You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Uruguthe Ullam Negizhuthe Nenjam - Final

Quote

அத்தியாயம் 22

 

அழகான பொழுதுகள்

இனிய தருணங்கள்

எதிர்பாராது கிடைத்த தோழமைகள்

பாதுகாவலனாய் கிடைத்த நண்பர்கள்

தோள் சாய கிடைத்த தோழிகள்

அடித்த லூட்டிகள்

மேற்கொண்ட பயணங்கள்

உழைப்பிற்கு கிடைக்காத அங்கீகாரங்கள்....

துரோகத்தின் வலிகள்

நிறைவேறா கனவின் வேதனைகள்

பிரிவின் துயரங்கள்

இவை அனைத்திலும் உழன்று

வாழ்க்கை பாடத்தை பயின்று

கடந்து வந்திருக்கிறோம் நாம்

நம் அலுவல் பயணத்தில்.....

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

அந்த மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒரு அறையிலுள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் வாணி எழுத்துப் பலகையில் முன் நின்றுக்கொண்டு எதையோ விளக்கிக் கொண்டிருக்க, அவளின் மற்றைய சகப் பணியாளர்கள் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

"And that's how I solved the issue for which I got appreciation from the clients" எனக் கூறி அவள் தன் உரையை முடிக்க,

அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கான்ஃபரன்ஸ் ஹாலிலிருந்து கலைந்து அனைவரும் வெளியே வர, அந்நேரம் பணிக்கு வந்த அவளின் சகப்பணியாளினி, "ஹேய் வாணி... வந்துட்டியா... வெல்கம் பேக் டூ இந்தியா" எனக்கூறி அவளின் கையைக் குலுக்கி பேசிக்கொண்டிருக்க, அவர்களின் அருகினில் நின்று வாணியைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்தனர் இருப் பெண்கள். அந்த ப்ராஜக்டிற்கு புதிதாய் சேர்ந்தப் பெண்கள் அவர்கள்.

"ஆளுக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லைனு சொல்றது உண்மை தான் போல" என ஒருவள் மற்றவளிடம் கூற,

"ஏன்டி அப்படி சொல்ற??"

"மதுவைப் பாரேன் எவ்ளோ சின்னவங்க மாதிரி இருங்காங்க... தனியா சிங்கப்பூர் போய் த்ரீ மன்த்ஸ் தங்கி இருந்து ப்ராஜக்டுல வந்த க்ரிட்டிக்கல் இஸ்யூவை சால்வ் செஞ்சி க்ளைண்ட் அப்பிரிசியேஷனோட தன்னோட ஆன்சைட்ட முடிச்சுட்டும் வந்துட்டாங்க... நம்மளும் இப்படிலாம் முன்னேற முடியுமாடி" என ஆச்சரியமாய் வாணியைப் பார்த்து கேள்வியாய் தன் தோழியை அந்தப் பெண் கேட்க,

இவர்களின் பேச்சு வாணிக்கும் கேட்க,  தன் சகப்பணியாளரிடம் பேச்சை முடித்துக் கொண்டு இவர்களிடம் வந்த வாணி, "என்ன பொண்ணுங்களா... ஃப்ரீயா இருங்கீங்களா?? எனக்கு காபிக்கு கம்பெனி கொடுக்க முடியுமா??" எனக் கேட்க,

அவளே தானாய் தங்களிடம் வந்துப் பேசியதில் சற்று அதிர்ந்துப் பின் சுதாரித்து தலையை ஆட்டிவிட்டு அவளுடன் கேபிடேரியா சென்றனர்.

மூவரும் கையில் காபியுடன் ஒரு மேஜையில் அமர்ந்தனர்.

"நான் ஆன்சைட்ல இருக்கும் போது நீங்க இந்த ப்ராஜக்ட்ல ஜாய்ன் செய்தனால உங்ககிட்ட போன்ல தான் பேசிருக்கேன். இப்ப தான் உங்களை மீட் பண்றேன். க்ளாட் டூ மீட் யூ" எனக் கூறி மென்னகை புரிந்தாள் வாணி.

பின் இது தான் அவர்களின் முதல் ப்ராஜக்ட் என அறிந்துக் கொண்டாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் பெரிய சாதனை செய்யலை பொண்ணுங்களா... ஆனா எனக்கு இது சாதனை தான். நானும் புதுசா ப்ராஜக்ட் சேர்ந்தப்போ இரண்டு வருஷம் கூட ஐடில இருக்க மாட்டேனு நினைச்சேன். ரொம்ப ரிசர்வ்ட் டைப் வேற. அதுவும் சப்போட் ப்ராஜக்ட் என் கரியரே போச்சுனு அழுதுகிட்டு வந்து ஜாய்ன் பண்ணேன் இந்த ப்ராஜக்ட்ல. ஆனா இப்ப செவன் இயர்ஸ் ஆகுது. டூ டைம்ஸ் ஆன்சைட் போய்டு வந்துட்டேன். என்கூட்டை விட்டு வெளிலே வந்து என்னால எதெல்லாம் முடியாதுனு நினைச்சேனோ அதெல்லாம் இப்ப செஞ்சிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் நம்மளோட உழைப்பும், முடியாதுனு நினைக்கிறதை விட முயற்சி செஞ்சி பார்ப்போமேனு நினைச்சி செஞ்சா போதும். அதோட அவ்ட்கம்(outcome) தானா கடவுள் கொடுத்துடுவாரு. அதனால உங்களாலயும் இப்படிலாம் அச்சீவ் செய்ய முடியும் முயற்சி செஞ்சீங்கனா போதும்"

"கண்டிப்பா மது. உங்க அட்வைஸ கண்டிப்பா எடுத்துப்போம் மது" என இருவரும் அதே ஆச்சரியப்பார்வை பார்த்துக் கூற,

"முதல்ல என்னை இப்படி ஏழாம் அதிசயம் போல பார்கிறதை நிறுத்துங்க... எனக்கு உங்களைப் பார்க்கும் போது முதன் முதலா இந்த ப்ராஜக்ட்ல அழுகையும் விசும்பலுமா நானும் அம்முவும் வந்து சேர்ந்தது தான் நியாபகத்துக்கு வருது" எனக் கண்கள் மின்ன வாணிக் கூற,

அவளின் கைபேசி அலறியது.

அந்தப் பெண்கள் பணிக்கு செல்கிறோமெனக் கூறி விட்டு நகர,

தன் கைபேசியில் யார் அழைத்ததெனப் பார்த்தவளின் கண்களில் சிறு மின்னல். உடனே அழைப்பை எடுத்தவள்,

 "ஹே அம்மு உனக்கு நூறு ஆயுசுடி. இப்ப தான் உன்னை நினைச்சேன் உடனே ஃபோன் பண்ற" என உற்சாகமாய் வாணிப் பேச,

"நான் உன் மேல கோபமா இருக்கேன். பேசாத என்கிட்ட" எனக் கடுப்பாய் வேணிக் கூற,

"ஹோ பேசாதனு சொல்றவத் தான் போன் பண்ணி பேசுறியா அம்மு" எனக் சிரித்துக் கொண்டே வாணிக் கேட்க,

"உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சாமே. ஏன்டி என்கிட்ட சொல்லலை. மஹா சொல்லி தான் தெரிஞ்சுது" என கோபமாய் வேணி உரைக்க,

"அதான் நான் சொல்றதுக்குள்ள உனக்கே தெரிஞ்சிடுஞ்சே... அப்புறம் நான் என்னத்த சொல்ல... அவகிட்ட சொல்லி ஒன் ஹவர் கூட ஆகலை. அதுக்குள்ள உன் கிட்ட சொல்லிருக்கா... அவ முந்திட்டா... அதுக்கு நான் என்ன செய்ய" எனப் பரிதாபமாய் கேட்க,

"சரி அதை விடு. உனக்கு மேரேஜ்னு சொன்னதும் எவ்ளோ ஹேப்பி தெரியுமா... எவ்ளோ வருஷமா ஆன்சைட் வர்க் ஜாதகப் பிராபளம் அது இதுனு மேரேஜ் செய்யாம டிமிக்கி கொடுத்துட்ட... கடைசியா எப்படியோ ஒரு பையன் சிக்கிட்டானே... மீ செம்ம ஹேப்பி... சரி பையன் எப்படி?? உனக்கு பிடிச்சிருக்கா??" எனத் தோழியாய் அவளின் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக, அதற்கு பொறுமையாய் பதிலளித்துக் கொண்டிருந்தாள் வாணி.

---

சென்னையிலுள்ள மிகப்பெரிய திருமண மண்டபம் அது.

மதுரவாணி வெட்ஸ் வெற்றிமாறன் என்ற வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருக்க,

செல்வமும் நீலாமதியும் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

மேடையில் வாணியும் மாறனும் புன்சிரிப்புடன் மேடையேறி வாழ்த்தியவர்களுக்கு நன்றியுரைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

மேடை எதிரே கீழே அமர்ந்திருந்தனர் மஹா மற்றும் வேணியின் குடும்பத்தினர்.

குடும்பம் என்றால் மஹா மதி மற்றும் அவர்களின் செல்ல மகள் யாழினியுடனும். ஆமாங்க மதியோட குட்டி குட்டிம்மா. நம்ம எது வேண்டாம்னு சொல்றோமோ அது தானேங்க நமக்கு வாலெண்டியராக் கிடைக்கும். அப்படி மஹா பொண்ணு வேண்டாம் வேண்டாம்னு சொல்ல கடவுளா தேடிப் போய் கொடுத்த பொக்கிஷம் யாழினி.(குட்டி மதிக்கு மஹாப் பொண்ணு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கு. கடவுள் தான் கருணை காண்பிக்கலை இன்னும்)

வேணி இளா அவர்களின் அன்பு மகன் இளவேந்தனுடன் வந்திருந்தனர்.

வேணி ஆசையாய் ஆசையாய் தன் கணவனின் பெயர் மற்றும் தன் பெயர் இணைத்து தான் பெயர் வைக்க வேண்டுமென தன் மூளையை குடைந்து தேடிக் கண்டுபிடித்தப் பெயர் இது.

வேணியும் மஹாவும் அருகருகே அமர்ந்து தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருக்க, இரு கணவன்மார்களும், "எதுக்கு சிரிக்கிறீங்கனு சொல்லிட்டு சிரிச்சா நாங்களும் சிரிப்போம்ல" எனக் கோரஸாய் கேட்க,

"இரண்டு பேரையும் பார்த்தீங்களா... கண்ணாலயே பேசிக்கிறாங்க... இவ வேற அநியாயத்துக்கு வெட்கப்படுறா?? என்னமோ இது அரேஜ்டு மேரேஜ் போலவே தெரியலையேனு தான் பேசிட்டு இருந்தோம்" என மஹாக் கூற,

"எதுக்கு அதைக் கேள்வியாய் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு... அவங்களையே கேட்டுவிடுவோம்" என்றான் மதி.

"ஆமா ஆஷிக் எங்க இருக்கான்?? போன் பண்ணுங்க இளா. அவன் வந்துட்டா போய் கிப்ட் கொடுத்துட்டு சாப்பிடப் போகலாம்" என வேணி கூறியதும் இளா கையில் போனை எடுக்க,

"ஹலோ ப்ரண்ட்ஸ்" எனக் கூறிக் கொண்டே வந்தான் ஆஷிக் அவன் மனைவி ரஹானா மற்றும் அவனின் மகன் ரிஸ்வான் உடன்.

"ஏன்டா இவ்ளோ லேட்?? எவ்ளோ நேரமா வெய்ட் பண்றது" என வேணி அவனை கடிந்துக் கொள்ள,

"ஆபிஸ்ல இருந்து வீட்டுக்குப் போய்டு இவங்களைலாம் கிளப்பி கூட்டிட்டு வர வேண்டாமா" என ஆஷிக் சொல்ல,

"இதுக்கு தான் ஆபிஸ் லீவ் போடுனு வாணி சொன்னா... கேட்குறியா நீ?? நீ தான் ப்ராஜக்டைய தலைல தூக்கி வச்சிருக்கிற மாதிரி சீன் போடுறது" என அவனை மேலும் வறுத்தெடுத்தே விட்டாள் வேணி.

அவளின் பேச்சில் சிரித்துக்கொண்டிருந்த ரஹானாவைப் பார்த்து, "உன்னால முடியாததை நான் செய்றேனு தானமா இந்த சிரிப்பு" என வேணி சிரிப்பாய் கேட்க,

"என்னது முடியாதது அக்கா" என ரஹானா கேட்க,

"அதான் உன் புருஷனை திட்டுறது" என்றதும் அனைவரும் கொல்லெனச் சிரிக்க,

"அம்முஉஉஉஉஉஉ" என கூவினான் ஆஷிக்.

சிரித்தப்படியே அனைவரும் மேடையேறி வாணியை வாழ்த்த,

வெற்றிமாறனிடம் தங்களை அறிமுகம் செய்யவென தோழமைகள் குழு எத்தனிக்க, "இருங்க இருங்க நானே உங்க பேருலாம் சொல்றேன்" எனக் கூறிய மாறன்,

மதி, இளா, வேணி, மஹா, ஆஷிக், ரஹானா இவர்களின் பிள்ளைகள் பெயர் வரை சரியாய் கூறி கைகுலுக்க, அனைவரும் இன்ப அதிர்ச்சியில் அவனை ஆச்சரியமாய் பார்க்க,

"என்ன எல்லாரும் ஷாக் அடிச்ச மாதிரி பாக்குறீங்க... உங்களைப் பத்தி மது பேசாத நாளில்லை.... அவளோட அம்மா அப்பாக்கு அப்புறம் அவ அதிகமாக பேசியது உங்களை பத்தி தான். அவளோட பெங்களூர் வாழ்க்கை தான்" என மாறன் கூறியதும் அனைவரின் பார்வையும் வாணியை ஆதுரமாய் தழுவியது.

"எங்க கேபியை சந்தோஷமா வச்சிக்கோங்க... பத்திரமா பார்த்துக்கோங்க வெற்றி.... அவ எப்பவும் சந்தோஷமா இருக்கனும்" என மாறனைத் தழுவிக் கொண்டு ஆஷிக் உரைக்க, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

"ஆமா கேபி நீ வெற்றியை லவ் பண்றதை சொல்லவே இல்ல" என ஆஷிக் கேட்க,

"என்னடா உளர்ற??" என வாணி வினவ

"ஆமா லவ் பண்ணாம தான் இப்படி ஸ்டேஜ்ல ரொமேன்ஸ் செஞ்சிட்டு இருக்கீங்களா??" என வியப்பாய் ஆஷிக் கேட்க,

"டேய் நல்ல நாள் அதுவுமா என்கிட்ட அடி வாங்காமா போய்டு" என வாணி ஆஷிக்கை முறைக்க,

"வாணி, நாங்களே கேட்கணும் நினைச்சோம். லவ் மேரேஜ் இல்லனாலும் மூனு மாச கேப்ல மாறன் அண்ணா எப்படியோ உன்னை கவுத்துட்டார் போலயே... அதான் டன் டன்னா காதல் உன் கண்ணுல வழியுதே" என வேணிக் கூற,

"மூனு மாசத்துல இல்லடி... அண்ணாவ பார்த்த முதல் நாளே மேடம் ஃபளாட் போலயே" எனக் கண்ணடித்து மஹாக் கூற,

"அடியேய் பக்கிகளா என் மானத்தை வாங்காம போறீங்களா" என வெட்க முகத்துடன் வாணிக் கூற,

மாறன் அவளின் வெட்கத்தை ரசித்து சிரித்துக் கொண்டிருக்க,

"சரி சரி இப்ப நேரம் இல்லனு போறோம்... கண்டிப்பா உன் லவ் ஸ்டோரி எங்களுக்கு தெரிஞ்சே ஆகனும் சொல்லிட்டேன். அண்ணா உங்களுக்கும் தான்" எனக் கூறி மீண்டுமொரு முறை வாழ்த்துக் கூறி அனைவரும் மேடையிலிருந்து இறங்க,

மஹா மற்றும் வேணியின் கூற்றில், வாணியும் மாறனும் ஒருவரை ஒருவர் கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் எண்ணங்கள் அவர்களின் முதல் சந்திப்பை நோக்கி பயணித்தது.

பெண் பார்க்கும் படலம் வாணியின் வீட்டில்.

மாப்பிள்ளையும் பெண்ணும் தனியே பேசவென அறையில் தனித்து விடப்பட்டிருந்தனர்.

வந்த நொடியிலிருந்து வைத்த கண் வாங்காது வெற்றிமாறன் வாணியைப் பார்த்துக் கொண்டிருக்க, கையை பிசைந்துக் கொண்டிருந்த வாணி தன் தொண்டையை செருமி பேசவாரம்பித்தாள்.

"உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்க??" - வாணி

அவன் புருவங்கள் இடுங்க கேள்வியாய் வாணியை நோக்க,

"இல்ல நீங்க நல்லா வாட்ட சாட்டமா நெடு நெடுனு இவ்ளோ உசரமா இருக்கீங்களே?? நான் உங்க இடுப்புக்கு தான் இருப்பேன். அதான் உங்களுக்கு என்னைப் பிடிச்சி தான் பார்க்க வந்தீங்களானு கேட்க வந்தேன்" எனத் தயங்கி தயங்கி அவனின் முகம் பார்த்து அவள் கூற,

அவளின் வாட்ட சாட்டம் என்ற கூற்றில் சற்றாய் சிரித்தவன், "உங்களுக்கு இந்த வெட்கம் அதெல்லாம் வருமா??" என சம்பந்தமில்லாமல் அவன் கேட்க,

"அதெல்லாம் கணவனானதுக்கு அப்புறம் நீங்க நடந்துக்கிற முறைல நடந்துக்கிட்டீங்கனா தானா வரும்" எனக்கூறி தன் நாக்கை கடித்து கண்ணை சுருக்கி தன் தலையில் அடித்துக் கொண்டவள்,

"நான் கடைசியா சொன்னதை மறந்துடுங்க" என அவசர அவசரமாய் உரைக்க,

அவளின் கணவனாய் என்கின்ற பதத்திலேயே அவளின் பிடித்தத்தை அறிந்தவன், மறந்துடுங்க என்ற கூற்றில் வாய் விட்டு சிரித்து,

 

"மறந்திடச் சொன்னாய் சொன்ன வார்த்தையை

மறக்க முடியவில்லை கண்மணி

உன்னையும் அவ்வார்த்தை உரைத்த பொருளையும்"

என அவளைப் பார்த்து அவன் கவிப்பாட,

"ஹான்.." என வாயைப் பிளந்தவள்,

"முதல் முறையா பார்க்கிற பொண்ணுக்கிட்ட இப்படியா பேசுவீங்க" என அவள் கேட்க,

"நான் உன்னை இப்ப தான் முதல் முறையா பார்க்கிறேனு சொல்லலையே" என அவன் கூற,

"அப்ப என்னை முன்னாடியே பார்த்திருக்கீங்களா?? எங்க?? எப்போ??" என வாணிக் கேட்க,

அவளின் முகத்திலேயே தன் பார்வையைத் தேக்கி பார்வையால் அவளை அவன் விழுங்கிக் கொண்டிருக்க,

இத்தனை நேரம் அவன் முகத்தைப் பார்த்துப் பேசியவளின் முகம் தானாய் வெட்கத்தில் தலைக்குனிய,

"ஏன்டா என்னை இப்படி பார்த்து வைக்குற" என மனதிற்குள் அவனை செல்லமாய் அவள் திட்டிக்கொண்டிருக்க,

"ஹ்ம்ம் கணவனின் செயலில் மனைவி நாணம் கொண்டு முகம் ரத்தமாய் சிவக்க தரையை நோக்கினாள்" என வாணியைப் பார்த்து மீண்டும் அவன் கவிப்பாட,

"நான் கேட்டக் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை" என அவள் அவன் கவனத்தை திருப்ப,

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்

கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

என அவன் மொபைல் அலற,

"காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே

காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே"

என மாறன் வாய் விட்டு பாடியவன்,

உன் கேள்விக்கான பதிலை என் மொபைலே சொல்லிடுச்சு என உரைத்தவன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவன் சென்றதும், "உஃப்ஸ்" என பெருமூச்சு விட்டப்படி சோபாவில் தொம்மென அமர்ந்தவள் தன் கண்களை மூட, கண்ணுக்குள் மாறனின் பிம்பமே வந்துப் போக,

"நம்ம விரதத்தை கலைக்கிறதுக்குனே வந்திருக்காங்க போலயே" என அவள் எண்ணிக்கொண்டிருந்த நேரம்,

"எங்கிருந்து வந்தாயடா?

எனைப்பாடு படுத்த-நீ

எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா

எனைத்தேடி எடுக்க-நான்

எனைத்தேடி எடுக்க"

என அவளின் மொபைல் இப்பொழுது அலற,

"இன்னிக்கு மொபைல் ரிங்டோன்லாம் சேர்ந்து எனக்கு சதிப் பண்ணுதே" எனக் கூறி வெட்கமாய் சிரித்தவள்,

அவ்வழைப்பை ஏற்றுப் பேச, "மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்புறாங்க கீழே வா மதும்மா" என்றுரைத்தார் செல்வம்.

"இதோ வரேன்ப்பா" எனக் கூறி தன் அலங்காரத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தன்னை சரி செய்துக் கொண்டவள் கீழே செல்லவும் அவர்கள் காரில் ஏறவும் சரியாக இருக்க, அவளின் விழிகளை நோக்கி ஒரு சிறு தலை அசைப்புடன் அவளிடம் விடைப்பெற்றுச் சென்றான் மாறன்.

மதுரவாணி வெற்றிமாறன் திருமணம் விமர்சையாய் நடந்து முடிக்க, திருமணம் முடிந்து இரண்டு மாதமான நிலையில் கல்யாண ட்ரீட் என அனைத்து நெருங்கிய தோழமைகளையும் அழைந்திருந்தினர் அந்த ஹோட்டலுக்கு.

"வாணி இப்பவாவது சொல்லுடி உங்கள் காதல் கதைய" என மஹாக் கூற,

தங்களின் பெண் பார்க்கும் படலத்தில் கூற வேண்டியவற்றை மட்டும் தோழமைகளிடம் வாணிக் கூற,

"ஆஹா அப்ப நான் சொன்னதுப் போல அண்ணாவ பார்த்ததும் கவுந்துட்டியாடி" என ஆச்சரியமாய் மஹாக் கேட்க,

"அதான் கேபி மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே. நம்ம கேபிக்கும் வெட்கப்படத் தெரியும்னு நம்ம வெற்றி தான் கண்டுபிடிச்சிருக்காரு. என்னமா வெட்கப்படுறா பாரேன்" என  ஆஷிக் வாணியை வார,

நிஜமாகவே மேலும் வெட்கம் கொண்டவள், வெட்கம் தாளாமல் வெற்றியின் தோளில் தன் முகத்தை மறைத்துக்கொள்ள,

"இனிமே நீ கேபி இல்ல... நீ விபி" என ஆஷிக் கூற,

"ஆமா அதென்ன கேபி?? மதுவக் கேட்டா நீங்களே கண்டுபிடிங்கனு சொல்லிட்டா... இதுல நீங்க புதுசா விபினு வேற சொல்றீங்க" என மாறன் கேட்க,

"அது பெரிசா ஒன்னுமில்ல வெற்றி. நான் அவளை முதன் முதல பார்க்கும் போது அவ எனக்கு ஸ்கூல் படிக்கிற குட்டிப்பொண்ணா தெரிஞ்சா... அதான் அந்த கேபி... குட்டிப்பொண்ணு... மேடம் இப்ப வெட்கப்படுற அளவுக்கு வளர்ந்தப் பொண்ணு ஆயிட்டாங்களே அதான் வளர்ந்தப் பொண்ணு விபினு சொன்னேன்" என அவன் விளக்கம் கூற, வெற்றி மென்னகை புரிந்தான்.

"சரி நீங்க சொல்லுங்க வெற்றி. எங்களைப் பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லி வச்சா இந்த கேபி" என ஆஷிக் கேட்க,

அதை நான் சொல்றதை விட கேபியே சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் எனக்கூறி வெற்றி கேபியை உந்த,

"என் லைப்ல நான் மகிழச்சியா இருந்த நாட்கள் என்னுடைய பெங்களூர் நாட்கள். டைம் மெஷின் மூலமா நீ பாஸ்ட்க்கு போக போறனு சொல்லி எங்க போகனும்னு என்னையக் கேட்டா... நான் என்னுடைய பெங்களூர் நாட்களுக்கு அழைச்சிட்டு போங்கனு தான் சொல்லுவேன். எத்தகைய துன்பம் சுத்தி இருந்தாலும் இன்பத்தை மட்டுமே என்னை சுகிக்க வைத்த என் நட்புகள். என்னிக்குமே என்னை தாழ்வாகவோ தரைகுறைவாகவோ நடத்தாம என்னை தோழியாய் தோள் கொடுத்து தாங்கிய தேவதைகள் என் இரு தோழிகள். தேவையான நேரத்துல தந்தையா அறிவுரைச் சொல்லி உடம்பு சரியில்லாதப்போ தாயாய் கூடவே இருந்து பார்த்துக்கிட்டு தோழியாய் வாழ்க்கைய ரசிக்கக் கத்துக் கொடுத்தவங்க இவங்க தான்.

அப்பா அப்புறம் சொந்தகார அண்ணாங்களுக்குப் பிறகு நான் பாதுக்காப்பாய் உணர்ந்தது இவனுடன் இருக்கும் போது தான். கண்ணுக்குள்ள வச்சு என்னைப் பார்த்துக்கிட்டான். என் மனம் வெறுமையாய் ஃபீல் செய்யும் போது லோன்லியா ஃபீலாகும் போது கண்டிப்பா இவன் கிட்ட இருந்து எனக்கு கால் வரும்.  என் மனநிலையை அப்படியே வேற லெவலுக்கு கொண்டு போய்டுவான். கொஞ்சம் கூட என் கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்காம அன்பை மட்டுமே பொழிச்ச பாசக்கார நண்பன். அம்மு மஹா ஆஷிக் என் வாழ்வின் வசந்தமாய் வந்தவர்கள். என் வசந்தகாலத்தை பகிர்ந்துக் கொண்டவர்கள். எங்க வாழ்நாள் வரைக்கும் தொடரும் தோழமையிது" என வாணி நெகிழ்வாய் பேசி முடிக்க,

மூவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

"உன்னை ப்ரண்டா அடையறதுக்கு நாங்க தான் கொடுத்து வச்சிருக்கோம்" என மூவரும் கோரஸாய் உரைத்தனர்.

நாங்க செஞ்ச சின்ன சின்ன விஷயத்துக்கு உன் மனசுல எவ்ளோ பெரிய இடத்தை எங்களுக்கு கொடுத்து வச்சிருக்க நீ. நாங்க தான் ப்ளஸ்ட் டு ஹேவ் யூ இன் அவர் லைப் எனக் கூறி நெகிழ்ந்தனர் மூவரும்.

அவர்களின் துணைவர்களுக்கும் பெருமிதமே இவர்களின் நட்பின் ஆழத்தைப் பார்த்து.

இவர்கள் இவ்வாறு நெகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருந்த சமயம், இளவேந்தன் அழ ஆரம்பிக்க, "ஏங்க கோவக்காய் அவனை கொஞ்சம் சமாதானம் செய்யுங்களேன்" என வேணிக் கூற,

அனைவரும் சிரித்துக் கொண்டே தங்களின் உணவை உண்ண, "அதென்னடி திடீர்னு மரியாதையா பேசுற... ஏகதுக்கும் இளா அண்ணாவ டா போட்டு பேசுவ... சரி அதை விடு... இந்த கோவக்காய் பாவைக்காய் க்கு இப்பவாவது விளக்கம் சொல்றியா நீ??" என வாணிக் கேட்க,

"ஹி ஹி ஹி" என அசடு வழிந்தவள்,

"என் புருஷனை நான் எப்படி மத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுக்க முடியும். ப்ரண்டா இருக்கும் போது டா போட்டு பேசினா வேற... இப்பவும் அப்படியே கூப்பிட முடியுமா??  அதான் மரியாதையா பேசப் பழகிட்டேன்" என வேணிக் கூற,

"அப்ப தனியா இருக்கும் போது மரியாதை தேயும் போலயே" என மதி கூற,

"அங்கயும் அப்படி தான் போல" என இளா மதியைப் பார்த்து கிண்டலாய் கூற,

"இதை நான் என் வாயால வேற சொல்லனுமா?" என மதி பாவமாய் முகத்தை வைத்துக் கூற,

"வீட்டுக்கு வாங்க உங்களை கவனிச்சிக்கிறேன்" என மஹா மதியிடம் அடிக்குரலில் கூற,

அனைவரும் சத்தமாய் சிரித்தனர்.

"சரி சரி டாபிக் சேஞ்ச் பண்ணாம உன் கோவக்காய் கதைக்கு வா" என மீண்டும் வாணி விட்ட இடத்துலேயே வந்து நிற்க,

"இளங்கோவன் பேரை தான் சுருக்கி கோவக்காய் ஆக்கினேன். இளா என்னை கடுப்பேத்தும் போது பாவக்காய் போல கசப்பு ஃபீல் ஆகும். சோ பாவக்காய்" என சிரித்துக் கொண்டே கூற,

"ஹோ இது தான் அந்த மொக்க கதையா" என வாரினாள் வாணி.

"சரி மேடம் உங்க காதல் கதைய சொல்லுங்க" என மஹாக் கேட்க,

"அது சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன். உங்களைப் போல ஒரு பிள்ளைய பெத்துக்கிட்டு அவர் காதலில் முங்கி நனைஞ்சி திண்டாடிட்டு இருக்கும் போது கண்டிப்பா சொல்றேன்... அவர் என்னை முதன் முதலில் எங்க பார்த்தாருன்னும் சொல்றேன்" என வாணி மாறனின் முகம் பார்த்துக் கூற, ஆமென கண் சிமிட்டி ஆமோதித்தான் அவனும்.

அனைவரும் இதுபோல் நட்பும் சுற்றமும் அன்பும் சூழ இன்பமாய் வாழ வாழ்த்துவோம்.

----

மாறன் வாணியை முதலில் எங்கு பார்த்தான்??  இது காதல் திருமணமா??  பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணமா?? அனைத்தும் அடுத்த கதையில் தெரியவரும்.

மது'ஸ் மாறன் - கதையின் தலைப்பு

நாயகன் - வெற்றி மாறன்

நாயகி - மதுரவாணி

மற்றும் தோழமைகள் அனைவரும் இதர கதாபாத்திரங்கள்.

 

----நன்றி------

Quote

Nice story 👍

You cannot copy content