You don't have javascript enabled
Bhagya novels

Antha Araikul- Final

ராகுல் மும்பை செல்ல தயாரானான் தன் மனைவியுடன். ஊரில் இருக்கும் தனது வளர்ப்பு தாய் தந்தையிடம் போய் சென்றடைய…

இரயிலில் ஏறி அமர்ந்தவன் தனது தந்தை எழுதியிருந்த ஓர் கதையை படித்துக்கொண்டு வந்தான். அந்த கதையில் படிக்கும் ஒவ்வொரு வரியும் அவனை மெதுவாக தாக்கியது. குழந்தை இல்லாத தம்பதியரின் கதை அது.

அப்படி தானே தன்னுடைய வளர்ப்பு தாய் தந்தை தன்னை ஆசையாக எடுத்து வளர்த்திருப்பார்கள். இதை புரிந்து கொள்ளாது நான் காரைக்குடி வந்து என்னென்னவோ நடந்துவிட்டதே.

இதில் என்னுடைய ஆட்டத்திற்கு பாவம் என் மனைவியை வேறு பயன்படுத்தி கொண்டுள்ளேன் என்று வருந்தினான்.

அவனுடைய வருத்தங்களை புரிந்துகொண்ட அவனுடைய மனைவி, “என்னங்க வருத்தப்படாதீங்க எல்லாமே நல்லதுக்குனு நினைச்சிக்கோங்க இப்ப நம்ம மும்பை போய் புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் இதை பத்தி எல்லாம் எதுவுமே யோசிக்காமல் அமைதியா இருங்க காலம் போற போக்குல உங்களுக்கு எல்லாம் சரியாயிடும்.”

அவள் சொல்லும் வார்த்தைகள் அவனுக்கு ஆறுதல் அளித்தாலும் ஏனோ மனம் குழம்பிக் கொண்டே தான் இருந்தது. இந்த குழப்பத்திற்கு தீர்வு மும்பை சென்றால் கிடைக்குமா என்று தெரியாது ஆனால் இப்போது மும்பை செல்வதே நல்ல முடிவாகும் என்று நினைத்துக் கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தான் பயணத்தின் போது இடையில்கைப்பேசி ஒரு அழைப்பு வந்தது.

“ராகுல் கவலைப்படாதீங்க உங்க மேல கேஸ் ஏதும் இல்லாம நான் பாத்துகிறேன் ஆக்சுவலா திவ்யா கேஸ் கொடுத்திருக்கா  நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க” என்றாள் எதிர்முனையில் லதா.

“என் மேலேயும் தப்பு இருக்கு தானே ஒருவகையில் திவ்யாவை வந்து அட்டாக் பன்ன முயற்சி பன்னது நான் தானே” என்று மறுபடியும் நொந்து கொள்ள,

“அட என்ன ராகுல் நீங்க மறுபடியும் பழையதையே  பேசிட்டு இருந்தா எப்படி? நீங்க மும்பை போங்க பத்திரமா பை”

“லதா சாரிங்க நடந்த தப்புக்கு எல்லாம்  ஒரு வகையில் நானும் உடந்தையா இருந்துட்டேன் எல்லாமே என்னுடைய கணவனுக்காக தான் என்று வருந்தினாள் ராகுலின் மனைவி” ராகுலிடம் போனை பிடுங்கி.

…….

நாட்கள் கடந்து கொண்டே போனது திவ்யாவுக்கு ஒரே குழப்பம் தன்னுடைய தந்தை துரைராஜ் உண்மையில் தப்பு செய்து இருப்பாரா இதை எப்படி நாம் நம்புவது நம் தந்தை இப்படிப்பட்ட ஆள் இல்லையே தன் சொந்த தம்பியையே அவர் எப்படி கொன்றிருக்க முடியும் இது நம்பும்படியான விஷயம் இல்லையே இதற்கு என்ன செய்வது.

இந்த கேஸ் எப்படி ஹேண்டில் பன்றது ஒன்னும் புரியலையே.. என்று குழம்பிப் போனாள் திவ்யா.

இந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் ஆனா நாம உடனே சிவா கிட்ட பேசியே ஆகனும் அவனுக்கு தான் எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கு என்று யோசித்தாள் திவ்யா. அவள் யோசிப்பதற்குள் அவள் தாயான கலாவிடமிருந்து அலைபேசி வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்ன சொல்லுங்க மா? என்ன விஷயம் கால் பன்னி இருக்கீங்க”

“எப்போ டி  உங்க அப்பாவை வெளியில் எடுக்க போற உங்க அப்பா இல்லாம என்னால இருக்கவே முடியல ப்ளீஸ் ஏதாவது பன்னு டி”

“அது தான் நான் யோசிக்கிறேன் அப்பா மேல உண்மையிலேயே தப்பு இருக்கான்னு தெரியல”

“உங்கள் அப்பா மேல தப்பு இருக்கா இல்லையான்னு அதை பத்தி எனக்கு கவலை இல்லை ஆனால் அப்பாவை எப்படியாச்சும் நீ வெளிலே கொண்டு வரனும் ப்ளீஸ் எனக்காக ஏதோ பன்னு டி” என்று கெஞ்சினாள் 

“மா நீ இப்படி யோசிக்கிற ஆனால் இதே தேவி சித்தி என்ன யோசிக்கிறாய் என்று உனக்கு தெரியுமா உங்க கணவனை இழந்து தனிமரமாய் நின்னுட்டு இருக்காங்க அப்புறம்  அப்பா வெளியில வந்தா அவர்களுக்கு இருக்கிற கோபம் அதிகமாகும்”

“அப்படி என்றால் அப்பாவை வெளியில் எடுக்க முடியாதுன்னு சொல்ல வரியா என்ன சொல்ல வர முழுசா சொல்லு”

“எதுவா இருந்தாலும் என் ஃப்ரெண்டு சிவா கிட்ட பேசிட்டு தானே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் அவன் ஏதோ சொல்ல வந்தான் ஆனா அப்போ நான் பிரசவத்துக்கு ஹாஸ்பிடல்ல இருந்ததினால் அவனால் எதுவுமே பேச முடியல கண்டிப்பா அவளை சந்தித்து நான் பேசியே ஆகனும் நான் சென்னை கிளம்ப போறேன்”

சில தினங்கள் முன்பே பிறந்த தன் பச்சிளம் குழந்தையை பிரிந்து செல்கிறோம் என்பதை கூட அவர் யோசிக்காமல் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும் அதனால் எப்படியேனும் சிவாவை சந்தித்து நடந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் மட்டுமே தனியாக சென்னைக்கு சென்றாள் தன் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைத்து விட்டு தன் கணவனிடமும் பிரியா விடை கொடுத்து சென்றால் நம் திவ்யா சென்னைக்கு சென்ற பின் சிவாவை சந்தித்து கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை ஆணித்தனமாக நம்புகிறாள்.

சென்னைக்கு புறப்படும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். எனக்கு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் சக பயணியிடம்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். 

“ஹாய் ஐயம் திவ்யா”

“கிரேட் ஐயம் நித்யா…நானும் சென்னை தாங்க போறேன்”

“ஓ….என்ன விஷயமா?” என்று திவ்யா சற்று உரிமையுடன் கேட்டுவிட பதில் கூற முடியாமல் நித்யா தயங்கினாள்.

“சரி பரவாயில்லை சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம் நித்யா”

“ம்ம்ம் சொல்லக்கூடாதுனு இல்லை.. இருந்தாலும் தயக்கமாவே இருக்கு அதான்”

“ஓகே நித்யா…நோ ப்ராப்லம்ஸ்” 

இருவரும் வழக்கமான உரையாடலை உரையாடிவிட்டு திவ்யா ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு வந்தாள். அப்படி ஜன்னல் வழியே என்னதான் தெரிகிறதோ தெரியவில்லை ஆனால் அந்த சிலுசிலுவென காற்று அந்த ரம்மியமான சூழல் அவளுக்கு  இதமாக இருந்தது.

ஆனால் இதற்கிடையில் குழந்தையின் ஞாபகமும் அவ்வப்போது வந்து சென்றிருந்தது. ஐயோ பச்சிளம் குழந்தையை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு வந்து விட்டோமே அதை குளிப்பாட்டி இருப்பாங்களா பாலூட்டி இருப்பாங்களா அது இன்னும் தூங்கிட்டு இருக்குமா என்ன செய்துகொண்டிருக்கிறது தெரியலையே என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்.

சென்னை வந்து இறங்கியதும் என்ன ஆச்சரியம் அங்கு அவளுடைய நண்பன் விஜய் காத்துகிடப்பதை பார்க்க..

“விஜய்க்கு நாம வருவது தெரியாதே அப்றம் எப்படி வெயிட் பன்றான்” என்று யோசிக்க அவள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நித்யா அவனிடம் ஓடிச்சென்று, “ஹாய் பேபி” என்று கட்டிக்கொள்ள, “இது என்ன டா புது ட்விஸ்ட்” என்று யோசிக்க…எதர்ச்சையாக விஜய் இவளை பார்த்துவிட 

“ஆமா நீ எப்போ சென்னை வந்த” என்று கேள்வியை அவளிடம் சமர்ப்பிக்க..

“இதோ..நித்யா மேடம் வந்த அதே பஸ்ஸில் தான் நானும் வந்தேன். ஆமா நித்யா யாரு உனக்கு”என்று கேட்க அதற்கு அவன் வெட்கப்பட்டுக் கொண்டு “நான் விரும்புகின்ற பொன்னு” என்று கூற…

“சரி சரி உன் காதல் கதையை அப்றம் கேட்டுக்கிறேன் பை நான் சிவா வீட்டுக்கு போறேன்” என்று சிவா வீட்டிற்கு ஒரு ஆட்டோ பிடித்து சென்றாள்.

அவளை வரவேற்ற சிவாவும் அனுவும் அவளை நன்கு உபசரித்து வந்த விஷயத்தை கேட்டறிந்தனர்.

“சிவா நடந்த எல்லாம் உண்மையும் சொல்லு” என்று கேட்க..

அவன் ஒவ்வொரு விஷயமாய் பட்டியலிட்டு கொண்டு இருக்க, அவள் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

“அ…அப்படினா ராகுல் என்னுடைய தம்பியா”?

“ம்ம்ம்”

“அப்படினா எங்க அப்பா ஒரு யமகிராதகனா…ச்ச அந்த ஆளு இனி வெளியே வரவேக்கூடாது எங்க அம்மாவை நான் சமாளிச்சிக்கிறன்”

“ஆமா..திவ்யா துரைராஜ் உங்கள் அப்பாவா இருந்தாலும் அவர்,ஓர் குற்றவாளி அதுமட்டுமின்றி ராகுல் உன்னை தாக்க நினைச்சதுக்கு பின்னாடி நியாயமான காரணமும் இருந்திருக்கு”

“ஆமா சிவா…இப்ப ராகுல் எங்க”?

“மும்பை போனதா லதா சொன்னா”

“நான் ராகுல் கிட்ட பேசனும்..”என்று கவலையுடன் கூற உடனே அவனுடைய நம்பருக்கு தொடர்பு கொண்டாள்.

“ராகுல்…டேய் தம்பி என் செல்லமே எங்களை விட்டு ரொம்ப தூரம் போயிட்டியா”

“அ….அக்கா இ..இந்த வார்த்தைகாக எத்தனை நாள் காத்துட்டு இருந்தேன். இனி எனக்கும் உறவுனு சொல்லிக்க எல்லாரும் இருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா”

துக்கம் தாங்காது திவ்யா கதறி அழுதாள். தன் பெற்றோரின் ஆத்மா “அந்த அறைக்குள்” இருப்பதை கூறிய ராகுல் அதனால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் ராகுல் கூறினான்.

“தம்பி நீ மறுபடியும் இந்த காரைக்குடி வீட்டுக்கு வரனும் டா அது உன் வீடு உன் சொத்து உனக்கும் உன் மனைவிக்கும் எல்லா உரிமையும் அங்க இருக்கு. ப்ளீஸ் வா டா”

“அக்கா நான் மும்பையில் என்னை வளர்த்த அப்பா அம்மாவை அம்போனு விட்டு வரவே மாட்டேன். அப்படி வருவதாக இருந்தால் அவங்களையும் கூட்டிட்டு தான் வருவேன்” என்று கூற…உன் வருகைக்காக காத்திருப்பேன் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து மீண்டும் கதறி அழுதாள்.

ஒரு வருடம் கழிந்தது…

நீதிமன்றத்தில் துரைராஜுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கலா தன் கணவன் செய்த பாவங்களை கழுவ காசி ராமேஸ்வரம் என்று சென்றுவிட்டாள். 

“கடவுளே என் கணவன் செய்த பாவங்களுக்கு சட்டம் தண்டனை கொடுத்திருச்சு. இதுக்கு மேல அந்த பாவம் என் வாரிசுகளை பாதிச்சிற வேண்டாம் என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள்”

பாரம்பரிய வீடு வெறிச்சோடி போகவே திவ்யா தனது கணவன் மற்றும் குழந்தையுடன் இங்கே வந்துவிட்டாள். கலாவிற்கும் தேவியிற்கும் இப்ப இருக்கிற ஒரே ஆதரவு திவ்யா மட்டுமே. எப்பொழுது துரைராஜிற்கு தண்டனை  வழங்கப்பட்டதோ அன்றிலிருந்து “அந்த அறைக்குள்” இருந்த இறந்து போன ஆத்மாக்களும் விடைப்பெற்றன. அந்த அறையில் இனி எந்த வித சத்தமும் கேட்காது. அந்த அறைக்கதவை திறக்கப்பட்ட நிலையில் அனைவரும் உலா வந்தனர்.

அன்று வழக்கம் போல் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்த திவ்யாவிற்கு இன்ப அதிர்ச்சி ஏனெனில் ராகுல் தனது மனைவி மட்டும் வளர்ப்பு தாய் தந்தையுடன் அங்கு வந்து நின்றான்.

“வாட் எ. சர்ப்ரைஸ்” என்று வியந்தாள் திவ்யா.

“என்ன அக்கா பாக்குறிங்க இனி நாங்களும் உங்க கூடவே இருக்கப்போறோம்” என்று இன்முகத்துடன் கூற அவனை கட்டித்தழுவி வரவேற்றாள் திவ்யா. உள்ளே வந்தவன் “அக்கா கலா பெரியம்மா” எங்க?

“அவங்க வருவாங்க டா மனசுல இருக்கிற கஷ்டமெல்லாம் தீர்ந்தவுடன்”

தேவியை பார்த்ததும்”சித்தி எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரிக்க தேவியின் முகம் தாய்மையில் மலராந்தது “ராகுல் கண்ணா இனி நீ என் புள்ள டா..என்னை அம்மானு கூப்பிடு” என்றுரைக்க சிரித்துக்கொண்டே “சரிங்க மா” என்றான்.

அக்குடும்பம் மீண்டும் கலைகட்டியது. திவ்யா,அவளுடைய கணவன்,குழந்தை ,கலா,தேவி மற்றும் ராகுல் அவனுடைய மனைவி ,வளர்ப்பு பெற்றோர் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழத்துவங்கினர்.

முற்றும்.

(இனி அந்த வீட்டில் அன்பு மட்டுமே. சுபம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content