மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanathayo-4
Quote from monisha on April 26, 2020, 5:31 PM
- முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த தோழமைகளுக்கு நன்றி!
இந்த பதிவிற்கான உங்கள் கருத்தையும் எதிர்பார்த்து...
-ஷாமிலி தேவ்
4
பிரபாவிற்கு யாரோ தன்னை பலமாக குலுக்குவது போல் இருந்தது. அது வேற யாரும் இல்லை. அராஜகமே உருவான அதே த்ரிஷ்யமாலா!
தற்போது சாந்த சொரூபிணியாய் சேலை பதுமை போல் அவன் முன்னே காட்சி தந்து கொண்டிருந்தாள்.
"என்னங்க ? கனவு காண்றீங்களா?" என்றவள் அவன் முகத்தை ஆராய்வாக பார்த்து வினவ, தன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தவனாக,
"இல்லம்மா சொல்லு" என்றபடி அழகாய் புன்னகைத்தான்.
"நான் எவ்வளவு நேரமா ஒரு கேள்வி கேக்கணும்னு சொல்லிட்டு இருக்கேன். என்னனு கேட்கமாடீங்களா?"
"இவ்வளவு நேரமா நீயும் நானும் கேள்வி கேட்கறதை தவிர வேற என்ன உருப்பிடியா பண்ணிட்டு இருக்கோம்?" என்றவன் சலிப்பாக சொன்னதில் அவள் தீவிரமாக முறைக்க,
"சரி சரி என்ன கேட்கணுமோ கேளு?". என்றான்.
"நாம முதல் முதல எங்க எப்படி சந்திச்சோம்?".
த்ரிஷ்யமாலா முதல் முதலில் பிரபாவை புகைப்படத்தில் பார்த்தபோதே அவன் அவளில் மனதைக்கவர்ந்து விட்டிருந்தான். இன்று அவன் தானும் அவனும் காதலித்ததாக சொன்னபிறகு அவளுக்கு அவர்களின் உறவை பற்றித்தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது. அவள் இதுநாள்வரை தன் கடந்தகாலம் தனக்கு மறந்துபோனதை பற்றி கவலைக் கொள்ளவில்லை. அவளின் தாய் தந்தையர் அவளை மீண்டும் புதிதாக பிறந்த குழந்தையை போல் பார்த்து பார்த்து கவனித்து கொண்டனர்.
நம் கையில் இல்லாத விஷயத்தை பற்றி கவலை படுவதை விட்டுவிட்டு நமக்கு இன்று கிடைக்கப்படும் இன்பத்தையும் ஆசியையும் அனுபவிப்பதே சிறந்தது என்று கருதினாள் த்ரிஷ்யா. ஆனால் அதை தான் நம்மில் பலர் செய்யத்தவறி விடுகிறோம்.
நாளை வரப்போகும் தீமைகள் பற்றியும் நேற்று இழந்த இன்பங்கள் பற்றியும் யோசித்து இன்றைய மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம்.
த்ரிஷ்யா இந்த திருமணத்தை நிறுத்த எவ்வளவோ பாடுபட்டாள் தான். ஆனால் திருமணம் அரங்கேறி விட்டது. அதை நினைத்து கவலை கொள்வதை விட இன்று பிரபாவுடன் அவளுக்கு கிடைக்கப்பெறும் இன்பத்தை அனுபவித்து வாழ எண்ணினாள். நாளை அவர்கள் சேர்ந்து இருப்பார்களா என்றுகூட உத்திரவாதம் இல்லாத அவள் வாழ்வில் இனி அவனுடன் இருக்கப்போகும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ தீர்மானித்திருந்தாள்.
த்ரிஷ்யா அவனை காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் காதலித்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவளுக்கு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இது அனைத்திற்கும் மேலாக அவனிடம் இப்படி உரையாடிக்கொண்டிருப்பதே ஒரு இன்பமயமான கனவில் சஞ்சரிப்பது போல் குதூகலத்தை அவளுக்கு உண்டு பண்ணியது.
த்ரிஷ்யா தங்களின் முதல் சந்திப்பைப்பற்றி கேட்டதும் பிரபாவிற்கு தலையில் யாரோ சம்மட்டையால் அடித்தது போல் ஜிவென்று வலித்தது.
"இவளுக்கு எல்லாம் மறந்ததே சந்தோஷம்னு நினைச்சுட்டு இருந்தா இவ என்னடானா நம்மள வைச்சே மொத்த ஞாபகத்தையும் வரவைச்சுப்பா போல இருக்கே?" என்று எண்ணிக்கொண்டான்.
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்துகொண்டான்.
"சரி நாம ப்ரஸ்ட் எப்போ மீட் பண்ணோம்னு உனக்கு தெரியணும் அவ்வளவு தானே? சரி சொல்றேன்" என்றவன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான். ஆனால் முற்றிலும் வேறு பரிமாணத்தில்!
அவன் சொல்லத்தொடங்கும் முன் த்ரிஷ்யாவை பார்த்தான்.
"இவளை பார்தா நாம ஏதாச்சும் எக்குத்தப்பா உளறி மாட் டிப்போம்" என்று எண்ணியவன் திரும்பி அமர்ந்து சுவற்றை பார்த்தான். அதில் எங்கும் த்ரிஷ்யாவின் படங்கள் தான். அவளின் சிறுவயது முதல் பருவ வயது வரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சுவற்றில் மாற்றப்பட்டிருந்தது.
அவன் அவற்றை மெய்மறந்து பார்க்கத்தொடங்க அவன் சொல்லப்போகும் அவர்களில் காதல் கதையை கேட்க ஆர்வம்பொங்க காத்திருந்த த்ரிஷ்யாவிற்கு அவனின் இந்த செய்கை அவளின் பொறுமையை இழக்க செய்திருந்தது.
"என்னங்க மறுபடியும் கனவுக்கான ஆரம்பிச்சுடீங்களா? போங்க நான் தூங்கபோறேன்" என்று கூறி தலையணையில் சாய போக அவளை அப்படியே கையை பிடித்து தடுத்தான் பிரபா.
"என்னது தூங்கப்போறியா. அதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு கதையெல்லாம் ரெடி பண்ணேன்" என்று கேட்டான் அவசரமாக.
"என்னது கதை ரெடி பண்ணீங்களா ? " என்று சந்தேகமாக கேட்டாள் அவனின் மனையாள்!
'அய்யய்யோ மறுபடியும் உளறிட்டோமா? திஸ் கேர்ள் இஸ் வெரி டேஞ்சரெஸ்....' என்று மனதிற்குள்ளேயே புலம்பியவன்,
"இல்லமா அது ... எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம காதல் கதையை சொல்ல என்ன நானே ரெடிபன்னிக்குட்டேன்னு சொல்லவந்தேன். " என்று எப்படியோ சமாளித்துவிட்டான்.
"சரி சரி சீக்கிரம் சொல்லுங்க" என்று அவள் அவசரப்படுத்தினாள்.
பிரபா சொல்லத்தொடங்கினான்.
"நம்ம ப்ர்ஸ்ட் எப்போ மீட் பண்ணோம்னு சொல்லணும்னா அதுக்கு முன்னாடி நீ சிலவிஷயம் தெரிஞ்சுக்கணும். நாம ரெண்டு பெரும் கொலிக்ஸ்.. ஒரே கம்பெனில தான் வேலை செஞ்சோம். அங்க நான் தான் உனக்கு ட்ரைனிங் டியூட்டர்."
த்ரிஷ்யா இடையில் புகுந்து "ஒஹோ முந்தினநாள் நான் ஒரு படம் பாத்தேன். அதுல..." என்று அவள் முடிப்பதற்குள் இடையில் அவளை நிறுத்தினான் பிரபா.
"குறுக்க நீ ஒரு கத சொன்ன அப்பறம் எனக்கு எப்படி ப்ஃலொ வரும்" என்றான் கோபமாக.
"ப்ஃலொ வர்றதுக்கு நீங்க என்ன கற்பனை கதையை சொல்லப்போறீங்க ? நடந்ததை சொல்லப்போறீங்க. அப்பறம் என்னங்க?" என்று கேட்ட அவன் மனைவியை முறைத்துக்கொண்டே,
"வாய்ல விரல வை.. மூச். இதோட நானா சொல்றவரை நீ பேசவே கூடாது " என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டினான்.
அவன் சொன்னதை அப்படியே கடைப்பிடித்தாள் அவனின் காதலாகிய மனைவி.
இப்பொழுது பிரபாவின் மனசாட்சி குறுக்கிட்டு
'டேய் பிரபா உங்காட்ல மழதாண்டா.' என்றது. புன்னகையும் அவன் மீண்டும் சொல்லத்தொடங்கினான்.
"அந்த ட்ரைனிங் சென்டர் மைசூர்ல இருக்கு. அங்க தான் முதல் முதல்ல நான் உன்னைப்பார்த்தேன்.
உனக்கு பாதிமானு ஒரு ப்ரென்ட் இருந்தாங்க. நீயும் அவங்களும் எப்பவும் ஒன்னாவே இருப்பீங்க".
த்ரிஷ்யா தனக்கு தோழியாக இருந்த பெண்ணிற்கு அவன் கொடுத்த மரியாதையை மனதில் குறித்துக்கொண்டாள்.
"அன்னைக்கு நீயும் உன் ப்ரென்டும் சைக்கிள்ல ட்ரைனிங் ப்ளாக்குக்கு போயிடு இருந்தீங்க. நான் அந்த பக்கம் போகும்போது நீ எனக்கு எதிர்ல தான் வந்திட்டு இருந்த.
உன் முகத்துல இருந்த சிரிப்பு உன் கண்ணுலயும் இருந்துது. நீ ரொம்ப குதூகலமும் உற்சாகமுமா இருந்த. அப்போ எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா. உன்கூட யார் இருந்தாலும் அவங்களையும் சந்தோஷமா வைச்சுக்குற சக்தி உன்கிட்ட இருங்குதுனு தோணுச்சு. அந்த ட்ரைனிங் சென்டர்ல எத்தனையோ அழகான பொண்ணுங்க இருந்தாங்க. உன்னோட அழகும் அவங்களோடதுல துளியும் குறைஞ்சு இல்ல. அதுவுமில்லாம அழகா இருக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல.
ஆனா எந்த விகல்பமும் இல்லாத முலாம் பூசாத உன் சிரிப்பும் உற்சாகமும் தான் என்ன ரொம்ப கவர்ந்துச்சு."
த்ரிஷ்ய அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அவன் தன அழகை வர்ணித்து தன்னை பார்த்ததும் காதல் என்று சொல்லியிருந்தாள் என்ன நினைத்திருப்பாளோ அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் சொன்னது அவளுக்கே தன்னை புதுமையுடன் பார்ப்பது போல் இருந்தது. அதே நேரம் தன் கணவனின் மீதிருந்த மரியாதை கூடிக்கொண்டே போனது.
"அப்பறமா?" என்று கேட்டாள்
"அப்புறம்... அப்புறம்..."என்று மென்று விழுங்கினான் அவளின் கணவன்.
"என்னங்க முழிக்குறீங்க.. மேல சொல்லுங்க.."
"சொல்றேன். அப்பறம் .. "என்று திருதிருவென்று பார்த்துக்கொண்டே சொல்லத்தொடங்கினான்.
"உன்னையும் உன் பிரெண்டையும் ஒரு ஹிந்திக்கார பயன் கேலி பண்ணான். அசிங்கமா பேர் வைச்சு கூப்பிட்டான். எனக்கு செம்ம கோவம் வந்துடுச்சு."
இதற்குள் த்ரிஷ்யா இடைபுகுந்து, "அவனை நீங்க அடிச்சு துவம்சம் பண்ணி இருப்பீங்க ... கரெக்ட்டா ?" என்று அவசரமும் ஆர்வமுமாக கேட்டாள்.
பிரபா முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே அவன் மனைவிக்கு தன் கைகளால் திருஷ்டி கழித்தான்.
"அடி என் செல்லாக்க்க்க்குட்டி... கரெக்டா சொல்லிட்டியே..உன் மாமனை கரெக்டா புரிஞ்சுவெச்சு இருக்க. புத்திசாலி டீ நீ " என்று பாராட்ட தொடங்கிவிட்டான்.
த்ரிஷ்யாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சிரித்துக்கொண்டே தன் கணவனை பார்த்தாள்.
எப்பவும் போல நம் பிரபாவின் மன்சாட்சியோ, "அவளே நமக்காக கதைசொல்ல ஆரம்பிச்சுட்டா. இனிமே உன்ன யாராலயும் அடிச்ச்க்க முடியாதுடா. பொண்டாட்டிடா" என்று பூரித்துக்கொண்டது.
"அப்பறம் என்ன ஆச்சு மேல சொல்லுங்க" என்று ஆர்வம் பொங்க கேட்டாள் அவன் மனைவி.
"அப்பறம் என்ன நான் அவனை அடிச்ச அடியில உன் கால்ல விழுந்து என்ன மன்னிச்சுடுங்க. சார்கிட்ட என்ன விட்டிரசொல்லுங்கன்னு கெஞ்சிக்கேட்டான்
நீயும் அவனுக்காக பரிதாபப்பட்டியேனு நான் அவனை விட்டுட்டேன். இல்லனா அன்னைக்கே அவனை கொன்னு புதைச்சிருப்பேன்". என்றவன் மேலும்,
"அப்புறம் நீ என்ன ஆச்சரியமா பார்த்த. அப்பவே எனக்கு தெரிஞ்சுபோச்சு. உன் கண்ணுக்கு நான் ஒரு ஹீரோவாவே தெரிய ஆரம்பிச்சுட்டேன்னு." இதை சொல்லிமுடித்ததும் பிரபா திருதிருவென விழித்து கொண்டே முகத்தை திருப்பிக்கொண்டு ,
'ஹீரோவா... ம்ம்கும்... அவ வாழ்க்கைக்கே நீ தான் உலகமகா வில்லன் னு இவ நினைச்சுட்டு இருந்தான்ற விஷயம் மட்டும் இவளுக்கு தெரியவந்துதுனா' என்று அவன் மனசாட்சி கொடுத்த கவுண்டரில் உள்ளுர அவனுக்கு நடுக்கமுற்றது அவள் அறியாத ரகசியம்!

Uploaded files: