மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 18Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 18

Quote from monisha on April 17, 2022, 7:01 PM

18
சந்திரன் வீட்டில் முதல் நாள் அனுபவமே தமிழுக்கு கொஞ்சம் மிரட்சியாகதான் ஆரம்பித்தது. விடிந்து வெகுநேரம் கழித்தே கண் விழித்தவள் பின்கட்டிற்குப் போகலாம் என்று அடியெடுத்து வைத்த அடுத்த நொடியே காளையனைப் பார்த்து பின்வாங்கினாள். ஏற்கனவே ஒரு முறை காளையன் பாய்ந்து வந்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. அவனின் மிரள வைக்கும் கம்பீரத்தையும் சிலிர்த்து நிற்கும் திமிலையும் எண்ணி அவளுக்குள் அச்சம் ஊற்றெடுத்தது. விழித்ததிலிருந்து சந்திரனை வேறு காணவில்லை. “எருமை பன்னி… இம்புட்டு காலையில எங்க போய் தொலைஞ்சான்” என்று அவனை வசைபாடிக் கொண்டே நின்றவளுக்கு பின்கட்டைத் தாண்டிப் போக கூட பயமாக இருந்தது. இருப்பினும் அப்படியே நிற்கவும் முடியாமல் மிகவும் முயன்று அவள் காலை முன்னே எடுத்து வைத்தாள். காளையன் கட்டி வைத்திருப்பது புலப்பட, அப்போழுதே அவளுக்குள் கொஞ்சம் தைரியம் எட்டிப்பார்த்தது. “எதுக்கு ஒன்ற பெரிய கண்ணை உருட்டி உருட்டி என்னை அப்படி பார்க்குற? மவனே! அப்படி பார்த்த… உன் கண்ணா முழியைத் தோண்டிப் போடுவேன்” என்று காளையன் கட்டப்பட்டிருந்த தைரியத்தில் அவள் பேச, இப்போது மிரள்வது காளையனின் முறையானது. “காலங்கத்தால அவன்கிட்ட என்ன வம்பு செஞ்சிட்டு இருக்கவ?” என்று கேட்டபடி சந்திரன் வந்து நிற்க, “அவன்கிட்ட நான் வம்பு பண்றேன்… ம்க்கும்” எனறு நொடித்து கொண்டவள், “ஆமா நீ எங்க போன?” என்றாள். “கடைக்குப் போனேன்டி… நீ நல்ல உறங்கிட்டு இருந்த… அதான் உன்னை எழுப்ப வேணாமுனு” என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் பார்வை இன்னும் காளையனை முறைப்பதைக் கைவிடவில்லை. “ஏன் டி அவனை அப்படி முறைக்குற?” “அன்னைக்கு என் மேல பாய வந்தான் இல்ல… அதான்” “அது போன மாசம்… இது இந்த மாசம்” என்று காளையனுக்கு வாய்ஸ் கொடுப்பது போல சந்திரன் கிண்டலடிக்க தமிழ் முகம் இறுகியது. “எனக்கு இவனைச் சுத்தமா பிடிக்கல… அதென்ன பழக்கம்… மேல பாயுறது… என் மாமா வூட்ல அத்தை வூட்ல எல்லாம் காளை மாடு இருக்கு… ஆனா அதுங்க எதுவும் இவனை மாதிரி முரடெல்லாம் கிடையாது” “இவனை என்ன… உங்க அத்தை மாமா வூட்ல இருக்க மாதிரி சாதாரண காளைன்னு நினைச்சு போட்டியா? ஜல்லிக்கட்டுக் காளை எந்த ஊர் ஜல்லிக்கட்டுலயும் இவனை அடக்க ஒருத்தனும் இல்ல… ஏன் இவன் திமிலைக் கூட ஒருத்தனும் தொட முடியாது இல்ல” என்று சந்திரன் பெருமையடித்துக் கொள்ள, அவள் உதட்டை