vithai-6
விதை 6
“அப்டியா?அப்போ வச்சு செஞ்சிறவேண்டியதுதான்”
“நோஓஓஓ! மீ பாவம்.”
“அது! அந்த பயம் இருக்கட்டும். ஆமா,நீங்க ஏதோ கசப்பான அனுபவம்,பொண்ணுன்னனு சொன்னீங்களே, அது என்னது?”
இப்போது அவன் முகம் இறுகியது.
“நான் பல வருஷம் கழிச்சு உன்கிட்டதான் ஒரிஜினல் வர்ஷனா இருந்தேன்.+2 படிக்குற வரை நான் இப்படித்தான் இருந்தேன்.
கலகலன்னு மனசுல தோணினத சட்டுனு சொல்லிடுவேன். ஆனா அந்த இன்சிடென்ட்க்கு அப்பறம், நான் சுருங்கி ஒடுங்கிப் போய்ட்டேன். என்னோட இந்த நேச்சர்தான் ஒரு உயிரை பலி வாங்கிருச்சுனு கில்ட்டி ஃபீல்.
அதுல இருந்து வெளிவர்றதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். அமர்தான் ரொம்ப சப்போர்ட் செஞ்சான். அவன் இல்லனா நான் என்னஆயிருப்பண்ணே தெரில. எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்திருந்தா கூட இவ்ளோ சப்போர்ட் பண்ணிருப்பாங்களா தெரியாது.
நான் +2 படிக்கிறப்போ என் கூடப் படிச்ச பொண்ணு ஒருத்தி வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா.நான் எதோ விளையாடறா போலன்னு சிரிச்சிட்டு போய்ட்டேன்.
ஆனா விடாம வாய்ப்பு கிடைச்சப்போலாம் சொல்லிட்டே இருந்தா. அப்போதான் எனக்கு அவ சீரியஸா சொல்றானே புரிஞ்சுது.
இந்த வயசுல என்ன லவ்.ஒழுங்கா படி. இப்டிலாம் டைவர்ட் ஆகாதனு சொல்லிட்டு போய்ட்டேன்.
அன்னைக்கு +2க்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சு.கிளாஸ் முடிஞ்சு எல்லாரும் போய்ட்டாங்க.எனக்கு சிலடௌட்ஸ் இருந்துச்சு.அதை கேட்டு க்ளியர் பண்ணிட்டு வந்தா,அவ வேற ஒரு கிளாஸ்ல இருந்து என்னைகூப்டா!
ஏன் இன்னும் போகாம இருக்க.எல்லாரும் போய்ட்டாங்க.ஸ்கூல் வேன் கூடபோயிருச்சு சீக்கிரம் கிளம்புன்னு சொன்னேன்.
என்கிட்ட பேசணும்னு சொன்னா.திரும்ப அதேபோல எதோ சொல்ல போறானு நெனச்சேன்.அதையேதான் சொன்னா.
” ஐம் மேட்லி இன் லவ் வித் யூ. நீ இல்லாம,என்னால வாழவே முடியாது.நீதான் என் ஹீரோ ”
அப்டி இப்டினு என் தலை முடில ஸ்டார்ட் செஞ்சு ஹ்யூமர் சென்ஸ் வரை எல்லாமே பிடிச்சிருக்குனு இன்னும் நிறைய சொன்னா.
அன்னைக்கு நடந்தது இன்னும் என்கண்ணு முன்னாடியே நிக்குது…”
(அன்று அவர்களுக்குள் நடந்தஉரையாடல் இதுதான்)
“எவ்வ்ளோ அட்வைஸ் பண்றாங்க நமக்கு,இந்த வயசுல இப்டித்தான் இருக்கும்னு,அதெல்லாம் உன் காதுல ஏறலயா? ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போற வரை எதுக்கும் இடம் கொடுக்காத. அதுக்கப்பறமும் இதே ஃபீலிங்ஸ் இருந்தா,அப்போப் பார்த்துக்கலாம். இப்போக் கிளம்பு ”
அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.
“டேய்ய்! நான் சொல்றது புரியுதா இல்லையா? ஐ லவ் யூ.நீ இல்லாம வாழ முடியாதுனு சொல்றேன்.நீ கதை பேசிட்டு இருக்க.இந்த ஏமாத்து வேலைலாம் வேண்டாம்.என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ “
“உனக்குப் பைத்தியமா? இஷ்டத்துக்கு உளர்ற. “
“இல்ல,ஐ மீன் இட்.இப்போ கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம். 18 க்கு அப்பறம் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.படத்துல வர்றது போல,நீ உங்க வீட்டுக்குப் போ நான் எங்க வீட்டுக்குப் போறேன் “
“படத்துல வர்ற நல்ல விஷயம்லாம் விட்றுவீங்க. இப்டி விஷயம்லாம் மட்டும் நல்லா ஏறுது மண்டைல. உனக்கு முத்திருச்சு. ஆளை விடு !பை “
“நில்லுடா. ப்ளீஸ் நான் சொல்றதக் கேளு. ஐ நோ,இதுஎல்லாம் முட்டாள்த்தனம்தான். பட் ஐ லவ் யூ சோ மச்.ஐ டோன்ட் வாண்ட் டு மிஸ் யூ.அதான் இப்டிப் பேசறேன்.ப்ளீஸ் அண்டெர்ஸ்டேண்ட்.”
“பட் ஐ ஹேட் யூ. இப்டி முட்டாள்த்தனமா இருந்தா யாருக்கு பிடிக்கும். “
“நோ! யூ லவ் மீ.எனக்குத் தெரியும்.நீ என்னை கேர் பண்ணுவ.ஜாலியாப் பேசுவ .உன் பர்த்டேக்கு எனக்கு மட்டும் ரெண்டு டைரி மில்க் குடுத்த.அதுவும் சிரிச்சிட்டே”
“கடவுளே! உனக்கு சாக்லேட்னா உயிர்னு தெரியும். அதனால குடுத்தேன். அந்தப் பொண்ணு வனிதாக்கு கேசரி அதிகமா குடுத்தேன். அப்போ அவளை லவ் பண்றேனா ?”
“நீ பொய் சொல்ற”
“இல்ல நிஜம்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.ஐ குட் ஃபீல்.நீ என்னை லவ் பண்ற.பட் இப்போ வேணாம்னு யோசிக்கிற. எனக்கு இது கூட பிடிச்சிருக்கு.ஐ டோன்ட் வாண்ட் டு மிஸ் யூ.ப்ளீஸ் கல்யாணம் பண்ணிக்கோ.தென் ஐ வில்வெய்ட்.அப்பறம் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்ன செய்றியோ செய்.”
“உன்கிட்ட மனுஷன் பேசமுடியாது”
“போகாத! நில்லுடா! நீ இல்லனா நான் செத்திருவேன்”
போனவன் திரும்பி வந்தான்
“முட்டாள்த்தனமா பேசாத,இந்தச் சின்ன விஷயத்துக்கு இப்டிப் பேசுவியா? உன் அம்மா அப்பாவை நெனச்சுபாரு”
“பார்த்தியா? இப்போ எப்படி பதறி வந்த.யூ லவ் மீ.அதான் என் அம்மா அப்பா மேலெல்லாம் கேர் எடுக்கற “
“யார் இப்டி சொன்னாலும் யாருக்கும் பதறும்.இது மனித நேயம்”
“எனக்குனா அதிகம் பதறுவ.இது லவ்தான் “
அவன் எதுவும் பேசாமல் எரிச்சலுடன் எழுந்து சென்றான்.
“டேய்ய்ய்! நீ இல்லனா நான் நிஜமாவே செத்திருவேன்டா!”
“செத்து போ! நிம்மதி “
அன்று நடந்ததை நினைவுகூர்ந்து வந்தனாவிடம் கூறியவன் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“ஒரு கோவத்துல, என்ன செய்றதுன்னே புரியாம கன்வின்ஸ் பண்ண முடியாம எரிச்சலாகி இப்டி சொல்லிட்டேன்.அப்பறம் தான் என்ன சொல்லி வச்சிருக்கோம்னு புரிஞ்சுது.பட் திரும்ப சாஃப்டா பேசினா அதையே சாக்கா வச்சு திரும்ப ஸ்டார்ட் செய்வான்னு தோணுச்சு.அதான் திரும்பப் போகல.கதறிக் கதறி அழுதா, தாங்கவே முடில!
ஆயாம்மா இருந்தாங்க.அவங்ககிட்ட ,அவ வீட்ல திட்டிட்டாங்கனு அழறா.வீட்டுக்குப் போக மாட்டேங்குறா. நீங்க பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு,அவ வீட்டுக்கு ஃபோன் பண்ணி, அவ அப்பாவை வரவச்சேன். அது வரைக்குமே அழுதுட்டேதான் இருந்திருக்கா.
அவங்கப்பா கிட்ட எல்லாம் சொல்லி அவள பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டேன்.
அவங்களும் ஃபர்ஸ்ட் பொறுமையாதான் சொல்லிருக்காங்க.படிப்பு கெடவே கொஞ்சம் ஹார்ஷா பேசிருக்காங்க போல. நான் அவ பேரன்ட்ஸ் கிட்ட சொன்னது அவளுக்கு சுத்தமாபிடிக்கல போல. சூசைட் பண்ணிக்கிட்டா.”
வர்ஷன் வெடித்து அழுதான் இப்போது….
சிறிது நேரம் அமைதி காத்த வந்தனா பின்னர்க் கூறினாள்,
“ஒரு பொண்ணைக் கொன்னுட்டு, கூலா வந்து கதை சொல்லிட்டு இருக்க.என்ன மனுஷன் நீ?”
கோபம் கொப்பளிக்க கூறினாள். அதிர்ந்து பார்த்தவன் கூறினான்.
“அவளா செஞ்சுக்கிட்டா,அது எப்டி கொலை ஆகும்.”
“நீதான்டா காரணம் “
“நான் என்ன செஞ்சேன்? “
“நீதானே செத்துப்போன்னு சொன்ன “
“நான் சொன்னா உடனே செத்துபோவாளா ? நான் ஒழுங்கா படிக்ககூடதான் சொன்னேன்,செஞ்சாளா ?”
“டீனேஜ் பொண்ணுகிட்ட பக்குவமா பேசாம இப்டி பேசியிருக்க. அவளே எமோஷன்ல இருந்திருக்கா.அவகிட்ட போய் இப்டி சொல்லி வச்சிருக்க “
“அப்போ எனக்கும் டீனேஜ்தான். இருந்தாலும்,அவ எமோஷன்ல இருக்கான்னு தெரிஞ்சு ,எதுவும் ஆகக்கூடாதுன்னுதான் அவ அப்பாகிட்ட பிரச்சனைய சொல்லி விட்டுட்டுப் போனேன்.அதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும்?”
“நீ சொன்ன வார்த்தைலதான் அவ செத்துட்டா”
“இல்லவே இல்ல.அவ வளர்ந்தவிதம்,அவ பிடிவாதம்,அதான்காரணம்.17 வருஷமா நோ சொல்லாம வளர்த்திருக்காங்க. திடீர்னு வர நோ’ வை தாங்கமுடில. ஈகோ ஹர்ட் ஆகுது.
அவளுக்கு என் மேல லவ்,பியூர் லவ்னே வச்சுக்கிட்டாலும், அதை விட மேலோங்கி நின்னது அவ பிடிவாதம்.நான் ஒரு டாய் போல. ஆசைப்பட்டுட்டா அடஞ்சே தீரணும்.
லவ் கொஞ்சமாச்சும் அடுத்தவங்க நிலையை யோசிக்கும். இப்டி இருக்காது. நான் அவசொன்னபடியே செஞ்சிருந்தாலும் வேற எதுக்காச்சும் நோ சொன்னா இப்படித்தான் பிஹேவ் செஞ்சிருப்பா.
ஒரு பையன் பொண்ணை போர்ஸ் பண்ணி லவ் பண்ண சொன்னா குய்யோ முறையோனு குதிக்குறீங்க.அதே பொண்ணு செஞ்சா மட்டும் சரியா? இது எந்த ஊரு நியாயம்?”
“சோ அந்த பொண்ணு சாவுக்கு நீங்க எந்த வகைலயும் காரணம் இல்ல.அப்டித்தானே வர்ஷன்?” என்று அவனைப் போன்றே கையைக் கட்டிக்கொண்டு வெற்றி புன்னகையுடன் கேட்டாள்.
அதைப் பார்த்து, மெல்ல உணர்ந்து மலர்ந்து புன்னகைத்தவன், தன் டெக்கினிக்கை தனக்கே பயன்படுத்தியதை எண்ணி வியந்து, மகிழ்ந்து, பூரித்து,
“ஹேய்! திருநெல்வேலிக்கே அல்வாவா?” என்று குதூகலமாய் கூறினான்.
” தேங்க்ஸ் எ லாட்ட்ட் வந்தனா.ஐ ஃபீல் வெரி வெரி ரிலாக்ஸ்ட் நவ்.ரொம்ப நாளா மனசுல இருந்த பாராங்கல்லைத் தூக்கி போட்டது போல இருக்கு.ஐம் சோ லக்கி. நான் என் வாய்தான் சரி இல்ல,எங்க ஒரு பொண்ணை கல்யானம் செஞ்சு, அப்டி பேசிட்டா,அதே போல ஆய்டுமோனு பயம்.அதான் கல்யாணமே பண்ணிக்க கூடாதுனு இருந்தேன்.
உன்னப் பார்த்தப்போ, பார்வையிலேயே ஒரு சின்ன திமிர், அவ்ளோ நிமிர்வு, என்னை அறியாமையே என்னை இழுத்துச்சு.அதுல மெய் மறந்துதான் அன்னைக்கு பழைய வர்ஷன் வெளிய வந்துட்டேன் போல.
நீ சரிக்கு சரி பேசினப்போ,ஒருவேளை,இவளை அப்டி சொன்னா என்ன செய்வா? இவ சாவ மாட்டா, நம்மளைதான் போட்டுத்தள்ளுவானு தோணுச்சு.
உன்கிட்ட நான் நானா இருக்கலாம்.அதைவிட வேற என்னவேணும்”
“சரி சரி போதும். ரொம்ப லென்தியா போயிட்டே இருக்கு.ரீடர்ஸ்க்கு போர் அடிக்கும்.வேற சீன் போலாம் வா”
(ரீடர்ஸ் காப்பாத்தினத்துக்கு தேங்க்ஸ்சா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் )
“சரி போலாம் வர்ஷன்.போய் அதிதிகிட்டயும் அமர்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பனும்.டைம் ஆயிரும்”
“சரி வா போலாம்.ஐ திங்க் அங்க ஒரு காதல் கதை இருக்கும்.”
“ஹான்! என்ன சொல்றீங்க?”
“நீயே தெரிஞ்சுப்ப வா”
“ஓவர் பில்டப்பா இருக்கே”
“ஹேய், ஸ்டூல விட்டுட்டு வந்துட்ட”
“என்னது ஸ்டூலா?”
“ஆமா காலோடவே மாட்டி வச்சிருப்பியே”
“டேய்ய்ய்! உனக்கு கொழுப்பு ஓவரா போச்சு” என்று கூறியவாறே திரும்பி நடந்தாள்.
“என்னது? டா வா???!!! ப்ரொபோஸ் பண்ணி முழுசா முப்பது நிமிஷம் கூட ஆகல.அதுக்குள்ள நல்ல மரியாதைமா! நெஞ்சம் நெகிழ்ந்து போச்சு”
“பின்ன நைசா நக்கல் அடிச்சா கேட்டுட்டு இருப்பாங்களா?”
ஊஞ்சலில் அமரும்போது கழட்டியவள் மறந்துவிட்டாள். இப்போத அந்த ஸ்டூலை, சாரி வந்தனாமா செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டாள்.
” இத போட்டுட்டே ஆடிருந்தனா, யாரும் ஆட்டிவிட்ருக்க வேணாம்”
“ஏகாந்தம் போயிருக்குமே”
“ஹேய் கேடி”
“இவ்வாறு பேசிக்கொண்டே அலுவலகம் அடைந்தனர்”
இவர்களையும் இவர்கள் முகத்தில் மின்னிய பரவசத்தையும் பார்த்த அதிதியும் அமரும் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அமரும் அன்று அங்கேயேதான் இருந்தான். சில வேலைகள் இருந்தாலும் அதிதியுடன் இருப்பதுதான் பிரதான நோக்கம்
பின்பு நால்வரும் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு விதவிதமாக மகிழ்ந்து ரகரகமாக புன்னகைத்தனர்.
பின்பு வந்தனா விடை பெற்றுக் கிளம்பினாள். அவளுடன் ஆவலுடன் சென்ற வர்ஷன்,அவள் வண்டி சாவியைப் பிடுங்கிக்கொண்டு, அவளை அவனே கொண்டு விடுவதாய் கூறினான்.
அவள் ஸ்கூட்டி இங்கே இருக்கும்,அதை சாக்காய் வைத்து மேலும் சந்திப்பினை ஏற்படுத்திக்கொள்ள அவன் சிந்திப்பது முடக்கப்பட்டது.
அவளும் சிறிது யோசித்துவிட்டு ஒப்புக்கொண்டாள்.
அவள் அவன் பைக்கில் ஏற எத்தனிக்கும்பொழுது,
“வந்தனா ஒரு நிமிஷம்,ஏறி உட்கார தோளை பிடிக்கிறது, பேலன்ஸ்னு இடுப்பை பிடிக்குறது, பிரேக் போட்டா வந்து மோதுறதுலாம் எனக்குப் பிடிக்காது சொல்லிட்டேன்.அதெல்லாம் என்
வைஃப் மட்டும்தான் செய்னும்”
என்று சிரித்துக்கொண்டே சொன்னான். அவளும் சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, “அப்போ நான் யாரு?” என்று கேட்டாள்.
அவனுள் ஆயிரம் புல்லாங்குழல் இசை போட்டி போட்டு வந்து சென்றன .அதனைக் கண்களில் மட்டும் காட்டிவிட்டு,
“மனசலவுல நீ முழு பொண்டாட்டிதான்.பட் அஃபீஷியலி நீ, கால் பொண்டாட்டிதான்”
“அப்டியா? அப்போ நான் என் ஸ்கூட்டிலயே போறேன் “
” ஹேய் ப்ளீஸ்”
“ரொம்பதான் ஓவரா பேசற”
“சரி சரி ஏறுடா”
தொடவில்லை.படவில்லை.ஆனால்,இருவரும்,எந்த டெக்னாலஜியும் இன்றி,மாயம் இன்றி மந்திரம் இன்றி மிதந்து கொண்டிருந்தனர் .
அவள் பிஜி அடைந்த உடன் புன்னகைத்தவாறே விடைபெற்றுக் கிளம்பியவள் வழியில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் கால் வைத்து பேலன்ஸ் தவறி விழுந்தாள். இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவன் ஓடிச் சென்று கைபிடித்து எழுப்பி விட்டான்.
“பார்த்து போலாம்ல. இதுக்குதான் இந்த ஹீல்ஸ்லாம் போடக்கூடாது .ஏன் கஷ்டப்படற.”
கையைப் பிடித்தவாறே அவள் கையில் இருந்த மண்ணைத் தட்டிவிட்டு காயங்களைப் பார்த்தான்.
“வேற எங்கயும் அடிபடலயே?”
” இல்ல”
“கண்டிப்பா கால்ல காயம் இருக்கும், போய் பார்த்துக்கோ, ஏதாச்சும் மருந்து போடு” அதுவரையில் அவள் கையை விடவில்லை.
அவள் அதனை சுட்டிக்காட்டி,
” என் கையை விடு,என் புருஷன் மட்டும்தான் பிடிக்கணும்” என்றாள்.
அதுவரையில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லைதான், ஆனால் அதன் பிறகு இனம் புரியாத சிலிர்ப்பு. அவளது, “புருஷன்” பதமா, இல்லை அவள் கையின் ஸ்பரிசமோ தெரியாது.
சிரித்தவாறே,
“அப்போ நான் யாரு?” என்று கேட்டான்.
“ஹான் நீ உன் பொண்டாட்டிக்கு புருஷன்” என்றாள் சிரிப்பினை சிந்தியவாறே.
“ஆஹான்! நான் கிடைச்ச வாய்ப்பை வழுக்கி விழ வச்சிட்டேன் போலயே,பேசாம தோள்ல கை போட சொல்லிருக்கணுமோ”
அவள் சில்லறைகளை சிதறவிட்டதுபோல் சிரித்துவிட்டு,
” ஆமான்டா டால்டா” என்றாள்
” போடி ஜிஞ்சர் டீ”
“என்னது ஜிஞ்சர் டீயா?”
“ஆமா ‘டா’க்கு ரைமிங்கா டால்டா போல,’டி’க்கு ஜிஞ்சர் டீ .அதோட ஐ லவ் ஜிஞ்சர் டீ. கொஞ்சம் காரம். இருக்குற இடம் மனமா இருக்கும்.குடிச்சா ப்ரெஷ்ஷா இருக்கும். ஹெல்தி. உன்னைப் போலவே “
” ஆஹான்! ஓகே.பை.நாளைக்கு பார்க்கலாம்” என்று புன்னகையுடன் விடைபெற்றாள்.
” அம்மம்மா! நுனி விரல் தொட்டே என் இதயம் பதறியதே!” என்று பாடினான்.
” அதுக்கு மேல பாடினா கொன்றுவேன்,ஓடிப்போயிரு! “என்று மிரட்டினாள்.
“இருடி! பாட வேண்டிய நேரத்துல முழுசா பாடுவேன்!இன்னும் பாட்டு நிறைய ரெடி பண்றேன் ” என்று இவனும் மிரட்டுவதுபோல் பாவலா காட்டி விட்டு சென்றுவிட்டான் .
‘நெஞ்சமெல்லாம் காதல்’ பாட்டில் வரும் ஹீரோ ஹீரோயின் போன்ற நிலையில் இருவரும் சென்றனர்.