You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo-5

Quote
  1. இந்த பதிவிற்கான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் User ஆக Register செய்யாமல் Chat box ல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள இயலும். 

Happy reading😍

நன்றி

ஷாமிலி தேவ்.

 தாயின் கவலை

த்ரிஷ்யாவிற்கு பிரபா கூறியது உண்மையா பொய்யா என்று ஆராய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவளை பொறுத்தவைரையில் அவனை எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் முழுமையாக நம்பினாள்.

பிரபாவிற்கோ அவளை ஏமாற்றுகிறோம் என்று குற்ற உணர்வு அதிகமாக இருந்தது. இருந்தாலும் அவளை தக்கவைத்துக்கொள்ள வேறு வழிகிட்டவில்லை அவனுக்கு.

ஒரு காலத்தில் அவன் உண்மையே பேசினாலும் அவனை நம்பாத த்ரிஷ்ய இன்று அவன் சொல்லும் பொய்களை முழுவதுமாக நம்பி அதில் இன்பமும் அடைகிறாள் என்று நினைக்கும் பொழுது அவனுக்கு தன்னை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இந்த நிலையில் த்ரிஷ்யா அவனிடம் மீண்டும் கேள்விகணைகளை தொடுக்க தொடங்கினாள்.

"அப்பறம் செகண்ட் எப்போ நாம பார்த்துகுட்டோம்? என்ன மாதிரி சந்தர்ப்பத்துல?"

"மறுபடியுமா ஓய்... இன்னைக்கு நைட் ஃபுல்லா இப்படியே ஒட்டிடலாம்னு பார்க்கறியா... வாய்ப்பே இல்ல பேபி"

"என்னங்க பிலீஸ்ங்க பிலீஸ்ங்க"

"இன்னொரு தடவ சொல்லு"

"நாம செகண்ட் எப்போ சந்திச்சுக்குட்டோம்?"

"ஹே அதில்லை. பிலீஸ்ன்னு சொன்னியே அது "

அவள் அவனை முறைத்த முறைப்பில் "சரி சரி.. ஆனா நான் உன் கேள்விக்கு பதில் சொன்ன எனக்கு என்ன கிடைக்கும்?" என்று தர்க்கம் பேசினான்.

"இங்க நிறைய ஸ்வீட் ப்ரூட்ஸ்லாம் இருக்கு. அதெல்லாம் தரேன்" என்றாள் நமட்டு சிரிப்போடு. அவன் எதற்கு அடிபோடுகிறான் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது.

இருந்தாலும் வேண்டுமென்றே அவனை சீண்டினாள் அவன் ஆசை மனைவி.

பிரபா முறைத்துக்கொண்டே "அதெல்லாம் ஏற்கனவே எனக்கு தான் வைச்சுஇருக்காங்க... நீ என்ன குடுக்கறது... அதுல ஏதாச்சும் கை வைச்சுப்பாரு." என்றான் மிரட்டல் தொனியில்!

"அதென்ன உங்களுக்கு மட்டுமே வைச்சு இருக்காங்க.. எனக்கும் சேர்த்து தான்."

"பின்ன நீ என்ன இப்படி கேள்வி கேட்ட கொடஞ் செடுப்பன்னு அத்தைக்கு நல்லாவே தெரியும். ஐயோ பாவம் நம்ம புத்திசாலி பொண்ண சமாளிக்க நம்ம மாப்பிள்ளைக்கு தெம்பு வேணுமேனு வாங்கி வைச்சு இருக்காங்க." என்றான் சிரித்துக்கொண்டே.

பிரபாவே நமட்டு சிரிப்புடன் மேலும் தொடர்ந்தான்.

"பழம் பால் ஸ்வீட்ஸ் மட்டுமில்ல பேபி... இன்னும் ஒன்னு இருக்கு... இந்த ரூம்ல எனக்கே எனக்காக அனுப்பப்பட்ட இந்த அழகி" என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் கையை கோர்த்து அவளை தன் வசம் இழுத்துக்கொண்டான்.

அவன் இருந்த வேகத்தில் நிலைதடுமாறிய த்ரிஷ்யாவின் மனமும் தடுமாறியது.

"என்ன பேபி நான் சொன்னது கரெக்ட்டா?" என்று அவளை பார்த்துக் கண்ணடித்தான் அவள் கணவன்.

அவளுக்கு பதில் பேச நா எழவில்லை. அவள் அவன் கைச்சிறைக்குள் இருக்க முழுவதுமாக தன்னிலை இழந்திருந்தாள் அந்த பேதைப்பெண். அவளது மூளையும் அவளுக்கு உதவி புரியாமல் வேலை நிறுத்தம் செய்தது.

அவள் பேச முயன்று உதடுகளை அசைத்தாள். ஆனால் அவளால் பேசமுடியவில்லை.

"என்ன டார்லிங்.. வெறும் காத்துதான் வருதா?" என்றவனின் குரலில் நக்கல் தொனித்தது.

அவளது உதடுகளை விரலால் நீவிக்கொண்டே, "இப்போ இதுக்கு வேறவேலை இருக்கு பேபி, அது உன் மாமன் சொல்றத மட்டும் தான் கேட்க்கும்.. நீ சொல்றதெல்லாம் கேட்காது" என்று கூறி மெல்ல அவள் உதடுகளை அவனின் உதடுகளால் ஆக்ரமிக்க தொடங்கினான். அந்த இதழணைப்பில் மெல்ல மெல்ல அவனையே அவளுள் உருக்கி ஊற்றிக் கொண்டிருந்தான் .

அப்பொழுது திடீரென்று த்ரிஷ்யாவின் கண்களுக்குள் பல காட்சிகள் வரத்தொடங்கின.
அவள் காரை வேகமாக ஒட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் எதிரே தெரிந்த பைக்கில் சென்று கொண்டிருந்தவனின் மேல் வன்மத்துடன் படிந்திருந்தது.

அதற்குள் "டமார்..." என்று பயங்கரமான சத்ததுடன் அவளது கார் மோதப்பட்டு விழுந்தது.

"அஹ்ஹ்ஹ்ஹ்ஹ" என்று சத்தமாக அலறிய த்ரிஷ்யாவின் தேகம் பீதியில் நடுங்க தொடங்கியது.

பிரபா அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தான். த்ரிஷ்யா இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள். தலையில் கைவைத்துக்கொண்டு ஏதோ ஒரு கெட்ட கனவில் இருந்து விடுபட முயற்சிப்பது போல் தலையை வேகமாகி ஆட்டிக்கொண்டிருந்தாள்.

அந்த ஏசி குளிரிலும் அவளுக்கு பயங்கரமாக வியர்க்கத்தொடங்கியது.

பிரபாவிற்கு அவளை ஒரு நிலைப்படுத்துவதற்கு கூட நெருங்குவதா வேண்டாமா என்று தெரியவில்லை. தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று குற்றவுணர்ச்சியில் தவித்தான்.

எதற்காக இப்படி கத்தினாள்? ஏன் இப்படி நடுங்குறாள்? என்று எதுவும் அவனுக்கு புரியவில்லை. அவளாக தன்னை நிதான படித்துக்கொள்கிறாளா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் உடல் நடுக்கம் நிற்பதாக தெரியவில்லை.

மெல்ல அவளை நெருங்கி, "அம்மு... பேபி...ஒன்னும்... ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்ல ஒன்னும் இல்ல... இங்க வா" என்று கூறி மெல்ல அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு தலையை வருடிகொடுத்தான்.

பலவிதமான ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவளை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்தான். அந்த முயற்சி ஓரளவிற்கு பலித்தது. மெல்ல மெல்ல அவள் நடுக்கம் குறையத்தொடங்கியது.

தண்ணீர் பாட்டில் கட்டிலுக்கு அந்த பக்கம் இருந்தபடியால் அதனை எடுக்க அவளை மெல்ல அவனிடம் இருந்து பிரித்தான். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. த்ரிஷ்ய அவனை பயத்துடன் மீண்டும் நெருக்கமாக கட்டிக்கொண்டாள்.

"பிலீஸ்ங்க என்ன விட்டுபோகாதீங்க" என்று கெஞ்சத் தொடங்கிவிட்டாள். அதற்கு மேல் அவன் அவளை விட்டு விலகத்தயாராக இல்லை.

இப்படியே சிலமணிநேரம் கழிந்தது. பிரபா தன் கைவளைக்குள் இருந்த தன் மனைவியை பார்த்தான். அவள் அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு அவன் நெஞ்சில் தன் தலையை சாய்ந்து துயில் கொண்டிருந்தாள்.

பிரபா மெல்ல அசைந்து தலையணையை சரி செய்து அதில் படுத்துக்கொண்டு அவளையும் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அவனும் உறங்கத் தொடங்கினான்.

நடுநிசி வேலை. இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென்று த்ரிஷ்யா எழுந்து கொண்டு உரக்க கத்தி ஏதோ பேசத்தொடங்கினாள்.

"டேய் பிரபா என்னைக்காவது ஒரு நாள் உன்ன இந்த பில்டிங் மேல இருந்து தள்ளிவிட்டோ இல்லனா கார் ஏத்தியோ உன்ன கொல்லல என் பேர் த்ரிஷ்யமாலா இல்லடா" என்று கோபமாக கத்தினாள்.

திடீரென்று கேட்ட சத்தத்தில் பிரபா அலறித்துடித்து எழுந்துகொண்டான்.

அவன் விழித்துகொண்டு என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் த்ரிஷ்யா மேலே இன்னும் கோபமாக கத்தத்தொடங்கினாள்.

"டேய் ஃபிராடு பக்கி என்னையே பிளாக்மெயில் பன்றியா? இந்த ஆட்டம்லா இன்னும் கொஞ்சம் காலம் தான். அப்பறம் இருக்கு உனக்கு?" என்று ஆக்ரோஷமாக பேசியவன் அந்த வேகத்துடன் மீண்டும் கட்டிலில் சாய்ந்துவிட்டாள்

கிட்டத்தட்ட அவளுக்கு சாமிவந்துட்டதோ என்று பிரபா சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவளின் இந்த செயல். த்ரிஷ்யாவின் இந்த பரிமாணம் அவன் பார்த்திராதது ஒன்றும் இல்லை. பலமுறை அவனிடம் இப்படியெல்லாம் கத்தி இருக்கிறாள் தான். ஆனால் இன்று அவ்வளவு பயத்துடனும் நடுக்கத்துடனும் துயில்கொண்டிருந்தவள் திடீரென்று இப்படி எழுந்து கத்துவாள் என்று அவன் என்ன கண்டான்.

அவள் மீண்டும் உறங்கிவிட்டாள் என்று அவன் கண்டபிறகு தான் அவள் தூக்கத்தில் தான் பிதற்றினாள் என்று அவனுக்கு புரிந்தது.

"இன்னும் என்னலாம் கிறுக்குத்தனம் பண்ணபோறாளோ? ஒன்னு மட்டும் நிச்சயம். இவளுக்கு அம்னீஷியா வந்தாலும் சரி தெளிவா இருந்தாலும் சரி. நம்ம நிம்மதியா கெடுக்குற வேலைய மட்டும் கரெக்டாஹ் பண்றா" என்று புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாக அமைத்தது.

அதிகாலை வேலை.

த்ரிஷ்யாவின் தாய் சீதாபாரதியின் முகத்தில் கவலையில் சாயல் அதிகமா பரவி இருந்தது. அவர் நேற்றைய நினைவின் யோசனையில் ஆழ்ந்துவிட்டிருந்தார்.
திருமண சடங்குகள் முடிந்தவுடன் பெண் வீட்டில் சாத்திமுகுர்த்தம் நடத்துவது தான் த்ரிஷ்யா வீடு வழக்கம். அதன் படியே திருமணம் முடிந்ததும் பிரபா மற்றும் த்ரிஷ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்து செய்யவேண்டிய சம்பிரதாயங்களை நிறைவேற்றினர்.

இந்நிலையில் த்ரிஷ்யாவின் அம்மா அவளிடம் பலமுறை வேண்டிக்கொண்டது ஒரே ஒரு விஷயம் தான்.
"இங்க பார்க்குமா த்ரிஷ்யா நீ ரொம்ப குடுத்து வைச்சவ. மாப்பிள்ளையும் சரி அவங்க குடும்பமும் சரி ரொம்ப நல்ல மனுஷங்க. அவங்க உன்ன நல்ல வைச்சு பாத்துப்பாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதே மாதிரி நீயும் அவங்கள எந்த ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா வைச்சுக்கணும். புரியுதா? ஏதாவது தேவையில்லாததை பேசி உன்வாழ்க்கையில நீயே மண்ணை வாரி போட்டுக்காதமா."

த்ரிஷ்யா முகத்தில் விரக்தியுடன் கூடிய புன்னகை தவழ்ந்தோடியது.

"மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க எல்லாரும் நல்லவங்க தான். ஆனா நாம அதுக்கு தகுதியானவங்கலாமா ?" என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டே தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

"உஷ்ஷ்.... இந்தமாதிரி தான் ஏதாவது ஒளறிட்டு இருக்காதனு சொல்றேன் ... உனக்கு நான் நேத்தே சொல்லிட்டேன். மாப்பிள்ளையோட அப்பாகிட்ட எல்லாவிஷயமும் உங்க அப்பா சொல்லிட்டாரு. சமந்தி மாப்பிள்ளை கிட்ட சொல்லி இருபாருனு.... இப்போ என்ன மறைச்சுட்டாங்க இப்படிலாம் பேசுற...."

"என்ன சொன்னாங்கமா எனக்கு அம்னீஷியா வந்த விஷயத்தை மட்டுமா இல்ல எல்லாத்தையுமா?" என்று சந்தேகமும் நக்கலும் கலந்த குரலில் கேட்டல் த்ரிஷ்யா.

த்ரிஷ்யாவின் தாய்க்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவர் தலையை கவிழ்த்துக்கொண்டார்.

த்ரிஷ்யா தன் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.

"இங்க பாருங்க மா. நீயும் அப்பாவும் என்ன நெனச்சு எவ்வளவு வேதனைப்படறீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக ஒரு அப்பாவி வாழ்க்கைல விளையாட நான் தயாரா இல்ல. இன்னைக்கே நான் பிரபாகிட்ட எல்லாவிஷயத்தையும் சொல்லப்போறேன். அவர் என்ன ஏத்துக்கிட்டா சரி. இல்லனா அவர் என்ன முடிவெடுத்தாலும் அத நம்ம எல்லாரும் ஏத்துக்குட்டு தான் ஆகணும்." என்று முடிவாக சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

அவள் தாய்க்கு அன்று இரவு தூக்கம் என்பதே தூரமாகி விட்டிருந்தது. அவருக்கு பிரபாவை பார்த்தாள் அப்படி ஒன்றும் அவசரப்பட்டு தவறான முடிவெடுப்பவர் என்று தோன்றவில்லை தான். இருந்தாலும் தன் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஊசலாடிக் கொண்டிருக்கிறதே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தார்.

 

Uploaded files:
  • IMG-20200426-WA0000.jpg

You cannot copy content