You don't have javascript enabled
Romancevaanisri novels

Silendru oru kadhal-3

அதன் பின் நாட்களும் அதன் பாட்டிற்கு வேகமாக உருண்டோடியது.

அன்று அவர்களின் இறுதி செமெஸ்டரின்  கடைசி லெக்சர். “எப்போதடா முடியும்?!” என்ற ரீதியில் மாணவர்கள் அனைவரும் அந்த பேராசிரியரின் தாலட்டை கேட்ட வண்ணம் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் தோழியர் மூவரும் அடக்கம்.

“ஹேய்… இன்னுமாடி இந்த மேம் பாடிட்டு இருக்காங்க? சுத்த மோசம்டி… இன்னும் முப்ப…..து நிமிஷம் இருக்கே” என்று நிவாஷினி ஆரம்பிக்க அதற்கு யோகா “நான் அப்பவே சொன்னேன்…. இணைக்கு வீட்டிலேயே இருக்கலாம்னு!! என் சொல் பேச்சு கேட்டா தானே!! பாரு இவளை… இணைக்கு தான் இந்த பாடத்தோட கடைசி லெக்சர்… கண்டிப்பாக எக்ஸாமுக்கு டிப்ஸ் கிடைக்கும்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்தாள்…. முதல் ஆளா தூங்குகிற அழகைப் பார்” -என்று யோகா பற்களை நர நரவென்று  கடித்தவாறு கோபமாக கூறினாள் தூங்கிக்கொண்டிருக்கும் தனது தோழி மஹாவைப் பார்த்து.

எதார்த்தமாக லெக்சர் ஹால் வாசலைப் பார்த்த யோகா அதிர்ந்தாள். ஏனெனில் அங்கு தனது முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்தவாறு அலட்சியமாக அவர்களின் லெக்சர் ஹாலிற்குள் நுழைந்தான் கௌதம்.

உடனே சுதாரித்துக்கொண்ட யோகா நிவாஷினியை தட்டி எழுப்பி அங்கு தங்களின் பேராசிரியருடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பவனை சுட்டி காட்டினாள் .

நிவாஷினியோ அவனை பார்த்து “பே” என்று விழித்தாள். பின் யோகாவிடம் திரும்பி “இவளை எழுப்பு” என்று தூங்கிக்கொண்டிருந்த மஹாவை சுற்றிக் காட்டிச் சொன்னாள்.

யோகா சற்றும் தாமதிக்காமல் “மஹா… மஹா… எழும்புடி!!! அங்க பார் சீனியர்… ஐயோ!!! சீனியர்!!! டேஞ்சர்ர்ர்ர்!!!” -என்று தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியை தட்டி எழுப்பினாள் யோகா.

“என்ன…..டி?!. சும்மா… சீனி-யார்… சக்கரை-யாருன்னுகிட்டு  இருக்க?! தூங்க…விடுடி!! ஹாவ்வ்வ்வ்” -என்று கொடாய்வி விட்டவாறு மறுபடியும் தூங்கப்போக யோகாவோ “அடியே… அக்னிகோத்ரி…!!! அங்க பார் கௌதம்!!!கௌதம்!!  நம்ப மேம் கிட்ட பேசிக்கிட்டு இருக்கார்” -என்று அலறினாள்.

“என்ன…..து?! கௌதமாஆஆ?!” -என்று அலறிக்கொண்டே தனது கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு  தன் பேராசிரியரின் பக்கம் தன் பார்வையை பதித்தாள். அங்கு கௌதமை பார்த்தவள் வெளிப்படையாகவே தனது தலையில் கையை வைத்துக்கொண்டு “ஐயோ!!! இவர் எங்க… இங்க??” -என்று தனது தோழிகளிடம் வினவினாள்.

 “ இரு கேட்டு சொல்றேன்!!”-என்று யோகா கிண்டலடிக்க மஹா முறைத்தாள்.

அங்கு கௌதமோ மிக சீரியஸாக ” ஹலோ மேம்!!” என்று தனது முன்னாள் பேரசிரியரிடம் பேச அவரோ மிகவும் சந்தோஷமாக “ஹே… அடடடே..! வாப்பா கௌதம்! படிப்பெலாம் எப்படி?! கேள்விப்பட்டேன் நீ தான் கோல்ட் மேடலிஸ்ட்னு!! வாழ்த்துக்கள். ஐ அம் சோ ப்ரௌட் ஒஃப் யூ” -என்று பெருமையாக சொல்லி சந்தோஷப்பட்டார்.

“தாங்கியூ மேம்!! நீங்க எல்லாம் இல்லைனா இது சாத்தியமில்லை!” -என்று பணிவாக முடித்தான் கௌதம்.

“என்னப்பா இந்தப் பக்கம்?!” -என்று அவர் கேட்க இவனோ “அது வந்து… மேம்!! ஒரு எமெர்ஜன்சிகாக ஐ நீட் டு பிரிங் பேக் ஸ்ரீமஹாலக்ஷ்மி சுப்ரமணியம்! அவள் என் கசின் தான்! கேன் ஐ மேம்?!” -என்று பவ்யமாக வினவ அவரோ “ஓ… தாராளமாக! எனிவே தி கிளாஸ் இஸ் அல்மோஸ்ட் ஓவர். சோ… நோ பிரோப்ளேம்” -என்று முடித்து விட்டு மாணவர்களை நோக்கி “ஸ்ரீமஹாலக்ஷ்மி… யூ கென் கோ நௌ வித் யூர் கசின்” -என்று முடித்தார்.

தோழியர் மூவரும் வாயை பிளந்தனர் “என்னது??? கசினா???” என்று. பின் யோகா மஹாவிடம் திரும்பி “அடி கள்ளி! நம்ப சீனியர் உன் கசின்னு… ஏன் எங்க கிட்ட சொல்லவே இல்ல?” -என்று நேரம் காலம் தெரியாமல் வாயை விட மஹா அலறினாள்.

“வாட் தி…ஹெல்?” -என்று ஸ்ரீமஹாலக்ஷ்மி சத்தமில்லாமல் அலற நிவாஷினியோ “மஹா… கண்ட்ரோல்! எதுவா இருந்தாலும் போய் பொறுமையா பேசிட்டு வா” என்று ‘பொறுமையில்’ அழுத்தம் கொடுக்க மஹா நிதானமாக கண்களை மூடி ஆழ மூச்சேடுத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு பின் தனது பேக்கை தோலில் மாட்டியவாறு கௌதமை நோக்கிச் சென்றாள்.

இவள் வருவதை பார்த்த பேராசிரியரோ கௌதமிடம் திரும்பி “உன் கசின் உன்னை மாதிரி இல்லபா… ரொம்ப விளையாடுத்தனம் அந்த ரெண்டு பொண்ணுங்கக்கூட சேர்ந்துகிட்டு!! நீ கொஞ்சம் சொல்லி வை!” -என்று கூறிவிட்டு அவரது தாலட்டை… அல்ல… அல்ல லெக்சரை தொடர்ந்தார்.

இவை அனைத்தையும் காதில் புகை வர கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி கிடு கிடுவென்று லெக்சர் ஹாலை விட்டு வெளியேறினாள். அவளை தொடர்ந்து வந்த கௌதம் “ஸ்ரீ…மஹா!! ஹேய்… எங்க போற?! வெயிட்” -என்று கூறி அவளை நிறுத்தும் பொருட்டு அவளது கைகளைப் பிடிக்க ஸ்ரீமஹாலக்ஷ்மி வெகுண்டெழுந்தாள்.

“என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?! நான் என்ன பொம்மையா… நீங்க சொல்ற படியெலாம் ஆட?! ஹு ஆர் யூ?! நான் என்ன உங்க கசினா?! எப்படி இப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லமல் உங்களால பொய் சொல்ல முடியுது..? மை காட்!!!” -என்று பொரிந்து தள்ள.

“ஹேய்… சாரி பா…! நான் அப்படி சொல்ல வர்ல! ஆக்சுவலி… எனக்கு இணைக்கு தான் இங்க லாஸ்ட் டே!! இதுக்கு பிறகு உன்னைய இங்க சந்திக்க முடியாது. சோ… அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” -என்று முடித்தான் கௌதம்.

பெண்ணிவளுக்கோ என்னவோ போல் ஆகிவிட்டது. “சே… எனக்கு அறிவே இல்ல” -என்று தன்னை தானே நொந்துக்கொண்டு அவனிடம் திரும்பி “ஐ அம் சோ சா…” என்று இவள் முடிக்கவில்லை இவன் இடைப்புகுந்தான் “இட்ஸ் ஓகே…. சாரி வேண்டாம்!! அதற்கு பதிலா… ஒரு கப் காபி?!” -என்று கேட்டு தனத்திரு புருவதையும் ஏற்றி இறக்கினான் கௌதம்.

இவளும் சிறிது யோசித்துவிட்டு “ஓகே” -என்று சம்மதித்தாள்.

******************************************************************************

ஸ்ரீமஹாலக்ஷ்மி சம்மதித்தவுடன் இருவரும் கல்லூரியின் அருகில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்றனர். அங்கிருந்த டாப் ரைட் கானரில் அமர்தப்பின் தத்தம் ஆர்டசை ஆர்டர் செய்து விட்டு சற்று நேரம் அமைதி காத்தனர்.

பின் மஹா மெதுவாக ஆரம்பித்தாள். “நிஜமாகவே நீங்க இந்த விஷயத்துக்காகத்தான் என்னை காபி ஷாப்க்கு கூட்டிட்டு வந்தீங்களா?!” -என்று கேட்டாள்.

கௌதமோ “யெஸ்… அதுவும் ஒரு காரணம்” -என்றான் மர்மமாக.

மஹாவிற்கு பட படப்பாக இருந்தது. “இன்னும் வேற என்ன காரணம்?!” -என்று கேட்டாள்.

“ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்ச விஷயம் தான்…. அது என்னன்னா…” -என்று இவன் ஆரம்பிக்க இவள் சடாரென்று எழுந்தாள்.

“நீங்க ஒன்னும் சொல்லவும் வேண்டாம்!!! நான் கேட்கவும் வேண்டாம்!! இதுக்கு மேல நம்ப சந்திக்கவும் வேண்டாம்! குட் பை” என்று கூறி தனது தோல் பையை எடுத்துக்கொண்டு திரும்ப முயன்றாள்.

கௌதமோ வேகமாக அவளின் கையை பிடித்து கோவமாக உருமினான் “ஸ்ரீமஹாலக்ஷ்மி!!! என்ன டிராமா இதெல்லாம். நான் பேசிக்கிட்டு இருக்கும் போது இப்படித்தான் அவமதிப்பாயா?!” என்று காட்டமாக கேட்டான்.

“வாட் ரப்பிஷ்?! யார் டிராமா போடுறா?! இப்போ கையை விடுல சீன் இங்க வேற மாதிரி மாறிடும். மைண்ட் இட் மிஸ்டர்” -என்று கூறிவிட்டு தனது கைகளை விடுவிக்க போராடினாள்.

அப்பொழுது அவர்கள் ஆர்டர் செய்த ட்ரிங்க்ஸ் வர கௌதம் அவன் பிடியை தளர்த்த மஹா இதுதான் சமயம் என்று வேகமாக வெளியேறினாள்.

இவனோ அவசரமாக அந்த இரு காபிக்கான தொகையை செலுத்திவிட்டு அவள் பின் ஓடினான்.

அந்தோ பரிதாபம். இவன் வெளியேறிய சமயம் அவள் போன சுவடு தெரியாமல் மறைந்திருந்தாள்.

******************************************************************************

கார் பார்க்கிங்கில் வந்து தனது காரில் அமர்ந்த ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நெஞ்சம் பட படவென்று அடித்துக்கொண்டது.

“ராஸ்கல்!!! கையை பிடிக்குறான்” -என்று கூறிக்கொண்டு அவன் தோட்ட தனது கைகளை தேய்துக்கொண்டாள்.

“இனிமே… என் கண் முன் வரட்டும்… அப்போ வைச்சிக்கிறேன்” -என்று மனதில் சூளுரைத்துக்கொண்டாள்.

அந்நேரம் அவளது  கைப்பேசி சத்தமிட எடுத்து பார்த்தாள். காலர் ஐ.டியில் “நிவாஷினி” என்ற எழுத்து மின்னி மின்னி மறைய இவள் பெருமூச்சு விட்டவாறு பேச ஆரம்பித்தாள்.

“மஹா…. ஆர் யூ ஓகே!!? எங்க இருக்க?” என்ற தோழிகளின் அக்கரையான விசாரிப்புகளுக்கு “நான் நல்லா தான் இருக்கேன்” என்று கூறி விட்டு அவர்கள் கேளாமலேயே இவள் நடந்து முடிந்தவற்றை கூறலானாள்.

இவள் பேசி முடிக்கும் வரை எந்த வித கேள்வியும் கேட்காமல் அமைதி காத்த தோழிகள் இருவரும் கூறிய ஒரே விஷயம் “நீ கொஞ்சம் பொறுமையா இருந்து அவர் என்ன சொல்ல வரார்னு கேட்டிருக்கலாமோனு தோணுது மஹா!!” -என்பதைத்தான்.

இவளோ ஒன்றும் கூறவில்லை. பின் சிறிது நேரம் பேசிவிட்டு தனது வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினாள் மஹாலக்ஷ்மி.

******************************************************************************

அன்று சனிக்கிழமை.

பெருமாளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று தனது அம்மம்மா கேட்டுக்கொண்டதன்படி அவருடன் பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

பெருமாளை சேவித்து விட்டு தனது அமம்மாவை தேடி சென்றவள் அதிர்ந்தாள்.

ஏனெனில் அங்கு தனது அம்மம்மாவிடம் உரிமையுடன் பட்டு வேட்டி சட்டையில் குதூகலமாக பேசிக்கொண்டிருந்தான் கௌதம். அவனது தோற்றத்தில் அசந்தாலும் காபி ஷாப்பில் அவன் நடந்துக்கொண்ட விதம் நியாபகத்திற்கு வர “ஆஆஆஆ….” -என்று கோவமாக மனதில் கத்திக்கொண்டு அவர்களின் முன் சென்று நின்றாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

இவளை பார்த்தவுடன் பேச முயன்ற கௌதமை கை நீட்டி தடுத்தவள் அவளின் அம்மம்மாவிடம் திரும்பி ” அம்மம்மா… வாங்க போகலாம்!! கண்டவங்க கூட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கு?!” என்று தன் அம்மமாவிடம் கோவமாக கேட்டுக்கொண்டு கௌதமை பார்த்து முறைத்தாள்.

இவள் கூறியதை கேட்ட கௌதமின் பிரகாசமான முகம் நொடியில் கருத்து விட்டது. அதைக் காண பொறுக்காத அம்மம்மா “மஹாலக்ஷ்மி என்னதிது?! இப்படித்தான் பேசுவியா?! பாரு பிள்ளை முகமே கருத்திருச்சு!! இந்த கௌதம் யாருன்னு தெரியுதா?” -என்று அவர் ஆதங்கத்தில் தொடங்கி கேள்வியில் முடித்தார்.

அதற்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியோ “எனக்கு யாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை…. இப்போ நீங்க என் கூட வரீங்களா? இல்லை நடந்து வரீங்களா?!” என்று பதில் கேள்வியுடன் முடித்தாள்.

அம்மம்மா மறு பேச்சு பேசுவதற்கு முன் கௌதம் அவரை கையமர்த்தி தடுத்தான். பின் அவரிடம் தன்மையாக “இட்ஸ் ஓகே கிரண்ட்மா…. நீங்க முதலில் கிளம்புங்க” -என்று சொல்லிவிட்டு அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவர் எழ கை கொடுத்தான்.

இதை அனைத்தையும் மனதில் சுனக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. “சரியான மாயாஜாலகாரன்!! எல்லாரையும் பேசியே மயக்கிறுவான்!” என்று கூறிக்கொண்டு கோயில் வாசலை நோக்கி நடந்தாள் விரைவாக.

இவள் சற்றென்று சென்றதை மனதில் வேதனை எழ அவள் செல்வதையே ஒருவித மனதாங்களுடன் பார்த்திருந்தான் கௌதம். இவன் வருந்துவது பொருக்கமாட்டாமல் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்மம்மா புஷ்பநாயகியோ கௌதமின் தலையை வாஞ்சையுடன் கோதி “நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத…பா! நாளைக்கு அப்பா அம்மாவோட வீட்டுக்கு கட்டாயம் வரணும்! நான் காத்திருப்பேன்” என்று கூறி அவனின் சம்மதத்தையும் பெற்று விட்டே சென்றார் அம்முதியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content