மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 32Post ReplyPost Reply: Monisha's VET - 32

Quote from monisha on December 17, 2021, 7:25 PM

32
ஆதவனின் வருகை இருளின் ஆதிக்கத்தைச் சரிந்து போகச் செய்ய, வானில் சிவப்பு மஞ்சள் நிறங்களைக் குழைத்து ஊற்றியதைப் போல் ஒரு புது வர்ண ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அந்த அழகிய விடியலை ரசிக்கவோ லயிக்கவோ முடியாமல் தமிழின் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் விழித்து எழுந்த போது அவள் கணவன் அருகில் இல்லை. இவ்வளவு காலையில் எங்கே சென்றான் என்ற யோசனையுடன் தோட்டத்திற்கு வந்து தேடியவளுக்கு வாசல்புறத்தில் அவன் கார் இல்லாதது தெரிய வந்தது. அவளுக்கு அது அதிர்ச்சியாய் இல்லாத போதும் அவன் இப்படி சொல்லாமல் செல்வது கொஞ்சம் வேதனையாகவே இருந்தது. அதற்குப் பிறகு அவள் மனம் எங்கிருந்து இயற்கையின் வர்ணஜாலங்களில் லயிக்க முடியும். அந்தச் சமயத்தில் ரவி அவளைத் தேடி வந்து இரவு அவசரமாய் வீரேந்திரன் புறப்பட்ட தகவலை உரைத்தான். ரவியிடம் உரைத்தவன் ஏன் தன்னிடமே சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே? அப்படி தன்னிடம் சொல்ல முடியாத ஏதாவதா? என்று எண்ணியவள் கொஞ்சம் குழப்பமடைந்திருந்தாள். ரவி அப்போது தன் சகோதரியிடம் ஒரு கடிதத்தை நீட்டினான். "என்ன ரவி இது? " "தெரியலக்கா... வாட்ச் மேன் தந்திட்டுப் போனார்... கவர்ல உன் பேர்தான் இருந்துச்சு" என்று நீட்ட அவள் புரியாமல், "எப்போ வந்த லெட்டர் ரவி" என்று கேட்டாள். "இப்பதான் யாரோ வந்து கொடுத்தாங்களாம்" என்று சொல்லவும் அதனை வாங்கிக் கொண்டாள். அந்த கடிதத்தின் மேல் உறையில் செந்தமிழ் என்றிருந்தது. ஆர்வமாய் அதனைப் பிரித்து படித்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வேகமாய் தன் அறைக்கு ஓடியவள், தன் கைப்பேசியை எடுத்து ரகுவிற்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் அவள் அழைப்பு சென்று சேரவில்லை. பதற்றமடைந்தவள் உடனே ஆதிக்கு அழைப்பு விடுத்தாள். அந்த அழைப்பு ஒலித்து ஒலித்து அணைந்தது. தொடர்ந்து முயற்சித்தாள். அவளின் அழைப்பு ஆதியின் கைப்பேசியில் ரீங்காரமிட, அந்தச் சத்தம் விஷ்வாவின் உறக்கத்தைக் கலைத்துவிட்டது. எரிச்சலோடு எழுந்து பார்த்தவன் ஆதியைத் தேட, அவள் அறையில் இல்லை. கடிகாரத்தைப் பார்த்தவன் மெல்ல எழுந்து அவளின் கைப்பேசியை எடுத்து கொண்டு வெளியே வர, அதற்குள் அந்த அழைப்பு தானாகவே அணைந்திருந்தது. அப்போது ஆதி சமையலறையில் சாரதாவிடம், "கொடுங்க ஆன்ட்டி... நான் காபி போடுறேன்" என்றாள். அவள் குரல் கேட்டு அங்கே வந்தவன், "அம்மா வேண்டாம்... நீங்களே காபி போடுங்க... காலங்காத்தால அந்த கன்றாவி எல்லாம் என்னால குடிக்க முடியாது" என்றான். "போடா ராஸ்கல்" என்று ஆதி கையில் கிடைத்த ஒரு கிளாஸை அவன் மீது விட்டெறிந்தாள். அது மேலே படாமல் தள்ளிநின்று கொண்டவன், "உண்மையைதானே சொன்னேன்... நீ போடற காபி ஒன்னு கசாயம் மாதிரி இருக்கும்... இல்ல பாயசம் மாதிரி இருக்கும்" என்று அவளை பரிகாசம் செய்து சிரிக்க, அவள் மீண்டும் வேறேதேனும் அவன் மீது விட்டெறியக் கிடைக்கிறதா எனத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்குள் சாரதா மகனை நோக்கி, "அவளை கிண்டல் பண்றதை விட்டுவிட்டு... நீ வந்து போடுறா பார்ப்போம்" என்றார். ஆதி விஷ்வாவைப் பார்த்து பார்வையிலேயே பரிகாசம் செய்ய, விஷ்வா சுருங்கிய முகத்தோடு, "இதெல்லாம் ரொம்ப ஓவர்மா..." என்றான். "முடியாதில்ல...போ... போய் உன் வேலையை பாரு" என்றவள் அலட்சியமாக கூற அவன் உடனே மேடை மீதிருந்த கரண்டியை அவள் மீது குறிப்பார்த்து எரிய, அவள் தலையைக் கவிழ்த்து கொண்டாள். இவற்றை எல்லாம் சாரதா கவனித்து அமைதியாய் புன்னகைத்து கொண்டார். திருமணம் என்ற ஒன்று ஆகிவிட்டதே ஒழிய இருவருமே சிறுவயதிலிருந்து எப்படி இருந்தார்களோ இப்போதும் அதேபோல்தான் இருக்கிறார்கள். கொஞ்சமும் மாறவில்லை. அது ஒருவகையில் அவருக்குப் பழகியிருந்தது. "அம்மா... அவ மட்டும் காபி போட்டா... நான் குடிக்க மாட்டேன்... சொல்லிட்டேன்" என்று சொல்லியபடியே அவன் வெளியேற ஆதி சத்தமாய், "உனக்கு நான் போடவே மாட்டேன்" என்றாள். விஷ்வா மீண்டும் ஒலித்த அவள் கைப்பேசியின் அழைப்பைக் கவனித்தவன் கோபமாக அதை மேஜை மீது வைத்துவிட்டு, "ஏ அதி... உன் ஃபோன் அடிச்சு உயிரை எடுக்குது... நீ காபி போட்டு கிழிச்சது போதும்... வந்து எடுத்துப் பேசு" என்றான். சமையலறையை விட்டு வெளியே வந்தவள் காபியை எடுத்து வந்து அவனிடம் நீட்ட அவன் அதனை வாங்காமல், "இதுக்கு பதிலா நீ எனக்கு கொஞ்சம் விஷம் கலந்து கொடுத்திரலாம்" என்றான். "இப்படியே பேசிட்டிருந்தேன்னா அதான் நடக்க போகுது" "ஐம் ரெடி... கில் மீ" என்று சொல்லி அவள் கரத்தைப் பற்றி அருகில் இழுத்தான். "என் காபியைக் குடிக்கமாட்ட இல்ல... போ" என்று விலகிப் போனவளைத் தடுத்து காபியைப் பெற்றுக் கொண்டவன், "அந்த ஒரு முத்தத்திற்காக... மரணத்தைக்கூட தொட்டுட்டு வருவேன்... இந்த காபியைக் குடிக்க மாட்டேனா?" என்றவன் அந்தக் காபியைக் குடிக்கத் தொடங்கி சகிக்காமல், "என்னடி இது?" என்று கேட்டு முகத்தைச் சுளித்தான். அவள் ஏளனமான புன்னகையோடு, "உப்பு காபி... ஸ்பெஷல்லி மேட் ஃபார் யூ... நீ இப்ப சொன்ன டயலாக்குக்கு நீ குடிச்சே தீரணும்" என்றாள். அப்போது மீண்டும் அவள் கைப்பேசி ஒலிக்க அவள் கவனம் திசை திரும்பியது. "சீக்கிரம் எடுத்துப் பேசு... காலையிலிருந்து அடிச்சுட்டிருக்கு" என்றவன் அவள் தன் கைப்பேசியைக் கையில் ஏந்திச் செல்வதைப் பார்த்து, "தப்பிச்சேன்டா சாமி" என்றபடி அந்தக் காபியை அவசரமாய் வாஷ்பேஸினில் கொட்டினான். தமிழின் பெயரைப் பார்த்துவிட்டு அவள் அழைப்பை ஏற்றாள். "ஆதி... உனக்கு ஒன்னும் இல்லையே... நல்லா இருக்க இல்ல" என்று தமிழ் பதட்டமாய் பேச, ஆதிக்குக் குழப்பமாக இருந்தது. "உனக்கெப்படி?!" என்று அவள் கேட்டு நிறுத்தத் தமிழின் இதயத்துடிப்பு அதிகரிக்க, "அப்படின்ன்ன்னா" என்று கேட்டு அதிர்ச்சியானாள். ஆதி சற்று நிதானித்து, "நத்திங் டூ வொர்ரி... சின்ன ஆக்ஸிடென்ட்... பட் ஐம் ஆல் ரைட்" என்று சொல்ல, "ஆக்ஸிடென்ட்டா?" என்று தமிழ் மீண்டும் அதிர்ச்சியாக, "டென்ஷாகதே... எனக்கு ஒன்னும் இல்ல... நான் வீட்டிலதான் இருக்கேன்" என்று ஆதி தெளிவுப்படுத்தினாள். ஆனால் தமிழ் நடுக்கத்தோடு,"அப்போ ரகுவுக்கு" என்று கேட்டவள் பேச முடியாமல் தவிப்படைய ஆதியும் புரியாமல், "ரகுன்னானானா? உன் இன்ஸ்பெக்டர் ஃப்ரண்ட்தானே" என்று கேட்டாள். தமிழால் மேலே பேசமுடியவில்லை. "பேசு தமிழ்" "...." "என்னாச்சு தமிழ்... பேசு" "......" "தமிழ்ழ்ழ்ழ்ழ்" அவள் நடுங்கியபடி, "ஐ வில் கால் யூ பேக்" என்று அவசரமாய் அழைப்பைத் துண்டித்தாள். அப்போது வீரேந்திரன் புறப்பட்டதை நினைவுபடுத்தியவள் அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று அழைப்பு விடுத்தாள். காஞ்சிபுரத்தில் உள்ள பன்முக சிறப்பு மருத்துவமனை அது. வீரேந்திரன் அங்கே நின்றிருந்த மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தான். "ஐம் சாரி... இது மேஜர் ஆப்ரேஷன்... நீங்க என்ன சொன்னாலும் ரிலேஷன்ஸ் ஸைன் பண்ணாம இதை பண்ண முடியாது" என்றவர் சொல்ல, "அவங்க அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க... நீங்க பண்ணுங்க... டிலே ஆக ஆக ரகுவிற்கு ஏதாவது ஆகிட்டா" என்றவன் பதட்டமாகப் பேசினான். "கொஞ்சம் க்ரிட்டிக்கல்தான்... பட் ப்ரொசீஜர்படி முடியாது... இதுல நிறைய ரிஸ்க் இருக்கு... ஒரு போலீஸா உங்களுக்கு இது தெரியாதா?!" என்று கேட்டார். "போலீஸா இல்ல... நான் ஒரு மனிஷனா பேசிட்டிருக்ககேன்... ப்ரொஸீஜர் எல்லாம் நாட் அ மேட்டர்... நான் ஸைன் பண்றேன்... நீங்க அவனைப் பிழைக்க வைங்க... ப்ளீஸ்" என்றவன் இரக்கத்துடன் கூற, "ரூல்ஸ்படி முடியாது... ஸாரி" என்றார் தீர்க்கமாக. அந்த நொடியே அவன் குரல் அதிகார தொனியில் மாறியது. "நீங்க இப்ப பண்ணியே ஆகணும்... இல்லன்னா" என்று அவன் மிரட்டலாகப் பார்க்க, அந்த மருத்துவரும் அவனை கோபமாய் பார்த்து, "உங்க பவரை நீங்க இங்க காட்ட முடியாது ஏசிபி சார்... இங்க உங்க அதிகாரம் செல்லுபடியாகாது" என்றார். "செல்லுபடியாகாதா? என் பவரை பார்க்கிறீங்களா... யார் பேசினா கேட்பீங்க... உங்க டீனா... இல்ல அதுக்கு மேல மினிஸ்டர்... எம்பி... வேற யாராச்சும்... இப்ப நீங்க ஆப்ரஷனை ஸ்டார்ட் பண்ணி ரகுவைக் காப்பாத்தல..." என்று எரிப்பது போல் பார்த்தவன் வேகமாய் தன் கைப்பேசி எடுத்து தன் தந்தைக்கு அழைத்தான். சரியாக அதேசமயம் தமிழ் அவனுக்கு அழைத்ததால் அவள் அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில் வீரேந்திரன் முதல் முறையாய் தன் தந்தையின் தயவை வேண்ட, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நொடியே முற்றிலுமாய் நிலைமை மாறியது. ரகுவை ஆப்ரேஷன் தியட்டருக்கு அழைத்துப் போக அவனது சிகிச்சைக்கான படிவங்களில் வீரேந்திரன் கையொப்பமிட்டான். அப்போது அவனருகில் வந்து சல்யூட் அடித்து நின்ற காவலாளியைப் பார்த்தவன் அவரைத் தனியே அழைத்து வந்தான். "என்ன சண்முகம்? ரகுவோட அம்மா எப்போதான் வருவாங்க" என்று கேட்க, "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க சார்" என்றான். சற்று நேரம் யோசித்தவன் நேராய் தன் கார் நோக்கி விரைந்தான். சப்இன்ஸ்பெக்டர் சண்முகமும் அவனைப் பின்தொடர அவன் கார் கதவைத் திறந்து தன் பேகிலிருந்த கவரை எடுத்து நீட்டினான். "இந்த புக்கை ஃபாரன்ஸிக் (Forensic) டிப்பார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி... இதிலிருக்கிற கைரேகை தர்மாவைக் கொலை பண்ண கத்தில இருக்கிற கைரேகையோட ஒத்து போகுதான்னு செக் பண்ண சொல்லுங்க... உடனே" என்றான். "எஸ் சார்" என்று சொல்லி அந்த கவரை சண்முகம் பெற்றுக்கொண்டான். ரகுவைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவனுக்கிருந்த அதே தீவிரம் தன் மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தைத் தெளியப்படுத்திக் கொள்வதிலும் இருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா