மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanthayo?-3
Quote from monisha on April 25, 2020, 11:19 AM
- முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த தோழமைகளுக்கு நன்றி!
இந்த பதிவிற்கான உங்கள் கருத்தையும் எதிர்பார்த்து...
-ஷாமிலி தேவ்
செல்ஃபி ஸ்டிக்
த்ரிஷ்யா தன் யோசனையில் இருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்தாள். அவள் இன்னும் அவன் கையணைப்பில் தான் இருக்கிறாள் என்று அப்பொழுது தான் உணர்ந்தாள். மெல்ல விலகி சென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பிரபா அவளிடம் அவளுக்கு நடந்த விபத்தை பற்றி கேட்க தொடங்கினான்.
"அந்த அச்சிடென்ட் எப்படி மா நடந்தது?"
"எனக்கு சரியா தெரியலங்க. நான் கார்ல போயிட்டு இருந்தப்போ பின்னாடி இருந்து ஒரு லாரி வேகமாக வந்து காரை மோதிட்டாதா விபத்து நடந்த இடத்துல இருந்தவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க"
இதை கேட்ட பிரபா அதிர்ந்துவிட்டான். இது விபத்தென்று அவனுக்கு தோன்றவில்லை. நிச்சயம் த்ரிஷ்யாவின் தந்தையும் இதை நம்பி இருக்கமாட்டார் என்றே அவனுக்கு தோன்றியது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பலமுறை அவர் பிரபாவிடம் பேசியிருக்கிறார். ஓரளவு அவர்களுக்குள் நல்ல பழக்கமும் உருவாகியிருந்தது.
காலை முதல் வேளையாக அவரிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் தன் மனைவியிடம்,
"உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா. விபத்து நடந்த சமயம் இல்லனா அதற்கு முந்தைய நிமிஷம்?" என்று மீண்டும் கேட்டான்.
"நான் தான் ஞாபகம் இல்லனு சொல்றேனே" என்று சலிப்புடன் சொன்னாள். அவளுக்கு அலுப்பாக இருந்தது.
எத்தனை பேர்தான் இதையே கேட்பார்கள். இது சாலை விபத்து என்பதால் காவல் துறையினர் பலமுறை இந்த கேள்விகளை கேட்டு அவளை அலுக்கவைத்திருந்தனர். அவளே அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவளை பொறுத்தவரை அவள் வாழ்வில் விபத்திற்கு முன் என்ற ஒரு காலமே இல்லை. ஏன் விபத்து கூட அவளுக்கு நிகழ்ந்த ஒன்றாக இல்லாத பொழுது இந்த கேள்விக்கெல்லாம் அவள் எங்கனம் பதில் தேடுவாள்.
தலையில் கைவைத்துக்கொண்டு வேதனையுடன் அமர்ந்துவிட்டாள்.
பிரபாவும் அவள் நிலையை பார்த்து வேதனைக்கொண்டான். அவளை கேள்வி கேட்டு தான் செய்த தவறை அப்பொழுதுதான் உணர்ந்தான். இனி அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அவனுள் இன்னொரு சந்தேகமும் உதித்தது. த்ரிஷ்யாஅவனிடம் எதையோ மறைக்க முயற்சிக்கிறாள் என்று. ஆனால் அதையும் அவளாக சொல்லாதபட்சத்தில் அதை அவனாக கேட்கக்கூடாது என்றும் எண்ணிக்கொண்டான்.
இனிவரும் வாழ்க்கையில் அவளை எந்த ஒரு துன்பமும் நெருங்காமல் பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்றும் புரிந்தது. எனவே பேச்சை மாற்றும் நோக்கத்துடன் மெதுவாக,
"உனக்கு என்னை பிடிச்சியிருக்கா?" என்று கேட்டுவைத்தான்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திடாத த்ரிஷ்யா திரு திருவென்று விழித்தாள்."என்ன முழிக்குற. என்ன பிடிச்சிருக்கா பிடிக்கலையா?"
அவனை பார்த்து குறும்பு மின்ன, "ஏன் இன்னும் நாலு வருஷம் கழிச்சுக் கேளுங்களேன்" என்றாள் அவனது மனைவி. அந்த கேள்வியில் இதை பெண்பார்க்க வந்தபொழுதே கேட்டிருக்க வேண்டும் என்ற கிண்டல் தொனித்தது.
பிரபாவிற்கு அது புரியாமல் இல்லை.
"எனக்கு மட்டும் உனக்கு அம்னீஷியானு முன்னாடியே தெரிஞ்சுருந்தா இந்நேரத்துக்கு இப்படி குவிஸ் ப்ரோக்ராம் மாதிரி கேள்வி பதிலா இருந்திருக்கும். ஹம்ம்ம்ம் என் நிலைமை யாருக்கு புரியுது?" என்று முணுமுணுத்துக்கொண்டே பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
"என்ன என்ன சொன்னீங்க?"
'அய்யொ மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டியாடா பிரபா' என்று எண்ணியவள்,
"இல்லாம அது ஒன்னும் இல்ல." என்று அவளை சமாளித்தான்.
த்ரிஷ்யா பின் தயக்கத்துடனே, "எங்க நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்டாள்.
"ஒன்னென்ன ஓராயிரம் கேளு... ஏன் என்னையே கேளு நான் தர ரெடியாதான் இருக்கேன்" என்றவனின் வார்த்தையில் விஷமத்தனம் மின்னியது.
அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான். அதை கண்ட த்ரிஷ்யாவிற்கு தன் மனதை அவன் பக்கம் சாயாமல் தடுப்பது பெரும் பாடாக இருந்தது.
"இப்படிலாம் நீங்க பண்ணா நான் எப்படி தான் கேக்குறது?" என்று சிணுங்கினாள்.
"பஸ்ட் நைட்ல வந்து கான் பனாக க்ரோர்பதி ப்ரோக்ராம் பண்ணா... ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்... என்னை பாத்தா பாவமா இல்லையா உனக்கு?"
"யாரு நீங்க பாவமா? நம்ம ரெண்டுபேர்ல நீங்க பாவமா நான் பாவமா நீங்களே சொல்லுங்க?" என்று இடுப்பில் கைவைத்து கொண்டு வலிய வரவைத்து கொண்ட கோபத்துடன் கேட்டாள் த்ரிஷ்யா.
"என்ன இடுப்புல கையை வைச்சுக்கிட்டு பேசினா கோபமா பேசுறதா அர்த்தமா? நானும் இடுப்புல கை வைச்சுட்டு கோபமா பேசுவேன் பாக்குறியா? ஆனா ஒரு கண்டிஷன். நானும் உன் இடுப்புல தான் கைவைச்சு பேசுவேன்" என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் பேசினான். ஆனால் அவன் பார்வை தானாக அவள் இடையின் பால் சென்றது.
இதை கேட்ட த்ரிஷ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. ஆனால் அவன் பேசிய விதத்தில் அவளுக்கு சிரிப்பும் பீறிட்டுகொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டாள்.
பிரபா அவள் சிரிப்பில் தன்னையே தொலைத்தான். இதுவரை அவர்கள் இப்படி ஒருநாளும் சிரித்து சகஜமாக பேசியதே இல்லை.
நின்றாள் சண்டை. நடந்தால் சண்டை. அவர்கள் பார்த்துக்கொண்டாலே சண்டை ... இப்படிதான் இருந்தது அவர்கள் உறவு
அவனுக்கு அவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த நாள் நினைவிற்கு வந்து, அவன் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு... அவன் பயிற்சியாசிரியராக வேலைசெய்த அதே நிறுவனத்தில் த்ரிஷ்யா பயிற்சி மாணவியாக பணிபுரிந்தாள்.
த்ரிஷ்யாவிற்கு பாத்திமா என்ற ஒரு தோழி இருந்தாள். அவ்விருவரும் பள்ளி பருவத்திலிருந்தே இணை பிரியா தோழிகள். ஒரே கல்லூரியில் சேர்ந்து இறுதி ஆண்டில் வளாக நேர்காணல்(கேம்பஸ் இன்டெர்வியூவில்) ஒரே நிறுவனத்தில் தேர்ச்சி பெற்று ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பும் பெற்றனர்.
