You don't have javascript enabled
Bhagya novelsRomanceRomantic thriller

kaavalum kaadhalum – 2

2

இரவு சாப்பிட்டு முடித்ததும் நித்திரை அவனை மெதுவாக தழுவ காவலனுக்கு இரவில் கூட உறக்கம் ஏது? எனினும் சற்று கண் அசரலாம் என அவன் தன்னுடைய அறைக்கு செல்ல, அங்கு வித்யா எதையோ அவனது மேஜை ட்ராயரில்  தேடிக் கொண்டிருந்தாள்.

இவனை பார்த்த நொடியில் கையை விலக்கிவிட்டு “அண்ணே குட்நைட்… நான் போய் படுக்குறன்” என்று சமாளிக்க, அவனோ அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவனாய் மேலும் கீழும் பார்த்துவிட்டு,

“ஏய் வாலு என் ரூம்ல உனக்கு என்ன வேலை?” என்று வினவ அவளுக்கு பதில் கூற முற்பட்டபோது அவள் கையிலிருந்த பென்ட்ரைவ் காட்டி கொடுத்துவிட்டது.

“அண்ணா என் பென் ட்ரைவ் காணுமேன்னு தேடினேன்… கிடைச்சிருச்சு… நீ தூங்கு” என்று அவள் கூறிவிட்டு நகர்ந்தாள்.

‘என்ன இவ நடவடிக்கையே சரியில்லையே ம்ம்ம்… என் ரூமுக்கு அனாவசியமாக வரமாட்டா இப்ப என்ன வந்து போறா…  டென்ஷனா எதையோ தேடுறா… என்னவா இருக்கும்?’ அவன் இப்படி மனதில் யோசித்து கொண்டிருக்கும் போது அவன் செல்பேசி அழைத்தது. எதிர்முனையிலோ அவன் மாமன் மகள் ஆனந்தி.

“மாமா” என்று மிதமான குரலில் அவள் பேச்சை ஆரம்பிக்க…அவளது மென்மையான குரலில் அவன் மயக்கம் கொண்டான். அவளது குரல் மீண்டும்  அவனை தட்டி எழுப்பியது

“ஹலோ… மாமா ஹலோ….” என்று மிஞ்சலாக கொஞ்சம் கொஞ்சலாக!

மெல்ல தெளிந்தவன்  “சொல்லுமா ஆனந்தி” என்றான்.

 

“மாமா… எப்படி இருக்கீங்க?” என்றவள் நலம் விசாரித்த அந்த நொடி அவனது ஒட்டுமொத்த களைப்பும் நீங்கிய உணர்வு. அதுவும் ஏதோ க்ரீன் டீ குடித்துவிட்டு ரெப்ரஷ் ஆனது போல் சுறுசுறுப்பாக பதிலளித்தான்

 “நான் நல்லாருக்கேன் நீ எப்படி இருக்க?”

“ஹ்ம்ம் நல்லாருக்கேன் மாமா… அப்புறம் ஊரில் திருவிழா நடக்குது… நான் கோலம்போட்டி ல கலந்துக்க போறேன்… அதான் உங்க எல்லாரையும் கூப்பிடலானு போன் பண்ணேன் கண்டிப்பாக வரனும் மாமா… இது இந்த ஆனந்தியோட ஆர்டர்”  

“ஹாஹா ஆர்டர் போடுற அளவு ஆயிட்டீங்க… ம்ம்ம் சரி கண்டிப்பா வரேன் எனக்கும் ரிலாக்ஸேஷன் தேவை படுது வந்து இரண்டு நாள் ஊர்ல தங்கிட்டு போறேன்”  

“லீவ் கிடைக்கல னு லாஸ்ட் மினிட் ல வராம விட்டுறாத மாமா” என்று அவள் மீண்டும் அழுத்தி சொல்ல,

“இல்லை,… இந்த தடவை கண்டிப்பா வரேன் டி… எனக்கும் உங்கள் எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு” என்று கூறியவுடன்,

 “ஆமா என்ன? திடீருன்னு டி எல்லாம் போட்டு பேசுறீங்க நீங்க அப்படி கூப்பிட மாட்டிங்களே” என்றாள்.

 “இனிமே… அப்படி கூப்பிட ஆசைப்படுறன்” என்று சொல்லிவிட்டு செல்பேசியில் அவள் எங்கே நம் வெட்கத்தை பார்த்துவிட போகிறாள் என்றபடி ஒரு காவலனுக்கு உரிய கம்பீரத்தை தாண்டி சராசரி இளைஞனாக வெட்கபட்டு நகத்தை கடிக்க, கடிகாரம் நேரம் சரியாக அப்போது பத்து மணி என்று காண்பித்தது.

வந்த தூக்கமும் தலைதெறிக்க ஓடிவிட, ‘இனி எங்க தூங்குறது… சிவராத்திரி தான்’ என்றபடி தன் பேசியை மேஜையில் வைக்க அடுத்த நொடி வேறு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்து காதில் வைக்க, “ஹலோ… வித்யா! என்னடி பன்ற என்று எதிர்முனையில் யாரோ அழைக்க அது ஒரு பெண்ணின் குரல்.

‘நம்ம போனுக்கு கால் பன்னிட்டு நம்ம தங்கச்சி பேரை சொல்றாங்க.. .ம்ம்ம் யாரு இது?’ என்று யோசித்து கொண்டே மறுபுறம், “ஹலோ மேடம் யார் நீங்க?” என்று கேட்டான்.

“அண்ணா நீங்க ஆதி தானே.. .உங்க நம்பர் வித்யா தான் கொடுத்தா… நான் அவ ப்ரெண்டு… எப்பவாவது பேசணும்னா இந்த நம்பருக்கு கூப்பிடுனு சொன்னா” என்றாள்.

 “ஓ… உங்க பெயர் என்ன தெரிஞ்சிக்கலாமா?”

“மல்லிகா”

“எங்கம்மா இருக்க நீ”

“நான் இங்க தான் தாமரை அப்பார்ட்மண்டுல தங்கியிருக்கேன்” என்றதும் அவன் மூளை ராகவாவின் கொலை பற்றி யோசிதத்தவன்,

“நீ எந்த ப்ளோர்ல தங்கி இருக்க?” என்று கேட்டான். போலிஸ் புத்தியாகபட்டது அவனை வரிசையாக அப்படி கேள்வி கேட்க வைத்தது.

அவளோ தட்டுதடுமாறி, “ஆங்…அது எதுக்கு கேக்குறிங்க?” என்றவளின் பேச்சில் ஏதோ பயம் தெரிய,

 “மல்லிகா நான் சாதாரணமாக தான் கேட்டேன்… நீ ஏன் மா இவ்வளவு தடுமாற?” என்றவுடன்,

 “இல்லை ஏன் நீங்க இப்படியெல்லாம் கேக்குறிங்கன்னு யோசிச்சேன்” என்றாள்.

 “மேடம் நீங்க மட்டும் ப்ரண்டோட அண்ணனுக்கு தைரியமா போன் பண்ணுவீங்க… நாங்க எதாச்சும் கேட்டா அதுக்கு இவ்வளவு சீன் போடுவிங்க அப்படிதானே?” என்றதும் அவள் கடுப்பாகி,

“உங்களுக்கு இப்போ என்ன தெரிஞ்சக்கணும்”: என்று ஆரம்பித்தவள்,

“நான் மூணாவது மாடில தங்கியிருக்கேன்… டோர் நம்பர் 6… என் கூட என் அக்கா தங்கியிருக்கா அவ பெயர் ரேணுகா இது போதுமா? இல்ல எதாச்சும் தெரியனுமா?” என்றதும்

“ஏய் ஏய் டென்ஷன் ஆகாத.. ஆமாம் உங்க அக்கா பெயர் என்னன்னு சொன்ன திரும்ப சொல்லு” என்று அழுத்தமாக கேட்க “ரேணுகா “என்று அவள் கூற

“வாட்?” என்று கொஞ்சமாக அதிர்ந்தான்.

“ஐயா சாமி ஆளை விடுங்க… நான் வித்யாகிட்ட நேரலயே பேசிக்கிறேன்” என்று அவள் சலித்துகொள்ள,

 “ஓகே ஓகே ரிலாக்ஸ்… நீ கால் பண்ணதை வித்யாவுக்கு சொல்றேன்” என்பதற்குள் அந்த பெண் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அவன் ரேணுகா என்ற பெயரை பற்றி யோசிக்க, ஏதோ மனதிற்குள் திரைப்பட காட்சிகள் போல நடந்தவை நினைவுக்கு வந்தன.

‘என் பேர் ரேணுகா… நான் ஒரு ஆர்டிஸ்ட்’

அவன் மூளையை ஏதோ தட்டி எழுப்ப, நேரம் காலமெல்லாம் பார்க்காமல் உடனடியாக பைக்கை கிளப்பி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு விரைந்தான்.

 அவன் செல்லும் போதே எல்லாவற்றையும் ஒருமுறை மனதில் அலசி ஆராய்ந்து கொண்டே வந்தான்.

 ‘நம்பர்.6 னு மல்லிகா சொல்றா ஆனால் நம்ம பார்த்தபோது 26 னு தானே இருந்தது.

அதுவும் அப்போ மல்லிகா இல்லையே வீட்ல… எனக்கும் யாரும் இல்லாத மாதிரி தானே சொன்னா அந்த பொண்ணு… திடீர் னு மல்லிகா னு ஒருத்தி எப்படி… அதுவும் அவ எப்படி நம்ம தங்கச்சிக்கு ப்ரண்டு? ஒன்னும் புரியலையே முதல்ல அந்த வீட்டின் எண்ணை போய் பார்த்துட்டு வந்திரனும் இல்லைனா மண்டை வெடிக்கும்’

இப்படி பல கேள்விகளும் குழப்பங்களும் அவன் மூளைக்குள் ஃபுட் பால் விளையாடி கொண்டிருந்தன.

இவ்வாறு யோசித்து கொண்டே அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்து ரேணுகா வீட்டினை நெருங்கினான். முதலில் காலிங் பெல் அழுத்துவதா வேண்டாமா என தயங்கியவன் பின் மெல்ல காலிங் பெல்லை அழுத்திவிட, ரேணுகாவே வந்து கதவை திறந்தாள்.

அதற்குள்ளாக உள்ளே இருந்த மல்லிகா அவனை பார்த்துவிட்டு ஓடி வந்து,

 “அண்ணா என்ன இந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு… வித்யா எதாவது சொல்லி அனுப்புனாளா?” என்று கேட்க, அவன் கவனமும் பார்வையும் ரேணுகாவிடம் நின்றிருந்தது.

மல்லிகா குழப்ப ரேகைகளோடு, “அவ என் அக்கா… நான் போன்ல சொன்ன ல சார்” என்றவள் ரேணுகாவிடமும் திரும்பி,

“ரேணு சார்தான் என் ப்ரண்டு வித்யாவோட அண்ணன்” என்றாள்.

ரேணு அப்போது, “சாரை எனக்கு ஏற்கனவே தெரியும் டி” என்றாள்.

“அப்படியா?” என்று குழப்பமான மல்லிகா, “ஆமா நீங்க என்ன சார் இந்த நேரத்தில என் வீட்டுக்கு” என்று மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டாள்.

ஆதி சமாளித்தாக வேண்டுமென யோசித்தவன், “அது… வித்யா உன்கிட்ட ஏதோ நோட்ஸ் குடுத்துருந்தாளாம் அதான் வாங்கிட்டு போலானு வந்தேன்” என்று எதையோ குருட்டாம்போக்கில் சொல்லி வைத்தான்.

 “அதானே பார்த்தேன் இந்த நேரத்தில் நீங்க ஏன் வந்திருக்க போறீங்க நாளைக்கு எக்ஸாம் வேற அவளுக்கு” என்று சொல்ல, ஆதிக்கு தப்பித்தோம் என்றிருந்தது.

“மல்லி நீ போய் அவரு கேட்ட நோட்ஸ் எடுத்துட்டுவா” என்று அவளை அனுப்பிவைத்த ரேணுகா ஆதியை பார்க்க அவன் அவள் மீது கோப பார்வையை வீசி, “நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.

“ம்ம்ம் சொல்லுங்க”

“உண்மை யை சொல்லு… உன் வீட்டோட நம்பர் 6 இல்ல 26” என்று கேட்ட நொடி ரேணுகாவின் பார்வை நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது.

“அ….அ….சார் நான் எதுவும் பன்னல….எனக்கு எதுவும் தெரியாது” என்று பதற, ஆதியின் சந்தேகம் அதிகரித்தது.

“ஓய் போலிஸ் அடி எப்படி இருக்கும் தெரியும் ல  லேடி போலிஸ் கான்ஸ்டபிள் வரவைச்சு அடி பிச்சிருவன் ஒழுங்கா உண்மையை சொல்லு”

“என்ன உண்மை மிஸ்டர்? நீங்க உங்க லிமிட் க்ராஸ் பன்றீங்க… இந்த நேரத்தில் என் வீட்டுக்கு வந்து இப்படி விசாரணை பன்றதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?”

“ஹலோ தப்பிச்சிக்கலாம் னு பார்க்காத… எனக்கு உன் மேல சந்தேகம் லைட்டா வந்துருக்கு கன்பார்ம் ஆச்சு மவளே களி திங்க வைச்சிருவேன்”

“உண்மை என்னனு தெரியமல் பேசாதீங்க… நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ராகவா கேஸ் மர்டர்தான்… ஆனால் அதை நான் பன்னல புரியுதா? போலிஸ் தானே நீங்க? நீங்களே கண்டுபிடிங்க.” என்று அவள் தெனாவட்டோடு சொல்ல,

 ஆதி அவளை முறைத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் மின்தூக்கியில் நுழையவும் அதிலிருந்து 35 வயது மதிக்கதக்க ஒருவர் இறங்கவும் சரியாக இருந்தது.

இருவரது தோள் பட்டையும் இடித்து கொண்டது. “

“சாரி சார்” என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு அவன் நகர

“யார் இவன்? இவன் ஏன் மூனாவது மாடிக்கு வரான்? சரி நம்ம போவோம்… இந்த போலிஸ் புத்தி எல்லாரையும் சந்தேக படவைக்குது” என்று அவன் தனக்குள் திட்டிக்கொண்டே,

தரைத்தளம் சென்று இறங்கி பைக்கை சாவி போட்டு இயக்கிய அதேநேரம் அந்த லிப்டில் வந்த ஆசாமி தன் காரை கிளப்பி சென்றதை கவனித்தான்.

‘ச்ச…யார்ரா இவன்? ஏன் இப்ப வந்துபோறான்? ஒன்னும் புரியலையே… இவனும் இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவனா… அப்படி தெரியலையே… இவனை பார்த்த நியாபகமே இல்லை… இல்ல நம்ம கவனிக்கலையோ’ என்றபடி கிளம்ப செல்ல எத்தனிதத்தவன் ஏதோ மனதில் தவறாக பட, அவன் மீண்டும் உள்ளே சென்றான். ஆனால் ஏழாவது மாடிக்கு!

ராகவா வீட்டு கதவை தட்டினான். ராகவா வின் மகள் தன் உடையை சரி செய்தவாறு கதவை திறந்தாள். 

“சார் நீங்க யாரு?”

“ம்ம்ம்… நான்” என்றபடி தன் அடையாள அட்டையை நீட்டினான். “இன்ஸ்பெக்டரா நீங்க” என்று தன் கோலிகுண்டு கண்களை அவள் உருட்ட, ”நீ யாரு ராகவன் மகளா?” என்று வினவினான்.

“ம்ம்ம் ஆமா… ஆனா ஏன் இப்போ வந்து இப்படி கேக்குறிங்க?” என்றவள் கொஞ்சம் பயந்தபடி பேசினாள்.

“நான் உங்க அப்பா கேஸ் விஷயமா விசாரணை செய்யும் அதிகாரி… இந்த கேஸ் முடியுற வரைக்கும் கொஞ்சம் இப்படிதான்…  நான் எப்பவேணாலும் விசாரிக்க வருவேன்

“ஓ” என்றவள் முகத்தில் அச்சம் தொற்றி கொள்ள,

“ஆமா… நீ இப்ப என்ன படிக்கிற?” என்றவுடன்

“பன்னிரண்டாவது படிக்கிறேன் சார்” என்றாள்.

பதில் சொல்லயவள் சட்டென்று, “ஓகே சார்… உங்கள் நம்பர் வேணும் ஏதாவது ப்ராப்லம்ஸ் னா கூப்பிட வசதியா இருக்கும்”

அவளை ஏறஇறங்க பார்த்தவன் “இதான் என் நம்பர்” என்று அவன் கைப்பேசி எண்ணை எழுதி தர, “தாங்க்ஸ் சார்” என்று பெற்று கொண்டாள்.

“ஆமா அம்மா வீட்டில் இல்ல?”

“அ…அ…அம்மா..அவங்க தங்கச்சி மகனுக்கு கல்யாணம் னு வெளியூர் போயிருக்காங்க”

“அப்போ நீ தனியாக இருக்க அப்படி தானே”

“ஆமா.”

“ம்ம்ம்…. சரி கதவை தாழ்ப்பாள் போட்டு படு”

“ஓகே சார்”

கீழே இறங்கி வந்தான் பைக்கை கிளப்பி தன் வீட்டையடைந்தான்.  அவன் உள்ளே வந்ததும் வராததுமாக வித்யா பஞ்சாயத்து வைக்க ஆர்மபித்தாள்.

 “டேய் அண்ணா… உனக்கு அறிவு இருக்கா இந்த நேரத்தில் ஏன் ரேணுகா அக்காவை பார்க்க போன” என்று தங்கை கத்த ஆரம்பிக்க…

‘இவளுக்கு எப்படி நம்ப அங்கதான் போயிருந்தோம் னு தெரிஞ்சது’ என்று யோசித்தவன் அவளிடம் ஏதேதோ சமாதானங்களை கூறி தப்பி பிழைத்து தன் அறைக்குள் வந்து படுத்து கொண்டான். அவனை ஏகாந்தமாக நித்திரா தேவி தழுவி கொண்டாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content