மோனிஷா நாவல்கள்
Vilakilla Vithigal Avan - E 51
Quote from monisha on August 14, 2023, 12:22 PM51
துர்காவின் செவியில் முகுந்தன் பேசிய வார்த்தைகள் இன்னும் கூட ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவளால் அவன் சொன்னதை ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.
‘போயும் போயும் பாரதியை பார்த்து நான் பயப்படுறானாமே!’ இவ்விதமாகப் புலம்பிக் கொண்டே அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள்.
‘இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்புனாதான் பிரச்சாரத்துக்கு போக முடியும்.. ஆ… இந்த டென்ஷன் அளவுக்கு மீறி போகுது’ என்றவள் தாங்க முடியாத மனஅழுத்தத்தில் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இத்தனை வருடங்களாக இல்லாத பிரச்சனை இப்போது திடீரென்று முளைத்திருக்கிறது.
பாரதி உயிருடன் இருக்கிறான் என்ற தகவல் தெரிந்ததிலிருந்து அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
தேர்தல் சமயத்தில் இப்படியொரு தலைவலியா? கைப்பேசி எடுத்து நேரம் பார்த்தாள்.
‘இல்ல இவ்வளவு டென்ஷனோடு பிரச்சாரத்துக்கு போனா அவ்வளவுதான்… ஒரு ஒன் ஹவராவது தூங்குனாதான் மைன்ட் கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகும்’ என்று எண்ணியவள் இன்டர்காம் மூலமாக உதவியாளர் மலரிடம்,
“நான் தூங்க போறேன்… ஷார்ப்பா ஒன் ஹவர் கழிச்சு எழுப்பு” என்று சொல்லிவிட்டு தளர்வாக படுக்கையில் சரிந்தாள்.
‘காம் டவுன் துர்கா… காம் டவுன்… பாரதி பத்தி யோசிக்கவே யோசிக்காதே… பிரச்சாரத்துக்கு வேற கிளம்பணும்… ரிலேக்ஸ்… ரிலேக்ஸ்’ என்றவள் தன்னைத் தானே அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றாள். அப்படியே சில கணங்களில் அவள் உறங்கியும் விட்டாள்.
உடல் ஓய்ந்தாலும் மனமானது அத்தனை சீக்கிரத்தில் ஓய்ந்துவிடுவதில்லை. யாரை பற்றி யோசிக்கவே கூடாது என்று நினைத்தாலோ அவன் முகம்தான் அவள் ஆழ்நிலை உறக்கத்திலும் பிரசன்னமானது.
மாப்பிள்ளை கோலத்தில் நின்றிருந்தான் அவன்.
“என் வாழ்க்கையை அழிச்சிட்ட இல்ல… துரோகி… உன்னை எவ்வளவு எல்லாம் நம்பினேன்டி நானு” அவன் இவ்விதம் ஆக்ரோஷமாக பேசி கொண்டே அவளை நெருங்கி வர வர ஏதோ பேய் பிசாசைக் கண்டது போல அவள் உடலெல்லாம் நடுங்கியது. அவனிடமிருந்து தூரமாக ஓடிவிட வேண்டுமென்று நினைத்த போதும் அவள் கால்கள் அசைய மறுத்தன.
அதற்குள் அவன் நெருங்கி வந்துவிட்டான்.
“ஏன்டி இப்படி பண்ண… ஏன்டி இப்படி பண்ண?” என்றவன் அவள் தோள்களைப் பற்றி உலுக்கி எடுத்தான். அவன் கைகளின் அழுத்தத்தில் அவள் தோள்பட்டையெல்லாம் வலிக்கத் துவங்கியது.
“பாரதி விடு வலிக்குது… பாரதி விடு” என்றவள் கத்தி கூப்பாடு போட, “மேடம் என்னாச்சு… மேடம்” என்று மலர் தட்டி எழுப்பவும் மூச்சு வாங்கியபடி எழுந்தமர்ந்தாள்.
அவள் கண்களில் தெரிந்த கலவரத்தை பார்த்த மலர், “என்ன மேடம்… என்னாச்சு?” என்று கேட்கவும்தான் அவள் சுற்றும் முற்றும் பார்த்து தான் இருக்கும் சூழ்நிலையை விளங்கிக் கொண்டாள்.
ஏசி அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது.
மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், “ஒன்னும் இல்ல… நீ போ” என்று மலரை அனுப்பிவிட்டு குளியலறை சென்று முகத்தை அலம்பி கொண்டு வந்தாள்.
அப்போது அவள் கண்களில் அந்த கலவரமும் பதட்டமும் மாறவில்லை.
என்றாவது ஒரு நாள் பாரதி தன் முன்னே வந்து நின்று இப்படி கேள்விகள் கேட்பான் என்ற பயம் அவளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. அதனால்தான் அவனைச் சிறையிலேயே வைத்து முடித்துவிடச் சொல்லி முகுந்தனைத் தூண்டிவிட்டாள்.
காசி என்பவனைச் சிறைக்குள் அனுப்பி பாரதியைக் கொல்ல திட்டமெல்லாம் தீட்டப்பட்டது. ஆனால் கொலை செய்ய அனுப்பிய காசியை கொல்வதற்கு அவனின் வெகுநாள் எதிரி தீனா சிறைக்குள் தன் ஆட்களை அனுப்பி இருந்தான். காசி பாரதியைக் கொல்ல முயன்ற சமயத்தில் காசியை குத்துவதற்கு தீனாவின் ஆட்கள் திட்டமிட்டனர்.
அப்போது நடந்த களேபரத்தில் காசி பாரதியை கொல்வதற்குப் பதிலாக பாரதி காசியின் உயிரை காப்பாற்றிய நிகழ்வுதான் அரங்கேறியது. அதற்குப் பிறகு காசி பாரதியின் நண்பனாகிவிட்டான். அவன் மீது மிகுந்த நன்மதிப்பும் அன்பும் வேறு கொண்டுவிட்டான். அவன் மட்டுமல்ல. இந்த சம்பவத்தின் மூலமாகச் சிறையிலுள்ள பலருக்கும் பாரதியின் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
ஆனால் இந்த தகவலறிந்த முகுந்தனுக்கோ எரிச்சலும் கடுப்பும் உண்டானது. இனி பாரதியை சிறையில் வைத்து கொலை செய்வது நமக்கே ஆபத்தாக முடிந்துவிடலாம் என்றவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டான். ஆனால் துர்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
பாரதியைக் கொல்ல வேண்டுமென்று ஓயாமல் அவனிடம் சொல்லிக் கொண்டேதான் இருந்தாள். ஆனால் அவன் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
‘விடு துர்கா… அவன் எல்லாம் செத்த பாம்பு… அவனைப் போய் அடிக்க சொல்ற’ என்றவன் அலட்சியமாக விட, அவளால் விட முடியவில்லையே!
இனி இந்த விஷயத்தில் முகுந்தனை நம்பி உபயோகமில்லை என்று அவளுக்குப் புரிந்துவிட, அவளே அவனை முடித்துவிடத் திட்டம் தீட்டினாள். ஆனால் அப்போதும் சிறைக்குள் வைத்து அவனைக் கொல்வது சாத்தியமற்ற செயலாகவே இருந்தது.
வேறு வழியில்லாமல் பாரதி சிறையிலிருந்து விடுதலையாகும் வரை அமைதியாகக் காத்திருந்தாள். இம்முறை முகுந்தனுக்கு கூட தகவல் சொல்லாமல் தானே ரகசியமாக ஆட்களை வைத்து பாரதியை கொல்ல முயன்றாள். ஆனால் அந்த திட்டமும் முறியடிக்கப்பட்டது. நந்தினியின் ஆட்கள் இடைபுகுந்து அவனை காப்பாற்றிவிட்டனர். அதன் பின் நந்தினியை மீறி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
விஷ பாம்பின் பல்லை பிடுங்குவது போல நந்தினி முகுந்தனின் பலத்தை எல்லாம் பிடுங்கி கொண்டிருந்த சமயம் அது. அறிவழகனை கடத்தி வைத்துக் கொண்டு அவள் ஆட்டம் காட்டினாள்.
முகுந்தனுக்கும் கூட அந்த நொடி நந்தினியிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்று எண்ணம்தான். ஆனால் துர்காதான் இடையில் புகுந்த ஆட்டத்தையே மாற்றியது.
துர்கா உயிருடன் இருப்பதாக முகுந்தன் மூலமாக பாரதியிடம் தகவல் சொல்லச் சொன்னதும் அவள்தான். பாரதியை வைத்தே நந்தினியை உளவு பார்க்கச் செய்ததும் கூட அவளின் திட்டம்தான்.
அவள் நினைத்தது போலவே எல்லாம் நடந்தது. பாரதியையும் நந்தினியையும் முகுந்தன் கொன்றுவிட்டதாகத் தகவல் வந்து போது அதிகமாக சந்தோஷமடைந்தது துர்காதான்.
இனி எந்த காலத்திலும் பாரதியை எதிர்கொள்ள வேண்டிய பயமில்லை என்று நிம்மதியாக இருந்தாள். ஆனால் மீண்டும் அப்போதிருந்த அதே பயம்…
அவள் கடந்து வந்த பாதையில் எத்தனையோ பேரை வஞ்சம் வைத்துப் பழிவாங்கியிருக்கிறாள். ஈவு இரக்கமின்றி கொல்ல சொல்லியிருக்கிறாள். கொன்றும் இருக்கிறாள்.
ஆனால் அதெல்லாம் அவளை இம்மியளவும் பாதிக்கவில்லை. பாரதிக்குச் செய்த துரோகம் மட்டும்தான் அவள் மனதை இன்றளவிலும் உறுத்தி கொண்டே இருக்கிறது.
‘அவன்தான் என்னை அந்த ஆசிரமத்தில சேர்த்தான்… அவனாலதான் என் வாழ்க்கையே நாசமா போச்சு… அதனாலதான் அவனை நான் பழி தீர்த்துக்கிட்டேன்’ என்று என்னதான் அவள் பாரதிக்குச் செய்த துரோக செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாலும் அது உண்மையில்லை என்று அவள் மனசாட்சிக்குத் தெரியுமே!
அவளுக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவன்தான். அவன் உயிருடன் இருக்கும் வரை அவளால் நிம்மதியாக உறங்க முடியாது. என்றாவது ஒரு நாள் அவன் தன் கண் முன்னே நிச்சயம் வந்து நின்றுவிடுவான்.
அதில் வெறும் பய உணர்வும் குற்றவுணர்வும் மட்டுமல்ல. வஞ்சமும் துரோகமும் மண்டி போயிருக்கும் அவள் மனதில் மெலிதாக இழையோடும் காதல் உணர்வும் கூட இருந்தது என்று சொன்னால் நம்ப முடியாததுதான். ஆனால் அது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை!
அவன் பார்வை அவளைத் துரோகியாக பார்ப்பதையோ அல்லது வெறுப்பாக நோக்குவதையோ அவள் துளி கூட விரும்பவில்லை. என்றுமே அவனுடைய காதல் தனக்கானதாகவே இருக்க வேண்டுமென்ற மிகப் பெரிய சுயநலம்தான் தன்னை பற்றிய உண்மை தெரிவதற்கு முன்னதாகவே அவனைக் கொன்றுவிட வேண்டுமென்று அவள் நினைத்தாள்.
உலகச்சரித்திரத்திலேயே காதலனை கொன்று காதலை வாழ வைக்க வேண்டுமென்று ஆசைப்படும் காதலி இவளாக மட்டுமே இருப்பாள்.
துர்காவின் உறக்கமெல்லாம் தொலைந்து போனது. அவன் தன்னை தேடி வருவதற்கு முன்னதாக தான் அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றுவிட வேண்டும். அதன் பின்புதான் மற்ற எந்த காரியங்களிலும் தன்னால் முழுவதுமாக ஈடுபட முடியும் என்று எண்ணியவள் எப்படி அதனைச் சாத்தியப்படுத்துவது என்று அமைதியாகக் கண்களை மூடி சிந்தித்தாள்.
மீண்டும் அதே காட்சி… பாரதி மாப்பிள்ளை கோலத்தில் நின்றிருந்தான்.
பட்டுச்சரிகை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்து மிடுக்காகவும் கம்பீரமாகவும் காட்சியளித்தான். அந்த தோற்றத்தில் அப்படியே அவள் மனம் அவனைப் படம் பிடித்து வைத்திருக்கிறது.
அவள் தன் வாழ்விலேயே வெறுக்கும் நாளும் அதுதான். மனதார விரும்பிய நாளும் அதுதான்.
எனினும் அவள் செய்யப் போகும் காரியத்தை எண்ணி இம்மியளவும் அவள் மனதில் குற்றவுணர்வு எல்லாம் அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை.
‘நான் நான் நான்’ என்ற அவள் மனம் முழுவதும் சுயநலமும் வஞ்சமும் குரோதமும் நிரம்பிவிட்ட காலகட்டம் அது.
அந்த நாள்தான்… பாரதியின் விதியை துர்கா தலைகீழாகப் புரட்டிப் போட்ட நாள்…
***
“இப்ப ஏன் இங்கே வந்த… வீட்டுக்கு போ” என்று பாரதி அவளைத் துரத்த,
“நான் கிளம்பிட்டேன்… அதான் நீங்க கிளம்பிட்டீங்களான்னு பார்க்கலாம்னு” என்றவள் திருமண கோலத்தில் முகமெல்லாம் புன்னகையாக அவன் முன்னே வந்து நின்றாள்.
“கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்” என்றபடி தன் கரத்தில் வாட்சை கட்டிக் கொண்டிருந்தான். புது பொலிவுடன் வேட்டி சட்டையில் அவன் கம்பீரமாக நின்றிருந்த கோலத்தைப் பார்த்து அவள் விழிகள் ஆழ்ந்து ரசித்திருக்க,
“என்னாச்சு… அங்கே தியாகு சார்… வசு... ராஜா எல்லாம் கிளம்பிட்டாங்களா?” என்று அவன் விசாரிக்க,
“ம்ம்ம்” என்றவள் தலையை மட்டும் அசைத்தாள்.
“ஏய் துர்கா… என்னாச்சு உனக்கு… ஏன் இப்படி நிற்குற?” என்றவன் கேட்ட நொடி, “இந்த டிரஸ்ல பார்க்க நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க” என்று அவள் அசடு வழிந்து கொண்டே அவனை நெருங்கி வந்து நிற்க,
“ம்ம்ம்… அப்படியா?” என்றவன் முகமும் அழகாய் புன்னகை பூத்தது.
“ம்ம்ம்” என்றவள் ஏக்கமாக அவன் கண்களை பார்த்தவள், “நான் எப்படி இருக்கன்னு நீங்க சொல்லவே இல்லயே” என்று கேட்டாள்.
எளிமையான ஆபரணங்கள். அளவான ஒப்பனை. ஆனால் அவள் அழகின் முன்னே மற்ற எல்லாமே சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. அவள் உடுத்தியிருந்த மஞ்சள் பட்டு அவள் மேனியின் நிறத்துடன் போட்டிப் போட்டது. எந்தவித அலங்காரங்களுமே அவளுக்குத் தேவையிருக்கவில்லை. அவளே ஒரு பேரழகி!
அவன் கண்கள் ரசனையாக விரிந்தன. ஆனால் அடுத்த கணமே அவன் முகத்தில் ஒருவிதமான சுணக்கம் வந்துவிட,
“என்னாச்சு?” என்று அவள் புரியாமல் கேட்டாள்.
“நீ ரொம்ப அழகு துர்கா… ஆனா அதேநேரம் உன் வயசு… எனக்கு ஒரு மாதிரி கில்டியாவே இருக்கு… யார் யாரோ ஏதேதோ பேசுறாங்கன்னு அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்காக” என்றவன் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை நிறுத்தியவள்,
“நீங்க அவசரப்பட்டு எல்லாம் முடிவு எடுக்கல… நீங்க எடுத்த முடிவு ரொம்ப சரி… அதுல எனக்கும் பரிபூர்ண சம்மதம்னு உங்களுக்கும் தெரியும்” என்றாள்.
“அது எனக்கு தெரியும்… இருந்தாலும் இந்த வயசு படிக்கிற வயசு… இன்னும் நீ போக வேண்டியது தூரம் நிறைய இருக்கு” என்றவன் மனம் அப்போதும் சமாதானமாகவில்லை.
“ஏன் கல்யாணம் ஆகிட்டு படிக்க கூடாதா? இல்ல தூரமா போக கூடாதா? சும்மா ஏதாச்சும் உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க” என்றவள் புருவத்தை உயர்த்தி அவனை முறைத்தாள்.
“நீ என்ன சொன்னாலும் பதினெட்டு வயசுங்கிறது சின்ன வயசுதான்… கல்யாணத்துக்கு உண்டான மெச்சுரீட்டி எல்லாம் இந்த வயசுல” என்றவன் தயக்கமாக இழுக்க,
“எனக்கு மெச்சுரீட்டி எல்லாம் இருக்கு” என்று அவன் கண்களை பார்த்து அழுத்தமாக சொன்னவள்,
“வயசுங்கிறது உடம்பை பொறுத்தது… ஆனா மெச்சுரீட்டிங்கிறது மனசை பொறுத்தது… அந்த வகையில பார்த்தா எனக்கு நிறையவே மெச்சுரீட்டி இருக்கு” என்று விதண்டாவாதமாக பேச,
“அதுவும் சரிதான்… அதனால இப்போதைக்கு மனசளவில மட்டும் நாம இந்த கல்யாணத்தை ஏத்துக்கலாம்” என்றவன் முடித்துவிட்டான்.
“இப்ப என்ன நீங்க சொல்ல வறீங்க” என்றவள் அதிர்ச்சியாக,
“நீதான் ரொம்ப மெச்சுரீட்டியான ஆளாச்சே… உனக்கு நான் சொல்றது நல்லாவே புரிஞ்சிருக்குமே” என்றவனின் உதட்டோரம் புன்னகை அரும்பியது.
“உஹும்… அதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது… நான் எல்லா விதத்திலையும் மெசூர்ட்டா... ஆஆஆ தான் இருக்கேன்” என்று அவள் ‘மெச்சூர்ட்’ என்ற வாரத்தையை இழுத்து சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவளை புன்னகையாக ஏறிட்டவன், “போதும் போதும்… முதிர்ச்சி சம்பந்தப்பட்ட இந்த பட்டிமன்றத்தை நம்ம கல்யாணம் முடிச்சிட்டு வீட்டுல வந்து வைச்சுக்கலாம்… இப்போ கிளம்பலாம்” என்றவன் தன் கைப்பேசி பர்ஸ் போன்றவற்றை எடுத்து கொண்டு வெளியே வந்து வீட்டைப் பூட்டிக் கொண்டிருக்க,
துர்கா உடனே, “நம்ம கோவிலுக்கு போயிட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போலாம்” என்று சொன்னாள்.
“ஹும்… போலாமே… எதிர்க்க இருக்க பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டுட்டு போலாம்” என்றவன் சொன்னதும் அவசரமாக மறுப்பு தெரிவித்தவள்,
“இல்ல … இல்ல பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கே… அந்த அம்மன் கோவிலுக்கு போலாம்” என்றாள்.
“பைத்தியமா உனக்கு… ரெஜிஸ்டர் ஆபீஸ் இந்த பக்கம்”
“போயிட்டு சீக்கிரம் வந்துடலாம்… நான் அங்கே வேண்டிக்கிட்டேனே” என்றவள் இழுக்கவும்,
“சரி… கல்யாணம் முடிச்சிட்டு வந்து போலாம்” என்றான்.
“இல்ல இல்ல… கல்யாணத்துக்கு முன்னாடி போகணும்” என்றவள் விடாமல் பிடித்த பிடியில் நிற்க,
“இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் ரொம்ப மெச்சூர்ட்னு சொன்ன… ஆனா இப்போ குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற” என்றவன் குரல் உயர, அவர்களின் விவாதங்களைக் கேட்டபடி வந்த தியாகு,
“அதான் அவ்வளவு தூரம் கேட்கிறா இல்ல… கூட்டிட்டு போயிட்டு வா… நானும் ராஜாவும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்கிறோம்… நீங்க சாமி கும்பிட்டுட்டு ஆட்டோ பிடிச்சு நேரா அங்கே வந்துடுங்க” என்றார்.
“இல்ல மாமா… அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்றவன் அப்போதும் மறுக்க,
“அதான் மாமாவே சொல்றாரு இல்ல” என்றவள் அந்த நொடி மிக சாமார்த்தியமாகத் திட்டமிட்டு எந்த சந்தேகமும் வராமல் அவனைக் கோவிலுக்கு அழைத்து வந்துவிட்டாள்.
அங்கிருந்துதான் அவளது நாடகமே அரங்கேறியிருந்தது.
இருவரும் அம்மனை தரிசித்துவிட்ட பின்னர் துர்கா அவனிடம் குங்குமம் இட்டுவிடச் சொல்லி நெற்றியைக் காண்பித்தாள். அவனும் புன்னகை முகமாக அவளுக்கு குங்குமம் வைத்துவிட்டு, “சரி கிளம்பலாமா” என்று கேட்க,
“கோவிலை சுத்திட்டு உடனே கிளம்பிடலாம்” என்றவள் உரைக்க, தன் கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டவன், “சரி சீக்கிரம் வா” என்று முன்னே வேகமாக நடந்தான்.
அவள் உபதெய்வங்களை எல்லாம் வழிப்பட்டு கொண்டு சற்று தாமதமாகவே அவன் பின்னோடு வந்தாள்.
“சீக்கிரம் வா துர்கா” என்று அழைத்தபடி சென்றவன் ஒரு சுற்று முடித்துத் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் மாயமாகிவிட்டிருந்தாள்.
“அதுக்குள்ள எங்கே போயிட்டா” என்று முதலில் நிதானமாகத் தேடியவன் பின்னர் அவளைக் காணவில்லை என்பதை உணர்ந்து பரபரப்பானான்.
அங்கிருந்தவர்கள் சிலரை விசாரித்தான். கோவிலில் கூட்டம் அதிகமிருந்த காரணத்தாலும் அது காலை நேரம் என்பதாலும் யாருக்கும் யாரையும் கவனிக்கும் பொறுமை இல்லை.
பாரதிக்கு அந்த நொடி என்ன செய்வதென்றே புரியவில்லை. துர்கா ஏதாவது ஆபத்தில் சிக்கியிருப்பாளோ என்றவன் பதட்டமாக எண்ணிய அதேசமயம் அவன் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. பேசியது வியாசர்பாடி சங்கர்தான்.
“துர்கா உனக்கு வேணும்னா… நாங்க சொல்ற இடத்துக்கு நீ மட்டும் தனியா வரணும்… கூட போலிஸ்… உன் ப்ரெண்ட்ஸ்… யாரையாச்சும் கூட கூட்டிட்டு வந்த” என்றவன் மிரட்டலாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட, பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த நேரப் பதட்டமும் பயமும் நேராக அவன் சொன்ன இடத்துக்கு பாரதியைப் போக வைத்தது.
சென்னையின் ஒதுக்குப்புறத்தில் வெகுநாட்களாக மூடியிருந்த தொழிற்சாலை அது. துருப்பிடித்த பழைய இரும்பு பொருட்களும் உடைந்த இயந்திரங்களும் அவற்றோடு சுவற்றில் மண்டியிருந்த ஒட்டடைகளும் என்று அந்த இடமே பார்க்க மிகவும் பரிதாபமான நிலையிலிருந்தது.
சங்கர் தன் கைபேசியை துர்காவிடம் நீட்டி, “தலை பேசணுமா” என்க, அதனை வாங்கி கொண்டு அவனை நேராக பார்த்து, “நான் கொஞ்சம் அவர்கிட்ட தனியா பேசணும்” என்றாள்.
“ம்ம்ம்… பேசு பேசு” என்றவன் வக்கிரப் பார்வையும் வழிசலுமாக புன்னகை சிந்திவிட்டுச் செல்ல, அவனைக் கடுப்பாக பார்த்தவள் பேசியை காதில் வைத்து, “சொல்லுங்க” என்றாள்.
“உன்னை நம்பித்தான் இந்த திட்டத்தையே போட்டிருக்கேன்… சொதப்பிட மாட்ட இல்ல” என்றவன் படபடப்போடு கேட்க,
“ஒருத்தனை கொலை பண்றது ஈஸி… ஆனா பாரதி மாதிரி ஒருத்தனை கொலை செய்ய வைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றாள்.
“விளையாடுறியா? அவனை நம்ம கொலை செஞ்சா பெரிய பிரச்சனையில மாட்டிப்போம்” என்றவன் அதற்கு மேலாக அவளுக்கு விளக்கம் கொடுக்கவில்லை.
பிரச்சனை பிரச்சனை என்று அவன் சொன்னது எதை என்று அப்போது துர்காவுக்கு புரியவில்லை. நாளடைவில் தான் பாரதி அறிவழகனின் வாரிசு என்ற விஷயமே அவளுக்குத் தெரிய வந்தது.
தான் அறிவழகனின் அரசியல் வாரிசாக எந்தவிதத்திலும் பாரதி தடையாக இருந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அவன் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட துர்கா மூலமாக முகுந்தன் தீட்டிய திட்டம்தான் அது.
“நீ என்ன செய்வியோ ஏதோ செய்வியோ எனக்கு தெரியாது… பாரதி அவங்க ஆளுங்கல நாலு பேரையாச்சும் அடிச்சு போடணும்… அதை எப்படி கொலையா மாத்திறதுபன்னு நம்ம சங்கர் பார்த்துப்பான்… நீ பெர்வாமன்ஸ் மட்டும் பண்ணு போதும்” என்றவன் கூற,
“அப்போ அவங்க ஆளுங்களை அவனே கொன்னுடுவானா?” என்றவள் தீவிரமாகச் சந்தேகம் கேட்டாள்.
“அரசியலில் அவசியம்னு வந்துட்டா… கூட இருக்கிறவன்னு எல்லாம் பார்க்க கூடாது… பலி கொடுத்துடணும்” என்றவன் இறுதியாக, “சரி வேலையை ஒழுங்கா முடி… நான் அப்புறமா பேசுறேன்” என்று இணைப்பைத் துண்டிக்கப் போக,
“ஒரு நிமிஷம்… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
“என்னது… சொல்லு”
“நான்… நான் கர்ப்பமா இருக்கேன்” என்றவள் தயங்கித் தயங்கி சொல்ல,
“அதை என்கிட்ட ஏன் சொல்ற… உன் கர்பத்துக்கு நானா காரணம்” என்றவன் பட்டென கேட்டுவிட, அவள் பதில் பேசவில்லை.
“இத்தனை நாள் நீ அந்த பாரதி கூடதானே இருந்த… ஸோ அது அவன் குழந்தையா இருக்கத்தான் சேன்ஸ் அதிகம்… பேசாம கலைச்சிடு… அவன் வாரிசு கூட இந்த உலகத்துக்கு வர கூடாது” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது. அவள் யோசனையாக நிமிர சங்கர் அவள் முன்னே நின்றிருந்தான். அவளுக்கு பக்கென்றானது.
அவளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தவன், “பேசிட்டியா… ஃபோனை குடு” என்றான்.
அவன் பேசியைத் திருப்பி தந்தவள், “பாரதி வந்தாச்சா?” என்று கேட்க,
“அவன் வரும் போது வரட்டும்… நம்ம கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்றபடி அவளை நெருங்கி வர, அவன் பார்வையும் பேச்சும் வேறுவிதமாக இருந்தது.
அவள் அவனை கோபமாக பார்க்க, “என்னடி பத்தினி மாதிரி முறைக்குற” என்று அவன் எள்ளலாகக் கேட்டு சிரித்தான்.
“வேண்டாம்… நான் முகுந்தன் சார்கிட்ட சொல்லிடுவேன்” என்று அவள் எச்சிரிக்கை செய்தாள். அவன் படுபயங்கரமாக சிரித்துவிட்டு,
“உனக்கு விஷயமே தெரியாது இல்ல… கிட்ட வா உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன்” என்றவன் ஹஸ்கி குரலில் சொன்னான்.
“என் ஆளுங்க மூணு பேரோட சேர்த்து உன் கதையையும்தான் தலை முடிக்க சொல்லுச்சு” அவள் காதில் ரகசியம் ஓதுவது போல அவன் அவளை உரசி நிற்க, அவளுக்கு தூக்கிவாரி போட்டது.
இத்தனை நேரம் அவன் எத்தனை திறமையாய் தன்னிடம் பேசினான் என்பதை எண்ணும் போதே அவளுக்கு அதிர்ச்சியாக வந்தது. உடன் இருப்பவர்களையே பலி கொடுப்பேன் என்று அவன் சொன்னதன் சூட்சமம் அவளுக்கு இப்போதுதான் விளங்கிற்று.
சங்கரோ அவள் மனநிலை புரியாமல், “சாகிறதுக்கு முன்னாடி சந்தோஷமா இருந்திட்டு போலாம் இல்ல” என்றபடி அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள முற்பட, அவள் மறுகணமே விலகி நின்றாள்.
யார் விதியை இங்கே யார் தீர்மானிப்பது.
51

Quote from Marli malkhan on May 15, 2024, 12:45 AMSuper ma
Super ma