You don't have javascript enabled
vaanisri novels

Silendru oru kadhal-5

கடந்த நாட்களை நினைத்துப் பார்த்தவளின் கண்களில் இருந்து சர சரவென்று கணீர் துளிகள் வழிந்தோடியது.கன்னத்தில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க முடியாமல் செயலிழந்து காணப்பட்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

இத்தனை நாட்களாக தான் அமைதியாக இருந்து தானே தனது காதலை குழி தோண்டி புதைத்து விட்டதை போல் அவளுக்கு தோன்றியது. சொல்லாத காதல் செல்லாது என்று காலம் கடந்து உணர்ந்துக் கொண்டாள்.

தன் காதலுக்காக போராட அவள் தயார்தான். ஆனால் கௌதம் இது வரைக்கும் ஒரு முறை கூட இவளின் மேல் இஷ்டம் என்று கூறியதில்லை. “எந்த தைரியத்தில் தனது காதலுக்காக தான் போராடுவது??” -என்றெண்ணி அழுகையில் கரைந்தாள்.

தனது அவசர புத்தியை எண்ணி லட்ச முறையாக வருந்தினாள்.

பின் கார் நின்ற சத்தத்தில் தான் வீடு திரும்பிவிட்டதை உணர்ந்து காரில் இருந்து கீழ் இறங்கினாள். அவளை இன்பமாக வரவேற்றனர் அவளது குடும்பத்தினர். அவர்களும் அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தனர்.

அனைவரின் விசாரிப்புகளுக்கும் தன் உள்மனதை மறைத்து தான் சந்தோஷமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டாள் மஹா.

பின் மதிய உணவை மறுத்து தூங்கப் போவதாக கூறிவிட்டு அவளது அறையில் போய் தஞ்சம் அடைந்தாள். அம்மாவிடம் கௌதமின் நிச்சயத்தைப் பற்றி கேட்க துடித்த நாவை கஷ்டப்பட்டு அடக்கினாள். அவளின் மணசாட்சியே அவளுக்கு எதிரே நின்று கேள்வி எழுப்பியது.

“இப்போ உனக்கு சந்தோஷமா?! இதுக்கு ஆசைப்பட்டு தானே அணைக்கு அந்த குதி குதிச்ச!!! வீடு தேடி வந்தவர்களை இப்படி தான் அவமானப் படுத்தி அனுபனும்!!! குட்!” -என்று அவளது மனசாட்சி அவளை குத்தி குதரியது.

கௌதம் தன் முன் நிற்பதாக எண்ணிக்கொண்டு அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்.

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா ??

மன்னிப்பாயா ???

மன்னிப்பாயா???

“இப்போ நீ ஆசை பட்ட மாதிரியே கௌதம் வில் நெவர் கம் இன்டு யூர் லைஃப் எனிமொர்!! உன்னோட அவசர புத்திக்கு கிடைத்த பரிசு இது! இனியாவது ஒரு நல்ல பொறுமையான பொண்ணோட கௌதமாவது சந்தோஷமாக வாழட்டும்!! ஆர் யூ ஹாப்பி?!” -என்று அவளது மனசாட்சி அவளை கேள்வி கேட்டது.

ஏன் என் வாழ்வில் வந்தாய்…

 கண்ணா நீ ….

போவாயோ கானல் நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும்

இரவெனும் நேரம்

எனக்கது தலையணை

நனைத்திடும் நேரம்

மன பாரம் தாங்காமல் அழுதழுதே கரைந்தாள். தான் அன்று கௌதமை மிகவும் வேதனை படுத்தியதை நினைத்து இன்று அதைவிட பன்மடங்கு வேதனை உற்றாள். தன் நிறைவேறா காதலை எண்ணி எண்ணி தூக்கம் தொலைத்தாள்.

******************************************************************************

இவள் படும் வேதனையை காண பொறுக்கமாட்டாமல் இவளின் தாய் அவளின் தோழிகளை அழைத்து இவளிடம் பேசும் படி கேட்டுக்கொண்டார்.

யோகா மற்றும் நிவாஷினி அன்றே மஹாவைக் காண வந்துவிட்டனர். இருவரும் அவள் இருந்த நிலையை பார்த்து ஓர் அர்த்தமான பார்வையை பரிமாறிக்கொண்டனர். பின் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் மனதில் உள்ளதை அவள் வாய் வார்த்தையாய் கேட்க எண்ணி அவளிடம் பேச தொடங்கினர்.

“மஹா…. என்னடி ஆச்சு?! இப்படி எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க?!” -என்று நிவாஷினி கேட்க.

“ஆமா… வாழ்க்கையே போச்சு?! எல்லாம் என் தப்பு!! நான் தான் முட்டாள்தனமா அவசரப்பட்டு வார்த்தையை கொட்டிட்டேன்…!! நான் ஒரு அவசரகுடுக்கை!! முட்டாள்!!” -என்று தன்னை தானே திட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் மஹா.

கேட்டவுடன் அவள் மனம் திறப்பாள் என்று எண்ணியிராத இரு தோழிகளும் அவள் கூறியதை கேட்டு தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர்.

“இங்க பார்டி… தக்காளி இப்போ தான் வாய் திறக்கிறா!!” -என்று யோகா  ஆச்சரியப்பட.

“யோகா…. கண்ட்ரோல்!!! இனிதான் அவளை இன்னும் பேச வைக்கணும்!” -என்று காரியத்தில் கண்ணான்னாள் நிவாஷினி.

“நான் அன்னைக்கு ரொம்ப அவசரபட்டுட்டேன். நான் கொஞ்சம் நிதானமாக அவர் சொல்ல வருவதை காபி ஷாப்பில் கேட்டிருந்திருக்கணும். சரி அப்போ தான் கேட்கவில்லை அட் லீஸ்ட் வீட்டுக்கு குடும்பத்தோட வந்தவரை அவமானப் படுத்தமலாவது இருந்திருக்கணும். நான் இதில் எதையுமே செய்யவில்லை.”

“எனக்குத்தான் பொறுமையே இல்லையே!!அன்னைக்கு என்ன தான் நடந்தது நிவாஷினி?? நீ கூட என்னவோ சொல்ல வந்த…தென் அப்பா தடுத்துவிட்டார்!!!” -என்று கேட்டு கேள்வியாக தன் தோழியை நோக்கினாள்.

எப்போதடா இந்த கேள்வியை இவள் கேட்பாள் என்றெண்ணி தவம் இருந்தவளைப் போல் மஹா கேட்டது தான் தாமதம் நிவாஷினி மடை திறந்த வெள்ளமாக அன்று நடந்ததை கூற தொடங்கினாள்.

“அன்னைக்கு கௌதம் அண்ணா அவரோட அப்பா அண்ட் அம்மாவோட இங்க உன் வீட்டுக்கு வந்த காரணமே வேற!! அவரோட அப்பா ஸ்ரீனி அங்கிள் அண்ட் உன்னோட அப்பாவும் பால்ய காலத்து நண்பர்களாம்!! நீங்க எல்லாம் முன்பு ஒரே ஊரில் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்களாம். அந்த அடிப்படையில தான் ஸ்ரீனி அங்கிள் உன்னோட அப்பா, அம்மா அண்ட்  அம்மம்மாவை பார்க்க உன் வீடு தேடி வந்தார். ஆனால் இதை எதையும் தெரியாத… இல்ல….இல்ல தெரிஞ்சுக்க விரும்பாத நீ… எல்லா விஷயத்திலேயும் அவசரப்படுவதை போல் இதிலேயும் அவசரப்பட்டு அணைக்கு சம்மந்தமே இல்லாம  கௌதம் அண்ணாவை  குற்றவாளியாக நிறுத்தினே!!! -என்று கோவமாக கூறி நிறுத்தினாள் நிவாஷினி.

நிவாஷினி சொல்வதை கேட்க கேட்க தன் தவற்றின் வீரியம் புரிய ஆரம்பித்தது ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு. தனது அவசரத்தால் எவ்வுளவு பெரிய முட்டாள் தனத்தை தான் செய்திருக்கிறோம் என்று எண்ணி வருந்தினாள்.

“கௌதமை அன்னைக்கு நான் ரொம்ப வேதனை படுத்திட்டேன். அதுவும் அவரோட அப்பா அம்மா முன்!! ச்ச!! இந்த ஐந்து வருஷமா நான் என்ன சந்தோஷமா இருந்தேன்னு நினைக்கிறீங்களா?! ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நிமிஷமும்… நான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி எண்ணி நான் கண்ணீர் விடாத இரவுகளே இல்ல. ஒரு முறையேனும் அவரை பார்க்க மாட்டேனானு ஏங்காத நாட்களே இல்ல!! நான் இங்க வந்ததே அவரை பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு தான்…. பட் யூ நோ வாட்?! அவருக்கு நிச்சயம்மாம்!!? அதுக்கு என் வீட்டுல உள்ளதுங்களே ஷாப்பிங் போகுத்துங்க!!!” -என்று கூறியபடி அவளின் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் வேதனையாக தலை கவிழ்த்தாள்.

“கென் யூ இமாஜின்?! என்னால அவரை இன்னொருத்தியோட எல்லாம் பார்க்க முடியாது யோகா…. நான் அப்போ அவரை தவிர்த்ததுக்கு காரணமே… எங்க அவர் லவ் அப்படி இப்படினு சொல்லிவிடுவாரோனு பயந்துதான். பிகாஸ் அப்போ அதெல்லாம் எனக்கு ரொம்ப தப்பா பட்டது. இப்பவுமே லவ்னு சொன்னா அப்பா என்ன சொல்வாரோனு தெரில. பட் இப்போ நானே என்னை உயர்திக்கிட்டேன். எனக்கு இப்போ நம்பிக்கை இருக்கு. எனக்குன்னு படிப்பு இருக்கு… வேலை இருக்கு… வீடு இருக்கு… பட் நான் ஆசை ஆசையா எதிர் பார்த்து வந்த வாழ்க்கை மட்டும் இல்ல!!”

“எனக்கு அவர் வேணும்….. ஐ வான்ட் ஹிம். அவருடைய மன்னிப்பு, நேசம்,… காதல் இப்படி எல்லாம் வேண்டும். ஓ மை காட்… ஐ லவ் ஹிம்…. யெஸ்!!! ஐ லவ் கௌதம். இதை நான் இப்போ தைரியமாக சொல்வேன்… பட் கேட்கிறதுக்கு அவர் இல்லையே…” -என்று அழுதுக்கொண்டே திரும்பியவள் மூச்சு விட மறந்து ஸ்தம்பித்து நின்றாள்.

அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.  தன் கண்கள் காண்பது உண்மையா என்ற பிரமிப்பில் நின்றாள் அசைவற்று.. இது கனவாக இருந்தால் இக்கணவு நீண்டுகொண்டே போகவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். இது நி- நிஜம் என்றால்….

அவளின் அறை கதவில் சாய்ந்தபடி கைகளை மாப்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்தான் கௌதம். தன்னை பார்த்த அதிர்ச்சியில் பேச்சு மூச்சின்றி நின்றவளை நேர் பார்வை பார்த்துக்கொண்டு அவளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தான் கௌதம்.

கௌதம் தன்னை நெருங்குவதை ஒரு வித  பட படப்பான மன நிலையில் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. அவளின் முன் வந்து நின்றவனை தன் நடுங்கும் கைகளை கொண்டு அவனது கன்னத்தை தொட்டு பார்த்தாள் மஹா.

“க… கௌதம்… நீ-நீங்களா?! இது க-கனவில்லையே?!” -என்று நம்பமாட்டாமல் தவிப்புடன் கேட்டவளை கண்டு கண்களை சிமிட்டி சிரித்த கௌதம் ஆமென்று தலை அசைத்தான்.

“மனிச்சிருங்க…பா” -என்ற கதரலுடன் அவனின் மார் சாய்ந்து ஐந்து வருடமாக தான் பட்ட துன்பத்தை அழுதே தீர்த்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. கௌதமோ அவளை ஆறுதல் படுத்தும் பொருட்டு அவளை அணைத்தவன் அவளின் காதோரம் இருந்த முடிகற்களை ஒத்துகியவாறு அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் கூரலானான்.

“ஸ்ரீ!! இட்ஸ் ஓகே!! ரிலாக்ஸ். தப்பு என் மேலும் தான் இருக்கு. நான் உன்னைய ஸ்டாக் செய்றதா நினைச்சு நீ பயந்துட்ட!! இட்ஸ் ஓகே டா…. நத்திங் டு ஒர்ரி!! அதான் நீ இப்போ என்கிட்டையே வந்துடியே… அப்ரோம் என்ன கவலை?! -என்றான் ஆறுதலாக.

“கௌதம்….உங்களுக்கு என் மேல் கோவம் இல்லையா??” -என்று கண்களில் சிறு பயம் படர அவனை அன்னாந்து பார்த்து கேட்டாள் மஹா.

“ஏன் இல்லாமல்???  நிறைய இருந்தது. கோவம்ன்றதை விட வருத்தம் நிறைய இருந்தது!! நான் சின்ன வயசில மிஸ் செய்த தோழியை மீட்க தான் நான் உன்னை தேடி தேடி வந்தேன் பட் நீ என்னை பார்த்து பயந்துட்டே போல. நான் உன்னைய ஸ்டால்க் பென்றதா நீ நினைச்சுட்டே போல. என் மேலும் தப்பு இருக்குதான் நான் உன்கிட்ட சொல்லிருக்கணும்!!! ஆனால் நான் உன்கிட்ட எவ்வுளவோ சொல்ல ட்ரை செய்தேன்.”

“ஒன்னு உன் பிரெண்ட்ஸோட இருப்ப இல்ல படிச்சிட்டு இருப்ப அதுவும் இல்லனா நான் சொல்ல வர்றதை கேட்கவே கூடாதுன்ற முடிவுல இருப்ப!!! நான் என்ன தான் செய்றது??? சோ… நான் நினைச்சேன் அட் லீஸ்ட் உன் வீட்டுக்கு என் அப்பா அம்மாவோட வந்தா நீ கொஞ்சமாச்சும்… நான் யார்??? ஏன் உன் பின்னாலையே அலையறேன்???  என்பது உனக்கு புரியும்னு நினைச்சுதான் நான் என் பாமிலியோட உன் வீட்டுக்கு வந்தேன்!!! ….பட் அன்னைக்கு நடந்ததே வேற” -என்று நீளமாக விளக்கம் கூறி நிறுத்தினான் கௌதம்.  

“ஐ அம் சாரி…பா!! நான் இப்படிலாம் நமக்கு சின்ன வயசு பிளாஷ்பக் இருக்கும்னு நினைச்சே பார்க்கல!! ஏன் எனக்கு மட்டும் ஒண்ணுமே ஞாபகம் இல்ல? அப்போ நம்ப சின்ன வயசுல பிரெண்ட்ஸா” -என்று கேட்டாள் சுவாரசியமாக.

“இல்லையா பின்ன?? பட்… பேக் தென் உனக்கு ரெண்டு இல்ல மூணு வயசுதான் இருக்கும்… எனக்கு ஆறு வயசு அதனால தான் என்னால உன்னைய அவ்ளோ சீக்கிரத்தில் மறக்க முடியவில்லை!! எனக்கு ஏழு வயசாகும் போது நாங்க வீடு மாறி வந்துட்டோம். தென் நீங்களும் வேற இடம் மாற்றலாகி போயிட்டீங்க…  அண்ட் வி லாஸ்ட் காண்டாக்ட்… பட் நான் உன்னை மறந்ததே இல்ல!!!  அன்னைக்கு லேப் முன் நீ உன் பிரெண்ட்ஸோட பேசிகிட்டு இருந்தப்போ உன் நேம் என் மைண்ட்ல க்ளிக் ஆனது.”

“கொஞ்ச நேரம் உன்னை வாட்ச் செய்தேன் தென் உன்னிடம் வந்து பேச்சு கொடுத்தேன் அப்பறோம் லேப் கோட் கொடுத்தேன் தென் என் மனசையே கொடுத்துட்டேன்” -என்றான் குறும்பாக.     

அவனின்  கூற்றைக் கேட்டவளோ இனிமையாக அதிர்ந்தாள்.

“நி-நிஜமாகவா? உங்களுக்கு எ-என்னை பிடிக்குமா?!” -என்று கேட்டாள் நெஞ்சம் பட படக்க.

“உன்னை இன்னைக்கு நேத்து இல்ல நீ ஒன்னும் தெரியாத சின்ன பாப்பாவா இருக்கும் நாட்களிலிருந்தே உன்னை அவ்ளோ பிடிக்கும். ஆரம்பத்தில் உன்னை விட்டு பிரிந்து என்னால இருக்கவே முடியல. தென் நாட்கள் போக போக தான் இனி உன்னை பார்க்க முடியாதுனு எனக்கு புரிஞ்சது.”

“சோ நான் அமைதியா ஆகிட்டேன். அதற்காக நான் உன்னை மறந்துட்டேன்னு இல்ல. தென் காலேஜில் சேர்ந்த பின் உன்னை தேடி நம்ப முன்பு இருந்த பழைய வீட்டுக்கு போனேன். பட் நீங்க குடும்பத்தோட ரொம்ப வருஷத்துக்கு முன்பே வேறு ஊருக்கு மாற்றலாகி போய்விட்டதாக சொன்னார்கள்.”

“அதற்கு பின் உன்னை இனிமே பார்க்கவே முடியாதோணு நினைச்சு நான் ரொம்பவே வேதனைப்பட்டேன். அப்படியும் விடாமல் உங்க அப்பா வேலை செய்த இடத்தில் போய் விசாரித்தேன். அப்படி தேடி திரியும் போதுதான் ஒரு நாள் தீஸிஸ் சப்மிட் செய்ய காலேஜ்ஜிற்கு வந்தேன். வந்த இடத்தில் நீ பேசுனது… உன் முழு பெயர்… இதெல்லாம் எனக்கு ஏதோ க்ளூ கொடுக்கிற மாதியே தோணியது. சோ உங்க அப்பாவை பற்றி விசாரிக்கும் வேளையில் உன்னை பற்றியும் விசாரித்தேன் நீ என் ஸ்ரீயாக இருக்கக்கூடாதான்ற ஆசையில்.”

“தென் கொஞ்ச நாட்கள் சென்று தான் எனக்கு உன்னை பற்றிய முழு தகல்வகளும் கிடைத்தது. நான் தேடிய என்னோட ஸ்ரீ நீதான்னு தெரிஞ்ச பின் நான் எவ்ளோ சந்தோஷ பட்டேன் தெரியுமா?! பட் உன்னை டிஸ்டர்ப் செய்ய கூடாதுனு தான் தள்ளியே இருந்து உனக்கு தேவைப்படும் பொழுது மட்டும் ஹெல்ப் செய்தேன்”

“ பட் உன்னோட அம்ம்மா ரொம்ப ஷார்ப் அன்னைக்கு கோயிலில் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாங்க. சோ அவங்க ரொம்ப பிரியப்பட்டு கேட்டுகிட்டதால் நான் மறு நாள் உன் வீட்டுக்கு வந்தேன். அதற்கு பிறகு நடந்தது தான் உனக்கே தெரியுமே” -என்று நடந்து முடிந்தவற்றை நீளமாக கூறினான்.  

“எனக்கு என்ன சொல்றதுனே தெரில!! நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு மட்டும் புரியுது!! நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் மனப்பூர்வமா ஏத்துக்குவேன்” -என்று கூறி அவன் முகம் பார்த்து நின்றாள் மஹா.

“தண்டனையா? நீயே கேட்கிற… கொடுக்கவில்லை என்றால் எப்படி?! சோ உனக்கான தண்டனை இனி வாழ் நாள் வரையில் என்னோடு என் மனைவியாக இருப்பது தான்!!! என்ன சம்மதமா?!” -என்று அவளின் கண்ணத்தில் கைகளை பதித்து அவளின் கண்களை நோக்கி கேட்டான் காதலாக கசிந்துருகி.

அவனின் கேள்வியில் ஆனந்தமாக அதிர்ந்தவள் “ஆம்” என்று தலையை ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தாள். பின் அவனின் தோல் சாய்ந்து தான் தன் காதலை உணர்ந்த தருணத்தை அவனுடன் பகிர்ந்துக்கொண்டாள்.

பின் திடீரென்று ஞாபகம் வந்தவளாக கேட்டாள்.

“அப்போ… உங்களுக்கு நி-நிச்சயம்னு சொன்னாங்களே?!” -என்றாள் அவனிடம் இருந்து விலகிய படி.

“அட என் செல்ல சூன் டு பி பொண்டாட்டியே!!! அதெல்லாம் சும்மா!! உன்னோட தி கிரேட் அம்மம்மா அண்ட் பிரென்ட்ஸ் போட்ட மாஸ்டர் பிளான். அதன் படி தான் எல்லாம் நடந்தது. இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தா தான் நீ வழிக்கு வருவேணு உன் அம்மம்மா சொல்ல உன் பிரென்ட்ஸும் அதையே சொன்னாங்க… சோ அதான்” -என்று கூறி அவளை மேலும் இறுக்கி அணைத்தான்.

“வாட்?!” -என்று அதிர்ந்தவள். “அப்போ நீங்களும் இதுக்கு உடந்தையா?!” -என்று கேட்டு அவளின் கைகளைக் கொண்டு அவனை மொத்தினாள்.

“நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா?! யூ சீட்!! ராஸ்கல்!!” -என்று திட்டிக்கொண்டே அடித்தவளின் கைகளை லாவகமாக பற்றியவன் சிரித்துக்கொண்டே அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான். கௌதமின் இதழ் ஒற்றளில் தன்னை மறந்து நின்றாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

இவர்களின் மோன நிலையை கலைக்கும் பொருட்டு வந்தனர் நிவாஷினி மற்றும் யோகதர்ஷினி.

“ஹலோ… எக்ஸ்கியூஸ்மீ!!! ரெண்டு சின்ன பொண்ணுங்க வரப்போறோம்… சோ உங்க  பதினெட்டு வயதற்குமேல் ஸீன்ஸ் எல்லாம் சென்சர் செய்யுங்க பிலீஸ்” -என்ற கிண்டலுடன் நுழைந்தனர் இருவரும்.

இவர்களின் குரலை கேட்டவுடன் அவசரமாக கௌதமின் அணைப்பில் இருந்து விலகினாள் மஹா. பின் தோழியர் இருவரையும் பார்த்து போலியாக முறைத்தாள்.

“இதெல்லாம் நீங்களும் தாய் கிழவியும் பார்த்த வேலையா?” -என்றாள் யோகா மற்றும் நிவாஷினியை நோக்கி.

“நாங்க மட்டும் பக்காவா பிளான் போட்டு காய் நகர்த்தவில்லைனா நீ இன்னும் சோக கீதம் தான் வாசிச்சிருப்ப தக்காளி…” -என்றால் யோகா இல்லாத சட்டை காலரை தூக்கி விட்டவாறு.

“சரி… சரி… சீக்கிரம் ப்ரொபோஸ் பெண்ணுங்க சீனியர் சர்” -என்றாள் நிவாஷினி.

“அதெல்லாம் நாங்க பார்த்துகிறோம்… நீ ஏன் ரொம்ப அவசரப்படுற” -என்றாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி சந்தேகமாக.

“ஹிஹிஹி… அதுவா… அது வந்து!! நீ சீக்கிரம் செட்டல் ஆகிட்டா அடுத்தது… நான்  செட்டல் ஆகலாமேனுதான்” -என்று அசடு வழிந்தவாறே கூற அங்கு சிரிப்பலை பரவியது.

பின் மஹா தனது தோழிகள் இருவரையும் கட்டி அணைத்து “நீங்க ரெண்டு பேரும் என்னோட தோழிகளா கிடைக்க நான் என்ன தவம் செய்தேனேன்னு தெரில!! எப்பவுமே என் கூடவே இருக்கிறதுக்கு தாங்க்ஸ் அ லாட்!!” -என்றால் உளமார.

ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அணைப்பில் இருந்தபடியே யோகா கூறினாள் “லக்ஷ்மி… நாங்க யோகதர்ஷினி அண்ட் நிவாஷினி!! நீ எங்களை கட்டி பிடிக்கிற ஸ்டைல பார்த்தா உன்னோட கௌதமை ஹக் பேன்ற மாதிரியே இருக்கே….” -என்று வம்பிழுக்க.

யோகாவை துரத்திக் கொண்டு ஓடினாள் மஹா அவளின் வீட்டைச் சுற்றி.

தங்களின் செல்ல மகளின் சந்தோஷத்தை கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய பார்த்திருந்தனர் சுப்ரமணியம் மற்றும் நேசமலர் தம்பதியினர்.

One thought on “Silendru oru kadhal-5

  • Anonymous

    Nice story 👌

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content