மோனிஷா நாவல்கள்
Solladi sivasakthi - Episode 11
Quote from monisha on December 31, 2024, 3:54 PM11
அவன் மாயாவியோ?
கதிரவனின் வருகையால் டெல்லி மாநகரமே பரபரப்பானது. எல்லோரும் இயந்திரத்தைப் போல அதிவேகமாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சிவசக்தி உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு பலவீனமாகி இயங்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.
எத்தனை முறை சிந்தித்தாலும் அவள் மனம் அவனை நேரடியாய் சந்திக்கத் தயங்கியது. சிவசக்தி ஏற்படுத்திய குழப்பத்தால் கீதாவும் கலக்கமுற்றிருந்தாள்.
சக்திசெல்வன் காலையிலேயே சிவசக்தியை கைப்பேசியில் தொடர்பு கொள்ள, அவள் பதட்டத்தோடே அழைப்பை ஏற்றாள்.
“கம்மான் சக்தி... நாம எங்க மீட் பண்ணலாம்” என்று எடுத்ததுமே கேட்டான்.
சக்திக்கு இப்போது கொஞ்சம் பதட்டம் அதிகமானது. அவள் பதில் பேச முடியாமல் மௌனமாயிருந்தாள்.
“என்னாச்சு... நான் வேணா அங்கேயே வரட்டுமா?” என்று அவன் மீண்டும் ஆர்வம் மிகுதியால் கேட்க சக்தி அவசரமாக,
“நோ நோ” என்று உரைத்தாள்.
“என்ன சொல்லிட்டன்னு இப்போ நீ இவ்வளவு டென்ஷனாகிற?”
“நத்திங்... நாம ஈவனிங் ஆறு மணிக்கு உத்தர சுவாமிமலை கோவிலில் மீட் பண்ணலாம்” என்றாள்.
சக்திசெல்வன் யோசனையோடு,
“ஏர்போர்ட்ல இருந்து அஞ்சு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கே... அந்தக் கோவிலுக்கா?” என்று கேட்க,
சிவசக்திக்கு அவனின் கேள்வி எங்கே அவன் தன் திட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவானோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது.
சிவசக்தி யோசித்தபடி,
“என் ப்ஃரண்டு கீதா அந்தக் கோவிலுக்கு அடிக்கடிக்கி போவாளாம்... ஸோ எனக்கும் நாம அங்கே மீட் பண்ணலாம்னு தோணுச்சு” என்று சமாளித்தாள்.
“ஒகே சக்தி... அங்கயே மீட் பண்ணலாம்... அது இருக்கட்டும்… நீ என் பேரை கண்டுபிடிச்சிட்டியா?” என்று ஆவலோடு கேட்க,
“இன்னும் நாம மீட் பண்ண அரைநாள் இருக்கே... அதுக்குள்ள கண்டுபிடிச்சிடுவேன்” என்றாள்.
“உண்மையிலேயே நீ இன்னும் கண்டுபிடிக்கலயா... இல்ல என்கிட்ட பொய் சொல்றியா?” என்று சந்தேகமாய்க் கேட்டான்.
“நான் எதுக்குப் பொய் சொல்லனும்... இப்போதைக்கு என்னால கெஸ் பண்ண முடியல” என்றாள்.
“ஒகே... நாம ஈவனிங் மீட் பண்ணுவோம்... பை” என்று அவன் அழைப்பைத் துண்டித்தான்.
அவனிடம் பேசியதன் மூலமாக ஒரு விஷயம் சக்திக்குப் புரிந்தது. அவனை ஏமாற்றுவது ரொம்பக் கடினம். இருப்பினும் சக்தி தன் திட்டத்தில் பின் வாங்கப் போவதில்லை.
அவள் தன் பொருட்களை அடுக்கி எடுத்து வைத்தாள். இரவு ஏழு மணி விமானத்தில் அவள் சென்னைக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
டெல்லி உத்தர சுவாமி மலைகோவில்.
அந்தச் சிறு மலையின் மீது தமிழ் கடவுள் முருகன் வாசம் செய்து கொண்டிருந்தார். அதனை மலை மந்தர் என்றும் அழைப்பர்.
படிகெட்டுகள் ஏறி மேலே சென்று இறைவனைத் தரிசிக்கலாம் என்ற நிலையில் கீழேயே நின்றபடி சக்திசெல்வனின் தரிசனத்திற்காகச் சிவசக்தி கீதாவுடன் காத்திருந்தாள்.
கீதா சக்தியிடம், “நீ சக்தி சாரை மீட் பண்ணிட்டே போலாமே?” என்றாள்.
“நாங்க மீட் பன்றதினால் எந்தப் பயனும் இல்லை... அந்தச் சந்திப்பு சக்தி செல்வனைக் காயப்படுத்தலாம்... அதுவும் இல்லாம சக்தி எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு... அந்த உதவிக்குப் பிரதி உபகாரமாய் நான் என்றுமே செய்யக் கூடாதுன்னு நினைக்கிற விஷயங்களை அவர் எதிர்பார்த்தால்... என்னால அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாது... அப்படி இருக்கும் போது சக்தி முகத்துக்கு நேரா என் மனசில இருக்கிற அபிப்பிராயத்தைச் சொல்ல தயக்கமா இருக்கு... எனக்கு அவர் மேல ரொம்ப மரியாதை இருக்கு... நான் கொடுக்கிற லெட்டரை நீ சக்தி கிட்ட கொடுத்திரு... ப்ளீஸ்” என்றாள்.
“உன் உயிரை சக்தி சார் காப்பாத்தி இருக்காரு... நீ ஒரு நன்றிக்காகவாச்சும் அவரை”என்று கீதா சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினாள்.
“மீட் பண்ணனும்னு சொல்றியா... இல்ல காதலிக்கனும்னு சொல்றியா?” என்று புரியாதவள் போல் கேட்டாள் சக்தி.
“இரண்டுமேதான்”என்றாள் கீதா.
“நன்றி உணர்ச்சியும் காதல் உணர்ச்சியும் வேற வேற கீதா... அதுவும் இல்லாம சக்தி இதுவரைக்கும் எனக்கு எழுதின கடிதத்திலேயோ இல்ல அனுப்பிய ரோஸஸ்ல கூட லவ் யூன்னு அனுப்பியதில்ல... ஸோ நாமே எதுக்கு இப்படிக் கற்பனை பண்ணிக்கனும்” என்றாள்.
“தெரிவிச்சாதான் காதலா... சக்தி சாரோட பேச்சில உன் மேல இருக்கிற காதல் தெரியலயா உனக்கு” என்று கீதா கேட்க சிவசக்தி மௌனமாய் நின்றாள்.
சக்தியின் பிடிவாதத்தை மாற்றவே முடியாது எனக் கீதா எண்ணி கொண்டிருக்கையில் கோவில் வாசலில் ஒரு கருப்பு கார் வந்து நின்றது. கீதாவுக்கு சக்திசெல்வனை நன்றாகத் தெரியும்.
சக்தி கீதாவின் முகத்தைப் பார்க்க அந்தக் கருப்பு நிற அதி நவீன கார் கதவை திறந்து காதில் போஃனை வைத்தபடி ஒரு ஆடவன் இறங்கினான். இருவராலும் அவன் முகத்தைப் பார்க்க முடியாதபடி நின்றிருக்கக் கீதா
“இது நிச்சயமாக சக்தி சார்தான்” என்று அவனின் உடலமைப்பையும் உயரத்தையும் வைத்துக் கணித்தாள்.
அவனின் அழைப்பு சிவசக்தியின் போஃனில் சிணுங்க அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
சக்தி அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க அவள் கோவிலுக்குள் இருப்பாள் என்ற எண்ணத்தில் மேலே பிரகாரத்தை நோக்கி வந்தவனின் முகத்தை சக்தி முதன்முறை அப்போதுதான் பார்த்தாள்.
கீதாவும், “சக்தி சாரேதான்” என்று அவனைப் பார்த்த நொடியில் உறுதிப்படுத்தினாள்.
அவன் நிச்சயம் ஆணழகன்தான். அவன் பார்வையின் கூர்மையும் நடந்து சென்ற தோரணையும் சக்தியின் மனதைக் கவர்ந்திழுத்தது என்றே சொல்லலாம். அவன் நடையும் தோரணையும் பல பெண்களைத் தடுமாறச் செய்துவிடும். வெறும் சில நொடிகள் மட்டுமே பார்த்த சிவசக்தியின் விழிகள் மெய்மறந்து போனது.
ஆண்களைக் கண்டாலே வெறுப்பையும் கோபத்தையும் உமிழும் அவளுமே அசந்து போனாள் என்றால் அந்த விவரிக்க முடியாத கம்பீரத்தை நாம் என்னவென்று சொல்வது. சிவசக்தியின் புருவங்கள் நெரிந்தன.
இப்படி ஒரு ஆடவன் தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் அளவிற்கோ அல்லது பின்தொடரும் அளவிற்குத் தன்னிடம் அப்படி என்ன இருந்தது என்று எண்ணிக் கொண்டாள்.
உண்மையிலேயே அவனைப் போன்ற ஆணை நிராகரிக்க எந்தப் பெண்ணுக்கும் மனம் வராது. இருப்பினும் அவன் தன் கண் முன்னே வராமல் இருந்தது எதனால் என்று சிவசக்திக்கு புரியவில்லை.
சக்தி இப்படி யோசனையில் ஆழ்ந்திருக்க,
“இப்பையாச்சும் நீ உன் முடிவை மாத்திக்கிறியா சக்தி ?” என்று திகைத்து நின்றவளைப் பார்த்து கேட்டாள் கீதா.
“நான் கண்டிப்பா சக்தியை மீட் பண்ணவே கூடாது... தூரத்தில இருந்து பார்க்கும் போதே நான் இம்பிராஸாயிட்டேன்... நேருக்கு நேரா பார்த்தா அவன் என்ன சொன்னாலும் தலையாட்டிடுவேன்... நோ ஐ ஹேவ் டூ கோ...
நான் ரொம்பச் சாரி சொன்னேன்னு சொல்லி இந்த லெட்டரை சக்திகிட்ட கொடுத்திரு... நான் எங்கன்னு கேட்டா சென்னைக்கு ஆறு மணி பிளைட்ல போயிட்டேன்னு சொல்லி எப்படியாவது சமாளிச்சிடு கீதா... சரி பை” என்று உரைத்துவிட்டு சக்தி அங்கே அவர்க்ள் வந்த டாக்ஸியில் ஏறி விமான நிலையம் நோக்கி பயணப்பட்டாள்.
சக்தி சென்று கொண்டிருந்த கார் அதிவேகமாய்ப் பயணித்துக் கொண்டிருக்க முதல் முறையாய் ஒரு ஆடவனின் தோற்றம் அவளைத் தடுமாறச் செய்ததை அவள் மனம் ஏற்க மறுத்தது.
சில நிமிடங்களில் மலை மந்தரிலிருந்து இந்திரா காந்தி இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் வந்து இறங்கிய சக்தி தன் ஹேன்ட் பேகிலிருந்த பணத்தை எடுத்து டேக்ஸி டிரைவரிடம் நீட்டினாள். அப்பொழுதுதான் சக்தி கவனித்தாள். அவள் உள்ளே வைத்திருந்த பயணச் சீட்டை காணவில்லை.
மீண்டும் மீண்டும் எத்தனை தடவை தேடினாலும் அந்தப் பையில் பயணச்சீட்டு இல்லை. அவள் எடுத்து வைத்த ஞாபகம் இருந்த போதும் எப்படி இல்லாமல் போகும். மனம் படபடக்கத் தொடங்கியது. இதெப்படி சாத்தியம். கீதாவிடம் இருக்குமோ. சிரமப்பட்ட போட்ட திட்டமெல்லாம் வீணானதே.
'இதுவும் அவனுடைய வேலைதானோ' என்று எண்ணினாள். அந்தச் சமயத்தில் சக்தியின் கைப்பேசியில் கீதாவின் அழைப்பு. பதறியபடி எடுத்துப் பேசினாள்.
“ கீதா... ப்ஃளையிட் டிக்கேட் மிஸ்ஸிங்” என்றாள்.
கீதா மறுபுறத்தில் சிரித்துவிட்டு,
“இப்போ நீ சக்தியை மீட் பண்ணாம எப்படித் தப்பிக்கப் போற?” என்று கேட்க,
“அப்படின்னா... ப்ஃளைட் டிக்கெட்?!” என்று அதிர்ச்சியோடு வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள்.
“எனக்குத் தெரிஞ்சி ப்ஃளைட் டிக்கேட் சக்தி சார்கிட்டதான் இருக்கும்” என்றாள் கீதா.
“எப்படி முடியும் கீதா ?” என்று மீண்டும் புரியாமல் கேள்வி எழுப்பினாள்.
“எப்படி... என்னன்னு தெரியாது... ஆனா டிக்கெட் சக்தி சார்கிட்ட இருக்கு”
“நீ சக்தி செல்வனை மீட் பண்ணியா?”
“ம்... பண்ணேன்... நீ சொன்ன பொய்யெல்லாம் சொல்லி லெட்டரை கொடுத்தேன்... இந்த லெட்டருக்கு அவசியமில்ல சக்தி எனக்காக ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவான்னு சொன்னாரு... அப்போ புரியல இப்போ எப்படின்னு புரியுது” என்று கீதா இயல்பாக உரைக்க சக்திக்கு அவனின் அசாத்தியமான அறிவை எண்ணி வியக்க தோன்றியது.
சக்தி கோபத்தோடு கீதாவின் அழைப்பைத் துண்டித்தாள். அவள் கையில் கட்டப்பட்டிருந்த கடிகாரம் வேகமாய்ச் சுழல்வது போலத் தோன்ற நகத்தைக் கடித்தபடி ஏர்போர்ட் வெளிப்புறத்தில் நின்றிருந்தாள்.
இனி என்ன செய்வதென்ற அவளின் மூளை வேகமாய் வேலை செய்தது. ஆனால் வழி ஏதும் புலப்படவில்லை. இப்படி அவனிடம் சிக்கி கொள்வதற்குப் பதிலாய் நேரடியாக அவனைப் பார்த்தே தொலைத்திருக்கலாம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.
அவனைத் தான் சந்திக்கக் கூடாதெனபோட்டத் திட்டமெல்லாம் வீண். தொடக்கத்திலிருந்தே அவனிடம் நாம் தோற்றுக் கொண்டே வருகிறோம். சக்தி செல்வனின் பணமும் பதவியும் கொண்ட பின்புலமே அவனை இவ்வாறெல்லாம் செய்ய வைக்கிறது என்ற எண்ணம் அவளின் சினத்தைத் தூண்டிவிட்டது.
தான் எது செய்தாலும் அவன் யூகித்து விடுகிறானே. அவன் என்ன மாயாவியா...?
இந்தச் சிந்தனை ஏற்பட்ட மறுகணம் சிவசக்தியின் கைப்பேசியில் சக்திசெல்வனின் அழைப்பு.
சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தாள். அவன் எங்கே எப்படித் தன் கண் முன்னே தோன்றுவான் என அவளின் கண்கள் அலைபாய்ந்தன.
சிவசக்தி தயங்கியபடி அவனின் அழைப்பை ஏற்ற போது,”தேட வேண்டாம் கார் பார்க்கிங்ல பிளாக் கலர் கார்... கார் நம்பர் டிரிப்ள் ஒன்... வந்தா டிக்கெட்ஸ்... சென்னைக்குப் பறந்து போயிடலாம்... கம்மான் டியர் சக்தி” என்று சக்திசெல்வன் பளிச்சென்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் புத்திசாலியா இல்லை தான்தான் முட்டாளா என்றெண்ணி சக்தி தலையிலடித்துக் கொண்டாள். சிவசக்தியின் தேகத்தின் உஷ்ணம் குறைந்து சில்லென்று மாறியது.
தன் இதயத்துடிப்பின் சத்தத்தைத் தானே கேட்டறிந்தாள். பதட்டம் அதிகரிக்க அவளுக்கு மூச்சு முட்டியது. இப்போது அவளின் அசட்டுத் தைரியமெல்லாம் எங்கே தொலைந்து போயின.
சிவசக்தி தன் பயஉணர்வை மறைத்தபடி தைரியமாக இருப்பது போலத் தன்னை நம்ப வைத்துக் கொண்டாள். அவனை எப்படி எதிர்கொள்வதெனச் சிவசக்தி யோசித்தபடி கார் நிறுத்தம் நோக்கி நடந்தாள். காலம் வேகமாய் நகர அவளின் கால்கள் மெல்லவே நகர்ந்தன.
11