You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 1

Quote

நிலாவின் பிரியன்

1

 

அந்த அரங்கமே வண்ண ஒளி விளக்குகளால் மிதந்தன. பிரமாண்ட திரை, அகண்ட மேடை என்று விரிந்து பரந்திருந்த அவ்விடம் ‘ஷைனிங் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சிக்கான அறிமுக அத்தியாயத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.

எஸ் எஸ் என்ற பிரமாண்டமான வடிவமைப்பு அந்த அரங்கத்தின் நுழைவாயிலிலும் மேடையின் பின்புறத்திலும் அமைக்கப்பட்டன. அவை பார்வையாளர்களை கவரும் வகையில் தங்க நிறத்தில் ஜொலித்தது.      

அரங்கத்தில் போடப்பட்ட இருக்கைகள் எல்லாம் முழுவதுமாக நிரம்பிவிட்ட போதும்  அந்த நிகழ்ச்சியின் ஷுட் இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பிறகே துவங்கியது.

ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லெஜன்ட் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஈஸ்வர், கருப்பு நிற கோட் சூட் அணிந்தபடி அந்த மேடையில் கம்பீரமும் தோரணையுமாக வந்து நின்றார். அந்த நொடியே அந்த அரங்கின் வெளிச்ச கீற்றுகள் மொத்தமும் அவர் மீது பாய்ந்தன.

ஒளிவெள்ளத்தில் மின்னிய ஈஸ்வர், ‘வெல்கம் டூ மிமி வழங்கும் ஷைனிங் ஸ்டார்...   ஸ்பானஸ்ர்ட் பை ரக்ஷா ஹெர்பல் ப்ரோடாக்ட்ஸ், அமர் லக்ஸுரி வில்லாஸ், காயா வாஷிங் லிக்விட்’ என்று தன் அறிமுக உரையை ஆரவாரமாக ஆரம்பித்தார்.

லெஜன்ட் ஸ்டாரான ஈஸ்வர் நடிகர் மட்டுமே இல்லை. இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழ் சினிமா உலகத்தில் பலருக்கான முன்னோடி, தொடர்ந்து முப்பது ஆண்டு காலமாக தமிழக திரையுலகின் வெற்றிகரமான நாயகன் மற்றும் இயக்குநராக வலம் வருபவர். அவருடைய படங்கள் மற்றும் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அத்தனையுமே வித்தியாசமானவை. பலரின் பாரட்டுகளையும் விருதுகளையும் கணக்கில்லாமல் அள்ளி குவித்தவை.  

அத்தகைய புகழ் மிக்க ஈஷ்வர் தன்னுடைய கணீர் குரலால் அந்த நிகழ்ச்சியின் சாராம்ச நோக்கத்தை விளக்க துவங்கிய கணத்தில் பார்வையாளர்கள் கவனம் அவரிடத்தில் குவிந்தது.  “தமிழகத்தோட ஷைனிங் ஸ்டாரை கண்டுபிடிக்கிறதுதான்... இந்த ஷோவோட நோக்கம்... ஆனா ஸ்டார்ஸ்ங்குறவங்க வெறும் மேடைக்கு மட்டுமா... இல்ல நிஜ வாழக்கையிலுமா?

என்னை கேட்டா எல்லா சூழ்நிலையிலும் ஷைனிங் குறையாம அதே போல மின்னிட்டு இருக்கவங்கதான் உண்மையான ஷைனிங் ஸ்டார்... அவங்கதான் இந்த ஷோவோட ஷைனிங் ஸ்டாராகவும் ஆக முடியும்... அப்படிப்பட்ட ஷைனிங் ஸ்டார்களை தேர்ந்தெடுக்க போறது நாங்க இல்லங்க... நீங்கதான்” என்று மக்களை கை காட்டிய ஈஷ்வர் மிக தெளிவாக அந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விவரித்தார்.

“இந்த நிகழ்ச்சியில் வெல்ல போறவங்களுக்கு கிடைக்க போற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?” என்று ஈஸ்வர் கேட்க அரங்கத்தினர் மற்றும் அந்த நிகழ்ச்சின் ஒளிபரப்பை டிவி நேரலையில் பார்ப்பவர்களும் வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்கும் போதே, “ஒரு கோடி”  என்று அறிவிக்க, பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் வியப்பு தாங்கவில்லை.  திகைப்புற்றனர்.

வெளிநாடுகளில்  ஏற்கனவே பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவும் பல வருட காலமாக தமிழக மக்களின் மனதிலும், தமிழ் சானல்களிலும் முதலிடத்தில் கோலோச்சி நிற்கும் ஜே சானலில்.  

இந்த நிகழ்ச்சியின் துவக்கமே மக்கள் மனதில் அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஈஸ்வரும் தன்னுடைய பேச்சு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை அங்கிங்கு என்று எங்கும் நகரவிடாமல் கட்டி போட்டிருந்தார். 

தொராயாமாக இரண்டு மணி நேரம் கடந்து விட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறவர்கள் என பத்து பேரின் அறிமுக படலங்கள் முடிந்திருந்தன. அனைவரும் நட்சத்திரங்கள். ஆடல் பாடல் என்று வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியான பிரத்தியேக திறமைகளும் அடையாளங்களும் இருந்தன.

அவர்கள் தங்கள் உரைகளை முடித்ததும் ஒரு அறிமுக காணொளி திரையிடப்பட்டது. அதன் பின்பு அவர்கள் அந்த நிகழ்ச்சி கட்டமைப்பு பின்னே அமைக்கப்பட்டிருந்த ஆடம்பரமான வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்கள். நூறு நாட்கள் குடும்பம் சமூகம் மற்றும் ஊடகங்களின் தொடர்புகள் இல்லாமல் அந்த வீட்டில் தங்கி இருப்பதுதான் போட்டி.

மொத்தம் இருபது போட்டியாளர்கள். அவர்களின் ஆண் பெண் இருபாலினத்தினரும் உண்டு மற்றும் அனைவரும் வெவ்வேறு வயது கொண்டவர்கள். அந்த நூறு நாட்களும் அவ்வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள் அவர்களை இருபத்தி நாலு மணி நேரமும் கண்காணித்து கொண்டே இருக்கும்.

உள்ளே நடக்கும் அத்தனையும் தினமும் ஒரு மணி நேர ஷோவாக ஜே சானலில் ஒளிப்பரப்படும். நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியில் பங்கேற்பாளர்  ஒருவர் மக்களால் வெளியேற்றபடுவார்கள்.

இறுதி வாரம் வரை யார் உள்ளே இருக்க போகிறார்கள்?  மக்கள் யாரை ஷைனிங் ஸ்டார் என்று தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்ற நோக்கத்துடனே போட்டி நகரும்.

பதினொன்றாவது பங்கேற்பாளராகதான் அவன் நுழைந்தான். வானின் நீலத்தில் கோட் வெள்ளை பேன்ட் பூட்ஸ் என துறுதுறுப்பான தோற்றத்துடன் மேடை ஏறினான். 

அந்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் விழி விரித்து பார்த்தனர்.

யாருமே அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை.  அதுவும் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக! நான்கு வருடத்திற்கும் மேல் ஜே சானலில் வெற்றிகரமாக ஓடிய நீயும் நானும் தொடரின் நாயகன் அன்புவாகத்தான் எல்லோருக்கும் அவனை தெரியும். அந்த தொடர் முடிந்த பிறகு எந்த நிகழ்ச்சியிலும் அவன் பெரிதாக தலை காட்டவில்லை.

திடீரென்று மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் அவன் பங்கேற்பது எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சியை தந்தது.

அதுவரை வந்த பங்கேற்பாளர்களில் அவன்தான் மிகவும் பிரபலாமனவன். மக்கள் செல்வாக்கு அதிகம் உடையவன். ஆனாலும் சின்னத்திரை கை கொடுத்தளவுக்கு பெரிய திரை அவனுக்கு கை கொடுக்கவில்லை.  

இப்போதும் சின்ன திரைகள் அவனுக்கு வாய்ப்பு தர காத்திருந்தன. ஆனால் அவனுடைய பெரிய பெரிய கனவுகளுக்கு அந்த சிறிய திரை போதவில்லை. தன்னுடைய பிரமாண்டமான கனவுகளை மெய்பித்து கொள்ளும் இலட்சியத்துடனே அவன் அந்த மேடையேறினான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தான்.

அதே நம்பிக்கை மிளிர அவன் வந்து மேடையில் நடுவட்டத்தில் நின்ற நொடி அந்த அரங்கமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்தது.

அந்த மேடையை பணிவுடன் தொட்டு வணங்கிய பிரியன் ஈஸ்வரையும் மரியாதையுடன் வணங்க, “வாங்க தேவிபிரியன்” என்று  அவர் அவனை வரவேற்று கை குலுக்கினார்.

“இந்த ஷோகுள்ள வரவங்க எல்லோருக்குமான நோக்கமும் பிரபலமாகணும்கிறதுதான்... ஆனா உங்களுக்கு அந்த பிரபலமும் ஃபேமும் ஏற்கனவே இருக்கு... அப்புறம் எதுக்கு நீங்க இந்த ஷோகுள்ள வரனும்” என்று கேட்க பிரியன் அவனது அக்மார்க் புன்னகையுடன் அந்த ஒலிவாங்கியை தூக்கி பிடித்து பேச துவங்கினான்.

அவன் பதிலை கேட்க அரங்கத்தினர் ஆர்வமாக மேடையை கூர்ந்து கவனித்தனர்.

“எல்லோருக்கும் என்னைஅன்புவாதான் தெரியும்... தேவிப்ரியனா தெரியாது... நான் தேவிப்ரியனா எல்லோருக்கும் தெரியணும்... அது மட்டும் இல்ல... எனக்கான தனிதத்துவமான அடையாளத்தை நான் உருவாக்கிக்கணும்... ஷைனிங் ஸ்டார் ஆகனும்” என்ற அவனது நம்பிக்கையான மற்றும் திடமான பேச்சில் மீண்டும் கைத்தட்டல்கள் அவ்வரங்கத்தை நிறைத்தன. அவனுக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் அப்படியே இருந்தது. அவனது அந்த காந்தமான புன்னகை துறுதுறுப்பான நடை உடை பேச்சு என அனைத்தையும் இன்றும் அவர்கள் ரசித்தார்கள்.

அவன் பேசி முடித்த பின் அவனை பற்றிய அறிமுக காணொளி ஒன்று அங்கிருந்த திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

‘நான் தேவிப்ரியன்’ என்று அவன் தன்னைதானே அறிமுகம் செய்து கொள்வதை வெண்ணிலா தன் வீட்டின் தொலைகாட்சியில் பார்த்திருந்தாள். இமைகளை மூடி கொண்டவள் விழிகளில் கண்ணீர் நிறைந்து வழிந்தது.

‘என் பேர் தேவிப்ரியன்’ என்று முதல் முதலாக அவளிடம் அவன் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்ட அந்த நாள் நினைவில் வந்து எட்டி பார்த்தது.

வாழ்க்கை எவ்வளவு வேகமாக பறந்து கட்டி கொண்டு ஓடிவிட்டது. காதல் கல்யாணம் குழந்தைகள் என்று இணைந்திருந்த அவர்கள் பதிமூன்று ஆண்டு கால, பாதையும் பயணமும் இப்போது துண்டு துண்டாகி உடைந்து எதிரெதிர் திசையில் நிற்கிறது.

ஆனால் இது ஏதும் அறியாமல் அல்லது புரியாமல் அவர்களது எட்டு வயது இரட்டையர் மகள்களான ஹரிதாவும் கவிதாவும், “மா டேடி மா... இனிமே டெயிலி டேடிய டிவில பார்க்கலாம்” என்று தந்தையை திரையில் பார்த்ததில் குதூகலமாக குதித்து கொண்டாடி கொண்டிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியை பார்க்கவே கூடாது என்றுதான் வெண்ணிலா நினைத்தாள். ஆனால் முடியவில்லை. அவன் என்ன பேசுவான் என்று கேட்கும் ஆவலில் அதனை வைத்து பார்த்தாள்.

ஆனால் ஒரே ஒரு வார்த்தை கூட அவன் தன்னை பற்றி பேசவே இல்லை. ஏன் பேச போகிறான்? குப்பை போல அவன் தன்னையும் தன் உறவையும் தூக்கி போட்டுவிட்டுதானே அந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டிருக்கிறான்.

ஒரு பக்கம் ஹரிதாவும் கவிதாவும் தந்தையை அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்த சந்தோஷத்தில் கொண்டாடி களித்திருக்க, அவளுக்கோ அந்த நொடி ஏன் அந்த நிகழ்ச்சியை பார்த்து தொலைத்தோம் என்று ஆகிவிட்டது. அதன் பிறகு அவளால் இயல்பாக இயங்க முடியவில்லை.

அவனையும் அந்த நிகழ்ச்சியையும் பார்க்க பிடிக்காமல் அதனை அணைக்க ரிமோட்டை தேடினாள். கிடைக்கவில்லை. கோபத்துடன் சென்று அந்த தொலைகாட்சி மின்இணைப்பை பிடுங்கிவிட்டாள்.

“மா ஏன் மா... ஏன் ஆப் பண்ண... டேடி பேசிட்டு இருந்தாரு... நான் பார்க்கணும்... நான் பார்க்கணும்... டிவி போடுமா” என்று இருவரும் அடம் பிடித்து ஆர்பாட்டம் செய்ததை எல்லாம் கண்டும் காணாமல் படுக்கை அறைக்குள் வந்துவிட்டாள்.

“ம்மா நான் பார்க்கணும்... டேடியை பார்க்கணும்” என்று ஹரியும் கவியும் கத்தி கூச்சலிட்டார்கள். கீழே விழுந்து அழுது புரண்டார்கள். ஆனால் என்ன செய்தும் நிலாவின் மனம் இறங்கவில்லை.

அவள் மேலிருந்த பெட்டி ஒன்றை இறக்கி அதில் தங்களின் துணி மணிகளை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க,

“ம்மா என்னாச்சு... எதுக்கு பெட்டிக்குள்ள டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கிற” என்று ஹரிதா அதே கண்ணீர் நிலையில் கேட்டு வைக்க,

“பாட்டி வீட்டுக்கு போறோம்” என்றாள்.

“பாட்டி வீட்டுக்கா... இப்பவா ... ஐ ஜாலி” என்று அவர்கள் அந்த நிகழ்ச்சியை மறந்து  குதிக்க ஆரம்பிக்க,

“இப்ப இல்ல... காலைல... இரண்டு பேரும் உங்க ஸ்கூல் பேக் அப்புறம் புக்ஸ் எல்லாம் எடுத்து வையுங்க” என்றாள்.   

“எதுக்கு மா... ஸ்கூல் பேகு” என்று கவி தன் சகோதிரி ஹரியின் முகத்தை பார்த்தபடி கேட்க,

“இனிமே அங்கிருந்துதான் ஸ்கூல் போக போறீங்க” என்றாள் துணிகளை அடுக்கி கொண்டே.

“அங்கிருந்து ஸ்கூல் தூரம் இல்லயாமா?” என்று கேட்டாள் ஹரிதா.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... எடுத்து வை” என்று கூறி துணிகளை எடுத்து வைத்து விட்டு பெட்டியை மூடும் போது கவி தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஹரியை கேட்க சொல்லி தூண்டினாள்.

“டேடி வர வரைக்கும்தானே ம்மா... அப்புறம் நம்ம நம்ம வீட்டுக்கு வந்திருவோம்தானே” என்று ஹரியும் மெதுவாக அந்த கேள்வியை எழுப்ப, வெண்ணிலாவின் முகம் துவண்டு போனது.

அந்த கேள்விக்கான பதிலை அவளால் சொல்ல முடியவில்லை. கண்களில் மீண்டும் கண்ணீர் திரையிட்டது.

“நீ இந்த ஷோல பார்டிஸிப்பேட் பண்ண கூடாது தேவ்” என்று அவளும் பலமுறை சொல்லி பார்த்தாள். புரிய வைக்க முயன்றாள். அவனோ அவள் சொல்வதை கேட்கவே இல்லை.  

“ஏன் பண்ண கூடாது... நான் பண்ணத்தான் போறேன்” என்று பிடிவாதமாக நின்றான்.

“தேவ் வேண்டாம்... நீ இந்த ஷோக்கெல்லாம் செட்டாக மாட்டா... இதனால் உன் இமேஜ் மொத்தமா டேமஜாயிடும்” அவள் சொன்னதை அவன் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

 “இப்போ என்ன சொல்ல வர்ற... எனக்கு திறமை இல்லையா... இந்த ஷோல ஜெயிக்க முடியாதா?”

“இது திறமை பத்தின ஷோ இல்ல... இது கேரக்டர் பத்தினது”

“இப்போ என்ன சொல்ல வர்ற... என் கேரக்டர் மோசமான கேரக்டர்னா... இவ்வளவு வருஷ நம்ம வாழ்க்கைல நீ என்னை பத்தி இப்படிதான் நினைச்சிட்டு இருக்கியா நிலா”

“நீ மோசமானவனா நல்லவனாங்குறது இங்க பிரச்சனை இல்ல தேவ்... யார் அவங்க எமொஷன்ஸ சரியா ஹாண்டில் பண்றாங்களோ அவங்களாலதான் இந்த ஷோகுள்ள சர்வைவ் ஆக முடியும்”

“அப்போ என்னால முடியாதுங்குற”

“டேய்... நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா... நீ பாட்டுக்கு ஷோகுள்ள ஏதாவது உளறியோ இல்ல சொதுப்பியோ வைச்சனா... உனக்குனு இப்போ இருக்கு பேர் புகழ் எல்லாம் மொத்தமா சரிஞ்சு போயிடும்” என்றவள் கோபவேசத்துடன் கத்த அவன் அசட்டையான பார்வையுடன்,  

“அதானே நிலா உனக்கும் வேணும்” என்றான். அவனது அந்த வார்த்தையில் அவள் குரல் சட்டென்று அமுங்கிவிட்டது.

“நான் எப்போ அப்படி சொன்னேன்”

 “நீ சொல்லல... ஆனா உன் மனசுல அதான் இருக்கு... என் இமேஜை டேமஜ் பண்ணி பார்க்குறதுல மத்த எல்லோரையும் விட உனக்குதான்டி ரொம்ப ஆசை”

“நீயும் என்னை அவ்வளவுதான் புரிஞ்சு வைச்சு இருக்க இல்ல”

“இந்த ஷோ மூலமா என் ஃபேம் அதிகமாகிட போகுதுனு நீ பயப்படுற நிலா” என்றவன் மீண்டும் மீண்டும் அவளை தாக்குவதிலேயே குறியாக இருந்தான். இதற்கு மேல் அவளுக்கு எப்படி புரிய வைப்பதேன்றே தெரியவில்லை.

இந்த நிகழச்சி அவன் பேர் புகழ் சம்பந்தபட்டது மட்டும் இல்லை. அவள் வேலை சம்பந்தபட்டது. அவளின் இத்தனை வருஷ உழைப்பு கனவு இலட்சியம் சம்பந்தப்ட்டது. ஆனால் அதை சொன்னால், ‘அப்போ உன் கரியர்காகதான் நீ இவ்வளவு நேரமா பேசிட்டு இருக்க... உனக்கு என் வெற்றி தோல்வி பத்தி எல்லாம் கவலை இல்ல’ என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டு வைப்பான்.

அமைதியாக மூச்சை இழுத்து விட்டு கொண்டவள், “சரி விடு தேவ்... அந்த விஷயத்த பத்தி எல்லாம் இப்போ பேச வேண்டாம்... நீ ஷைனிங் ஸ்டார் ஷோல கலந்துக்காத... ப்ளீஸ் இதை ஒரு ரிக்வஸ்டா கேட்குறேன்... எனக்காக அதை மட்டும் செய்” என்று இறுதியாக தன் ஈகோவை விட்டு அவள் கெஞ்சியும் பார்த்தாள். ஆனால் அவன் தன் முடிவிலிருந்து மாறவே இல்லை.

“சாரி நிலா... நான் இந்த ஷோல கலந்துக்கதான் போறேன்... எனக்கு இந்த ஷோல வின் பண்ணனும்” என,

“தேவ்” அவள் கவலையுடன் அவனை பார்த்தாள்.

இப்போதுவரை அவள் பேசியதை அவன் காதில் வாங்கினார் போலவே தெரியவில்லை. புகழ் என்ற போதை மொத்தமாக அவன் மண்டைக்கேறி இருந்தது. அந்த கர்வத்துடன் பேசுபவனிடம் என்ன சொல்லி புரிய வைக்க முடியும்?

இறுதியாக அவளிடமிருந்த கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்தி பார்த்தாள்.  

“நீ இந்த ஷோல கலந்துக்கிட்டனா... அதோட நம்ம உறவும் முடிஞ்சு போயிடும் தேவ்... நீயே முடிவு பண்ணிக்கோ” என்று அவள் அழுத்தம் திருத்தமாக சொல்லிய பிறகும் அவன்,

“அப்படிதான் நம்ம உறவு முடியனும்னா அதுக்கு யார் என்ன பண்ண முடியும் நிலா” என்று அலட்சியமாக கூற அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் பேச்சற்று நின்று விட அவனும் அந்த பேச்சை அதற்கு மேல் தொடராமல் தன் பெட்டியை அடுக்கி கொண்டு கிளம்பிவிட்டான்.

அதன் பிறகு ஷுட்டிங் அது இது என்று காரணம் சொல்லி கொண்டு அவன் வீட்டிற்கு வராமல் வெளியேவே தங்கிவிட்டான். தன் மகள்களிடம் மட்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்பேசியில் பேசுவான்.

ஏன் வரவில்லை என்ற மகள்களின் கேள்விக்கு எதையாவது சொல்லி சமாளிப்பான். ஆனால் ஒரு முறை கூட அவளிடம் பேசுவதற்கு அவன் முயலவில்லை. அவன் பேசாத போது ஏன் தான் மட்டும் பேச வேண்டுமென்று அவளும் அவனிடம் பேசவில்லை. 

ஆனாலும் பிரிவது குறித்து மனதார ஒப்பு கொண்டு அந்த வார்த்தையை சொல்லி இருப்பான் என்று அவள் நம்பவில்லை. நிகழ்ச்சி ஆரம்பிக்க இருந்த அந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவன் தன் முடிவை மாற்றி கொண்டு திரும்புவான் என்று கடைசி நொடி வரை எதிர்பார்த்தாள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு என்னவோ அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது. 

அதுவும் தற்சமயம் பிரியன் அந்த மேடையில் நிற்பது பேசுவது எல்லாம் பார்க்க பார்க்க அவளுக்கு தாங்கவே முடியவில்லை.  

ஒவ்வொரு முறையும் அவளுக்கான வாய்ப்பை குழி தோண்டி புதைத்துவிட்டுதான் அவன் தனக்கான வெற்றியை சாதித்து கொள்கிறான் என்று எண்ணும் போதே அவளுக்கு உள்ளூர எரிந்தது.

அவன் எப்போதுமே அவளை பற்றியும் அவள் வாய்ப்புகளை பற்றியும் யோசிதத்தே இல்லை. அவனுக்கு அவன் மட்டும்தான் முக்கியம். அவன் வெற்றி... அவன் புகழ்... அவன் வாழ்க்கை...

இம்முறையும் அவன் அதையேதான் செய்தான். அவளை பற்றி யோசிக்கவில்லை. அவனுக்கு தான் தேவை இல்லை எனும் போது தனக்கு மட்டும் அவன் எதற்கு? என்று எண்ணமிட்டு கொண்டே வெண்ணிலா படுக்கையில் சாய, அவள் அருகே நெருக்கி படுத்து கொண்ட கவிதா,  

“டேடி இந்த ஷோல வின் பண்ணிடுவாரு இல்லமா” என்று கேட்டாள்.

குழந்தைகள் முகத்தை பார்த்ததும் அவனை பிரிய வேண்டுமென்று எண்ணம் தளர்ந்து. மீண்டும் மனம் தவிப்பில் ஆழ்ந்தது.

“ம்மா உன்கிட்டதான் கேட்குறேன்... டேடி இந்த ஷோல வின் பண்ணிடுவார்தானே?” என்று கவி அதே கேள்வியை கேட்டு அவளை உலுக்க எடுத்து அவள் சிந்தையை கலைக்க,

“இப்போவே எதுவும் சொல்ல முடியாது கவி... எல்லாம் உங்க டேடி கைலதான் இருக்கு” என்று அவள் விட்டேற்றியாக உரைக்க,

“கண்டிப்பா டேடிதான் வின் பண்ணுவாரு” என்று தந்தை மீதான பாசத்திலும் நம்பிக்கையிலும் மகள்கள் இருவரும் ஒன்று போல கூறினார்கள்.  தந்தை மீது அவர்கள் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் பார்த்து அவள் மனம் கலங்கியது.

“சரி வின் பண்ணுவாரு” என்றவள் இரு கைகளுக்குள்ளும் மகள்கள் இருவரையும் அணைத்து பிடித்தபடி, “நீங்க இரண்டு பேரும் இப்போ தூங்குங்க... காலைல சீக்கிரம் கிளம்பணும்”  என்று தட்டி கொடுத்து உறங்க வைத்தாள். ஆனால் வெண்ணிலாவின் விழிகளை உறக்கம் தழுவவில்லை.

பிரியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிக பெரிய தப்பை செய்து விட்டான் என்று அவளுக்கு திரும்ப திரும்ப தோன்றியது. ஆனால் இனி அந்த தப்பை சரி செய்யவும் முடியாது. நடப்பது நடந்தே தீரும்.  

 

shanbagavalli, Miya dev and 4 other users have reacted to this post.
shanbagavalliMiya devMarli malkhanRathichitti.jayaramanpriya.jagan
Quote

All the best moni dear 

Quote

Nice 

monisha has reacted to this post.
monisha
Quote

ஆரண்யம்
இந்த கதையில் நான் எதிர்பார்க்காதது நிறைய இருந்தது...
அவள் குடும்பம் நல்லாவால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன், அவனால் அனாதையாக்கப்பட்டு அந்த வக்கீல் குடும்பத்தில் அடைக்கலம் வந்திருப்பாளோ என்று நினைத்தேன். ஆனால் அந்த நீதிபதி வீட்டில் அவள் சொந்த மகளை போல் இருந்தது குழப்பத்தை விளைவித்தது. அவள் பழிவாங்க காரணத்தை கடைசி அத்தியாயம் வரை மர்மமாகவே வைத்து , நான் கூட மறந்து வீட்டீர்களோ என்று நினைத்தேன்), கடைசிக்கு முன் அத்தியாயம் படிக்கும் போது நினைத்தேன். எல்லா முடிச்சுகளையும் கடைசியில் அவிழ்த்து சரியான தெளிவை தந்துள்ளீர்கள். கதையின் முடிவை பலவாக நினைத்திருக்க, நீங்கள் தந்த முடிவு எதிர்பார்க்காதது. எல்லா கதைகளுக்கும் happy ending இருந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் என்ன பண்ணுவது முடிவை கொடுக்காமல் விடும்போது அவரவர் கற்பனைக்கு விடுவது கூட நன்றாக தான் இருந்தது.

என் கற்பனையில் ஆரண்யா சில வருடங்கள் சிறகடித்து பறந்து பின், நல்லாவிடமே வந்து சேர்ந்து குடும்பமாக சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று முடித்திக்கொண்டேன்.

கடைசி வரை நல்லா நல்லவனா கெட்டவனான்னே தெரியலை. எந்த வரையறைக்குள்ளும் வைக்க முடியவில்லை. அவள் மீதான காதல் அவனை உணர்வுள்ள மனிதனாக மாற்றிவிட்டது மட்டுமே உண்மை. அதே போல் தான் ஆரண்யா கதாபாத்திரமும் . அவள் செய்தது சரியா தவறா? எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

எப்படி கதையை கொண்டுபோனாலும் நியாயப்படுத்தி விடுகிறீர்கள். நிறைய கதைகளில் ஒரே (இறுதி) அத்தியாயத்தில் எப்படி தான் புள்ளிகளை இணைத்து நிறைவாக முடிக்கிறீர்களோ. அதுவும் ஒவ்வொரு முறையும் நிறைவை எட்டிவிட்டது என்று சொல்லும்போது ஆச்சர்யம் தான் வருகிறது. "அதற்குள்ளேயேவா ?" , என்று.

வாழ்த்துகள் . தொடர்ந்து உங்கள் கதையை படிக்க ஆர்வம் மேலோங்குகிறது.

**ஆரண்யம் கதையின் விமர்சனத்தை கொடுக்க சோம்பேறித்தனம் பட்டதால் இன்று தான் என் கருத்தை சொல்ல முடிந்தது. ஆனால் அதற்குள் கதை திரியை காணவில்லை. எங்கே சொல்வது என்றும் தெரியவில்லை. அதனால் இந்த திரியில் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்

Quote
Quote from Rathi on February 18, 2024, 6:17 AM

ஆரண்யம்
இந்த கதையில் நான் எதிர்பார்க்காதது நிறைய இருந்தது...
அவள் குடும்பம் நல்லாவால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன், அவனால் அனாதையாக்கப்பட்டு அந்த வக்கீல் குடும்பத்தில் அடைக்கலம் வந்திருப்பாளோ என்று நினைத்தேன். ஆனால் அந்த நீதிபதி வீட்டில் அவள் சொந்த மகளை போல் இருந்தது குழப்பத்தை விளைவித்தது. அவள் பழிவாங்க காரணத்தை கடைசி அத்தியாயம் வரை மர்மமாகவே வைத்து , நான் கூட மறந்து வீட்டீர்களோ என்று நினைத்தேன்), கடைசிக்கு முன் அத்தியாயம் படிக்கும் போது நினைத்தேன். எல்லா முடிச்சுகளையும் கடைசியில் அவிழ்த்து சரியான தெளிவை தந்துள்ளீர்கள். கதையின் முடிவை பலவாக நினைத்திருக்க, நீங்கள் தந்த முடிவு எதிர்பார்க்காதது. எல்லா கதைகளுக்கும் happy ending இருந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் என்ன பண்ணுவது முடிவை கொடுக்காமல் விடும்போது அவரவர் கற்பனைக்கு விடுவது கூட நன்றாக தான் இருந்தது.

என் கற்பனையில் ஆரண்யா சில வருடங்கள் சிறகடித்து பறந்து பின், நல்லாவிடமே வந்து சேர்ந்து குடும்பமாக சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று முடித்திக்கொண்டேன்.

கடைசி வரை நல்லா நல்லவனா கெட்டவனான்னே தெரியலை. எந்த வரையறைக்குள்ளும் வைக்க முடியவில்லை. அவள் மீதான காதல் அவனை உணர்வுள்ள மனிதனாக மாற்றிவிட்டது மட்டுமே உண்மை. அதே போல் தான் ஆரண்யா கதாபாத்திரமும் . அவள் செய்தது சரியா தவறா? எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

எப்படி கதையை கொண்டுபோனாலும் நியாயப்படுத்தி விடுகிறீர்கள். நிறைய கதைகளில் ஒரே (இறுதி) அத்தியாயத்தில் எப்படி தான் புள்ளிகளை இணைத்து நிறைவாக முடிக்கிறீர்களோ. அதுவும் ஒவ்வொரு முறையும் நிறைவை எட்டிவிட்டது என்று சொல்லும்போது ஆச்சர்யம் தான் வருகிறது. "அதற்குள்ளேயேவா ?" , என்று.

வாழ்த்துகள் . தொடர்ந்து உங்கள் கதையை படிக்க ஆர்வம் மேலோங்குகிறது.

**ஆரண்யம் கதையின் விமர்சனத்தை கொடுக்க சோம்பேறித்தனம் பட்டதால் இன்று தான் என் கருத்தை சொல்ல முடிந்தது. ஆனால் அதற்குள் கதை திரியை காணவில்லை. எங்கே சொல்வது என்றும் தெரியவில்லை. அதனால் இந்த திரியில் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்

உங்க கருத்திற்கு நான் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். தாமதமாக வந்தாலும் தரமாக கொடுத்திருக்கீங்க. மனம் நிறைந்த நன்றிகள்மா. தொடர்ந்து வாசிங்க மா. உங்க வார்த்தைகள் எனக்கு ஒவ்வொரு நாவலில் அந்தளவு ஊக்கம் தருகிறது எழுதுவதற்கு. உங்களை போன்ற சில வாசகர்களுக்காக மட்டுமே நான் ஆன்கொயிங் எழுதுகிறேன்

Rathi has reacted to this post.
Rathi
Quote

Super ma 

You cannot copy content