சுழித்து ஒழுங்கெடுத்தாள். “என் செல்ல தம்பி டி இவன்” என்றவன் தமிழ் கையைப் பிடித்து காளையன் நெற்றியைத் தொட வைக்க, அவன் சிலிர்த்தபடி தலையைப் பலமாக உலுக்கினான். அவள் பயந்து பின்வாங்க சந்திரன் உடனே, “இவ உனக்கு அண்ணி டா… இனிமே நீ இவ மேல பாய எல்லாம் கூடாது” என்றவன் கூடுதல் தகவலாக. “அதெல்லாம் நான் மட்டும்தான் செய்வேன்” என்று விஷம புன்னகையோடு சொல்லி அவள் இடையைக் கட்டிக்கொண்டான். “சீ பே லூசு” என்றவள் கோபமாகக் கை முட்டியால் அவனை இடித்துத் தள்ளிவிட, “ஆஅ வலிக்குது டி” என்றவன் போலியாக வலிப்பது போல பாவனை செய்து பின்னே நகர்ந்தான். இந்தக் காட்சியைப் பார்த்த காளையனுக்குதான் கலவரமானது. அண்ணனுக்கே இந்த அடி என்றால் தனக்கு? இனி இவளிடம் வைத்து கொள்ள கூடாது என்ற எண்ணத்தோடு அவர்கள் இருவரையும் பார்க்க, “ம்ம்கும்… இவன் உனக்கு தம்பி… நீ இவனுக்கு அண்ணன்… இதுல நான் இவனுக்கு அண்ணி வேற” என்றவள் சொல்லி தலையிலடித்துக் கொள்ள, “ஆமா” என்ற சந்திரன், “ஆமாம்தானே டா” என்று காளையனிடம் வேறு கேட்க, ‘எதற்கு வம்பு?’ என்று அவனும் நன்றாக தலையை ஆட்டி வைக்க, அத்தனை நேரம் அவளுக்கு காளையன் மீதிருந்த கோபம் பயமெல்லாம் சுத்தமாக வடிந்து சிரிப்பு பொங்கியது. “நேத்து நான் உன்னை எருமைன்னு கூப்பிட்டதுக்கு என்னவோ அப்படி கடுப்பானவன்… இன்னைக்கு நீயே ஒதுக்கிட்ட பார்த்தியா? நீயும் அதே இனம் தானுட்டு” என்றவள் காளையனைக் காட்டி நக்கலடித்து கூற, “அடியேய்” என்ற சந்திரன் சீற்றமாகக் குரலையுயர்த்த, “போடா டேய்” என்று சொல்லியபடி அவள் ஓடிவிட்டாள். தமிழுக்கு அவன் வீட்டிலிருக்கும் அனுபவம் ரொம்பவே புதிதாக இருந்த போதும் அவனுடைய துணையில் எதுவும் அவளுக்கு அந்தளவு சிரமமாக இருக்கவில்லை. “எனக்கு கேஸ் ஸ்டவ்ல தான் சமைக்க வரும்” என்பது போல அவள் சந்திரனிடம் சொல்ல, “என் ஒருத்தனுக்கு எதுக்கு கேஸ்னு வாங்கல… இனிமே வாங்கிக்கலாம்… கொஞ்ச நாளைக்கு சமாளிச்சிகோ” என்றான். இருப்பினும் அவளைத் தனியாக விறகடுப்பில் விடாமல் உடனிருந்து அவளுக்கு உதவி புரிந்தான். ஆனால் உதவிகளை விடவும் நிறைய உபத்திரவங்கள்தான் செய்தான். அவள் சமைக்கும் போது அவளை அணைத்து கொள்வதும் முத்தமிடுவதும் என்று அவன் செய்த லீலைகளில் அவள் தேநீரில் உப்பும், குழம்பில் சக்கரையும் என்று அவர்கள் சரசத்தில் சமையல் சகிக்க முடியாமல் போனதுதான் கொடுமை! அதன் பின்னர் இருவரும் மாறி மாறி, ‘எல்லா உன்னாலதான்டி… எல்லா உன்னாலதான்டா’ என்று பழிப்போட்டுக் கொண்டதில் சண்டையும் கூச்சலுமாக அவர்கள் குடித்தனம் சிறப்பாகவும் செழிப்பாகவும் நடைபெற்றது. நொடிகள் நிமிடங்காளனதும் நாட்கள் வாரங்களானதும் என்று கண்ணை மூடி திறப்பதற்குள் இரு வாரங்கள் ஓடியிருந்தன. கடந்து சென்ற இரண்டு வாரத்தில் அருகாமையில் இருந்தும் தமிழ் தன் பெற்றோர் வீட்டை ஒருமுறை கூட எட்டிப்பார்க்கவில்லை, அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அழகாகவும் சுவராஸியமாகவும் இருந்ததில் அவள் தன்னையே மறந்துவிட்ட நிலையில் வேறு யார் அவள் நினைவில் இருப்பார்கள். இருவருமே வீட்டு வேலை சமையல் வேலை என்று சேர்ந்தே செய்ததில் அவனும் அவளை நொடி பொழுதும் பிரியவில்லை. வயல் வேலைகளை மட்டும் அவன் தனியாகப் பார்த்து கொள்வான். அவன் வேலை செய்வதை அவள் திண்ணையில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பாள். என்னவோ அவன் வேலை செய்வதைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் கடின உழைப்பைத் தாண்டி அதை அவன் செய்யும் போது தெரியும் ஈடுபாடு அவளை வெகுவாக ஈர்த்திருந்தது. சுற்றியுள்ள நிலங்களில் எல்லாம் ஆட்கள் வைத்து வேலை செய்வார்கள். ஆனால் அவனுடையதோ ஊர் எல்லை கோடியில் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலம்தான் என்பதால் தண்ணீர் பாய்ச்சுவதில் தொடங்கி களை எடுப்பது வரப்பு வெட்டுவது என்று அவனே தனியாளாக அனைத்து வேலைகளை செய்யும் போது அவளுக்கு வியப்பாகத்தான் இருக்கும். அவனுடைய வீட்டைச் சுற்றி இடைவெளிவிட்டு அவனால் முடிந்தளவு கொஞ்சமாகப் பயிரிட்டிருந்தான். அவனுக்கு அவனே முதலாளி... தொழிலாளி எல்லாம். அவனுடைய நேர்த்தியான தேக கட்டும் உரமேறிய புஜங்களும் தோள்களும் என்று அவன் கம்பீரத்தின் காரணி இதுதான் போலும் என்று அவளுக்குத் தோன்ற, அவன் கட்டுடலைப் பார்த்து அவள் ஒவ்வொரு முறையும் அசந்துதான் போனாள். “எப்படி… இந்த வேகாத வெயிலையும் சுத்தி சுத்தி வேலை செய்யுற நீ? உனக்கு களைப்பா இல்ல” அவன் முகத்தில் வடிந்த வியர்வைகளைத் துடைத்துவிட்டபடி அவள் கேட்க, “அதுக்கு எல்லாம் நீதாண்டி காரணம்… நீதான் எனக்கு உழைப்போட அருமையைச் சொல்லி கொடுத்தவ… அன்னைக்கு நீ அப்படி பேசலன்னா… நான் இன்னைக்கு என்ன பண்ணிட்டு இருப்பேன்னே தெரியல?” என்று சொல்லி அவன் அவளை அணைத்து முத்தமிட, அவனின் வியர்வை வாசமும் கூட அந்த நொடி அவளுக்குப் போதையேற்றியது. இரண்டு மூன்று நாட்கள் அவன் வேலை செய்வதைப் பார்த்திருந்தவளுக்கு அவனோடு துணைக்கு வேலை செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டாக அந்த எண்ணத்தை அவனிடம் சொல்லவும் செய்தாள். “வேண்டாம் தமிழு…. இதெல்லாம் உனக்கு பழக்கமில்லை… அதுவுமில்லாம உங்க ஐயன் பார்த்தாங்கன்னு வைய்யு… ரத்தக்கண்ணீரே வுட்டுப் போடுவாங்க” அவன் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். இத்தனை வருடங்களில் அவளுக்கு இந்த மாதிரி வயல் வேலைகளில் எதிலும் பழக்கமில்லை. வீட்டின் பின்புற தோட்ட வேலைகளைக் கூட மதுசூதனன்தான் பார்த்து கொள்வார். விவசாயம் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவரின் எண்ணம். தன் பிள்ளைகள் படித்து பெரிய வேலையில் வைத்து பார்க்க வேண்டுமென்பது மட்டுமே அவருடைய கனவு! ஆனால் விதி அவளை விவசாயியாகத்தான் மாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால் யார் என்ன செய்ய முடியும்? அவன் சொல்வதை கேட்காமல் அவளும் அவனுடன் இறங்கி வயலில் வேலை செய்தாள். அவனும் அதன் பின்னர் அவள் போக்கில் விட்டுவிட்டான். அதிகம் கஷ்டமில்லாத வேலைகளை அவள் பார்க்கும்படி செய்து கொண்டான். பழக்கமில்லாத வேலைதான் என்றாலும் அவளுக்குத் தெரியாத புரியாத வேலை இல்லை. ஓரளவு எப்படி என்ன என்பது பற்றிய அறிவு அவளுக்கு இருந்தது. இதெல்லாம் ஒருபுறமிருக்க மதுசூதனன் காதுக்கு இந்த விஷயம் எட்டியது என்றால் அவர் பார்வைக்கும் இந்தக் காட்சிப்பட்டுவிட்டது. உள்ளுர மகள் அந்த உச்சி வெயிலில் நிற்பதைப் பார்த்து அவர் எந்தளவு துடித்துப் போனார் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருப்பினும் இதெல்லாம் அவளாகத் தேடிக் கொண்டதுதானே என்று அவருக்கு மகள் மீது கோபமும் வந்தது. அதை காட்ட முடியாத இயலாமையால் அவர் மனதிற்குள் புழுங்கிக் கொண்டார். இதற்கிடையில் அன்று சந்திரன் பூச்சி மருந்து அடிக்கிறேன் என்று, “தமிழு… நீ இங்கனயே இரு… இன்னைக்கு வர வேண்டாம்” என்றான். “ஏன் ஏன்?” “பூச்சி மருந்து அடிக்கப் போறேன்டி? பக்கத்து தோட்டத்துல சாமி அண்ணனுக்கும் சேர்த்து அடிக்கப் போறேன்” என்றவன் அதன் கலவையை மும்முரமாக தயாரித்து கொண்டிருந்தான். அவன் செய்வதை ஆர்வமாகப் பார்த்திருந்தவளுக்கு ஒரு சிறிய எண்ணம். “இந்த மாதிரி பூச்சி மருந்தெல்லாம் அடிக்காம செய்ய முடியாதா?” “பூச்சி மருந்து அடிக்காம விட்டா இம்புட்டு நாள் நம்ம உழைச்சதெல்லாம் வீணா போயிடும்டி” “இல்ல டா… இந்த இயற்கை விவசாயம் மாதிரி நம்ம பண்ணா என்ன?” “அதெல்லாம் பேச நல்லா இருக்கும் புள்ள… ஆனா நடைமுறைக்கு சாத்தியமில்ல” “இல்ல டா… இப்ப நிறைய பேர் அந்த மாதிரி இயற்கை விவசாயம் செய்றாங்க தெரியுமா? பேப்பர்ல எல்லாம் படிச்சிருக்கேன்” “அவங்க எல்லாம் அம்பது ஏக்கர் மேல வைச்சுருப்பாங்க…. கையில நிறைய காசு புரளும்…. ஆனா நம்ம நிலைமை… புதுசா இப்படி எதாச்சும் செஞ்சா முதலைக்கே மோசமா போயிடுமாக்கும்” “நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா… காசு பிரச்சனை எல்லாம் இருக்காது” என்றவள் சொன்னதை அவன் காது கொடுத்துக் கேட்டானா கேட்கவில்லையா என்பது கூட தெரியவில்லை. “இத பத்தி புறவு பேசிக்கலாம்… நான் வேலையை முடிச்சுப் போட்டு வந்துடுறேன்” என்றவன் சென்று விட அவள் யோசனையோடு திண்ணையில் அமர்ந்து கொண்டாள். இயற்கை விவசாயத்தைப் பற்றி காமராஜ் பேசும் போது அவளிடம் நிறைய சொல்லி இருக்கிறான். விவசாய குடும்பத்தில பிறந்து வளர்ந்து அவள் இதுவரை அறிந்திராத விஷயங்கள் பலவும் காமராஜ் அவளிடம் சொல்லும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சந்திரன் இப்படி ஒரே வார்த்தையில் சாத்தியமில்லை என்று சொன்னதுதான் அவள் மனதை நெருடியது. விவசாயம் பற்றிப் பேசுவதற்கும் அதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான ஆகப் பெரிய வித்தியாசங்கள் அவை! சந்திரன் பூச்சிகொல்லியைத் தெளித்துக் கொண்டிருக்க, அவள் தன் செல்பேசியின் மூலம் அந்தப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றி மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள். அவள் தொடங்கிய இந்தத் தேடல் இப்படியே அவளை உள்ளிழுத்துக் கொள்ள போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. நேரம் போனதே தெரியவில்லை. அவள் நிமிர்ந்து பார்த்த போது சந்திரன் கிட்டத்தட்ட தம் வேலைகளை நிறைவு செய்யும் நிலைமையில் இருந்தான். அவள் பார்வை அந்த கணம் கருப்பன் கோவிலில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டங்களைக் கவனித்தது. ஏதோ காது குத்து சடங்கு போலும். கடா விருந்தும் பிரியாணி சமைக்கும் வாசமும் கமகமத்தன. நாக்கில் எச்சில் ஊற அவளையும் மீறி அவளின் கவனம் முழுக்க அங்கே திரும்பியது. பொண்டுங்களும் பொடிசுகளும் கோவிலைச் சுற்றி விளையாட, பெரியவர்கள் எல்லோரும் சமையல் வேலைகள் மற்றும் பூஜை வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தனர். இவர்களோடு சில கலர் கலர் தாவணிகள் கேலியும் கும்மாளமுமாகப் பேசி சிரித்தபடி இருக்க, சட்டென்று அவள் பார்வை தன் கணவன் புறம்தான் திரும்பியது. அந்த தாவணி பெண்கள் எல்லாம் அவன் பார்வைக்கு மிக அருகில்தான் இருந்தனர். தூரத்திலிருந்து பார்க்கவே எல்லாம் கண்ணை கவரும் அழகாகவே தோன்ற, அருகே இருந்து பார்க்கும் அவனுக்கு… தான் கருப்பு என்ற தாழ்வுமனபான்மை அவ்வப்போது அவளுக்குத் தலையெடுக்கும். அதுவும் அழகான பெண்களைப் பார்க்கும் போது அந்த உணர்வு தானாகவே வெளியே எம்பிக் குதித்துவிடும். இதயம் படக் படக் எனத் துடிக்க ஆரம்பித்தது. அதுவும் ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் வேறு. சந்திரன் அவர்களை எல்லாம் பார்த்து விடுவானோ என்ற கவலை ஆட்கொள்ள, அவளுக்கு அதன் பிறகு எந்த வேலையும் ஓடவில்லை. ஆனால் சந்திரன் ஒருமுறை கூட அவர்கள் புறம் திரும்பிப் பார்க்கவில்லை. வேலையே கண்ணாக இருந்தான். ஆசுவாசமாக அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்ட போதுதான் அந்தப் பெண்களின் பார்வை மொத்தமும் சந்திரன் மீதிருப்பத்தை அவள் கவனித்தாள். அவர்கள் சாதாரணமாகப் பார்ப்பது போலவும் இல்லை. அவனைப் பார்த்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பதாகத் தோன்ற, தமிழுக்கு ஏகபோகமாக கோபம் ஏறியது. சந்திரன் வேலையை முடித்துத் திரும்பியதும் நிம்மதி பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள்ளாக, “தமிழு துண்டு எடுத்துட்டு வா” என்று சொல்லி மேலும் பீதியைக் கிளப்பிவிட்டிருந்தான். வேலையை முடித்துவிட்டு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை இரைத்து குளிப்பது அவனுக்கு எப்போதும் வழக்கம். அவன் தன் பனியனை கழற்றுவதற்குள்ளாக அவனிடம் ஓடிச் சென்றவள், “இன்னைக்கு இங்கன குளிக்க வேண்டாம்… கோவிலில் ஒரே கூட்டமா ஆளுங்க இருக்காங்க” என்று அவனைத் தடுக்க, “யாரு இருந்தா என்னகென்ன… நான் என்ன மொத்தமா கழட்டிப் போட்டுட்டா குளிக்கப் போறேன்… வேட்டியோடதானேடி குளிக்கப் போறேன்” என்றவன் சாதாராணமாகச் சொல்லி, “போய் துண்டு எடுத்துட்டு வாடி” என்றபடி தன் பனியனைக் கழற்றிவிடவும் அவள் எரிச்சலாகி, “வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்ட… கொல்லைப் புறத்துக்குப் போடா” என்றாள். ஆனால் அவன் கொஞ்சமும் மசியாமல், “ஏன் டி இப்படி படுத்துற… காத்தோட்டமா குளிச்சாதான்டி எனக்கு குளிச்ச மாதிரி இருக்கும்” என்க, “ம்ம்கும்… என்னை பாரு என் அழகைப் பாருன்னு குளிக்கணுமா உனக்கு” என்றவள் கடுப்பாகச் சொல்லி அவனை வீட்டின் பின்புறமாக இழுத்து வந்திருக்க, “யாரு என்ற அழகைப் பார்த்து அப்படி மயங்கிட போறாங்கன்னு என்னைய இம்புட்டு அவசரமாக இழுத்துட்டு வரவ” என்றவன் கிண்டலாகக் கேட்டுப் பலமாகச் சிரித்தான். “அதான் அந்த வெட்கங்கெட்ட சிறிக்கங்க” என்றவள் முனங்க, “யாரை சொல்ற? அந்தப் பச்சை தாவணியும் மஞ்ச தாவணியுமா?” என்றவன் முகமெல்லாம் புன்னகையாகக் கேட்ட நொடி அவள் அதிர்ந்து போனாள். அவன் மேலும், “பச்சை நல்ல அழகாதான் இருந்துச்சு… ஒசரமா எடுப்பா மூக்குத்தி எல்லாம் குத்திக்கிட்டு… மஞ்ச பரவாயில்லதான்… அவளுங்க பக்கத்தில ஒரு வெள்ளை சுடிதாரு நின்னுச்சு பாரு… சும்மா மூக்கு முழியுமா அள்ளிடுச்சு” என்றவன் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் சிவந்து திகுதிகுவென எறிய ஆரம்பித்திருந்தது. “ஒன்ற புத்தியைக் காண்பிச்சிட்ட இல்ல…. பொறுக்கிப் பயலே” என்றவள் சூடாக, “உண்மையத்தானடி சொன்னேன்?” என்று அவன் சாவகாசமாகப் பதிலளித்தான். “இதான் நீ வேலை பார்த்த லட்சணமா?” என்றவள் பொங்க, “வேலை பார்த்துக்கிட்டே பார்த்தனாக்கும்” என்றவன் சொன்னதுதான் தாமதம். அந்த இடம் முழுக்க அவள் தன் பார்வையை வேகமாகச் சுழற்றினாள். “எனத்த தேடுறவ?” “ம்ம்ம்ம்… ஒன்ற மண்டையில போட பெருசா கல்லு தேடுறேன்” என்றவள் உண்மையிலேயே ஒரு பெரிய கல்லைத் தூக்க முடியாமல் தூக்கி விட, “ஆத்தி… எம்புட்டு பெரிய கல்லு?” என்று பயப்படுவது போல பாவனை செய்து, “அடியேய்… கட்டின புருஷனைக் கொல்ல பார்க்கிறதெல்லாம் பெரிய பாவம்டி” என்று அவள் கரத்தைப் பிடித்துத் தடுத்தான். “உன்னைய எல்லாம் கட்டினதே பெரிய பாவம் டா” என்றவள் அவன் மண்டையை உடைத்தே விடுவது என்ற முடிவில் அந்தக் கல்லை அவள் தலைக்கு மேலாக உயர்த்தவும், “அடிப்பாவி! ராட்சசி… கொலை கேஸு ஆகிப் போயிடும்டி” என்று அவளைத் தடுத்துப் பிடித்து அந்தக் கல்லை அவள் கையிலிருந்து தள்ளிவிட்டான். அவளின் ஆத்திரம் இன்னும் அதிகரிக்க, “உன்னை” என்று மீண்டும் பார்வையைச் சுழற்றியவள் இம்முறை ஓரமாக குவித்து வைத்திருந்த சாணியை அள்ளி எடுத்து அவன் முகம் முழுக்கப் பூசி அபிஷேக ஆராதனையே செய்துவிட்டாள். “அடிப்பாவி” என்று அவன் அதிர்ச்சியாகி அவளைத் தள்ளிவிட, அவள் அப்போதும் அடங்கா கோபத்தோடு மூச்சிரைக்க முறைத்தபடி நின்றாள். அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்க அவள் வெறுப்போடு, “சை! உன்னைய போய் நம்பி கட்டினே பாரு… என்ற புத்தியை செருப்பால அடிக்கோணோம்” என்று பொறுமிவிட்டு, “போ… நீ என்கிட்ட பேசாதே” என்று அழுது கொண்டே திரும்பி நடக்கவும் அவளை வழிமறித்து நின்றவன், “சும்மா விளையாடுனடி… இதுக்கு போய் கண்ணுல தண்ணியை வுட்டு போட்ட” என்று சமாதானமாகப் பேசினான். “புளுகாதே… போயிரு” என்று அவள் அவனை விலக்கி விட்டு நடக்க, “சத்தியமா விளையாடுனே” என்றவன் அவள் கரத்தைப் பற்றி சத்தியம் செய்தான். “போடா நீயும் உன் சத்தியமும்” என்றவள் அப்போதும் அவனை நம்பாமல், “உன்னைய நான் ஸ்கூல படிக்குற காலத்தில இருந்து பார்க்குறேன்… நீ எம்புட்டு பெரிய களவாணி பயன்னு மத்த எவனையும் விட எனக்கு நல்லா தெரியுமாக்கும்” என்றவள் முகம் இன்னும் கோபத்தில் தகிக்க, “அதெல்லாம் உண்மைதான்… நான் இல்லன்னு சொல்லவே இல்லையே… அந்தப் பொண்ணுங்கள கூட நான் பார்த்தேன்தான்… அழகா லட்சணமா இருந்தா கண்ணு பார்க்கத்தானே செய்யும்” என்றவன் ஒப்புதல் வாக்குமூலம் வேற தர, அவள் மேலும் உக்கிரமானாள். “பார்க்கும்டா… பார்க்கும்… பார்க்கிற அந்தக் கண்ணு இரண்டையும் புடுங்கிப் போட்டுடுவேன்” “அடியேய்… சொல்றதை முழுசா கேளுடி” என்றவன் நிதானமாக அவள் கரத்தை வருடிக் கொடுத்தபடி, “ஆயிரம் பொண்ணுகள பார்த்தாலும் உன்கிட்ட கிறங்குன மாதிரி எல்லாம் வேற எவ கிட்டயும் கிறங்குனது இல்லடி உன்னைய பார்க்குற மாதிரி வேற எவளையும் பார்த்ததும் இல்ல… ஏன்? ஸ்கூல் படிக்குற காலத்திலயே நீதான் வேணும்னு ஒன்ற பின்னாடி கிறுக்குப் பிடிச்ச மாதிரி சுத்திக்கிட்டுக் கிடந்தவன்னு உனக்கு தெரியாதாக்கும்” என்றவன் சொல்ல சொல்ல அவள் மனம் மெழுகு போல உருகத் தொடங்கியது. “உன்னைய எனக்கு பிடிச்ச மாதிரி வேற எவளையும் எனக்கு பிடிச்சதில்லடி” என்றவன் சொல்லிக் கொண்டே அவளை அணைத்துப் பிடிக்க, அவள் தன்னை மறுந்து அவன் பார்வையில் கிறங்கியிருந்தாள். அவன் மேலும் தன் விரல்களால் அவள் முகத்தை அளந்தபடி, “அதுவும் இந்த கண்ணு இந்த மூக்கு இந்த வாயி” என்று அவன் கரம் மெல்ல அவள் கழுத்தில் இறங்கவும், “டேய்” என்று அவன் கரத்தை அவசரமாகத் தட்டிவிட்டவள், “போதும் போதும் போய் குளி… நாறுது” என்று அவனை விட்டு விலக, “நாறும்டி நாறும்? செய்றதெல்லாம் செஞ்சு போட்டு” என்று அவன் அடுத்த நொடி அவளை இறுக்கமாக அணைத்து தன் முகத்தில் ஒட்டியிருந்தவற்றை அவள் முகத்திலும் பூசிவிட்டான். “சீ பிசாசு” என்று அவனை அவள் தள்ளிவிட, “என்ற மொவரையல பூசின இல்ல… செத்த நேரத்துக்கு இப்படியே நாறிக்கிட்டு கிட” என்றவன் முந்திக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். “டேய் டேய்” என்றவள் கத்திக் கூப்பாடு போட்டும் ஒன்றும் பயனில்லை. “ஐயே! சீ” என்று அவள் அசூயை உணர்வோடு முகம் சுணங்கி. “உங்க நொண்ணன் பண்ண வேலையே பாருடா” என்று யாரிடம் சொல்வதென்று தெரியாமல் காளையனிடம் புகார் தெரிவித்தாள். இத்தனை நேரம் அவர்கள் சேட்டையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காளையனுக்கு நன்றாக பொழுது போனது. அவள் அங்கிருந்து தண்ணீர் குழாயைத் திறந்து முகத்தை அலம்ப எத்தனிக்க, “தமிழு” என்று அழைத்தபடி சகுந்தலா குரல் கேட்டது. அம்மாவின் குரல் கேட்ட ஆர்வத்தில் அவள் தன்னிலைமை மறந்து, “ஐ! அம்மா” என்று வாசல் புறம் சென்று எட்டிப் பார்த்தாள். மதுசூதனனும் அவருடன் வந்திருக்க, “வாங்க ஐயா! வாங்க ம்மா” என்று அவர்களைப் பார்த்ததும் பொங்கிய சந்தோஷத்தில் அவள் புன்னகையோடு அழைக்க, அவர்களோ மகள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து விக்கித்து போயினர்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா