மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 15Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 15

Quote from monisha on January 11, 2026, 9:58 PM

அத்தியாயம் – 15

சற்று முன்பு தன் செல்பேசியில் வந்த அழைப்பை எடுத்து பார்த்த ரஞ்சன், ‘அஜய் அண்ணாவா, ம்ம்ம் அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிட்டு இருக்கக் கூடாதா?’ என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டான்.

வாழ்க்கையின் முதல் முத்தத்தைத் தவற விட்ட தவிப்பு அவனுக்கு. அவன் மூச்சுக் காற்று உரசிய தூரத்தில் அவள் நின்றாள். அவள் உடலின் சூட்டை இன்னும் அவன் தேகம் உணர்ந்து கொண்டிருந்தது.

மீண்டும் மூச்சை பெரிதாக இழுத்துவிட்டான். அவன் அந்தளவு நெருங்கியும் அவள் தடுக்கவில்லையே ஏன்? அவள் மனதிலும் தான் இருக்கிறோமா? ஆனால் அந்த ஸ்ரீதர்...

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் மீண்டும் அஜய் அழைத்தான்.

“ஏன் டா போனை எடுக்கல, என்னடா பண்ணிட்டு இருந்த”

“நான் பண்ணனும்னு நினைச்சதைத்தான் போன் பண்ணி கெடுத்து வுட்டீங்கள்ளே.

“டேய் என்னடா பண்ணனும்னு நினைச்ச, எதுவும் தப்பா கிப்பா பண்ணிடாதடா”

“எதுவும் பண்ணலயே, இதுக்கு அப்புறமும் எதுவும் பண்ண முடியுமான்னு தெரியல”

“ஏன் டா இவ்வளவு விரக்தியா பேசற, அவ இல்லன்னா உன் வாழ்க்கையே முடிஞ்சிடுமா என்ன?”

“ஐயோ! உங்களுக்கு நான் சொல்றதே புரிய மாட்டேங்குது. சரி அதை விடுங்க. நீங்க போய் சேர்ந்துட்டீங்களா?”

“நான் பக்கத்துல போயிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்”

“அண்ணி எப்படி இருக்காங்க, ஹாஸ்பெட்டில இருந்து போன் வந்துச்சா?”

“அதை சொல்லத்தான் போன் பண்ணேன். பெண் குழந்தை பிறந்திருக்காம். ஆனந்தியும் நல்லா இருக்காளாம்”

“சூப்பர் அண்ணா. கங்கிராஜூலேஷன்ஸ். என்ன நீங்க? இந்த விஷயத்தை இல்ல முதல சொல்லி இருக்கணும்.”

“நீ போனை எடுக்கலன்னதும் பயமாகிடுச்சுடா. நீ இந்த காலையும் எடுக்கலனா ரிசார்ட் மேனேஜருக்கு கூப்பிட்டு இருப்பேன் தெரியுமா?”

“நீங்க என்னை பத்தி கவலைப்படாதீங்க. எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. நல்லா இருக்கேன்”

“என்னத்த நல்லா இருக்க, உங்க தாத்தாகிட்டயாச்சும் பேசலாம் இல்ல. உன் தங்கிச்சி வேற கூப்பிட்டாலாம். அவ போனையும் நீ எடுக்கலயாம்.”

“இங்க சிக்னல் சரி இல்ல அண்ணா”

“காரணம் சொல்லாதே. எல்லோரும் பயந்து போயிருக்காங்க. ஆனா நீ என்னடான்னா உன்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாத ஒருத்திய நினைச்சு உருகிட்டு இருக்க” என்று அஜய் சொன்ன நொடி அவனுக்கு கவிதாவின் கண்களிலிருந்து இறங்கிய கண்ணீர் நினைவு வந்தது.

என்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவளா தான் பேசப் பேச அப்படி உருகிப் போய் அழுதாள்.

அஜய் மீண்டும், “கவிதாவை பத்தி மட்டும் எதுவும் சொல்லிடக் கூடாது. உடனே ஆப் ஆகிடுவ. நான் சொல்றதை கேளு அங்கிருந்து ஒழுங்கா கிளம்பி வா”என்றான்.

“அண்ணா”

“சொல்றதை கேளுடா. உங்க தாத்தா உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டுட்டு இருக்காருடா. அவரே உடம்பு சரி இல்லாத மனுஷன்”

“சரி சரி. நான் தாத்தாகிட்ட பேசுறேன்”

“பேசுறது இருக்கட்டும். நீ எப்போ கிளம்பற?”

“என்னடா பேச மாட்டுற” என்று அஜய் அழுத்திக் கேட்டான்.

“வந்துடுறேன். மூணு நாள் டைம் கொடுங்க. ப்ளீஸ்”

“சரி மூணு நாளில கிளம்பி வந்து சேரு” என்று விட்டு அழைப்பைத் துண்டித்த அஜயிற்கு அப்போதுதான் கவிதா வந்தாளா அவளிடம் பேசினானா என்ற ஞாபகம் வந்தது. சரி அடுத்த முறை பேசும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

அதன் பின் ரஞ்சன் அவன் தாத்தாவிற்கு அழைத்துப் பேச, அவர் அழாத குறைதான். உடனே கிளம்பி வரச் சொல்லிக் கெஞ்சினார். அவரை பேசி சமாளிப்பதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஒரு வழியாக அவரிடம் பேசி முடித்து, தங்கையிற்கு அழைக்கக் அவள் எடுத்ததுமே கன்னாபின்னாவென்று திட்டத் தொடங்கினாள்.

“அண்ணனு கொஞ்சம் கூட இரக்கமே இல்லயாடி உனக்கு”

“இருந்துச்சு, நீ அந்த கவிதாவை பார்க்குற வரைக்கும்”

“அவங்க இல்லனா நான் இன்னைக்கு இப்படி இருந்திருக்க மாட்டேன்”

“இந்த டயலாக்கை மட்டும் மாத்தவே மாட்ட இல்ல நீ”

“அதுதானே உண்மை” என்றதும் ரத்னா மெதுவாக, “எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்” என்றாள்.

“என்ன டவுட்டு”

“கவிதா இடத்துல ஒரு ஆம்பள இருந்திருந்தா என்ன ண்ணா பண்ணி இருப்ப, இல்லனா ஒரு வயசான கெழவி இருந்திருந்தா. ஆக்சுவலி உன் கவிதாவே கூட ஒரு ஆன்டிதான்” என்றவள் எள்ளவும், அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“கவிதாவை பத்தி ஏதாவது பேசுனன்னா உன்னை கொன்னுடுவேன்”

“எனக்கு தெரியும். உனக்கு என்னை விட அவங்கதான் முக்கியம்”

“ஆமா முக்கியம்தான்” என்று அவன் அத்துடன் அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

ரத்னாவிற்கு கவிதாவை ஆரம்பத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. அன்று அவள் அண்ணா சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்றதற்கு கவிதாதான் காரணம் என்று நினைத்துக் கொண்டாள். அவனும் கிளம்பி வந்த பின் எங்கே அப்பாவிற்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

நடந்ததை எல்லாம் அவன் விளக்கிச் சொன்ன பிறகும் ரத்னாவின் மனம் ஆறவே இல்லை.

எப்போது கவிதாவை பற்றி அவள் பேசினாலும் அதில் வெறுப்பும் கோபமும்தான் இருக்கும். ஆனால் யார் என்ன பேசினாலும் ரஞ்சன் கவிதாவை மட்டும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

விடியலில் தொடங்கி இரவு உறங்கும் வரை ஏதோவொன்று அவளை அவனுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

ஏன் ஒவ்வொரு முறை கோட் சூட் அணிந்து கண்ணாடி முன்பு நிற்கும் போதும் அவளும் அவன் தோளைப் பிடித்துக் கொண்டு அருகே நிற்பது போலப் பிரமை உண்டாகும்.

இந்த உணர்வுகள் எல்லாம் வெறும் ஈர்ப்பா? தோல்கள் சுருங்கி உடல் தளர்ந்து போகும் போது கடந்து போகின்ற உணர்வா?

எல்லாம் வெறும் காமத்திற்காக என்றால் அதை வேறு பெண்ணிடம் அனுபவித்திருக்க முடியாதா? ஏன் அவள்தான் வேண்டுமென்று மூன்று வருடமாகக் காத்திருக்க வேண்டும்.

ஏன் அப்படிச் சொன்னாள்? அவளுக்குத் தன் காதல் புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறாளா? என்று யோசித்து அவன் மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்த அதேநேரம் கவிதாவும் அந்தச் சந்திப்பை எண்ணி மனம் நொந்து தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

அவன் பேசியதை எல்லாம் கேட்கக் கேட்க அவள் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிந்தது போல வலித்தது. உயிரை உருக்கிப் போடும் வலி. எல்லாவற்றையும் தொலைத்து விட்ட வலி.

எப்படி அந்த வலியை அவனுக்குப் புரிய வைப்பது?

அவனைப் பழிவாங்க வேண்டுமென்று அவனைப் பிரிந்து வந்ததற்கு, பதிலுக்குப் பதிலாக வாழ்க்கை அவளைப் பன்மடங்கு மோசமாகப் பழிவாங்கிவிட்டது என்று!

எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளாக வாங்கி குவித்த கவிதா, புத்திசாலியான மாணவி என்று கொண்டாடித் தீர்க்கப்பட்ட கவிதா, இளம் வயதில் திறமையாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்திய கவிதா என்று தொட்டதில் எல்லாம் வெற்றி கண்ட அந்த தலைக்கனம் பிடித்த கவிதா ஒரே தோல்வியில் மொத்தமாகத் தரைதட்டி வீழ்ந்தாள் என்று!

பல துண்டுகளாக நொறுக்கப்பட்டாள் என்று!

எப்படி, எப்படி, எப்படி அவனிடம் சொல்வது? உன் எதிரே நிற்பவள் அவன் பார்த்துப் பார்த்து வியந்து ரசித்த அந்த கவிதா இல்லை என்று!

அதுவும் அவன் அவள் மீது கொண்ட காதல் வெறும் ஈர்ப்பினாலோ அல்லது ஆசையினாலோ வந்ததில்லை. அவள் மீதான மரியாதையினால் வந்தது. அந்த மரியாதையை எப்படி அவளே குலைத்துக் கொள்வது.

அதனால்தான் என்னவோ அவனிடம் எதையும் சொல்லாமல் வந்துவிட்டாள். அந்த மதிப்பை அவள் இழக்க விரும்பவில்லை. இன்னும் கேட்டால் அவனுடைய காதலையும்...

ஆனால் அந்தக் காதலுக்கு அவள் தகுதியானவளா? என்று யோசித்து அழுது கரைந்து கொண்டிருந்த சமயம் அவளுடைய செல்பேசி அடித்தது. அப்போதைக்கு அதனை எடுக்கும் மனநிலையில் அவள் இல்லை.

அடிக்கட்டும் என்று விட்டுவிட்டாள். மீண்டும் அடித்தது. மீண்டும் மீண்டும் அடித்தது. அவள் கடுப்புடன் அதனைக் கையிலெடுத்து அணைக்க முற்பட்டாள்.

அதில் அமலாவின் பெயரைக் காட்டவும், எடுத்துப் பேசினாள்.

“என்ன வேணும் உங்களுக்கு?”

“நீ அவன்கிட்ட பேசிட்டேனே சொன்ன. அவன் திரும்பவும் வீட்டு வாசலில வந்து நிற்குறான்”

அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

“யாரு ரஞ்சனா?” என்றவள் ஜன்னல் திரைச்சீலையை விலக்க, கேட்டை விட்டுத் தள்ளியிருந்த மரத்தின் கீழே தன் பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது ஒய்யாரமாக அவன் சாய்ந்து நின்றிருந்தான்.

அங்கிருந்து பார்த்தால் அவள் அறை இன்னும் தெளிவாகத் தெரியும். அவன் இவளுக்கு கைகளை அசைத்து காட்ட, “இவனை” என்ற பல்லைக் கடித்தாள்.

அமலா அப்போது, “இப்படியே அவன் பண்ணிட்டு இருந்தானா செக்யூரிட்டியை விட்டு அவனை அடிச்சுதான் விரட்ட வேண்டியிருக்கும்” என்று கூற, கவிதா பதறிவிட்டாள்.

“அப்படி எதுவும் பண்ணிடாதீங்க”

“ஏன்?”

“வேண்டாம்”

“அவன் பண்ற வேலைக்கு வேற என்ன பண்ண முடியும்” என்று அமலா கடுகடுக்கவும், “அப்படி ஏதாவது பண்ணீங்கனா நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று கவிதாவின் குரலும் உயர்ந்தது.

“உனக்கு அவன் மேல இவ்வளவு சாப்ட் கார்னர் இருந்துச்சுனா எதுக்கு நீ அவனை விட்டு வந்த.”

“அது என் பெஸ்னல்”

“அது உன் பெர்சனல்தான், ஆனா என் தம்பியோட வாழ்க்கை... அவனுக்கு நீ எல்லாச் சந்தோஷத்தையும் கொடுத்துட்டு இப்போ திடீர்னு அதை எல்லாம் பறிச்சுக்க பார்க்குறது நியாயமா?” என்று பேசிக் கொண்டிருந்த அமலாவின் குரல் சட்டென்று உடைந்தது.

அவள் அழத் தொடங்கிவிட, “என்ன பேசுறீங்க நீங்க” என்றாள் கவிதா.

“எல்லாம் தெரிஞ்சும் அவனுக்கு நீ இதைப் பண்ணாத”

“நான் என்ன பண்ணேன்?”

“அதான், அந்த ரஞ்சனை நீ கட்டிபிடிச்சிட்டு இருந்தியே”

“என்ன, என்ன சொன்னீங்க?”

அமலா மௌனமாகிவிட்டாள்.

“அப்போ என்னை பாலோ பண்ணி வந்திருக்கீங்க?”

“நீ என் தம்பியை விட்டு போயிடுவியோன்னு பயமா இருந்துச்சு கவிதா”

“இனிமே உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒன்னும் இல்ல. நான் ஸ்ரீகிட்ட பேசிக்கிறேன். நீங்க போனை வையுங்க” என்று அழைப்பைத் துண்டித்த கையோடு கவிதா அறையை விட்டு வெளியே வந்தாள்.

விறுவிறுவென்று வாசலுக்கு நடந்தவள் காவலாளியிடம் கேட்டை திறக்கச் சொன்னாள்.

“நீங்க வெளியே போக வேண்டாம் மேடம்”

“நான் உங்களை கதவை திறக்க சொன்னேன்” என்றவள் கட்டளையாகச் சொல்ல, அவன் திறந்து விட்டான்.

அவள் வெளியே செல்லவும், “இருங்க மேடம் நானும் வரேன்” என்று காவலாளி சொல்ல, “தேவையில்ல நீங்க கதவை மூடிக்கோங்க” என்றாள்.

அவன் தயங்கவும், “மூடிக்கோங்க” என்று விட்டு நேராக ரஞ்சன் முன்பு வந்து நின்று, “எதுக்கு இப்போ இங்க வந்து நிற்குற, திமிரா உனக்கு” என்று சத்தமிட்டாள்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்று அதே நிலையில் சாய்ந்த நின்றபடியே பதில் சொன்னான். அவள் கோபம் இன்னும் அதிகமானது.

“என்ன பெரிய ஹீரோவா நீ. இப்படி எல்லாம் பண்ணா உன் பின்னாடியே வந்துருவேன்னு நினைக்குறியா”

“அப்படியும் நான் நினைக்கல”

“அப்புறம் என்னத்துக்கு நடுராத்திரில என் வீட்டு வாசலை வந்து நின்னுட்டு இருக்க. என்னடா வேணும் உனக்கு”

“நீங்க நல்லா இருக்கீங்களா பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”

“என்ன?”

“அங்கே ரிசார்ட்ல நான் பேச பேச நீங்க கண் கலங்கி அழுததை பார்த்ததுல இருந்து மனசு கஷ்டமாகிடுச்சு. அதான் நீங்க நல்லா இருக்கீங்களானு?”

“காலையில என்னை பார்த்ததுமே பளார்னு அறைஞ்ச, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கட்டாயப்படுத்திக் கட்டி பிடிச்ச. இப்போ கஷ்டமா இருக்குனு டிராமா பன்றியாக்கும். போடா, நான் உன் டிராமாவை எல்லாம் நம்பத் தயாரா இல்ல.”

அவன் மெல்லிய நகைப்புடன், “உங்க டிராமவையும் நான் நம்பல” என்றான்.

“நான் என்ன டிராமா பண்ணேன்”

“உங்க உதடு பொய் சொல்லுது. ஆனா உங்க முகம் அப்பாட்டமான உண்மையை காட்டுது”

அவள் தடுமாறினாள்.

“நான் எந்த பொய்யும் சொல்லல”

“அப்போ ஏன் உங்க கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கு, அழுதீங்களா?” என்று கேட்டான்.

அவள் பெருமூச்சுடன், “ஆமான்டா அழுதேன். ஆனா உன்னை நினைச்சு ஒன்னும் அழல. நான் பழசை எல்லாம் யோசிச்சு அழுதேன்.” என்றாள்.

“பழசை எல்லாம்னா”

“என்னை நீ நம்ப வைச்சு ஏமாத்துனியே, அதை நினைச்சு”

“நான் உங்களை ஏமாத்தினேனா?”

“நடிக்காதடா டேய்”

“சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கனே எனக்கு புரியல”

“புரியலையா? உங்க தாத்தாகிட்ட நீ என்ன கேட்ட, அவர் உனக்கு என்ன செஞ்சாரு... எதுவுமே ஞாபகத்துல இல்லையா?”

“என்ன சொல்ல வர்றீங்க”

“உண்மையிலேயே மறந்துட்டியா தம்பி” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் கண்கள் உஷ்ணத்தைக் கக்கியது.

“அப்படி கூப்பாடதீங்க என்னை”

“எப்படி கூப்பிட கூடாது”

“இப்போ கூப்பிட்டீங்களே அப்படி”

“எப்படி கூப்பிட்டேன்”

“தம்ப்ப்ப்பின்னு” என்று சொல்லி பல்லை நறநறக்க அவள் மெல்லிய புன்னகையுடன், “அப்படி நான் கூப்பிட கூடாதுனா, நீயே உன் வாயால சொல்லு” என்றாள்.

“என்ன சொல்லணும்? எனக்கு இப்பவும் புரியலயே”

“நம்ம கல்யாணம் எப்படி நடந்தது, எதுக்காக நடந்தது” என்று கைக்கட்டி நின்று அவனைத் தீவிரமாக முறைக்க, அவனிடம் இலேசான தடுமாற்றம்!

“அப்போ நீயா சொல்ல மாட்டியா தம்ம்ம்ம்ம்பி”

“கவிதா” என்று அவன் கத்திவிட,

“ஏய் ஏய் எதுக்கு இப்போ சவுண்டை ஏத்துற, குறைச்சு பேசு... என்னை விடச் சின்ன பையன் நீ, இப்படி எல்லாம் கத்த கூடாது”

“வேண்டாம்” என்றவன் கண்களை மூடி திறக்க,

“அப்போ நீ சொல்ல போறதில்ல. சரி விடு தம்பி பார்த்துக்கலாம்” என்றவள் மீண்டும் ‘தம்பி’ என்றதில் அவன் ஈகோ பயங்கரமாகத் தூண்டப்பட்டது.

அவள் பின்னங்கழுத்தை இழுத்து அவள் இதழ்களைத் தம் இதழ்களில் இணைத்துக் கொண்டான். மூர்க்கமான அவன் பிடியிலிருந்து மீள்வது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அவனும் சுலபத்தில் விடுவதாக இல்லை.

ஆனால் அவள் முயன்று அவனைத் தன்னிடமிருந்து பிரித்துத் தள்ளி விட்ட கையோடு, “எவ்வளவு திமிருடா உனக்கு” என்று சீற்றமாக கை ஓங்கிக் கொண்டு போனாள்.

அப்படியே அவள் கையை பிடித்துக் கொண்டவன், “சின்ன பையன், தம்பின்னு சொல்லி என்னை வெறுப்பேத்துனது நீங்” என்றவன் சொல்ல வந்து சற்று இடைவெளி விட்டு பல்லைக் கடித்துக் கொண்டு, “நீதானேடி” என்றான்.

“என்னது, டி யா?”

“இனிமே நான் சின்ன பையனா இருக்குறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் ஓங்கியிருந்த அவள் கையை சுழுற்றி அப்படியே இடையுடன் வளைத்து பின்புறமாக அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

“என்னை விடுடா, நான் கத்தினேனா வைச்சுக்கோ செக்யூரிட்டு வந்து உன் மூஞ்சை பேத்திருவான் பார்த்துக்கோ” என்று எச்சரிக்க, “அப்புறம் ஏன் கத்த மாட்டுற, எது உன்னை தடுக்குது” என்று அவன் கேட்டதில், அவள் குரல் உள்ளே போய்விட்டது.

“என்னை விட்டுட்டு ஒழுங்கா போயிடு”

“விட்டுட்டு போகவா, நான் உங்களை... சாரி உன்னைக் கல்யாணம் பண்ணேன்?” என்றான்.

“இப்போ என்னை விட போறியா இல்லையா” என்று அவள் முரண்டினாள்.

“இன்னும் முழுசா சொல்லி முடிக்கல. அதுக்குள்ள ஏன் அவசரப்படுற” என்று தன் அணைப்பில் வைத்தபடியே அவன் அவள் காதோரம் இறங்கிப் பேசியதில் அவள் உடல் சிலிர்த்தது. அவன் நெருக்கத்தை அவளால் முழுமையாக வெறுக்க முடியவில்லை.

அந்த நெருக்கம் அவள் உணர்வுகளைத் தூண்டி சலனப்படுத்தியது. அதேநேரம் அமலாவோ அல்லது ஸ்ரீதரோ வந்துவிடப் போகிறார்களோ என்று பதற்றமும் ஏற்பட்டது

“நீ ஒரு மண்ணும் சொல்லத் தேவை இல்ல. என்னை விடு” என்றவள் இன்னும் மூர்க்கமாக அவனை விலக்கப் போராட அவன் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

“நீ சொன்னது சரிதான் கவிதா. நான் உன்னை ஏமாத்திட்டேன்தான், நமக்கு நடந்தது மேரேஜ் பிஸ்னஸ்க்காகவோ இல்ல சொத்தை காப்பத்துறதுக்காக எல்லாம் இல்ல, இட்ஸ் ஃபார் யூ மை லவ்” என்று கடைசி வார்த்தைகளை அழுத்தம் கொடுத்துச் சொல்ல, அவள் எதிர்ப்பு சட்டென்று அடங்கியது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா