மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanthayo-23
Quote from monisha on July 18, 2020, 9:43 PM23
த்ரிஷ்யாவின் கண்கள் கத்தி போல் கூர்மையடைந்தது. அதிர்ச்சியும் பயமுமாக மற்றவர்கள் நிற்க, த்ரிஷ்யா என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அங்கு இருந்த எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பலமணிநேரமோ சிலமணித்துளிகளோ அந்த அறையிலிருந்த மௌனம் கலைந்தபாடில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, பாத்திமா ஜன்னலை வெறித்துக்கொண்டிருக்க. த்ரிஷ்யாவும் அதே ஜன்னலை தான் வெறித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று த்ரிஷ்யா மயங்கி சரிந்தாள். இதை எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியடைய மின்னல் வேகத்தில் பிரபா அவளை தன் கைகளில் தாங்கிக்கொண்டான். பின் அங்கு இருந்த செவிலியர் உதவிக் கொண்டு அவளை ஒரு படுக்கையில் கிடத்தினான்.
"அவங்க கொஞ்சம் மன அழுத்ததுல இருந்து இருப்பாங்க போல. பயப்படும் படி எதுவும் இல்ல. ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். இன்னும் ஒரு அரைமணிநேரத்துல நீங்க கூட்டிட்டு போகலாம்." என்று கூறிவிட்டு அந்த செவிலியர் செல்ல பிரபாவுடன் இருந்த அனைவருக்குமே அந்த அரைமணி நேரம் முள் மேல் நிற்பது போல்தான் இருந்தது.
பிரபா அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.
த்ரிஷ்யா கண்விழித்த பொழுது நால்வருமே தங்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவள் கண்கள் அந்த அறையிலிருந்தவர்களை ஒவ்வொருவராகக் கடந்து சென்று பிரபாவின் மீது நிலைகுத்தி நின்றது.
அவனை கண்களால் அழைத்தாள். அவன் அருகில் சென்றதும், "என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு தெரியாம நீங்க ஏதோ பண்றீங்களானு எனக்குச் சந்தேகம். அதான் நான் இங்க வந்தேன். சந்தேகம்னா உங்க நடத்தையில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. எனக்கு ஏதோ நெருடலாவே இருந்துது. நீங்க ஏதாவது ஆபத்தான சூழல்ல மாட்டிட்டு இருக்குற மாதிரி. அதனால் தான் நீங்க இருக்குற இடத்துக்கு.." என்று கூறி தலைகுனிந்தாள்.
"இப்போ தெளிவாயிடுச்சா?" என்று அவன் கேட்கவும் அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
"ஆனா நான் பயப்படும்படி எதுவும் இல்லன்னு புரியுது. அப்பா சரவணன் அண்ணா எல்லாரும் இங்க தான் இருக்காங்க. நீங்க யாருக்கோ உதவி பண்ண முயற்சி பண்றீங்க. அவங்களுக்கு ஏதோ ஆபத்துனு தான் நீங்க இங்க ரகசியமா வரீங்க அப்படின்னு புரியுது."
பிரபா புன்னகையுடன் அவளைப் பார்க்க அப்பொழுது தான் மற்ற அனைவருக்குமே நன்றாக மூச்சு விட முடிந்தது.
எங்க த்ரிஷ்யாவிற்கு நினைவு திரும்பி விட்டதோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு நினைவு திரும்பக் கூடாது என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் அதற்குச் சரியான சமயம் இன்னும் வரவில்லை என்றே நினைத்தனர். பாத்திமாவிற்கு நினைவு திரும்பாமல் த்ரிஷ்யாவிற்கு நினைவு திரும்பினாள் அது என்ன மாதிரி விளைவுகளை உண்டாக்கும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் த்ரிஷ்யா பிரபாவிடம் இன்னும் ஓர் கேள்வி கேட்டாள்.
"நீங்க ஏன் டாக்டர் கிட்ட அந்த பொண்ணு என் ப்ரெண்ட்னு சொன்னீங்க?"
அவளை நிதானமாகப் பார்த்தவன், "அதான் நீயே சொல்லிட்டியே. அந்த பொண்ணுக்கு ஆபத்து ஏதோ இருக்குதுனு. அதான் அவர்கிட்ட அப்படி சொன்னேன்." என்றான்
"அவர் உங்க பிரெண்ட் தானே. அவரை நம்பலையா?"
"அவர் என் பிரெண்ட்தான். ஆனா இந்த மருத்துவமனையில் எல்லோரும் எனக்கு பிரெண்ட் இல்லையே. சுவருக்கும் காதுகள் உண்டு மா." என்றான்.
பிறகு த்ரிஷ்யாவை அழைத்துக்கொண்டு பிரபாவும் ஆனந்தராஜும் வீட்டை அடைந்தனர்.
பிரபா உணவு உண்டுகொண்டிருக்கும் பொழுது யாரோ அவனைக் கூர்ந்து கவனிப்பது போல் தோன்றியது. கடந்த ஒரு வாரமாகவே இது போல் தோன்றுவது அவனுக்கு வழக்கமாகி விட்டது. திடீரென்று அவனுக்குப் புரையேறியது. த்ரிஷ்யா வேகமாக ஓடிவந்து அவனுக்கு நீரெடுத்துக் கொடுத்தாள்.
அவன் குடித்து முடித்ததும் அவளைத் திட்ட தொடங்கினான்.
"கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்போ எதுக்கு இப்படி ஓடி வர. வயித்துல பாப்பா இருக்குனு உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறையா இருக்கா… அப்படி என்ன புரையேறி நான் செத்துடவா போறேன்"
"ஐயோ ப்ளீஸ். இப்படிலாம் பேசாதீங்க" என்று கூறியவள் கண்களிலிருந்து உடனே இரு சொட்டு கண்ணீர் வெளிவந்தது.
இதை கண்ட பிரபாவின் உள்ளம் பதறியது.
"ஏய் பைத்தியம் இப்போ எதுக்கு அழுவுற. என் த்ரிஷ்யா எவ்வளவு தைரியசாலி தெரியுமா? இப்படி அழவே மாட்டா? எனக்கென்னவோ நீ என் த்ரிஷ்யா தானான்னு சந்தேகம் வருது." என்று கூறிக்கொண்டே போக அங்கே ஜோதி அவளுக்கு அபயம் அளித்தார்.
"இப்போ எதுக்குடா அவளை வம்புக்கு இழுக்குற. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது த்ரிஷ்யாவை அழவைக்கலன்னா உனக்கு தூக்கம் வராது இல்ல?"
"இல்ல. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அழலன்னா உங்க மருமகளுக்கு தான் தூக்கம் வராது. இப்போ எதுக்கு அழுவுறானு கேளுங்க நீங்களே. ஒரு வாரமா இதே கதை தான். முக்கியமா அன்னைக்கு பாத்திமாவை பார்த்துட்டு வந்தோமே அன்னையில இருந்து. ஏதோ கனவு கண்டாளாம் அது பளிச்சுடுமோனு பயந்து சாவுறா."
இதைக் கேட்ட ஜோதி சிரித்துவிட்டார்.
"என்னம்மா இந்த காலத்துல போய் கனவு அது இதுன்னு. முதல்ல கண்ணை துடை." என்று கூறி அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.
"ஒன்னும் தெரிஞ்சுக்கோ த்ரிஷ்யா. தப்பு செய்றவங்க தான் எப்போ எது நடக்குமோன்னு பயந்துட்டு இருப்பாங்க. உன் புருஷன் யாருக்கும் எந்த பாவமும் செஞ்சதில்ல. அவனுக்கு எதுவும் ஆகாது. பெண்கள் சக்தியின் ரூபம்னு சொல்றது உண்மைன்னா என் பையன எந்த தீங்கும் நெருங்காம த்ரிஷ்யா என்று பெயர் கொண்ட சக்தி அவனை காக்கும். புரியுதா?"
இவ்வார்த்தைகளைக் கேட்ட த்ரிஷ்யாவின் முகத்தில் குடிகொண்டுள்ள உணர்வை அங்கிருந்த மற்ற இருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவள் முகத்தில் தெளிவு பிறந்ததை கண்டவர்
"அது மட்டும் இல்ல த்ரிஷ்யா. இவனுக்கு யாரால் எந்த ஆபத்தும் வரும்னு நினைக்குற இவனால் மத்தவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா போதாதா?" என்று கூற த்ரிஷ்யா சட்டென்று சிரித்துவிட்டாள்.
"அம்மா இதெல்லாம் அநியாயம். உங்க மருமகளை சிரிக்கவைக்க நீங்க என் காலை வாறிட்டிங்க. இதெல்லாம் சரியே இல்ல." என்று கூற அங்கு மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
அப்பொழுது வீட்டினுள் நுழைந்த சந்தானகிருஷ்ணன் சில வார்த்தைகளை உதிர்த்து மனைவியிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
"பொம்பள சிரிச்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க." என்று கூற பிரபா அவரை எதிர்க்கேள்வி கேட்டான்.
"அப்படி பொண்ணுங்க சிரிச்சதால எந்த நாடு அழிஞ்சுடுச்சு."
"அன்னைக்கு பாஞ்சாலி துரியோதனனை பார்த்து சிரிச்சதால தான் மஹாபாரதம் உருவாச்சு. பெரும் போர் நடந்தது. இது தெரியும் இல்ல?" என்று சந்தானகிருஷ்ணன் கூற ஜோதி அவரை தீ பார்வை பார்த்தார்.
அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"திரௌபதி துரியோதனனை பார்த்து சிரிச்சதால ஒன்னும் மஹாபாரதம் போர் நடக்கல. அந்த சபைல இருந்த எல்லாரும்தான் அவனை பார்த்து சிரிச்சாங்க. ஆனா கேவலம் ஓர் பெண் தன்னை பார்த்து சிரிச்சுட்டானு துரியோதனன் பெண் இனத்தையே கேவலமா நினைத்து தன் குரோதத்தை வளர்த்துக் கொண்டான். அதனால் தான் போர் மூண்டது. அதை தெரிஞ்சுக்கோங்க." என்று கணவனை பார்த்து கூறியவர் வேகமாக எழுந்து செல்ல முற்பட்டார்.
அதற்குள் சந்தானகிருஷ்ணன் அவரது கையை பிடித்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினார்.
"அப்பாடா. இப்போதான்டா பிரபா எனக்கு நிம்மதியா இருக்கு." என்று கூறினார் சந்தானகிருஷ்ணன்.
"அப்பா. அம்மாவை வெறுப்பேத்திட்டு உங்களுக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு."
"இல்லடா பிரபா. கொஞ்சநாளாவே உங்க அம்மா ஒரு சபதம் எடுத்து இருந்தா. என்ன திட்ட மாட்டேன். என்கிட்ட கோபப்பட மாட்டேன்னு. நானும் என்னலாமோ முயற்சி பண்ணேன். பிரயோஜனம் இல்ல. ஆனா இன்னைக்கு ட்ரை பண்ண ட்ரிக் கரெக்ட்டா ஒர்க் ஆச்சு." என்று கூறி சிரித்தார்.
பிரபா சிரித்துக்கொண்டே, "ஏதேதோ பேசிட்டு இப்போ மாட்டிக்கிட்டோம்னு அந்தர் பல்டி அடிக்குறீங்களா?" என்று கேட்க அவரோ தோளை குலுக்கியபடி, "வேணும்னா என்ன பத்தி உங்க அம்மகிட்டயே கேட்டுக்கோ. நான் இப்படியெல்லாம் யோசிக்குற ஆளானு." என்று கேட்டுக்கொண்டே கையை மனைவியின் தோள் மேல் வைக்க.
"தெரியும் உங்கள பத்தி. என்ன வெறுப்பேத்தியே பழக்கப்பட்டவர். முதல்ல கையை எடுங்க" என்று கூறி விலகி அமர்ந்தார்.
அவ்விருவரது செய்கையைக் கண்ட த்ரிஷ்யாவும் பிரபாவும் சிரித்துக்கொண்டனர்.
"ஆனா அத்தை. கிருஷ்ணன் அர்ஜுனுக்கு உபதேசம் பண்ணி வழி நடந்தினா மாதிரி துரியோதனனையும் வழி நடத்தி இருந்தா இந்த போரே மூண்டிருக்காதே." என்று கேட்டாள்.
ஜோதி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
"பகவானோட எண்ணம் துரியோதனனைத் தண்டிக்க வேண்டும் என்பது இல்லை. அவன் மூலமாக சமூகத்துக்கு தர்மத்தை போதிக்கவேண்டும்னு தான். அதர்மமே நடக்காம தடுத்துட்டா பின் வரும் சங்கதிகளுக்குத் தர்மம் எது அதர்மம் எதுன்னு எப்படி தெரியும்?" என்று கேட்டார்.