அந்த நிறுவனத்தில் புதிய பணியாளர்களுக்கு ஆறு மாதகாலம் அவர்களின் பயிற்சிமையத்திலேயே தங்கவைத்து பயிற்சி தருவது வழக்கம். அவர்கள் பயிற்சி மையம் மிகவும் பெரிய பரப்பளவை கொண்டது.
அது கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்று மைசூரில் அமைந்திருந்தது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட
அந்த மையம் ஒரு சிறிய நகரம் போலவேக் காட்சியளித்தது.அந்த பயிர்சி மையத்திற்கு வரும் புதிய பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தங்கும் விடுதி அமைத்து தரப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடும் அவ்விரு தோழிகளுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததால் பெற்றோர்களை பிரிந்த தாக்கம் அவர்களுக்கு பெரிதாக இருக்கவில்லை . இந்த நிலையில் தான் பிரபா ஒரு நாள் த்ரிஷ்யாவை சந்தித்தான்.
அன்று தான் அவ்விரு தோழிகளுக்கும் பயிற்சிக்காலத்தின் இரண்டாவது நாள். அந்த பயிற்சி வளாகத்தில் லட்சக்கணக்கான சைக்கிள்கள் பணியாளர்கள் உபயோகிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும்.
அதில் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக்கொண்டு தோழிகள் இருவரும் மகிழ்ச்சியோடு பயிற்சி தொகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். புதிய இடம் என்பதால் இருவரும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு செல்ஃபி ஸ்டிக்கை பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வடநாட்டு இளைஞன் ஒருவன் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்துகொண்டே அழைத்தான். அதுவும் சாதாரணமாக அல்ல.
"ஹே செல்ஃபி பேபீஸ்" என்று.
த்ரிஷ்யாவும் பாத்திமாவும் அவனை திரும்பி பார்த்தார்கள்.
அதற்குள் அவன் அவர்களின் அருகில் வந்துவிட்டிருந்தான். தோழிகள் இருவரும் அவன் தங்களை அழைக்காதது போல் சாலையை பார்த்து சென்றுகொண்டிருந்தனர்.அவன் மீண்டும்,"ஹே செக்ஸி பேபீஸ் " என்று அழைத்தான்.
த்ரிஷ்ய இம்முறை நிதானமாக அவனை திரும்பி பார்த்தாள். அதே நிதானத்துடன் பாத்திமாவை பார்த்தாள். அவள் முகத்தில் குறும்பு ஏகபோகத்துக்கும் தாண்டவமாடியது.
"பாத்திமா காலைல இருந்து என்டேர்டைன்மெண்ட்ஹே இல்லனு சொல்லிட்டு இருந்தோம்ல. தோ வந்துடுச்சு பாரு". என்றாள் சிரித்துக்கொண்டே.
பாத்திமா, "ஹே வேணாம்டி... உன்னை பத்தி தெரியாம பேசிட்டான் பாவம். மன்னிச்சு விட்டிரு... பாத்தா பால்குடிக்குற பாப்பா மாதிரி இருக்கான்" என்று கூறி அவளை மலையேறவிடாமல் தடுக்க முயற்சசித்தாள்.
ஆனால் அந்த பாதகன் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டான்.
அவர்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு மேலும் சீண்ட நினைத்தான்.
"ஹே ஜிகுலீஸ். யு ஆர் சோ ஹாட்" என்றான்.
'டேய் உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல... பேசாம தப்பிச்சு ஓடிப்போயடுறா' என்று பாத்திமா தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அவளுக்கு அவன் நிலைமையை நினைத்தால் ரொம்பவும் பாவமாக இருந்தது.
அதற்குள், "அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ" என்ற கூச்சலுடன் ஒரு அலறல் சத்தம் கேட்டது. அந்த இளைஞன் தான். சைக்கிளோடு அவனும் கத்திகொண்டே கீழேவிழுந்து கிடந்தான்.
கண்மூடி திறக்கும் வேளையில் இது எப்படி நடந்தது என்று பாத்திமாவிற்கு சுத்தமாக புரியவில்லை. த்ரிஷ்யா சைக்கிளை விட்டிறங்கி விழுந்து கிடந்தவனை நோக்கி சென்றாள்.
