மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 15
Quote from monisha on May 30, 2023, 12:31 PM15
இரவு சரியாக உறங்காத காரணத்தால் வெங்கட் தாமதமாகதான் விழித்தான்.
எழுந்த மறுகணமே அவன் தன் அறையிலிருந்து தோட்டத்திற்கு விரைய, டைகருடன் நடைப்பயிற்சி சென்றிருந்த நந்தா எதிர்ப்பட்டார்.
“ஹாப்பி பர்த்டே வெங்கட்” என்றவர் உற்சாகமாக வாழ்த்து கூற,
“தேங்க்ஸ்பா” என்றான்.
“இன்னைக்கு ரொம்ப லேட்டா எழுந்துட்ட போல”
“ஆமா… நைட் கொஞ்சம் படிச்சிட்டு இருந்தேன்… அப்புறம் டைகர் வேற சத்தம் போட்டுட்டு இருந்தானா… அதான்” அவன் தந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனமெல்லாம் தோட்டத்திற்குள்தான் இருந்தது.
இதற்கிடையில் நந்தா கையிலிருந்த கயிற்றின் பிடி தளர இதுதான் வாய்ப்பு என்று டைகர் தோட்டத்திற்குள் பாய்ந்து ஓடிவிட்டது. “டைகர்” என்று நந்தா குரல் கொடுக்க அது அவரைத் திரும்பியும் பார்க்கவில்லை.
“என்னாச்சு இவனுக்கு… நைட்டுல இருந்து இவன் ஏதோ சரியே இல்ல” என்று சொல்லிக் கொண்டே அவர் தோட்டத்திற்குள் செல்ல பார்க்க,
“நான் போய் டைகரைப் பார்க்கிறேன்… நீங்க போங்க” என்ற வெங்கட் தோட்டத்திற்குள் சென்றான்.
அவன் மாமரத்திற்குப் பின்புறம் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை எடுக்க எத்தனிப்பதற்குள் டைகர் ஆக்ரோஷமாக அதனை தன் பல்லால் கடித்து பிய்த்துக் கொண்டிருந்தது. வெங்கட் அதிர்ந்தான்.
“டைகர் ஸ்டாப் இட்… டைகர்” என்று வெங்கட் அந்தப் பூங்கொத்தை இழுக்க அது அவன் பல் இடுக்கிலிருந்து வெளியே வருவதற்குள் துவம்சமாகிப் போனது.
“ஏன் டா இப்படி பண்ண?” என்று அவன் அந்தப் பூங்கொத்தைப் பார்த்து வருத்தப்பட்டு முடிப்பதற்குள் டைகர் அவள் தந்த வாழ்த்தட்டையையும் எடுத்து கொண்டது.
“நோ… டைகர்… நோ… அதை அதை… என்கிட்ட கொடுத்துடு” என்றவன் சொல்வதைக் கேட்காமல் அதனை வாயில் தூக்கிக் கொண்டு ஓட,
“டைகர் அதை கொடுத்துடு” என்று வெங்கட் பின்தொடர்ந்து ஓடினான்.
“வெங்கட்… எங்கே ஓடிட்டு இருக்க?” என்று மல்லி அழைக்கும் சத்தத்தைக் கேட்டு அவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட, டைகர் எங்கோ உள்ளே ஓடி மறைந்துவிட்டான்.
“இல்லமா டைகர்” என்றவன் பேச எத்தனிப்பதற்குள்,
“அவனை விடு… காலையிலனா அவன் இப்படிதான் தோட்டத்தைச் சுத்தி விளையாடிட்டு இருப்பான்… நீ வா” என்றார். அவன் வேறுவழியின்றி அவர் பின்னோடுச் சென்றான்.
அவனை அறைக்கு அழைத்துச் சென்றவர் புது பேன்ட் ஷார்ட்டை அவன் கையில் கொடுத்து, “ஹாப்பி பர்த்டே வெங்கட்” என,
“தேங்கஸ் மா… ஷர்ட் கலர் ரொம்ப நல்லா இருக்கு” என்றான்.
“உனக்கு லைட் கலர் சூட் ஆகும்னுதான் எடுத்தேன்” என்று புன்னகையுடன் சொன்னவர், “இரு நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லவும்,
“நான் இன்னும் பிரஷ் பண்ணலம்மா… பண்ணிட்டு வந்திடுறேன்” என்றான்.
“இன்னும் ப்ரஷ் பண்ணலயா?”
“இல்லம்மா… நான் எழுந்ததும் அப்படியே கீழே இறங்கி வந்திட்டேன்…டூ மினிட்ஸ் வந்துடுறேன்” என்றவன் திரும்பிச் செல்ல அவன் முன்னே வந்து வழிமறித்த நந்தா, “வெங்கட்… இது உனக்கு என்னோட கிஃப்ட்” என்றார்.
அவரைக் குழப்பமாகப் பார்த்தவன், “நீங்க எப்பவும் தனியா கிஃப்ட் கொடுக்கமாட்டீங்களே ப்பா” என்று கேட்க,
“இந்த தடவை நான் உனக்கு வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு” என, அவன் அவர் கொடுத்த பரிசைப் பெற்று கொண்டான். அதுவும் பேன்ட் ஷர்ட்தான்.
“நல்லா இருக்கு பா” என்றவன் சொல்லும் போது,
“நான் ஏற்கனவே ஷர்ட், பேன்ட் வாங்கிக் கொடுத்துட்டேன்” என்று மல்லி யாரிடமோ சொல்வது போல் சொல்ல,
“அவங்க வாங்கிக் கொடுத்தா நாங்க அதையே வாங்கிக் கொடுக்க கூடாதா? ஏன் நீ போட மாட்டியா?” என்று அவர் வெங்கட்டிடம் கேட்க,
“போடுவேன் பா” என்றான்.
“ஆனா இன்னைக்கு நான் வாங்கித் தந்ததைதான் போட்டுக்கணும்” என்று மல்லி அழுத்தமாகச் சொன்னார்.
“ஏன் இன்னைக்கு நான் வாங்கி தந்ததைப் போடக் கூடாதா?” என்று நந்தா ஏட்டிக்குப் போட்டியாக நிற்க, வெங்கட் மூச்சை இழுத்துவிட்டான்.
‘காலையிலயே இவங்க பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டாங்களா?’ என்று உள்ளுர கடுப்பானவன்,
“ப்ளீஸ்… சண்டை வேண்டாமே… நான் அம்மா வாங்கித் தந்த ஷர்டையும் நீங்க வாங்கி தந்த பேன்டையும் போட்டுக்கிறேன்… சீரியஸ்லி நீங்க இரண்டு பேரும் வாங்கி தந்ததுல அதுதான் செம காம்பினேஷனா இருக்கு” என்றவன் ஒருவாறு அவர்களை சமாளித்துவிட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
அவர்கள் கொடுத்த புதுத்துணிகளை மேலே தன்னறையில் வைத்துவிட்டு மீண்டும் அவன் தோட்டத்திற்குள் ஓடினான். எங்கே சுற்றியும் அந்த கார்ட் அவன் கண்ணில் படவில்லை.
நேராக டைகரிடம் வர அதுவோ ‘ஐயோ பாவம்’ போல படுத்திருந்தது. “ஏன் டா இப்படி பண்ற… எங்கடா அந்த கார்ட்” என்று அவன் கெஞ்சிப் பார்த்தான். மிரட்டிப் பார்த்தான்.
டைகர் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. படுத்தபடியே அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தது.
“ரொம்ப ஓவரா பண்ற இல்ல…. உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்” என்றவன் தன்னறைக்குத் திரும்பினான்.
‘என்னடா பிறந்தநாள் இது… நாள் ஆரம்பிச்சதுல இருந்து எல்லாமே ஏடாகுடமாவே நடக்குது… எல்லாம் அவளால… சர்பிரைஸ் கொடுக்கிறேன்னு அவ செஞ்ச வேலையால’ என்று புலம்பித் தீர்த்தவன் ஒருவாறு கிளம்பி கீழே வந்தான்.
மல்லி மகனுக்குப் பிடித்த இனிப்பு வகைகள், பிடித்த உணவு வகைகள் என்று தயாரித்து அசத்தியிருந்தார்.
“ஏன் மா… உங்களுக்கு இருக்க வேலைல இவ்வளவு எல்லாம் செய்யணுமா?” என்று வெங்கட் கேட்க,
“வேலை எப்பவும் இருக்கதான் செய்யும்… அதுக்காக உனக்கு நான் செய்றதை செய்யாம விட்டுடுவேணா வெங்கட்” என்றவர் அவனுக்கு தான் செய்து வைத்திருந்த இனிப்பை தன் கரத்தால் ஊட்டிவிட்டார்.
நந்தா அதற்கும் போட்டியாக வந்து நின்று, “நான் செஞ்ச ஸ்வீட்டையும் சாப்பிட்டு பாரு” என்று கோதுமை அல்வாவை அவனுக்கு ஊட்டிவிட, வெங்கட்டிற்கு மூச்சு முட்டியது.
திகட்டத் திகட்ட அன்பையும் இனிப்பையும் கொடுத்து இருவரும் அவனைத் திக்குமுக்காட வைத்தனர்.
“தப்பிச்சு ஓடிடுறா கைப்புள்ள” என்றவன் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே வர அவன் காரருகில் காத்திருந்த அரச்சனாவும் லலிதாவும், “ஹாப்பி பர்த்டே மாமா” என்று அவனுக்கு ஒரு பரிசைத் தர,
“தேங்க்ஸ் மா” என்று அதனைப் பெற்று கொண்டவன், “தம்பிங்க ஆஃபிஸ் கிளம்பிட்டாங்களா?” என்று கேட்டான்.
அர்ச்சனா கொஞ்சம் தயக்கத்துடன், “இந்த கிஃப்டை உங்க தம்பிங்கதான் உங்ககிட்ட கொடுக்கலாம்னு வாங்கி வைச்சு இருந்தாங்க… நீங்க இன்னைக்கு கிளம்பி கீழே வர லேட்டாகிடுச்சா… அதான் அவங்க டைம் ஆகிடுச்சுன்னு ஆஃபிஸ் போயிட்டாங்க” என,
“அதெல்லாம் பரவாயில்ல… ஆனா இந்த கிஃப்டை அவங்க வாங்கினாங்கனு பொய்யெல்லாம் சொல்ல வேண்டாம்… எனக்கு தெரியும்… இதை நீங்க இரண்டு பேர்தான் வாங்குனீங்கனு” என்றான்.
“இல்ல மாமா… அவங்கதான்”
“அர்ச்சனா… விடு… நீங்க வாங்கினா என்ன? அவங்க வாங்கினா என்ன? இரண்டும் ஒன்னுதான்” என்று சொன்னவன், “ஆமா உள்ளே என்ன இருக்கு?” என்று கேட்டான்.
“பேச்சுலரா நீங்க கொண்டாட போற கடைசி பிறந்தநாள் இல்லையா? அதனால இது கொஞ்சம் ஸ்பெஷல் கிஃப்ட்” என்றவர்கள் சொல்லியபடி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “எம்எல் வந்திர போறாங்க… நாங்க போறோம்” என்று அவசரமாக உள்ளே ஓடிவிட்டனர்.
வெங்கட்டிற்கு வருத்தமாக இருந்தது.
‘அர்ச்சனாவையும் லலிதாவையும் அம்மா புரிஞ்சிக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்றவன் மனதில் எப்போதும் எழும் ஆதங்கம் இப்போதும் எழுந்தது.
காரில் ஏறி அமர்ந்தவன் அந்தப் பரிசைப் பிரித்தான். உள்ளே ஜோடியாக தங்க நிற கைக்கடிகாரம் இருந்தது.
உடனடியாக ஸ்ரீக்கு அழைத்தான்.
“ஹாப்பி பர்த்டே வெங்கி… பர்த்டே எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு… இல்ல இன்னைக்கும் ஹாஸ்பிட்டலுக்கா”என்றவளின் உற்சாக குரல் அவன் மனதை ஈர்த்தது.
“இல்ல… ஒரு முக்கியமான இடத்துக்குப் போறேன்… நீயும் வர்றியா?”
“ஆர் யு சீரியஸ்… என்னை உன் கூட கூப்பிடுறியா?” என்றவள் ஆச்சரியமாகக் கேட்க,
“ம்ம்ம்… உன்னைத்தான்” என்றவன் அழுத்திச் சொல்ல, அவள் குதுகலமானாள்.
“எப்போ போறோம்?”
“இப்பதான் போறோம்… நீ சொல்லு… எங்கே வந்து நான் உன்னை பிக் அப் பண்ணிக்கட்டும்” என்றவன் கேட்ட நொடியே அவள் வானில் பறக்கத் தொடங்கிவிட்டாள்.
அவள் சந்தோஷமாக தயாராகிக் கீழே போக வேதா அங்கே இருந்து கொண்டு அவளைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்து எடுத்தார்.
“மேரேஜ் இன் ஒன் வீக்… யுவர் நாட் அலோவ்ட் டூ கோ எனிவேர்?” என்றவர் முடிவாகச் சொல்ல,
“நான் பியூட்டி பார்லர்தான் போறேன்… போயிட்டு சீக்கிரம் வந்திருவேன்” என்றாள். வேதா அப்போதும் அவளை நம்புவதாக இல்லை.
“டேக் இந்து வித் யு” என்று அவர் மற்றொரு பேத்தியைச் சுட்டிக் காட்டிச் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி… நான் தனியா போயிட்டு வந்திடுவேன்” என்றவள் அதற்கு மேல் அங்கே நின்று கொண்டு அவருக்கு விளக்கம் கொடுக்கவில்லை. காலில் சக்கரத்தைக் கட்டிவிட்டது போல பறந்துவிட்டாள். அவள் மனம் இருந்த வேகத்திற்கு அவள் ஓடிய வேகம் கொஞ்சம் குறைவுதான்.
வேதா திலகாவிடம் சீறலாக, “நான் இங்கிலிஷ்ல பேசுனா உன் பொண்ணு தமிழ்ல பதில் சொல்லிட்டுப் போறா… நம்ம குடும்ப பேக்கிரவுண்ட் என்ன… ரெப்பியுட்டேஷன் என்ன? எவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தை நடத்திட்டு இருக்கோம்?
ஆனா அவ தி கிரேட் வேதா ஃபேமிலியோட வாரிசு மாதிரி நடந்துக்கிறதும் இல்ல… பேசறதும் இல்ல… இதுல உன் பொண்ணு யாரையும் மதிக்கிறதே இல்ல… ஷி இஸ் ஸோ இர்ரெஸ்பான்ஸிபிள்” என்று சுயபுராணம் பாடி முடிக்க, திலகா முகம் இருளடர்ந்து போனது.
“அவ இப்போ முன்ன மாதிரி இல்லம்மா… நிறைய மாறிட்டு இருக்கா” என்றவர் அம்மாவிடம் பயந்து பயந்து சொல்ல.
“ஐ டோன்ட் திங்க் ஸோ” என்று அலட்சியமாகக் கூறியவர் மேலும்,
“எப்பவும் அவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும்… கல்யாணம் நாள் வேற நெருங்குது… எங்கேயாவது ஏதாவது சொதப்பி வைச்சா நம்ம குடும்ப மானமே போயிடும்” என்று எச்சரிக்கை செய்ய, திலகா மனம் வேதனையில் புழுங்கியது.
அவர் தன்னறைக்குள் புகுந்து முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கிவிட அவர் பின்னோடு வந்த வசந்தன், “உங்க அம்மா இப்போ என்ன சொல்ல வராங்க… என் பொண்ணு அவங்கள எல்லாம் அசிங்கப்படுத்திட்டு ஓடிப் போயிடுவானா?” என்று கேட்க,
“அவங்க அப்படி எல்லாம் சொல்லல” என்றவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கணவனைப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார்.
“அப்படிதான் சொன்னாங்க… நீயும் நானும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதைக் குத்திக் காட்டுறாங்க… இன்னும் எத்தனை வருஷத்துக்கு” என்றவர் கொதிக்க,
“நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க வசந்த்” என்றார் திலகா.
“முதல நான் தப்பாதான் புரிஞ்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா அப்புறம்தான் தெரிஞ்சுது… அவங்க என்னைப் பழி வாங்க… வீட்டோட மருமகனா இந்த வீட்டுல வைச்சு இருக்காங்கன்னு” என்று வசந்தன் பொறும,
“ரொம்ப பேசாதே… நீ என்னை கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு போய் பிஸ்னஸ் பண்றன்னு சொல்லி மொத்தமா நஷ்டப்படுத்தி கடனாளியாக்குனதும் இல்லாம… என்னையும் என் பொண்ணையும் நடுரோட்டல நிற்க வைச்சியே… அதெல்லாம் மறந்து போச்சா… அன்னைக்கு மட்டும் எங்க அம்மா இல்லனா என் நிலைமையும் என் பொண்ணோட நிலைமையும் என்னவாகி இருக்கும்” என்று திலகா கடுப்புடன் சொல்ல,
“சும்மா அதையே சொல்லிக் காட்டாதேடி… ஒரு தடவை தப்பு நடந்து போச்சு… ஏன் தப்பு செஞ்சவன் திருந்தவே கூடாதா… மாறவே கூடாதா?” என்று வசந்தன் கோபமாகக் கத்தத் தொடங்க,
“ப்ளீஸ் வசந்த்… உன் காலை வேணா பிடிக்கிறேன்… என் பொண்ணு கல்யாணம் முடியிற வரைக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ணாதே… ப்ளீஸ்…” என்று திலகா கைக் கூப்பி வேண்டினார்.
