில் தேநீர் கோப்பையுடன் என இப்பொழுதுகளில் எல்லாம் நானும் நாவலும் என எவரும் என்னைத் தொந்தரவு செய்யாத தனிமையில் அதனுள் நான் மூழ்கி போக வேண்டுமென்ற பேரவா உண்டு எனக்கு. என்றைக்கேனும் வாழ்வில் எனது இந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நான்.
நாவலை பற்றிக் கூற வந்தவள், என் சுயபுராணத்தைக் கூறி வைத்திருக்கிறேன். என் வாழ்வின் இக்கதை பற்றிக் கூறாமல் என்னால் நாவலை பற்றித் தனித்து எதுவும் எழுத முடியாது. ஆகையால் பொருத்தருள்க! இதனைப் பொறுமையாய் படித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 7:31 PMஉங்க அனுபவம் சிலர்ப்பூட்டியது. அதுவும் உங்களுடைய இறுதி கட்ட கற்பனை ரொம்ப அழகும் ரசனையும் மிகுந்ததாக இருந்தது.
உங்களுடைய ரசனையான வாசிப்புகள்தான் மனங்களை மயிலிறகாக வருடும் அதிஅற்புதமான எழுத்துக்களை எழுத செய்கிறது என்பதை நான் இப்போது உணர்கிறேன்.
இந்த கவிதையான வாசகி கலைநயமிக்க ரசனையான பற்பல நாவல்களை படிக்க மட்டுமல்ல படைக்கவும்... என் மன்மார்ந்த வாழ்த்துக்கள்
உங்க அனுபவம் சிலர்ப்பூட்டியது. அதுவும் உங்களுடைய இறுதி கட்ட கற்பனை ரொம்ப அழகும் ரசனையும் மிகுந்ததாக இருந்தது.