பாத்திமா, "வேணா த்ரிஷ்யா இது நம்ம ஊரில்ல. நம்ம இங்க ஜாப் ட்ரைனிங்க்காக வந்திருக்கோம். வந்த இடத்துல தேவை இல்லாத பிரச்சனை எதுக்கு?" என்று எப்படியும் அவளை தடுக்க வேண்டும் என்று முயன்று பேசி பார்த்தாள்.
ஆனால் த்ரிஷ்யாவின் காதில் இது எதுவும் விழுந்தது போல் அறிகுறியே இல்லை. அதற்குள் அந்த இளைஞனை இருவரும் நெருங்கிவிட்டிருந்தனர்.
அப்பொழுது தான் பாத்திமா கவனித்தாள். த்ரிஷ்யா கையிலிருந்த செல்பி ஸ்டிக் அவன் சைக்கிள் வீலில் சொருகப்பட்டிருந்தது. எப்பொழுது அவள் ஸ்டிக்கிலிருந்து கைப்பேசியை வெளியேற்றினாள். எப்பொழுது அதை சொருகினாள் என்று கணிக்க முடியாத அளவிற்க்கு வேகமாகவும் துரிதமாகவும் செயல் பட்டிருந்தாள்.
த்ரிஷ்யா பின் குனிந்து அந்த ஸ்டிக்கை எடுத்து, ஏற்கனவே விழுந்த வலியால் புலம்பிக்கொண்டிருந்த அந்த வடநாட்டு இளைஞனை வெளு வெளு என்று வெளத்துவிட்டாள்.
பின் சாலை அருகில் இருந்த நடைமேடையில் சென்று அமர்ந்து கொண்டு ஸ்டிக்கை ஆட்டிக்கொண்டே
"எழுந்து வாடி என் வடநாட்டு வஞ்சரமே " என்று அழைத்தாள்.
அவள் தமிழில் பேசியது அவனுக்கு புரியவில்லை என்றாலும் தன்னை அருகில் அழைக்கிறாள் என்று மட்டும் புரிந்தது."கர்பய முஜஹி சோட் தெண்" என்று ஹிந்தியில் வேண்டிக்கொண்டான்.
"என்னது சோம்பப்படி வேணுமா.? பாத்தியா பாத்திமா அடிவாங்கியும் இவனுக்கு கொழுப்பு குறையுதான்னு " என்று கேட்டால் த்ரிஷ்யா என்கிற நம் நாயகி த்ரிஷ்யமாலா .
அவன் செய்கையிலும் சொன்னத் தோரணையிலுமே தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான் என்று சிறு குழந்தைக்கு கூட புரிந்திருக்கும். ஆனால் அவள் வேண்டுமென்றே அவனை கிண்டல் செய்துகொண்டிருந்தாள்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இன்னொரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை. நம் குறும்பே உருவான கதாநாயகன் பிரபா தான்.
- முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த தோழமைகளுக்கு நன்றி!
இந்த பதிவிற்கான உங்கள் கருத்தையும் எதிர்பார்த்து...
-ஷாமிலி தேவ்
செல்ஃபி ஸ்டிக்
த்ரிஷ்யா தன் யோசனையில் இருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்தாள். அவள் இன்னும் அவன் கையணைப்பில் தான் இருக்கிறாள் என்று அப்பொழுது தான் உணர்ந்தாள். மெல்ல விலகி சென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பிரபா அவளிடம் அவளுக்கு நடந்த விபத்தை பற்றி கேட்க தொடங்கினான்.
"அந்த அச்சிடென்ட் எப்படி மா நடந்தது?"
"எனக்கு சரியா தெரியலங்க. நான் கார்ல போயிட்டு இருந்தப்போ பின்னாடி இருந்து ஒரு லாரி வேகமாக வந்து காரை மோதிட்டாதா விபத்து நடந்த இடத்துல இருந்தவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க"
இதை கேட்ட பிரபா அதிர்ந்துவிட்டான். இது விபத்தென்று அவனுக்கு தோன்றவில்லை. நிச்சயம் த்ரிஷ்யாவின் தந்தையும் இதை நம்பி இருக்கமாட்டார் என்றே அவனுக்கு தோன்றியது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பலமுறை அவர் பிரபாவிடம் பேசியிருக்கிறார். ஓரளவு அவர்களுக்குள் நல்ல பழக்கமும் உருவாகியிருந்தது.
காலை முதல் வேளையாக அவரிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் தன் மனைவியிடம்,
"உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா. விபத்து நடந்த சமயம் இல்லனா அதற்கு முந்தைய நிமிஷம்?" என்று மீண்டும் கேட்டான்.
"நான் தான் ஞாபகம் இல்லனு சொல்றேனே" என்று சலிப்புடன் சொன்னாள். அவளுக்கு அலுப்பாக இருந்தது.
எத்தனை பேர்தான் இதையே கேட்பார்கள். இது சாலை விபத்து என்பதால் காவல் துறையினர் பலமுறை இந்த கேள்விகளை கேட்டு அவளை அலுக்கவைத்திருந்தனர். அவளே அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவளை பொறுத்தவரை அவள் வாழ்வில் விபத்திற்கு முன் என்ற ஒரு காலமே இல்லை. ஏன் விபத்து கூட அவளுக்கு நிகழ்ந்த ஒன்றாக இல்லாத பொழுது இந்த கேள்விக்கெல்லாம் அவள் எங்கனம் பதில் தேடுவாள்.
தலையில் கைவைத்துக்கொண்டு வேதனையுடன் அமர்ந்துவிட்டாள்.
பிரபாவும் அவள் நிலையை பார்த்து வேதனைக்கொண்டான். அவளை கேள்வி கேட்டு தான் செய்த தவறை அப்பொழுதுதான் உணர்ந்தான். இனி அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அவனுள் இன்னொரு சந்தேகமும் உதித்தது. த்ரிஷ்யாஅவனிடம் எதையோ மறைக்க முயற்சிக்கிறாள் என்று. ஆனால் அதையும் அவளாக சொல்லாதபட்சத்தில் அதை அவனாக கேட்கக்கூடாது என்றும் எண்ணிக்கொண்டான்.
இனிவரும் வாழ்க்கையில் அவளை எந்த ஒரு துன்பமும் நெருங்காமல் பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்றும் புரிந்தது. எனவே பேச்சை மாற்றும் நோக்கத்துடன் மெதுவாக,
"உனக்கு என்னை பிடிச்சியிருக்கா?" என்று கேட்டுவைத்தான்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திடாத த்ரிஷ்யா திரு திருவென்று விழித்தாள்.
"என்ன முழிக்குற. என்ன பிடிச்சிருக்கா பிடிக்கலையா?"
அவனை பார்த்து குறும்பு மின்ன, "ஏன் இன்னும் நாலு வருஷம் கழிச்சுக் கேளுங்களேன்" என்றாள் அவனது மனைவி. அந்த கேள்வியில் இதை பெண்பார்க்க வந்தபொழுதே கேட்டிருக்க வேண்டும் என்ற கிண்டல் தொனித்தது.
பிரபாவிற்கு அது புரியாமல் இல்லை.
"எனக்கு மட்டும் உனக்கு அம்னீஷியானு முன்னாடியே தெரிஞ்சுருந்தா இந்நேரத்துக்கு இப்படி குவிஸ் ப்ரோக்ராம் மாதிரி கேள்வி பதிலா இருந்திருக்கும். ஹம்ம்ம்ம் என் நிலைமை யாருக்கு புரியுது?" என்று முணுமுணுத்துக்கொண்டே பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
"என்ன என்ன சொன்னீங்க?"
'அய்யொ மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டியாடா பிரபா' என்று எண்ணியவள்,
"இல்லாம அது ஒன்னும் இல்ல." என்று அவளை சமாளித்தான்.
த்ரிஷ்யா பின் தயக்கத்துடனே, "எங்க நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்டாள்.
"ஒன்னென்ன ஓராயிரம் கேளு... ஏன் என்னையே கேளு நான் தர ரெடியாதான் இருக்கேன்" என்றவனின் வார்த்தையில் விஷமத்தனம் மின்னியது.
அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான். அதை கண்ட த்ரிஷ்யாவிற்கு தன் மனதை அவன் பக்கம் சாயாமல் தடுப்பது பெரும் பாடாக இருந்தது.
"இப்படிலாம் நீங்க பண்ணா நான் எப்படி தான் கேக்குறது?" என்று சிணுங்கினாள்.
"பஸ்ட் நைட்ல வந்து கான் பனாக க்ரோர்பதி ப்ரோக்ராம் பண்ணா... ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்... என்னை பாத்தா பாவமா இல்லையா உனக்கு?"
"யாரு நீங்க பாவமா? நம்ம ரெண்டுபேர்ல நீங்க பாவமா நான் பாவமா நீங்களே சொல்லுங்க?" என்று இடுப்பில் கைவைத்து கொண்டு வலிய வரவைத்து கொண்ட கோபத்துடன் கேட்டாள் த்ரிஷ்யா.
"என்ன இடுப்புல கையை வைச்சுக்கிட்டு பேசினா கோபமா பேசுறதா அர்த்தமா? நானும் இடுப்புல கை வைச்சுட்டு கோபமா பேசுவேன் பாக்குறியா? ஆனா ஒரு கண்டிஷன். நானும் உன் இடுப்புல தான் கைவைச்சு பேசுவேன்" என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் பேசினான். ஆனால் அவன் பார்வை தானாக அவள் இடையின் பால் சென்றது.
இதை கேட்ட த்ரிஷ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. ஆனால் அவன் பேசிய விதத்தில் அவளுக்கு சிரிப்பும் பீறிட்டுகொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டாள்.
பிரபா அவள் சிரிப்பில் தன்னையே தொலைத்தான். இதுவரை அவர்கள் இப்படி ஒருநாளும் சிரித்து சகஜமாக பேசியதே இல்லை.
நின்றாள் சண்டை. நடந்தால் சண்டை. அவர்கள் பார்த்துக்கொண்டாலே சண்டை ... இப்படிதான் இருந்தது அவர்கள் உறவு
அவனுக்கு அவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த நாள் நினைவிற்கு வந்து, அவன் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு... அவன் பயிற்சியாசிரியராக வேலைசெய்த அதே நிறுவனத்தில் த்ரிஷ்யா பயிற்சி மாணவியாக பணிபுரிந்தாள்.
த்ரிஷ்யாவிற்கு பாத்திமா என்ற ஒரு தோழி இருந்தாள். அவ்விருவரும் பள்ளி பருவத்திலிருந்தே இணை பிரியா தோழிகள். ஒரே கல்லூரியில் சேர்ந்து இறுதி ஆண்டில் வளாக நேர்காணல்(கேம்பஸ் இன்டெர்வியூவில்) ஒரே நிறுவனத்தில் தேர்ச்சி பெற்று ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பும் பெற்றனர்.
அந்த நிறுவனத்தில் புதிய பணியாளர்களுக்கு ஆறு மாதகாலம் அவர்களின் பயிற்சிமையத்திலேயே தங்கவைத்து பயிற்சி தருவது வழக்கம். அவர்கள் பயிற்சி மையம் மிகவும் பெரிய பரப்பளவை கொண்டது.
அது கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்று மைசூரில் அமைந்திருந்தது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட
அந்த மையம் ஒரு சிறிய நகரம் போலவேக் காட்சியளித்தது.
அந்த பயிர்சி மையத்திற்கு வரும் புதிய பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தங்கும் விடுதி அமைத்து தரப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடும் அவ்விரு தோழிகளுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததால் பெற்றோர்களை பிரிந்த தாக்கம் அவர்களுக்கு பெரிதாக இருக்கவில்லை . இந்த நிலையில் தான் பிரபா ஒரு நாள் த்ரிஷ்யாவை சந்தித்தான்.
அன்று தான் அவ்விரு தோழிகளுக்கும் பயிற்சிக்காலத்தின் இரண்டாவது நாள். அந்த பயிற்சி வளாகத்தில் லட்சக்கணக்கான சைக்கிள்கள் பணியாளர்கள் உபயோகிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும்.
அதில் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக்கொண்டு தோழிகள் இருவரும் மகிழ்ச்சியோடு பயிற்சி தொகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். புதிய இடம் என்பதால் இருவரும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு செல்ஃபி ஸ்டிக்கை பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வடநாட்டு இளைஞன் ஒருவன் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்துகொண்டே அழைத்தான். அதுவும் சாதாரணமாக அல்ல.
"ஹே செல்ஃபி பேபீஸ்" என்று.
த்ரிஷ்யாவும் பாத்திமாவும் அவனை திரும்பி பார்த்தார்கள்.
அதற்குள் அவன் அவர்களின் அருகில் வந்துவிட்டிருந்தான். தோழிகள் இருவரும் அவன் தங்களை அழைக்காதது போல் சாலையை பார்த்து சென்றுகொண்டிருந்தனர்.
அவன் மீண்டும்,"ஹே செக்ஸி பேபீஸ் " என்று அழைத்தான்.
த்ரிஷ்ய இம்முறை நிதானமாக அவனை திரும்பி பார்த்தாள். அதே நிதானத்துடன் பாத்திமாவை பார்த்தாள். அவள் முகத்தில் குறும்பு ஏகபோகத்துக்கும் தாண்டவமாடியது.
"பாத்திமா காலைல இருந்து என்டேர்டைன்மெண்ட்ஹே இல்லனு சொல்லிட்டு இருந்தோம்ல. தோ வந்துடுச்சு பாரு". என்றாள் சிரித்துக்கொண்டே.
பாத்திமா, "ஹே வேணாம்டி... உன்னை பத்தி தெரியாம பேசிட்டான் பாவம். மன்னிச்சு விட்டிரு... பாத்தா பால்குடிக்குற பாப்பா மாதிரி இருக்கான்" என்று கூறி அவளை மலையேறவிடாமல் தடுக்க முயற்சசித்தாள்.
ஆனால் அந்த பாதகன் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டான்.
அவர்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு மேலும் சீண்ட நினைத்தான்.
"ஹே ஜிகுலீஸ். யு ஆர் சோ ஹாட்" என்றான்.
'டேய் உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல... பேசாம தப்பிச்சு ஓடிப்போயடுறா' என்று பாத்திமா தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அவளுக்கு அவன் நிலைமையை நினைத்தால் ரொம்பவும் பாவமாக இருந்தது.
அதற்குள், "அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ" என்ற கூச்சலுடன் ஒரு அலறல் சத்தம் கேட்டது. அந்த இளைஞன் தான். சைக்கிளோடு அவனும் கத்திகொண்டே கீழேவிழுந்து கிடந்தான்.
கண்மூடி திறக்கும் வேளையில் இது எப்படி நடந்தது என்று பாத்திமாவிற்கு சுத்தமாக புரியவில்லை. த்ரிஷ்யா சைக்கிளை விட்டிறங்கி விழுந்து கிடந்தவனை நோக்கி சென்றாள்.
பாத்திமா, "வேணா த்ரிஷ்யா இது நம்ம ஊரில்ல. நம்ம இங்க ஜாப் ட்ரைனிங்க்காக வந்திருக்கோம். வந்த இடத்துல தேவை இல்லாத பிரச்சனை எதுக்கு?" என்று எப்படியும் அவளை தடுக்க வேண்டும் என்று முயன்று பேசி பார்த்தாள்.
ஆனால் த்ரிஷ்யாவின் காதில் இது எதுவும் விழுந்தது போல் அறிகுறியே இல்லை. அதற்குள் அந்த இளைஞனை இருவரும் நெருங்கிவிட்டிருந்தனர்.
அப்பொழுது தான் பாத்திமா கவனித்தாள். த்ரிஷ்யா கையிலிருந்த செல்பி ஸ்டிக் அவன் சைக்கிள் வீலில் சொருகப்பட்டிருந்தது. எப்பொழுது அவள் ஸ்டிக்கிலிருந்து கைப்பேசியை வெளியேற்றினாள். எப்பொழுது அதை சொருகினாள் என்று கணிக்க முடியாத அளவிற்க்கு வேகமாகவும் துரிதமாகவும் செயல் பட்டிருந்தாள்.
த்ரிஷ்யா பின் குனிந்து அந்த ஸ்டிக்கை எடுத்து, ஏற்கனவே விழுந்த வலியால் புலம்பிக்கொண்டிருந்த அந்த வடநாட்டு இளைஞனை வெளு வெளு என்று வெளத்துவிட்டாள்.
பின் சாலை அருகில் இருந்த நடைமேடையில் சென்று அமர்ந்து கொண்டு ஸ்டிக்கை ஆட்டிக்கொண்டே
"எழுந்து வாடி என் வடநாட்டு வஞ்சரமே " என்று அழைத்தாள்.
அவள் தமிழில் பேசியது அவனுக்கு புரியவில்லை என்றாலும் தன்னை அருகில் அழைக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
"கர்பய முஜஹி சோட் தெண்" என்று ஹிந்தியில் வேண்டிக்கொண்டான்.
"என்னது சோம்பப்படி வேணுமா.? பாத்தியா பாத்திமா அடிவாங்கியும் இவனுக்கு கொழுப்பு குறையுதான்னு " என்று கேட்டால் த்ரிஷ்யா என்கிற நம் நாயகி த்ரிஷ்யமாலா .
அவன் செய்கையிலும் சொன்னத் தோரணையிலுமே தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான் என்று சிறு குழந்தைக்கு கூட புரிந்திருக்கும். ஆனால் அவள் வேண்டுமென்றே அவனை கிண்டல் செய்துகொண்டிருந்தாள்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இன்னொரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை. நம் குறும்பே உருவான கதாநாயகன் பிரபா தான்.
Uploaded files:
Quote from நலம் விரும்பி !!.. on April 25, 2020, 11:34 AMநகைச்சுவை உடன் கதை சென்று கொண்டு இருக்கிறது .. அருமை அருமை மிகவும் அருமை மோனிஷா சகோதரி அவர்களே ., வாழ்த்துக்கள் .
நகைச்சுவை உடன் கதை சென்று கொண்டு இருக்கிறது .. அருமை அருமை மிகவும் அருமை மோனிஷா சகோதரி அவர்களே ., வாழ்த்துக்கள் .
Quote from Shamili Selvaraj on April 25, 2020, 11:52 AMQuote from நலம் விரும்பி !!.. on April 25, 2020, 11:34 AMநகைச்சுவை உடன் கதை சென்று கொண்டு இருக்கிறது .. அருமை அருமை மிகவும் அருமை மோனிஷா சகோதரி அவர்களே ., வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி... நான் மோனிஷா தங்கையா இல்லனா என் கதை யாரும் இவ்வளவு ஆரவமா படிக்க மாடாங்க மோனி. அப்படி கூப்பிடுறதுல எனக்கு ஒரு சங்கடமும் இல்ல.
Quote from நலம் விரும்பி !!.. on April 25, 2020, 11:34 AMநகைச்சுவை உடன் கதை சென்று கொண்டு இருக்கிறது .. அருமை அருமை மிகவும் அருமை மோனிஷா சகோதரி அவர்களே ., வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி... நான் மோனிஷா தங்கையா இல்லனா என் கதை யாரும் இவ்வளவு ஆரவமா படிக்க மாடாங்க மோனி. அப்படி கூப்பிடுறதுல எனக்கு ஒரு சங்கடமும் இல்ல.
Quote from Aakashtony on April 25, 2020, 1:04 PMNice starting mam. But the same grasp is needed till the last episode . Many new writers have a good start but lost somewhere in the middle . Already mudichiteenga la story ya ivlo regular ah kudukreenga. Konjam Gap vidunga .
Nice starting mam. But the same grasp is needed till the last episode . Many new writers have a good start but lost somewhere in the middle . Already mudichiteenga la story ya ivlo regular ah kudukreenga. Konjam Gap vidunga .
Quote from Shamili Selvaraj on April 25, 2020, 2:33 PMGap thane vitututaa pochu. Enna oru oru varam vitudalama.
Gap thane vitututaa pochu. Enna oru oru varam vitudalama.
Quote from Aakashtony on April 25, 2020, 3:12 PMOne or 2 days sonnen . 1 week lam story maranthidum
One or 2 days sonnen . 1 week lam story maranthidum
Quote from Shamili Selvaraj on April 25, 2020, 3:40 PMAmnesia lam heroines ku thanga varanum readers ku varakoodadhu
Amnesia lam heroines ku thanga varanum readers ku varakoodadhu
Quote from Aakashtony on April 25, 2020, 4:40 PMAthu unga Kaila iruku mam . Nan enna solla vanthena just oru curiosity kudunga .
Athu unga Kaila iruku mam . Nan enna solla vanthena just oru curiosity kudunga .
Quote from Shamili Selvaraj on April 25, 2020, 6:52 PMOk
Ok