மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 11Post ReplyPost Reply: Paruvameithi - 11

Quote from monisha on June 17, 2022, 10:05 PM
ஈஸ்டிரோஜனால் உண்டான பஞ்ச நிவாரண உடலமைப்பெல்லாம் அவளை அசௌகரியப்படுத்தாமல் இல்லை. ஏற்கனவே குழந்தையின் பெரிய தலைக்கு இடம் கொடுக்க, அவள் இடை எலும்புகள் அகன்று தொடை எலும்புகள் திரும்பியிருந்தன. இந்த கோணல் இடுப்புக்கு மேல் இத்தனை கொழுப்பு சுமை என்றால் அவள் நடமாட்டம் சிரமமாகிவிட, ஆணைவிட மிக மெதுவான நடை வேகம் மட்டுமே அவளுக்கு மிஞ்சியது. இதனால் வேட்டையில் கலந்து கொள்ள அவளுக்கு சிரமமாகிப்போனது.  இதனால் ஆண்கள் அனைவரும் வேட்டையே வேலை என்று அதில் மும்முரமாகிவிட, பெண்கள் பிள்ளை பரமாரிப்பு, குகை நிர்வாகம், உணவு சேகரிப்பு, தண்ணீர் கொண்டு வருதல் மாதிரியான உள்துறை விஷயங்களில் மூழ்கினார்கள். அதுவும் ஒரு நாள் இரண்டு நாளைக்கு அல்ல, முழுதாக இருபது லட்சம் ஆண்டுகளுக்கு! காலப்போக்கில் பாரம்பரிய பணிகளை சுலபமாக செய்ய, மனிதர்களின் மூளையும் தன்னைத்தானே மாற்றி கொள்ள ஆரம்பித்தது. வேட்டைக்கு உகந்ததாக ஆணின் மூளையையும், பிள்ளை பரமாரிப்புக்கு உகந்ததாக பெண்ணின் மூளையும் உருமாறின.
11
ஆறு மாதமாக ஊருக்குள் ஒரே ஒரு இழவு கூட விழவில்லை. ஊர் மக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள் என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் கன்னியப்பன் குடும்பத்தினருக்கு அது போராட்ட காலமாகி போனது. ஏற்கனவே வளமும் நலமுமற்ற அவர்கள் வாழ்க்கை இன்னும் நலிந்துபோனது. கிராமத்தினர் பரிதாபப்பட்டு ஏதோ அஞ்சோ பத்தோ கொடுப்பதில்தான் அவர்களின் குடும்பமே ஓடியது. பசியுடன் தினம் தினம் போராடுகிற வலியை விடவும் இப்படி இரைந்து உண்ணுகிற நிலைமை கனியின் மனதை குத்தி கிழிக்க, தான் எதிர்காலத்தில் ஒரு மதிப்புமிக்க வாழ்க்கையை வாழவேண்டுமென்று என்று தீர்க்கமாக எண்ணி கொண்டாள். இதனால் அவள் மட்டும் அவர்கள் கூட்டத்தில் சற்றே விசித்திரமானவளாக வளர்ந்தாள். அவள் அணிவது பெரும்பாலும் ஊர்காரர்கள் கொடுக்கும் பழைய துணியாக இருந்தாலும் அதனை சுத்தமாக துவைத்து போடுவதில் தொடங்கி அதில் எந்தளவு கிழிசல் இருந்தாலும் எதுவும் தெரியாத மாதிரி லாவகமாக அதனை தைத்து போட்டுகொள்வாள். அதுமட்டுமின்றி கனிக்கு பள்ளிக்கூடம் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம். படிப்பின் மீதெல்லாம் பெரிய ஆர்வமில்லை. தினம் தினம் அம்மா காய்ச்சி தரும் உப்பு சப்பில்லாத கஞ்சிக்கு பதிலாக பள்ளியில் போடும் மதிய உணவு எவ்வளவோ மேல்.   அப்போதைய சூழலுக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே ஆச்சரியம் என்றால் ருசியான உணவை சாப்பிடுவது என்பது அவர்களை பொறுத்துவரை மிக பெரிய ஆடம்பரம். பெரும்பாலும் மதிய உணவிற்காகதான் அவள் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டாள்.  ஆனால் அவள் தமையன் காசி அதற்காக கூட பள்ளி பக்கம் ஒதுங்க மாட்டான். எங்கேயாவது காடு மேடுகளில் சுற்றி கொண்டிருப்பான். அவன் என்ன செய்வான் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. பின்னாளில் அவன் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலிலிருந்ததாக தெரிய வந்தது. ‘சாதி புத்தி… வேறெப்படி போவான்… அப்படிதான் ஆவான்’ என்று தாழ்த்தப்பட்ட சாதியில் இருப்பவன் சீரழிந்து போவதற்கு அவன் ‘சாதி புத்திதான் காரணம்’ என்று சுலபமாக பழி போடுபவர்களுக்கு புரியாது. ஒடுக்கப்பட்டு வாழ்வாதாரம் குலைந்து போன அவர்களை நம்முடைய சாதிய வெறி பிடித்த சமூகம்தான் குற்றவாளிகளாக உருமாற மூல காரணங்கள் என்று.  தமையனின் நிலையை பார்த்த கனியின் மனம் இன்னும் ஆணித்தரமாக முடிவு செய்தது. இந்த சுடுகாட்டிற்குள் தன் எதிர்காலம் சுழல கூடாது. அதற்காகவாவது ஏனோ தானோவென்று தனக்கு வந்தததை படித்தாள். அதிலும் ஒரு பிரச்சனை அவர்கள் கிராமத்து பள்ளிகூடத்தில் ஐந்தாவது வரைதான். அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் டவுனுக்கு பஸ் பிடித்து போக வேண்டும். ஆனால் சாந்திக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. “ஒன்னும் பஸ் பிடிச்சு எல்லாம் போய் படிக்க வேண்டாம்… கம்னு வீட்டுல கிட” என்று சாந்தி திட்டவட்டமாக சொல்லிய போதும் கனி கேட்கவில்லை. அழுது அடம்பிடித்தாள். கன்னியப்பனுக்கு மகள் கண்ணீர் வடிப்பது தாங்கவில்லை. “படிக்கத்தானே போறேங்குறா… போகட்டும் விடேன்” “புத்தியோடதான் பேசுறியா யா…” “எல்லாம் புத்தியோடதான் பேசுறேன்” என்றவர் மகளை அழைத்து கொண்டு அவர்கள் கிராமத்தின் பண்ணை வீட்டிற்கு சென்றான்.  சேதுராமன். ஊரின் பெரிய தலைகளில் அவரும் ஒருவர். அரசியல் பலம் உடைய மனிதர். இரண்டு வருடம் முன்பு அடித்த புயலில் கன்னியப்பன் குடும்பத்தினர்களின் கூரைவீடுகள் எல்லாம் இருந்த தடம் தெரியாமல் போனது. அப்போது சேதுராமன்தான் ஊர் மக்களிடம் பேசி அவர்கள் கல்லு வீடு கட்டி கொள்ள உதவி செய்தார். ஊர் பஞ்சாயத்தில் பெரும்பாலும் அவர் பேச்சுக்கு எதிர் பேச்சுக்களே கிடையாது என்பதால் எந்த மறுப்பும் எழவில்லை. கனவில் கூட நடக்காத விஷயத்தை நடத்தி கொடுத்ததில் கன்னியப்பனுக்கு அப்படியொரு மரியாதை அவர் மீது. அவர் வீட்டின் வாயிலுக்கு வெளியே ஒதுங்கி நின்று கொண்டு, “ஐயா” என்று அழைப்பு விடுத்தான் கன்னியப்பன். வாசலில் அமர்ந்து செய்திதாளை புரட்டி கொண்டிருந்த சேதுராமன், “வா கன்னியப்பா… உள்ளே வா” என்று அழைத்தார். மகளை அழைத்து கொண்டு வந்தவன் கேட்டை தாண்டி உள்ளே வந்து வீட்டின் உள் வாசலிலிருந்து பத்தடி தள்ளியே நின்று கக்கத்தில் துண்டை அடக்கி கொண்டு, “ஐயா வணக்கங்க யா” என்று கும்பிடு போடும் போது அவன் உடம்பு பாதியானது. முதுகுதண்டு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் தோன்றியது. உள்ளே வந்த கனி அண்ணாந்து அந்த வீட்டை பார்த்தாள். ஒற்றை மாடி வீடுதான் என்றாலும் அதுவே அவளுக்கு பிரமாண்டமாக தெரிந்தது. வீட்டை சுற்றிலும் பல வகையான செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்திருந்தன. பரந்த அந்த வாசலில் அனாயசமாக இரைந்து கிடந்த அரிசியை எனக்கு உனக்கு என்று கோழிகளும் அதன் குஞ்சிகளும் போட்டி போட்டு கொத்தி கொண்டிக்க, ஒரு வேளை உணவிற்காக நாயாய் பேயாய் அவர்கள் அலைவது அவள் நினைவிற்கு வந்தது. “என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கவ… கும்பிட்டுக்கோ” என்று கனியை கன்னியப்பன் உசுப்பும் போதுதான் அவள் நிமர்ந்து சேதுராமனை பார்த்தாள். முடியெல்லாம் வெளேரென்று நரைத்திருந்த போதும் ஆள் கிண்ணென்று கம்பீரமான உடல் வாகுடன் இருந்தார்.  “என்ன பார்த்துட்டே இருக்க… கும்பிட்டுக்கோ” என்று மீண்டும் தந்தை மெலிதாக சொல்லவும் கனி ஏனோ தானோ என்று ஒரு கும்பிடை போட்டு வைத்தாள். “ஆஅ… இருக்கட்டும் இருக்கட்டும்… என்ன புள்ளய கூட்டிட்டு வந்திருக்க… என்ன விஷயம்”  “இல்லங்கயா… அது” என்று தலையை சொரிந்தவன், “நம்மூர் பள்ளி கூடத்துல அஞ்சாப்பு வரிக்கும்தான் இருக்கு… மேலே படிக்கணும்னு டவுன்ல இருக்க இஸ்கூலுக்கு போனோமா?” என்று இழுக்க, “என்ன… உன் பொண்ணு… மேலே படிக்கணும்கிறாளா?” என்றாள். “அதுவந்து ஆமாங்கயா” “நல்லா படிக்கட்டும்… நல்ல விஷயம்தானே… அனுப்பிவிடு” “ஊர் பெரியவங்க… உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்கிடலாம்னு” பேசும் போது பாதியாக வளைந்து போன தந்தையையும் சேதுராமனின் நிமிர்வையும் உற்று கவனித்தாள் கனி. எது மனிதர்களுக்கு இடையில் இப்படியொரு வித்தியாசத்தை உண்டாக்குகிறது என்ற கேள்வி எழ, அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. அது அப்போதைய அவள் அறிவுக்கு எட்டாத மிக பெரிய கேள்வி.  சேதுராமன், “பங்கஜம்” என்று சத்தமாக அழைத்த மாத்திரத்தில் மங்களகரமாய் ஒரு பெண்மணி வெளியே வந்து, “என்னங்க?” என்றபடி ஓரக்கண்ணால் இவர்களை பார்த்தார். அது ஒன்றும் மதிப்புக்குரிய பார்வை இல்லை.  சேதுராமன் தன் மனைவியிடம் ஏதோ சொல்ல, “சரிங்க” என்றபடி அவர் வீட்டிற்குள் செல்ல, கனியின் பார்வை அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றது.  அவள் பார்வைக்கு எட்டிய தூரத்தில் ஒரு சிறுமியும் சிறுவனும் விளையாடி கொண்டிருந்தனர். “அண்ணா அண்ணா எனக்கு ண்ணா” “இரு இரு தரேன்” “எனக்கு கொடுக்கவே மாட்டியா” “இருடி தரேன்” இருவரும் முட்டி கொண்டது விர்ரென தரையில் ஓடி கொண்டிருந்த அந்த கார் பொம்மைக்காக. அதனை பார்க்க அழகாகவும் ஆசையாகவும் இருந்தது கனிக்கு. “இப்போ எனக்கு தர்ற போறியா இல்லையா?” என்று அந்த சிறுமி பொம்மையை கையிலெடுக்க போவதற்குள், “அது என்னோடது” என்று அந்த சிறுவன் பட்டென்று எடுத்து கையில் வைத்து கொண்டான். அந்த சிறுமி பிடுங்க எத்தனித்தாள். “பிள்ளைங்களா ஓரமா விளையாடுங்க” என்றபடி அந்த பெண்மணி கையில் மொரத்துடன் வெளியே வந்தார். அதில் அரிசி இருந்தது.  “கனி போ வாங்கிக்கோ” என்று கன்னியப்பன் மகளிடம் சொல்ல, அவள் சென்று தன் கையை நீட்ட, “அட கிறுக்கு பயபுள்ள… மடியை விரி” என்று கன்னியப்பன் அதட்ட, அவள் தான் அணிந்திருந்த பாவாடையின் மேல் சட்டையை சிரமப்பட்டு இழுத்து பிடித்தாள். அதில் அரிசியும் பத்து ரூபாய் தாளும் விழுந்தது. அதேநேரம் உள்ளே அண்ணன் தங்கைகள் இருவருக்கும் சண்டை தீவிரமாகி அந்த கார் பொம்மை உருண்டு கொண்டு வந்து அங்கிருந்த வாசப்படியின் படிக்கட்டுக்களில் சரிந்து விழுந்து நொறுங்கியது. “அட பசங்களா? இன்னைக்குதான் வாங்குனீங்க அதுக்குள்ள போட்டு உடைச்சிட்டீங்களா” “நான் இல்ல அப்பத்தா… அண்ணாதான்” என்று அந்த சிறுமி முந்தி கொண்டு வந்து சொல்ல, “இரண்டு பேருக்கும் இப்போ அடி விழ போகுது” என்று அந்த பெண்மணி கோபமாக மிரட்டினார். ‘நான் இல்ல நீ இல்ல’ என்று அண்ணன் தங்கைகள் இருவரும் சேதுராமனை சுற்றி கொண்டனர்.  “போகட்டும் விடுங்க… வேற வாங்கிக்கலாம்” என்று மிக சாதாரணமாக சொல்லி அவர்களை சமாதானப்படுத்திஅனுப்பி வைத்துவிட்டு மீண்டும் இவர்கள் புறம் திரும்ப, “நன்றிங்க ஐயா… வரேனுங்க ஐயா” என்று கன்னியப்பன் மீண்டும் தன் முதுகுதண்டு வளைய கும்பிட்டார். “சரி சரி” என்றவர் கனியை பார்த்து, “நல்லா படிக்கணும்… புரியுதா” என, கனி மேம்போக்காக தலையை மட்டும் அசைத்தாள். ஆனால் அவள் கவனம் முழுக்க அங்கே இல்லை. அவள் அந்த உடைந்த பொம்மையை ஏக்கத்துடன் பார்கக, “கனி வா” என்று கன்னியப்பன் மகளை வெளியே அழைத்து வந்து அவள் மடியிலிருந்த காசையும் அரிசியையும் சிந்தாமல் சிதறாமல் தன்னுடைய துண்டில் கொட்டி முடிந்து கொண்டான். அந்த நாள் அப்படியே கனியின் கண்முன்னே காட்சிகளாக விரிந்தன. தந்தையை நினைத்து கண்ணீர் சொரிந்தாள். குடும்பத்துடனான மொத்த உறவும் அவளுக்கு அறுந்துவிட்ட போதும் அவ்வப்போது சென்னைக்கு வந்து போகும் பக்கத்து ஊர் உறவுக்காரர் வேலனை சந்தித்து பேசுவாள். அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று அவர் சொன்ன தகவல்களை கேட்டு பதறி போனவளிடம் அவளின் அண்ணன் புதிதாக வாங்கி வைத்திருக்கும் கைப்பேசி எண்ணை கொடுத்து பேச சொன்னார். “அண்ணா…” என்றவள் குரலை கேட்டதும் அழைப்பை துண்டித்துவிட்டான். இரண்டு மூன்று முறை அவள் முயற்சி செய்தும் அவன் பேசவில்லை. அவள் மனம் வருத்தப்பட்டதை கண்ட அம்பிகா, “நீ ஒருமுறை ஊருக்கு போயிட்டு வாயேன் கனி” என்றார். ஆனால் அவளுக்கு அதில் மட்டும் உடன்பாடே இருந்ததில்லை. அந்த ஊரின் ஒவ்வொரு துளி நினைவிலும் அவளுக்கு மீதம் இருந்த அவமானங்களும் அசிங்கங்களும் மட்டும்தான். அந்த ஊரின் அடையாளத்தையே தன் வாழ்க்கை புத்தகத்திலிருந்து அழித்துவிட முடிந்தால் அதையும் அவள் செய்திருப்பாள். ஆனாலும் கனிக்கு அம்மா அப்பாவின் மீது பாசம் இருந்தது. தனக்கு அரசாங்க வேலை கிடைத்த விஷயத்தை அம்மா அப்பாவிடம் தெரிவிக்க எண்ணியவள் அண்ணனிடம் பேசினால் அவன் பதில் பேச மாட்டான் என்பதால் வேலனுக்கு அழைத்தாள். “நான் இப்போ உங்க ஊருக்குதான் வந்திருக்கேன் கனி…” என, “அண்ணா… அம்மாக்கிட்ட பேசணும் ண்ணா… எப்படியாவது போனை அவங்ககிட்ட கொண்டு போய் கொடுங்க ண்ணா” என்று அவள் கெஞ்ச, “உங்க அண்ணனும் அண்ணியும் உன் பேரை சொன்னாளே கத்துவாங்க கனி… அன்னைக்கு உன்னை பத்தி பேச போய் என்கிட்டயோ உங்க அண்ணன் கோபமா பேசிட்டான்” என்றார். “அப்போ அம்மாகிட்ட பேச முடியாதா?” என்றவள் ஏக்கமாக கேட்க, “நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன்” என்று எப்படியோ அன்று மாலை கனியிடம் அவள் அம்மாவை பேச வைத்தார். தமையன் புரிந்து கொள்ளவிட்டாலும் தாய் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்த்தாள். “அம்மா” என்றவள் அழைத்ததும், “எவடி அம்மா உனக்கு… மொத்தமா எங்க உறவே வேண்டாம்னுட்டு கொள்ளி வைச்சு எரிச்சிட்டு போனவதானே… இப்ப என்னடி அம்மா?” என்று வார்த்தையில் நெருப்பை அள்ளி கொட்டியவரிடம் என்ன பேசுவாள். அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல கண்ணீருடன் இணைப்பை துண்டித்துவிட்டாள். அவர்களிடம் பேசும் முயற்சியை அதன் பின் அவள் செய்யவே இல்லை. அம்பிகா இறந்து போது வேலனிடம் தெரிவித்தவள் தன் வீட்டிற்கும் தெரிவித்துவிட சொன்னாள். ஆனால் ஒருவரும் எட்டிபார்க்கவில்லை. மகள் தனியாளாக சிரமப்படுவாள் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லையா அவர்களுக்கு என்றுதான் வலித்தது. அப்படி என்ன அவள் பெரிய குற்றத்தை செய்துவிட்டாள்? பேருந்து இருக்கையில் தலை சாய்த்து அவள் கண்களை இறுக மூடி கொள்ள, அவள் கண்களின் கண்ணீரும் நினைவுகளும் இமைக்குள்ளேயே சுழன்றன. ஆறாவதுக்கு மேல் டவுன் பள்ளிகூடம். எத்தனை எத்தனையோ கற்பனைகளோடு அவள் பேருந்தில் பயணித்து தன் ஊரை தாண்டி வந்திருந்தாள். பள்ளி கட்டிடம் பெரிதாக இருந்த போதும் பராமரிப்பு இல்லாத பாழடைந்த கட்டிடம் போலதான் இருந்தது. அதெல்லாம் மீறி அந்த கட்டிடத்தின் பரந்த மைதானத்தில் செழித்து சிவப்பு வண்ண பூக்களால் நிறைந்திருந்த குல்மொஹர் மரங்களை பார்க்கும் போது உள்ளுர இனம் புரியாத ஒரு புது உணர்வு பிரவாகமாக பொங்கியது.  தங்குதடையின்றி தன்னுடைய பள்ளிகால நினைவுகளுக்குள் அவள் நுழைந்து கொண்டாள். கன்னிகையின் மனவளர்ச்சி என்பது அவள் வயதுக்கு மீறியதாகவே இருந்தன. பன்னிரெண்டு வயதிலேயே அவள் தன்னை பருவ பெண் போல பாவித்து கொள்ள துவங்கினாள். அவளுக்கு அழகாக அலங்கரித்து கொள்வது பிடிக்கும். ஒருமுறை தந்தையிடம் அடம்பிடித்து சின்னதாக பவுடர் டப்பா, கண்ணாடி, மை, சாந்து வேண்டுமென்று வாங்கி கொண்டாள். “குடிக்க கூழ் கஞ்சி கூட இல்லாம கிடக்கிறோம்… இவளுக்கு சீவி சிங்காரிச்சுக்கணுமாமே… ஹ்க்கும் சீமைல இருந்து மாப்பிளை வரானாக்கும் இவளை கட்ட” என்று சாந்தி கரித்து கொட்டிய போதும் கனி அதை எல்லாம் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை.  இதெல்லாம் அவர்கள் நிலைக்கு ஆடம்பரமான ஆசைகள் என்ற போதும் கனியின் கன்னி மனதிற்கு அதெல்லாம் புரிபடவில்லை. கனி கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் அவர்கள் கூட்டத்தை விட்டு தனித்து இயங்க தொடங்கினாள். தலை நிமிர்ந்திடாத அவர்கள் சமூகத்தினரில் அவள் மட்டும் எட்டாத உயரத்திலிருக்கும் வானத்தை பார்த்து ஆகாச கோட்டை கட்டி கொண்டிருந்தாள்.  இந்த நிலையில் கனியுடன் பள்ளியில் பயின்ற மாணவிகள் எல்லாம் வயதிற்கு வந்துவிட்டனர். ஆனால் அவள் மட்டும் பூப்படையவில்லை என்பது ஒரு பெரிய கவலையாகவும் குறையாகவும் போனது. “உஹும் நான் ஸ்கூலுக்கு போ மாட்டேன்… எல்லாம் என்னைய கேலி பண்றாங்க… நான் வயசுக்கு வரலயாம்…” என்று கால்களை மடித்து கொண்டு தேம்பி தேம்பி அழுத மகளை பார்த்து சாந்திக்கு எரிச்சல் மூண்டது. “ஆமா இப்போ… அது ஒன்னுதாண்டி குறைச்ச நமக்கு…” ஆனால் கனியின் மனம் அதனை பெரிய பாதிப்பாக உணர்ந்தது. அவள் மனதிற்கு சமமான வளர்ச்சியை அவள் உடல் அடைந்திருக்கவில்லை.  இந்த நிலையில் பத்தாவது தேர்வு வந்தது. சுமாராக படித்தாலும் கனி தேர்ச்சி பெற்றுவிட்டாள். மகளை அழைத்து கொண்டு இந்த செய்தியை கன்னியப்பன் சேதுராமனுடன் சொன்ன போது அன்று போல வாழ்த்தி ஒரு ஐம்பது ரூபாய் தாளை கொடுத்தார். இம்முறை அதனை அவள் கைநீட்டி பெற, “கனி” என்று கன்னியப்பன் குரல் பதட்டத்துடன் உயர, “இருக்கட்டும் விடும் கன்னியப்பா!” என்று சேதுராமன் அதனை சகஜமாக எடுத்து கொண்டார். கனி அமைதியாக நிற்க, “போயிட்டு வரேனுங்க ஐயா” என்று கும்பிட்டுவிட்டு மகளை வெளியே இழுத்து வந்து, “அதிகபிரசங்கி” என்று அவள் முதுகில் சொட்டென்று ஒரு அடி கொடுத்தார். “ஆ… அப்பா” என்று அவள் முதுகை தேய்த்தபடி சிணுங்குகையில் வீட்டிற்குள் நுழைந்த அந்த ஆடவன் அவள் சிணுங்கலை பார்த்தபடி புன்னகையுடன் கடக்க, உயரமான அந்த ஆடவனும் அவனின் அந்த மந்தாசமான புன்னகையும் பச்சக்கென்று அவள் மனதில் ஒட்டி கொண்டது. “வணக்கங்க ஐயா” என்று உடனடியாக கன்னியப்பன் வணங்கி குனியும் போதுதான் அவன் அந்த கார் பொம்மையை அனாயசமாக தூக்கி போட்டு உடைத்த சேதுராமனின் பேரன் என்பதை அறிந்து கொண்டாள். அவன் யாராக இருந்தாள்தான் என்ன? இன்று வரையில் அவளால் அவனையும் அவனுடைய இளமை ததம்பிய புன்னகையையும் மறக்க முடியவில்லை.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா