மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 19
Quote from monisha on June 13, 2023, 9:37 AM19
அறைக்குள் செல்வதற்கு முன்னதாக திலகா, “பாட்டிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்… ப்ளீஸ் இந்து” என்று கெஞ்சுதலாக சொல்ல,
“நீங்க கவலைபடாதீங்க… நான் பார்த்துக்கிறேன்… நீங்க அவகிட்ட பேசுங்க” என்றாள்.
திலகா அறைக்குள் செல்ல அங்கிருந்த பொருட்கள் எல்லாம் களைத்தெறியப்பட்டிருந்தது. முக்கியமாக திருமண ஆடைகள் நகைகள் எல்லாம் மூலைக்கொரு பக்கம் வீசியெறியப்பட்டிருந்தன.
ஸ்ரீ படுக்கையில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அந்த காட்சியை பார்த்து திலகாவிற்கு கோபம் ஏற, “என்ன பண்ணி வைச்சு இருக்க சாரு நீ? என்னாச்சு உனக்கு?” என்று கேட்க, அவள் தலையை நிமிரவில்லை. ஆனால் பதில் வந்தது.
“யாரை கேட்டு இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீங்க?”
திலகா அதிர்ச்சியுடன், “நீதானடி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன…” என,
“நான் எப்போ சொன்னேன்… நான் சொல்லவே இல்ல” என்றவள் சாதாரணமாக சொல்ல, திலகாவிற்கு பதட்டம் கூடியது.
“சாரு… என்னை போட்டு டென்ஷன் படுத்தாதே… நீ சொல்லித்தான் இவ்வளவு ஏற்பாடும் பண்ணி இருக்கு… சொந்தக்காரங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்க” என்றார்.
“யார் வந்தாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்ல… எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் இல்ல… எனக்கு சம்மதம் சொன்ன மாதிரி ஞாபகத்துலயும் இல்ல… நீங்களும் பாட்டியும் சேர்ந்துக்கிட்டு ஏதோ ப்ளேன் பண்ணி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க… நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றவள் அழுத்தமாக சொல்ல, அந்த நொடியே திலகாவின் பொறுமை காற்றில் பறந்தது.
அவர் சீற்றமாக மகளை அறைய கை ஓங்கினார். “ம்மா” என்றவள் அச்சத்துடன் பின்வாங்க அவர் அவளை அடிக்காமல் தன் கரத்தை தாழ்த்தி கொண்டு, அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட்டார்.
கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
“கடைசில நான் பயந்த மாதிரியே நடந்துடுச்சு… உங்க பாட்டி அப்பவே சொன்னாங்க… அவளை நம்பாதே… நம்பாதேன்னு… நான்தான் கேட்கல… மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்குன கதையா போச்சு” என்றவர் அழுது புலம்ப,
“நீங்க அழுது சீன் போட்டாலும் என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது… நான் போறேன்” என்றவள் தன் கைப்பேசியையும் கைப்பையையும் எடுத்து கொண்டு வெளியே நடந்தாள்.
திலகாவிற்கு மகளை தடுக்க முடியுமென்று தோன்றவில்லை. இனி நடக்க போவதும் நடந்தே தீரும் என்ற விரக்தியில் அவர் அமர்ந்திருந்தார்.
ஸ்ரீ வெளியே வந்த அதே சமயத்தில் அங்கே வந்த அர்ச்சனாவும் லலிதாவும் புன்னகையுடன், “ஏய் ஸ்ரீ… என்னை நீ இன்னும் டிரஸ் பண்ணாம இருக்க… ரிசப்ஷனுக்கு டைமாயிடுச்சு” என்று அவளை வழிமறித்து விசாரித்தனர். அவர்கள் இருவரையும் குழப்பமாக பார்த்தவள்,
“யார் நீங்க இரண்டு பேரும்?” என்று கேட்டுவிட, அர்ச்சனாவும் லலிதாவும் அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“இவளுக்கு நம்ம ஞாபகத்துலயே இல்ல அர்ச்சு” என்று லலிதா சொல்ல,
“ஒரே தடவைதான் பார்த்தா… அதான் மறந்திருப்பா” என்றாள் அர்ச்சனா.
ஸ்ரீக்கு அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அவள் அவர்களை கடந்து செல்ல எத்தனிக்க, “ஸ்ரீ” என்று அர்ச்சனா அவளை தடுத்தாள்.
“ப்ளீஸ் வழி விடுங்க நான் போகணும்” என்று ஸ்ரீ செல்ல எத்தனிக்க,
“ரிசப்ஷனுக்கு ரெடியாகாம இந்த நேரத்துல எங்கே போயிட்டு இருக்க நீ” என்று அர்ச்சனா அவளை போகவிடாமல் நிறுத்த, ஸ்ரீ கோபமானாள்.
“எங்கேயோ போறேன்… உங்களுக்கு என்ன? நீங்க யாரு அதை கேட்க” என்றவள் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர பார்க்க அர்ச்சனா அவளை விடுவதாக இல்லை.
அவள் கரத்தை பற்றி நிறுத்தி, “எங்களுக்கு என்னவா? நாங்க யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க நீ… இவ பேர் லலிதா… என் பேர் அர்ச்சனா… நாங்க இரண்டு பேரும் வெங்கட் தம்பிங்களோட வொய்ப்ஸ்” என்றாள்.
“முதல வெங்கட் யாரு? எனக்கு அவரையே யாருன்னு தெரியாது… அப்புறம்தானே… உங்களை யாருன்னு தெரியிறதுக்கு” என்றவள் அலட்சியமாக சொல்லிவிட்டு,
“கையை விடுங்க” என்றவள் அரச்சனாவின் கையையும் உதறிவிட்டு அவர்களை தாண்டி சென்றாள்.
அர்ச்சனாவும் லலிதாவும் ஸ்தம்பித்துவிட்டனர். இன்னும் அவள் கேட்ட கேள்விக்கான அதிர்ச்சியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.
“வெங்கட் யாருன்னு கேட்குறா அர்ச்சு?” லலிதா அதிர்வுடன் சொல்ல,
“அதுவும் நாளைக்கு கல்யாணத்தை வைச்சுக்கிட்டு” என்றாள் அர்ச்சனா.
“ஒரு வேளை இப்படி இருக்குமோ?” என்று லலிதா ஏதோ யூகிக்க,
“எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் அர்ச்சனா.
“அதான் அர்ச்சு… அந்த விஜய்சேதுபதி படம்… அவன் கிரிகெட் விளையாடி கீழே விழுந்திருவான்… அவன் மண்டைல… இங்கே… மிடில் ஆப்லங்கென்டால அடிப்பட்டுடுமே” என்றபடி பின்னந்தலையை சுட்டிகாட்ட,
“அது மிடில் ஆப்லங்கென்டா இல்லடி… மெடூலா ஆப்லங்கென்டா” என்று திருத்தினாள் அர்ச்சனா.
“ஆமா… அதே ஆப்லெங்கென்டாதான்… அங்கே அடிபட்டுத்தான் அவனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்துடும்… அந்த படம் பேர் கூட… நடுவுல எதையோ காணோம்னு வருமே” என்றாள்.
“அது… நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்றாள் அர்ச்சனா.
லலிதா உடனே, “ஒரு வேளை அந்த படத்துல வர மாதிரி இவளும் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்து இருப்பாளா அர்ச்சு?” என்று கேட்க,
“கிரக்கெட் விளையாடாம கூட விழுந்திருக்கலாம்” என்றாள் அர்ச்சனா.
“அப்போ இவளுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கம் காணாம போயிருக்கோமோ?”
“போயிருக்க….லாம்” என்று அர்ச்சனா அந்த லாமை இழுத்து சொல்ல,
“எவ்வளவு பக்கம் காணாம போயிருக்கும்” என்று லலிதா கேட்க,
“யாருக்குடி தெரியும்… ஆனா அவ இப்போ போயிட்டாளே” என்று இருவரும் மிகவும் தாமதமாக ஸ்ரீ சென்றுவிட்டதை உணர,
“அவ மண்டபத்தை விட்டு போறதுக்கு முன்னாடி நாம அவளை பிடிக்கணும்… சீக்கிரம் வா” என்று அர்ச்சனா சொல்ல லலிதா பின்தொடர்ந்தாள். ஸ்ரீயோ அந்த சமயத்தில் மண்டபத்தின் உள்வாயிலை நெருங்கியிருந்தாள்.
அங்கே பூவால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகை அவள் கண்களில் பட்டது.
‘வெங்கடேஸ்வர் வெட்ஸ் ஸ்ரீலக்ஷ்மி’ அந்த பெயருக்கு கீழிருந்த தேதியை பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சியில் தலை சுழன்றது.
“இன்னைக்கு செப்டம்பர் 2 வா?”
“அப்படினா” என்ற யோசிக்கும் போது விலையுயர்ந்த சிவப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கம்பீரமாக வேதவல்லி இறங்க, ஸ்ரீ பயத்துடன் பின்வாங்கினாள்.
அவள் இதயம் படபடவென அடித்து கொண்டது. “ஐயோ வேதவல்லி… கெழவி நம்மல பார்த்தது… அவ்வளவுதான்… ஒரு வழி பண்ணிடோம்” என்றவள் அச்சத்துடன் ஒளிந்து கொள்ள இடம் தேட, அர்ச்சனாவும் லலிதாவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து விட்டனர். இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அவள் கையை பிடித்து கொண்டு,
“இத பாரு ஸ்ரீ… உனக்கு தலையில அடிப்பட்டு இருக்கு… நீ இந்த மாதிரி நேரத்துல எங்கேயும் தனியா போக கூடாது” என்று சொல்ல, ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை.
‘யாருடா இந்த லூசுங்க’ என்று கடுப்பானவள்,
“என் கையை விடுங்க… எனக்கு தலையிலயும் அடிப்படல… எங்கேயும் அடிப்படல” என்று அவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டாள். ஆனால் இருவரும் அவள் சொல்வதை காதில் போட்டு கொள்ளவில்லை.
ஸ்ரீயை மணமகள் அறைவரை இழுத்து வந்தவர்கள் அவளை உள்ளே தள்ளி கதவை மூடிவிட்டனர். ஸ்ரீயும் வேறுவழியின்றி பாட்டிக்கு பயந்து அவர்களுடன் வர வேண்டியதாக போனது.
அறைக்குள் திலகா அழுது கொண்டிருப்பதை பார்த்த அர்ச்சனாவும் லலிதாவும், “நீங்க எதுக்கு மா அழுதுட்டு இருக்கீங்க?” என்று விசாரிக்க, ஸ்ரீ யோசனையுடன் அமர்ந்துவிட்டாள்.
பாட்டியின் கண்களில் படாமல் எப்படி வெளியே போவது என்றவள் யோசித்திருக்கும் வேளையில் லலிதா திலகாவிடம், “மிடில் ஆப்லங்கென்டால அடிப்படுறது எல்லாம் ஒரு பிரச்சனை இல்ல…” என்று சொல்ல,
“ஐயோ லல்லி… அது மெடூல்லா ஆப்லங்கென்டா” என்று அர்ச்சனா மீண்டும் அவளை திருத்த,
“ஆமா அவ சொல்ற அதே ஆப்லங்கென்டாதான்… அங்கே அடிப்பட்டா ஒரு சில விஷயங்களை மறந்துடுவாங்க… அவ்வளவுதானே தவிர ஸ்ரீக்கு உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்ல… அதனால நீங்க அழாதீங்க” என்றவள் சமாதானம் கூற,
திலகாவிற்கு அவர்கள் பேசியதில் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. அவர் குழம்பி நிற்க ஸ்ரீ சீற்றத்துடன், “ஹெலோ யாருக்கு இப்போ ஆப்லங்கெட்டால அடிப்பட்டுச்சு” என்றாள்.
லலிதா உடனே, “உனக்கு அடிப்பட்டுது கூட மறந்துடுச்சா… அந்த படத்துல விஜய்சேதுபதிக்கு அது மட்டுமாவது ஞாபகத்துல இருந்துச்சு” என,
ஸ்ரீ உச்சபட்ச கடுப்புடன், “ஸ்டாப் டாக்கிங்க நான்சென்ஸ்… எனக்கு எந்த அடியும் படல… எனக்கு எல்லாம் ஞாபகத்துல இருக்கு… முதல நீங்க இரண்டு பேரும் இங்கே இருந்து வெளியே போங்க” என்று கத்தினாள்.
“வாயை மூடு சாரு” என்று மகளை அடக்கிய திலகா அர்ச்சனா லலிதாவிடம்,
“நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க… அவ ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டா” என்றாள்.
அதற்குள் வேதவல்லி, “லக்ஷ்மி” என்று குரல் கொடுத்து கொண்டே அறைகதவை தட்ட, ஸ்ரீ திலகா இருவரும் பயத்துடன் மாறி மாறி பார்த்து கொண்டனர்.
திலகாவிற்கு மூச்சு முட்டியது. ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனை வரலாம். ஆனால் இப்படி அடுக்கடுக்காக பிரச்சனை வரலாமா? அதுவும் அவர்கள் ரூமையே தேடி கொண்டு!
மீண்டும் லக்ஷ்மி என்ற வேதாவின் குரல் கேட்டதும் திலகா அவசரம் அவசரமாக கீழே கிடந்த ஆடைகள் அணிகலன்கள் அனைத்தையும் மேஜை மீது எடுத்து வைத்தார். கதவை திறக்க சென்றவர் மீண்டும் அர்ச்சனா லலிதாவிடம் திரும்பி வந்து,
“ப்ளீஸ் நீங்க இரண்டு பேரும் அந்த ஆம்பலங்கென்டா கதையெல்லாம் அம்மா கிட்ட சொல்லிடாதீங்க” என்று கையை பிடித்து கேட்டு கொள்ள, இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அதன் பின் திலகா கதவை திறந்தார். உள்ளே வந்த வேதவல்லி, ஸ்ரீ இன்னும் தயாராகாமல் இருப்பதை பார்த்து கோபமானார்.
அதேநேரம் அர்ச்சனாவையும் லலிதாவையும் பார்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு, “நீங்க இரண்டு பேரும்” என்று ஏதோ கேட்க வர திலகா முந்தி கொண்டு, “சும்மா ஸ்ரீயை பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தாங்க ம்மா” என்றார்.
“ஹவ் ஆர் யூ… ஹவ் இஸ் யுவர் கிட்ஸ்?” என்று வழக்கமான நல விசாரிப்பு செய்ய, அர்ச்சனாவும் புன்னகையுடன் பதில் சொன்னாள்.
ஆனால் லலிதாவிற்கோ கடுப்பானது. “இந்த கெழவியை பார்த்தாலே பிடிக்கல… ஓவரா பண்ணது அர்ச்சு… ஸ்கூல் வைச்சு நடத்தினா இப்படி பீட்டர் வுடனுமா என்ன?” என்று அவள் அர்ச்சனாவின் காதோரம் கிசுகிசுக்க அதனை கவனித்த வேதவல்லி,
“எனி பிராப்ளம்” என்று லலிதாவிடம் கேட்க, ‘நீயும் உன் இங்கிலிஷும்தான் ப்ராபளம் கெழவி’ என்று மனதில் நினைத்தாலும் வாய் விட்டு சொல்லவில்லை.
“நோ… நோ ப்ராபளம்” என்ற லலிதா சொன்ன உடல் மொழியே ஸ்ரீக்கு சிரிப்பு வந்துவிட்டது.
உஷ்ணபார்வையுடன் பேத்தியை பார்த்த வேதவல்லி, “கெட் ரெடி சூன்… ரிசப்ஷனுக்கு டைமாச்சு… ஷார்ப்பா சிக்ஸ் ஒ கிளாக் ஸ்டார்ட் பண்ணணும்” என்று அதிகாரத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.
அதன் பின் அர்ச்சனா திலகாவிடம், “உங்க பொண்ணுக்கு என்ன பிரச்சனை… ஏதாவது எங்ககிட்ட மறைக்கிறீங்களா?” என்று கேட்க அவர் பதில் சொல்வதற்கு முன் ஸ்ரீ முந்தி கொண்டு, “இங்கே யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல… முதல இரண்டு பேரும் வெளியே போங்க” என்று காட்டமாக கத்திவிட்டாள்.
இம்முறை ஸ்ரீயின் கன்னம் திலகாவிற்கு வசதியாக இருந்ததால் பளாரென்று அறைந்துவிட்டார். அர்ச்சனாவும் லலிதாவும் அதிர்ந்து நிற்க திலகா மகளிடம், “அவங்க இரண்டு பேரும் மல்லியோட மருமகளுங்க… நாளைக்கு நீயும் அவங்க வீட்டுக்குதான் மருமகளா போக போற… கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா பேசு” என்று எச்சரித்தார்.
ஸ்ரீக்கு அடித்த அடியை விடவும் திலகா கொடுத்த தகவல்தான் அதிக அதிர்ச்சியை கொடுத்தது.
வெளியே பார்த்த வரவேற்பு பலகையில் மணமகன் பெயரான வெங்கடேஸ்வர் என்ற பெயரை நினைவுகூர்ந்தவள்,
“அப்போ போர்ட்ல போட்டிருக்க வெங்கடேஷ்வர் மல்லி மேடமோட சன் வெங்கட்டா?” என்று வாய் விட்டே கேட்டு வைக்க, திலகா நெஞ்சை பிடித்து கொண்டார். மகள் கேட்ட கேள்வியில் அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வாராமல் இருப்பது ஆச்சரியம்தான்.
அர்ச்சனாவோ “கன்பார்மா அடிப்பட்டு இருக்கு” என்று சொல்ல,
“ஆமா அதுவும் மிடில் ஆப்லங்கென்டால” என்று லலிதா ஊர்ஜிதமாக சொல்ல, ‘ஐயோ!’ என்று அர்ச்சனா தலையிலடித்து கொண்டாள்.
இன்னொரு புறம் வலியோடு கன்னத்தை தேய்த்து கொண்டிருந்த ஸ்ரீக்கு இப்போதுதான் நடக்கும் குழப்பத்திற்கான காரணம் காரியம் யாரென்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.
‘மாயா’
அவளின் நெருங்கிய தோழி.
‘அடிப்பாவி மாயா… செத்த பிறகும் என் வாழ்க்கையில இப்படி சூனியம் வைச்சுட்டு போயிட்டியே டி’ ஸ்ரீ மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தாள்.
20
ஸ்ரீலக்ஷ்மியின் நடவடிக்கை பற்றி அர்ச்சனாவும் லலிதாவும் விவாதித்து கொண்டிருந்தனர். திலகா ஏதேதோ சமாதானம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாலும் அவர்களின் குழப்பம் தீரவில்லை.
“ஒரு வேளை அவளுக்கு ஆப்லங்கென்டால அடிப்படலன்னா அவ ஏன் வெங்கட் யாருன்னு கேட்கணும்?” என்று அர்ச்சனா குழம்பி கொண்டிருக்க,
“எனக்கு ஒன்னு தோணுது… சொல்லவா?” என்று லலிதா ஆரம்பித்தாள்.
“என்ன?”
“அவங்க அம்மா அவளை சாருன்னு கூப்பிட்டாங்க பார்த்தியா? எனக்கென்னவோ அவ ஸ்ரீலக்ஷ்மியே இல்லன்னு தோணுது”
“என்னடி உளற?”
“ஒரு வேளை சாருவும் ஸ்ரீலக்ஷ்மியும் ட்வின்ஸா இருந்து… அதை பத்தி அவங்க நம்மகிட்ட மறைச்சு இருந்து… ஸ்ரீ இந்த கல்யாணம் வேண்டாம்னு ஓடிபோயிருந்து… இந்த சாருவை கூட்டிட்டு வந்து நம்ம வெங்கட் மாமாவுக்கு தலையில கட்டி வைக்க ப்ளேன் பண்ணி இருந்தா” என்று லல்லி தன் கணிப்பை கூற கடுப்பான அர்ச்சனா,
“இது விஜய் டிவில ஓடுற சீரியல்தானே” என்றாள்.
“அதே போல… நிஜ வாழ்க்கைல நடக்கவும் வாய்ப்பு இருக்கு இல்ல” என்று லலிதா தீவிரமாக சொல்ல,
“வாய்ப்பு இருக்கு… மாமியாருக்கு மரியாதை சீரியலில ஒரு ஓரகத்தியை இன்னொரு ஓரகத்தியை விஷம் வைச்சு கொல்ற மாதிரி ஒரு சீன் வந்துது இல்ல… அந்த சீன் இப்போ இங்கே நடக்கவும் வாய்ப்பு இருக்கு” என்றவள் சொல்லவும், “அர்ச்சு?” என்று லல்லி அதிர்ந்தாள்.
“இப்போ நீ வாயை மூடிக்கிட்டு இல்லன்னா அதுதான் நடக்கும் சொல்லிட்டேன்… ஏதாவது படக்கதையும் சீரியல் கதையும் சொல்லி என்னை கடுப்பேத்திட்டு” என்று எரிச்சலுடன் மொழிந்த அர்ச்சனா அவள் வாயை அடைத்துவிட்டு,
“இதை பத்தி நம்ம மாமா கிட்ட சொல்லுவோம்… அதான் நல்லது” என்றாள்.
அதன் பின் இருவரும் நந்தாவை தேடி செல்ல வழியில் அவர்களை கண்ட மல்லி, “எங்கே சுத்திட்டு இருக்கீங்க… உங்களை எங்க எல்லாம் தேடுறது?” என்று கேட்க, அர்ச்சனாவும் லலிதாவும் ‘நம்மளைத்தானா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தனர்.
“அங்கே என்ன பார்க்குறீங்க… நான் உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்… நம்ம ரூமுக்கு போய் பழ தட்டெல்லாம் எடுத்துட்டு வந்து வையுங்க… கூட யாராவது ரெண்டு பேரை ஹெல்புக்கு கூப்பிட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவர் பரபரப்பாக அங்கிருந்து அகன்று விட்டார்.
“எம் எல்… நம்மகிட்ட… அதுவும் நம்ம முகத்தை பார்த்து பேசிட்டு போறாங்க லல்லி” என்று அர்ச்சனா வியப்படைய,
“அவங்களுக்கும் ஒரு வேளை ஆப்லெங்கென்டால அடிப்பட்டிருக்குமோ?” என்று லல்லி சந்தேகமாக கேட்க, “திரும்பியும் முதல இருந்து ஆரம்பிக்காதேடி” என்று அர்ச்சனா அவள் மண்டையில் தட்டினாள்.
லல்லி தலையை தேய்த்து கொண்டே, “பின்ன… இந்த மாதிரி ஆச்சரியமெல்லாம் நடந்தா நான் என்னன்னு நினைக்க?” என்று கேட்க,
“நீ எதுவும் நினைக்காம இரு… முக்கியமா எதுவும் யோசிக்காம இரு” என்ற அர்ச்சனா மேலும்,
“அவங்களுக்கு வெங்கட் மாமா கல்யாணம் நடக்கிற சந்தோஷம்… அந்த சந்தோஷத்துலதான் அவங்க நம்மகிட்ட பேசுறாங்க” என்றாள்.
லலிதா உடனே, “ஒரு வேளை இந்த கல்யாணம் மட்டும் நின்னுட்டா” என்று சொல்ல,
“ஏன்டி அபசகுனமா பேசுற?” என்று அர்ச்சனா கடுப்படிக்க,
“நடக்கிறது எல்லாம் பார்த்தா அப்படிதான் தெரியுது அர்ச்சு” என்றாள் லலிதா.
“நீ எதையும் வாயை வைச்சு தொலைக்காதே… கல்யாணம் நடந்தாதான் எம் எல் நம்மல மன்னிச்சு ஏத்துப்பங்க… இல்லனா பழைய குருடி கதவை திறடிங்குற மாதிரி ஆகிடும்” என்றாள்.
“அப்படினா பொண்ணு ரூம்ல நடந்த விஷயத்தை நம்ம மாமாகிட்ட சொல்ல வேண்டாம்… அவர் போய் ஏதாவது பிரச்சனை பண்ணிடுவாரு” என்று லலிதா சொன்னதை அர்ச்சனாவும் ஏற்று கொண்டாள். அதற்கு பின் இருவரும் மல்லி சொன்ன வேலையை செய்வதில் மும்முரமாகிவிட்டனர்.
வாசலில் உறவினர்களை வரவேற்று கொண்டிருந்த நந்தா மல்லியின் தங்கை சித்ரா, குடும்பம் சகிதம் வருவதை பார்த்து புன்னகைத்தார்.
பாவனா முகத்தில் எப்போதிருக்கும் உற்சாகமும் குதூகலமும் இல்லாததை கவனித்தவர், “இன்னும் பாவனாவுக்கு உடம்பு சரியாகலையோ?” என்று விசாரிக்க,
“இல்ல மாமா… இப்போ பரவாயில்ல… என்ன? இவளுக்கு இப்படி ஆனதால அக்காவுக்கு கூட மாட வந்து இருந்து என்னால எந்த ஹெல்பும் செய்ய முடியாத போயிடுச்சு” என்று சித்ரா வருத்தப்பட்டாள்.
“அதெல்லாம் பரவாயில்லை சித்ரா” என்று அவளை சமாதானப்படுத்திய அதேநேரம், “உங்க அக்கா என்ன சாதாரண ஆளா… ஒத்த ஆளா நின்னு இந்த ஊரையே சமாளிப்பா… அதுவும் அவ செல்ல பையனுக்கு கல்யாணங்குற சந்தோஷத்துல… உங்க அக்காவுக்கு பத்து வயசு குறைஞ்சுடுச்சு” என்று நந்தா கிண்டலாக சொன்னதை கேட்டு சிரித்த சித்ரா,
“அக்காவுக்கு வயசு குறைஞ்சுடுச்சு… ஆனா உங்களுக்கு வயசு ஏறவே இல்லயே மாமா… உங்க பையனுக்கு கல்யாணம்னு சொன்னா யாருமே நம்பவே மாட்டாங்க… அவ்வளவு பிட்டா யங்கா இருக்கீங்க
இங்கே என் வீட்டுகாரரையும் பாருங்க… தொப்பையும் தொந்தியுமா?” என்றவள் சந்தடி சாக்கில் புருஷனை வார,
“ஏன் டி ஏன்?” என்று ஜெயந்தன் பரிதாபமாக பார்க்க,
“உண்மைதானே சொன்னேன்” என்று சித்ரா சொல்ல,
“விடு சித்ரா… சும்மா சகலையை போய் கலாய்ச்சிட்டு” என்ற நந்தா,
“சரி சரி பேசிட்டே இருந்தா எப்படி… பாவனா கூட்டிட்டு கீழே போங்க… ஈவினிங் டிபன் ரெடியா இருக்கு… சாப்பிட்டு வந்துருவீங்க” என்று சொல்ல,
“இல்ல மாமா… நான் முதல அக்காவை பார்த்துட்டு வந்துடுறேன்” என்று சித்ரா உள்ளே செல்ல ஜெயந்தனோ, “நீ போ… நான் டிபன் சாப்பிட்டு வந்துடுறேன்” என்று கீழே சென்றுவிட்டார்.
“என்ன சொன்னாலும் உங்க அப்பா திருந்தவே மாட்டாராடி” என்று சித்ரா மகளிடம் சொல்லி சலித்து கொள்ள, பாவனா எந்த உணர்வுகளையும் காட்டி கொள்ளவில்லை.
“ஏன் டி இப்படி இருக்க… பேசாதே பேசாதேன்னு சொன்னா பேசி பேசி சாகடிப்ப… இப்போ பேசாம என் உயிரை எடுக்கிற” என்று புலம்பி கொண்டே வந்த சித்ரா தன் தமக்கையை தேடி கண்டுபிடித்து அவளிடமும் மகளை பற்றி குறைப்பட்டு கொண்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… உடம்பு சரியில்லாததால அப்படி இருக்கா” என்று தங்கைக்கு சமாதானம் கூறிய மல்லி,
“வந்ததே லேட்டு… உள்ளே எவ்வளவு வேலை இருக்கு… கதை பேசிட்டு இருக்க” என்றவர் மேலும்,
“நான் பாவனாவை பார்த்துக்கிறேன்… நீ போய் பொண்ணு அழைப்பிற்கு அர்ச்சனா லலிதா கூட மாட இருந்து வேலை செய்” என்றாள்.
“அர்ச்சனா லலிதா கூடவா… அப்போ நீ உன் மருமகள்களோட சமாதானம் ஆகிட்டியா க்கா” என்றவள் ஆச்சரியத்துடன் கேட்க,
“என் மருமகள்களோட நான் சண்டை போடுவேன்… சமாதானம் ஆவேன்… அதெல்லாம் நீ கேட்க கூடாது… போய் வேலையை பாரு” என்று தங்கையை துரத்தியவள், பாவனாவை தனியாக அழைத்து வந்து,
“நான்தான் உன்கிட்ட அந்த விஷயத்தை அப்பவே மறந்துடுன்னு சொன்னேன் இல்ல… இன்னும் நீ அதையே நினைச்சிட்டு மூஞ்சை தூக்கி வைச்சுட்டு இருக்க” என்று மல்லி கேட்கவும் பாவனா சோர்வுடன்,
“எனக்கு பயமா இருக்கு பெரியம்மா” என்றாள்.
உண்மையிலேயே அவள் ரொம்பவும் பயந்து விட்டாள். இன்னும் அந்த உணர்விலிருந்து அவள் இன்னும் மீண்டு வரவில்லை என்பதை அவள் முகம் அப்பட்டமாக காட்டி கொடுக்க மல்லிக்கு அவள் மீது ஏனோ பரிதாபம் வரவில்லை. கடுப்புத்தான் வந்தது.
“அந்த வீட்டுக்குள்ள போகும் போது மட்டும் பயமா இல்லையா உனக்கு?” என்று முறைப்புடன் கேட்க,
“அப்போ உள்ளே எதுவும் இல்லன்னு நினைச்சேன் பெரிம்மா” என்றாள் பாவனா பாவம் போல முகத்தை வைத்து கொண்டு!
“பாவனா… நடந்தை பத்தி யோசிக்காதே… எல்லாமே ஒரு வகையில நல்லதுக்குதான்… கரஸ்பான்டென்ட் அந்த வீட்டை டெமாலிஷ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டாரு” என்றார்.
பாவனா வியப்பாக விழிகளை விரித்தாள். இது ஒரு வகையில் நல்ல விஷயம்தான் என்று எண்ணியவள், “ஒகே பெரியம்மா… நடந்தை பத்தி இனிமே நான் நினைக்க மாட்டேன்” என்றாள்.
“குட்” என்று அவள் தோளில் தட்டியவர், “சரி… நீ ரிசப்ஷன் ஸ்டார்ட் ஆகுற வரை சின்ன அண்ணனுங்க ரூம்ல இரு… அமிர்தா எல்லாம் உள்ளேதான் இருக்கு” என்று சொல்லி அவளை அந்த அறை வாசலில் விட்டுட்டு அங்கிருந்து அகன்றார் மல்லி.
அதற்கு பிறகு வரவேற்பு எல்லாம் பரபரவென நடக்க, பெண் அழைப்பிற்கு நேரம் நெருங்கியிருந்தது.
திலகா எப்படியோ அழுது புலம்பி மகளை சம்மதிக்க வைத்துவிட்டார்.
ஸ்ரீலக்ஷ்மிக்கு வெங்கட்டையும் மல்லியையும் கோவிலில் பார்த்த நினைவு மட்டும்தான் இருந்தது. அப்போது மாயா சொன்னது இப்போதும் அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது.
“ஏய் அது வெங்கிதானே… வெங்கிதான்… வா ஸ்ரீ… வெங்கிகிட்ட பேசலாம்” என்றவள் உற்சாகமாக சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் காரில் பறந்துவிட்டான். அது மாயாவிற்கு அதீத ஏமாற்றத்தை உண்டுபண்ணியிருந்ததை அவள் நன்கறிவாள்.
ஆனால் அதற்கு பிறகாய் மாயா செய்ததெல்லாம் முற்றிலும் நியாயமற்ற செயல். அவள் ஒரே ஒரு முறை தன்னை பற்றி யோசித்திருக்கலாம். தன்னிடம் கேட்டிருக்கலாம் என்று ஸ்ரீலஷ்மியின் உள்ளம் வெதும்பியது.
எப்படி இத்தனை சுயநலமாக நடந்து கொண்டாள். இப்போது எங்கே அவள் கண்காணாமல் தொலைந்து போனாள்?
ஒன்றுமே அவளுக்கு புரியவில்லை.
இத்தனை தூரம் வந்த பிறகு இந்த திருமணத்தை நிறுத்த சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை.
இதெல்லாம் மாயாவின் வேலை என்று சொன்னால் யாரும் நம்ப போவதுமில்லை.
அதிகபட்சம் அவளுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டிவிடுவார்கள். அதெல்லாம் அவளுக்கு புதிதும் இல்லை என்றாலும் திலகாவின் அழுகை அவள் மனஉறுதியை தளர்த்திவிட்டது.
வரவேற்பிற்கு தயாராகி மேடை ஏறிவிட்டாலே ஒழிய அவள் முகத்திலும் மனதிலும் கொஞ்சமும் தெளிவில்லை.
வெங்கட்டை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனோ சலிக்காமல் தன்னுடைய மருத்துவ நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோருக்கும் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
எல்லோரையும் பார்த்து இயந்திரத்தனமாக புன்னகைப்பது அவளுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. அதெல்லாம் இயல்பிலேயே அவளுக்கு வராத விஷயம். அதுவும் கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் அந்த மேடையில் நிற்பது அவளுக்கு நெருப்பின் மீது நிற்பது போன்று அத்தனை அவஸ்த்தையாக இருந்தது.
ஒவ்வொரு முறையும் கடுப்பில், ‘அடியேய் மாயா’ என்றவள் மனம் கோபத்தில் கர்ஜித்து கொண்டும் வேதனையில் புழுங்கி கொண்டும் இருந்தது.
அதுவும் வாழ்த்த வந்தவர்களின் வரிசை அனுமார் வால் போல நீண்டு கொண்டே போக, அவளுக்கு மூச்சு முட்டியது.
அந்த வரவேற்பு நிகழ்ச்சி எப்போது முடியுமென்று காத்திருந்தவள் மேடையை விட்டு இறங்க எத்தனிக்க, “இருங்க மேடம்… உங்களையும் சாரையும் தனியா கொஞ்சம் போட்டோஸ் எடுக்கணும்” என்று அந்த போட்டோகிராபர் அவளை தடுத்து நிறுத்த,
“அதெல்லாம் முடியாது…. போயா” என்றவள் விறுவிறுவென மேடையை விட்டு இறங்கி சென்றுவிட்டாள்.
இந்த காட்சியை பார்த்த மல்லிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!
‘என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது’ என்று மல்லி மனதில் நினைத்ததை சித்ரா வார்த்தையாக சொல்லிவிட அருகிலிருந்த நந்தாவோ நக்கலாக,
“உங்க அக்கா… தான் செல்ல பையனுக்காக தேடி கண்டுபிடிச்ச அடக்கமான அமைதியான பொண்ணு இல்ல… அப்படிதான் பேசுவ” என்றார்.
மல்லி முகம் கோபத்தில் சிவக்க, “அவளுக்கு டையர்டாகி இருக்கு… போட்டோ எடுக்க முடியாதுன்னு போறா… அது ஒரு தப்பா?” என்று கேட்க,
“சமாளி… இப்படியே நீ எவ்வளவு நாள் சாமாளிக்க போறேன்னு நானும் பார்க்கிறேன்” என்றவர் அதற்கு மேல் விவாதம் செய்யாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மல்லி தவிப்புடன் நின்றார்.
ஸ்ரீ கோபமாக பேசி சென்ற காட்சியை பார்த்த வேதவல்லி திலகாவிடம், “உன் பொண்ணுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியல” என்று சீற, அவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
போட்டோகிராபர் வெங்கட்டிடம், “என்ன சார்… மேடம் இப்படி சொல்லிட்டு போறாங்க” என்று கேட்க,
“அவங்க டையர்டா இருக்காங்க போல…விடுங்க… நாளைக்கு எடுத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு வந்துவிட்டான். பின்னோடு வந்த அவன் நண்பன் ஹமீதோ,
“எனக்கென்னவோ சரியா படல… இப்ப கூட ஒரு தடவை நல்லா யோசிச்சிக்கோ” என்று அறிவுறுத்தினான்.
வெங்கட் அவனை முறைத்து பார்க்க ஹமித் அவனிடம் அமைதியாக, “நான் சொன்ன விஷயத்தை எல்லாம் விடு… இப்போ அந்த பொண்ணு பேசிட்டு போனதை பார்த்தா அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோன்னு தோணுது” என்றான்.
வெங்கட்டிற்கும் அவள் மேடை ஏறிய நொடியிலிருந்து தற்சமயம் நடந்த வரை யோசித்து பார்க்கும் போது நண்பன் சொன்னது போலதான் இருந்தது. ஆனால் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை.
“பிடிக்கலன்னு என்னால யோசிக்க முடியல… வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்” என்றான்.
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?”
“என் பர்த்டே அன்னைக்கு நடுராத்திரில் சுவரேறி குதிச்சு வந்து ப்ளவர்ஸ் கார்ட்ஸ் கொடுத்து விஷ் பண்ணிட்டு போனா? பிடிக்காதவ ஏன் இதெல்லாம் செய்யணும்” என்ற வெங்கட்டின் கேள்வியில் ஹமித் விக்கித்து போனான்.
“நிஜமா நீ சொன்ன சம்பவம் நடந்ததுதா?”
“அது மட்டுமில்ல… நாங்க இரண்டு பேரும் தனியா மீட் பண்ணி இருக்கோம்… போன்ல பேசி இருக்கோம்” என்றான்.
“நேத்து பேசுனியா?”
“ம்ம்ம் பேசுனேனே”
“இப்போ ஒரு தடவை ஃபோன் போட்டு பேசு” என்று ஹமித் சொல்ல,
“எதுக்குடா… அவளே பாவம் ஏதோ டென்ஷன்ல இருக்கா… இதுல நான் வேற ஃபோன் போட்டு அவளை டென்ஷன் படுத்தணுமா?”
“அது என்ன டென்ஷன்னு உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அவளுக்கு ஆயிரம் டென்ஷன் இருக்கும்… அதெல்லாத்தையும் அவ என்கிட்ட சொல்லணும்னு நான் எதிர்பார்க்கிறதே தப்பு”
“இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாதே… சும்மா ஒரு கால் போட்டு பேசி பாரேன்” என்று ஹமித் சொல்ல, வெங்கட் தன் கைபேசியை எடுத்து ஸ்ரீக்கு அழைத்தான்.
சரியாக அதே சமயத்தில் தன் செல்பேசியை எடுத்து தூக்கி போட்டு உடைக்க இருந்தவள், ‘வெங்கி டார்லிங்’ என்று ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள்.
‘வெங்கி டார்லிங்கா… ஆஆஆ… ஐயோ ஐயோ’ என்று தலையிலடித்து கொண்டவள்,
“நீ மட்டும் இப்போ சாகாம இருக்கணும்… உன்னை நானே கொலை பண்ணி இருப்பேன்” என்று கோபமாக தோழியை திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் வெங்கி டார்லிங்கிடமிருந்து தொடர்ச்சியாக அழைப்புக்கள் வந்து கொண்டிருக்க கடுப்பான ஸ்ரீ,
‘அடியேய் மாயா… பிசாசே… இவ்வளவு குழப்பத்தையும் பண்ணிட்டு எங்கடி போன… இப்போ எங்கடி இருக்க’ என்று கத்தினாள். கதறினாள்.
அவள் கோபத்திற்கும் கேள்விக்கும் எந்த பதிலும் வரவில்லை.
மாயா என்பவள் எங்கோ மாயாமாகி போயிருந்தாள்
19

Quote from Marli malkhan on May 12, 2024, 1:18 AMSuper ma
Super ma