மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 16Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 16

Quote from monisha on April 7, 2022, 3:55 PM

16
செந்தூரம் பூசிக் கொண்ட வானம் அவளின் செம்மையேறிய கன்னங்களாகவும் இருள் கவ்விய பொழுதில் மின்னிய நட்சத்திரங்கள் அவளின் கருவிழிகளாகவும், தோட்டத்தில் பூத்திருந்த அடர்சிவப்பு பூக்களின் நிறங்கள் யாவும் அவள் இதழ்களாகவும் என அவன் சுற்றுபுறம் மறந்து தனக்கான ஒரு தனி கற்பனை உலகதிற்குள் சஞ்சரிக்கத் தொடங்கி வெகுநேரமானது. அன்றிரவு அவர்களுக்கு முதலிரவிற்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த மாத்திரத்திலிருந்து அவனுடைய தவிப்பு இன்னும் இன்னும் அதிகமானதுதான் மிச்சம். நிமிடங்கள் கூட யுகங்களாக கடந்தன. அவள் மீதான ஆசையெல்லாம் ஒரு புறமிருந்தாலும் நிறைய நிறைய அவளிடம் பேச வேண்டுமன்ற ஆவல்தான் அதிகமாக இருந்தது, மற்றபடி அன்றே கணவன் என்ற உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரமெல்லாம் அவனுக்கு இல்லை. எதிர்பாராமல் நிறைய பிரச்சனைகளுக்கு இடையில் அவசரகெதியில் நடந்த திருமணம் என்பதால் இந்த மாதிரியான முதலிரவு சம்பிராதயங்கள் எல்லாம் நிதானமாக நடக்கும் போது நடக்கட்டும் என்ற மனநிலையில்தான் அவன் இருந்தான். ஆனால் அந்த அறையின் அலங்காரமும் மெத்தையில் தூவியிருந்த பூக்களின் வாசமும் அவனை வெகுவாக சஞ்சலபடுத்த அவன் உணர்வுகள் எதுவும் அவன் கட்டுக்குள் இல்லை. ஒருவிதமான படபடப்பு உணர்வு அவனை ஆட்கொண்டது. கதவைத் திறக்கும் ஓசையில் இன்னும் வேகமாக அவன் இதயம் அடித்துக் கொள்ள, அவளோ அறைக்குள் நுழைந்ததும் கதவை அழுத்தமாக மூடிவிட்டு பால் சொம்பை அவனிடம் கொடுத்தாள். அவன் எதிர்பார்த்த நாணமோ காதல் பார்வையோ மிஞ்சிப் போனால் அவனுக்கு இருக்கும் படபடப்பு கூட அவளிடம் இல்லை. மேலும் அவள் அவனிடம் ரகசியம் பேசுவது போல கிசுகிசுத்த குரலில், “ஒழுங்கா இந்தப் பாலைக் குடிச்சிட்டுக் கப்சிப்னு படுத்து தூங்கோணோம்… புரிஞ்சுதா?” என, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்?” என்று அவன் கேட்க, “ஷ்ஷ்ஷ்… பேசக் கூடாது” என்று ரகசிய பாணியில் சொன்னவள், “இதை முதல குடிச்சிட்டுப் படு” என்று அந்தப் பால் சொம்பைச் சுட்டிக் காட்டி கட்டளையிட அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஆண் சிங்கம் பட்டென விழித்துக் கொண்டது. அவள் பவ்வியமாக சொல்லியிருந்தால் அவளுக்காகக் குட்டிகரணம் போட கூட அவன் தயாராகத்தான் இருந்தான். ஆனால் அவளின் இந்த மிரட்டல் தொனி அவனைக் கடுப்பேற்றியது. “ஏன் பேசக் கூடாது? என்ன விசயம்?” என்று அவன் சீற, “ஷ்ஷ்ஷ்… மெதுவா பேசு” என்றவள் அப்போதும் அவன் தவிப்பை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. மணமேடையில் அவள் பார்த்த பார்வைக்கும் தற்போது அவள் நடந்து கொள்ளும் முறைக்கும் சிறு ஒற்றுமை கூட இல்லை. அதுவும் அவளிடம் நிறைய பேச வேண்டுமென்று அவன் அத்தனை ஆவலாகக் காத்திருக்கும் போது… பேசாதே பேசாதே என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும். “என்னடி திமிரா? இப்போ உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி பேசுற?” என்று உரக்க கத்த, அப்போதே அவன் கோபம் அவள் மூளைக்குக் கொஞ்சமாக உரைத்தது. “சொல்றேன்… ஆனா நீ சத்தம் போடாதே” என்று பீடிகையோடு ஆரம்பித்தவள், “இங்க வா” என்று அந்த அறை கதவருகே அவனை அழைத்தாள். அவனும் அங்கே வந்து நின்று, “என்ன?” என்று புருவத்தை உயர்த்த, கதவு இடுக்கிலிருந்த ஒரு சிறு துவாரம் வழியாக அவனைப் பார்க்க சொன்னாள். “எதுக்குடி?” “பாருடா” என்றவள் அழுத்திச் சொல்லவும் அவன் அந்தத் துவாரத்தின் வழியாகப் பார்த்தான். அவர்கள் உறவினர்கள் எல்லோரும் அங்கே கதையடித்துக் கொண்டிருந்தனர். “பார்த்தியா?” என்றவள் மெல்லிய குரலில் கேட்க, “என்ன? ஒன்ற சொந்த பந்தமெல்லாம் பேசிட்டு இருக்காவுங்க… அம்புட்டுதானே” என்றான். “என்ன அம்புட்டுதானே சுலபமா சொல்லி போட்ட” என்றவள் அவனை தீவிரமாக முறைக்க, “லூசா நீ… வூட்டுல கண்ணாலம்னா சொந்பந்தமெல்லாம் கூடி இருக்கத்தான் செய்வாங்க” என்று அவன் சொன்னதைக் கேட்டு அவள் தவிப்போடு, “அதெல்லாம் சரிதான்… ஆனா எல்லா இந்த அறை வாசலில கூடி இருக்காவுங்க இல்ல” என்றவள் முகம் பரிதாப உணர்வைத் தத்தெடுத்தது. “அதுகென்னவே பண்ண முடியும்… உங்க வூட்டுல இந்த இரண்டு அறைதானே கிடக்கு… வேற எங்கன போவாங்க” “ஐயோ! ஒனக்கு நான் சொல்றது சுத்தமா விளங்கல” என்றவள் மேலும், “இந்த கதவை அடைச்சாலும் அறைக்குள் கேட்குற சின்ன சத்தம் கூட வெளியே கேட்டுப் போடும்” என்றவள் குரல் மொத்தமாக உள்ளே போயிருந்தது. அவள் தவிப்பைப் புரிந்து கொண்டவனாக முகம் மலர்ந்தவன், “நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்குற? அவங்க கவனமெல்லாம் இங்கன இருக்காது” என்றான். “நினைப்புதான்” என்றவள் அவனைக் கதவை விட்டுத் தள்ளி அழைத்து வந்து மெத்தை மீது அமர வைத்தவள், “ஒனக்கு தெரியாது… என்ற பெரிம்மா மவ கண்ணாலம் நடத்துச்சு… அப்போ அவங்க வூட்ல வசதி இல்லாம எங்கன வூட்லதான் இந்த சடங்கை வைச்சாங்க…. இப்படிதான் எல்லாம் வரிசையா இந்த அறை வாசலில படுக்கையைப் போட்டுட்டு வெளியே இருந்துக்கிட்டு உள்ளே கேட்குற சத்தத்தை வைச்சு ஒரே கிண்டலும் கேலியும்… அப்பப்பா காதால கேட்க முடியல” என்றவள் அந்த விஷயத்தை அத்தனை மும்முரமாக சொல்லிக் கொண்டிருக்க அவனோ அவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் கண்களை உருட்டி உருட்டி தன் முகபாவத்தை பலமாதிரியாக மாற்றிய விதமும் மெதுவாகப் பேசுகிறேன் பேர் வழியென்று அவள் கைகளை அசைத்து அசைத்து காற்றில் நர்த்தன்மாடிய விதமும் அவனை வசீகரித்தது. அவள் மேலும், “முன்னாடி உட்காரத்து பேசிட்டு இருக்கங்களே… என்ற அத்தையும் சித்தியும்… எமகாதகீங்க… இரண்டுக்கும் பாம்பு காது” என்று சொல்ல, அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் பெருங்குரலெடுத்து சிரிக்க, “ஐயோ! ஷ்ஷ்ஷ்” என்று அவன் வாயை அவள் அழுத்தமாக மூடிவிட்டு, “ப்ளீஸ் சந்திரா… சிரிக்காதே” என்று கெஞ்சவும் அவன் பார்வை அவளை இன்னும் ஆழமாக அளவெடுத்தது. வெள்ளையும் சிவப்பும் கலந்த மெல்லிய சரிகை புடவை அவள் தேகத்தின் நளினங்களை திறம்பட எடுத்து காட்டியதில் சற்றே தடுமாறிப் போனவன் பூச்சரத்தில் அவள் வாசம் கலந்து வீசிய அந்தப் பூவாசத்திற்கு தன்வசமிழந்து மயக்கம் கொண்டு அவளை விழுங்கி விடுவது போல பார்க்கவும் சட்டென்று தன் கரத்தை அவன் வாயிலிருந்து விலக்கிக் கொண்டவள். “என்ன நீ? அப்படி பார்க்குற… நான் சொன்னது விளங்குச்சா?” என்று கேட்ட அதேநேரம், “எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்… இன்னைக்கு ஒரு நாள் கம்னு படுத்து தூங்கு” என்றாள். அவளை ஏறஇறங்கப் பார்த்தவன், “இப்போ என்ன? நான் எதுவும் பேசாம கப்சிப்னு இந்தப் பாலைக் குடிச்சிட்டுப் படுத்து தூங்கோணோம்… அம்புட்டுதானே” என்க, “ம்ம்ம்ம்” என்று வேகமாகத் தலையசைத்தாள். அதன் பின் அவன் படுபவ்யமாக அந்தப் பாலைக் குடிக்க, அப்போது அவன் கண்களின் மின்னிய கல்மிஷத்தை அவள் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும். அது வெறும் பாலை மட்டும் குடிக்கும் நல்ல பூனை இல்லை. திருட்டுப் பூனை என்று! அதன் பின் அவன் படுப்பதற்கு வசதியாக தன் சட்டையைக் கழற்றவும், அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “சட்டையைக் கழட்டிட்டுதான் படுக்கோணோமாக்கும்? அப்படியே படுத்தா ஆகாதா?” என்று கடுகடுக்க, “ஏன்? உனக்கு அதுல என்ன பிரச்சனை?” என்றவன் மேலும், “என்னோட சட்டையைதானே கழட்டினேன்… உன்னோடதையா?” என்று எடக்காக கேட்க வருவதற்குள், “ஐயோ போதும்” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேச வேண்டாமென்று அவனைக் கைக் காட்டி நிறுத்திய போது அவன் சட்டையைக் கழற்றியிருந்தான். அவனின் கட்டுடலான தேகமும் திடகாத்திரமான தோள்களைப் பார்த்தும் தன் பார்வையை அவசரமாகத் திருப்பிக் கொண்டவள், “எனக்கென்ன பிரச்சனை? நீ எப்படியோ படுத்துக்கோ… நான் கீழே படுத்துக்கிறேன்” என்றாள். ‘எதுக்கும் மசிய மாட்டுறாளே?’ என்று அவன் மனதிற்குள் புலம்பியபடி சாவகாசமாகப் படுக்கையில் அமர்ந்து கொண்டு, “எனக்கு ஒரு சந்தேகம்? கேட்கட்டுமா?” என்று ஆரம்பிக்க அவள் அவன் புறம் கேள்வியாகப் பார்த்தாள். “இல்ல… இவ்வளவு நேரமா நீ கையை ஆட்டி ஆட்டிப் பேசிட்டு இருந்தியே… உன் கண்ணாடி வளையல் குலுங்கி குலுங்கி சத்தம் வெளியே கேட்டிருக்குமே? அவங்கெல்லாம் என்ன நினைச்சிட்டு இருப்பாங்க” என்று கேட்டு அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் ஒரு குண்டைப் போட அவள் முகம் கலவரமாக மாறியது. “ஆமா இல்ல” என்றவள் உடனடியாக தன் கை வளையல்களைக் கழற்ற, கன்னத்தில் கை வைத்து கொண்டு அவள் செய்கையை ஆர்வமாக ரசித்து பார்த்திருந்தவன் மேலும் அவளிடம், “கொலுசைக் கழட்டல” என்றான். அதையும் அவள் கழற்றி முடித்துவிட்டு, “இப்போ சத்தம் கேட்காது இல்ல” என்க, அவளிடம் ஆமோதிப்பாகத் தலையசைத்தவன் “இனிமே சத்தம் கேட்காது” என்று சொல்லிவிட்டு அவன் செய்த காரியத்தில் அவள் அரண்டு போனாள். கணநேரத்தில் அவள் மெல்லிடையை தம் கரங்களுக்குச் சிறைபடுத்தியவன் அவளை இழுத்து படுக்கையில் தன்னோடு சரித்துக் கொள்ள அவள் மிரட்சியுற்று, “விடுடா” என்று கத்தும் போதே, ஷ்ஷ்… பேசக் கூடாது” என்று அவள் வாயை அடைத்தவன், “என்னைக் கொல்றடி நீ?” என்றபடி அவளின் தேக வளைவுகளில் தன் தீண்டலையும் தேடலையும் தொடங்க அவளோ அவனை எதிர்க்கவும் செய்யாமல் அதேநேரம் மொத்தமாக இணங்கியும் போகாமல் படாய்படுத்திக் கொண்டிருந்தாள். “படுத்தாதே டி… இன்னைக்கு எதுவும் வேண்டான்னுதான் நானும் நினைச்சேன்… ஆனா முடியலேயே” என்றவன் கண்கள் காட்டிய தாபத்திலும் ஏக்கத்திலும் அவளால் அதற்கு பிறகு அவனிடம் எதிர்ப்பு காட்ட முடியவில்லை. “உனக்கென்ன சத்தமில்லாம நடக்கணும்… அம்புட்டுதானே” என்ற கேள்வியோடு விரல்களால் அவள் முகத்தை அளந்தபடி உதட்டை தொட்டதும் அவன் கரத்தைத் தட்டிவிட்டு தன் உதட்டை மூடிக் கொண்டு, “வேண்டாம்… நீ அன்னைக்கு கொடுத்ததுதான் எனக்கு நியாபகதுக்கு வருது” என்று சொல்ல, “இனிமே வராது” என்றவன் அவள் கைகளைப் பிரித்தெடுக்க. “சந்திரா” என்றவள் வார்த்தை முடிவதற்குள் அவன் முத்தமிட்டிருந்தான்… ஆனால் இம்முறை அந்த முத்தத்தில் வெறியோ மூர்க்கமோ இல்லை. மாறாய் காதலும் காமும் ஒருசேர கலந்த அந்த முத்தத்தில் அவள் இதழ்கள் நனைய நனைய அவள் புதுவித மயக்கத்தில் ஆழ ஆரம்பித்தாள். அவள் விழிகள் தாமாகவே சொருகிக் கொள்ள, அவள் கரங்கள் அவனை ஆரத்தழுவிக் கொண்டது. இரவு முழுக்க நீண்ட அவர்களின் காதல் போரில் அவன் கட்டுடலான தேகதிற்குள் இவள் அடங்கிப் போயிருந்தாலும் அவளின் அடங்கா பெண்மைக்கு இவன் மடங்கியிருந்தான். இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களாக இல்லை. பள்ளி பருவத்திலிருந்தே அவள் மீது அவனுக்கு தீரா ஆசை! அது அவள் அழகின் மீதானது மட்டுமல்ல. அவளின் துருதுருப்பான விழிகளில் பேச்சில் என்று மெல்ல மெல்ல அது அவளின் கன்னிதன்மையில் மீது அளவில்லா மோகமாகவும் தாபமாகவும் மாறி வெகுநாளாகியிருந்தது. அதுவும் அன்று பார்த்து அவளின் துருதுருப்பு இன்னும் அதிகமாக அவனைக் கட்டியிழுக்க, தன்னை மீறி அவனுக்குள் பொங்கிய தாப உணர்வுகளை அவனால் கட்டுபடுத்திக் கொள்ளவே முடியவில்லை. இருவருமே அந்த உணர்வுகளுக்குள் மூழ்கித் திளைத்து உறவாடி தன்னை மறந்து களைத்த போதே அவர்கள் உள்ளமும் உடலும் உறக்கத்தை நாடிச் சென்றன. அவர்களது திருமண உறவு அழகான காதலோடும் அபிரமிதமான மோகத்தோடும் தொடங்கிய போதும் அவசியமான புரிதலுக்கான அவகாசத்தை எடுத்து கொள்ளவே இல்லை.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா