மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 14
Quote from monisha on January 4, 2025, 4:33 PM14
மீண்டும் அவன்
மீனாக்ஷி தன் மகன் சக்தி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானார். அம்மாவின் முகம் மாறி இருப்பதை அவனும் கவனித்தான். யோசனையோடு நின்றிருந்த தன் அம்மாவின் தோள்களைப் பிடித்து,
“என்னம்மா... ஷாக்காயிட்டீங்களா?” என்று கேட்டான்.
“நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதெல்லாம்” என்று மீண்டும் சந்தேகமாய்க் கேள்வி எழுப்பினார் மீனாக்ஷி.
சக்தி சிரித்துக் கொண்டே,
“உண்மையாதான் சொன்னேன்... நீங்க ஒகே சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்” என்றான் தலைகளை அசைத்தபடி!
“என் டெசிஷனை நீ எடுக்காத சக்தி” என்று இம்முறை கொஞ்சம் கோபமாக உரைத்தார்.
“மா... கூல்... இப்ப எதுக்கு டென்ஷனாகிறீங்க”என்று சக்தி தன் புன்னகை மாறாமல் உரைத்தான்.
“சக்தி... ஏற்கனவே எனக்கு நிறையப் பிரஷர்… இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி என்னை இரிடேட் பண்ணாதே...” என்றார் மீனாக்ஷி.
“மா... நான் திரும்பியும் சொல்றேன்... நான் இந்தச் சொத்து ஆடம்பரங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்... இதுவரைக்கும் என்னோட எந்த ஒரு முடிவிலயும் நீங்க தடையாய் இருந்ததே இல்லை...” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்க மீனாக்ஷி அவன் முகத்தைப் பார்த்து,
“திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு?” என்றார்.
தன் மனதில் உள்ள உண்மையான காரணத்தை மறைத்து விட்டு,
“சேலஞ்சிங்கான அனுபவம் கிடைக்கும்... எந்தவொரு பிரச்சனை வந்தாலும் பதவி, பணம் இப்படி எதுவும் இல்லாம என் திறமையை மட்டுமே கொண்டு சமாளிச்சி பார்க்கனும்... தெரியாத விஷயங்களைத் தெரிஞ்சிக்கனும்... எனக்குள்ள இருக்கிற பிரிலியன்ஸ் லெவல்... டேலன்ட் இதைஎல்லாம் நானே அனலைஸ் பண்ணனும்மா.
முக்கியமா இந்த ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு என்னால சராசரியான ஒருத்தனா வாழ முடியுமான்னு தெரிஞ்சிக்கனும்... தண்ணிக்குள்ள இருக்கிற மீன் தண்ணியை விட்டு வெளியே வந்து விட்டால் அதனால் உயிர் வாழ முடியாது.
நான் அப்படி இல்லாம எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும் வாழ பழகிக்கனும்னு நினைக்கிறேன்... ப்ளீஸ்மா வேண்டாம்னு சொல்லி என்னை டிஸப்பாயின்ட் பண்ணாதீங்க” என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு தீர்க்கமாய்ச் சொன்னான்.
“சரி சக்தி... நாளைக்கு நம்ம ஹோட்டல் இன்னாகுரேஷன்... அப்புறம் அட்மினிஸிட்டிரேஷன்... இதெல்லாம் யார் பார்ப்பாங்க... போதாக் குறைக்கு நெக்ஸ்ட் வீக் உங்க டேட் வர்றாரு, மறந்திட்டியா?” என்று கேட்டார்.
“நாளைக்கு இன்னாகுரேஷ்னல நான் கண்டிப்பா இருப்பேன்... அட்மினிஸ்டிரேஷன் எல்லாத்துக்கும் நான் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்... நெக்ஸ்ட் வீக் டேட் வர்றாருன்னு சொன்னீங்க இல்ல... எப்பவுமே நான் டேட்டை மிஸ் பண்ணுவேன்... இந்தத் தடவை அவர் என்னை மிஸ் பண்ணட்டும்” என்றான்.
