மோனிஷா நாவல்கள்
Srushti - Episode 7
Quote from monisha on January 4, 2023, 11:40 AM7
சிருஷ்டி. ஆர்ட்டிஃபிஸியல் இன்டெலிஜன்ஸில் நிறைய புதுமைகளையும் சாதனைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த நிறுவனம். அதுவும் இந்தியாவிற்குள் மனித வடிவிலான ரோபோட்களைக் கொண்டு வந்ததில் சிருஷ்டியின் பங்கு அளப்பறியது.
முதலில் தொழிலகங்களில் வேலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் நாளடைவில் வீடுகளுக்குள்ளும் தஞ்சமடைய தொடங்கின. வீட்டு வேலைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை மெல்ல மெல்ல செல்லப்பிராணிகளின் இடங்களைப் பிடித்துக் கொண்டன.
மற்ற நாடுகளில் மிக விரைவாகவே தொடங்கிவிட்ட இத்தகைய ரோபோடிக் கலாச்சாரம் இந்திய நாட்டில் கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்புடன் இருந்த குடும்ப அமைப்புகளின் காரணங்களால் சற்றுத் தாமதாமாகவே உள்புகுந்தது. ஆனால் மிக விரைவாக அது மனிதனின் இடத்தைப் பூர்த்தி செய்ய தொடங்கியது.
ஆனால் சிருஷ்டியின் சிஷு ஒரு படி மேலாகப் போய் மனித இனத்தையே ஆதிக்கம் செய்ய ஆரம்பித்திருந்தது யார் கவனத்தையும் எட்டவில்லை. அது மெல்ல மெல்ல அடுத்த சந்ததிகளை தம் கைவசம் கொண்டு வந்ததோடு அல்லாமல் மனித உணர்வுகளைக் கொன்று கொண்டிருந்தது.
சிஷுவிடம் வளர்ந்த பிள்ளைகள் சைக்கோவாக அல்லது உணர்வுகளற்ற இயந்திரங்கள் போல நடந்து கொள்வதாக வந்த புகார்களை சிருஷ்டி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
மேலும் நடக்கும் சிறுவர் சிறுமியர் தற்கொலைகளுக்கு ஆதாரப்பூர்வமாக சிஷுதான் காரணம் என்று நிருபிக்கப்படாததால் சிருஷ்டி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு வெறும் வதந்தி என்றாகிவிட்டது.
இந்நிலையில்தான் தொடர்ந்து நிகழும் குழந்தைகளின் தற்கொலைக் குறித்து இணையத்தில் பகிரப்பட்ட காணொளி பதிவு ஒன்றை தியா பார்க்க நேர்ந்தது.
இயந்திரத்தனமான வாழ்க்கை முறையால் சிறுவர் சிறுமியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் மனித உணர்வுகளுக்கும் இயந்திரத்தனத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
தன் மகளின் மனநிலையும் இப்படிதான் இருந்திருக்குமோ என்று யோசிக்கும்போதே தியாவின் மனம் பதைபதைத்தது. ஒரு தாயாக தான் தன் கடமையைச் செய்ய தவறிவிட்டோம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அவளை அதிகமாக அலைகழித்தது.
அவளின் இத்தகைய மனநிலையால் எரிச்சலுற்ற கரண் அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். அவர்கள் உறவில் விரிசல் விட தொடங்கியிருந்தது.
இருவருக்கும் இடையிலும் பேச்சு வார்த்தைகள் நின்று மூன்று வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் கரண் அன்று கடுங்கோபத்துடன் வீட்டிற்கு வந்தான்.
“என்ன செஞ்சு வைச்சு இருக்க தியா நீ” என்றவன் உள்ளே நுழைந்ததும் தியாவிடம் கத்த, அவள் புரியாமல் விழித்தாள்.
“உன்னைதாண்டிக் கேட்குறேன்” என்றவனின் சீற்றத்தைப் பார்த்து,
“என்ன பிரச்சனை கரண்… எதுவா இருந்தாலும் பொறுமையா பேசு” என்றாள்.
“சிருஷ்டி மேல கேஸ் ஃபைல் பண்ணி இருக்கியா?” என்றவன் கோபமாகக் கேட்க, “ஆமா” என்றவள் அலட்சியமாகப் பதிலளித்தாள்.
“ஓ! ஷிட்” என்று தலையில் கை வைத்துக் கொண்டவன், “இதனால என்ன மாதிரி விளைவை எல்லாம் நாம ஃபேஸ் பண்ண வேண்டி வரும்னு தெரியுமா?” என்று அவன் சொல்ல,
“என்ன வந்தாலும் நான் இந்த விஷயத்துல பின் வாங்குறதா இல்ல” அவள் முடிவாகச் சொல்ல,
“ஆர் யு மேட் ஆர் வாட்? இது ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் இல்ல… சிருஷ்டி மாதிரி ஒரு கார்ப்ரேட் கம்பெனியை எதிர்த்துகிட்டு எல்லாம்… நம்மால ஒன்னுமே பண்ண முடியாது” என்று அவளிடம் சொன்னவன்,
“தியா… முதல போய் கேஸை வாபஸ் வாங்கு” என்றான்.
“என்னால முடியாது”
“எனக்கு மேலிடத்துல இருந்து பிரஷர்… நீ இந்த கேஸை வாபஸ் வாங்கலன்னா என் வேலையே போயிடும்”
“லித்துதான் நம்மோட பியுச்சர்… அவளே போயிட்டா… வேலை என்ன பெரிய வேலை… போகட்டுமே” அவளின் அலட்சியமான வார்த்தைகளில் கொந்தளித்தவன்,
“போகட்டுமா? என்ன விளையாடிட்டு இருக்கியா? யாரைக் கேட்டு நீ கேஸ் ஃபைல் பண்ண… என்னை ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்கு தோனலயா?” என்றான்.
“நான் ஏன் உன்கிட்ட கேட்கணும்… அது என்னோட டெசிஷன்… என் பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்க நான் விடமாட்டேன்… சிஷு எப்படியாவது நம்ம நாட்டுல இருந்து நான் போக வைப்பேன்”
“முட்டாள்தனமா பேசாதே தியா… நீ நினைக்கிறது நடக்காது”
“நடக்கும்… நான் நடக்க வைப்பேன்”
“தியா” என்றவன் கோபமாகக் குரலையுயர்த்த,
“நான் இதுல இருந்து பின்வாங்க மாட்டேன் கரண்” என்றாள் உறுதியாக.
“அப்படினா… நானும் கேஸ் ஃபைல் பண்ணுவேன்… டிவோர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணுவேன்” அவன் நேரடியாக மிரட்டினான்.
அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள் தன் கண்களிலிருந்து வெளியேறிய கண்ணீரை உள்வாங்கிக் கொண்டு, “கோ அஹெட்” என்றாள்.
அவள் சட்டென்று சம்மதித்ததில் அவன் முகம் இருளடர்ந்து போக,
“ஓ! அந்த அர்ஜுன் வந்துட்டதால இப்போ நான் உனக்கு தேவையில்லாதவன் ஆகிட்டேன்… அப்படிதானே” என்று கேட்டுவிட அத்தனை நேரம் திடமாகப் பேசிக் கொண்டிருந்த தியா அவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடைந்து அமர்ந்துவிட்டாள்.
மிக சுலபமாகப் பெண்களைக் காய்ப்படுத்த ஆண்கள் பிரயோகிக்கும் வழிமுறை அது.
கரண் தான் பேசிய வார்த்தைகள் குறித்து கொஞ்சமும் வருந்தவில்லை. இம்முறை தியாவே தவறு செய்ததாக ஆணித்தரமாக நம்பினான். அவள்தான் இறங்கி வர வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தான். ஆனால் அது நிகழாத பட்சத்தில் அடுத்த வாரமே தியாவிற்கு டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பிவிட்டிருந்தான்.
அலுவலகத்தில் தியாவிற்கு வேலையே ஓடவில்லை. பதினைந்து வருட தாம்பத்ய வாழ்க்கை அவ்வளவுதானா? சுற்றத்தார் எல்லாம் பெருமைப்படுமளவுக்கு வாழ்ந்த தம்பதிகள் அவர்கள்.
சிறந்த ஜோடிக்கான எடுத்துக்காட்டாக அவர்களைதான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் அத்தனை வருட உறவு மிக சுலபமாக முடிந்துவிடப் போகிறது. இத்தனை நாளாக லித்திக்காவால்தான் தங்கள் உறவு ஒட்டிக் கொண்டிருந்ததா?
தியாவால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவள் ஒரு கையெழுத்துப் போட்டால் அவர்கள் உறவு முறிந்துவிடும். ஆனால் அதில் அவளுக்கு உடன்பாடில்லை.
யாரிடமும் அவளால் இயல்பாகப் பேச முடியவில்லை. நேகா அவள் தோள்களைத் தொட்டு, “டைமாச்சு தியா… கிளம்பலாம்” என்று சொல்ல,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் முடிச்சுட்டு வரேன்” என்றாள்.
“நாளைக்கு முடிச்சுக்கலாமே” என்ற நேகாவின் வார்த்தைகளை அவள் பொருட்படுத்தவில்லை. வீட்டிற்குச் சென்றால் கரணுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நிகழலாம்.
அந்தக் கவலையுடன் அலுவலகத்தில் கணினி திரையை வெறித்து கொண்டு நேரத்தைக் கடத்தினாள்.
“தியா” என்று அர்ஜுன் சில முறைகள் அழைக்கவும் நிமிர்ந்தவள்,
“நீ இன்னும் கிளம்பலயா அர்ஜுன்” என்று கேட்டு அவனை ஆச்சரிய பார்வை பார்க்க,
“நீ தனியா இருந்த… அதான் உன்னை விட்டுட்டுப் போக மனசு வரல” என்றான்.
“வெளிநாட்டுல வேலை கிடைச்சதும் என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போனவன்தானே நீ… இப்ப மட்டும் புதுசா என்ன? விட்டுட்டுப் போக மனசு வரல” என்றவள் அவனைக் குத்தலாகக் கேட்க,
“யாருடி உன்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போனது… நீதான்டி நான் போனதும் என்னைத் தூக்கிப் போட்டுட்டு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழுற” என்று அவன் சீற்றமாக பதில் கேள்வி கேட்டான்.
“இப்ப என்ன சொல்ல வர… வேலைதான் முக்கியம்னு என்னை விட்டுட்டுப் போன உன்னையே நினைச்சிட்டு தனியா வாழ்ந்திட்டு இருக்கணும்னு சொல்றியா?”
“நான் வாழ்ந்திட்டு இருக்கேனே… இப்ப வரைக்கும் உன்னையும் உன் காதலையும் நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கேனேடி”
“ஓ! அதுக்கு இப்ப நான் என்ன பண்ணணும்… என் ஹஸ்பெண்டை டிவோர்ஸ் பண்ணிட்டு உன் பின்னாடி வந்துடணுமா” என்றவள் பட்டென்று கேட்டுவிட,
“ஷட்அப் தியா… நான் ஒன்னும் அப்படி சொல்லல” என்றவன் கோபமாகக் கத்தினான்.
“நீ சொல்லல… ஆனா உன் மனசுல அப்படியொரு எண்ணம் இருக்கு… அதான் நீ தேடி வந்து என் ஆஃபிஸ்ல வேலைக்கு சேர்ந்திருக்க… என் ஃபேமிலி லைஃப்ல குழப்பம் பண்றதுக்காக வந்திருக்க”
“தியா போதும்… திஸ் இஸ் யுவர் லிமிட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே… உனக்கென்ன நான் இந்த ஆஃபிஸ்ல இருக்க கூடாதா? ஃபைன்… நான் போயிடுறேன்… உன் கண்ணுல படாத தூரத்துக்குப் போயிடுறேன்” என்றவன் விறுவிறுவென அங்கிருந்து அகன்றுவிட்டான்.
தியா தொய்ந்து மேஜை மீது சாய்ந்துவிட்டான். தன்னுடைய பிரச்சனையை தான் அவன் மீது காட்டிவிட்டோம் என்று அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.
அர்ஜுன் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் சிறு கண்ணாடி குவளையில் விஸ்கியை உள்ளிறக்கிக் கொண்டிருந்தான். திகுதிகுவென எரிந்து கொண்டிருந்த உள்ளத் தீயை அணைக்க அந்தப் போதை உதவியாக இருக்கும் என்று எண்ணினானோ? ஆனால் நேருக்கு மாறாக அவன் மனதின் வெம்மையை அதிகரித்து கொண்டுதான் இருந்தது.
அந்த விஸ்கி பாட்டிலை மானசீகமாக அவளாகவே கற்பனை செய்து கொண்டு, “எப்படிறி என்னைப் பார்த்து அப்படி கேட்ப… எப்படி கேட்ப… நான்… நான் உன் வாழ்க்கையை நாசமாக்க வந்தேனா… நீதாண்டி நீதான் என் வாழ்க்கையை நாசமாக்கிட்டுப் போனவ” என்று புலம்பித் தீர்க்க, வாயிலின் அழைப்பு மணியோசைக் கேட்டது.
மெல்ல தட்டுத் தடுமாறி எழுந்து அவன் கதவைத் திறக்க தியா நின்றிருந்தாள். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
“தியா” என்று கண்களை மூடி சில முறைகள் அவள்தானா என்று உற்றுப் பார்க்க,
“உள்ளே வரலாமா அர்ஜுன்” என்று கேட்டாள்.
அவளேதான். அவன் திகைப்புடன், “தியா… நீ என் வீட்டுக்கு…” என்று வினவிக் கொண்டே அவன் அவள் உள்ளே வர வழிவிட, “குடிச்சுட்டிருந்தியா அர்ஜுன்… உன்கிட்ட சொல்லாம வந்து உன் ப்ரைவசியை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றாள்.
“ஏ நோ… யுவர் ஆர் மோஸ்ட் வெல்கம்… நீ எப்ப வேணா என் வீட்டுக்கு வரலாம்” என்றவன் சற்றே தள்ளாட்டத்துடன் பேச,
“ரொம்ப குடிச்சிருக்கப் போல” என்று விசாரிக்க,
“நோ நோ… ஜஸ்ட் எ ஸ்மால்…” என்று பேசிக் கொண்டே அவன் தள்ளாடி விழப் போக அவன் கரத்தைப் பற்றிக் கொண்டவள்,
“ம்ம்ம்… நிறைய ஸ்மால் உள்ளே போயிருக்குதான்” என்று கேலியாகக் கேட்டுக் கொண்டே அவனை சோஃபாவில் அமர வைத்தாள். அவன் விழிகள் அவளையே பார்த்து கொண்டிருந்தன. இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை.
அவள் தன் வீட்டில் இருக்கிறாள். அதுவும் தன்னருகில் இருக்கிறாள் என்பதை ஆச்சரியத்துடன் அவன் பார்த்திருக்க, “இதுக்கு மேல வேண்டாம்… போதும்” என்று மேஜை மீதிருந்த விஸ்கி பாட்டில்களை ஓரமாக வைத்தாள்.
அரைகுறை போதை நிலையிலேயே நடப்பதைப் பார்த்து கொண்டிருந்தவனுக்கு மயக்கமா உறக்கமா என்று இருநிலைக்கும் இடையில் அவன் நினைவில் எதுவும் சரியாகப் பதியவில்லை.
காலை விழித்தெழுந்ததும் இரவு நடந்ததெல்லாம் கனவு போலதான் இருந்தது.
‘அவள் வந்தாளா? அவள் உண்மையிலேயே தன்னைப் பார்க்க தன் வீட்டிற்கு வந்தாளா’ என்று குழம்பியவன்,
‘இருக்காது… அதெல்லாம் கனவு’ என்று முகத்தைத் துடைத்து தன் படுக்கையறை விட்டு வெளியே வந்தவன் வியப்பில் நின்றுவிட்டான்.
சோஃபாவில் அமர்ந்திருந்த தியா அவனைப் பார்த்ததும், “குட்மார்னிங் அர்ஜுன்” என்று புன்னகை பூக்க, அவனுக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை.
7