"ஆனா இப்போ இருக்குற சமூகத்துக்கு மட்டும் அது தெரியுதா என்ன? நியூஸ்ல தினம் தினம் ஏதோ ஒன்று வந்துட்டு தானே இருக்கு. கொலை கொள்ளை கற்பழிப்புன்னு."
"இல்லம்மா. நியூஸ் என்றாலே அது ஹாட்டாக இருக்கணும்னு நினைக்குறாங்க. அதனால் அந்த மாதிரி செய்தி மட்டும் தான் வெளியாகுது. ஆனா மக்கள் மனசுல இன்னும் கருணை தர்மம் இதெல்லாம் வாழ்ந்துட்டுதான் இருக்கு."
"ஆனா அத்தை. தப்பு செய்றவங்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்குதா?" என்று த்ரிஷ்யா கேட்க ஜோதி தன் மகன் முகத்தைப் பார்த்தார். அவருக்கு ராஜசேகரின் நினைவு வந்தது.
அப்பொழுது த்ரிஷ்யாவின் கண்களும் பிரபாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
பிரபா மெளனமாக அவ்விடத்தை விட்டு அகன்றான். பிரபாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்.
தந்தையை தனியாக அழைத்து பேசிக்கொண்டு இருந்தான்.
"அப்பா. நம்ம வீட்ல கொஞ்சம் பாதுகாப்பு அதிகப்படுத்துங்க."
"என்ன பிரபா திடீர்னு."
"இல்லப்பா. அந்த ராஜசேகர் பையன் பெயில் வாங்கி வெளில வந்துட்டானாம்."
"எனக்கும் தெரியவந்தது. நீ சொல்றதுக்கு முன்னாடியே நான் கொஞ்சம் இதை பத்தி யோசிச்சுட்டு தான் இருந்தேன். ஆனா நீ இப்படி சொல்றதுக்கு அது மட்டும் தான் காரணமா?"
"இல்லப்பா கொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரி இல்ல. ஏதோ சரி இல்லாத மாதிரி இருக்கு. யாரோ என்னை கண்காணிக்குற மாதிரி இருக்கு. என் உயிரை நினைச்சு நான் பயப்படல. த்ரிஷ்யாவுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாது. அதை பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டு இருக்கேன்."
"சரி டா பிரபா. நான் பார்த்துக்குறேன். நீயும் தேவை இல்லாம வெளிய போறது வர்றதுனு வைச்சுக்காம இரு." என்று கூறிவிட்டு அகன்றார்.
இரவு த்ரிஷ்யா கண்களை மூடியபடி படுத்துக்கொண்டு இருக்க அறையினுள் நுழைந்த பிரபா அவளை பார்த்துப் புன்னகைத்தான்.
"உனக்கு ஆஸ்கார் அவார்ட் வாங்கி தர சொல்றேன். முதல்ல எழுந்து உட்காரு." என்று கூற சரேலென்று எழுந்தமர்ந்தாள் த்ரிஷ்யா.
"நான் தூங்கலைனு உங்களுக்கு எப்படி தெரியும்." என்று கேட்க, அவளின் அருகில் வந்து அவளது கைகளை பிடித்து கொண்ட பிரபா,
"கண்டிப்பா சொல்லனுமா?... சொல்லலாம்.. ஆனா கொஞ்சம் செலவாகும்" என்று கூறியதைக் கேட்டு குழப்பமடைந்த த்ரிஷ்யா அவனது முகத்தில் குடியிருந்த குறும்பை கண்டு தலையணையை அவன் மீது வீசினாள்.
"என்னடி நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு தெரிஞ்சுக்க வேணாமா?"
"தேவையில்லை. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்." என்று கூறி மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்த பிரபா மெல்ல அவளை அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான்.
"அம்மு. உனக்கு எந்த ஆபத்தும் வரமா உன்னையும் நம்ம குட்டிமாவையும் பத்திரமா பார்த்துப்பேன். இது சத்தியம்" என்று கூறி அவளின் முன்னெற்றியில் முத்தமிட்டான்.
எந்த ஆபத்து அவளை நெருங்காமல் பார்த்துக்கொள்வதாகச் சத்தியம் செய்தானோ அந்த ஆபத்து மறுநாள் இதே நேரம் அவனை அடையப்போவதை நினைத்து விதி அவனைப் பார்த்துச் சிரித்தது.
23

Quote from நலம் விரும்பி !!.. on July 19, 2020, 12:16 PMInteresting episode & good family ,.
Interesting episode & good family ,.