“அவ எனக்கும் பொண்ணுதான்டி” என்று கோபமாக அங்கிருந்த நைட் லேம்பை தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார். திலகா முகத்தை மூடி அழத் தொடங்கிவிட்டார்.
ஆனால் ஸ்ரீ எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வெங்கட் காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
“ஸ்ரீ உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”
“என்ன? எனக்கு ப்ரபோஸ் பண்ண போறியா?” என்று ஆர்வமாகக் கேட்டவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இல்லை” என்றான்.
“அப்புறம் என்ன?” அவள் முகம் ஏமாற்றத்தை நிரப்பி கொள்ள,
“நைட் ஒரு முட்டாள்தனம் செஞ்சியே… இனிமே அந்த மாதிரி எப்பவும் செய்யாதே” என்றான்.
“முட்டாள்தனமா… நான் ரிஸ்க் எடுத்து உனக்கு விஷ் பண்ணது முட்டாள்தனமா?” என்றவள் கோபத்துடன் கேட்க,
“ஆமா முட்டாள்தனம்தான்… நேரம் கெட்ட நேரத்துல என்ன வேலை இதெல்லாம்… வர வழில உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தா… இல்ல எங்க வீட்டுல உன்னை யாராவது பார்த்திருந்தா… ஏன்? டைகரே உன்னைக் கடிச்சுக் குதறி இருந்தா?” என்றவன் படபடவெனப் பொரிந்து தள்ள, அவள் கண்கள் கலங்கிவிட்டன.
அவள் கண்ணீரைப் பார்த்ததும் அவன் மனம் இறங்கிவிட்டது.
“ஸ்ரீ ஐம் சாரி… உன்னை ஹார்ட் பண்ணணும்னு அப்படி சொல்லல… உனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திருமோன்னு ஒரு அக்கறையிலதான் சொன்னேன்” என்றான்.
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “ரிஸ்க் எடுக்காதவங்க வாழ்க்கையில எல்லாம் எந்த ஆபத்தும் வர்றது இல்லையா?” என்று கேட்க,
“நாமலே ரிஸ்க் எடுத்து வலுக்கட்டாயமா ஒரு பிரச்சனைல ஏன் மாட்டணும்… நீ எக்சைட்மென்ட்காக பண்றது ஏதாவது பெரிய பிரச்சனைல முடிஞ்சுதுனா” என்றவன் பதிலுக்குக் கேட்க,
“ரிஸ்க் எடுக்காம சுவாரசியமா எதுவும் செய்யவே முடியாது… நான் ஒரு வேளை ஃபோன்ல விஷ் பண்ணி இருந்தா அத நீ அப்பவே மறந்து இருப்ப வெங்கி… இதுவே இப்படி ஏதாச்சும் ரிஸ்க் எடுத்து இன்ட்ரஸ்டிங்கா பண்ணா… உனக்கு அது எப்பவும் மறக்கவே மறக்காது” என்றாள்.
“ஆமா மறக்கவே மறக்காது… அதுவும் நீ மரத்து மேல வேதாளம் மாதிரி உட்கார்ந்திருந்த காட்சி எனக்கு இந்த ஜென்மத்துல மறக்காது” என்றவன் நக்கலாகச் சொல்ல,
“போதும் போதும்… ரொம்ப கிண்டல் பண்ணாதே… நான் பக்காவா ப்ளான் பண்ணிதான் வந்தேன்… உன் ரூம் மாடில தனியா இருக்குன்னு சொன்னதால யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம வந்து உன்னைப் பார்த்து… விஷ் பண்ணிட்டு போயிடலாம்ன்னுதான் நினைச்சேன்… நடுவுல அந்த நாய்தான் வந்து எல்லாத்தையும் சொதப்பிடுச்சு”
“அவன் நாய் இல்ல… டைகர்” என்றான் வெங்கட். அவள் அவனை விசித்திரமாகப் பார்க்க,
“அவன் பேரு டைகர்னு சொன்னேன்” என்றான்.
“பெரிய டைகர்…” என்றவள் வாயிற்குள் முனங்க,
“அவன் பெரிய டைகர் எல்லாம் இல்ல… கொஞ்சம் சின்ன டைகர்தான்… அவ்வளவு லேசுல அவன்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது… ஆனா நீ எப்படி தப்பிச்சன்னு எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு” என்றவனுக்கு அப்போது அவள் மரத்தின் மீது அமர்ந்திருந்த காட்சி நினைவு வர, உதடுகள் விரிந்தன.
“ரொம்ப பண்ணாதே… அக்சுவலி உன் டைகர் கிட்ட இருந்து நான் தப்பிக்கல… அதுதான் என்கிட்ட இருந்து தப்பிச்சுது” என, வெங்கட் அவளைப் புரியாமல் பார்த்தான்.
“நான் காம்பவுன்ட் சுவர் மேலிருந்து குதிக்கும்போது… தெரியாம உங்க டைகர் மேலதான் குதிச்சிட்டேன்” என்றவள் சொல்லி முடிக்கும் போது வெங்கட் ஷாக்காகிவிட்டான்.
“புல்லா மேல எல்லாம் விழல… ஆனா கொஞ்சம் அப்படிதான் விழுந்தேன்” என,
“அடிப்பாவி” என்றான். காலையில் அவள் தந்தப் பூங்கொத்தைக் கடித்துக் குதறிய டைகரின் கோபத்தின் காரணம் இப்போது புரிந்தது அவனுக்கு. பூங்கொத்திற்கே அந்த நிலைமை என்றால் இவள் மட்டும் சிக்கியிருந்தால்… அவனால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.
ஆனால் ஸ்ரீ அதனைக் கூட மிக சாதாரண சம்பவம் போல விவரித்துக் கொண்டிருந்தாள்.
“நான் என்ன பண்ணட்டும்… நீ உங்க வீட்டுல நாய்… சாரி டைகர் இருக்குனு முன்னாடியே சொல்லி இருக்கணும்
அக்சுவலி நான் மேல குதிச்ச ஷாக்ல டைகர் இருந்ததால… நான் முந்திக்கிட்டேன்… அது சுதாரிக்கிறதுக்குள்ள ஓடி வந்து மரத்துல ஏறிட்டேன்… அப்புறம் உனக்கு நான் கால் ட்ரை பண்ணேன்… நீதான் எடுக்கல” என்றாள்.
“டைகர் கத்துனதால நான் என்னன்னு பார்க்கலாம்னு கீழே வந்துட்டேன்… ஃபோன் மேல இருந்துச்சு” என்றவன் முறைப்புடன்,
“ஆனா எனக்கு பதிலா எங்க அம்மா வந்து உன்னைப் பார்த்திருந்திருக்கணும்… அவ்வளவுதான்… நம்ம கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்க” என்றான். அவள் விழிகள் அதிர்ச்சியில் பெரிதாகின.
“ஜீஸஸ்… நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல” என்றவள் பெருமூச்சுவிட்டு கொள்ள, இப்போது அதிர்ச்சியாவது அவன் முறையானது.
“இப்போ நீ ஜீஸஸ்னா சொன்ன?” என்றவன் சந்தேகத்துடன் கேட்க, அவள் துணுக்குற்றாள். நொடி நேரத்தில் அவள் சுதாரித்து கொண்டு, “ஏன் ஜீஸஸ்னு சொல்லக் கூடாதா? அதென்ன அவ்வளவு பெரிய தப்பா… எனக்கு ஜீஸஸ் பிடிக்கும்… அப்பப்ப என் வாயிலிருந்து அப்படி வரும்” என்று படபடப்புடன் சமாளிக்க, அவன் அதற்கு மேல் அவளிடம் அது பற்றிப் பேசவில்லை.
எப்போதோ மாயா பேசும் போது இதே போல, ‘ஜீஸஸ்’ என்று சொன்னதாக அவனுக்கு நினைவு. ஸ்ரீயும் மாயாவும் தோழிகள் என்பதால் அவள் மூலமாக இவளுக்கு இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டிருக்கலாம் என்றவன் தன் சந்தேகத்தை சமன்படுத்திக் கொண்டான்.
இருந்தும் மனதினோரத்தில் மாயவிற்கும் ஸ்ரீக்குமான அந்த ஒற்றுமை அவனுக்கு நெருடலாக இருந்தது.
ஸ்ரீ அவன் யோசனையைத் தடை செய்யும் விதமாக, “நம்ம இப்போ எங்க போறோம் வெங்கி” என்று ஆவலுடன் கேட்க, “பக்கத்துல வந்துட்டோம் ஸ்ரீ… போனதும் நீயே தெரிஞ்சுப்ப” என்றான்.
அவன் சொன்னது போல அடுத்த சில நொடிகளில் அவன் கார் நின்றது.
15

Quote from Marli malkhan on May 11, 2024, 3:40 PMSuper ma
Super ma