மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 27Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 27

Quote from monisha on May 13, 2022, 1:15 PM

27
பொழுது சாய்ந்திருந்தது. “என்னடி திடுதிப்புன்னு கிளம்பி வந்துட்டவ… நாளைக்குதானே என்னைய வந்து கூட்டிட்டுப் போக சொன்ன” என்று மனைவியின் வருகையைப் பார்த்து சந்திரன் வியப்பில் கேட்க, “வரணும்னு தோனுச்சு… வந்துட்டேன்” என்று விட்டேற்றியாகப் பதிலளித்துவிட்டு அவள் திண்ணையில் அமர்ந்து கொண்டாள். “ரொம்ப களைப்பா இருக்கியாட்டுமா இருக்கு… இரு போய் குடிக்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவன் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வர செல்ல, அவளோ தான் பெற்றோரிடம் பேசிய வார்த்தைகளை அசைப்போட்டபடி அமர்ந்திருந்தாள். அக்கறையோடும் அன்போடும் வளர்த்தப் பெற்றோரை எடுத்தெறிந்து பேசிவிட்டு வந்தது சரிதானா என்று ஒரு மனம் அவளை உலுக்கி எடுக்க, இன்னொரு மனம் அவள் பேசியது சரிதான் என்று அவளுக்கு சாதகமாக குரல் கொடுத்தது. இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவித்தவளுக்கு மாலை வேளையை முன்னிட்டு தன் கூட்டை நோக்கி பறந்து செல்லும் பறவை கூட்டங்கள் கண்ணில் பட்டன. வானத்தில் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் பறவை கூட்டங்களைப் பார்க்கையில் மனதில் உற்சாகம் ஒருபுறம் பொங்கியது என்றால் அடி ஆழத்தில் ஓர் இனம் புரியாத சோகமும் ஊற்றெடுத்தது. ஏன் போயும் போயும் மனித பிறவி எடுத்தோம் என்று?! பறவைகள் எத்தனை அழகாய் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன. பகல் நேரங்களில் தனக்கான தேவைகளுக்கு அலைந்து திரியும் அந்தப் புல்லினங்கள் அன்றைய தேவைகளைத் தீர்த்துக் கொண்ட மனநிறைவோடு சந்தோஷமாக மாலையானதும் தம் கூட்டைச் சென்றடைந்துவிடுகின்றன. எதிர்காலதத்திற்கான சேமிப்பு பற்றிய யோசனையும் இல்லை. சுற்றத்தாரும் உறவினர்களும் என்ன சொல்ல போகிறார்கள் என்ற கவலையும் இல்லை. இதுவல்லவா வாழ்க்கை? இனி என்ன செய்ய போகிறோம் என்று மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைப்புகள் எல்லாம் அப்போதைக்கு மறைந்து மனம் ஒருவித பரவச நிலையை எட்டிப் பிடித்திருந்தது. அந்த உணர்வில் திளைத்து அவள் தனக்கு தானே புன்னகைத்து கொண்டிருந்தாள். “அடியேய்… கருவாச்சி… என்னடி மேலே பார்த்து தனியா சிரிச்சிட்டு இருக்கவ?” என்று கேட்கவும் அவளுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “அப்படி கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன் இல்ல எருமை” என்று முறைக்க, “ஆமா இவ மட்டும் என்னைய எருமை பன்னின்னு எல்லாம் கூப்பிடலாமாம்… நாங்க மட்டும் கருவாச்சின்னு கூப்பிட கூடாதாம்ல” என்று அவனும் பதிலுக்குக் கேட்டுவிட்டு, “சரி சரி… வந்ததும் சண்டையை ஆர்மபிச்சு போடாதே தாயி! தண்ணியைக் குடிச்சுட்டு உள்ளர வா” என்று தண்ணீர் சொம்பை நீட்டினான். “ஒழுங்கா இப்படி உட்காரு… இப்ப உள்ளர போய் அப்படி என்ன கிழிக்க போற” என்று உரைக்க அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, “சரி உட்காரேன்… நீ தண்ணியைக் குடி” என்றபடி அவள் அருகில் வந்து அமரவும் அவள் தண்ணீர் சொம்பை வாங்கி மடக்கு மடக்கு என்று ஒரே மூச்சாக குடித்தாள். சந்திரனுக்கு ஏனோ அவள் செய்கை பேச்சு எல்லாம் சந்தேகத்தைக் கிளப்பியது. “எனக்கு ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நான் கூட்டிட்டு வந்திருப்பேன் இல்ல… ஏன் தனியா வந்த? அத்தை மாமா எப்படி உன்னை தனியா அனுப்பி வுட்டாங்க… இம்புட்டு அவசரமா நீ வந்திருக்கிறதைப் பார்த்தா என்னமோ சரியில்லையாட்டமா இருக்கு… உங்க வூட்டுல ஏதாச்சும் வம்பு வளர்த்து போட்டு வந்துட்டியா என்ன?” என்றவனின் கடைசி வார்த்தையில் அவளுக்கு பொறையேற குடித்த தண்ணீர் எல்லாம் மூக்கின் வழியாக வெளியேற திக்கித் திணறிப் போனாள். “ஏ பார்த்து பார்த்து மெதுவா” என்று அவள் தலையைத் தட்டினான். “போடா” என்று அவன் கரத்தைத் தட்டிவிட்டவள். “என்ன சொன்னே? வம்பு வளர்த்தேனா? என்னைப் பார்த்தா சண்டைக்காரி மாதிரி தெரியுதா உனக்கு” என்று கொந்தளித்தவள் மேலும், “ஆமா நான் வந்ததுக்கு சந்தோஷப்படாம அதென்ன ஏன் வந்து எப்படி வந்த… தனியா வந்தியா… தனியா எப்படி அனுப்பினாங்கன்னு நீ பாட்டுக்குக் கேள்வி மேல கேள்விக் கேட்டுட்டு இருக்க” என்று அவள் சீற, “நான் எது பேசுனாலும் சண்டையில போய் முடியுது… என் வாயில சனிதான் உட்காருந்திருக்கு” என்று அவன் சலித்துக் கொள்ள, “நீதானே முத என்னைய வம்பு வளர்த்துட்டு வந்தியான்னு கேட்டவன்” என்றாள். “புறவு கேட்காம… நீதான் ஒவ்வொரு தடவையும் உங்க அம்மா வூட்டுக்குப் போயிட்டு வரும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனையும் சேர்த்துல மடில கட்டிக்கிட்டு வந்துடுற” என்றவன் அவளிடம் கையெடுத்து கும்பிட்டு, “சத்தியமா முடியலடி… வலிக்குது… விட்டா அழுதிடுவேனாக்கும்” என்று வடிவேல் பாணியில் சொன்னதைக் கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அந்தச் சிரிப்பின் பிரதிபலிப்பாக விழிகளில் நிரம்பிய கண்ணீர் சட்டென்று வேதனையில் பிரதிபலிப்பாக வழிய தொடங்க, “தமிழு என்னாச்சு?” என்றவன் புரியாமல் அவன் கன்னம் தாங்கிக் கேட்க, “நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் இல்ல சந்திரா” என்று கண்ணீர் மல்க வினவினாள். “சேச்ச்சே… அப்படியெல்லாம் இல்ல… சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன் புள்ள” என்றவனை ஆழமாகப் பார்த்தவள், “அன்னைக்கு ஏன் நீ குடிச்ச?” என்ற கேட்க, அவன் பார்வைகள் தாழ்ந்து கொண்டன. “தப்புதான்… நான் இனிமே அப்படி செய்ய மாட்டேன்… அதை பத்தி திரும்பியும் பேசி நமக்குள்ள சண்டை வர வேண்டாமே” என்றவன் சொன்ன நொடி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டவள், “எனக்கு தெரியும் நீ ஏன் குடிச்ச… செல்வி எல்லாத்தையும் சொல்லி போட்டா” என்றாள். அவன் அதிர்ச்சியாக அவள் தொடர்ந்தாள். “ஆனா ஏன் என்கிட்ட இந்த விசயத்தை நீ சொல்லாம மறைக்கோணும்” “நான் மறைக்கணும்னு நினைக்கல… செல்வி புள்ளதான் கொஞ்சம் சங்கடப்பட்டுது… ஆனா சத்தியமா செல்வி மேல எந்தத் தப்பும் இல்ல… அந்தப் பொறுக்கி பையன்தான்” என்று தன் தங்கைக்காக வக்காலத்து வாங்கும் கணவனை அடங்கா வியப்போடு பார்த்தவள், “எப்படிறா? அவ உன்னைய அந்தளவுக்கு எடுத்தறிஞ்சு பேசியும் நீ அவளை