இப்பொழுது மீனாக்ஷி சிரித்தபடி,
“நீ முடிவு எடுத்துட்ட... அப்புறம் நான் சொன்னாலும் நீ கேட்க மாட்ட சக்தி... கோ ஹெட்” என்று தன் மகனின் தீர்மானத்திற்குத் தலையசைத்துச் சம்மதம் சொன்னார்.
“தேங்க் யூ மா... அப்புறம் நான் எங்க போறேன்... எப்ப வருவேன்னு கவலைப் பட வேண்டாம்... என்ன பிரச்சனையா இருந்தாலும் எனக்கு மெயில் அனுப்புங்க... நான் உங்களுக்குத் தேவை படற நேரத்துல நான் உங்க பக்கத்துல இருப்பேன்... டோன்ட் வொரி...” என்றான்.
“அப்போ நீ உன்னோட செல்போனையும் எடுத்துட்டுப் போகப் போறதில்லையா?”
“இல்லமா... என்னால எந்தச் சிட்டுவேஷனையும் ஹேண்ட்ல் பண்ண முடியும்... நம்புங்கம்மா” என்றான்.
“ஐ நோ யூ வெரி வெல்... பட் ஐ மிஸ் யூ மை மேன்” என்று மகனை கட்டிணைத்துக் கொண்டார்.
அவனும் முகம் பொலிவுற ஆனந்தம் நிரம்ப, “ஐ லவ்யூ மாம்” என்று சக்தியும் உரைத்தான்.
அவர்கள் இருவரின் உரையாடல் சக்தியின் எண்ணத்திற்கு ஆதரவாகவே அமைந்துவிட்டது. மீனாக்ஷி சென்ற பின் சக்தி தன் செல்போனில் இருந்த தன் காதலியின் புகைப்படத்தைப் பார்த்தான்.
“மை டியர் சக்தி... ஐம் கம்மிங் பாஃர் யூ... எனக்குத் தெரியும்... உன் பிடிவாதமும் கோபமும் நிராகரிப்பும் பொய்... தண்ணிக்குள் இருக்கிற மீன் நான் இல்ல சக்தி... நீதான்... தண்ணியாக நான் இருக்கப் போறேன்... நான் இல்லாம போகும் போது தரையில கிடக்கிற மீன் மாதிரி நீ துடிக்கப் போறியே டியர்... சோ சேட்” என்றான்.
சக்திசெல்வன் தன் காதலால் இப்படி எண்ணமிட்டானா இல்லை கோபத்தால் இவ்வாறு எண்ணிக் கொண்டானா என்பது அவனின் முகப்பாவனையைப் பார்த்து நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.
சிவசக்தி தன்னை நோக்கி வரப் போகும் பிரச்சனையைப் பற்றி அறியாமல் வகுப்பறையில் நின்று கொண்டு அழகாகப் புடவையை நேர்த்தியாய் உடுத்தியபடி கைகளை ஆட்டி ஆட்டி முகத்தில் புன்னகையோடு பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஜெயா அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்று, கைகளால் சைகை காண்பித்து எப்போ வந்த என்று கேட்டாள். சக்தி வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கொடுத்து எழுதச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
“நேத்து நைட் வந்தேன்டி” என்று சக்தி ஜெயாவிடம் உரைத்தாள்.
“சரி சக்தி... நீ கிளாஸ் முடிச்சிட்டு வா... நம்ம பேசுவோம்” என்று சொல்லிவிட்டு ஜெயா அங்கிருந்து அகன்றாள்.
ஜெயாவின் தந்தை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் சிவசக்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா அந்தப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அரிதாக அமையப்பெற்ற வரம் போல அந்தத் தோழிகளின் பயணம் கல்லூரி வாசலைக் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருந்தது.
அலுவலக அறைக்குள் ஜெயா உட்கார்ந்திருக்க சக்தி, “ஜெயா”என்று அழைத்தபடி புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.
“சக்தி வந்துட்டியா... மேட்டரை சொல்லு” என்றாள்.
“என்ன மேட்டர்?” என்று சக்தி புரியாமல் விழிக்க,
“ஹீரோ சாரை பார்த்தியா இல்லியா?!” என்று ஆர்வம் பொங்க கேட்டாள் ஜெயா. சக்தியின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.
“நான் வராத போது என் கிளாஸ் பசங்களுக்கு நோட்ஸ் கொடுத்துட்டு போனேனே... கொடுத்தியா?!” என்று பேச்சை திசை திருப்பினாள் சக்தி
“நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற”என்று ஜெயா கடுப்போடு கேட்டாள்.
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு ஜெயா?”
“பாதிதான் கொடுத்தேன்”
“ஏன்?” என்று சக்தி அதிகாரமாய்க் கேட்க இம்முறை ஜெயா கோபம் கொண்டவளாய்,
“ஏன்டி இப்படி உசிரை எடுக்கிற?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜெயாவின் தந்தை ஜோதி கிருஷ்ணன் உள்ளே நுழைந்தார்.
வழுக்கையான தலை, கோபமாகவே இருக்கும் முகம், நெற்றியில் கோடேன வரையப்பட்ட செந்தூரம், கஞ்சி போட்ட சட்டையும் என ஆள் பார்க்கவே மிரட்டலான தோரணையோடு உள்ளே நுழைந்தார்.
எல்லாருமே அவரை ஜோதி சார் என்று அழைப்பது வழக்கம். அதனால் நாமும் அவரை மரியாதை நிமித்தமாய் அப்படியே அழைத்து விடுவோம்.
“என்ன சக்திமா... உடம்பெல்லாம் நல்லாயிடுச்சா ?” என்று உள்ளே நுழையும் போது ஜோதி சார் கேட்டுக் கொண்டே வந்தார்.
“நல்லாயிடுச்சுப்பா...” என்றாள் சக்தி இயல்பான புன்னகையோடு!
“என்னவோ ஜெயாக்கிட்ட கேட்டுக் கொண்டிருந்த போல” என்று கேட்டபடி தன் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்தார்.
ஜெயா பின்னோடு நின்று கொண்டு
“நோட்ஸ் கொடுக்கலன்னு மட்டும் சொல்லிடாத தெய்வமே” என்று பின்னோடு நின்று கொண்டு சொன்னாள்.
“என் கிளாஸுக்கு நோட்ஸ்” என்று சக்தி சொல்லிவிட்டு நிறுத்த ஜெயா,
“செத்தேன்” என்று மெலிதாக வாய்க்குள்ளேயே புலம்பினாள்.
“சொல்லு சக்தி” என்று ஜோதி சார் சக்தியை நிமிர்ந்து பார்த்து கேட்டார்.
“என் கிளாஸுக்கு ஜெயா நோட்ஸ் கொடுத்ததினால என் வேலை குறைஞ்சிடுச்சு” என்று சக்தி சொல்ல, ஜெயா பெருமூச்சுவிட்டாள்.
சில நிமிடங்கள் ஜோதி சார் சிவசக்தியிடம் உரையாடினார். அந்த அறையை விட்டு இருவரும் வெளியே வந்த பின் ஜெயா சக்தியின் கையை அழுத்தமாய்ப் பற்றி,
“ஹீரோ சாரை பாத்தியா இல்லயா... இப்போ பதில் சொல்லு?” என்றாள்.
“நீ விடமாட்டியா... இரு உங்கப்பாக்கிட்ட நோட்ஸ் விஷயத்தைச் சொல்லட்டுமா?” என்று சிவசக்தி மிரட்டினாள்.
“ஜோதி கிட்டதானே... போய்ச் சொல்லு... அதுக்கு முன்னாடி உன் மேட்டரை என் கிட்ட சொல்லு” என்று தந்தை முன்னாடி இல்லாத துணிச்சலில் ஜெயா உரைத்தாள்.
சக்தி கோபமாக, “நான் பேசாம தவிர்க்கிறேனா, அந்த விஷயத்தைப் பத்தி பேச எனக்குச் சுத்தமா விருப்பமில்லன்னு நீ புரிஞ்சிக்கோ... நான் அந்த ஹீரோ சாரை பத்தி நினைக்கவே விரும்பல... அப்புறம்தானே பேசிறதுக்கு” என்றாள்.
ஜெயாவிடம் நடந்ததைப் பற்றிச் சொன்னால் அவள் தன்னிடம் கோபித்துக் கொள்வாள் என்று சக்தி எதையும் சொல்லாமல் மறைத்தாள். ஜெயாவும் சக்தியின் கோபத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை நச்சரித்துப் பார்த்தும் அவளிடம் பதிலை வாங்க முடியவில்லை.
சில நாட்கள் கடந்து செல்ல சக்தி அவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபட்டிருந்தாள். அன்று எப்போதும் போல் பள்ளிக்கு ஆனந்தியை அழைத்துக் கொண்டு சக்தி வந்து சேர்ந்தாள். நேராக அலுவலகத்தில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட சென்றாள்.
உள்ளே அமர்ந்திருந்த ஜோதி சாரை பார்த்து, “குட் மார்னிங்ப்பா” என்றாள். ஆனால் அவர் தீவரமான யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
“அப்பா... ஏதாச்சும் சீரியஸ் இஷு ?” என்று சக்தி புருவத்தைச் சுருக்கியபடி கேட்க,
“வா சக்தி... குட் மார்னிங்” என்று அப்போதுதான் அவளைக் கவனித்து அழைத்தார்.
“ஏதோ யோசனையில இருக்கீங்க போல?”
“ஆமாம் சக்தி... சரி நீ உட்காரு சொல்றேன்... இந்தப் பயோடேட்டாவை பாரு” என்று ஒரு பைஃலை நீட்டினார்.
“யாரோடது... என்ன மேட்டர்?!” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பைஃலை வாங்கிப் பிரித்தாள்.
“ப்ளஸ் டூ மேக்ஸ் டீச்சருக்கு அட்வட்டைஸ்மன்ட் கொடுத்தோமே... அதுக்காக வந்த ரெஸ்ஸுயும்” என்று ஜோதி சார் சொல்லும் போதே சக்தி படித்து விட்டுத் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“என்ன சக்தி பண்ணலாம்... நம்ம எதிர்பார்த்த குவாலிபிஃக்கேஷனை விட இது ரொம்ப அதிகம் இல்ல... வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணவும் மனசு வரல... நம்ம கொடுக்கிற சம்பளத்துக்கு அப்பாயின்ட் பண்ணவும் யோசனையா இருக்கு... நீ என்ன சொல்ற “
“இந்த ரெஸ்ஸுயும் கொடுத்தவர் எங்கே?”
“ஆபிஸ் கேபின்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சக்திக்கு முகம் வியர்த்துக் கைகள் நடுக்கமுற்றது.
“பதில் சொல்லு சக்தி ?” என்று மீண்டும் ஜோதி சார் அழுத்தமாய்க் கேட்க சக்தி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தபடி,
“அப்பாயின்மன்ட் பண்ணாதீங்க... இவங்கள மாதிரி ஆளுங்க பெரிய வேலை கிடைச்சதும் போயிடுவாங்க... அப்புறம் நமக்குதான் திண்டாட்டம்... எக்ஸேம் நெருக்கத்தில புது டீச்சரை தேடனும்... என்னைக் கேட்ட அவாயிட் பண்ணிடுங்க” என்று சொன்னாள்.
ஜோதி சாருக்கு அவள் சொன்னது மேலும் குழப்பத்தை ஏற்படுத்த அவர், “நாம இதைப் பத்தி மிஸ்டர். சக்தி செல்வன்கிட்டயே கேட்டிருவோம்” என்று தன் முன்னே இருந்த போஃனை எடுத்துக் காதில் வைத்துப் பேசினார்.
சக்திக்கு இப்போது இன்னும் பதட்டமானது.
“ஒகேப்பா... நான் கிளாஸுக்கு போறேன்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே”மே ஐ கம்மின்” என்ற ஒரு குரல் பின்புறமாய்க் கேட்க சிவசக்தி, “திரும்பியுமா?” என்று மனதில் எண்ணியபடி அவனைத் திரும்பி நோக்க முடியாமல் தவிப்புற்றாள்.
14