மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 44Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 44

Quote from monisha on October 10, 2022, 10:33 AM

44

சூர்யாவின் அச்சம்
கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மதி அவன் தோள்களைத் தொட்டு, "பாஸ், ஆர் யூ ஆல் ரைட்?" என்று கேட்க, கண்களை மூடிக் கொண்டே தலையசைத்தவன் சட்டென்று சூர்யாவின் புறம் பார்வையைத் திருப்பினான். அவளோ முன்புறம் தலையைக் கவிழ்ந்தபடி வீழ்ந்திருக்க, உடனடியாக அவள் தலையைத் தூக்கி இருக்கையில் சாய்த்து படுக்க வைத்தான். வலதுபுற நெற்றியில் குருதி வழிந்தது. அதோடு அவள் மயக்க நிலையில் இருந்தாள். இத்தனை கலட்டாவிலும் சூர்யா அவள் கையில் பிடித்திருந்த கைப்பேசியை அழுத்தமாய் பற்றியிருக்க, ஈஷ்வர் மெதுவாய் அதனை வாங்கி அணைத்து தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். மதி சூர்யாவின் நிலைமையைப் பார்த்து, "இப்ப என்ன பண்றது பாஸ்... ஹாஸ்ப்பெட்டில் அழைச்சுட்டு போலாமா?" என்று வினவ, ஈஷ்வர் தன் கைக்குட்டையால் அவள் நெற்றியில் வழிந்த இரத்தை மெல்ல துடைத்தான். பின்னர் மதியிடம், "அவசியமில்ல மதி... பெரிய அடி எல்லாம் இல்ல... ஜஸ்ட் ஷாக்கில அன்கான்ஸியாயிட்டா?... நீ வந்து டிரைவ் பண்ணு... ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர்" என்று உரைத்துவிட்டு அவளை சீட்டிலிருந்து லாவகமாய் தூக்கி பின்புற இருக்கையில் சாய்வாய் படுக்க வைத்துவிட்டு அவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். முதல் முறையாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனின் அத்தனை அருகாமையில் அவள் சிலையென கிடக்க, அப்படி அரிதாய் கிடைத்த வாய்ப்பில் அவன் அவளின் அழகைத் திகட்டாமல் ரசித்தபடி இருந்தான். அவள் மீதான காதல் ஏற்கனவே அவன் மூளையை மழுங்கடித்திருக்க, இப்போது அவளின் மீதான மோகம் அவனைக் கிறுகிறுக்க செய்து கொண்டிருந்தது. எப்படியாவது அவளைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவனை அப்போது முழுமையாய் ஆட்கொண்டிருந்தது. * எங்கும் இருள் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, உடலெல்லாம் உஷ்ணம் பரவிய உணர்வு அவளுக்கு. நெருப்பு தன் கோரப்பிடியில் அவளைச் சிறையெடுக்க நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. விலகிப் போக முடியாமல் அவள் கட்டுண்டு கிடக்க, தீ அவளை நாற்புறமும் சூழ்ந்து கொண்டது. உடலெல்லாம் தீப் பரவி பற்றி எரிய வேதனையா வலியா என்று சொல்ல முடியாத உணர்வால் கதறலோடு அவசரமாய் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சூர்யா. தான் இன்னும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் அவள் தன் தேகத்தைத் தடவி தடவிப் பார்த்தாள். அந்த நெருப்பின் உஷ்ணத்தின் தாக்கம் அவளை நீங்காத நிலையில் மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்க தொண்டையெல்லாம் வரண்டு போகத் தொடங்கியிருந்தது. "தண்ணி... தண்ணி" என்று அவள் கத்தத் தொடங்கினாள். அந்த நொடி அவள் முன் நீண்ட அந்த டம்ளரின் தண்ணீரை அவசரமாய் வாங்கி மடமடவெனக் குடித்தாள். அவளுக்கு அப்போது மரணத்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததை போல தோன்ற, லேசாய் அச்சம் நீங்கி அவள் உடல் நடுக்கம் குறைய தொடங்கியது. அந்த நொடி வெகுதூரத்திலிருந்து ஒரு குரல், "சூர்யா ஆர் யூ ஆல்ரைட் நவ்?" என்று கேட்டுக் கொண்டிருந்தது. அந்த குரல் மீண்டும் மீண்டும் சூர்யா என்று அழைப்பு விடுக்க, அப்போதே அவள் தன் நினைவுகளை மெல்ல மெல்ல மீட்டெடுக்கத் தொடங்கினாள். சட்டென்று அவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாய் அவளின் தோள்களை இரு வன்மையான கரங்கள் உலுக்கியபடி, "என்னாச்சு சூர்யா?... வாட் ஹேப்பன்?" என்றதும் அவள் உணர்வுகள் உயிர் பெற அவளை உலுக்கியது ஈஷ்வரின் கரங்கள் என்று அறிந்து நொடி வெடுக்கென அவன் கரத்தைத் தள்ளிவிட்டுப் பின்னோடு நகர்ந்தாள். அவனின் தொடுகையை விடவும் அப்போது உண்டான நெருப்பின் உஷ்ணமே பரவாயில்லை என்று அந்த நிமிடம் தோன்ற, அப்போதுதான் அந்த இடத்தை அவள் விழிகள் ஆராயத் தொடங்கின. அந்த விசாலமான அறையில் சுற்றிலும் வெள்ளை நிறத் திரைசீலைகள் அசைந்து கொண்டிருக்க, கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மங்கலான சூரியனின் கதிர்கள் எட்டிப்பார்த்திருந்தது. அப்போதுதான் தான் மெத்தையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்பதைப் பற்றி அறிந்ததும் இது எந்த இடம் என அவள் யோசிக்க, அப்போது எதிரே ஈஷ்வர் கைகட்டியபடி நின்று, "என்னாச்சு சூர்யா? ஏதாச்சும் கனவு கண்டியா?" என்று வினவினான். சூர்யாவும் அப்போது தான் கண்டது கனவா என்று சிந்தித்திபடி நெற்றியில் கை வைக்க லேசான வலி உண்டானது. ஒட்டியிருந்த பிளாஸ்ட்ரியை உணர்ந்தவள் அவள் நெற்றியில் காயம்பட்டிருப்பதை அறிந்தவுடன் அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானதை நினைவுப்படுத்திக் கொண்டாள். உடனடியாக எதிரே நின்ற ஈஷ்வரை கோபமாய் முறைக்க அவளின் பார்வையின் பொருளைப் புரிந்தவன் அவசரமாய் அவளிடமிருந்து தப்பிக்க, "ஓகே நீ ரெஸ்ட் எடு... அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லி அறைக் கதவை நோக்கி நடக்க, "ஈஷ்வர் நில்லு" என்ற அவளின் அழுத்தமான அழைப்பிற்கு அவன் கால்கள் வேறுவழியின்றி நகராமல் நின்றன. சூர்யா படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி, "உன்னை நம்பி வந்ததுக்கு நீ நல்லா செஞ்சுட்ட ஈஷ்வர்... ஆனா நான் எதிர்பார்த்தேன்... நீ இப்படி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணுவேன்னு" என்று அவள் சொன்ன நொடி அவனும் கோபத்தோடு, "இப்ப என்னாயிடுச்சுன்னு இந்த குதி குதிக்கிற" என்றான். சூர்யா வெறுப்பாய் பார்த்து, "என்னை ஏன்டா அபிகிட்ட பேச விடாம பண்ண... எங்கடா என் ஃபோன்? ஒழுங்கா என் போஃனை கொடுத்துட்டுப் போ" என்றாள். "உன் ஃபோனை என்கிட்ட கேட்டா?" என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல சூர்யாவின் கோபம் அதிகரித்தது. "நீதானடா கார்ல இருக்கும் போது அபியோட பேசவிடாம என் ஃபோனை பிடுங்கின... ராஸ்கல்" "ராஸ்கலா! என்னடி திமிரா?" என்று கோபத்தோடு அவன் கை ஓங்கிக் கொண்டு வர அவள் அசராமல் நின்றிருந்தாள். ஏனோ ஓங்கிய கை அவளை அடிக்க மறுக்க, சூர்யா அவனை முறைத்தபடி "அடி... இன்னும் அது ஒன்னுதான் நீ செய்யல அதையும் செஞ்சுரு" என்றாள். ஈஷ்வர் தன்கையை இறக்கிவிட்டு, "ஆமாம்... நான்தான்டி உன் ஃபோனை வைச்சுருக்கேன்... என்னடி பண்ண முடியும் உன்னால?" என்று திமிராய் கேட்க, "நீ ரொம்ப ஓவரா போயிட்டிருக்க ஈஷ்வர்" என்று சொன்ன நொடி அவனும் கோபமாய் அவளை நோக்கினான். "யாருடி ஓவரா போறது? நானா இல்ல நீயா?! என்னை பத்தி எங்க மாமுக்கு கால் பண்ணி கம்பிளைன்ட் பண்ண இல்ல... அதுக்காகவே நீ என்ன கெஞ்சினாலும் உனக்கு உன் ஃபோன் கிடைக்காதுடி" என்றான். "நீ செஞ்சதைதானே சொன்னேன்... அது தப்பா?" "ஆமாம் தப்புதான்டி... நீ செஞ்ச வேலையால எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டபடுத்திப் பேசிட்டேன்... இதுவரைக்கும் அவங்க சொல்லி நான் எதையும் மறுத்ததில்லை... முதல் தடவையா... எல்லாம் உன்னாலதான்டி" என்றான். "ஸ்டாப் இட் ஈஷ்வர்... தப்பை எல்லாம் நீ செஞ்சுட்டுப் பழியைத் தூக்கி என் மேல போடுறியா?" அவர்களுக்கான இடையிலான விவாதம் எல்லையை மீற ஈஷ்வர் அதை தவிர்க்க எண்ணி, "உன்கிட்ட சண்டை போடற மூட்ல நான் இல்ல... நான் கிளம்பறேன்" என்றான். "நீ எங்கயாச்சும் போய் தொலை... பட் என் ஃபோனை கொடுத்துட்டுப் போ" என்று அவள் கேட்க அவன் திரும்பாமலே, "நாட் பாஸ்ப்பிள்... நீ அந்த அபிமன்யுகிட்ட பேசுறதுக்கு நான் விடமாட்டேன்" என்று அவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற போக, சூர்யாவால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அபிமன்யு அழைத்தும் தான் அவனிடம் பேச முடியாமல் போனதே என மனதெல்லாம் பாரமாய் அழுத்த, "ஈஷ்வர் ஜஸ்ட் அ மினிட்..." என்றதும் அவன் நகராமல் அவளை நோக்கி தன் பார்வையை வீசினான். சூர்யா தவிப்போடு தயங்கி நின்றாள். அவனிடம் இறங்கிப் போவதைக் காட்டிலும் உயிரையும் விட்டுவிடலாம் என்ற போதும் அபிமன்யுவுக்காக என்ற எண்ணத்தை மனதில் கொண்டு, "ஓகே ஈஷ்வர்... நான் உன் வழிக்கே வர்றேன்... நீ என் ஃபோனை தர வேண்டாம்... நானும் அபிகிட்ட பேசல... பட் அபியோட வாய்ஸை மட்டும் கேட்டுக்கிறேன்... ஜஸ்ட் அபி ஹெலோன்னு சொல்றதை மட்டுமாச்சும்" என்று அவள் கெஞ்சலாய் கேட்க, அந்த நொடி ஈஷ்வருக்கு உண்டான கோபத்தையும் எரிச்சலையும், அவளிடம் காண்பிக்க முடியாமல் அந்த அறை கதவினை படாரென மூடிவிட்டு வெளியேறினான். அபிமன்யுவிற்காக அவள் யாருக்காகவும் விட்டுக்கொடுத்திடாத கர்வத்தையும் விட்டு இறங்கிவருகிறாள் எனில் அப்படி என்ன அவன் மீது அவளுக்கு என்று வெறுப்பு உண்டானது? அவன் அவளின் மனதில் இந்தளவுக்கு இடம் பிடித்திருப்பான் என்பதை ஈஷ்வரால் ஏற்று கொள்ள இயலாமல் அவனுக்குள் பொறாமை தீ வேகமாய் படர தொடங்கியது. எல்லாவற்றையும் கடந்து அபியிடம் சூர்யா கொண்டுள்ள காதலை உணர்ந்த அந்தக் கணம் தான் அபிமன்யுவாக பிறந்திருக்க கூடாதா? என்ற ஏக்கம் ஏற்பட்டதை அவனால் தவிர்க்கவே முடியவில்லை. ஈஷ்வர் அந்த சமயத்தில் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த சூர்யாவின் கைப்பேசியை எடுத்து ஆன் செய்தவன் அதில் கடைசி அழைப்பின் எண் ‘இடியட்’ என்றிருப்பதைப் பார்த்து யோசிக்கலானான். பின் அது அபிமன்யுவோட எண்தான் என்பதாக யூகித்தபடி அழைப்பு விடுக்க எதிர்புறத்தில் அபிமன்யு பதட்டத்தோடு, "ஹலோ சூர்யா... என்னாச்சு? ஏன் ஃபோனை எடுக்கல? அப்புறம் கொஞ்ச நேரத்துல ஸ்விட்ச்ட் ஆஃப்னு வந்துச்சு... ஏதாச்சும் பிரச்சனையா?" என்று கேட்க, "நீதான்டா ஒரே பிரச்சனை?" என்று ஈஷ்வர் உரைக்க, அந்த குரல் யாருடையாதென உணர சற்று தாமதமானாலும் அபிமன்யு அடையாளம் கண்டுக்கொண்டான். இவன் ஏன் சூர்யாவின் கைப்பேசியில் பேசுகிறான் என்று சிந்தனையில் அவன் மௌனமாய் இருக்க மீண்டும் ஈஷ்வர், "சூர்யாவோட ஃபோன்ல இருந்து இவன் ஏன் பேசுறான்னு யோசுக்கிறியா?" என்று கேட்க, அபிமன்யு கோபமாக, "ஃபோனை சூர்யா கிட்ட கொடு... நான் பேசணும்" என்றான். "சூர்யாகிட்ட இப்ப பேசெல்லாம் முடியாது..." என்றான். அவன் பேச்சும் தொனியும் அபிமன்யுவிற்குப் பிடிபடாமல் இருக்க, "ஏன் பேச முடியாது? சூர்யா இப்போ எங்க?" என்று அவன் மீண்டும் கேட்க, "இதென்ன கேள்வி... என் கூடதான் இருக்கா... ஊட்டில கெஸ்ட் ஹவுஸ்ல..." என்று ஈஷ்வர் சொன்ன தொனியில் அபிமன்யு, ’ஏதேனும் ஆஃபிஸ் வேலையா? தன்னிடம் ஒருவார்த்தை சொல்லிருக்கலாமே’ என எண்ணியபடி அவன் மௌனமாய் இருக்க ஈஷ்வர் மேலும், "ஆஃபிஸ் வொர்க் எல்லாம் இல்ல அபிமன்யு... பெர்ஸனலா வந்திருக்கோம்... நானும் சூர்யாவும் மட்டும்... சூப்பர் லொக்கஷன்... கூலான க்ளைம்ட்... செம ரொமான்ட்டிக்கான பிளேஸ்..." என்று சொன்னதும் அபிமன்யு சீறியபடி, "நிறுத்து ஈஷ்வர்... இந்தக் கதையெல்லாம் வேறு யார்க்கிட்டயாச்சும் போய் சொல்லு... நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்..." என்றான். "சரி நம்பாதே... நீ வேணா நேர்லயே வந்து பாத்து தெரிஞ்சுக்கோ" என்று சொன்னதும் அபிமன்யு கோபத்தின் மிகுதியால், "வர்றேன் ஈஷ்வர்... ஆனா இது நீ சொன்ன கதையெல்லாம் நம்பி இல்ல... என் சூர்யாவை நான் பார்க்கணும்... உன்னால மட்டும் அவளுக்கு எதாவது ஆச்சு... நான் உன்னைக் கொன்னுடுவேன்" என்றான். ஈஷ்வர் கலகலவெனச் சிரித்துவிட்டு, "நீ போய் என்னைக் கொல்லப் போறியா? சரி வா... அதையும்தான் பார்க்கலாம்" என்றான். ஈஷ்வரிடம் பேசிவிட்ட பிறகு அபிமன்யுவின் மனம் இருப்பு கொள்ளவில்லை. சூர்யாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று அவன் கவலையில் மூழ்கியிருக்க, சூர்யாவும் அவனைக் குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். அபியிடம் பேச முடியாமல் போன ஏமாற்றத்தை நினைத்து நினைத்து அவள் வேதனைக் கொள்ள, அப்போது அவளின் விழிகளின் வழியே எட்டிப் பார்த்த நீர்த் துளிகளை வெளிவரவிடாமல் துடைத்தபடி மனதைத் தேற்றிக் கொண்டாள். ஆனால் இப்படியே எத்தனை நேரம் அறைக்குள் அடைந்திருப்பது என யோசித்தவள் அது என்ன இடமாக இருக்க முடியும் என யூகிக்கத் தொடங்கினாள். கோயமுத்தூரிலிருந்து கிளம்பியதை எண்ணியவள் கண்ணாடி சாளரத்தின் வழியே தெரிந்த ரம்மியமான சூழலும் அவளை சிலிர்ப்பூட்டும் அந்தக் குளிரும் இது நிச்சயம் ஊட்டியாகவே இருக்கும் என உறுதி கொண்டாள். ஏனெனில் ரா குரூப் ஆஃப் கம்பெனிஸிற்கு ஊட்டியில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருப்பதை அவள் மூளை நினைவுக்கூற, இங்கே தன்னை ஏன் அவன் அழைத்து வந்தான் எனச் சிந்திக்க நிச்சயம் வேலை நிமித்தமாக இருக்கும் எனக் கணித்த போதும் அது என்னவாக இருக்கும் எனப் புத்தியைத் தீட்டியபடி அறைக் கதவை திறக்க, அது தானாகவே திறந்து கொண்டது. அந்த அறையிற்கு வெளியே அந்தப் பெரிய ஹால் அவளைப் பிரமிப்பூட்ட மெல்ல சுற்றிலும் நடந்தவள் மேலே சுழன்று கொண்டு செல்லும் படிக்கெட்டுகள் தென்பட அவள் படியேற எத்தனித்த போது, "சூர்யா" என்றழைப்பை ஏற்று தடைப்பட்டு நின்றாள். மதி பதட்டமான குரலில் அவளிடம், "மேலே யாருமில்ல" என்றான். சூர்யா படியேறும் எண்ணத்தைத் தற்காலிகமாக கைவிட்டு அவன் புறம் திரும்ப, "பெயின் குறைஞ்சிருக்கா... இப்ப ஓகேதானே?!" என்று அக்கறையாய் விசாரித்தான். சூர்யா கோபமான பார்வையோடு, "உனக்கே நியாயமா இருக்கா மதி... அந்த ஈஷ்வர் டிரைவ் பண்றேன் பேர்வழின்னு வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணி என்னை மொத்தமா காலி பண்ணிடலாம்னு பார்த்தான்... இதுல ஓகேதானான்னு கேட்குறீயா... யாருக்குத் தெரியும் இதுல உங்க பங்கென்னவோ?!" என்று கேட்க மதி பதறியபடி, "அய்யோ! சத்தியமா இல்ல... அது தெரியாம நடந்த விபத்துதான்?" என்றான். "நிறுத்து மதி... உன் பாஸ் செய்றதெல்லாம் நியாயப்படுத்தாதே" என்று சொல்லும் போதே அவளின் கோபத்தை அவனால் உணரமுடிந்தது. "என்ன சூர்யா நீங்க... பாஸ் உங்க மேல எவ்வளவு அக்கறையா இருக்காரு தெரியுமா?" என்று ஈஷ்வரை விட்டுக் கொடுக்காமல் பேச சூர்யா புருவங்கள் முடிச்சிட, "எது அக்கறை... ஆக்ஸிடென்ட் பண்றதா?" என்று கேட்டான். "அதையே பேசுறீங்களே... ஆக்ஸிடென்ட் ஆனதும் பாஸ் உங்க பக்கத்திலேயே இருந்து எப்படி பார்த்துக்கிட்டாருன்னு தெரியுமா?" சூர்யா மனதிற்குள், 'பார்த்திருப்பான்... இதான் சான்ஸுனு நல்லா பார்த்திருப்பான்' புலம்பியபடி இருக்க மதி மேலும்,"நீங்க மயக்கத்தில இருந்த போது உங்களை அவரேதான் தூக்கிட்டு வந்து..." என்று சொன்னதும் சூர்யா அதை கேட்க கூட விருப்பமில்லாமல் காதுகளை மூடிக் கொண்டாள். "சொல்லாதீங்க... இதுக்கு பேர் எல்லாம் அக்கறை இல்ல" என்று அவனின் செயலை எண்ணி உள்ளுக்குள் அருவருப்பாய் உணர்ந்தாள். சூர்யா அப்படி ஈஷ்வரை உரிமையோடு அழைப்பதும் மறுபுறம் ஈஷ்வர் சூர்யாவிற்காக துடிப்பதும் என அவர்களுக்கு இடையில் இருக்கும் உறவை அவர்கள் சொல்லாமலே மதி உணர்ந்து கொள்ள அவன் மெல்ல, சூர்யாவிடம், "நீங்க ஏன் பாஸை புரிஞ்சிக்காம இப்படி அவரை கஷ்டப்படுத்துறீங்க சூர்யா" என்று கேட்டதும் அவள் அதிர்ந்தபடி, "நான் கஷ்டப்படுத்துறேனா... மதி திஸ் இஸ் டூ மச்... அந்த ஈஷ்வர் என்னை இப்படி எங்க ஏதுன்னு சொல்லாம கூட்டிட்டு வந்ததுமில்லாம... என் ஃபோனை வேற எடுத்து வைச்சுக்கிட்டான்... இதுல பழியெல்லாம் என் பேர்லயா... நான் வீட்டுக்கு எப்படி கான்டெக்ட் பண்ணுவேன் மதி?" என்று அவள் கேட்ட போது அவன் தன் போஃனை நீட்டி, "இந்தாங்க... என் ஃபோன்ல இருந்து பேசுங்க" என்றான். அவளும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவானேன் எனப் பெற்று கொள்ள அந்த நொடி, 'அபியோட நம்பர் தெரியாம... எப்படி பேசுறது' என யோசித்தபடி நின்றவளிடம் மதி, "அதுலயே சுந்தர் சாரோடு நம்பர் இருக்கு சூர்யா" என்றான். அவள் தனக்குள்ளேயே, 'அப்பாவுக்கு கால் பண்ணி இந்த ஈஷ்வர் இப்படி எல்லாம் பண்றான்னு சொன்னா நிச்சயம் நம்பவே மாட்டாரு... நான்தான் பொய் சொல்றேன்னுவார்... அம்மாவுக்கும் அக்காவுக்கும் சொன்னா பயப்படுவாங்க... மேடமுக்கு கால் பண்ணா... வேண்டாம்... வேண்டாம்... ஒரு தடவை கால் பண்ணதுக்கே அந்த ஏறு ஏறிட்டான்... இப்போ எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னா அது அபிமட்டும்தான்... பட் அவன் நம்பரும் தெரியல... சே... இப்படி சேன்ஸ் கிடைச்சும் மிஸ் பண்ணிட்டியே சூர்யா!' என்று அவள் தீவிரமாய் யோசித்து கொண்டிருந்த நொடி பின்னோடு ஈஷ்வரின் குரல், "நான் வேண்டும்னா அபி நம்பர் சொல்லட்டுமா?" என்று கேட்க சூர்யா தலையிலடித்துக் கொண்டாள். 'மை பேட் டைம்' என்று அவள் வாய்க்குள் முனங்கினாள். ஈஷ்வர் மதியின் புறம் திரும்பி, "உனக்கு ரொம்ப ஹெல்பிங் டென்டன்ஸி இல்ல மதி..." என்று சொல்ல, "இல்ல பாஸ்... சூர்யா" என்று மதி தயங்கினான். ஈஷ்வர் அப்போது சூர்யாவின் முன்பு வந்து ஒரு பார்வை பார்க்க அவள் அந்த கைப்பேசியை மதியிடம் வேண்டா வெறுப்பாய் கொடுத்தாள். ஈஷ்வர் இப்போது மதியை நோக்கி, "மதி... ஐ நீட் அ கப் ஆஃப் காபி" என்றவன் சூர்யாவைப் பார்த்து, "என்ன டார்லிங்... உனக்கும் வேணுமா?" என்று கேட்டான். அவள் விழிகளாலயே எரித்துவிடுவது போல் பார்க்க ஈஷ்வர் மதியிடம் திரும்பி, "ஆல்ரெடி மேடம் ஹாட்டாதான் இருக்காங்க... ஸோ எனக்கு மட்டும்" என்றான். மதி சென்றதை கவனித்துவிட்டு அங்கே நிற்க விருப்பமில்லாமல் நகரப் பார்த்தவளிடம், "ஏன்டி என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டுற?" என்று கடுப்பாய் கேட்க சூர்யாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. "லவ்னா உங்க ஊர்ல என்ன ஈஷ்வர்... டார்ச்சர் பண்றதா?" என்று கேட்க அவனோ சற்றும் புன்னகை மாறாமல், "நீ என்னை டார்ச்சர் பண்ற... நானும் உன்னை டார்ச்சர் பண்றேன்... நீ என்னை லவ் பண்ணு... நானும் உன்னை லவ் பண்றேன்" என்றான். சூர்யா அவனிடம் பேசுவது வீண் என அவனைப் பொருட்படுத்தாமல் செல்ல ஈஷ்வர் குரலை உயர்த்தி, "இத பாரு சூர்யா... சவால் முடியற வரைக்கும்தான் நான் இப்படி பொறுமையா பேசிட்டிருப்பேன்... சவாலில் நான் ஜெய்ச்சிட்டேன் ... கம்பிரமைஸ் எல்லாம் கிடையவே கிடையாது... எனக்கு வேண்டியதை நீயா தரணும் இல்ல நானாவே எடுத்துப்பேன்... ரைட்" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட, அவள் அதை அப்படி எதிர்கொள்வது எனப் புரியாமல் விரைவாய் சென்று அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டாள். சூர்யாவிற்கு என்ன நடக்குமோ என ஒவ்வொரு நொடியும் மரணபீதியாய் இருந்தது. தீயின் மேல் நிற்பது போல ஒரு உணர்வு. அவள் நின்று கொண்டிருக்கும் இடமே முற்றிலும் வெடித்து சிதறி அதலபாதாளத்தில் அவளை இழுத்து செல்வதாய் தோன்ற, அவளின் மனமோ அபிமன்யுவின் புத்திகூர்மைக்குக் கொஞ்சம் கூட ஈஷ்வரும் சளைத்தவன் அல்ல என்று சொல்லி அவளை மேலும் அச்சுறுத்தியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா