மோனிஷா நாவல்கள்
shamili Dev's Ennai ma(r)nanathayo-12
Quote from monisha on May 19, 2020, 10:58 PM12
நள்ளிரவில் ஆண்கள் இருவரும் வெளி அறையில் தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டிருக்க பெண்கள் இருவரும் உள்ளறையில் தாழிட்டு மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நால்வருமே உறக்கம் தொலைத்து அவரவர்கள் சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.
பிரபாவும் சரவணனும் வேலையில் பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் ஒன்றாக பழகி இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பயிற்சி முடித்தபின் அதே பயிற்சி சாலையில் ஆசிரியராக பணிபுரிய பிரபா முடிவு செய்ய சரவணனும் தன் நண்பனையே பின் பற்றினான். பின் இருவருமாக முடிவெடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். பிரபாவின் நண்பன் சரவணன் விட்டத்தை பார்த்து ஏதோ பலமான யோசனையில் இருந்தான். நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்த அவன் உணர்ச்சிகளை அவனது முகம் காட்டிக்கொடுக்க, பிரபா அவனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் அவன் தோளில் இடித்த பிரபா, "என்ன டா மச்சான்... திடீர்னு சிரிக்குற திடீர்னு பயப்புடுற திடீர்னு முழிக்குற. எல்லா ரியாக்ஷனும் ஒரே நேரத்துல கொடுத்து ஏன்டா குழப்புற?" என்று எரிச்சலாக கேட்டான்.
"ஒன்னும் இல்ல மச்சி" என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு சரவணன் கூற, "சும்மா சொல்லுடா" என்று பிரபா அவனை சீண்டினான்.
"இல்ல மச்சி. என் ஆள நினைச்சா கற்பனை உலகத்துல மிதக்குறேன். ஆனா அந்த கற்பனை உலகத்துல கையில பெல்ட்டோட உன் ஆள் என்ன முறைச்சு பாக்குற மாதிரியே இருக்கு டா."
"உன் ஆளா.. அது யாருடா?"என்று அசட்டையாக பிரபா கேட்க, "ஹ்ம்ம் பாத்திமா தான்" என்று பதில் கூறிய சரவணன் முகம் முழுவதும் பூரிப்பாக இருந்தது.
இதனை கேட்ட பிரபா மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சியாக அவனை நோக்கினான்.
"பாத்திமாவா? இது எப்போடா?"
"அவளை பிரஸ்ட் பிரஸ்ட் நான் இண்டக்ஷன்ல பார்த்தேனே. அப்போவே."
"இண்டக்ஷன்லேயே பாத்தியா? என்கிட்ட ஏன்டா சொல்லல?"
"எதுக்கு? மச்சி.... உன்னோடது கிருஷ்ணா பகவானோட ராசி. அதுக்கேத்த மாதிரி எல்லா பொண்ணுங்களும் பிரபா பிரபானு உன்னையே சுத்திவராங்க. இதுல இந்த பொண்ண வேற உனக்கு காண்பிச்சு விட்டுட்டு நான் பிச்சை தான் எடுக்கணும்"
"என்னடா மச்சான் இப்படி சொல்லிட்ட.. நான் என்னைக்கு டா பொண்ணுங்க பின்னாடி போனேன்."
"நீ போக மாட்ட டா. நீ கிளாஸ் எடுத்தாலே போதுமே. கிட்டத்தட்ட. ஏழெட்டு குழுவை நானும் பார்த்துட்டு தானே இருக்கேன்."
"யார் பார்த்து என்ன பிரயோஜனம்? என் ஆள் என்ன பார்க்க மாட்டிறாளே. அப்படியே பார்த்தாலும். அந்த கண்ணுலயே நெருப்பை கக்கிடுவா போல இருக்கு." என்று ஒரு ஏக்க பெருமூச்செறிந்தான் பிரபா.
"ஆனாலும் உனக்கு ரொம்ப தான் மனதைரியம் மச்சி. த்ரிஷ்யாவை பக்கத்துல வைச்சுக்குட்டு பாத்திமாவை பார்க்குறதுக்கே நான் இப்படி பயந்து நடுங்குறேன். நீ த்ரிஷ்யாவையே பார்க்குற."
"மச்சி.. அவளை பாத்தா முரட்டுத்தனமா தான் இருக்கும். ஆனா அவளுக்குள்ளையும் ஒரு பெண்மை இருக்குனு இன்னைக்கு அவளை தொட்டு அணைச்சப்ப தான் டா தெரிஞ்சுது. அப்போ அவளோட கைகளில் ஒரு நடுக்கம் ஒரு சிலிர்ப்பு. அவளுக்குள்ளையும் ஒரு மென்மையான பெண்மை இருக்குனு எனக்கு தான்டா தெரியும்"
"அய்யயோ. மென்மை பெண்மைனு என்னன்னவோ ஒளறுறான்... அணைச்சியா... இது எப்போ டா? இதெல்லாம் செஞ்சும் அவள் உன்னைஉயிரோட விட்டு வைச்சிருக்காளா? இல்ல நீ பிரபாவோட ஆவியா எதுக்கும் நீ கால காட்டு..." என்று அவன் போர்வையை விலக்க எத்தனிக்க
"அடச் சை..சும்மா இருடா... அவ இங்க இருந்த ஓட முயற்சிக்கும் போது அவளை பிடிச்சு தடுத்தப்போ" என்று இழுத்த பிரபா முகத்தில் அசடுவழிந்தது.
"முதல்ல வாயில இருந்து வர வாட்டர் ஃபால்ஸ கிளோஸ் பன்னு. ஓடிபோக இருந்தவளை தடுக்குறேன்ற சாக்குல உன்னோட கிருஷ்ண லீலையை நடத்திட்டு வந்து ஒரு குழந்தை பையன வெறுப்பேத்தி பாக்குறியா? ஓடிப்போய்டு இங்க இருந்து." என்று கோபமும் எரிச்சலுமாக வந்தது சரவணன் குரல்.
"என்னவோ தீயிர வாட வருதே" என்று பிரபா அவனை கிண்டல் செய்ய சரவணனோ, "அய்யய்யோ உள்ள இருக்குற அந்த த்ரிஷ்யா பொண்ணு வீட்டை கொளுத்திட்டு ஓடிப்போய் இருக்க போற. நல்லா பாருடா" என்று உண்மையான பதட்டத்துடன் கூறினான்.
"டேய் டேய்... நான் உன்னை கிண்டல் பண்ணேன்... ஆமா அவ்வளவு பயம் இருக்கறவன் எதுக்கு அவங்க இங்க இருக்கணும்னு சிபாரிசெல்லாம் பண்ண"
பீதி கொண்டிருந்த சரவணன் முகத்தில் இப்பொழுது புது ஒளி பளிச்சிட ஒரு வெட்க சிரிப்பு தானாக வந்து அவன் முகத்தில் ஒட்டி கொண்டது. அந்த சிரிப்பே அதற்கான பதில் பாத்திமா என்று பறைச்சாற்றியது.
"எப்பா... சாமி ராசா. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். நீ என்ன வேணாலும் செய். ஆனா வெக்கம் மட்டும் படாத.. அந்த கொடுமையை என்னால தாங்க முடியல." என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான் பிரபா.
"ஆனாலும் கொஞ்சம் பீதியா தான் இருக்கு பிரபா. எதுக்கு நான் போர்வைய நல்ல முகம் தெரியுற மாதிரியே போத்திக்குறேன். நீ செயினை எடுத்துட்டு போனதற்கே மிளகாய் போடி தண்டனைனா இதுக்கு கும்பிபாகமா கூட இருக்கும். மச்சான்.உனக்கு இந்த லேடி ஜாக்கிசானே தான் வேணுமா. எதுக்கும் யோசிச்சு முடிவெடுடா?"
"ஒழுங்கா படுத்துடு. அவளாச்சும் மிளகாய் தண்ணிய தான் மூஞ்சில ஊத்தினா. நான் எண்ணெய சூடா காய்ச்சி எடுத்துட்டு வந்து மூஞ்சில ஊத்திடுவேன்" என்று கடுப்புடன் பிரபா கூற சரவணனோ,
"நல்ல பொருத்தம் டா ரெண்டு பெருக்கும். வருங்காலத்துல ஒரு நல்ல கொலைகார குடும்பமா வர எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு." என்று கேலி செய்தவன் அவனை மேலும் கடுப்பேற்றாமல் அவனுக்கு எதிர் புறம் முகத்தை திரும்பி படுத்து விரைவில் உறங்கியும் விட்டான். பிரபாவும் விரைவிலேயே கண்ணையர்ந்தான்.
சிலமணி நேரங்களில் பிரபாவிற்கு உறக்கத்தில் திடீரென்று புரையேறியது. அவன் இரும்பிக்கொண்டே சுற்றும் முற்றும் தண்ணீரை தேடி கொண்டிருக்க எதிர்பார்க்காத விதமாக அடுத்த அறைக்கதவை திறந்துகொண்டு பாத்திமா வெளியில் வந்தாள். அதுவும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன்.
அதனை வாங்கி பருகிய பிரபா அவளுக்கு நன்றி கூறினான். புன்னகையுடன் பாத்திமா அறைக்குள் திரும்பி செல்ல எத்தனிக்க பிரபாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
"சாரிங்க உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன்" என்று பணிவாக மன்னிப்பு கோர பதிலாக புன்னகைத்த பாத்திமா, "அப்படி ஒன்னும் இல்ல. எனக்கு ரொம்ப நேரமா தூக்கம் வரல. புது இடம் இல்ல அதான். அதனால நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல." என்றாள்.
"த்ரிஷ்யா தூங்கிட்டாங்களா?" என்று பிரபா அக்கறையுடன் கேட்க, "அவ மேல தான் உங்களுக்கு ரொம்ப அக்கறை போல இருக்கே" என்று கேட்டு கூர்மையாக பார்க்க,
பதிலுக்கு மௌனமாக கனிந்த பிரபாவின் முகத்தை பார்த்த பாத்திமா அவனை பார்த்து அந்த கேள்வியை கேட்டாள்.
"நீங்க ஏன் த்ரிஷ்யாவை விரும்புறீங்க?" என்று கேட்டு பிரபாவை அதிர வைத்தாள் பாத்திமா.
அவனுக்கு குழப்பம் என்னவென்றாள் இவள், "த்ரிஷ்யாவை காதலிக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தாள் கூட பரவாயில்லை. ஆனால் அவள் கேட்ட கேள்வி அவன் அவளின் தோழியை காதலிப்பது அவளுக்கு தெரிந்த விஷயம் தான் என்பது போல தொனித்ததுதான்.
எவ்வளவு தான் பிரபாவும் சரவணனும் உள்ளறையில் இருக்கும் பெண்களுக்கு கேட்கக்கூடாது என்று இறங்கிய குரலில் பேசிய போதிலும் அது உறங்காமல் இருக்கும் பாத்திமாவின் காதில் விழுந்திருக்கும் என்றே பிரபாவிற்கு தோன்றியது.
அவன் எண்ணப்போக்கை கண்டு கொண்டு அதனை சரியாக யூகித்த பாத்திமா ஆமாம் என்பது போல் தலை அசைத்து, "நீங்க இரண்டு பேரும் பேசினது கேட்கணும்னு கேட்கல. என் காதுல விழுந்தது. அவ்வளவு தான்." என்று கூறி முடித்தாள்.
பாத்திமாவின் கேள்வியை மெளனமாக அவனுக்குள் அவனே கேட்டுக்கொண்டான். "நான் ஏன் அவளை காதலிக்குறேன்."
"இதுக்கு பதில் எனக்கு சத்தியமா தெரியல பாத்திமா. ஒரு வேலை அவ எங்க அம்மா மாதிரி நடந்துக்கறதால கூட இருக்கலாம். ஆனா எனக்கு நிஜமாவே உண்மை காரணம் தெரியாது.
அவனின் இந்த பதில் பாத்திமாவை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. "உங்க அம்மா த்ரிஷ்யா மாதிரியா ?" என்று கேட்டவள் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி.
"எங்க அம்மா ரொம்ப அன்பானவங்க. அப்பாவை ரொம்ப நேசிக்குறவங்க. அதே நேரம் ரொம்ப தைரிய சாலி. ஒரு நாள் நானும் அம்மாவும் பஸ்ல போயிட்டு இருந்தோம். அப்போ எனக்கு பன்னிரண்டு வயசு.அந்த பஸ்ல ஒருத்தன் ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப மோசமா இடிச்சுட்டு நின்னான். அங்க இருந்த கண்டக்டர் உட்பட பலபேர் அவன் செய்ற வேலைய பாத்தும் கண்டுக்காம இருந்தாங்க. அம்மா ரெண்டு முறை அவனை தள்ளி நிற்க சொல்லி எச்சரிக்கை பண்ணாங்க. அவன் கேட்குற மாதிரி இல்ல. அப்படியே அவன் கைய பிடிச்சு ஓடுற பஸ்ல இருந்து தள்ளிவிட்டுட்டாங்க."
"அய்யயோ.. அப்பறம் போலீஸ் கேஸ் எதுவும் ஆகலையா? "
"கேஸ் ஆச்சு. ஆனா அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காம ஃபுட் போர்ட்ல நின்னு தவறி விழுந்துட்டான்னு கன்டக்டரே பொய் சாட்சி சொல்லிட்டாராம்."
அவன் சொன்னதை முழுவதுமாக கேட்ட பாத்திமாவிற்கு அவனின் அம்மாவை நினைத்து பிரமிப்பாக இருந்தது. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவளுக்கு பெண்மையின் கம்பீரத்தை நினைத்து பெருமையாக இருந்தது.
"புரியுது சார் . உங்கள எந்த வகைல திரஷ்யா கவர்ந்திருப்பானு எனக்கு நல்லாவே புரியுது. என்னதான் நீங்க அவகூட ஏட்டிக்கு போட்டியா நடந்துக்குட்டாலும். நீங்க ரொம்ப கண்ணியமானவர். ஆல் தி பெஸ்ட்."
"என்ன? ஆல் தி பெஸ்ட் சொல்லி ஒதுங்கிக்கலாம்னு பாக்குறீங்களா? எனக்கு நீங்க தானே ஹெல்ப் பண்ணனும். "
"ஹெல்பா ஆக.... உங்க ஃபிரின்ட் சரவணனுக்கு நீங்க ஹெல்ப் பண்ண போறீங்களா?" என்று புருவத்தை உயர்த்தி ஒரு மாதிரியான குரலில் கேட்டாள் பாத்திமா.
பிரபாவோ அசட்டையாக, "ச்சே.. ச்சே... அவனாச்சு அவன் லவ்வாச்சு. நான் அதெல்லாம் பண்ணவே மாட்டேன்" என்று கூறி தோளை குலுக்கினான்.
பாத்திமா சிரித்துக்கொண்டே, "அப்போ உங்களுக்கும் அதே பதில் தான்" என்றாள்.
"அதானே... நீங்க யாரோட ப்ரெண்ட்? உங்களுக்கு பேசவா சொல்லிகுடுக்கணும். ஆமாம் கேட்கணும்னு இருந்தேன். அதென்ன சார் மோர்னு.. என்ன பிரபானே நீங்க கூப்பிடலாம். ட்ரைனிங் சென்டர்லயும் அப்படியே கூப்பிடுங்க. ஏன்னா கார்பொரேட் கலாச்சாரமே வேற."
"சரி பிரபா.. அப்பறம்... உங்க அம்மாவை பாக்கணும் போல இருக்கு... "
"கண்டிப்பா காட்டுறேன் " என்று கூறியவன் தனது கைபேசியிலிருந்து இருந்த ஒரு புகைப்படத்தை நீட்டினான். அதில் பிரபா அவன் தாய் தந்தையருடன் நின்றிருந்தான்.
இதனை கண்ட பாத்திமாவின் கண்கள் பெரிதாக விரிந்தன.
"மரீனா சைக்கிள்ஸ் சி.இ.ஓ சந்தான க்ரிஷணனோட மகனா நீங்க... அப்பறம் ஏன் இங்க.. இப்படி.. ?."
"என்ன... இப்படி... "
"இல்ல... அவ்வளவு பெரிய கம்பனிக்கு அடுத்த வாரிசு நீங்க ஏன் இங்க வேலை செய்யணும். "
"அது அவர் வேலை. இது என் வேலை. சிம்பிள்."
பாத்திமாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் பிரபா அவளுக்கு காரண காரியங்களோட எடுத்துரைக்க, அவளுக்கு பிரபாவின் மீது மதிப்பு கூடியது. மேலும் அவளுக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது.
"உங்க வேலை. தன்மானம் எல்லாம் புரியுது. ஆனா நீங்க சொன்னீங்களே. அம்மாவும் நீங்களும் பஸ்ல போனீங்கன்னு. இவ்வளவு பெரிய பணக்காரரோட மனைவியும் மகனும் பஸ்ல ஏன் போகணும்?"
"எங்க அம்மா எப்பவுமே சொல்லுவாங்க. நாம மனிதனாய் வாழ்ந்தா மட்டும் போதாது மனித தன்மையோடு வாழனும்னு. வசதி இருக்குனு அதுலயே நம்ம சுகம் கண்டுட்டா வறுமைல அன்றாட கூலி வாழ்க்க வாழற மனிதர்களோட உணர்வுகளை புரிஞ்சுக்க முடியாது. எல்லாம் மனிதர்களோட வாழ்க்கையை பார்த்து அவங்களோட கலந்து வாழ்தா மட்டும் தான் அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியும்னு."
அவன் பேசியதை விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருந்த பாத்திமா தன்னையறியாமல் கைதட்ட எண்ணி கைகளை உயர்த்த அவள் கைகளை பற்றி நிறுத்திய பிரபா தூங்கும் இருவரையும் சுட்டிக்காட்டி அவளை அமைதி அடைய செய்தான்.
"சரி நீங்க போய் படுத்துகோங்க ரொம்ப லேட்டா ஆயிடுச்சு." என்று பிரபா கூற அத்துடன் அவர்கள் உரையாடல் முடிவடைந்தது.
பாத்திமா உறங்கிக்கொண்டிருந்த த்ரிஷ்யாவின் அருகில் வந்து படுத்து கண்களை மூடிக்கொண்ட அடுத்த நொடி நிதானமாக கண்களை திறந்த த்ரிஷ்யா மென்னகை புரிந்தாள்.
த்ரிஷ்யாவும் பாத்திமாவும் பரபரப்புடன் பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். பிரபா வீட்டில் இருந்து வந்து வது ஒரு வாரம் கடந்திருந்தது. த்ரிஷ்யா கண்ணாடி முன் நின்று தன் உடை அலங்காரத்தை சரி பார்த்துக்கொள்ளும் பொழுது அவள் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த மீன் சின்னம் பொருந்திய செயின் அவள் கண்ணில் பட்டது.
அதனை பார்த்த பொழுது த்ரிஷ்யாவிற்கு பிரபா அன்று கூறியது இன்றுபோல் மனதில் நிழலாடியது.
அன்றைய மறுநாள் காலை த்ரிஷ்யாவும் பாத்திமாவும் விடுதிக்கு திரும்பும் முன் பிரபா அந்த செயினை த்ரிஷ்யாவின் கையில் திணித்து,
"இனிமே இந்த செயினை பார்க்கும் பொழுது உனக்கு உங்க தாத்தா ஞாபகம் வருதோ இல்லையோ என் ஞாபகம் கண்டிப்பா வரும்" என்றான்.'இவன் இதை சொன்னாலும் சொன்னான். தினம் இதை பார்க்கும் போதெல்லாம் அவன் சொன்னது தான் ஞாபகம் வருது.' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த த்ரிஷ்யா பாத்திமாவின் கேலி சிரிப்பில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
குளியலறையில் இருந்து துண்டினால் தலையை துவட்டியபடியே வெளியில் வந்த பாத்திமாவிற்கு தனியாக நின்று சிரிப்பதும் பேசுவதுமாக இருக்கும் த்ரிஷ்யா ஒன்றும் புதிதாக தெரியவில்லை.
கடந்த ஒரு வாரமாகவே அவள் இப்படி தான் செய்துகொண்டிருந்தாள். முக்கியமாக கண்ணாடி முன் நிற்கும் பொழுது. ஆனால் இவற்றிற்கெல்லாம் நேர்மாறாக பிரபா பயிற்சி அறையில் அவர்களை கண்டுகொள்ளவதே இல்லை. ஏன் சில நேரங்களில் அவன் வேண்டுமென்றே அவர்களை தவிர்க்கிறானோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனின் நடவடிக்கைகள்.
இவர்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்த பாத்திமாவிற்குதான் ஒன்றும் விளங்காமல் தலை சுழன்றது.
'இவங்க மோதிக்கிட்டாலும் என் தலை தான் உருளுது. இல்லனாலும் என் தலை தான் சுத்தும் போலிருக்கே' என்று மனதில் நினைத்த பாத்திமா த்ரிஷ்யாவை அழைத்துக்கொண்டு பயிற்சி வளாகத்திற்கு சென்றாள்.
12

"இனிமே இந்த செயினை பார்க்கும் பொழுது உனக்கு உங்க தாத்தா ஞாபகம் வருதோ இல்லையோ என் ஞாபகம் கண்டிப்பா வரும்" என்றான்.
'இவன் இதை சொன்னாலும் சொன்னான். தினம் இதை பார்க்கும் போதெல்லாம் அவன் சொன்னது தான் ஞாபகம் வருது.' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த த்ரிஷ்யா பாத்திமாவின் கேலி சிரிப்பில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
குளியலறையில் இருந்து துண்டினால் தலையை துவட்டியபடியே வெளியில் வந்த பாத்திமாவிற்கு தனியாக நின்று சிரிப்பதும் பேசுவதுமாக இருக்கும் த்ரிஷ்யா ஒன்றும் புதிதாக தெரியவில்லை.
கடந்த ஒரு வாரமாகவே அவள் இப்படி தான் செய்துகொண்டிருந்தாள். முக்கியமாக கண்ணாடி முன் நிற்கும் பொழுது. ஆனால் இவற்றிற்கெல்லாம் நேர்மாறாக பிரபா பயிற்சி அறையில் அவர்களை கண்டுகொள்ளவதே இல்லை. ஏன் சில நேரங்களில் அவன் வேண்டுமென்றே அவர்களை தவிர்க்கிறானோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனின் நடவடிக்கைகள்.
இவர்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்த பாத்திமாவிற்குதான் ஒன்றும் விளங்காமல் தலை சுழன்றது.
'இவங்க மோதிக்கிட்டாலும் என் தலை தான் உருளுது. இல்லனாலும் என் தலை தான் சுத்தும் போலிருக்கே' என்று மனதில் நினைத்த பாத்திமா த்ரிஷ்யாவை அழைத்துக்கொண்டு பயிற்சி வளாகத்திற்கு சென்றாள்.
Uploaded files:
Quote from நலம் விரும்பி !!.. on May 20, 2020, 9:48 AMகதையில் நாயகன் & நாயகி மோதலில் ஆரம்பித்து காதலில் தானே முடியும் ., மோதல் முடிந்தது , இனி காதல் ஆரம்பம் தானே எழுத்தாளர் ,.
கதையில் நாயகன் & நாயகி மோதலில் ஆரம்பித்து காதலில் தானே முடியும் ., மோதல் முடிந்தது , இனி காதல் ஆரம்பம் தானே எழுத்தாளர் ,.