மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 23

Quote from monisha on July 11, 2022, 1:48 PMஎத்தனை அதிகமாக கலயங்களில் ஆண் முதலீடு செய்கிறானோ, அத்தனைக்கு அதிகமான இவன் மரபணுக்கள் பெருகுமே. இதனாலேயே ஆண்களின் ஆதிக்கம் உயர ஆரம்பித்த காலம் தொட்டே ஓர் ஆண் பல பெண்களுடன் கலவிக் கொள்ளும் பாலிகைனி (Polygyny) என்கிற பல பத்தனி உறவுமுறை அதிகரித்தது.
சமூகமயமாக்கலோ ஆணை பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதித்தது. அதிக பெண்களை ஜெயித்தவனை ஆண்மை நிரம்பியவன் என பாராட்டியது. இப்படி ஆண்கள் எல்லாம் பெண்களை சகட்டு மேனிக்கு உபயோக்கித் தொடங்கிவிட, பெண் ஆணைத் தேர்ந்தெடுக்கும் முறை முற்றிலுமாக, மாறிப்போக, ஆணே பெண்ணை அபகரிக்கும் முறை வழக்கத்துக்கு வர தொடங்கியது.
தலைமுறை தலைமுறையாக இந்த நம்பிக்கைகள் வேரூன்றிய பின் பெண் என்ற பிறவிக்கு ஒரு காலத்தில் அறிவு இருந்ததாக சொல்லப்பட்ட வரலாறுகள் கூட மாறி, மாற்று கருத்துக்கு இடமே தராமல் பெண் = பொருள் என்றே நம்பினார்கள்.
அப்புறம்தான் அவர்களுக்கு தெரியவந்தது. இது எவ்வளவு விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்பது.
தொடரும்...
23
அதோ இதோ என்று இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. ஆனால் நடந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுதான் வந்தபாடில்லை.
இன்றும் நிம்மி கனியை வற்புறுத்தி பள்ளிக்கு வர வேண்டாமென்று மறுத்துவிட்டு செல்ல, அவள் மனதளவில் ரொம்பவும் சோர்ந்து போனாள். இதற்காகவா தான் படித்து இந்த நிலைமைக்கு வந்தோம்.
எத்தனை நாளைக்கு இந்த கூட்டத்தை கண்டு தான் பயந்து ஓடி கொண்டிருப்பது என்று சிந்தித்தபடி படுக்கையில் அவள் படுத்திருந்த சமயம், அருகிலிருந்து அவளின் செல்பேசி ரீங்காரமிட்டது.
அதில் ஒளிர்ந்த எண்ணை அலட்சியமாக பார்த்துவிட்டு செவியில் நுழைத்து, “ஹெலோ யாரு?” என,
“நான் மாயன்” என்று கணீர் குரலில் பேசினான்.
அந்த பெயரை கேட்டதுமே அவளுக்கு எரிச்சல் மூள, “என் போன் நம்பர் எப்படி உனக்கு கிடைச்சுது?” என்று சீறினாள்.
“அது என்ன… பெரிய தங்கமலை ரகசியமா?” என்று எகத்தாளமாக பதிலளித்தவன் மேலும்,
“நான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் அதான் கால் பண்ணேன்” என்றான்.
“நீ எதுக்கு என்கிட்ட பேசணும்… நீ யாரு எனக்கு… சும்மா மாமா பொண்ணு அது இதுன்னு உறவு கொண்டாடுற வேலை எல்லாம் வேண்டாம்… இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… எனக்கும் உனக்கும் எந்த உறவும் இல்ல…
முக்கியமா அம்மா அப்பான்னு ஏதாவது டிராமா பண்ண… அவ்வளவுதான் சொல்லிட்டேன்… அவங்களையும் எனக்கு பார்க்க விருப்பமில்ல… இனிமே எனக்கு கால் பண்ணாதே… போனை வை” என்றவள் சரவெடியாக வெடித்து தள்ளவிட்டு அழைப்பை துண்டிக்க போகவும் சடசடவென ஒரு கூட்டம் அவள் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்ததை கண்டாள்.
“ஏய் யார் நீங்க?” என்றவள் கேட்டு கொண்டே வெளியே வரவும்,
“ஊருக்குள்ள வந்து தங்குறளவுக்கு நெஞ்சழுத்தம் வந்துடுச்சாடி உங்களுக்கு எல்லாம்” என்று சீறியவன் வீட்டு பொருட்களை தூக்கி போட்டு அனாயாசமாக உடைக்க ஆரம்பித்துவிட்டான். அவன் உடனிருந்த கூட்டமும் அவனை தொடர்ந்து அதே போல செய்தன.
“ஏய் ஏய்… என்ன பண்றீங்க?” என்றவள் பதற, அவர்கள் அவளை பொருட்படுத்தாமல் சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை எல்லாம் உருட்டிவிட்டனர்.
சத்தம் கேட்டு மாடி ஏறி வந்த வாசு, “யாருடா நீங்க எல்லாம்… என்னடா பண்றீங்க?” என்று அவர்களை தடுக்க முயற்சி செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.
சில நிமிடங்களில் அவள் வீட்டு பொருட்களை எல்லாம் சர்வநாசம் செய்தவர்கள் கனியின் புறம் திரும்பி, “நாளைக்கு உன் பொட்டியை கட்டிக்கிட்டு நீ ஊரை விட்டு போயிருக்கணும்… அப்படி போகல” என்று மிரட்ட, வாசு இடையில் வந்து நின்று,
“என்ன மிரட்டுறீங்களா? உங்க மேல எல்லாம் போலிஸ்ல கம்பிளைன்ட் கொடுப்பேன் பார்த்துக்கோங்க” என்றார்.
வஞ்ச புன்னகையுடன் அவரை நோக்கியவன், “நாங்களும் போலிஸ்ல கம்பிளைன்ட் கொடுப்போம்… சின்ன பசங்ககிட்ட எல்லாம் இவ அசிங்கமா ஆபாசமா நடந்துக்கிறா… அந்த உண்மையை வெளியே சொல்ற பசங்கள எல்லாம் அடிச்சு கொடுமை படுத்துறா… அதுக்கு உங்க பொண்டாட்டியும் உடந்தைன்னு கம்பிளைன்ட் கொடுப்போம்” என, வாசு மிரண்டுவிட்டார்.
“வயசான காலத்துல இதெல்லாம் உனக்கு தேவையா… ஒழுங்கா மூடிக்கிட்டு ஓரமா நில்லுயா” என்றவன் மேலும் கனியின் புறம் திரும்பி,
“இத பாருடி… நாளைக்கு காலைல நீ இந்த ஊர்ல இருக்க கூடாது… அப்படி மட்டும் இருந்த… அப்புறம் நீ கேவலப்பட்டு போயிடுவ ஆமா” என்று மிரட்டிவிட்டு தன்னுடன் வந்த கூட்டாளிகளை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
கனி வெலுவெலுத்து போய் நின்றாள். அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது.
அதன் பின் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவள் முதல் வேலையாக கீழே விழுந்த கிடந்த தன் அத்தையின் படத்தை எடுத்து வைத்தாள். அதற்குள் வாசு நிம்மிக்கு அழைத்து அனைத்து விஷயங்களையும் தெரிவித்து அவரை வீட்டிற்கு வர வைத்திருந்தார்.
அலங்கோலமாக கிடந்த வீட்டினை கண்ட நிம்மி ஆவேசத்துடன், “இதை சும்மா விட கூடாது கனி… வா… நம்ம போலிஸ் ஸ்டேஷன் போகலாம்” என,
சிதறி கிடந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தவள் நிதானமாக அவரை ஏறிட்டு பார்த்து, “இல்ல வேண்டாம் ம்மா… நான் இந்த ஊரை விட்டு போயிடுறேன்… எனக்கு இந்த ஊர் வேண்டாம்… இங்கே எல்லாம் மாறி இருக்கும்னு ஏதோவொரு நம்பிக்கைல இங்கே வந்துட்டேன்… ஆனா இங்கே எதுவும் மாறல… சாதி வெறி பிடிச்ச இந்த அசிங்க பிடிச்ச கூட்டமும் மாறல… எனக்கு வேண்டாம்… எனக்கு இந்த ஊர் வேண்டாம்… நான் போறேன்” என்று கூற,
“என்ன பேசுற கனி நீ… போறேன் அது இதுன்னு” என்று நிம்மி ஆதங்கத்துடன் கேட்க வாசு வருத்தத்துடன், “நீ எங்கேயும் போக வேண்டாம் ம்மா… இங்கே தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்ல… நாம ஏதாவது பண்ணுவோம்” என்றார்.
அவர்கள் இருவரையும் நேராக நோக்கியவள், “ரொம்ப கொஞ்ச நாட்கள்தான் நான் உங்க கூட இருந்தேன்… ஆனா அந்த கொஞ்ச நாளில நீங்க எனக்கு கொடுத்த அன்பு இருக்கு இல்ல… அது ரொம்ப பெருசு… இந்த கடல் வானம் போல அளவிட முடியாததுன்னு சொல்லணும்
அப்படிப்பட்ட உங்களுக்கு நான் எதுவும் செய்ய முடியலனா கூட பரவாயில்ல… ஆனா பிரச்சனையா இருந்திர கூடாது… என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது… நான் இங்கிருந்து போறதுதான் எனக்கு உங்களுக்கு எல்லோருக்கும் நல்லது… எல்லாத்துக்கும் மேல எனக்கும் இதுக்கு மேல இங்க இருக்க விருப்பம் இல்ல… ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்க” என்று கண்ணீர் மல்க பேசியவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அவர்கள் திகைத்து நின்றுவிட பின்னிருந்து ஒரு குரல்,
“திரும்பியும் ஊரை விட்டு ஓடி போக போற… அதை இப்படி நீட்டி மொழுக்கி சால்ஜாப்பான வார்த்தைல சொல்ற… அப்படிதானே?!” என்று எள்ளியது.
கனி குரல் வந்த திசையில் நோக்க மாயன் வாயிலின் கதவில் கைகளை ஊன்றி நின்று கொண்டிருந்தான். முன்பு பார்த்த கிராமத்தான் தோற்றத்தில் இல்லாமல் டீ ஷர்ட்டும் பேன்டும் அணிந்து கொண்டு கொஞ்சம் நவநாகரிகமாக காட்சியளித்தான்.
அவன் எப்படி இருந்தாலும் கனிக்கு அவனை பிடிக்கவில்லை. அவன் விழிகள் வெறுப்பை உமிழ்ந்த அதேசமயம் நிம்மி திரும்பி பார்த்துவிட்டு, “மாயா நீ இங்கே எப்படி?” என்று வியப்புடன் கேட்டார்.
“உங்களை பார்க்கத்தான் மேடம் வந்தேன்” என்றவன் நிம்மிக்கு பதில் சொல்லிவிட்டு மீண்டும் கனியை பார்த்து,
“இவங்கள மாதிரி ஓடி போறவங்கள எல்லாம் நீங்க தடுக்காதீங்க மேடம்… போராட தெரியாதவங்க… பயந்தா கொள்ளிங்க… பிரச்சனையை பார்த்து பயந்து ஓடியே இவங்களுக்கு எல்லாம் பழக்கமாகிடுச்சு” என்று குத்தலாக பேச, அவள் கொதித்துவிட்டாள்.
“யாரை பார்த்து பயந்தகொள்ளி போராட தெரியாதவன்னு சொல்ற… நான் இந்த நிலைமைக்கு வர்ற எவ்வளவு போராடி இருக்கன்னு தெரியுமா உனக்கு… எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கன்னு தெரியுமா உனக்கு… எத்தனை தடங்கல்களை தாண்டி வந்திருக்கான்னு தெரியுமா… சும்மா உன் இஷ்டத்துக்கு பேசற”
“அப்படிதான்டி பேசுவேன்… நீ சரியான பயந்தகொள்ளி… போராட தெரியாத பயந்தாகொள்ளி” என்றவன் மேலும் மேலும் அவள் கோபத்தை கிளறிவிடவும் அவள் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு, “போடா வெளியே” என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.
“கனி” என்று நிம்மியும் வாசுவும் அதிர மாயன் சற்றும் அசறாமல் தன் கன்னங்களை தடவியபடி,
“பா… சரியான அடிதான்… ஆனா என்ன? இந்த கோபத்தையும் வீரத்தையும் உன் வீட்டை அடிச்சு ஓடச்சவனுங்க கிட்ட இல்ல நீ காட்டி இருக்கணும்…
அப்படி அவனுங்ககிட்ட நீ இந்த வீரத்தை காட்டி இருந்தன்னா நான் உன்னை தைரியசாலின்னு ஒத்துக்கிட்டு இருந்திருப்பேன்… ஆனா நீ… பிரச்சனை வேண்டாம்னு இல்ல தப்பிச்சு ஓட பார்க்குற… அப்புறம் நீ பயந்தகொள்ளி இல்லாம வேற என்னடி?” என்று கேட்க, கனியின் முகம் சிவந்தது. அதேநேரம் அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற அவன் தொடர்ந்தான்.
“முன்னாடி நீ இந்த ஊரை விட்டு ஓடி போன போது… உனக்கு படிப்பு இல்ல… சரியான வேலை இல்ல… அப்போ நீ உன்னை காப்பாத்திக்க ஓடின… உன் வாழ்க்கைக்காக ஓடின அதுல ஒரு நியாயம் இருந்துச்சு… ஆனா இப்போ நீ படிச்சிருக்க… நல்ல வேலைல இருக்க… இன்னும் கேட்டா பசங்களுக்கு பாடம் சொல்லி தர வேலை… கல்வின்ற நம்பிக்கையை கொடுக்குற வேலை… அப்படிப்பட்ட வேலைல இருந்துட்டு இன்னைக்கு நீ ஓடணும்னு நினைக்கிறது உனக்கே பயந்தகொள்ளிதனமா தெரியல” என்றவன் நேரடியாக அவள் கண்களை பார்த்து கேட்க, கனியால் அவன் விழிகளை எதிர்கொள்ள முடியவில்லை.
அவன் பேச்சிலிருந்த கூர்மை அவன் பார்வையிலும் இருந்தது. அதேநேரம் அவன் பேச்சு சராசரி மனிதனை போன்று இல்லை. தெளிவாக தீர்க்கமாக சிந்திக்க கூடியவன் கோர்க்கும் வார்த்தைகளாக இருந்தன.
கனியால் எதுவும் பேச முடியவில்லை. அவள் மௌனமாக நின்றுவிட, அத்தனை நேரம் இவர்களின் மோதலை புரியாமல் பார்த்து கொண்டிருந்த நிம்மி,
“உனக்கு கனியை முன்னாடியே தெரியுமா மாயா?” என்று வினவினார்.
“சொல்றேன் மேடம்… அதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்” என,
“என்ன விஷயம் சொல்லு?” என்றார்.
“இங்கே வேண்டாம்… கொஞ்சம் தனியா வாங்க” என்றவன் அழைக்கவும் கனி பதட்டமானாள். தன்னை பற்றி ஏதோ சொல்ல போகிறானோ என்ற யோசனையில்,
“என்ன பேசறதா இருந்தாலும் இங்கேயே பேசு” என்றாள்.
“நீதான் என்கிட்ட பேச மாட்ட இல்ல… நான் இவங்ககிட்ட பேசிக்கிறேன்” என்றவன் வாசுவையும் நிம்மியையும் பால்கனி பக்கம் அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
‘எதுக்கு அவங்கள தனியா பேச கூட்டிட்டு போறான்… என்ன சொல்லி தொலைக்க போறான்’
அவள் அவஸ்த்தையுடன் கைகளை பிசைந்து கொண்டு அவர்கள் பேசி கொண்டிருந்த திசையை பார்த்திருக்க, அவ்வப்போது மாயனின் பார்வை கனியை நோட்டமிட்டது.
அவர்கள் பேசி முடித்து திரும்பியதும் நிம்மி கனியிடம் நேராக வந்து, “உனக்கு இந்த ஊர்ல சொந்தகாரங்களே இல்லன்னு சொன்ன… ஆனா மாயன் நீ அவன் மாமா பொண்ணுன்னு சொல்றான்” என்றதும் அவள் பார்வை எரிச்சலுடன் மாயனை முற்றுகையிட்டது.
“உண்மைதானே சொன்னேன்… அதுக்கு ஏன் முறைக்குற” என்றவன் எகத்தாளமாக கேட்க,
“அது ஒன்னும் உண்மை இல்ல” என்றாள்.
“எது… நீ என் மாமா பொண்ணுன்னு சொன்னதா” என்றவன் உதட்டில் தவழ்ந்த கேலி புன்னகையை பார்த்து அவள் மூளை சூடேறியது.
“ஐயோ! திரும்ப திரும்ப அப்படி சொல்லாதே”
“நான் சொன்னாலும் சொல்லாட்டியும்… இந்த ஜென்மத்துல நீதான் என் மாமா பொண்ணு… அதை யாரு நினைச்சாலும் மாத்த முடியாது… நீயே நினைச்சாலும்” என்றவன் அடித்து சொல்ல,
“அப்படி சொல்லாதேன்னு சொல்றேன் இல்ல” என்றவள் கடுப்பாக கத்திவிட்டாள்.
“கனி” என்று நிம்மி அவள் தோளை பிடித்து திருப்பி,
“இப்போ பிரச்சனை நீ மாயனோட மாமா பொண்ணா இல்லையாங்குறது இல்ல” என,
“நீங்களுமா ம்மா?” என்றவள் தலையை பிடித்து கொண்டாள்.
“முதல நான் பேசுறதை நிதானமா கேளு… இப்போ நம்ம அந்த நாகராஜ் பிரச்சனையை முடிச்சாகணும்… அது மாயானாலதான் முடியும்… நீ அவன் கூட்டிட்டு போற இடத்துக்கு போ” என்றதும் கனி அதிர்ச்சியாக நிமிர்ந்து,
“எது… நான்… அவன் கூட்டிட்டு போற இடத்துக்கு போகணுமா?” என்று கேட்க,
“இந்த பிரச்சனையை முடிக்கணும்… அது மாயனாலதான் முடியும்” என்றார் வாசுவும்!
“நானே என் பிரச்சனையை பார்த்துக்கிறேன்… எனக்கு யாரோட உதவியும் வேணாம்” என்றவள் திட்டவட்டமாக மறுக்க,
“சரி அப்போ நான் கிளம்புறேன்” என்று விட்டு மாயன் அடுத்த நொடியே விறுவிறுவென படிக்கட்டில் இறங்கி சென்றுவிட்டான்.
“என்ன கனி நீ” என்று நிம்மி அவளை கவலையாக பார்த்துவிட்டு, “மாயா ஒரு நிமிஷம் நில்லு” என்று அவரும் படிக்கட்டில் இறங்கி அவன் பின்னே சென்றுவிட்டார்.
“அவன் எப்படிப்பா இந்த பிரச்சனையை சால்வ் பண்ண முடியும்?” என்று கனி உடன் நின்றிருந்த வாசுவிடம் கேட்க,
“அவனால முடியும் கனி… உனக்காக மட்டும் இல்ல… எங்களுக்காகவும்… எங்களுக்கும் எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு நீ உண்மையிலேயே நினைச்சேனா… கிளம்பி ரெடியாகிட்டு கீழே வா” என்று சொல்லிவிட்டு சென்றார்.
சில நிமிடங்கள் குழம்பியவள் பின் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு உடைமாற்றி தயாராகி கீழே சென்றாள்.
மாயன் நிம்மியுடன் மும்முரமாக உரையாடி கொண்டிருந்தான். இவளை பார்த்தும், “போலாமா?” என்று கேட்க, அவள் தவிப்புடன் நிம்மியின் புறம் பார்வையை திருப்பினாள்.
“போயிட்டு வா கனி” என, அவர்கள் பேச்சை அவளால் மறுக்க முடியவில்லை.
மாயன் முன்னே செல்ல, ‘இவன் என்ன பண்ண போறான்… இவன் கூட நான் ஏன் போணும்?’ என்று உள்ளுர பொறுமி கொண்டே அவன் பின்னே நடந்தாள்.
அவன் தன் பைக்கில் அமரவும் சட்டென்று பினவாங்கியவள், “பைக்கிலயா?” என,
“ஏன்… இளவரசியை பல்லாக்கு வைச்சு தூக்கிட்டு போகணுமா என்ன? சும்மா சீன் போடாதே ஏறு” என, “ரொம்ப ஓவரா பேசுற நீ” அவள் பல்லை கடித்தபடி முறைத்தாள்.
“கனி என்னாச்சு… ஏன் நிற்குற?” என்று நிம்மி கேட்கவும்,
“இல்லமா… நான் என் பைக்கிலயே போறேனே” என்று சொல்ல,
மாயன் பதிலுக்கு, “ஊர் எல்லை வரைக்கும்தான் பைக்கில… அப்புறம் கார்லதான் போக போறோம்” என்றான்.
“அதான் கார் ஏற்பாடு பண்ணி இருக்கன்னு சொல்றான் இல்ல… கிளம்புமா” என்று நிம்மி சொல்ல, வேறு வழியின்றி பின்புற இருக்கையில் வெகு ஜாக்கிரதையாக அவன் மீது உரசாமல் தள்ளி அமர்ந்து கொண்டாள்.
அவள் சங்கடத்துடன் அமர்வதை நமட்டுச் சிரிப்புடன் முன் கண்ணாடியில் பார்த்தவன் நிம்மி வாசுவிடம் தலையசைத்துவிட்டு வண்டியை கிளப்பி சென்றான்.
அவள் மெல்ல தொண்டையை கனைத்து கொண்டு, “இப்போ எங்க போறோம் நம்ம?” என்று கேட்க,
“அது தெரியாமதான் பைக்ல ஏறி உட்கார்ந்தியா” என்றவன் பதிலுக்கு நக்கல் செய்ய, அவளுக்கு எரிச்சல் மூண்டது.
“அவங்க இரண்டு பேரும் என்கிட்ட எதுவும் சொல்லல… ஏதோ இந்த பிரச்சனை எல்லாம் நீ சரி பண்ணிடுவன்னு சொன்னாங்க… அவ்வளவுதான்” என்றாள்.
“சொன்னாங்க இல்ல… அவங்க வார்த்தையை நம்பு”
“நான் அவங்கல நம்புறதாலதான் உன் கூட வரேன்… மத்தபடி எனக்கு உன் மேல எந்த நம்பிக்கையும் இல்ல”
“நீ என்னைக்கு என்னை நம்புன… இன்னைக்கு என்னை நம்புறதுக்கு”
“நான் எதுக்கு உன்னை நம்பணும்… எனக்கு நீ யாரு”
“நீ திரும்ப திரும்ப இப்படி கேட்டா… நானும் திரும்ப திரும்பா நான் யாருன்னு உனக்கு சொல்ல வேண்டி இருக்கும்”
“நீ திரும்ப திரும்ப சொன்னாலும்… நமக்குள்ள அப்படி எந்த உறவும் இல்ல மாயா”
“உனக்கு இல்லனாலும் எனக்கு இருக்கு கனி… ஏன் னா நான் உன்னை நேசிச்சேன்… காதலிச்சேன்… உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன்… நான் ஆசைப்பட்டது நடக்காம போனாலும்… உனக்கொரு பிரச்சனைனா நான் வந்து நிற்பேன்… ஏன்னா நீ என் மாமா பொண்ணு… நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மாமா பொண்ணு” என்றவன் அழுத்தி சொல்ல, கனி ஸ்தம்பித்தாள்.
எத்தனை அதிகமாக கலயங்களில் ஆண் முதலீடு செய்கிறானோ, அத்தனைக்கு அதிகமான இவன் மரபணுக்கள் பெருகுமே. இதனாலேயே ஆண்களின் ஆதிக்கம் உயர ஆரம்பித்த காலம் தொட்டே ஓர் ஆண் பல பெண்களுடன் கலவிக் கொள்ளும் பாலிகைனி (Polygyny) என்கிற பல பத்தனி உறவுமுறை அதிகரித்தது.

Quote from sembaruthi.p on July 11, 2022, 2:18 PMமாயன் 😍😍ஹீரோன்னு நிரூபிச்சிட்டாரு... மாயனும் படிச்சு இருப்பாரோ... நிம்மிம்மா வுக்கும் நல்ல பழக்கம் போலயே மாயன்.. பக்குவமில்லாத வயசுல கனி மாயனை தவறாக கணித்துவிட்டாளோ...
இந்த பிரச்சனை எப்படி முடிக்க போறார் அப்டினு படிக்க ஆவலுடன் வைட்டிங்..
மாயன் 😍😍ஹீரோன்னு நிரூபிச்சிட்டாரு... மாயனும் படிச்சு இருப்பாரோ... நிம்மிம்மா வுக்கும் நல்ல பழக்கம் போலயே மாயன்.. பக்குவமில்லாத வயசுல கனி மாயனை தவறாக கணித்துவிட்டாளோ...
இந்த பிரச்சனை எப்படி முடிக்க போறார் அப்டினு படிக்க ஆவலுடன் வைட்டிங்..

Quote from Rathi on July 12, 2022, 11:09 AMஇந்த கதைல எதிர்பார்க்காத ஹீரோ மாயன் . தன்னை ஒதுக்கி விலகி போன பொண்ணுக்கு, ஊரே எதிர்த்தாலும், தைரியம் கொடுத்து அவள் துணிந்து நிற்க துணை நிற்பது உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவன் நேசத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.
இப்ப எங்க கூட்டிட்டு போறான் . அருள்மொழி வீட்டுக்கா?
அவள் எப்படி இந்த சாதி வெறி பிடித்த மனிதர்களை சமாளிக்க போகிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.
இந்த கதைல எதிர்பார்க்காத ஹீரோ மாயன் . தன்னை ஒதுக்கி விலகி போன பொண்ணுக்கு, ஊரே எதிர்த்தாலும், தைரியம் கொடுத்து அவள் துணிந்து நிற்க துணை நிற்பது உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவன் நேசத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.
இப்ப எங்க கூட்டிட்டு போறான் . அருள்மொழி வீட்டுக்கா?
அவள் எப்படி இந்த சாதி வெறி பிடித்த மனிதர்களை சமாளிக்க போகிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.

Quote from monisha on July 12, 2022, 6:15 PMQuote from Rathi on July 12, 2022, 11:09 AMஇந்த கதைல எதிர்பார்க்காத ஹீரோ மாயன் . தன்னை ஒதுக்கி விலகி போன பொண்ணுக்கு, ஊரே எதிர்த்தாலும், தைரியம் கொடுத்து அவள் துணிந்து நிற்க துணை நிற்பது உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவன் நேசத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.
இப்ப எங்க கூட்டிட்டு போறான் . அருள்மொழி வீட்டுக்கா?
அவள் எப்படி இந்த சாதி வெறி பிடித்த மனிதர்களை சமாளிக்க போகிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.மாயன்தான் இந்த கதையோட ஹீரோ. பெரும்பாலான நாவல்கள் ஒரு ஏழை பெண்ணை கீழ் சாதி பெண்ணை உயர் சாதிக்காரன் அல்லது பணக்காரன் கை கொடுத்து தூக்கி விடுவது என்று காட்ட பட்டிருக்கும். சூப்பர் ஹீரோ கதை போல வேறெங்கோ இருந்து நம்ம நாயகன் குதிக்கனும். அவன் நம் அருகிலேயே இருக்க கூடாதா? அதன் மூலம்தான் மாயன்
Quote from Rathi on July 12, 2022, 11:09 AMஇந்த கதைல எதிர்பார்க்காத ஹீரோ மாயன் . தன்னை ஒதுக்கி விலகி போன பொண்ணுக்கு, ஊரே எதிர்த்தாலும், தைரியம் கொடுத்து அவள் துணிந்து நிற்க துணை நிற்பது உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவன் நேசத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.
இப்ப எங்க கூட்டிட்டு போறான் . அருள்மொழி வீட்டுக்கா?
அவள் எப்படி இந்த சாதி வெறி பிடித்த மனிதர்களை சமாளிக்க போகிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.
மாயன்தான் இந்த கதையோட ஹீரோ. பெரும்பாலான நாவல்கள் ஒரு ஏழை பெண்ணை கீழ் சாதி பெண்ணை உயர் சாதிக்காரன் அல்லது பணக்காரன் கை கொடுத்து தூக்கி விடுவது என்று காட்ட பட்டிருக்கும். சூப்பர் ஹீரோ கதை போல வேறெங்கோ இருந்து நம்ம நாயகன் குதிக்கனும். அவன் நம் அருகிலேயே இருக்க கூடாதா? அதன் மூலம்தான் மாயன்

Quote from monisha on July 12, 2022, 6:17 PMQuote from sembaruthi.p on July 11, 2022, 2:18 PMமாயன்
ஹீரோன்னு நிரூபிச்சிட்டாரு... மாயனும் படிச்சு இருப்பாரோ... நிம்மிம்மா வுக்கும் நல்ல பழக்கம் போலயே மாயன்.. பக்குவமில்லாத வயசுல கனி மாயனை தவறாக கணித்துவிட்டாளோ...
இந்த பிரச்சனை எப்படி முடிக்க போறார் அப்டினு படிக்க ஆவலுடன் வைட்டிங்..
நிச்சயமாக மாயனை தவறாகதான் கணித்துவிட்டாள். dont judge a book by its cover. இந்த பழமொழியில் வருவதை போலதான் பெரும்பாலான நம்முடைய கணிப்புக்கள் இருக்கின்றன
Quote from sembaruthi.p on July 11, 2022, 2:18 PMமாயன்
ஹீரோன்னு நிரூபிச்சிட்டாரு... மாயனும் படிச்சு இருப்பாரோ... நிம்மிம்மா வுக்கும் நல்ல பழக்கம் போலயே மாயன்.. பக்குவமில்லாத வயசுல கனி மாயனை தவறாக கணித்துவிட்டாளோ...
இந்த பிரச்சனை எப்படி முடிக்க போறார் அப்டினு படிக்க ஆவலுடன் வைட்டிங்..
நிச்சயமாக மாயனை தவறாகதான் கணித்துவிட்டாள். dont judge a book by its cover. இந்த பழமொழியில் வருவதை போலதான் பெரும்பாலான நம்முடைய கணிப்புக்கள் இருக்கின்றன

Quote from chitti.jayaraman on July 12, 2022, 7:09 PMMayan nee solrathu pola ava evlo dan taniya poi sandai poda mudium da vaai la pesina kuda paravalla avanumga dan adika varanumgale eppadi da solve pannuva padipu solli thara teacher nu kuda parkama veetuke vandu adithadi panna enna pannuva, ippo nee vandita ini ava vendam nu sonna kuda vidatha mayan nee love panradu unmai na avaluku thi nai ah iru avaluku nalla nimmadiyana oru vazhkai ah kudu rasa
Mayan nee solrathu pola ava evlo dan taniya poi sandai poda mudium da vaai la pesina kuda paravalla avanumga dan adika varanumgale eppadi da solve pannuva padipu solli thara teacher nu kuda parkama veetuke vandu adithadi panna enna pannuva, ippo nee vandita ini ava vendam nu sonna kuda vidatha mayan nee love panradu unmai na avaluku thi nai ah iru avaluku nalla nimmadiyana oru vazhkai ah kudu rasa

Quote from Thani Siva on July 13, 2022, 6:11 PMசின்ன வயதில் பாத்து பயந்ததினால் அவளுக்கு மாயன் மேல வெறுப்பு ...
எங்கே இவனை திருமணம் செய்ய வேணுமா என்று அறியா வயதில் நினைத்து பயந்தாள் தானே
இதனால் கோவம் .... இவன் படித்து நல்ல உத்தியோகத்தில இருக்கானோ..?
சூப்பர் சிஸ்❤️😀
சின்ன வயதில் பாத்து பயந்ததினால் அவளுக்கு மாயன் மேல வெறுப்பு ...
எங்கே இவனை திருமணம் செய்ய வேணுமா என்று அறியா வயதில் நினைத்து பயந்தாள் தானே
இதனால் கோவம் .... இவன் படித்து நல்ல உத்தியோகத்தில இருக்கானோ..?
சூப்பர் சிஸ்❤️😀

Quote from Marli malkhan on May 7, 2024, 11:23 AMSuper ma
Super ma