You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Sree kala - நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote

வாழ்த்துக்கள் sree 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

Uploaded files:
  • You need to login to have access to uploads.
Quote

ஹாய் இது எனக்கு ஒரு புது அனுபவம்.சொன்னா கிண்டல் பண்ணக்கூடாது உண்மையாவே நான்

ஐந்தாவது படிக்கும்போது படித்த ஒற்றை கண் அரக்கன் அது தான் என்னுடைய முதல் நாவல்.

அதை படித்ததே ஒரு சுவாரசியம் தான் அம்மா பாடம் படிக்க சொல்லுவாங்க சாயங்காலம் அந்த டைம்ல டேபிள் டராவ் குள்ள கதை புக் இருக்கும் மேல பாடபுஸ்தகம் இருக்கும்.அம்மா பாக்கும்போது பாடப்புத்தகம் அப்படியாக்கா நகர்ந்தவுடன் டராவ் இழுத்து ஸ்டோரி புக்.

அப்போல்லாம் எங்களின் பொழுதுபோக்கே கதை புத்தகம் வாசிப்பே.காசு கொடுத்து எதுவும் வாங்க விட மாட்டாங்க.ஓ சி தான்.

என் தோழி ஒருத்தியின் வீட்டில் நிறைய வாரபத்திரிகையில் வரும் தொடர் கதைகளை திரட்டி பைண்ட் பண்ணி வச்சிருப்பங்கா வீட்லயே லைப்ரரி மாதிரி ரெண்டு மூணு பீரோ இருக்கும்.அவ ஆனா படிக்க மாட்டா.அவளிடம் கெஞ்சி வாங்கி படிப்பேன்.அப்படி படித்தது தான் கல்கியின் பொன்னியின் செல்வன்.கல்கியின் அனைத்து(ஓரளவு) புத்தகம் படித்தது அப்பொழுதான்.நிறைய எழுத்தாளர்களின் கதைகள் அப்படி படித்தது தான்.அகிலனின் குறிஞ்சி மலர்.புதுமைப்பித்தன் கதைகள் இவையெல்லாம் நான் வியந்து விரும்பி படித்தவைகள்.அப்பறம் காலேஜ் படிக்கும் போது தடாலடியாக விழுந்தது பாலகுமரானின் மெர்குரி பூக்கள். வாவ் என்னா எழுத்து அப்புறம் அவரின் பரம ரசிகை ஆகிட்டேன்.சுஜாதா,பட்டுக்கோட்டை பிரபாகர் சுபா ,ராஜேஷ்குமார் ராஜேந்திரகுமார் சாண்டில்யன், விமலராமணி சிவசங்கரி இந்துமதி.இவங்க எல்லாருடைய நாவலும் விரும்பி படிப்பேன்.என் கல்லூரி நாட்களில் ரமணிம்மா நாவல் சாந்தினி அப்டிங்கிற ஒரே ஒரு நாவல் தான் படிச்சிருக்கேன்.

திருமணத்திற்கு பிறகு வாரபத்திரிகை தவிர வேறு படிக்க நேரமில்லை.2012 ல் தான் செல்போன் நெட் இந்த மாதிரி விஷயங்கள் தெரிய ஆரம்பித்த தருணம்.

வாழ்க்கை அதன் போக்கில் கொண்டு இருக்கும் நேரம் 2015 என் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி என் கணவரின் விபத்து கோமாவரை

சென்றவரை மீட்டு திரும்ப என் வாழ்க்கை சீராக ஒரு வருடம் அப்போ ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் அதிலிருந்து விடுபட மீண்டும் கதை வாசிப்பு அப்போ தான் ரமணிச்சந்திரன் குழுவில் இணைந்தேன். அங்கே தான் தெரியும் நிறைய கதை எழுதும் தளங்கள்.முதலில் mm தளம் அப்புறம் sm தளம் ஸ்ரீகலா தளம் மோனி தளம் இப்படி நிறைய நிறைய இன்னமும் புது புது எழுத்தாளர்களின் எழுத்துக்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

இப்போ என் வாசிப்பு என்னை ரொம்ப புத்துணர்ச்சியா வெச்சிருக்கு.கோபம் குறைஞ்சிருக்கு.நிறைய யோசிக்க வைக்குது.எப்பவும் என் ஆல் டைம்

பேவரைட் பாரதியார் கவிதைகளும் நாவல்களுமே என்னை புத்தாக்கம் செய்யம் புத்தகங்கள்.நாவல்கள் எனக்கு கவலை தீர்க்கும் ஒரு மருந்து.

பின் குறிப்பு:எழுத்தாளர்களின் பெயர்களை குறிப்பிடாத காரணம் அவ்ளோ பேர் இருக்காங்க.யாரையாவது விட்டுவிட்டால் எனக்கு மனசு கஷ்டமாயிடும் அதான்.

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Sreekala on October 27, 2020, 9:10 PM

Excellent sree kala... உண்மையிலேயே நாவல்கள் படிக்கும் பழக்கத்திலிருக்கும் நன்மைகளை ரொம்ப அழகா சொன்னீங்க. வாசிப்பு பழக்கம் நம்மை எந்தளவு முதிர்ச்சியடைய வைக்கிறது என்பதையும் தெளிவா சொல்லி இருக்கீங்க. மிக உண்மையான வார்த்தைகள்

You cannot copy content