மோனிஷா நாவல்கள்
Srushti - Episode 11
Quote from monisha on January 4, 2023, 11:45 AM11
மேஜை மீது அடுக்கப்பட்டிருந்த பலவகையான உணவு பண்டங்களையும் அவற்றின் வாசனைகளையும் நுகர்ந்தவள்,
“வாவ் அர்ஜுன்… பார்க்கவே செமையா இருக்கு” என,
அவன் புன்னகையோடு, “வெல்கம் தியா… உட்காரு” என்றபடி அவள் உட்கார ஏதுவாக நாற்காலியை இழுத்துவிட்டான்.
“தேங்கஸ் அர்ஜுன்… நீயும் உட்காரு” என்றவள் அந்த உணவு பண்டங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க,
“எல்லாமே நம்ம தமிழ்நாட்டு உணவுதான்… சாதம் குழம்பு பொறியல் அவியல்” என்றவன் சொல்ல சொல்ல அவற்றை அவள் ஆச்சரியமாக விழி விரித்துப் பார்த்தாள்.
“நான் கேள்விப்பட்டிருக்கேன் அர்ஜுன்… முன்னெல்லாம் வெரைட்டி ஆஃப் ஐட்டம்ஸ் குக் பண்ணுவாங்களாமே… எங்க பாட்டி இருந்த டைம்ல கூட இப்படி அக்கேஷ்னலா பங்கஷ்ன்ல செய்வாங்களாம்.
பட் நான் சாப்பிட்டது இல்ல… இப்பதான் இப்படி பார்க்கிறேன்… ஆமா அர்ஜுன்… உனக்கு எப்படி இதெல்லாம் குக் பண்ணத் தெரியும்” என்றவள் அவற்றை எல்லாம் கண்களால் அளந்து கொண்டே பேச,
“ரீசன்ட்டா நான் ஃபுட் ஃபெஸ்டிவல் ஒன்னு போயிருந்தபோது… இந்த டைப் ஆஃப் ஃபுட்ஸ் பார்த்தேன்… நம்ம முன்னோர்கள் இப்படிதான் சாப்பிட்டுட்டு இருந்தாங்களாம்… குழம்பு சாதம்… சம்திங் காலட் பதார்த்தம்…
டேஸ்ட் எக்ஸலன்டா இருந்துச்சு… அங்கேதான் ரெசிப்பி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்… ஒரளவு அந்த டேஸ்ட்டுக்கு வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்”
“டே அர்ஜுன்… என்னை வைச்சு டெஸ்ட் எலியா சோதிக்கலையே?” என்றவள் சந்தேகப் பார்வை பார்க்க,
“சேச்சே இல்ல… நான் அல்ரெடி டேஸ்ட் பண்ணிட்டேன்… நல்லாத்தான் இருக்கு… நீ சாப்பிடு” என்று அவன் அவளுக்கு ஒவ்வொரு வகை உணவாகப் பரிமாறவும்,
“நானே செர்வ் பண்ணிக்கிறேன்… நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்றாள்.
“இதை சாப்பிடுறதுக்குன்னு ஒரு ஆர்டர் இருக்கு தியா… முதல குழம்பு பொறியல்… தென் ரசம்னு சாப்பிடணும்… இன்னும் கேட்டா இதை சாப்பிடவே சில ரூல்ஸ் இருக்கு” என்றவன் சொல்லிக் கொண்டே அவளுக்கு உணவுகளைப் பரிமாறினான். அதன் வாசத்தை நுகர்ந்தவளுக்கு ஏதோ புதுவிதமான உணர்வு வயிற்றுக்குள் உருவானது.
அதுதான் பசியா என்றெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதிற்கும் உடலுக்கும் அந்த உணவினை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தவள்,
“அரோமாவே ரொம்ப நல்லா இருக்கு” என்றபடி ஸ்பூனை கையிலெடுத்து உண்ண தயார் நிலையில் இருக்க,
“இந்த ஃபுட்ஸை சாப்பிட ஃபர்ஸ்ட் ரூல்ஸ் ஸ்பூன்ஸ் யூஸ் பண்ண கூடாது” என்றான்.
“ஓ மை காட்… அர்ஜுன்… அப்புறம் எப்படி சாப்பிடுறது”
“கையாலதான் சாப்பிடணும்” என்றதும் அவள் முகத்தைச் சுருக்கி கொண்டு, “கையாலயா? அது ரொம்ப கஷ்டம்” என்று நொடித்துக் கொள்ள,
“அப்படிதான் சாப்பிடனும் தியா… அப்பத்தான் அந்த ஃபீல் கிடைக்கும்… நான் சாப்பிடுறேன் பாரு… இப்படி மிக்ஸ் பண்ணி சாப்பிடணும்” என்று தன் தட்டிலிருந்த உணவை சாப்பிட்டுக் காண்பித்தான்.
“ஓ எம் ஜி” என்றவள் தன் கரத்தைப் பார்த்துக் கொண்டு தயங்க,
“சாப்பிடு தியா… ஒன்னும் ஆகாது… அந்தக் காலத்துல எல்லாம் இப்படிதானே சாப்பிட்டாங்க” என்றவன் சொல்லவும் அவளும் அவன் உண்பது போலவே உண்ண முயற்சி செய்தாள்.
அந்த உணவின் ருசி ஒரு மாதிரி புதிதாக இருந்தது. தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு சென்றது. எப்போதும் காய்ந்த ஏற்கனவே சமைத்த உணவுகளை உண்ட போது ஏற்பட்ட உணர்வும் இப்படி குழம்பில் உணவைப் பிசைந்து சாப்பிடும் உணர்வும் முற்றிலும் வேறாக இருந்ததாகத் தோன்றியது.
தியா ஆச்சரியத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து, “நல்லா இருக்கு அர்ஜுன்… நைஸ் ஃபீல்” என்று அடுத்தடுத்த கவளங்களை உள்ளே போட்டுக் கொண்டாள்.
முதலில் கைகளில் சாப்பிட சிரமமாக இருந்த போதும் அவளுக்கு அவ்விதம் சாப்பிட பிடித்திருந்தது.
உணவகங்களில் அவள் பன்னாட்டு வகையான உணவுகளை உண்டிருக்கிறாள். ஆனால் இது போன்று ருசியில் சாப்பிடுவது இதுதான் முதல் முறை. தொண்டைக்கும் வயிற்றுக்கும் ஏதோ புதிதாகத் தொடர்பு ஏற்பட்டது போல அவளுக்குத் தோன்றிற்று.
இருவரும் உண்டு முடித்து கை அலம்பி வர தியா அவனிடம்,
“ரொம்ப ஹெவியாகிட்ட மாதிரி பீலாகுது அர்ஜுன்” என்றபடி சோஃபாவில் சாய,
“நமக்கு இப்படி எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லயில்ல அதான்… ஆனா இதெல்லாம் ஈஸியா டைஜஸ்ட் ஆகிடுற ஃபுட்தான்” என,
தியா திகைப்புடன், “அப்பெல்லாம்… டெயிலி இவ்வளவு ஐட்டம் சமைச்சு… இதுபோல சாப்பிடுவாங்களா அர்ஜுன்” என்று வினவினாள்.
“அதெல்லாம் விவசாயம் செழிப்பா இருந்த காலம் தியா… இப்போ எங்கே… கான்க்ரீட் பில்டிங் மேல்தானே நம்ம காய்கறித் தோட்டமே வைச்சு இருக்கோம்.
அதுவும் இல்லாம… சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சு சாப்பிட்டுட்டு இருந்த காலமும் ஒன்னு உண்டு… அப்ப எல்லாம் ஒவ்வொரு சாப்பாடும் ஒவ்வொரு மாதிரி டேஸ்ட்ல இருக்குமாம்… நான்-வெஜ்ல கூட இந்த மாதிரி குழம்பு வெரைட்டிஸ் இருக்காம்”
“சீரியஸ்லி”
“ம்ம்ம்… ஆனா இப்போ விவசாயம் பெருசா இல்லாததால இந்த மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் கிடைக்கிறதே இல்ல… நம்ம சாப்பிடுற ஐட்டம் எல்லாமே ரெடிமேட் அன் இன்ஸ்டன்ட் ஃபுட்ஸ்தானே… அதுவும் எல்லாமே ஒரு மாதிரி ட்ரை ஃபுட்ஸ்… ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகள்… அதுல இந்த மாதிரி டேஸ்ட் ஸ்மெல் எல்லாம் வரவே வராது…
இப்போ ரீஸன்ட் டேஸா உடம்புக்கு எனர்ஜி கொடுக்குற கார்ப்போஹைட்ரேட் ஃபேட் ப்ரோடீன் மாத்திரைகள் எல்லாம் மார்கெட்டுக்கு வர போறதா சொல்லிட்டு இருக்காங்க… இப்படியே போனா சாப்பாடு ஒன்னு இல்லாம போய் மாத்திரைகள் அந்த இடத்தைப் பிடிச்சுக்கும்… நமக்கு அடுத்தடுத்த ஜெனரேஷன் சாப்பாடட்டையே ஆச்சரியமா பார்க்கவும் வாய்ப்பிருக்கு”
“உண்மைதான் அர்ஜுன்… நம் எல்லா வளங்களையும் அழிச்சிட்டு என்ன மாதிரி வாழ்க்கையை நோக்கி ஓடுறோம்னே எனக்கு புரியல”
“இப்படியே ஓடிக்கிட்டே போய் முட்டு சந்துல முட்டிக்கிட்டு நிற்க போறோம்” என்றவன் சொல்ல தியா சிரித்து,
“ஆமா இதை எல்லாம் சமைக்க உனக்கு ரொம்ப டைம் தேவைப்பட்டிருக்கும் இல்ல” என்று கேட்டாள்.
“ம்ம்ம்… நிச்சயமா… இந்த டைப் ஆஃப் ஃபுட்ஸ் செய்ய நிறைய பொறுமையும் நிதானமும் வேணும்… இன்க்ரிடியன்ட்ஸ் கூட அவ்வளவு ஈஸியா கிடைக்கலனா பார்த்துக்கோயேன்… இதெல்லாம் தேடித் தேடி வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு” என்று சொல்லிவிட்டு,
“மொத்தத்துல அப்ப இருந்த மக்கள் சமையலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை… நேரத்தை நம்ம கொஞ்சம் கூட கொடுக்கல” என்று முடிக்க,
“எங்கே… நாமதான் வீட்டுல சமைக்கிறதே இல்லையே” என்றாள் தியா.
“ஆனா குக்கிங்தான் வார்ல்ட் லெவல்ல சக்ஸஸ்ஃபுல் ப்ரோஃபஷன்” என்று சொல்லி சிரித்த அர்ஜுன் மேலும்,
“ஆனாலும் அப்ப இருந்த மாதிரி உணவு ரசனையா சமைக்கப்படுதான்னு கேட்டா நோதான்… யு நோ வாட்… நாம ருசிச்சு சாப்பிடுற உணர்வை எல்லாம் தொலைச்சதாலதான்… மனுஷனுக்குள்ள இருக்க உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டு வருதுன்னு ஒரு மனநல ரிப்போர்ட் சொல்லுது” என்றான்.
“ஏன் அர்ஜுன்… நம்ம ஜெனரேஷன் எல்லா நல்ல விஷயத்தையும் இப்படி தொலைச்சிட்டு இருக்கோம்” என்று தியா வருத்தத்துடன் கேட்க,
“ஒவ்வொரு டைம் பீரியட்லயும் இப்படி எதையாவது ஒன்னு தொலைச்சிட்டுதான் மனுஷன் வந்திருக்கான்” என்றான் அர்ஜுன்.
“எனக்கென்னவோ இந்தத் தடவை மனுஷன் தன்னையே தொலைச்சிடுவான்னு தோனுது அர்ஜுன்… மொத்தமா மனுஷன்ல இருந்த மிஷினா ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகிட்டு இருக்கான்… எமோஷன்ஸ் கொன்னுட்டு இருக்கான்…
உண்மையைச் சொல்லணும்னா மனுஷன் செய்ய வேண்டிய வேலையை ரோபோட்ஸ் கிட்ட கொடுத்துட்டு ரோபோட்ஸ் செய்ய வேண்டிய வேலையைதான் நம்ம செஞ்சிட்டு இருக்கோம்” என்ற தியாவின் முகத்தில் படர்ந்திருந்த கவலையை அர்ஜுன் கூர்ந்து கவனித்தான்.
பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியாகிவிட, “தியா” என்று அர்ஜுன் அவள் தோள்களைத் தொட்டான்.
அவள் தலையை உலுக்கிக் கொண்டு தன் சிந்தனையிலிருந்து ஒருவாறு மீண்டு வந்தவளாக, “தேங்க்ஸ் அர்ஜுன்… டின்னர் நல்லா இருந்துச்சு… ஆக்சுவலி நான் இப்படி ஒரு டின்னரை எதிர்பார்க்கல… இட்ஸ் கிரேட்” என்றபடி அவள் எழுந்து கொள்ள,
“தியா நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்று அர்ஜுன் ஆரம்பிக்க,
“என்ன?” என்றவள் புரியாத பார்வை பார்த்தாள்.
“அது… நீ சிருஷ்டி மேல போட்டிருக்க கேஸ் விஷயமா?” என்றவன் சொன்ன மறுநொடி,
“அர்ஜுன் ப்ளீஸ்…. நிறைய பேர் இது விஷயமா நிறைய நிறைய அட்வைஸ் பண்ணிட்டாங்க… நீயும் வேண்டாம்” என்றாள்.
“நான் அட்வைஸ் பண்ண நினைக்கல தியா… உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்றவனை சலிப்புடன் பார்த்தவள்,
“வேண்டாம் அர்ஜுன்… நான் பார்த்துக்கிறேன்… தேவையில்லாம உனக்கு எதுக்குப் பிரச்சனை” என்றாள்.
“நான் ஒரளவு உன் கேஸை பத்திக் கேள்விப்பட்டேன் தியா… நீ வக்கீலுக்காக அலைஞ்சிட்டு இருக்கிறதையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன்.
அப்பத்தான் எனக்கு ஒரு தாட்… இந்த மாதிரி ரோபோட்ஸ் எதிரா கேஸ் போட்டு நடத்தின வக்கீல்கள் பத்தி ஸர்ச் பண்ண போது மும்பைல ஒரு வக்கீல் பத்தின டீடைல்ஸ் கிடைச்சது… பேர் ரஸல்… அவரும் இந்த மாதிரி ரோபோட்ஸ் மொத்தமா மனுஷனோட இடத்தை ஆக்கிரமிச்சுக்கிறதைக் குறித்த சமூக நல வழக்குப் போட்டு நடத்தி இருக்காரு.
அவருக்கு நம்ம கேஸ் பத்தி மெஸேஜ் அனுப்பினேன்” என்றதும் தியா ஆச்சரியப்பட்டுப் போனாள்.
“அர்ஜுன்”
“இரு இரு நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல” என்றவன் மேலும், “ரஸல் நம்ம கேஸை எடுத்துக்கிறதா ரிப்ளை பண்ணி இருக்காரு” என்றதும் அவள் வியப்பின் விளம்பில்,
“உண்மையாவா அர்ஜுன்” என்று கேட்க அவன் ஆமென்று தலையசைத்து அந்தத் தகவலை அவளுக்குக் காண்பித்தான். அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.
“நீ என்னை எப்படி நினைக்கிறேன்னு தெரியல… ஆனா நான் உன்னை என் ஃப்ரண்டாதான் நினைக்கிறன்… இன்னும் கேட்டா அதுக்கும் மேலா… அப்படியிருக்கும் போது உனக்கொரு பிரச்சனைனா அது எனக்குமேதான் தியா” என்றவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“தேங்கஸ் அர்ஜுன்… தாங்க்யூ ஸோ மச்” என்றபடி அவனைக் கட்டியணைத்துக் கொள்ள,
“நண்பர்களுக்குள்ள தாங்க்ஸ் சொல்ல கூடாது தியா” என்றான் அவன்.
“எனக்கு வேறென்ன சொல்றதுன்னு தெரியல”
“ஐ லவ் யூ அர்ஜுன்னு சொல்லு” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள், “நீ எப்போ கமிட் ஆக போற அர்ஜுன்” என்று கேட்கவும் அவன் முகம் சோர்ந்து போனது.
“ட்ரை பண்ணிட்டு இருக்கேன்… ஒன்னும் வொர்க்அவுட் ஆகல” என்று அவன் கடுப்புடன் சொல்ல, புன்னகையுடன் ஏறிட்டவள், “ஆகும் ஆகும்… அப்போ நான் கண்டிப்பா உனக்கு ஐ லவ் யூ சொல்றேன்” என்றாள்.
‘அதானே’ என்றவன் வாயிற்குள் முனங்க, “இப்போ என்ன சொன்ன?” என்றவள் அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள்.
“அது… ரஸல் நாளைக்கு நமக்கு அப்பாய்ன்மெண்ட் கொடுத்திருக்காரு… நாம நாளைக்கு அவரைப் போய் மீட் பண்ண போகணும்” என்றவன் சொல்ல, “ஓ ஷுர்” என்றாள் அவள் உற்சாகத்துடன்.
அத்தனை நேரம் அவள் முகத்திலிருந்த சோர்வெல்லாம் மறைந்து அவளிடம் தனி உற்சாகம் தொற்றிக் கொண்டதை கண்ட அர்ஜுன் மனம் நிம்மதி பெற்றது. அவனுக்கு அதுதான் தேவை.
11