You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 7

Quote

சுயத்தை பாதுக்காத்து கொள்ள முடியாத மனித குழந்தைகளை வேட்டை ஆடக் கூட ஆதிமனிதி விட்டு போக முடியாத நிலையில் இருந்தாள்.  முன்பிருந்த குரங்குப் பாணியில் அவள் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து கொண்டிருக்க முடியாத நிலை... 

அதனால் ஆதிமனிதப் பெண்கள் பிள்ளைகளே பிரதானம் என, தன் குகையையும் வாரிசுகளையும் கவனிப்பதையே முழுநேரப் பணியாக்கிக் கொண்டனர்.

அவள் இப்படி பிள்ளை பராமரிப்பில் மும்முரமாக இருந்த காலத்தில், அவளது தாயோ தமக்கையோ, குடும்பத்தினரை அழைத்து கொண்டு வேட்டையாடப் போவார்கள். இந்த தாயும் உடல் தேறி, முழு தெம்பு திரும்பியதும் தானும் வேட்டை கோஷ்டியுடன் போய் தன் பங்குக்கு வேட்டையாடுவாள்.

அப்போது அவளது பிள்ளையை ஊரின் மற்ற பிள்ளைகளோடு வேட்டைக்கு போகாத வயதான பாட்டிகள் பார்த்து கொண்டதால் வாழ்க்கை சுலபமாகவே இருந்தது.

இப்படி பெண்களே முழு பிள்ளை பராமரிப்புப் பணிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதால் ஆண்களின் சேவை வெறும் சுகம் உணர்த்த மட்டுமே தேவைப்பட்டது. இதனால் பெண்ணே பிரதான பிரஜையாக கருதப்பட்டாள்.

ஆதி மனிதர்கள் பெண் தெய்வங்களை மட்டுமே வழிப்பட்டனர். உலக வரலாறு முழுக்க பெண்களை தெய்வமாக வழிப்பட்ட அத்தாட்சிகள் கிடைத்தன. ஆண் தெய்வங்களை பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. 

தொடரும்... 

7

முற்றத்தின் வழியாக நட்சத்திர பட்டாளங்கள் கூட்டமாக எட்டி பார்த்ததில் ஒளிதுகள்கள் சிந்தியது போல அவ்விடம் மட்டும் தனியாக  மிளிர்ந்தது. அவ்விடம் தவிர்த்து வேறெந்த வெளிச்சமும் இல்லாமல் அந்த வீடு முழுக்கவும் இருள் கவ்வி கிடக்க, கனி அப்படியே அழுத மேனிக்கு தரையில் படுத்து கிடந்தாள்.

‘அவன் என்னவோ உளறிட்டு போறான்… அதுக்கு போய் நீ ஏன் அழுற’ அத்தையின் குரல் கேட்டு அவள் அழுகை நின்றுவிட்டது. அவள் எழுந்து அமரவும் அவர் அவள் அருகில்தான் அமர்ந்திருந்தார். அந்த நட்சத்திரங்களின் ஒளி அவர் முகத்தில் பட்டு ஜொலித்தது.

“அத்தை”

“நீ எவ்வளவு தைரியமான பொண்ணு கனி… உன் வாழ்க்கையில நீ பார்க்காத கஷ்டங்களா போராட்டங்களா… நீ போய் அழலாமா?” என்றவர் அவள் கண்ணீரை துடைத்துவிடவும் அவர் கரத்தை அவள் கெட்டியாக தன் கரத்திற்குள் இணைத்து கொண்டாள்.

“என்னால முடியல அத்தை… எப்படி எல்லாம் பேசிட்டான் பார்த்தீங்க இல்ல” அவள் ஆதங்கத்துடன் புலம்ப,

“நான் இருந்திருந்தா அவனை இப்படி எல்லாம் பேச விட்டிருப்பேனா… அங்கேயே அவன் வாயை உடைச்சிருக்க மாட்டேன்…  நீ விடு…  அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் பேசுனதுக்கு எல்லாம் அழுதிக்கிட்டு… கண்ணை தொட” என்றவர் அதிகாரமாக சொல்லவும் அவள் தன் விழி நீரை துடைத்தாள்.

அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தன.

“நீங்க என் கூடவே இருங்க அத்தை… என்னை விட்டுட்டு போயிடாதீங்க” என்றபடி அவர் மடியில் அப்படியே தலையை சாய்த்து கொண்டாள். அவர் கரம் மிருதுவாக தலையை வருடி கொடுக்க அவள் மனம் அமைதி பெற்றது.

கண்களை சுழற்றி கொண்டு உறக்கம் வந்தது. அவள் உடல் மட்டும் கழன்று தனியாக ஏதோ ஒரு மாயை உலகத்திற்கு இழுத்து செல்லப்பட்டது போல உணர்ந்தாள்.

எத்தனை மணி நேரம் என்று தெரியாமல் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தவளின் முகத்தில் பளீரென்று சூரிய வெளிச்சம்  முகத்தில் அடிக்கவும்தான் விழிப்பு வந்தது. உடல் விழித்து கொண்ட போதும் மனம் அதே மயக்க நிலையில் கிடந்தது.

யாரோ கட்டி போட்டது உடல் அசைய மறுத்தது. மெல்ல மெல்ல அவள் மீண்டு வந்த போதுதான் தரையில் அத்தையின் படத்திற்கு அருகே படுத்து உறங்கி போயிருக்கிறோம் என்று விளங்கியது.

நடந்தது கனவா நினைவா என்று அவள் ஆராய்ச்சி செய்ய விழையவில்லை. அத்தையின் ஆறுதல் வார்த்தைகளும் ஆதரவான தடவலும் மெத்தென்ற மடியும் அவளுக்கு அமைதியை கொடுக்கிறதெனில் அது நிஜமாகவே இருக்கட்டும். அதனை கனவென்றும் கற்பனை என்றும் அவள் பொய்யாக்கி கொள்ள விரும்பவில்லை.

எப்போதும் போல குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டாள். எதையும் சமைத்து சாப்பிடவோ கட்டி எடுத்து கொள்ளவோ அவளுக்கு தோன்றவில்லை.

இதே மனநிலையோடு அவள் பள்ளிக்கு வந்த போது அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் அவளையும் திருநாவை பற்றி கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்தனர். அவர்களை சமாளித்து கடந்து வந்தால், ‘இந்த ஊமைகொட்டான் மாதிரி இருக்கறவங்கள நம்பவே கூடாது’ சிலரின் குத்தல் பேச்சுக்கள்.

எல்லாவற்றிற்கும் உச்சம் வைத்தார் போல அன்று மாலை புறப்படும் தருவாயில் தலைமை ஆசிரியர் அவளை அறைக்கு அழைத்து, “ஸ்கூல டீச்சர்ஸ்லாம் பேசிக்கிற மாதிரி உங்களுக்கும் திருநாவுக்கும்” என்று கேள்வியுடன் நிறுத்த, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

எப்போதும் அவளை பாராட்டி பெருமையாக பேசுபவர் இன்று இப்படியொரு கண்ணோட்டத்தில் தன்னை பார்ப்பதில் அவள் கூனி குறுகி நிற்க,

“நல்ல விஷயம்தான்… நான் ஒன்னும் உங்களை தப்பா நினைக்கல… ஆனாலும் ஸ்கூலுக்குள்ள” என்றவர் அடுத்து என்ன பேச போகிறார் என்று புரிந்தவளாக,

“சார்… நான் அந்த மாதிரி இன்டீஸன்டா நடந்துப்பேன்னு நீங்க நினைக்கறீங்களா? ஸ்கூலுக்குள்ள வைச்சு நான் அவர்கிட்ட பேசனது கூட கிடையாது… அவராதான் எங்க வீட்டுக்கு வந்து கல்யாணத்தை பத்தி பேசுனாரு… நானும் சம்மதம் சொன்னேன்… மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல… நானும் அந்த மாதிரி நடந்துக்கிறவ இல்ல” என்று சற்றே குரலை உயர்த்தி தனது நிலைப்பாட்டை அழுத்தமாக உணர்த்த அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை.

இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இது வேறா என்று கடுப்புடன் அவள் தன் பைக்கை கிளப்பி கொண்டு சிறிது தூரம்தான் சென்றிருப்பாள். தலை கிறுகிறுத்தது. மூளை தம் கட்டுப்பாட்டை இழக்க துவங்கிய மறுகணம் அப்படியே பைக்குடன் கீழே சரிந்துவிட்டாள்.

பதறி கொண்டு ஒரு கூட்டம் அவளை சுற்றி கொண்டு உச்சு கொட்டியது வரை மேலோட்டமாக அவள் மூளைக்குள் பதிவானது. அதன் பின் அவளுக்கு நினைவு தப்பிவிட, மீண்டும் விழித்து பார்த்த போது ஏதோ ஒரு மருத்துவமனை அறையில் இருந்தாள்.

அவளுடன் பணிபுரியும் ஆசிரியர் பட்டாளமே அங்கே நிறைந்திருக்க தலைமை ஆசிரியர் அவள் விழித்ததை பார்த்தவுடன், “என்ன மா… மதியம் சாப்பிடலயாமே… ஏன் இப்படி உடம்பை கெடுத்துக்குற… காலையிலயாவது சாப்பிட்டியா இல்லையா” என்று அக்கறையாக விசாரித்தார்.

அவர் பேசியதெல்லாம் அவளுக்கு அரைகுறையாகதான் காதில் விழுந்தது. அதன் பின் ஒவ்வொரு ஆசரியர்களாக தங்கள் அறிவுரை படலத்தை முடித்து கொண்டு செல்ல, கடைசியாக வந்த திருநா தன் கையிலிருந்த ஜூஸ் டம்ளரை நீட்டினான்.அதனை வாங்க அவள் ஒரு மாதிரி தயக்கத்துடன் யோசிக்க,

“ஜூஸ் குடிங்க கனி” என்றவன் வற்புறுத்தி அதனை அவள் கையில் திணிக்க, சுற்றியுள்ள ஆசிரியர்கள் எல்லாம் தங்களை பற்றி என்ன யோசிக்கிறார்களோ என்று பயமாக இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டு பார்க்காமல் அதனை பருகினாள்.

“கார் டிரைவர் கிட்ட சொல்லி இருக்கேன்… நீங்க வீட்டுக்கு போயிடுங்க” என்று தலைமை ஆசிரியர் சொல்ல,

“சார் அதெல்லாம் வேண்டாம்… நான் பைக்லயே போயிடுவேன்” என்றாள் மறுப்பாக.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல… கார்ல போங்க…” என்றவர் அழுத்தமாக சொல்ல அவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறினாள்.

துணைக்கு அவளுடன் பணிபுரியும் இரண்டு பெண் ஆசிரியைகள் வீடு வரை வந்து சில நிமிடங்கள் உடன் இருந்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

அதன் பின் அவள் அறைக்குள் சென்று உடைமாற்றிவிட்டு திரும்பும் போது முற்றத்து தூணில் சாய்ந்தபடி நின்ற திருநாவை பார்த்து அரண்டுவிட்டாள்.

“நீங்க எப்படி… கதவை மூடித்தானே” என்றவள் சந்தேகமாக வாயிற் கதவை திரும்பி பார்க்க,

“கதவு திறந்துதான் இருந்துது” என்றான் அசட்டையாக.

அவளுக்கு கோபமேற, “கதவு திறந்திருந்தா நேரா உள்ளே நுழைஞ்சிருவீங்களா… அறிவில்ல உங்களுக்கு” என்று மானாவாரியாக திட்ட தொடங்கவும், 

“அறிவிருக்கு… அதான் கனின்னு கூப்பிட்டு பார்த்தேன்… நீங்க வரல… சரின்னு கதவை தட்டினேன்… திறந்திருந்துது… அதான் உள்ளே வந்தேன்” என்றான்.

அவனது அலட்சியமான பதில் மேலும் மேலும் அவளுக்கு எரிச்சலை மூட்ட, “எதுக்கு இப்போ இங்க வந்தீங்க… ஸ்கூல் பூரா என் பேரை நாரடிச்சது போதாதா” என்று கத்தவும்,

“இதுக்குதான் வந்தேன்” என்றவன் அவள் பைக் சாவியை நீட்டினான். அதனை வெடுக்கென்று பிடுங்கி கொண்டவள்,

“கிளம்புங்க” என்று சொல்ல,

“புரிஞ்சிக்கோங்க கனி… நான் ஸ்கூல யார்கிட்டவும் நம்ம விஷயத்தை பத்தி சொல்லல… அதுவாதான் ஸ்பரெட் ஆகி இருக்கு” என்று விளக்கமளித்தான்.

“அதெப்படி அதுவா ஸ்பரெட் ஆகும்”

அவன் குரலை தாழ்த்தி, “எனக்கும் தெரியல கனி… நான் எதுவும் சொல்லல” என,

“நீங்க எதுவும் சொல்லாமதான் சார் என்கிட்ட பேசுனாரா?” என்றவள் கேட்க,

“உங்க கிட்டயும் பேசுனாரா?” என்றவன் சந்தேகமாக கேட்டான்.

“அப்போ உங்ககிட்டயும் பேசுனாரா?”

“ம்ம்ம்ம்” என்றவன் தலை அசைக்க,

“நீங்க என்ன சொன்னீங்க அவர்கிட்ட” என்றவள் பதட்டத்துடன் கேட்க,

“நானும் கனியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்னு சொன்னேன்” என்றதும் அவள் விழிகள் வியப்புடன் விரிந்தன.

“இப்படியாவே சொன்னீங்க… சார்கிட்ட” என்றாள்.

“வேறெப்படி சொல்லணும்”

அவள் மௌனமாக நின்றுவிட, “கனி” என்று அழைத்தபடி அவள் தோள்கள் இரண்டையும் பற்றியவன், “யார் என்ன பேசுனா என்ன… நாமதான் கல்யாணம் பண்ணிக்க போறோமே” என்றான்.

அவள் தவிப்புடன், “அதெப்படி உங்க அம்மா வந்து பார்க்க வேண்டாமா?” என்று மெல்லிய குரலில் கேட்க,

“அவங்க வந்து பார்க்கிறதால எல்லாம் என் முடிவு மாற போறதில்ல கனி… நீங்கதான் என் மனைவி… உங்களைதான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… இதுல எந்த மாற்றமும் இல்ல” என்றான் உறுதியாக. அவள் நம்பிக்கையின்றி அவன் முகம் பார்க்க,  

“இதுக்காக போய் சாப்பிடாம உடம்பை கெடுத்துப்பீங்களா?” என்று உரிமையுடன் கடிந்து கொண்டவன் தான் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை தூக்கி காட்டவும் அவள் மனம் நெகிழ்ந்தாள்.

அத்தைக்கு பிறகு தன் மீது உண்மையாக அக்கறை காட்ட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு அவள் மனதிற்கு இதமாக இருந்தது. ஆனாலும் தான் சாப்பிடாமல் இருந்ததன் காரணம் வேறு என்று அவனிடம் சொல்ல நினைத்து,

“இல்ல… நான்” என்று பேச ஆரம்பிக்கவும்,  

“மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… முதல சாப்பிடுங்க” என்றவன் தன் கரத்தை அவள் தோள்களை அணைத்து பிடித்து சோபா புறம் நகர்த்த, ஜிவ்வென்ற ஒரு உணர்வு அவள் அடிவயிற்றியில் கிளம்பியது.  

அந்த உணர்வை எப்படி கடப்பது என்று அவள் தவிப்புறும் போதே அவளை சோபாவில் அமர்த்தியவன் ஓரமாக இருந்த மேஜையை இழுத்து, “சாப்பிடுங்க முதல” என்று அந்த உணவு பொட்டலத்தை அதன் மீது வைத்து பிரித்தான்.

அவனை தயக்கமாக அவள் நிமிர்ந்து பார்க்க, “சாப்பிடுங்க கனி… நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவன் உரிமையாக சமையலறைக்குள் புகுந்து தண்ணீர் எடுத்து வந்து வைக்க அப்போதும் அவள் அந்த உணவு பொட்டலத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

“இப்ப நீங்க சாப்பிடுறீங்களா இல்ல நான் ஊட்டி விடவா” என்றவன் கேட்ட நொடி,

“இல்ல இல்ல… நானே சாப்பிடுறேன்” என்று அந்த உணவை உண்ண தொடங்க, அவன் சோபாவில் அவள் தோள்களை உரசியபடி அருகில் நெருக்கமாக அமர்ந்தான்.

உண்ட உணவு தொண்டையில் அப்படியே திக்கி நின்றது.

“என்னாச்சு… தண்ணி குடிங்க” என்றவன் தண்ணீர் சொம்பை அவள் கையில் எடுத்து கொடுக்க அதனை தடுமாற்றத்துடன் வாங்கி கொண்டாள்.

அவன் இத்தனை வேகமாக தன்னிடம் உரிமை எடுத்து கொள்வதில் அவளுக்கு உடன்பாடில்லை எனினும் அவனின் அந்த அக்கறையும் அன்பையும் வேண்டாமென்று நிராகரிக்கவும் மனம் வரவில்லை.

அவனின் அந்த ஆறுதலும் துணையும் அப்போது தேவையாக இருந்தது. அமைதியாக அவள் உண்டு முடிக்க, அவள் கை அலம்பும் வரை உடன் நின்று உதவியவன்,

“சரி… நான் கிளம்புறேன்… உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கண்ணியமாக புறப்பட்டுவிட்டான். அவளுக்கு திகைப்பாக இருந்தது. அவனை முழுவதுமாக நம்புவதில் தவறில்லை என்று பட்டது.

இன்னும் சில நிமிடங்கள் அவன் உடன் இருந்திருக்கலாம் என்ற ஏக்க உணர்வுடன் அவள் முற்றத்தில் வந்தமர்ந்த போதுதான் வலது காலிலும் கை முட்டியிலும் பயங்கரமாக வலி எடுத்தது. விழுந்ததன் தாக்கத்தை அப்போதுதான் உணர்ந்தாள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் இயல்பாக கடந்தன. ருசிக்காக இல்லாவிட்டாலும் தன் உடல் நலனுக்காகவாவது ஏதாவது கொஞ்சமாக சமைத்து கட்டி எடுத்து கொண்டு செல்வதென்று முடிவெடுத்தாள்.

அந்த வார இறுதியில் வந்த ஞாயிற்று கிழமையில் அவளுக்கு நேரமே ஓடவில்லை. குளிக்கும் யோசனை கூட இல்லாமல் தூணில் சாய்ந்தபடி மெல்ல நகரும் முகில் கூட்டங்களை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது அவள் கைப்பேசி அடித்து அவளின் மோனநிலையை களைத்துவிட, அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் உற்சாகமானாள்.

“சொல்லுங்க திருநா”  

“இங்க பக்கத்துல முருகன் கோவிலுக்கு வந்திருக்கேன்… நீங்களும் வர்றீங்களா” என்றவன் கேட்கவும் மனம் உற்சாகம் கொண்டது. ஆனால் மூளை வேண்டாமேன்று எச்சரிக்க இரண்டாங்கட்ட மனநிலையுடன்,   

“கோவிலுக்கா… டீச்சர்ஸ் யாராச்சும் பார்த்தா” என்று தயங்கினாள்.

“நான்தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல… யார் வேணா பார்த்துட்டு போகட்டும்… நம்ம கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்றவன் குரல் அதிகார தொனியில் ஒலிக்க, சில நொடிகள் யோசித்தவளுக்கு மூளையின் எச்சிரிக்கையே முக்கியத்துவம் பெற்றது.  

“இல்ல திருநா… நான் வரல” என்றவள் திட்டவட்டமாக மறுத்தாள்.

“இன்னிக்கு என்னோட பிறந்த நாள்… அப்பவும் வர மாட்டீங்களா?” என்றவன் ஏக்கத்துடன் கேட்கவும் அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை.

ஒரு மெல்லிய மஞ்சள் வண்ண காட்டன் புடவையில் தயாரானவள் அவனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசித்து யோசித்து குழம்பி இறுதியாக வீட்டின் பின்னோடு அத்தை பதியம் போட்டு வைத்திருந்த மஞ்சள் ரோஜா செடியை எடுத்து நெகிழி பையில் வைத்து கொண்டு பைக்கில் வந்து கோவில் வாசலில் இறங்கினாள்.

அவன் வாயிலேயே அவளுக்காக காத்திருந்தான்.

“கனி” என்றவன் இன்முகமாக வரவேற்க,

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் திருநா” என்றவள் தான் எடுத்து வந்த ரோஜா செடியை நீட்டி,

“அவசரத்துல என்ன கொடுக்கிறதுன்னு தெரியல… அதான் இந்த ரோஸ் செடியை கொண்டு வந்தேன்” என்றாள்.   

“ரொம்ப அழகா இருக்கு கனி” என்று அதனை பெற்று கொண்டு அவன் முகம் மலர்ந்தான். அவன் மகிழ்ச்சியை பார்த்த அவள் உதடுகளும் புன்னகை பூத்தன.

அதன் பின் இருவருமாக கோவிலுக்குள் சென்று ஆறுமுகனை வணங்கிவிட்டு திரும்பும் போது தன் வண்டியில் வைத்திருந்த பையை அவளிடம் எடுத்து கொடுத்து,

“உங்களுக்காக வாங்கினேன்” என்றான்.

“எனக்காவா?” என்றவள் யோசனையாக பார்க்க,

“வாங்கிக்கோங்க கனி” என்றவன் அந்த பையை கொடுக்க அதில் அழகான சிவப்பு நிற பட்டு புடவை இருந்தது. அதன் சரிகையை பார்க்கும் போதே அது அதிக விலை இருக்கும் என்று தோன்ற,

“எதுக்கு திருநா… புடவை எல்லாம்… நான் இந்த மாதிரி பட்டு சேரி எல்லாம் கட்டுறதில்லை” என்றாள்.

“இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும் கனி… என் அம்மா உங்களை வந்து பார்க்கும் போது நீங்க இந்த புடவையை கட்டிக்கணும்னு நான் ஆசைப்படுறேன்… ப்ளீஸ் கட்டிக்கோங்க” என்றவன் வேண்டுதலாக கேட்க அவள் வேறுவழியின்றி அதனை வாங்கி கொண்டாள்.  

வீட்டில் வந்து அந்த புடவையை பிரித்து பார்த்தவளுக்கு அதிலிருந்த விலைச்சீட்டில் பத்தாயிரம் ரூபாய் என்று பார்த்த நொடி நெஞ்சை அடைத்தது. இனம் புரியாத ஒருவித பயத்தை அவளுக்குள் தோற்றுவித்தது. இத்தனை விலையுயர்ந்த புடவையை அவள் இதுவரை அணிந்ததே இல்லை. அவள் திருமணத்திற்கு கூட மிக சாதாரணமாய் மெலிதான சரிகை வைத்த நீல நிற பட்டுபுடவையை வாங்கி தந்தார் அவள் தந்தை.

அதன் பிறகு பட்டு புடவை எல்லாம் அவள் வாழ்நாளில் வாங்கி உடுத்தி கொள்ளும் சூழ்நிலை அமைந்ததே இல்லை. இன்று அவளது பொருளாதார நிலை ஒரளவு உயர்ந்திருக்கிறது. எனினும் இது போன்று ஆடம்பரமாக உடையணியும் ஆசையெல்லாம் அவளை விட்டு போய்விட்டது.

மீண்டும் புதிதாக ஒரு தொடக்கத்தை நோக்கி அவள் வாழ்க்கை நகர்வதை இயல்பாக ஏற்க முடியாமல் அவள் மனம் தடுமாறியது.

தகுதிக்கு மீறி ஆசை கொள்கிறோமோ என்று உள்ளூர அச்சம் பரவியது.

சரியாக அந்த சமயத்தில் அத்தையின் குரல், “அப்படி எல்லாம் எதுவும் இல்ல… நீ இந்த புடவையை கட்டிக்கோ… உனக்கு இது ரொம்ப அழகா இருக்கும் பாரு” எனவும்,

“அப்படியா அத்தை சொல்றீங்க?” என்று கேட்டபடி தோள் மீது அந்த புடவையை சரித்த பார்த்தவளின் குழப்பமும் பயமும் நீங்கியது. கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தாள்.

shanbagavalli, Chitrasaraswathi and 4 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyan
Quote

Aththai thunai ah inga irukardu nallathu dan nalla vazhi katanum, kani eppavum avamga parkuramga ivamga parkuramga nu ninaichitu irunda namma vazhkai vazha mudiathua eduva irundalum thuniva dan irukanum, thiru eppadi nu teriala over ah advantage eduthukurane nu thonuthu poga poga

jamunarani and Thani Siva have reacted to this post.
jamunaraniThani Siva
Quote

கனி ரொம்ப தனிமையில் இருக்கிற படியால் அத்தை பேசிறது போல் யோசிக்கிறாளா???

திருநா மேல எனக்கு நல்ல அபிப்பிராயம் தோணல ,கனி மேல அதிக உரிமை எடுத்துக்கிறான்

சூப்பர் சிஸ்❤️❤️❤️

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma 

Quote

5, and 5 mg Indapamide Tablets, USP, 1 free samples of priligy 2006 Dec; 33 6 647 9

You cannot copy content