வுட்டு கொடுக்காம பேசற… நீ ரொம்ப பெரிய மனுஷன்டா… நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ… நீ எனக்கு புருஷனா கிடைச்சு இருக்க” என்று சொல்லி அவன் மார்பில் தன் முகம் புதைத்து அழத் தொடங்க, “நான் என்ற மச்சினிச்சிக்காகதானே டி செஞ்சேன்… அதை போய் என்னவோ பெரிய விசயமாட்டமா பேசிட்டு இருக்க… ஏய்… என்ன அழுறியா?” என்றவன் மார்பில் அவள் கண்ணீர் துளிகள் நனைக்கவும் பதறி அவள் கன்னங்களைத் தாங்கிப் பிடித்தவனிடம், “கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் உன் குணத்துக்கு ஈடாகாது மாமா… ஆயுசு முழுக்கவும் உன் கூட இப்படியே கிடந்தடணும்” என்று உணர்ச்சிப் பொங்கப் பேசிய தன் மனைவியின் வார்த்தையிலும் கரைந்து போனவன் சட்டென்று, “இப்ப என்னன்னு கூப்பிட்டவ?” என்று ஆச்சரிய பார்வையோடு கேட்டான். “அப்படி கூப்பிடணும் போல ஆசையா இருந்துச்சு” என்று சொன்னவளைப் பூரிப்போடும் மகிழ்வோடும் பார்த்தவனின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். அவனிடம் மொத்தமாக அவள் மனமும் உடலும் சரணடைய துடிக்க, அவள் தம் உதடுகளால் அவன் இதழ்களை நெருங்கிய நொடியே அவன் விலகி வந்தான். ஏமாற்றமாக அவனை அவள் நோக்க, “உள்ள வா தமிழு” என்றவன் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிட்டான். ‘என்னத்துக்கு இவன் இப்படி பண்றான்’ அவள் கோபம் பொங்க அவன் பின்னே வந்து, “மவனே… என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல… ரொம்பத்தான் ஓவரா பண்ற” என்று உக்கிரமாகக் கத்த, “நான் ஒன்னும் ஓவரா பண்ணல? நீதான் புறவு ஏதாச்சும் எடா கூடமா நடந்துட்டா ஓவரா பண்ணுவ” என்றவன் நிதானமாகவே பேசினான். “எது? நான் ஓவரா பண்ணுவேன்னா?” என்றவள் புரியாமல் விழிக்க, “புள்ள உண்டாயிடுச்சுன்னு புறவு என்கிட்ட வந்து இல்ல ஏறுவடி நீ… வேண்டாம் தாயி வேண்டவே வேண்டாம்” என்றான். “முத்தம் கொடுத்தா புள்ள உண்டாகணும்னா… ஸ்கூல் புள்ளைய இழுத்துப் பிடிச்சு முத்தம் கொடுத்தியே… அப்பவே உண்டாகி இருக்கணுமாக்கும்” என்றவள் சொல்லி எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்து வைக்க அந்த வார்த்தையில் அவனுக்கு சுர்ரென்று கோபமேறியது. “என்னடி நினைச்சிட்டு இருக்க? நீ… ஒன்ற தம்பி தங்கச்சி எல்லாம் சும்மா சும்மா இந்த விசயத்தையே பேசி என்னைய கடுப்பேத்திட்டே இருக்கீங்க… இனிமே இந்த விசயத்தைப் பத்தி பேசுனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றவன் எச்சரிக்க, அவளோ கொஞ்சமும் அசரவில்லை. “அப்படித்தான் பேசுவேன்… திரும்ப திரும்ப பேசுவேன்… என்னடா பண்ணுவ… என்ன டாஆஆ… பண்ணுவ?” என்று அவனை நெருங்கி சட்டையைப் பிடித்து அவனை அணைத்து தன் உதட்டருகே இழுத்தவளிடம், “அடியேய்… என்னடி பண்ற?” என்றவன் பரிதவிப்பாக அவளை விலக்க முற்பட்டான். அவள் அவனை இன்னும் இன்னும் நெருங்கி, “ம்க்கும்… என்ன பண்றேன்னு உனக்கு தெரியவே தெரியாது இல்ல” என்றவள் அவன் கண்களைக் கிறக்கமாகப் பார்த்து, “புள்ள பிறக்காம இருக்கு ஏகப்பட்ட வழி இருக்கு… சும்மா ஓவரா பண்ணாதே மாமா” அவள் குழைய அவளின் மாமா என்ற அழைப்பில் தலை கால் புரியாமல் போதையேற மயக்கமாக அவள் இதழ்களோடுப் பொருந்திப் போக இருந்தவன் சட்டென்று