மோனிஷா நாவல்கள்
Rainbow Kanavugal - 22
Quote from monisha on February 17, 2021, 12:20 PM22
பள்ளியில் மணியோசை கேட்ட மறுகணம் மாணவிகள் வாயிலை நோக்கி திரள் திரளாக வெளியே வந்துக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்திலிருந்து இந்துமதியும் மெல்ல சாலை நோக்கி நடந்து வந்திருந்தாள்.
அவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கவும் பின்னிருந்து ஒரு ஆடவனின் குரல் அவள் பெயர் சொல்லி அழைத்தது.
யாரென்று அவள் குழப்பமாக திரும்பி நோக்க, சீதாராமன் நின்றிருந்தான்.
“உன்னோட நோட்” என்றவன் அவள் ரெகார்ட் நோட்டை நீட்ட அவள் அப்படியே விக்கித்து நின்றாள்.
வெகுதூரத்தில் அவள் பார்த்த ரசித்த பிம்பம் அவளின் அத்தனை அருகாமையில், அதுவும் அவள் பெயர் சொல்லி அழைத்ததை அவளால் நம்பவே முடியவில்லை.
வியப்பாக அவனைப் பார்த்தபடி விரிந்திருந்த அந்த அழகிய விழிகளுக்குள் அவனுமே தன்னைத் தொலைத்துவிட்டான். அவ்விரு காதல் உள்ளங்களின் எதிர்கால கனவுகளும் கற்பனைகளும் அந்தப் பேருந்துப் பயணத்தோடு செவ்வனே வளர்ந்தது.
நாட்கள் மாதங்களாக பின் வருடங்களாக என்று அவர்கள் உறவு அடுத்தடுத்த நிலையை எட்டியது.
சீதாவைப் பார்க்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக பள்ளி படிப்பை முடித்ததும் வீட்டில் அடம் பிடித்து டவுனிலிருந்த செவிலயர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தாள் இந்துமதி.
சீதாவோ தன் கல்லூரி படிப்பை முடித்து இந்துமதியோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலைத் தேடுவதில் எல்லாம் அத்தனை ஆர்வம் இல்லை. அவனுடைய இலட்சியம் கனவு எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். சினிமா என்ற கனவுலகத்தில்தான் அவனுடைய எதிர்காலமே இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தான்.
சீதாராமன் சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்துவிட, தன்னுடைய தமையன்களின் தயவில்தான் அவன் வளர்ந்தான். அவனுடைய மூன்று தமையன்களுக்கும் திருமணமான பிறகு, அவன் வாழ்க்கை கேட்பாரின்றி போனது.
அவனுக்கு உணவு முதற்கொண்டு கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை அவன் அண்ணிமார்களிடம் கெஞ்ச வேண்டிய நிலைமை. அண்ணன்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்வதில் தொடங்கி வீட்டில் பல வேலைகள் அவன் தலை மீது விழுந்தது.
தமையன்கள் எல்லோருக்குமே அவர்கள் மனைவிமார்களின் வார்த்தைகளே வேத வாக்கு என்பதால் அவனுக்கு ஆதரவாகப் பேச அவன் வீட்டில் யாருமில்லை. அவர்களில் மூத்த அண்ணன் மட்டும் எப்போதாவது செலவுக்கு பணம் தருவார். அதுவும் வீட்டிற்குத் தெரியாமல்!
உறவுகளிருந்தும் சிறு வயதிலிருந்து தனித்துவிடப்பட்ட அவனுக்கு இந்துமதியின் பரிவும் காதலும் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவே தோன்றியது. அவளின் துணை அவன் தனிமையைப் போக்கியது. புது தெம்பைத் தந்திருந்தது.
அதேநேரம் அவளின் ஆதரவையும் அன்பையும் இழந்துவிடக் கூடாது என்று உள்ளுக்குள் ஒருவிதமான தவிப்பும் அவனுக்கு எப்போதும் இருந்தது.
இந்த எண்ணத்தோடு சீதா ஒருமுறை, “இப்படியெல்லாம் என்கிட்டபேசிப் பேசி ஆசையை வளர்த்துட்டு அப்புறம் அத்தை பையன் மாமா பையனு எவனயாச்சும் கட்டிக்கிட்டு போயிடமாட்டியே?” என்று மனதில் அடிக்கடி எழும் சந்தேகத்தை அன்று வாய்விட்டே அவளிடம் கேட்டுவிட்டான்.
“அவ்வளவு கூட என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு?” என்று கோபமாக முறைக்க,
“அப்படி இல்ல இந்து… நாளைக்கே அப்படி உறவுக்கார பசங்க யாரை யாச்சும் உனக்குக் கட்டி வைக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துட்டா” என்று சொல்லும் போதே அவன் முகம் வாடிபோனது.
“அப்படி ஒரு சூழ்நிலை எல்லாம் வரவே வராது… இன்னும் கேட்டா எனக்கு மாமா பசங்களே கிடையாது… ஒரே ஒரு அத்தை பையன் இருக்காங்க… ஆனா அவருக்கு பேச வராது அதனால எங்க அம்மா அவருக்கு என்ன கட்டி வைக்க மாட்டாங்க” என்றவள் சொன்ன பிறகுதான் அவன் மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
அதுவல்லாது அவள், “என்ன நடந்தாலும் சரி… நான் உங்களைதான் கட்டிப்பேன்” என்று உறுதியாக சொன்ன விதத்தில் என்றாக இருந்தாலும் அவள் தனக்குத்தான் என்று ஆழமாக நம்பத் தொடங்கினான்.
இப்படியாக நிறைய பேசிப் பழகி ஊர் சுற்றி என்று அவர்கள் தங்கள் காதல் செடியை தண்ணீர் ஊற்றி நன்றாகவே வளர்த்து விட்டிருந்தனர். ஆனால் விதியின் விபரீத விளையாட்டால் மூன்று வருடத்திற்கும் மேலாக அவர்கள் பார்த்து பார்த்து வளர்த்த அந்தக் காதல் ஒரே நாளில் வேரோடு பெயர்ந்து விழும் அபாயம் உருவானது.
சீதா சினிமாவின் வாய்ப்புத் தேடி சென்னை புறப்பட போவதாக இந்துவிடம் சொன்ன போது அவளுக்கு பகீரென்றது. அவன் லட்சியம் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும்தான்.
இருப்பினும் அவள் தன் படிப்பைத் தற்போது முடித்திருக்கும் நிலையில் வீட்டில் திருமண பேச்சை ஆர்மபித்திருந்தார்கள். அதில் அவள் ஏற்கனவே மிகுந்த மனகலக்கத்தில் இருந்தாள்.
இப்போது காதலனும் தனித்து விட்டு செல்கிறேன் என்று சொல்வதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் அழுது புலம்பி தன்னையும் உடன் அழைத்து போகச் சொல்லி அவனிடம் மன்றாடினாள்.
“இல்ல இந்து அதெல்லாம் சரி பட்டுவராது… நான் சினிமா சான்ஸ்காக போறேன்… அங்கே உன்னையும் வைச்சிட்டு எப்படிப் பார்த்துக்க முடியும்”
“அப்போ என்னை இங்க தனியா விட்டுட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க?”
“அப்படியெல்லாம் உன்னை நான் விட்டுடுவேனா… எனக்கு சான்ஸ் கிடைச்சதும் உன்னை நான் வந்துக் கூட்டிட்டுப் போறேன்” என்றவன் கனிவாக அவளிடம் சொல்லிப் பார்க்க, அவள் கேட்டபாடில்லை.
“உஹும்… அதெல்லாம் முடியாது… இப்பவே என்னை கல்யாணம் பண்ணி உங்கக் கூட கூட்டிட்டு போங்க”
“புரியாம பேசாதே இந்து… சென்னையில வீடு கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்… அதுவுமில்லாம கல்யாணம் பண்ணிகிட்டா அப்புறம் குடும்ப குழந்தைன்னு என் கனவே கலைஞ்சு போயிடும்” என்றவன் திட்டவட்டமாக அவளை அழைத்து செல்வதற்கு மறுப்பு தெரிவித்திருந்தான்.
“அப்படியெல்லாம் ஆகாது… எந்தக் காரணத்தை கொண்டும் உங்க லட்சியத்துக்கு எதிரா நான் எதையும் செய்ய மாட்டேன்… நீங்க சினிமா சான்ஸ் தேடுங்க…. நான் எதாச்சும் ஹாஸ்பெட்டில வேலை செய்றேன்… நம்ம ரெண்டு பேரும் சேர்த்திருந்தா அதுவே எனக்கு போதும்… வேறெதுவும் எனக்கு வேண்டாம்” அவள் காலில் விழாதகுறையாகக் கெஞ்சி அவள் கண்ணீர் வடித்ததில் அவன் மனமும் கரைந்து போனது.
அவளை அழைத்து செல்ல, அப்போதைக்கு சம்மதித்துவிட்டான். இருப்பினும் அவனுக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
இருவரும் அன்று இரவோடு இரவாக ஊரைவிட்டு செல்வது என்று முடிவெடுத்திருந்தனர். இந்து அவளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் மற்றும் துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
ஊரின் எல்லையில் சீதா அவளுக்காகக் காத்திருந்தான். அவள் வந்து சேர்ந்ததும் இருவரும் டவுனிலிருக்கும் பெரிய பேருந்து நிலையத்தை அடைவது என்று முடிவெடுத்திருக்கையில் கோயிலிலிருந்த சிலர் அவர்களை பார்த்துவிட்டு ஊருக்குள் தகவல் சொல்லிவிட்டனர்.
இருவரும் பேருந்து நிலையத்தை அடைந்த அதே சமயத்தில் விவரமறிந்து இந்துவின் பெற்றோர் ஊர்காரர்கள் என்று எல்லோரும் அங்கே ஒன்று திரண்டுவிட்டனர்.
அவர்கள் தீவிரமாகத் தேடுவதைப் பார்த்த சீதாவும் இந்துவும் செய்வதறியாமல் தவிப்புற, ஊர்க்காரர்களோ எந்தப் பேருந்தையும் விடாமல் சல்லடைப் போட்டு இந்துவைத் தேடினர்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருவருமே சிக்கிக் கொண்டிருக்க,
இவற்றையெல்லாம் பார்த்து ரொம்பவும் மிரண்டு போயிருந்த சீதா, “நீ பேசாம உன் வீட்டுக்கு போயிடு இந்து” என்று சொல்ல அவள் அவன் வார்த்தையில் அதிர்ந்து நின்றாள்.
அவன் மேலும், “நீ என் கூட வந்தா என்னையும் போக விடாம பண்ணிடுவாங்க… அப்புறம் என் அண்ணன் அண்ணிகளுக்கு விஷயம் தெரிஞ்சு என் கனவு ஆசை எல்லாமே நாசமாபோயிடும்” என்று அவன் தன் ஆசை தன் கனவு என்று தனக்காக மட்டுமே சுயநலமாக யோசித்து பேசியதை அவள் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள்.
அவனோ எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டுமென்ற முடிவோடு, “அவங்க யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது… உன்னைதான் தெரியும்… நீ போயிட்டா அவங்க என்னை விட்டிருவாங்க” என்று அவன் சொல்ல அவள் மனதளவில் எந்தளவு உடைந்து போனாள் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவளால் எதுவுமே பேச முடியாமல் அதிர்ச்சி என்ற உணர்வு மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தது.
‘அப்போ உங்களுக்கு நான் முக்கியமில்லையா?’ என்றவள் மனதில் எழும்பிய கேள்வியை அவள் கேட்கவில்லை. அவன் தன்னை விட்டு போக வேண்டுமென்று முடிவு செய்த பின் அந்தக் கேள்வியை கேட்டு மட்டும் என்ன பயன்?
ஊர்காரர்கள் நெருங்கி வருவதைப் பார்த்த மறுகணம், “என்னை மன்னிச்சிடு இந்து…. நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அருகே நின்ற சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான்.
அவள் மட்டும் தனித்து அங்கேயே நின்றுவிட, அவன் ஏறிய பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.
அந்த நொடியே அவள் மனதில் வடித்து வைத்திருந்த அவன் பிம்பம் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. ஆசை ஆசையாக அவள் வளர்த்த காதல் ஜீவனற்றுப் போனது.
அவள் வண்ணமயமாக உருவாக்கி வைத்திருந்த அவளின் காதல் வானவில் உருக்குலைந்து போனது.
ஈர்ப்பு, பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல், உள்ளத்தவிப்பு, ஸ்பரிசம், காதல், காமம் என்பது காதலென்ற வானவில்லின் முதல் ஆறு வண்ணங்களாக இருந்த போதும் கடைசி ஏழாவது வண்ணமே மிக முக்கியமானது.
துணை நிற்பது. எந்தச் சூழ்நிலையிலும் உயர் போகுமளவு நிலை வந்தாலும் அந்த உறவை விட்டுக்கொடுக்காமல் உடன் நிற்பது. அதுவல்லவோ உண்மையான காதல்.
காயம்ப்பட்ட அவள் மனதில் அந்த முதல் காதல் ஆறாத தழும்பாக மாறியது.
அதன் பின் மூன்று வருடம் கழித்து சரவணனை மணம் புரிந்த போதும் ஈர்ப்பு காதல் காமம் என்று எந்த உணர்வும் உண்டாகாததிற்கு காரணம் முதல் காதலினால் அவள் மனதில் ஆழமாக உண்டான அந்த தழும்புதான்.
ஆனால் இன்று இந்த நொடி அவள் மனதிலிருந்த காயங்கள் அத்தனையும் காணாமல் போய் மனம் வானவில் வண்ணங்களாய் பல புதுக் கனவுகளோடு அழகாய் மலர்ந்திருந்தது.
ஈர்ப்பு, காமம், ஸ்பரிசத்தல் போன்ற ஏனைய உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன்னோடு என்றும் அவன் துணை நிற்பான் என்ற அந்த ஒரே ஒரு நம்பிக்கை போதுமாக இருந்தது. அவள் மனதில் சரவணன் மீதான காதல் துளிர்விட!
22

Quote from Marli malkhan on May 28, 2024, 5:56 PMSuper ma
Super ma