You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal-11to15

11

நிச்சயதார்த்தம்

சந்திரகாந்த்தின் பிரம்மாண்டமான வீடு முழுவதும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நிச்சயத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் வேலையாளிகள் எல்லோரும் சேர்ந்து செய்து கொண்டிருக்க, சமுத்திரனும் அவனுடைய மனைவி சுபாவும் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தனர்.

சமுத்திரன் பற்றி நாம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அவன் ஆதியின் நெருங்கிய நண்பன் என்று சொல்வதை விட சந்திரகாந்த்தின் வளர்ப்பு மகன் என்றே கூற வேண்டும்.

ஆதித்தியா ஹோட்டல் இத்தனை பெரிய வளர்ச்சியை அடைவதற்கு முன்பு சமுத்திரனின் தந்தை அங்கே சாதாரண வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சமுத்திரனின் திறமையை அறிந்து கொண்ட சந்திரகாந்த் அவனை ஆதியோடு சேர்த்து படிக்க வைத்தார்.

அவன் இன்று பெரிய கிரிமனல் லாயராக இருப்பதற்கு சந்திரகாந்தே முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி அவருடைய நெருங்கிய தோழனும் வக்கீலுமான திருமூர்த்தியின் ஒரே மகள் சுபாவினை திருமணம் முடித்து வைத்தார்.

ஆதி தன் தந்தை சந்திரகாந்த்திடம் நேரடியாக பேசாத ளவுக்கு இருவருக்குமிடையில் சில மனவருத்தங்கள் இருப்பதின் காரணத்தால் அவர்களின் உறவுக்கிடையில் சமுத்திரனே பாலமாகத் திகழ்ந்தான்.

நிச்சியத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு சமுத்திரன் மாடியிலிருந்த ஆதியின் அறைக்குள் நுழைந்தான். ஆதித்தியா வெள்ளை நிற சட்டையும் அதன் மேல் ஒரு கருப்பு நிற ஓவர் கோட் அணிந்து கொண்டிருந்தான். இந்த உடையில் அவனின் உயரமும் கம்பீரமும் நம்மை மலைக்கச் செய்கிறது.

அவனின் முடியை கைகளாலேயே கோதியபடி நின்று கொண்டிருந்தான்.

என்ன ஆதி… ஹீரோ மாதிரி ரெடியாயிருக்க

ஹீரோ மாதிரி இல்ல… நான் ஹீரோவேதான்என்றான்.

சரி… மதுமிதாவை மீட் பண்ணி நிச்சயத்தை நிறுத்த போறேன்னு சொன்ன. கடைசியில் மாடலிங் பண்ணப் போறேன்… மேரேஜ் வேண்டாம்னு சொன்னவள் உன்னைப் பாத்ததும் என்கேஜ்மென்டுக்கு ஓகே சொல்லிட்டாளாம். நீ என்ன சொன்ன? இப்ப என்ன பண்ணி இருக்க?” என்று சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தான்.

தட்ஸ் நாட் மை மிஸ்டேக். நான் பிரண்ட்லியாத்தான் பேசினேன். ஷி மிஸ்அன்டர்ஸ்டுட் மீ… வாட் டு டூ? பட் அது மேட்டர் இல்ல… இப்ப நடக்கப் போது பாரு ரியல் மேட்டர்… வா காட்டறேன்என்று சொல்லி ஆதி சமுத்திரனை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

******

விந்தியா பார்க்க அழகுப்பதுமை போலவே காட்சியளித்தாள். ஆனால் விந்தியா தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வேறு யாரையோ பார்ப்பது போலிருந்தது. அவள் இயல்பாக இருந்தாலே அழகு என்பது அவளுடைய எண்ணம்.

ஏற்கனவே அவள் நகைகளை அணிந்து கொண்டிருக்க மாதவி இன்னும் சில நகைகளைப் போட்டு விட வந்தாள்.

அம்மா… என்னைப் பார்த்தா நகை ஸ்டான்ட் மாதிரி தெரியுதா உனக்கு?” என்று மாதவியிடம் கோபம் கொண்டாள் விந்தியா.

அழகா இருக்கும்டி போட்டுக்கோ

ஒண்ணும் வேண்டாம்… போட்டுட்டிருக்கிற நகையே கழுத்து வலிக்குது. பொண்ணுங்க தப்பித் தவறி கூடத் தலைய நிமிந்திரக்கூடாது… அதுக்குத்தான் இந்த நகை எல்லாம்… இல்ல?” என்றாள் விந்தியா.

இவளிடம் பேசினாள் ஏதேனும் வம்பு வளர்ப்பாளோ, என அந்த நகைகளை மாதவி திருப்பி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். மாதவி சென்றதும் விந்தியா தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.

எப்ப கேட்டாலும் செலவாயிடுச்சு… காசு இல்லனு சொல்லும் போதே நினைச்சேன். எல்லாம் நகையா மாறியிருக்கு

என்ன விந்து… எல்லோரும் கல்யாணம் ஆன பிறகுதான் தனியே புலம்புவாங்க. நீ இப்பவேவா?” என்றாள் நாம் விமானத்தில் சந்தித்த தோழி சித்ரா.

வா சித்ரா!

இப்பதான் லண்டன் மாப்பிள்ளையைப் பார்த்தேன்… சூப்பர்… யு ஆர் வெரி லக்கி

நீ வேற எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றாதே

வாட் விந்து… செம லுக்… நீ வேண்டாம்னு மட்டும் சொல்லேன்

வேண்டாம்…

என்னடி இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்ட?

அப்புறம்?”

இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே விந்தியாவை வெளியே நிச்சியதார்த்த சடங்கிற்கு அழைத்தனர். வனிதா மாதவிக்கு உதவியாய் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிவா கிருஷ்ணகுமாருடன் பேசிக் கொண்டிருந்தான். அவனின் சொந்தக் கதையும், வெளிநாட்டு பெருமையையும் வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். இவனை எப்படி விந்தியாவிற்கு பிடித்தது என்பது சிவாவிற்குப் புரியாத புதிராய் இருந்தது.

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும் விந்தியாவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் திடீரென எழுந்து கொண்டான். அவன் வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை விந்தியாவின் கைகளில் அணிவிக்க அவள் அருகில் வந்து நின்றான்.

அவன் அவளின் விரல்களில் அணிவித்த மோதிரம் மனதில் ஏதோ புரியாத சோகத்தை விந்தியாவிடம் ஏற்படுத்தியது. தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் விந்தியா அங்கிருந்து சென்றாள். நிச்சியதார்த்த சடங்குகள் எல்லாம் நிறைவு பெற்றது.

ஆனால் ஆதியின் வீட்டில் நடப்பவை எல்லாம் தலை கீழாய் இருந்தது. மாடியில் இருந்தபடி ஆதி நடப்பதை இயல்பாய் பார்த்துக் கொண்டிருக்க, சமுத்திரன் குழம்பி கொண்டிருந்தான்.

சந்திரகாந்த் நடக்கவிருந்த நிச்சியத்தை நிறுத்தினார். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க ஆதி மட்டும் தான் நினைத்ததை நடத்தி விட்ட ஆனந்தத்தில் இருந்தான்.

அறைக்குள் சென்ற ஆதியிடம் சமுத்திரன், “என்ன நடக்குதுன்னு சொல்லி தொலையேன்

நான் பத்த வைத்தது கொழுந்து விட்டு எரிகிறதுஎன்று ஆதி புன்னகையுடன் சொன்னான்.

நீ நினைச்சதை சாதிச்சிட்ட… பட் எப்படி?” என்று சமுத்திரன் சந்தேகம் எழுப்பினான்.

மதுமிதாவை மீட் பண்ண போன போது அதே சமயத்தில் அவளை ஒருவன் பார்க்க வந்திருந்தான். அவன் யாருனு தெரிஞ்சிக்கணும் என்ற ஆவலில் விசாரிச்சேன். தட்ஸ் மை குட் டைம்…

அவன்தான் விஜய் இன்டஸ்டிரீஸோட எம். டி குணாளன்… அதான் மதுமிதவோட அப்பா, அவருடைய முதல் மனைவியோட மகன்.

 மிஸ்டர். குணாளன் தன் முதல் மனைவியோட நகை எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து, பெரிய ஆளா வளர்ந்து அந்தக் குடும்பத்தை மறந்துட்டு, இங்க வேற ஒரு பேமிலியோட ஜாலியா இருக்காரு மனிஷன்… அவன்தான் மதுவை மீட் பண்ண வந்தவன்...

வெரி சேட்… அவன் மதுமிதாகிட்ட கெஞ்சிட்டிருந்தான். அவங்க அம்மா பைத்தியமாகிட்டாங்க… அவங்கள குணப்படுத்த மிஸ்டர் குணாளன் வரணும்னு கெஞ்சி கேட்டான். அவனுக்கு நான் ஒரு சின்ன உதவி செய்தேன்… அதுதான் இப்போ எனக்கு உதவியாய் இருக்கு

என்ன உதவி ஆதி?”

அவனுக்கு அவனோட லீகல் ரைட்ஸ் தெரியல. அதான் நம்ம லாயர் திருமூர்த்தி… உங்க மாமனாரோட விசிட்டிங் கார்ட் கொடுத்தேன். அந்த மேட்டர்… ஒழுக்கத்தின் உதாரணமா இருக்கிற மிஸ்டர் சந்திரகாந்த்துக்குப் போனா என்ன ஆகுமோ… அதுதான் இப்போ நடந்திருக்கு. நான் சொன்ன மாதிரி என்கேஜ்மென்ட்டை ஸ்டாப் பண்ணிட்டேன். அதுவும் மிஸ்டர். சந்திரகாந்த் உதவியோடவேஎன்றான் ஆதி கர்வத்தோடு.

நீ ஆட்டத்திலேயே இல்லாம வின் பண்ணிட்ட… அப்படித்தானே?” என்றான் சமுத்திரன்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஆதியின் செல்போன் மணி ஒலித்தது.

இட்ஸ் ஒகே பேபி. நீ பீஃல் பண்ணாதே… நாம மீட் பண்ணுவோம்… டோன்ட் ஒரிஎன்றான்.

யாரு?” என்று சமுத்திரன் கேட்டதும் …

மதுமிதாஎன்றான் ஆதி.

“……..” சமுத்திரன பேச வார்த்தையின்றி மெளனமானான்.

பாவம்டா… என்கேஜ்மெண்ட் நின்னு போன வருத்தத்தில் இருப்பா

இது ரொம்ப ஓவர்… பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டுறியா?”

இன்னும் அந்தளவுக்கு எல்லாம் போகலஎன்று ஆதி வேடிக்கையாகச் சொல்ல சமுத்திரன் தலையில் அடித்துக் கொண்டான்.

கடைசியாகச் சந்திரகாந்திடம் ஆறுதல் கூறிவிட்டு புறப்படும் போது ஆதியை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.

எல்லா விஷயத்தையும் நீ கூலா ஹேண்டில் பண்ற. ஆனா ஹோட்டலில் பிரச்சனை என்றதும் நீ காணாமல் போனதுதான்… எனக்குப் புரியவே மாட்டேங்குது!

இந்தக் கேள்வியைக் கேட்ட மாத்திரத்தில் ஆதித்தியாவின் முகம் வெளுத்துப் போனது.

வேண்டாம் சமுத்திரன்… இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும். இனிமே அந்த விஷயத்தைப் பத்தி பேசாதே…என்று கோபமாய் விரல்களை ஆட்டி கண்டித்துவிட்டு ஆதி டென்ஷனோடு தன் அறை டிராவில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

விந்தியாவின் வீட்டில் நிச்சயம் முடிந்து எல்லோரும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அறையினுள் விந்தியாவும் சித்ராவும் மும்முரமாய்ப் பேசி கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அனைவரும் பதறிப் போயினர்.

12

வீழ்வேனென்று நினைத்தாயோ!

விந்தியாவும் சித்ராவும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிவா உடனே செயல்பட்டான். மாதவி படிக்கட்டுகளில் இருந்து விழுந்து காயமுற்றிருந்தாள்.

சிவா உடனே தூக்கி சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தான். வனிதா மருத்துவமனை என்றும் பாராமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். வருண் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான். விந்தியா கலையாத அலங்காரத்தோடு நின்றிருந்தாள்.

அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்க, அவள் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. கண்ணீர் தன்னைப் பலவீனமாக்கிவிடுமோ என நம்பிக்கையைச் சுமந்தபடி சிலை எனவே நின்றிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார். அவர் சொன்ன விஷயம் அங்கிருந்த எல்லோரையும் கலங்கடித்தது.

பி. பி அதிகமானதினால் மயக்கம் வந்திருக்கு. மாடியிலிருந்து விழுந்த அதிர்ச்சியால் கழுத்துக்குக் கீழ் உள்ள பாகங்கள் செயல்படவில்லை… இன்னும் தெளிவான ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பின்புதான் இந்தப் பாதிப்பு பற்றிய விவரம் தெரியும்

என்ன சொல்றீங்க டாக்டர்? கண்டிப்பா அப்படி எல்லாம் இருக்காது. என்னோட கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்த கனவோடு இருக்காங்க. இல்ல டாக்டர்… அப்படி எல்லாம் இருக்காதுஎன்று விந்தியா உணர்ச்சிவசப்பட, சரோஜா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

அவளை மீறிக் கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் விந்தியா எத்தனை மணி நேரம் அழுதிருப்பாளோ? எல்லாச் சரியாகிவிடும் என்று பெயருக்குச் சமாதானம் சொல்லிவிட்டு கிருஷ்ணகுமாரும் அவர்களுடைய குடும்பத்தினரும் முதலில் புறப்பட பிறகு உறவினர், நண்பர்கள் என ஒவ்வொருவராய் வெளியேறினர்.

இரண்டு நாட்களில் எல்லா ரிப்போர்ட்டுகளும் வந்துவிட மாதவியைக் குணப்படுத்துவது அசாத்தியம் என கை விரித்து விட்டனர். விந்தியா கலங்காமல் மாதவியைச் சரி செய்வதற்காக அவளுடைய ரிப்போர்ட்டுகளை மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனைகளில் விசாரித்த போது ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருப்பதாகச் சொன்ன சாக்ஷி மருத்துவனையில் சேர்ப்பித்தாள்.

ஆரம்ப நிலை சிகிச்சைக்கே பணமெல்லாம் செலவானது. வருண் நிலைமையைச் சமாளிப்பது பற்றி விந்தியாவிடம் கேட்டான்.

நகைகள் இருக்குல்ல… அதை வித்திடு வருண்

அம்மா உன்னோட கல்யாணத்திற்காகச் சேர்த்தது

என் கல்யாணத்தில் நான் கழுத்து நிறைய நகை போடணுமா இல்ல அம்மா என் பக்கத்தில் இருக்கணுமா?” என்று விந்தியா சிக்கலான கேள்வி எழுப்ப அந்தக் கேள்விக்கு வருணிடம் பதில் இல்லை.

நான் சொல்வதைச் செய்என்றாள் அதிகாரமாய்.

வருண் சென்ற பின்பு மாதவி விந்தியாவிடம் அவள் நிலைமை குறித்துக் கண்ணீர் வடித்தாள். பின்னர் விந்தியா அவளைத் தேற்றி உறங்க வைத்தாள். விந்தியாவும் லேசாகக் கண்ணயர்ந்துவிட, அவள் விழித்துப் பார்க்கையில் அங்கே இருந்த மாதவி ரிப்போர்ட்களைப் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ண குமார்.

சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் கிருஷ்ண குமார் விந்தியாவை நோக்கி!

இட்ஸ் ஓகே… அம்மா இப்பதான் தூங்குறாங்க… வெளியே போகலாம்என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே அழைத்து வந்தாள் விந்தியா.

டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?”என்று கேட்டான் கிருஷ்ண குமார்.

எங்களால் ஆன முயற்சி செய்றோம்னு சொல்றாங்க

நடக்காத ஒரு விஷயத்திற்காக நீங்க ரொம்ப மெனக்கெடுறீங்க

புரியல

உங்க அம்மா எழுந்து நடக்கிறது இம்பாஸிபில் விந்தியாஎன்று அவன் சொன்ன வார்த்தை அவளின் நம்பிக்கையைத் தகர்த்து எறிவது போல் இருந்தது.

ஒரு டாக்டரா சொல்றேன்… காசு மட்டுமே செலவாகும்… ஆனால் குணமாகாது

அவன் பேசி கொண்டிருக்கும் போதே கைகளைக் காட்டி நிறுத்தினாள்.

வேண்டாம் ப்ளீஸ்… நெகடிவா எதுவும் சொல்லாதீங்கஎன்றாள்.

நெகடிவா பேசல… ரியாலிட்டியை சொல்றேன்

அதுதான் வேண்டாமேஎன்றாள் விந்தியா கோபத்தோடு.

வேற சாய்ஸ் இல்ல… உங்களால் இந்த டீரிட்மெண்டுக்கு ஆகிற செலவை மேனஜ் பண்ண முடியாது

உங்க கரிசனத்துக்கு ரொம்பத் தேங்க்ஸ்… ஆனா நிச்சயம் உங்ககிட்ட பணம் கேட்கமாட்டேன்

நீங்க அவசரப்படுறீங்க விந்தியா. நான் உங்க அம்மாவை அப்படியே விட்டுடணும்னு சொல்லலியே... ஒரு நர்ஸ் வைச்சுப் பாத்துக்கலாம்… அதுக்காக ஆகிற செலவை ஏத்துக்கலாம்

அவன் பேசிய வார்த்தைகள் விந்தியாவைப் பெரிதும் கோபப்படுத்தின.

எங்க அம்மாவை வாழ்க்கை முழுக்க முடமாகவே வைச்சிருக்கணும்னு சொல்றீங்க

அப்படி இல்ல…”  

பின்ன வேறெப்படி மிஸ்டர்… முகமூடி போட்டு அடிக்கிற கொள்ளையை விட வெள்ளை கோட் போட்டு நீங்க அடிக்கிற கொள்ளைதான் அதிகம்… இல்லயா?

என்ன பேசிட்டிருக்கஎன்று மிரட்டலாய் கேட்டான் கிருஷ்ண குமார்.

உள்ளதைத்தான் சொல்றேன்… என்ன குத்துதா?

வேண்டாம் விந்தியா

நானும் அதையேதான் சொல்றேன். நமக்குள் எந்த உறவும் வேண்டாம். உன்ன மாதிரி ஒருவனோட என் லைஃபை ஷேர் பண்ண நான் தயாராக இல்லஎன்று சொல்லிவிட்டுக் கையில் இருந்த மோதிரத்தை கழட்ட, அது அவள் விரலை விட்டு வர மறுத்தது.

நீ நடந்துக்கிறது சரியில்லஎன்று கிருஷ்ண குமார் சொல்லும் போது விந்தியா மோதிரத்தை தூக்கி வீசினாள்.

எவ்வளவு திமிருஎன்று சொல்லியபடி கிருஷ்ண குமார் விந்தியாவின் மீது கைகளை ஓங்கினான்.

சரியான சமயத்தில் சிவா அவன் ஓங்கிய கைகளைப் பிடித்துத் தள்ளினான்.

கையை உடைச்சிடுவேன்என்று சிவா மிரட்ட அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கிருஷ்ண குமார் மறுகணமே அங்கிருந்து புறப்பட்டான்.

அந்த நேரத்தில் வனிதாவும் சிவாவோடு வந்திருந்தாள். அவள் கண்ட காட்சி அவளைச் சந்தேகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நடந்தது என்ன என்பதை வனிதா தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் மாதவி இருந்த அறைக்குள் சென்றுவிட்டாள். சிவா விந்தியாவிடம் நடந்தவற்றை விளக்கமாகக் கேட்டறிந்தான்.

அதற்குள் வருண் கிருஷ்ணகுமார் சொன்ன கதைகளைக் கேட்டு விந்தியாவிடம் சண்டையிட்டான். சிவா அவனிடம் புரிய வைக்க முயற்சி செய்ய, வனிதா வருணோடு சேர்ந்து கொண்டாள்.

போதும் உங்க டிராமாவை நிறுத்துங்க. உன் கல்யாணம் நின்னு போச்சுனு தெரிஞ்சா அம்மா எப்படிக் குணமாவாங்க? அம்மாவுக்கு அதிர்ச்சயாகதான் இருக்கும். நீ அம்மாவை பத்தி கவலைபடல. உன் சுயநலம்தான் உனக்கு பெரிசா இருக்கு… இல்ல?என்று வனிதா விந்தியாவை வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.

வனிதா!என்று அதட்டினான் சிவா. ஆனால் வனிதா நிறுத்தாமல் மேலும்,

அம்மாவுக்கு உனக்கு நல்ல வாழ்கையை அமைச்சு கொடுக்கணும் என்பதுதான் ஒரே கவலை. இன்னும் நீ பழசை மறக்கல… அதான் நீ இப்படி நடந்துக்கிற. சரி போகட்டும்… உனக்கு என்னோட வாழ்க்கையைத்தான் பங்கு போட்டுக்ணும்னா… சரி அம்மாவுக்காக அதுக்கும் நான் தயாராத்தான் இருக்கேன்என்று வனிதா ரொம்பவும் கடுமையாகப் பேசினாள்.

வனிதாவை நோக்கி சிவா கோபத்தோடு அருகில் வர விந்தியா அவள் முகத்தில் பளீரென அறைந்தாள்.

விந்தியா அப்படி நடந்து கொண்டதினால் வருணும் வனிதாவும் கோபத்தோடு எதுவும் பேசாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். விந்தியா தலை மீது கை வைத்தபடி அமர்ந்து கொள்ள சிவா என்ன பேசுவதென்று புரியாமல் அவளின் தோள்களைத் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு அவளின் வேதனையான முகத்தைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து அகன்றான்.

அடுத்த நாள் மாதவியைப் பார்க்க கூட இருவரும் வராத நிலையில் விந்தியா துவண்டு போய் மாதவியின் அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது சிவா தன் தாய் சரோஜாவுடன் அங்கு வந்திருந்தான். சரோஜா அவளை வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்படி அனுப்பி வைத்தாள்.

விந்தியாவிற்கும் மாதவியின் முன்னிலையில் எந்தப் பிரச்சனையையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் நடிப்பது ரொம்பவும் சிரமமாய் இருந்தது. அதனால் சரோஜாவை அங்கே மாதவிக்குத் துணையாக விட்டுவிட்டு விந்தியா புறப்பட்டாள்.

அவள் செல்வதற்கு முன் சிவா விந்தியாவின் கைகளில் ஒரு போட்டோ ஒன்றை வைத்தான்.

என்னது சிவா?” என்று புரியாமல் கேட்டாள்.

பாருஎன்றான் சிவா.

அந்த போட்டோவை பார்த்ததும் விந்தியாவிற்குச் சிரிப்பு வந்தது. அது அவர்கள் இருவரும் கல்லூரியில் மாறுவேடம் அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம். அதில் சிவா சுபாஷ் சந்திர போஸாகவும், விந்தியா பாரதியாராகவும் நின்றிருந்தனர்.

அப்போ நீ பேசின பாரதியோட கவிதை… கேட்ட எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இப்போ ஞாபகம் இருக்கா இல்ல மறந்திட்டியா?

எப்படி மறப்பேன்?

தேடிச் சோறு நிதம் தின்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடி துன்பம் மிக உழன்று பிறர்

வாட பல செயல்கள் புரிந்து நரை

கூடி கிழப் பருவமெய்தி கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!

என்று பாரதியின் அதே கம்பீர பிரதிபலிப்போடு பாடி முடித்தாள்.

இந்த மனோபலம் எங்கடி போச்சு உன்கிட்ட? எதையுமே தைரியமா சமாளிப்ப… அழுதா வீக்காயிடுவோம்னு சொல்லுவ… அந்த தன்னம்பிக்கை எங்க போச்சு? விந்தியா இப்படிச் சோர்ந்து போக மாட்டா…

அத்தையை குணப்படுத்தணும்னா அந்த ஸ்டிராங் விந்தியாவாலதான் முடியும்… ஷீ கேன் டு எனிதிங். ஆனா உன்னால முடியும்னு எனக்குத் தோணலஎன்றான் சிவா அவளை இளக்காரமாய்ப் பார்த்தபடி!

விந்தியா அவனைப் பார்த்து சிரித்தபடி, பார்க்கலாம் சிவா… என்னால எப்படி முடியாம போகுதுனு… நான் கூடிய சீக்கிரம் அம்மாவை குணப்படுத்திக் காட்டுறேன்என்றாள்.

திஸ் இஸ் வாட் விந்தியா இஸ்என்று சிவா தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

சிவா மீண்டும் அவளுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தான். ஆயரமாயிரம் உறவுகள் இருந்தாலும் சிவா போன்ற ஒரு நண்பனுக்கு ஈடாகாது.

விந்தியா அவள் வாழ்வின் மோசமான அத்தியாயங்களை தன்னம்பிக்கையோடு கடந்து வந்தாள். யாராலுமே நம்ப முடியாத அதிசயமாய் மாதவி புத்துயிர் பெற்றவளாய் நடமாடத் தொடங்கினாள். விந்தியா தான் நினைத்ததை நிறைவேற்றினாள்.

ஆறு மாதங்கள் துயர் துன்பங்களை விலக்கி அவளின் நம்பிக்கையின் துணை கொண்டு கடந்து வந்தாள். கசந்து போயிருந்த உறவுகளையெல்லாம் இணைக்கும் விதமாய் விந்தியாவின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

குணம், பணம் என எந்தவொரு விஷயத்திலும் ஒத்து போகாத ஒருவனோடு விந்தியா கை கோர்க்க போகிறாள். இனி அவள் வாழ்கையின் பாதை தடம் மாறப் போகிறது.

13

யாரடி நீ?

விடிந்தும் விடியாமல் வானம் செந்நிற துகள்களைத் தூவ ஆதவன் மெல்ல அந்தக் கரும் போர்வையில் இருந்து வெளியே எட்டி பார்த்தான்.

அந்த அழகிய விடியலை ரசிக்க நேரமின்றி எல்லோரும் அந்தப் பிரமாண்டமான திருமண மண்டபத்தில் தங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மணமேடையோ பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும் விதமாய் வண்ணமயமான பூ மாலைகளால் அலங்கரிக்கபட்டு வாசம் வீசியபடி இருந்தது. இரு திருமணங்கள் ஒரே மேடையில் அரங்கேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேடையின் ஒரு புறம் மாதவி அவளுக்கென்ற இருக்கையில் அமர்ந்திருக்க வனிதா ஏற்பாடு செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றி அம்மாவிடம் ஆலோசனை கேட்டு கொண்டிருந்தாள். சந்திரகாந்த் ஒரு வெள்ளை ஷர்வானியில் அவருக்கே உரிய பாணியில் கை கூப்பி வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

மேடையின் ஒரு புறத்தில் வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருக்க, மறு புறத்தில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு அகன்ற தோள்களோடு கம்பீரமாய் அமர்ந்து கொண்டு நடைபெறும் திருமணத்திற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் காதில் போனை வைத்து பேசிக் கொண்டிருந்தான் நம் கதை நாயகன் ஆதித்தியா.

போனில் மறுபுறம் சமுத்திரன் பேசிக் கொண்டிருந்தான்.

வெரி சாரி ஆதி… திடீர்னு உனக்குக் கல்யாணம்னு சொல்லிட்டாரு… நான் ஒரு கேஸ் விஷயமா கொல்கத்தாவில் மாட்டிக்கிட்டேன்டா… வர முடியல

எனக்கே திடீர்னுதான் சொன்னாரு… நீ அங்கயே இரு… வந்து ஒண்ணும் கழட்ட வேண்டாம்

அப்போ கல்யாணம் கன்ஃபார்மா

அதான் என் கழுத்தில் மாலையை மாட்டி பலியாடா உட்கார வைச்சிட்டாரே… அருவா ஒண்ணுதான் மிஸ்ஸிங்என்று ஆதி சொல்ல சமுத்திரன் சிரித்து விட்டு

பொண்ணு யாருடா?என்று கேட்டான்.

அப்படி எந்த ஊர் இளவரசியைப் பாத்து வைச்சிருக்காருன்னு தெரியலையே

என்னடா சொல்ற? பொண்ண நீ பார்க்கலையா?”

பெயர்தான் தெரியும்… அதுவும் இன்விட்டேஷன்லதான் பார்த்தேன்

இது ரொம்ப ஓவர்டா… ஆனா நீ எப்படி ஒத்துக்கிட்டேன்னுதான் எனக்குப் புரியல ஆதி

நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண பணம் கேட்டதுக்கு என்னை நம்பி கொடுக்க மாட்டேன்னு சொன்னாரு… பட் நவ் நான் எவ்வளவு டிமான்ட் பண்ணாலும் கொடுக்கிறேன்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஒத்துக்கிட்டாரு. ஆன் ஒன் கண்டிஷன்… இந்த மேரெஜுக்கு நான் சம்மதிக்கணும்

நிஜமாவா? ஷாக்கிங்கா இருக்கே?”

எனக்கும்தான் சமுத்திரா… இத்தனை நாள் கேட்டதைக் கொடுக்காம அந்த விந்தியாவை கல்யாணம் செய்தா கொடுப்பாருன்னா… அப்படி என்ன மிஸ். விந்தியாகிட்ட ஸ்பெஷல்?

மொத்ததில் நீ நினைச்சது நடக்குது… கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க உனக்கு ரொம்ப அதிர்ஷ்டமானவங்க

நாட் அட் ஆல்… அவள் எப்பேர்ப்பட்டவளா இருந்தாலும் மிஸ்டர். சந்திரகாந்த் செலக்ட் பண்ண பெண்ணை நான் ஏத்துக்கவே மாட்டேன்… அவ எனக்கு வேலைக்காரிதான்

கடைசியில் சமுத்திரன் ஆதிக்கு விருப்பமில்லாத போதும் வாழ்த்து சொல்லி விட்டுப் போனை கட் செய்தான்.

ஆதிக்கு விந்தியாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அவன் அவள் வரும் வழி நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தான்.

மணமகள் அறையில் விந்தியா மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள். அந்த அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மஞ்சள் நிற பட்டுபுடவை உடுத்தி கொண்டு பிரகாசிக்கும் சூரியனை போலவே மின்னிக் கொண்டிருந்தாள்.

தலையில் நீட்டமாய்ப் பின்னப்பட்டிருந்த ஜடையும், அவற்றின் மீது சூட்டப்பட்ட பூக்களும் ஓர் கிரீடம் போல் அமைந்துவிட்டன. கண்ணாடியில் தெரிந்து கொண்டிருக்கும் விந்தியாவின் பிம்பம், அவள் எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பது போல் புலப்பட்டது.

விந்தியாவின் யோசனை எல்லாம் ஆதித்தியா பற்றி அவள் குடும்பத்தினரிடம் உறைத்த பொய்கள்தான். திருமணத்திற்குப் பின் அந்தப் பொய்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடுமோ என்ற கவலைதான்.

மாதவி சாக்ஷி மருத்துவனையில் இருந்த போது விந்தியா ரொம்பவும் பணம் ஏற்பாடு செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில்தான் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு சில செலவுகளை மருத்துவனை ஏற்றுக் கொண்டு உதவி செய்வதாகச் சொன்னார்.

 சிகிச்சைகளை எல்லாம் துரிதப்படுத்த மாதவி வேகமாய் முன்னேற்றம் அடைந்து கொண்டு வந்தாள்.

மாதவி குணமடைந்து வீட்டிற்குப் போகும் போதுதான் தலைமை மருத்துவர் மோகன், “என்னுடைய நண்பன் சந்திரகாந்த்தான் இந்த உதவியை உனக்காகச் செய்யச் சொல்லி பணித்தார். பணம் கொடுத்து உதவியதும் அவர்தான் என்று கூறினார்.

சந்திரகாந்த் தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் பிரச்சனையையும் புரிந்து கொண்டு உதவக் கூடியவர். அப்படிதான் மருத்துவமனைக்கு வரும் போது விந்தியாவைக் கவனித்து விட்டு அவள் பிரச்சனையை விசாரித்து அவரே தானாக முன் வந்து உதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். அப்பொழுதுதான் விந்தியாவைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்.

இளம் வயதில் அவள் தன் தந்தையை இழந்து தன் குடும்பப் பொறுப்புகளைத் தானே சுமந்து கடமைகளை நிறைவேற்றிய விதம் சந்திரகாந்த்தை பிரமிக்க வைத்தது. அதுதான் ஆதியின் மனைவியாய் விந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

அந்த எண்ணத்தை தான் நன்றி சொல்ல வந்த விந்தியாவிடம் வெளிப்படுத்தினார். ஆதியின் குணத்தைப் பற்றியும் விந்தியாவிடம் மறைக்காமல் உண்மையைக் கூறினார்.

நீ ஆதியை மணந்து கொள்ளச் சம்மதித்தால் நீ எனக்கு மருமகளாய் இருப்ப… இதற்கு உனக்கு விருப்பமில்லை என்றால் நீ எனக்கு மகள்… அவ்வளவுதான். இதில் உனக்கு எந்த வித கட்டாயமும் இல்லைஎன்றார்.

அந்த நேர்மையான கேள்வி விந்தியாவை அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தது.

ஏன்… நான் உங்க மகனை கல்யாணம் செஞ்சா உங்கள் மகளாய் இருக்கக் கூடாதா என்ன… அம்மாகிட்ட பேசுங்க சார்… அவங்க முடிவும் முக்கியம் என்றாள்.

மாதவிக்குக் கிருஷ்ண குமாரின் விஷயம் தெரிய வந்து அவளை அதிர்ச்சி அடைய வைத்தாலும் சந்திரகாந்த் சம்பந்தம் பேச அந்த வருத்தமும் மறைந்தது.

அதே நேரத்தில் வருண் காதலித்த நந்தினியை திருமணம் செய்விக்க அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள்.

ஆதியை பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது போட்டோவை மட்டும் காண்பித்து அவன் வெளிநாட்டில் இருப்பதாகப் பொய்யுரைத்து சமாளித்தாள். அதுமட்டுமின்றி அவனிடம் தான் பேசி இருப்பதாகவும் அடுக்கடுக்கான பொய்களைக் கூறினாள்.

விந்தியா தன்னுடைய கடைசி கடமையான தம்பியின் திருமணத்தையும் முடித்துவிட வருணுக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற சந்திரகாந்த்திடம் வேண்டுதல் விடுத்தாள்.

விந்தியாவிற்கும் சந்திரகாந்த்திற்கும் உள்ள புரிதல் இருபக்கமும் ஏதேதோ பொய்களைச் சொல்லி மேடைவரை இந்த இரண்டு திருமணத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் சிவாவை மட்டும் அவளால் ஏமாற்ற முடியவில்லை.

அவன் ஆதித்தியா பற்றிய முழு விவரங்களை விசாரித்துவிட்டான். அவன் இந்தத் திருமணத்தை நிறுத்தியே தீர வேண்டும் என விந்தியாவிடம் சொல்ல அவர்கள் இடையில் மோதல் பெரிதானது.

உனக்கு விருப்பமில்லைனா திருமணத்திற்கு வராதேஎனக் கோபத்தோடு உரைத்துவிட்டாள் விந்தியா.

இத்தனை சோதனைக்குப் பிறகு இந்தத் திருமணம் கடைசிப் பரபரப்பை எட்டியுள்ளது. வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமைதியோடு சொல்லும் மந்திரங்களையும் உச்சரித்துச் சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருக்க ஆதி அவன் அருகில் அமர்ந்திருந்த ஐயரை பாடாய்ப்படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் சொல்லும் மந்திரத்தை திருப்பிச் சொல்லுங்கோ

அதை எல்லாம் நீங்களே சொல்லுங்கோ… முதலில் பொண்ணை வரச் சொல்லுங்கோ

அதுக்கு நாழி இருக்கு தம்பி

என்னை மட்டும் காலையில எழுப்பிக் குளிக்கச் சொல்லி புகை போட்டு தள்ளிண்டிருக்கேள்

அதுதான் ப்ரொசீஜர்…

நல்ல ப்ரொசீஜர்… அட்லீஸ்ட் நான் இருக்கிறது தெரியாதபடிக்கு புகை இன்னும் கொஞ்சம் அதிகமா போடுங்கோ… நான் போய்ப் பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறேன்

அது அபச்சாரம்

நீங்க எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேங்கறேள்

நீங்க என்னைக் கொஞ்சம் தொந்தரவு செய்யாம இருந்தா நான் சடங்குகளை சீக்கிரம் செஞ்சிடுவேன்

ஆதித்தியா சலித்துக் கொண்டு கேரி ஆன்என்று ஐயரிடம் சொல்லிவிட்டு விந்தியாவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். யாரடி நீ?

அவன் எதிர்பார்த்த சமயம் வந்தது. மணமகளை அழைத்துக் கொண்டு வரச் சொல்ல விந்தியாவின் அறைக்கு வனிதா சென்றாள். அவள் நெற்றியில் விலகி இருந்த சுட்டியை சரி செய்து மாலையை லாவகமாய் ஜடையில் சிக்காமல் மாட்டிவிட்டாள்.

அக்கா என் முகத்தைப் பாருக்கா… இப்பையாவது பேசுக்காஎன்றாள் வனிதா.

ஆனால் விந்தியா பதில் எதுவும் பேசாமல் அவளைக் கவனியாமல் நின்றிருந்தாள். அவள் மாலையும் கழுத்துமாய் அம்மன் சிலைப் போல நடந்து வருவதைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள் மாதவி.

வருண் அருகில் நந்தினி மணக்கோலத்தில் அமர்ந்திருக்க விந்தியா அதை ஆனந்தமாய் ரசித்தாள். ஆனால் அவள் தேடிய முகம் அவள் கண் முன் தோன்றவில்லை. சிவா உண்மையிலேயே திருமணத்திற்கு வரவில்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

சிவா எங்கே சென்றான் என விந்தியாவின் விழிகள் தேட அந்த உண்மையை நம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த கடமை பட்டிருக்கிறோம்.

கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு முன்பு இறந்து போன கேத்ரீன் மரணம் விபத்தல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்தக் கேஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டராகப் போஸ்டிங் தந்து சிவாவும் சேர்ந்து விசாரிக்கக் கமிஷ்னர் அவர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சூழலில் தன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் சிவா அங்கே மாட்டிக் கொண்டான்.

மண்டபத்தில் தலை குனிய வரவேண்டிய மணமகளின் கண்கள் அலைப்பாய்ந்து கொண்டிருந்தன. விந்தியாவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த நம் கதைநாயகன் புகை மூட்டத்தில் கண்கள் எரிய ஐயரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

14

இரு துருவங்கள்

விந்தியாவின் கண்கள் சிவாவை சுற்றிலும் தேட இறுதியில் அவன் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். மனதில் ஏற்பட்ட வருத்தத்தை மறைத்தபடி மணமேடையில் ஏறினாள்.

மணமகள் மாலை அணிந்து கொண்டு வெட்கத்தோடு தலைகவிழ்ந்து வருவாள் என நாம் இலக்கியங்களில் படித்திருப்போம். ஆனால் விந்தியா அவற்றிற்கு நேர்மாறாய் நிமிர்ந்த தலையும், நேர்த்தியான நடையும் அபிநயமாய்ப் பேசுகின்ற விழிகளோடும் மணமேடை ஏறினாள்.

இத்தனை நேரம் ஆதித்தியா என்ன செய்து கொண்டிருப்பான் என்று நம் வாசகர்களுக்குத் தோன்றலாம். கண்களை மறைத்த புகையிலிருந்து மீண்டவனாய் விந்தியா வந்து கொண்டிருந்த திசையில் பார்த்தவன் பிரமித்துப் போனான் என்று சொன்னாலும் மிகையாகாது.

ஒயாமல் பேசிக் கொண்டிருந்தவன் ஊமையாய் மாறிப்போனானோ? அவன் பார்த்துப் பழகிய பெண்களை எல்லாம் க்யூட்டி, பியூட்டி, சாம்மிங், பேபி என்று வர்ணனையோடு அழைப்பதுண்டு. ஆனால் விந்தியாவின் பூர்த்தியான மரியாதைக்குரிய அழகிற்கு இந்த வார்த்தைகள் எல்லாம் சற்றும் பொருந்தாது.

அவளின் அழகு ஒரு முழுமையடைந்த கம்பீரமான ஒன்று. மதியை மயக்கும் அழகல்ல. மதியைத் தெளிவுறச் செய்யும் அழகு. விந்தியா மேடையிலிருந்த மாதவியின் கால்களில் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மனையில் அவன் அருகில் அமரும்வரை ஆதி மலைத்துபோனபடி பார்த்திருந்தான்.

முன்னாடியே இவளை பார்த்துவிடாமல் போனோமே என அவன் மனம் ஏங்கிய போது, அவன் மூளை சொன்னது

நோ ஆதி… டோன்ட் கெட் சோ இம்பிரஸ்ட். இது மேரஜ் இல்ல வெறும் கமிட்மன்ட்

ஆதியின் மூளை அவனைச் சுதாரிக்கச் சொல்ல அவன் மனம் விந்தியாவின் அருகாமையில் கொஞ்சம் பலவீனமாய் மாறியது. இத்தனை நேரமாய் அவன் பார்வை விந்தியாவிடம் லயித்திருக்க அவள் ஒரே ஒரு முறை கூட அவனைத் திரும்பி பார்க்கவில்லை.

அவள் வெட்கப்படுகிறாளோ என்ற கேள்விக்கு இடமேயில்லை. அவள் பார்வையிலோ முகத்திலோ அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்தப் பார்வையில் ஒரு அலட்சியம் நிறைந்திருந்தது. சுற்றியுள்ள அனைவரையும் பார்த்து புன்னகையோடு அபிநயமாய் விசாரிக்கும் அவள் முகம் அவனைப் பொருட்படுத்தவே இல்லை.

 இது ஆதியின் கற்பனை என்று நம் வாசகர்களுக்கு தோன்றலாம். ஆதியின் கணிப்பு சரியாகவே இருந்தது. விந்தியா அவனைப் பாராமுகமாய் அலட்சியம் செய்தாள்.

அதன் காரணத்தை அவன் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க, கெட்டி மேளம்… கெட்டி மேளம்…என்ற உரக்க சத்தம் கேட்க மேளங்கள் முழங்க வருண் நந்தினியின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.

ஆனால் அந்த நிரகராப்பை தாண்டி ஐயர் நீட்டிய தாலியை விந்தியாவின் கழுத்தில் கட்ட ஆதி தயங்கினான். அதற்குக் காரணம் அப்பொழுதேனும் அவனை அவள் கவனிப்பாளா என்று!

கட்டுங்கோ…என்று ஐயர் கதற, பின்னோடு சந்திரகாந்த் கட்டுடா…என்று சொல்லவும் வேறுவழியின்றி ஆதி விந்தியாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.

அந்தச் சமயத்திலும் விந்தியா அவனைக் கவனிக்காமல் அமர்ந்திருந்தது அவள் திமிரும் தலைகணமும் பிடித்தவள் என அவன் மனதில் ஆழ பதிய வைத்தது. அவர்கள் இருவரும் மனதளவில் இரு துருவங்களாய் ரே மேடையில் வீற்றிருந்தனர்.

எல்லா சடங்குகளும் நிறைவுற்றது. மண்டபத்தின் வாசலில் இரு கார்கள் வந்து நின்றன. வருணும் நந்தினியும் ஒரு காரில் நந்தினி குடும்பத்தாருடன் அவள் வீட்டுக்கு சென்றனர்.

இன்னொரு பிரம்மாண்டமான வெள்ளை நிற புதுக் கார் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சந்திரகாந்த் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க ஆதியும் விந்தியாவும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

மாதவி, வனிதா, சிந்துவும் பின்னாடியிருந்த கடைசி இருக்கையில் வீற்றுக் கொண்டனர். விந்தியா ஆதி விட்டு ரொம்பவும் இடைவெளியில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

விந்தியாவின் வீட்டு வாசலில் நிற்கும் வரை ஆதிக்கு அவள் சாதாரண மிடில் கிளாஸ் என்பதே தெரியாது. அவர்கள் உள்ளே நுழைய ஆரத்தி எடுத்து, மற்ற சடங்குளை எல்லாம் செய்து முடித்ததும், விந்தியா தன் அறையில் நுழைந்து எடுத்து வைக்க மறந்த சில பொருட்களைத் திணித்துக் கொண்டிருக்கபின்னோடே ஆதி நுழைந்ததைக் கவனிக்கவில்லை.

அவளின் பின்பக்கம் ஆதி வர, விந்தியா அவள் திரும்பிய கணத்தில் ஓர் உயரமான கம்பம் போல் நின்றிருந்த அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நழுவி போக பார்த்தவளின் ஒரு கையை அழுத்தி பிடித்தபடி, வாட்ஸ் யுவர் பிராப்ளம்?என்றான்.

அவனுடைய பிடி இறுக்கமாய் வலிக்க, தோ வர்றேன் மாமாஎன்றாள் விந்தியா.

அவ்வளவுதான். ஆதியின் பிடி நழுவ விந்தியா அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள். ஆதி திரும்பிப் பார்த்து ஏமாந்து விட விந்தியா தப்பித்து விட்ட கோபத்தால், எவ்வளவு தூரம் ஓடுவ… பார்க்கிறேன்என்றான்.

டிரைவர் விந்தியாவின் பொருட்கள் மற்றும் பெட்டி எல்லாம் வண்டியில் ஏற்ற, எல்லோரும் விந்தியாவை அழுது கொண்டு வழியனுப்பினர்.

விந்தியா என்னோட மகள் மாதிரி… நான் பார்த்துக்கிறேன்என்றார் சந்திரகாந்த்.

ஆதிக்கு அந்த நாடகங்களைப் பார்க்க விருப்பமின்றி காரில் சென்று அமர்ந்து கொண்டான். விந்தியா கண்களைத் துடைத்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, சோ சேட்… அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் நீ வரணுமா என்ன?” என்றான்.

விந்தியா கோபப்பட்டு ஏதேனும் பதில் பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமும் வெறுப்புமே மிச்சம்.

விந்தியாவோடு சிந்துவையும் வனிதாவையும் அன்று ஒரு நாள் துணைக்கு அனுப்பி வைத்தனர். சிந்து ஆதிக்கும் விந்தியாவுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.

உன் பெயர் என்ன பேபி?”

நான் உங்ககிட்ட பேசமாட்டேன்என்றாள் சிந்து மழலையாக.

நீயுமா?என்று மனதில் நினைத்தவனாய், ஏன் பேபி?”என்றான்.

நீங்க எங்க பெரிம்மாவை கூட்டிட்டு போறீங்க

நான் என்னவோ உங்க பெரியம்மாவை வலுக்கட்டாயமா கடத்திட்டு போற மாதிரி இருக்கே… அவங்களாகவே வர்றாங்க… நீயே கேட்டுப்பார்

அப்படியா பெரிம்மா?என்று விந்தியாவின் பக்கம் திரும்பி கேட்டாள் சிந்து.

ஆமாம்… யாராவது உங்க பெரியம்மாவை விருப்பமில்லாம கூட்டிட்டு போக முடியுமா என்ன?” என்றாள் விந்தியா.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் சிந்து ஆதியின் மடியில் அமர்ந்திருந்தாள். அவனும் அவளிடம் மழலையாகப் பேசி விளையாடிக் கொண்டிருந்தான்.

சந்திரகாந்த்தின் இல்லத்தை அடைந்தனர். அந்த இல்லத்தின் பிரம்மாண்டத்தை ஆதியின் நிச்சியத்தின் போதே குறிப்பிட்டுள்ளோம். இம்முறையும் அலங்காரம் ரொம்பவும் பிரமாதமாய் இருந்தது.

விந்தியா உள்ளே நுழைந்தவுடன் பூஜை அறையில் விளக்கேற்றினாள். கூடவே ஆதியின் அம்மா சங்கரியின் போட்டோவின் முன் வணங்கி விளக்கேற்றினாள். சந்திரகாந்த் வேலைக்காரன் சண்முகத்தை அழைத்து விந்தியாவையும் வனிதாவையும் ஆதியின் அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.

ஆதி அப்படியே அவன் அம்மாவின் போட்டோவின் முன்பு நின்று கொண்டு சந்திரகாந்திடம், நான் உங்கக்கிட்ட பேசணும்என்றான்.

அவர்கள் இருவருமே முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டதேயில்லை. அவனும் சந்திரகாந்தை அப்பா என்று அழைப்பதும் இல்லை.

ஆதியின் குரல் கேட்டு, என்ன பேசணும்?” என்று திரும்பினார்.

உங்க டிமான்ட்தான் நடந்துடுச்சே… இட்ஸ் மை டர்ன்என்றான்.

சரி… உன்னோட பிஸ்னஸ் ஐடியா பத்தின டீடைல்ஸ், டீப் அனலைஸேஷன், எஸ்டீமேஷன்… இதெல்லாத்தையும் எனக்கு நீ கொடுத்த பிறகு… நான் ஒன் மன்த்தில ப்ரொசீட் பண்றேன்என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டார்.

ஆதித்தியா கோபம் தலைக்கேற, அவன் அம்மாவின் போட்டோ முன்பு, பாத்தியாம்மா… உன் புருஷன் ஏதோ பேங்க் மேனேஜர் மாதிரி பேசிட்டு போறதை இவர்கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு போயிட்ட. இவரு என்னை ஒரு திமிரு பிடிச்சவக்கிட்ட மாட்டி விட்டுடட்டாருஎன்று புலம்பினான்.

வனிதா எதேச்சையாகக் கீழே வர ஆதியின் பேச்சை எல்லாம் கேட்டபடி நின்றுவிட்டாள். ஆதியும் அவளைக் கவனித்தான். வனிதா மாடியில் விந்தியா இருந்த அறைக்குப் பதட்டத்துடன் செல்ல படிக்கெட்டு லேசாக அவள் காலினை இடறிவிட்டது.

பாத்து போங்க… இது உங்க வீடு மாதிரி நினைச்சீங்களா? கிரானைட். பொறுமையாகத்தான் நடக்கணும். உங்க அக்காகிட்டேயும் போய் சொல்லுங்கஎன்றான் ஆதி திமிராக.

அவன் சொன்ன வார்த்தை அவர்களின் ஸ்டேட்டஸ் பற்றியது என்பது வனிதாவிற்குப் புரியாமலில்லை.

ஆதியின் அறையில்தான் விந்தியா அவள் உடைகளை மாற்றிக் கொண்டு வானின் நிறத்தில் ஒரு புடவையை உடுத்திக் கொண்டு ரொம்பவும் இயல்பான அலங்கரிப்போடு இருந்தாள்.

அந்த அறை முழுவதும் பூவின் வாசம் கமகமவென்று வீசிக்கொண்டிருக்கப் படுக்கையறை முழுவதும் பூக்கள் தூவப்பட்டிருந்தன. சந்திரகாந்த்தின் வீட்டைச் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்க அந்த வெளிச்சத்தில் சந்திரனே மங்கியபடி காட்சியளித்தான்.

விந்தியா கண்ணாடியின் முன் குங்குமத்தை நேர்த்தியாக இட்டுக் கொண்டே வனிதாவை நோக்கி கேட்டாள்.

என்னதான்டி உன் பிரச்சனை? எதுக்குடி அழற? குழந்தை வேற தூங்கிட்டா. தேம்பி தேம்பி அவள வேற எழுப்பி விட்டுடாதேஎன்றாள்.

கடைசியில் கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டு நடந்தவற்றை உரைத்தாள். விந்தியா தலையிலடித்துக் கொண்டு சிரித்தாள். வனிதாவிற்கு அவளின் அக்காவின் செயல் ஒன்றும் புலப்படவில்லை.

உன்னை எப்படிக்கா அவர் சந்தோஷமா பாத்துப்பாரு?

விந்தியாவிற்கு மீண்டும் சிரிப்புதான் வந்தது. வனிதாவை அருகில் அழைத்து அவள் கண்களைத் துடைத்தாள்.

ஏன் வனிதா… உனக்குக் கிடைச்ச மாதிரி கணவன் யாருக்காச்சும் அமையுமா? அந்த வாழ்க்கையில நீ சந்தோஷமா இருக்கியா?” என்று அவள் கேட்ட கேள்வி வனிதாவின் நெற்றி பொட்டில் அடித்தது போல் தோன்றியது. அவள் பதில் பேச முடியாமல் நிற்க, விந்தியா மேலும் தொடர்ந்தாள்.

அப்படி இருக்க இந்த வாழ்க்கை எம்மாத்திரம் சொல்லு. உன்னோட அழுகையையும் சந்தோஷத்தையும் மத்தவங்க தீர்மானிக்கக் கூடாது… அது நமக்குள்ள இருந்து வரணும்.

 பெண்கள் பலவீனமானவங்க… எதுக்கெடுத்தாலும் அழுவாங்கன்னு சொல்றதெல்லாம் கட்டுக்கதை. ஆணும் பெண்ணும் சரிசமாமான பலம் கொண்டவர்கள்.

அதிலும் பெண்ணின் மனோபலம் கொஞ்சம் அதிகம். அது ஏன் உனக்குப் புரியல. நாம நினைச்சா நல்ல வாழ்க்கையை நரகமாவும் மாத்திக்கலாம்… மோசமான வாழ்க்கையை சொர்க்கமாவும் மாத்திக்கலாம். புரிஞ்சுதாடி என் அழுமூஞ்சி தங்கச்சி! என்று விந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதித்தியா கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்தவுடன் வனிதா கண்களைத் துடைத்துக் கொண்டு சிந்துவை தோள் மேல் தூக்கி போட்டபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவன் விந்தியாவைக் கோபமாகப் பார்க்கப்போது தான் முதல் தடவை விந்தியா நேருக்கு நேராய் ஆதித்தியாவின் முகத்தைப் பார்த்தாள்.

அவளின் ஏளனப் பார்வையில் அவன் தன்னை ஆணழகன் என்றும், பெண்கள் எல்லாம் அவனைப் பார்த்த மாத்திரத்தில் கவரப்படுவர் என்ற எண்ணமும் நொறுங்கிப்போனது. அவனின் கர்வமும் ஆண்மையும் துச்சமாய் அவள் பார்த்த பார்வையில் சாம்பலாய் வீழ்ந்து போனது.

எந்தப் பெண்ணைப் பார்த்து அவன் முதன் முறையாகப் பிரமிப்புற்றானோ, பெண்களில் அவளைத்தான் முதன்முறையாய் வெறுக்கவும் தொடங்கினான்.

15

அந்த நிலவொளியில்

விந்தியா ஆதித்தியாவை பார்க்க அந்த விழியின் தாக்கம் அவனைக் கலவரப்படுத்தியது. அவர்களுக்கு இடையில் இருந்த மெளனத்தை ஆதித்தியா கலைத்தான்.

அதென்னடி லுக்குஎன்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு? என் தகுதி என்ன… உன் தகுதி என்ன? உன்னோட வீடு என்னோட பெட் ரூம் சைஸ் இருக்குமா? நான் என்னவோ உன் காலடியில் இருக்கிற மாதிரி அதென்ன ஒரு இளக்காரமான பார்வை?என்று ஆதி இடைவெளி விடாமல் பேச,

விந்தியா சிறிதும் பதட்டமில்லாமல் தலையைத் திருப்பிக் கொள்ள, ஆதி கொஞ்சம் கோபத்தோடு அவள் தாடையை அழுத்திப் பிடித்து அவன் முகத்தைப் பார்க்க வைத்தான்.

திமிரா? இங்க நான் பேசிட்டிருக்கேன்ல… என்னைப் பார்க்காம அதென்ன முகத்தைத் திருப்புறது. உனக்கு என்கிட்ட என்ன பிரச்சனயிருந்தாலும் என் கண்ணைப் பார்த்து பேசுஎன்றான்.

விந்தியா அவனின் பிடியை சிரமப்பட்டு விலக்கி விட்டாள்.

உங்களுக்கு மேனர்ஸ் தெரியாதா?”என்று அவள் தாடையைத் தடவியபடி கேட்டாள்.

உனக்கு ரொம்பத் தெரியுமோ… ?”

எதுக்கு நான் உங்க முகத்தைப் பார்த்து பேசணும்? பொறுப்பே இல்லாத, பெண்மையை மதிக்கத் தெரியாத, சொந்த அப்பாவுக்குக் கூட மதிப்பு கொடுக்காத உங்கள மாதிரி ஒருத்தரின் முகத்தைக் கூடப் பார்க்க எனக்கு விருப்பமில்லைஎன்று தன் மனதில் உள்ளதை அழுத்தமாக வெளிப்படுத்தினாள் விந்தியா.

ஆதி இரு கைகளைத் தட்டியபடி, சூப்பர்… பார்க்கவே விருப்பமில்லாத என் கையால எதுக்குடி தாலி கட்டிக்கிட்ட?” என்றான்.

நானும் அதே கேள்வியைக் கேட்கலாமா? என் முகத்தைக் கூடப் பார்க்காம… என்னைப் பத்தி எதுவுமே தெரியாம… நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… மிஸ்டர். ஆதித்தியா

ஆதித்தியா அப்படியே திகைத்து போய் நின்றான்.

அப்போ என்னை டார்ச்சர் பண்றதுக்கு நீயும் மிஸ்டர். சந்திரகாந்தும் சேர்ந்து போட்ட பிளானா இந்த மேரேஜ்? அவன் பொறுப்பே இல்லாம இருக்கான்… திருத்தி வழிக்குக் கொண்டு வான்னு சொன்னாரா?

ஒ ஸ்டாப்… ரொம்ப உங்க கற்பனை குதிரையை ஓட விடாதீங்க. உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு கமிட்மென்ட் இருந்த மாதிரி எனக்கும் இருந்தது. தட்ஸ் இட்.

 அப்புறம் உங்கள திருத்தி நல்வழிப்படுத்தனும்னு எனக்குச் சுத்தமா ஐடியா இல்ல… உங்கள மாதிரி ஒருத்தரை எல்லாம் திருத்தவும் முடியாது. இட்ஸ் இம்பாஸிபிள்!என்று அலட்சியமாய் பேசினாள் விந்தியா.

அவள் பேச பேச அவன் கோபம் அதிகமானது.

என்னடி திமிரா?

என்ன சும்மா வாடிப் போடினு… மரியாதை தெரியாதா?

நிறையத் தெரியும். எப்படி… மிஸஸ். விந்தியா ஆதித்தியான்னு கூப்பிடலாமா?

விந்தியா உடனே காதுகளை மூடிக் கொண்டாள்.

டோன்ட் கால் மீ லைக் தட்… ஐம் ஜஸ்ட் விந்தியா. புரிஞ்சுதா? அப்புறம் நல்லா கேட்டுக்கோங்க… நடந்தது கல்யாணம் இல்ல கமிட்மன்ட்.

நமக்குள்ள எந்த வித ரிலேஷன்ஷிப்பும் இல்லை. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்… நீங்களும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. மோரோவர் நான் உங்க வாழ்க்கையோட முதலும் கடைசியுமான பெண்ணும் இல்லை… ரைட்?

விந்தியா படபடவெனப் பொறிந்ததைக் கேட்டு அவன் அமைதியாய் நின்றான். அவளோ படுக்கையிலிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த சோபாவில் படுக்கப் போனவளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். விந்தியா உடனே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

என்ன மிஸ்டர்?”

பயந்திட்ட போல! ந்தப் பெண்ணையும் வலுக்கட்டாயமா என் வழிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் எனக்கில்ல… ரைட்என்றான் ஆதித்தியா திமிரான பார்வையோடு!

நான் ஒண்ணும் பயப்படல

திமிரும் தெனாவட்டும் தெரிஞ்ச அந்தக் கண்ணில இப்போ பார்த்தேனே”

இப்போ உங்க பிரச்சனைதான் என்ன?”

நான் உன்கிட்ட பேசணும்… உட்காருஎன்று சொல்லி சோபாவின் அருகில் இருந்த இருக்கையைக் காண்பித்தான். விந்தியா சலிப்போடு அமர்ந்தாள்.

என்ன பேசணும்?” என்று முகத்தைத் திரும்பி கூடப் பார்க்காமல் கேட்டாள்.

இப்போ வரைக்கும் என் மூளை இந்தக் கல்யாணத்தை கமிட்மன்டுன்னுதான் சொல்லுச்சு. பட் நவ்… எனக்கு வேற மாதிரி தோணுதே…

என்ன?”

எப்போ நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லனு நீ சொன்னியோ… ஏன் இருக்கக் கூடாதுன்னு எனக்குத் தோணுது. நீ என்னோட ஈகோவை இவ்வளவு தூரம் சீண்டி விட்டுட்டு என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு சொன்னா நான் கேட்கணுமா?

 நீ என் வாழ்கையோட முதலும் கடைசியுமான பொண்ணு இல்லதான். ஆனா நான்தான் உன் வாழ்க்கையோட முதலும் கடைசியுமான ஆண்.

நீ விந்தியா ஆதித்தியா என்பதை இனிமே அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் மாத்த முடியாது. நீயா உன் மனசு மாத்திக்கிட்டு என்னோட மனைவியா இருப்ப. என்ன விந்தியா பார்க்கலாமா?” என்று ஆதி அவனின் ஆணவத்தைக் கொஞ்சம் அழகாகவே வெளிபடுத்தினான்.

விந்தியா கொஞ்சம் எகத்தாளமாகச் சிரித்து விட்டு,  ஒ… எஸ் பார்க்கலாமே… கனவுல கூட நீங்க நினைக்கிறது நடக்காதுஎன்றாள்.

ம்… அப்படியா! பார்க்கத்தானே போற… இன்னிக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்… படுத்துக்கோஎன்று சொல்லி அவள் தலையணையைச் சரி செய்துவிட்டு எழுந்து கொண்டான்.

ஒரு நிமிஷம்… மிஸ்டர் ஆதிஎன்று போகிறவனை அழைத்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவனும் திரும்பி கவனித்தான்.

மறந்துட்டேன்… ஏதோ தகுதிய பத்தி பேசுனீங்க இல்ல. இவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் அது உங்க அப்பாவோட உழைப்பு… இந்த பெட்ரூம் சைஸுக்கு சின்ன வீடா இருந்தாலும் அது என்னோட சுயசம்பாத்தியம். இதுதான் நம்ம இரண்டு பேருக்கு இடையிலிருக்கிற ஸ்டேட்ஸ்என்று சொல்லிவிட்டுச் சோபாவில் படுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

ஆதித்தியாவிற்குக் கடைசியில் அவள் சொன்ன விஷயம் அவன் மனதை குத்தியது. அவனை உறங்கவிடாமல் செய்துவிட்டு அவள் தூங்கிப் போனாள்.

இரவு வெகு நேரம் விழித்திருந்த களைப்பில் ஆதி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தானாகவே விழித்துக் கொண்ட போது விந்தியா அந்த அறையில் இல்லை.

ஓரே நாளில் அவன் எண்ணங்களை அவள் மழுங்கடித்து விட்டது போல் தோன்றியது. அவள் அழகோடு கலந்த திமிரை கூட அவனைக் கோபத்தோடு ரசிக்க வைத்தது. இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டே அந்த அறையின் பால்கனி வழியாகத் தோட்டத்தைப் பார்த்தான்.

அங்கே விந்தியா, பைக்கில் அமர்ந்தபடி போலிஸ் உடை அணிந்திருந்த ஆடவனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவன் சிவா என்று வாசகர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவனைத் திருமணத்திலும் பார்க்காதினால் ஆதித்தியாவிற்கு அவன் யாரென்று தெரியவில்லை.

அவர்களுக்கிடையில் வாக்குவாதம் நடைபெறுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் சிந்துவும் வனிதாவும் வெளியே வர, அவர்களை ஏற்றிக் கொண்டு அவன் சென்று விட்டான்.

இப்பொழுது ஆதியால் அவர்கள் உறவுமுறையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை வழியனுப்பிவிட்டு திரும்பியவள் மேலே ஆதித்தியா நின்று கொண்டிருப்பதைக் கவனித்தும் கவனிக்காதது போல் உள்ளே சென்றாள்.

சந்திரகாந்த் அந்தப் பெரிய ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு பேப்பரை கையில் வைத்துக் கொண்டிருந்தார்.

சிவா எங்கம்மா?” என்று சந்திரகாந்த் விந்தியாவைப் பார்த்து கேட்க, சிவா உள்ளே வர மறுத்துவிட்டதைச் சொல்ல தயங்கியபடி, ஏதோ அவசரமான வேலை இருக்காம்…என்றாள்.

உள்ளே வந்து ஒரு காபி குடிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது?

சாரி மாமா… அவன்தான் அவசரப்பட்டான்... நீங்க தூங்கிட்டிருந்தீங்க… அதான் வனிதா கூடச் சொல்லாம கிளம்பிட்டா

என்னம்மா நீ?” என்று அவர் ஏதோ சொல்ல தொடங்க, இருங்க மாமா காபி எடுத்துட்டு வர்றேன்என்று சொல்லியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் விந்தியா.

சண்முகம் காபியை ரெடியாக டிரேவில் எடுத்து வைத்திருந்தார். நான் கொடுக்கிறேன்என்று சொல்லி விந்தியா அதை எடுத்துக் கொள்ள, சண்முகம் அதிலிருந்த இன்னொரு கப்பை காண்பித்து, அப்படியே சின்ன ஐயாவுக்கும் கொடுத்துடுங்கம்மாஎன்றான்.

விந்தியா வேறுவழியின்றி சரி எனச் சொல்லிவிட்டு சந்திரகாந்த்திற்கு காபியை வைத்துவிட்டு, மாடியேறி ஆதியின் அறையில் நுழைந்தாள்.

ஆதி அவள் காபியோடு உள்ளே வருவதைக் கவனித்துவிட்டு,பரவாயில்ல… புருஷனுக்குப் பணிவா காபி எல்லாம் கொண்டு வந்திருக்க. நான் சொன்னது உன் மூளைக்கு எட்டியிருக்கு

ஹெலோ… காபி எடுத்துட்டு வந்ததுக்காக எல்லாம் நீங்க ரொம்பக் கற்பனை பண்ணிக்காதீங்க. வேணும்னா எடுத்துக்கோங்க… வேண்டாம்னா திருப்பி எடுத்துட்டு போறேன்

ஏய் நில்லு…என்று சொல்லிவிட்டு டிரேவில் இருந்த காபியை ஆதி எடுத்துக் கொண்டான்.

விந்தியா வெளியே போகத் திரும்பிய போது ஆதியின் அருகிலிருந்த டேபிளில் அவள் புடவை முந்தானை மாட்டிக்கொண்டது. அதை இருவரும் கவனிக்க, ஆதி அதை லாவகமாக எடுத்துவிட்டான்.

முந்தானையை இப்படி பறக்க விட்டுட்டு போனா இப்படித்தான் மாட்டும்… அப்புறம் தடுக்கிதான் விழணும்

அப்படி எல்லாம் நான் விழமாட்டேன்…

விழுந்தாலும் பரவாயில்ல… அதான் நான் இருக்கேன்ல

எதுக்கு?”

தாங்கி பிடிச்சுக்கத்தான்

நினைப்புதான்…என்று சொல்லிவிட்டு விந்தியா வெளியே சென்றுவிட்டாள்.

அவள் போவதை பார்த்தபடியே காபியை வாயில் வைத்தவன் அதை குடிக்கச் சகியாமல் முகத்தைச் சுளித்தான்

சீ… இதென்ன காபியா… கசாயமா? இப்படிக் கசக்குது. சக்கரை போட மறந்துட்டாளா? திமிரு பிடிச்சவ… வேணும்னே செஞ்சிருப்பா…

விந்தியா கீழே சென்றதும் சந்திரகாந்த், காபி சூப்பர்என்றார்.

அவள் ஒன்றும் புரியாமல் நான் போடல… சண்முகம் அண்ணன்தான் போட்டாரு

யார் போட்டா என்ன? என் மருமக கையால முதன்முதலில் கொடுத்த காபி ஸ்வீட்டா இருந்துச்சு

விந்தியா குழம்பி கொண்டே சண்முகத்தைப் பார்க்க,       அப்போ சக்கரை இல்லாத காபிஎன்று சண்முகம் கேட்க, விந்தியா தான் செய்த தவறை உணர்ந்தவளாய் உதட்டை கடித்துக் கொண்டாள்.

சந்திரகாந்த் சிரித்தபடி, போகட்டும் விடும்மா… அவனுக்குத் தேவைதான்என்றார். விந்தியாவிற்கு ஆதியின் நிலையை எண்ணிய போது முகத்தில் புன்னகை மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content