அவன் மூளை செய்த எச்சரிக்கையில், “விடுடி… நாளைக்கே என்னை தனியா தவிக்க வுட்டு நீ பாட்டுக்கு ஒன்ற வேலையைப் பார்க்க போயிடுவ… புறவு நான்தான் இந்த நாலு சுவத்துக்குள்ள இருந்துக்கிட்டு உன்னைய நினைச்சு நினைச்சு… ஏங்கி ஏங்கி சாவோணோம்… அங்கன உனக்கு என்னைய பத்தின யோசனை கூட இருக்காது” என்று சொல்லியபடி அவன் லாவகமாக அவள் பிடியிலிருந்து விலகி வந்து, “என்னைய கொஞ்சம் புரிஞ்சிக்கோ தமிழு… உன்னைய கஷ்டப்படுத்தணும்னோ இல்ல தவிர்க்கணும்னோ நான் நினைக்கல… ஊருக்குள்ள பேசறவன் வார்த்தையெல்லாம் என்னால தாங்க முடியல… அதுக்கெல்லாம் மேல பச்சயா சொல்லணும்னா… நானும் எல்லா உணர்ச்சியும் ஆசையும் இருக்க சாதாரண மனுஷன்… நீ சுகத்தைக் காண்பிச்சிட்டுப் போயிடுவ… புறவு மனசும் உடம்பும் அதுக்காக கிடந்து ஏங்கும்… அதெல்லாம் சரிப்பட்டு வராது… இரண்டு வருஷமோ மூணு வருஷமோ நான் இப்படியே இருந்து பழகிக்கிறேனே” என்றவன் சொன்ன நொடி இருவருக்கு இடையிலும் ஒரு ஆழமான மௌனம் ஆட்சி செய்ய தொடங்கியது. வெகுநேரம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அவன் மெதுவாக அவள் அருகில் வந்து, “என் மேல கோபமா தமிழு?” என்று கேட்கவும், “உஹும் இல்ல” என்று அவள் புரிதலாகத் தலையசைத்த அதேநேரம், “ஆனா ஒன்னு… நீயா என்ற கிட்ட நெருங்காம… நானா உன்னைய நெருங்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்று அவள் சொல்ல, அப்போது அவள் முகத்தில் தெரிந்தது கோபமா வருத்தமா என்று அவனுக்குப் பிடிபடவில்லை. ஆனால் அதற்காக அவனும் தன் நிலையிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வர விரும்பவில்லை. சந்திரனுக்காக அன்று பேசிய வாரத்தைகள் அவள் வாழ்க்கையையே திசை மாற்றியது என்றால் தற்போது அவள் பேசிய வார்த்தைகள் அவளின் இலட்சியத்தையும் கனவையுமே திசை மாற்றிவிட்டது. நம்முடைய திட்டமிடலின்படி இங்கே எதுவும் நடப்பதில்லை. வாழ்க்கை மிகவும் விசித்திரமானது மற்றும் ஆச்சரியமானது. நதிகள் பாதைகளை வகுத்துக் கொண்டு பாய்வதில்லை. பாயும் திசைகளையே தம் பாதைகளாக வகுத்து கொள்கின்றன. அதேபோல்தான் நம் எல்லோருடைய வாழ்க்கை ஓட்டமும் என்ற நிதர்சனத்தை அவள் புரிந்து கொண்டாள். ஆனால் நாம் செல்வது எந்தப் பாதையாக இருந்தாலும் சரி, அதை உள்ளார்ந்து நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விதி வகுத்த பாதையில் அவள் தன் பயணத்தைத் தொடங்க தயாரானாள். அவள் மனதில் நிறைய குழப்பங்களும் தவிப்புகளும் ஆக்கிரமித்து கொண்டதில் அன்றைய இரவு அவளுக்கு தூங்கா இரவாக கழிந்தது. ஆனால் அவள் விடிந்தது முடிவாகத் தீர்மானித்துவிட்டு தன் வேலையைத் துறக்க அடுத்த நாளே சென்னை பயணித்தாள். ஆனால் சந்திரனிடம் தன் முடிவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாட்கள் அலைகழிக்கப்பட்ட பின் சென்னை அலுவலகத்தில் சில சுமுகமான பேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டு ஒரு வருட ஒப்பந்தத்தில் அவள் வேலையில் சேர்ந்த போது கையெழுத்திட்ட பத்திரம் அவளிடம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்டது, அப்போதே அவளுக்கு நிம்மதியானது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா